Tuesday, April 19, 2005

இடைப்பரலியும் ஓதியரும்

முதலில் interpreter என்பதைப் பார்ப்போம். interpret என்ற சொல்லிற்கு, ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலி கீழ்க்கண்டவாறு சொல்லும்.

1382, from L. interpretari "explain, expound, understand," from interpres "agent, translator," from inter- + second element of uncertain origin, perhaps related to Skt. prath- "to spread abroad." Interpretation is attested from 1292 in Anglo-Fr. Interpreter "one who translates spoken languages" is from 1382. Interpretative is from 1569, properly formed from the L. pp. stem; interpretive, which means the same thing but is less correct, is from 1680.

interpret என்பதை translate பொருளில் "மொழிபெயர்த்தல்" என்றுவிட முடியாது. புரியாத உரையைக் கேட்பவருக்குப் புரியும் வகையில் சொல்வதும் interpret தான்.

(மேலே கொடுத்துள்ள ஆங்கில விளக்கத்தில் ஊற்று எங்கே என்று கேட்டு, பின் தெரியவில்லை என்றுசொல்லி, அதன்பின் சங்கதத்தை வலிந்து இணைப்பது பல மேலை மொழியாரின் பழக்கம். ஊற்றுத் தெரியாததை எல்லாம் சங்கதம் என்று போட்டுவிட்டால், இவருக்குச் சரியாகி விடுகிறது. நாம் என்ன சொல்ல? மொழியியலில் இதுபோல் செய்கைகள் பல இடங்களிலும் விரிந்து கிடக்கின்றன. அறிவியலுக்குப் பொருந்தாத இதுபோன்ற புனைவுகளைச் சுட்டிக் காட்டினால், நமக்கு வெறியன் என்ற பட்டத்தைக் கட்டிவிடுவார். இருந்தாலும் சொல்ல வேண்டியது ஆவதால் சொல்கிறேன்.)

பரலுதல்; பரைதல், பரட்டுதல் என எல்லாமே சொல்லுதல், பேசுதல் பொருளில் தமிழிலும், மலையாளத்திலும் வேர் கொண்ட சொற்கள். ஞான் பரையுன்னு. கிளி பரட்டியது. அவன் பரல்கிறான். "இடைப் பரல்தல்" என்பது நடுவில் உள் நுழைந்து பேசுவது. முதலில் பேசியவனுக்கும் கேட்பவனுக்கும் இடையில் நுழைந்து பேசுவது இடைப் பரல்தல் ஆகும்.

இடைப் பரல்தல் பலுக்க எளிமையால் இடைப்பரத்தல் ஆகலாம். லகரத்தை இங்கே சரியாகச் சொல்வது முகன்மையாகும். interpreter = இடைப்பரலி`; language interpreter = மொழி இடைப்பரலி (இவர் மாந்தராய் இருப்பின் ”யர்” ஈற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.)

இனி professor உக்கு வருவோம். 

profess என்ற சொல்லைப் பற்றி முன்பு தமிழ் உலகத்தில் நண்பர் இண்டிராம் கேட்ட போது உரையாடிய ஞாவகம் எனக்கு உள்ளது. அப்போது சொன்னதைக் காட்டிலும் தெளிவாக இப்பொழுது சொல்லலாம் என எண்ணுகிறேன். ஆங்கில அகரமுதலி கீழ்க்கண்டவாறு சொல்லும்.

c.1315, "to take a vow" (in a religious order), from O.Fr. profes, from L. professus "having declared publicly," pp. of profitieri "declare openly," from pro- "forth" + fateri (pp. fassus) "acknowledge, confess." Meaning "declare openly" first recorded 1526. Professed "openly declared" is from 1569.

நம்மூரில் ஓதி என்பவர் தானறிந்த மந்திரங்களையும் நூல்களையும் பரக்க ஓதி மாணவருக்குச் சொல்லுபவர் ஆவார். ஓதி என்பது தமிழ் தான். தொல்காப்பிய உரைகாரர் ஓத்து என்பதை lecture க்கு நிகராய்ப் பயன்படுத்துவார். அழலுக்கு அருகிலிருந்து ஓமம் செய்கையில், மந்திரம் சொல்லுபவர் அழல் ஓதி அல்லது அழனி ஓதி எனப்படுவார். இத் தமிழ்ச்சொல் வடமொழிப் பலுக்கில் அழனி ஹோதி> அக்(g)னி ஹோதி> அக்னி ஹோத்ரி என்று திரியும். வேள்தலைச் செய்பவர் வேள்தியர்>வேதியர்; வேள்வியின் போது அருகிலிருந்து ஓதுபவர் ஓதியர். சேரலத்தில் போத்தி என்பவரும் ஓதியரே. (நல்ல தமிழில் போற்றி என்று ஆகும். போற்றிப் பாடுபவர் போத்தி.) 

ஓதியர் எங்கிருந்தாலும் தான்சொல்லும் உரையில் வழுவாது ஓங்கிச் சொல்ல வேண்டியது அவரின் கடமையாகும். மந்திரம் சொல்லுபவர் மட்டும் ஓதியர் அல்லர்; பல நூல்களை எடுத்து ஓதுபவரும் ஓதியரே. தேவாரத்தை ஓதுபவர் ஓதுவார். சிவநெறியை ஓதுகிறவர் (he professes saivism) சிவ ஓதியர். 

அதுபோல் பரத்தோதல் என்பது to profess என்று பொருள்படும். பர எனும் முன்னொட்டைத் தவிர்த்துச் சுருக்கமாய்த் தமிழில் ஓதியர் (professor) என்று சொல்லலாம். இதற்காகப் பேராசிரியர் என்ற பெயரைத் தவிர்க்க வேண்டும் என்ற பொருளில்லை. 

ஓதுதல் வினையை நாடுவதோடு தொடர்புள்ள to profess, profession, professional, professionalism என்ற வேறு சொற்களையும் இதே வினையோடு தொடர்பு உறுத்தலாம். கீழே profession என்ற சொல்லின் விரிவைப் பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.

c.1225, "vows taken upon entering a religious order," from O.Fr. profession, from L. professionem (nom. professio) "public declaration," from professus (see profess). Meaning "occupation one professes to be skilled in" is from 1541; meaning "body of persons engaged in some occupation" is from 1610; as a euphemism for "prostitution" (e.g. oldest profession) it is recorded from 1888. Professional (adj.) is first recorded 1747 with sense of "pertaining to a profession;" 1884 as opposite of amateur. As a noun, it is attested from 1811. Professionalism is from 1856.

profession என்பதை ”ஓதம்” எனப் புழங்கலாம். professional என்பதற்கு ”ஓதகர்” என்று பயிலலாம். Professor is one who makes a claim; profession is an area where one makes a claim; professional is one who makes a claim in one specific area of knowledge.

to profess = ஓதல்
profession = ஓதம்
professor = ஓதியர்
professional = ஓதர்
professionalism = ஓதகம்

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þ¨¼ôÀÃÄ¢Ôõ µ¾¢ÂÕõ

interpret ±ýÈ ¦º¡øÄ¢üÌ, ¬í¸¢Äî ¦º¡üÀ¢ÈôÒ «¸ÃӾĢ ¸£úì¸ñ¼Å¡Ú ¦º¡øÖ¸¢ÈÐ.

1382, from L. interpretari "explain, expound, understand," from interpres "agent, translator," from inter- + second element of uncertain origin, perhaps related to Skt. prath- "to spread abroad." Interpretation is attested from 1292 in Anglo-Fr. Interpreter "one who translates spoken languages" is from 1382. Interpretative is from 1569, properly formed from the L. pp. stem; interpretive, which means the same thing but is less correct, is from 1680.

interpret ±ýÈ ¦º¡ø¨Ä translate ±ýÈ ¦À¡ÕÇ¢ø "¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾ø" ±ýÚ ¦º¡øÄ ÓÊ¡Ð. Ò⡾ ¯¨Ã¨Âì §¸ðÀÅÕìÌô ÒâÔõ Ũ¸Â¢ø ¦º¡øÖÅÐõ interpret ¾¡ý.

(§Á§Ä ¦¸¡ÎòÐûÇ ¬í¸¢Ä Å¢Çì¸ò¾¢ø °üÚ ±í§¸ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä ±ýÚ §À¡ðÎÅ¢ðÎ, À¢ý ÅÄ¢óÐ ºí¸¾ò¨¾ þ¨½ôÀÐ ÀÄ §Á¨Ä ¦Á¡Æ¢Â¡Ã¢ý ÀÆì¸õ. °üÚò ¦¾Ã¢Â¡¾¨¾ ±øÄ¡õ ºí¸¾õ ±ýÚ §À¡ðÎÅ¢ð¼¡ø, þÅ÷¸ÙìÌî ºÃ¢Â¡¸¢Å¢Î¸¢ÈÐ §À¡Öõ! ¿¡õ ±ýÉ ¦º¡øÖžüÌ? ¦Á¡Æ¢Â¢ÂÄ¢ø þÐ §À¡ýÈ ¦ºö¨¸¸û ÀÄ þ¼í¸Ç¢Öõ ŢâóÐ ¸¢¼ì¸¢ýÈÉ. «È¢Å¢ÂÖìÌô ¦À¡Õ󾡾 þЧÀ¡ýÈ Ò¨É׸¨Çî ÍðÊì ¸¡ðÊÉ¡ø, ¿ÁìÌ ¦ÅÈ¢Âý ±ýÈ Àð¼õ ¸ðÊÅ¢ÎÅ¡÷¸û. þÕó¾¡Öõ ¦º¡øÄ §ÅñÊÂÐ þÕôÀ¾¡ø ¦º¡øÖ¸¢§Èý.)

ÀÃÖ¾ø; À¨Ã¾ø, ÀÃðξø ±øÄ¡§Á ¦º¡øÖ¾ø, §À;ø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¾Á¢Æ¢Öõ, Á¨Ä¡Çò¾¢Öõ §Å÷¦¸¡ñ¼ ¦º¡ü¸û. »¡ý À¨ÃÔýÛ. ¸¢Ç¢ ÀÃðÊÂÐ. «Åý ÀÃÖ¸¢È¡ý. "þ¨¼ô ÀÃø¾ø" ±ýÀÐ ¿ÎÅ¢ø ¯ûѨÆóÐ §ÀÍÅÐ. ӾĢø §Àº¢ÂÅÛìÌõ §¸ðÀÅÛìÌõ þ¨¼Â¢ø ѨÆóÐ §ÀÍÅÐ þ¨¼ô ÀÃø¾ø ¬Ìõ.

þ¨¼ô ÀÃø¾ø ÀÖì¸ ±Ç¢¨Á¢ø ´Õ§Å¨Ç þ¨¼ôÀÃò¾ø ±ýÚ ¬¸Ä¡õ. ±É§Å ĸÃò¨¾î ºÃ¢Â¡¸î ¦º¡øÖÅÐ Ó¸ý¨Á¡ÉÐ.

interpreter þ¨¼ôÀÃÄ¢`; language interpreter = ¦Á¡Æ¢ þ¨¼ôÀÃÄ¢ (þÅ÷ ´Õ Á¡ó¾Ã¡ö þÕôÀ¢ý Â÷ ±ýÈ ®ü¨ÈÔõ §º÷òÐì ¦¸¡ûÇÄ¡õ.)

profess ±ýÈ ¦º¡ø¨Äô ÀüÈ¢ ÓýÒ ¾Á¢ú ¯Ä¸ò¾¢ø ¿ñÀ÷ þñÊáõ §¸ð¼ §À¡Ð ¯¨Ã¡Ê »¡Å¸õ ±ÉìÌ þÕ츢ÈÐ. «ô¦À¡ØÐ ¦º¡ýɨ¾ì ¸¡ðÊÖõ ¦¾Ç¢Å¡¸ þô¦À¡ØÐ ¦º¡øÄÄ¡õ ±ýÚ ±ñϸ¢§Èý. ¬í¸¢Ä «¸ÃӾĢ ¸£úì¸ñ¼Å¡Ú ¦º¡øÖ¸¢ÈÐ.

c.1315, "to take a vow" (in a religious order), from O.Fr. profes, from L. professus "having declared publicly," pp. of profitieri "declare openly," from pro- "forth" + fateri (pp. fassus) "acknowledge, confess." Meaning "declare openly" first recorded 1526. Professed "openly declared" is from 1569.

µ¾¢ ±ýÀÅ÷ ¾¡ý «È¢ó¾ Áó¾¢Ãí¸¨ÇÔõ áø¸¨ÇÔõ ÀÃì¸ µ¾¢ Á¡½ÅÕìÌî ¦º¡øÖÀÅ÷. ¦¾¡ø¸¡ôÀ¢Â ¯¨Ã¸¡Ã÷¸û µòÐ ±ýÈ ¦º¡ø¨Ä lecture ±ýÈ ¦º¡øÄ¢üÌ þ¨½Â¡¸ô ÀÂýÀÎòÐÅ¡÷¸û. «ÆÖìÌ «Õ¸¢ø þÕóÐ µÁõ ¦ºöÔõ §À¡Ð, Áó¾¢Ãõ ¦º¡øÖÀÅ÷¸û «Æø µ¾¢ «øÄÐ «ÆÉ¢ µ¾¢ ±ÉôÀÎÅ¡÷¸û. þó¾î ¦º¡ø ż¦Á¡Æ¢ô ÀÖ츢ø «ÆÉ¢§†¡¾¢>«ì(g)É¢§†¡¾¢>«ìÉ¢§†¡òâ ±ýÚ ¾¢Ã¢Ôõ. §Åû¾¨Äî ¦ºöÀÅ÷¸û §Åû¾¢Â÷>§Å¾¢Â÷; «ó¾ §ÅûŢ¢ý §À¡Ð «Õ¸¢ø þÕóÐ µÐÀÅ÷¸û µ¾¢Â÷¸û. §ºÃÄò¾¢ø §À¡ò¾¢ ±ýÀÅ÷¸û µ¾¢Â§Ã. (¿øÄ ¾Á¢Æ¢ø §À¡üÈ¢ ±ýÚ ¬Ìõ. §À¡üÈ¢ô À¡ÎÀÅ÷ §À¡ò¾¢.) µ¾¢Â÷ ±í¸¢Õó¾¡Öõ ¾¡ý ¦º¡øÖõ ¯¨Ã¢ø ÅØÅ¡Ð µí¸¢î ¦º¡øÄ §ÅñÊÂÐ «ÅÕìÌûÇ ¸¼¨Á. Áó¾¢Ãõ ¦º¡øÖÀÅ÷ ÁðÎõ µ¾¢Â÷ «øÄ÷; ÀÄ áø¸¨Ç ±ÎòÐ µÐÀÅÕõ µ¾¢Â§Ã. §¾Å¡Ãò¨¾ µÐÀÅ÷ µÐÅ¡÷. º¢Å¦¿È¢¨Â µÐ¸¢ÈÅ÷ (he professes saivism) º¢Å µ¾¢Â÷. «Ð §À¡Ä ÀÃò§¾¡Ð¾ø ±ýÀÐ to profess ±ýÚ ¦À¡ÕûÀÎõ. Àà ±ýÈ Óý¦É¡ð¨¼ò ¾Å¢÷òÐî ÍÕì¸Á¡¸ ¾Á¢Æ¢ø µ¾¢Â÷ ±ý§È professor - ¨Âî ¦º¡øÄÄ¡õ. þ¾ü¸¡¸ô §ÀẢâÂ÷ ±ýÈ ¦º¡ø¨Äò ¾Å¢÷ì¸ §ÅñÎõ ±ýÈ ¦À¡ÕÇ¢ø¨Ä. µÐ¾ø ±ýÈ Å¢¨É¨Â ¿¡ÎÅÐ ¦¾¡¼÷ÒûÇ to profess, profession, professional, professionalism ±ýÈ §ÅÚ ¦º¡ü¸¨Çî ¦º¡øÖžü¸¡¸ ±ýÚ ±ÎòÐì ¦¸¡ûÇ §ÅñÎõ.

¸£§Æ profession ±ýÈ ¦º¡øÄ¢ý Ţâ¨Åô À¡÷ò¾¡ø ¿¡ý ¦º¡øÖÅÐ ÒâÔõ.

c.1225, "vows taken upon entering a religious order," from O.Fr. profession, from L. professionem (nom. professio) "public declaration," from professus (see profess). Meaning "occupation one professes to be skilled in" is from 1541; meaning "body of persons engaged in some occupation" is from 1610; as a euphemism for "prostitution" (e.g. oldest profession) it is recorded from 1888. Professional (adj.) is first recorded 1747 with sense of "pertaining to a profession;" 1884 as opposite of amateur. As a noun, it is attested from 1811. Professionalism is from 1856.

profession ±ýÀ¾üÌ µ¾õ ±ýÈ ¦º¡ø¨Äô ÒÆí¸Ä¡õ. professional ±ýÀ¾üÌ µ¾¸÷ ±ýÈ ¦º¡ø¨Äô ÒÆí¸Ä¡õ. professor is one who makes a claim; profession is an area where one makes a claim; professional is one who makes a claim in one area of knowledge.

to profess = µÐ¾ø
profession = µ¾õ
professor = µ¾¢Â÷
professional = µ¾¸÷
professionalism = µ¾¸õ

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: