Monday, April 11, 2005

வாரமும் நாள்காட்டும்

வாரமும் நாள்காட்டும்

திடீரென்று ஒரு நா மதியிடமிருந்து "ஞாவகம் இருங்குங்களா"ன்னு ஒரு அஞ்சல். ஒரு வாரம் வலைப்பதிவுகள்லே நீங்க தான் நாள்காட்டோ ணும்னாக! "என்னடா இது! ஓரமா`ஒரு பக்கம் இருந்து எதையோ எழுதிப் பேர் பண்ணிக்கிட்டு இருக்கிற நம்மளைக் கூப்பிட்டு நாளைக் காட்டச் சொல்றாகளே? இதை ஒத்துக்கணுமா"ன்னு முதல்லே ஒரு தயக்கம் வந்துச்சு; இருந்தாலும் "இந்த வேண்டுகோள் மதியிடமிருந்து வருகிறது. அன்புக்குக் கட்டுப்படல்லைன்னா அப்புறம் என்ன இருக்கு?"ன்னு ஒரு பொறி தட்டுச்சு. சரின்னு ஒத்துக்கிட்டேன்.

எங்கூர்ப் பக்கம் செவ்வாயிலே (கோயில் தேர்த்திருவிழாவை இப்படித்தான் சிவகங்கைப் பக்கம் சொல்றது) தேர்வடம் புடிக்க வாங்கன்னு சொன்னா வந்திரோணும். அப்படி வரலைன்னு, வச்சுக்குங்க; எல்லாருமாச் சேர்ந்து கட்சி கட்டிருவாய்ங்க. தேவகோட்டைப் பக்கம் கண்டதேவி கேள்விப் பட்டிருக்கிகளா? வருசம் பல ஆச்சு இன்னம் அங்கே செவ்வாயே காண்கலே!

(கண்டதேவி என்னங்க கண்டதேவி, இப்பச் சத்த முன்னாடித் தான் தமிழ்மணத்துலே பார்த்தேன். வலைப்பதிவுலேயும் கட்சி கட்டு நடக்குது போல. என்ன வசவு, என்னென்ன பேச்சு. ஆத்தாடி, வேண்டாம்யா. சொல்லைக் கொட்டுனா அள்ள முடியாது. ஆத்துலே கொட்டுனாலும் அளந்து கொட்டுன்னு சொல்லியிருக்காக. காசுன்னாலும் சொல்லுன்னாலும் ஒன்னுதான்யா. கொட்டாதீங்க. யாரும் இங்கே வெளிலே போக வேண்டாம்; எல்லாரும் கொஞ்சம் நாவைக் காத்து, வடம் புடிக்க வாங்க! ஊருன்னா நாலு வகையான ஆக்களும் இருப்பாக. இன்னைக்கிச் சண்டை போட்டு பங்காளிக நாளைக்கிக் கூடிக்கிறது தான். ஒன்னுக்குள்ளே ஒன்னா இருக்க வேண்டிய நேரத்துலே இப்படியே எல்லாரும் ஒருத்தொருக்கொருத்தர் வஞ்சு "எதுவும் சரியில்லே, நோவு வந்துருச்சு"ன்னு விட்டுட்டுப் போனா, அப்புறம் தேர் நகராது.)

வடம் புடிக்க வந்துட்டிகளா? அப்புறம் அது என்ன, வாரம், நாள்காட்டுறதுன்னு கேள்வி கேக்குறீகளோ? வேறே ஒன்னும் இல்லை, மானி (தோழர்னு அருத்தம்). வாரம்னா உரிமை. "இந்த ஒரு வாரம் நீ ஒளிரலாம், நாங்கள்லாம் நீ இருக்குற (இ)லக்கையே பார்ப்போம்; நீ குட்டிக்கரணம் அடிச்சுக் காட்டு"ன்னு இவுக உரிமை கொடுக்குறாக. நாம அந்த உரிமையை வாங்கிக்குறோம்.

தமிழ்லே வாரம், கிழமை, ஆழ்ச்சை அப்படி எதைச் சொன்னாலும் உரிமைன்னு அருத்தம்.

வாரத்துக்கு 10 குழி எடுத்திருக்குன்னா குத்தகைக்கு 10 குழி நிலம் எடுத்திருக்குன்னு பொருள். வாரக்காரன்னா உழுறதுக்கு உரிமை கொண்ட குடியானவன்னு அருத்தம். சோமவாரம்னா சோமனுக்கு (நிலவுக்கு) உரிமையான நாள். நமக்கடுத்து நம்ம சொத்துக்கு வாரம் கொண்டவன் நம்ம வாரிசுக் காரன். "இதுலேர்ந்து இதுவரைக்கும் இன்னாருக்கு உரிமை"ன்னு நிலத்திலே வரம்பு வரைஞ்சு அதை எழுத்து பூர்வமாகவும் வரைஞ்சு கொடுக்குறோமில்லே, அதுனாலே இது வாரம். It is a right marked on land and confirmed through writing.

இதே போல கிழார்னாலே உரிமை கொண்டவர்னு தான் பொருள்; அரிசில் கிழார்னா அரிசில்ங்குற ஊரிலே ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரர்னு சொல்லலாம். திங்கள் கிழமைன்னா, திங்களுக்கு உரிமையான கிழமை. நிலத்துலே கோடு கிழிச்சு, (கிள் ங்குற அடிச்சொல்லுக்கு நோண்டுவது, கீறுவதுன்னு பொருள். என்னைக் கிள்ளாதேன்னு சொல்றோமில்லையா? கிள்ளிலேர்ந்து வந்தது தான் கிழி. கிளவிக் கொடுத்துங்குறது கிளறிக் கொடுத்தது தான்; கிளவு>கிழவு>கிழா. கிளவுதல் = பேசுதல்ங்குற பொருள் இன்னொரு மாதிரிக் கிளைக்கும். அதையும் இந்த உரிமைப் பொருளையும் குழப்பிக்கப் படாது.) ஓலையிலே கிறுவிக் கொடுத்து (அதாவது கீர்ந்து கொடுத்து) உறுதி செய்யுற உரிமைக்கு கிழமைன்னு பேர்.

இதே போலத்தான் மலையாளத்திலே திங்ஙள் ஆழ்ச்சை என்று சொல்லுவாக. அது ஆள்>ஆழ்>ஆழ்ச்சை ன்னு நீளும். தமிழில் வரும் சில புணர்ச்சி விதிகள் பாதியா நடந்தாப்போல, மலையாளத்திலே வரும். ஆள் + சை = ஆட்சை ..... ஆட்சி ன்னு வந்தால் அது தமிழ். ஆழ்ச்சி ன்னு வந்தால் அது மலையாளம். (பல தமிழ்ச் சொற்களின் மூலம் கண்டுபிடிக்கோணும்னா மலையாளம், கன்னடம், தெலுங்கு கொஞ்சமாவது பழகியிருக்கோணும். இதெல்லாம் இன்னும் சரியாப் படிக்கமாட்டேங்குறோம்.) ஆளுதலும் உரிமைப் பொருளில் தான் வருது.

இந்தக் காலத் தமிழ்லே வாரம்கிற சொல்லை மட்டும் தான் பயில்றோம். ஆனால் ரொம்ப நாட்கள் முன்னாடி, கிழமைங்குற சொல்லும் 7 நாட்களைக் குறிக்கும் வகையில் பயன்பட்டிருக்கு.

அது எப்படி ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி(சனி)ங்குற ஒரு ஒழுங்கு இந்தக் கிழமைக் கணக்கெடுப்பில் வந்ததுன்னு தெரியுமோ? சொல்லிடுறேன். அந்தக் காலத்திலே பெரும்பாலும் நம்மூர்லே புவி நடுவக் கொள்கைதான் (earth centric doctrine). 

ஏதோ ஒரு சில பகுத்களில் மட்டும் சூரிய நடுவக் கொள்கை இருந்திருக்கலாம். அதாவது "நாம சுத்தலை, சூரியன்தான் நம்மைச் சுத்தி வருவதாக" நம் முன்னோர்கள் நினைச்சுக்கினாக. நம்ம எல்லோருக்கும் தெரியும். இருப்பதிலே புவிக்குத் தொலைவில் இருப்பது காரிக் கோள். அடுத்தது வியாழன், அடுத்தது செவ்வாய், அடுத்தது சூரியன், அடுத்தது வெள்ளி, அடுத்தது அறிவன். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணியில் ஒவ்வொரு கோள் ஆட்சி செய்வதாய் முன்னோர்கள் கருதினாக. 

இந்தக் கணக்கின் தொடக்கம் காரிக் கிழமை. நம்மூரில் நாள் தொடங்குவது காலை ஆறு மணிக்கு. காரிக்கிழமை காலை 6 மணிக்கு காரியின் ஆட்சி (=கிழமை = வாரம்) 7 மணிக்கு வியாழன், 8 மணிக்கு செவ்வாய், 9 மணிக்கு சூரியன், 10 மணிக்கு வெள்ளி, 11 மணிக்கு அறிவன்; 12 மணிக்கு திங்கள்; அடுத்து பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் காரி ..... இப்படியே சுற்றிக் கொண்டு போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு ஞாயிறும், மூன்றாவது நாள் காலை 6 மணிக்குத் திங்களும், நாலாவது நாள் காலை ஆறுமணிக்குச் செவ்வாயும், ஐந்தாவது நாள் காலை அறிவனும், ஆறாவது நாள் காலை வியாழனும், ஏழாவது நாள் காலை வெள்ளியும் வந்து சேரும். 

ஆக நம்மூர்க் கணக்கின் படி காரிக் கிழமைதான் முதற்கிழமை; கடைசிலே வெள்ளிக் கிழமை (சுமேரியன், பாபிலோனியன், எகிப்து எல்லாமே இப்படித்தான். அதனால் தான் இன்றும் நடுவக் கிழக்கு நாடுகளில் (middle east countries) வாரம் இப்படி இருக்கிறது. நம்மூர்லேயும் வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போவது வழக்கம் தானே! ஏன்னா அது வார இறுதி. என்னவோ தெரியலை, வெள்ளைக்காரன் வழக்கில் நாம மாறிப் போய், ஞாயிற்றுக் கிழமையை வார இறுதியா மாத்திப் போட்டோம். (மரபுக்கு முரண் தான்.)

பெரும் பொழுதுகளில் முதற்காலம் கூடக் கருத்த காலம் தான் (கார் காலம்). ஒரு காலத்துலே ஆவணி மாசத்துலே வருசம் தொடங்குனதா தொல்காப்பியம் கோடி காட்டுது. [அய்யய்யோ தொல்காப்பியம்னு சொல்லிப்புட்டனே? அப்புறம் மாட்டுவண்டிலே போறதா யாராச்சும் சொல்லப் போறாக. உண்மைலே மாட்டுவண்டிலே போறது தப்பில்லைங்க. அதுலே மட்டும் தான் போவேன்னாத் தப்பு. தேவைக்குந் தகுந்தாப்புலே மாட்டு வண்டிலேயும் போகலாம்; நீராவி இழுவைத் தொடரியிலும் (train with a steam engine) போகலாம்; தாரைப் பறனையிலும் (jet plane) போகலாம். ;-)].
 
சரி, இதுவரைக்கும் வாரம் பார்த்தாச்சு; வாரத்தில் ஓவ்வொரு கிழமைக்கும் எப்படிப் பேர் வந்துச்சுன்னு பார்த்தாச்சு. அப்புறம், அதென்ன நாள்காட்டுங்குறீகளோ? வேறே ஒண்ணும் இல்லை, நட்சத்திரம் தான். வானியல் பத்தி விவரமாச் சொல்லிக்கிட்டே வந்தேன், என்னோட காலங்கள் கட்டுரையிலே. நடுவுலே விட்டுப் போச்சு. தொடரோணும். 

நாள்காட்டு என்ற சொல்லின் வளர்ச்சி இப்படித்தான். நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்காட்டம்> நாக்காத்ரம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம். வானியல் அறிவு நம்முர்லே தெற்கேர்ந்து தான் போனதுன்னு ஆழமா, அடிச்சுச் சொல்ல முடியும். இதைப் பெருமைக்குச் சொல்லலை. வானியற் சொற்களை ஆய்ஞ்சு பார்த்ததுனாலே சொல்றேன். அதைப் பத்திப் பேசுனா இங்கே நீண்டுரும். அதனாலே இப்போதைக்கு நாள்காட்டுக்கு வருவோம்.

நாளைக் காட்டுறது நாள்காட்டு. புவியிலேர்ந்து நிலவைப் பார்த்தா எந்த விண்மீன் பின்புலமாத் தெரியுதோ அதுதான் அன்றைய நாளைக் காட்டும் விண்மீன்.

"நிலவுக்குப் பின்னாடி சித்திரைமீன் தெரிஞ்சுது பாருங்க, அன்னைக்கித்தான் நான் அவுகளை அங்கை வச்சுப் பார்த்தேன் (பார்த்திகளா, வச்சுப் பாக்குறேங்குற திருநெவேலிப் பேச்சு எனக்கு உள்ளே வந்துருச்சு. சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், நெல்லைப் பேச்செல்லாம் கொஞ்சம் நெருங்குனாப்புலே, என்னோட பேச்சு வழக்குலே மாறி மாறிக் கலந்து போகும்.) விளங்குதா உங்களுக்கு?"

அந்தக் காலத்துலே முதல்லே வானியல் கணக்கெல்லாம் சந்திரமானம் தான். சந்திரனை வைத்து மானிப்பது (அளவிடுதல் = மடுத்தல் = to meaure; மட்டுப் படலியே என்றால் நம் அளவீட்டிற்குள் வரவில்லையே என்று பொருள்.) சந்திரமானம். (எங்கெங்கெல்லாம் அளவிடுறது வருதோ அங்கெல்லாம் மானம்கிறது தமிழ்ல்லே வந்துரும். கட்டுமானம், செய்மானம், படிமானம், வெகுமானம், அனுமானம் - சொல்லிட்டே போகலாம்.) பின்னாலே சூரியச் சந்திர மானம் வந்தாலும், சந்திரமானங்குற அடிப்படை மறையலை; இன்னும் நம்மூரில் பழக்கத்திலே இருக்கு.

"என்னங்க, உங்க பையனுக்குக் கல்யாணமாமே?"
"ஆமாங்க, வைகாசி பதினெட்டு உத்திரட்டாதி நாள்"

இன்னமும் நாட்டுப்புறத்தில் இப்படித்தான் சொல்லுவாக. இது வெகு நாளையப் பழக்கம். கல்வெட்டுக்கள் பலதைப் பார்த்தாலும் அவற்றில் நாட்களை இப்படித் தான் குறிச்சிருப்பாக. (நம்முடைய பண்டிகைகளையும் நாள்காட்டை வச்சுத் தான் சொல்றோம். தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம், திருவோணம், திருவாதிரை, திருக்கார்த்திகை இப்படியே போகும்.) புவியில் இருந்து நிலவைப் பார்க்கும் போது தெரிகின்ற நாள்காட்டையே அந்த நாளுக்குப் பெயராக வைக்கிறது நம்மோடே நீண்டநாள் பழக்கம்.

நாள்காட்டு நூற்றுக் கணக்கில் இருந்தாலும் (இப்பொழுது தமிழ்மணக் கணக்குப் படி மொத்த நாள்காட்டு 464 என்று சொல்ல வேண்டுமோ? :-)) 28 விதப்பு நாள்காட்டுக் கூட்டங்களை (special astral families) முதலில் தனி அடையாளம் காட்டிப் பின் அவற்றில் ஒன்றை நீக்கி 27 ஐ நம் முன்னோர் வச்சுக்கினாக. ஒவ்வொரு நாள்காட்டுக் கூட்டத்திற்கும் மாந்தக் கண்ணிற்குத் தெரிகின்ற உருவகங்களையே பெயராகவும் வச்சாக. ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு நாள்காட்டு விதப்பாய் இருக்கும்.

நாள்காட்டுங்குறது வெறும் சொலிப்பு மட்டுமில்லே. நாள்காட்டுக்கள்ங்குற பின்புலங்களையும் வச்சுத்தான் புவி, சூரியன், நிலவு இன்னும் மற்ற கோள்களின் நகர்ச்சியே நம்மூர்லே கணிக்கிறாக.

ஒவ்வொரு நாள்காட்டும் ஒவ்வொரு விதம். அவை அண்டத்தில் நிறைஞ்சு கிடந்தாலும் சில நாள்காட்டுக்களை மட்டும் நாம் விதப்பாய் உணர்றோம். தமிழருக்கு திருவாதிரை, திருவோணம், கார்த்திகை போன்றவை ரொம்ப விதப்பானவை. உண்மையில் இவை தமிழனுக்கு மட்டுமல்லாமல், சுமேரியர், எகிப்தியர், மாயா, இன்னும் பழைய நாகரிகர் பலருக்கும் விதப்பானவையே திருவாதிரை தான் எகிப்தியரின் ஓரியன். கார்த்திகை தான் pleieades. ஆதிரைங்குற விதப்பான சொல்லே astra என்ற பொதுமைச்சொல்லுக்கு இணையா இருக்கு. மேலை மொழிகளில் star என்ற சொல்லுக்கு இணை இப்போத் தெரியுதா?

விண்ணில் மினுக்கும் இந்த ஆதிரைகள் இல்லைன்னா மாந்த அறிவு வளர்ந்திருக்குமாங்குறதே கேள்விக் குறிதான்.

அற்பனுக்குப் பவுசு வந்தா அர்த்த (இ)ராத்திரியிலே கொடைப்பிடிப்பானாம்னு சொல்லுவாக. 

குடையைப் பிடிச்சுக்கிட்டே உங்களுக்கு நாள் காட்டுறேன், வாங்க.

இன்னைக்கி பங்குனி மாசம் பரணி நாள். திங்கக்கிழமை.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Å¡ÃÓõ ¿¡û¸¡ðÎõ

¾¢Ë¦ÃýÚ ´Õ ¿¡ Á¾¢Â¢¼Á¢ÕóÐ "»¡Å¸õ þÕíÌí¸Ç¡"ýÛ ´Õ «ïºø. ´Õ Å¡Ãõ ŨÄôÀ¾¢×¸û§Ä ¿£í¸ ¾¡ý ¿¡û¸¡ð§¼¡ÏõÉ¡¸! "±ýɼ¡ þÐ! µÃÁ¡`´Õ Àì¸õ þÕóÐ ±¨¾§Â¡ ±Ø¾¢ô §À÷ Àñ½¢ì¸¢ðÎ þÕì¸¢È ¿õÁ¨Çì ÜôÀ¢ðÎ ¿¡¨Çì ¸¡ð¼î ¦º¡øÈ¡¸§Ç? þ¨¾ ´òÐì¸ÏÁ¡"ýÛ Ó¾ø§Ä ´Õ ¾Âì¸õ ÅóÐîÍ; þÕó¾¡Öõ "þó¾ §ÅñΧ¸¡û Á¾¢Â¢¼Á¢ÕóÐ ÅÕ¸¢ÈÐ. «ýÒìÌì ¸ðÎôÀ¼ø¨ÄýÉ¡ «ôÒÈõ ±ýÉ þÕìÌ?"ýÛ ´Õ ¦À¡È¢ ¾ðÎîÍ. ºÃ¢ýÛ ´òÐ츢ð§¼ý.

±íÜ÷ô Àì¸õ ¦ºùš¢§Ä (§¸¡Â¢ø §¾÷ò¾¢ÕŢơ¨Å þôÀÊò¾¡ý º¢Å¸í¨¸ô Àì¸õ ¦º¡øÈÐ) §¾÷żõ ÒÊì¸ Å¡í¸ýÛ ¦º¡ýÉ¡ Å󾢧áÏõ. «ôÀÊ ÅèÄýÛ, ÅîÍìÌí¸; ±øÄ¡ÕÁ¡î §º÷óÐ ¸ðº¢ ¸ðÊÕÅ¡öí¸. §¾Å§¸¡ð¨¼ô Àì¸õ ¸ñ¼§¾Å¢ §¸ûÅ¢ô ÀðÊÕ츢¸Ç¡? ÅÕºõ ÀÄ ¬îÍ þýÉõ «í§¸ ¦ºùÅ¡§Â ¸¡ñ¸§Ä!

(¸ñ¼§¾Å¢ ±ýÉí¸ ¸ñ¼§¾Å¢, þôÀî ºò¾ ÓýÉ¡Êò¾¡ý ¾Á¢úÁ½òÐ§Ä À¡÷ò§¾ý. ŨÄôÀ¾¢×§ÄÔõ ¸ðº¢ ¸ðÎ ¿¼ìÌÐ §À¡Ä. ±ýÉ Åº×, ±ý¦ÉýÉ §ÀîÍ. ¬ò¾¡Ê, §Åñ¼¡õ¡. ¦º¡ø¨Äì ¦¸¡ðÎÉ¡ «ûÇ ÓÊ¡Ð. ¬òÐ§Ä ¦¸¡ðÎÉ¡Öõ «ÇóÐ ¦¸¡ðÎýÛ ¦º¡øĢ¢Õ측¸. ¸¡ÍýÉ¡Öõ ¦º¡øÖýÉ¡Öõ ´ýÛ¾¡ý¡. ¦¸¡ð¼¡¾£í¸. ¡Õõ þí§¸ ¦ÅÇ¢§Ä §À¡¸ §Åñ¼¡õ; ±øÄ¡Õõ ¦¸¡ïºõ ¿¡¨Åì ¸¡òÐ, żõ ÒÊì¸ Å¡í¸! °ÕýÉ¡ ¿¡Ö Ũ¸Â¡É ¬ì¸Ùõ þÕôÀ¡¸. þý¨Éì¸¢î ºñ¨¼ §À¡ðÎ Àí¸¡Ç¢¸ ¿¡¨Ç츢ì ÜÊ츢ÈÐ ¾¡ý. ´ýÛìÌû§Ç ´ýÉ¡ þÕì¸ §ÅñÊ §¿ÃòÐ§Ä þôÀʧ ±øÄ¡Õõ ´Õò¦¾¡Õ즸¡Õò¾÷ ÅïÍ "±Ð×õ ºÃ¢Â¢ø§Ä, §¿¡× ÅóÐÕîÍ"ýÛ Å¢ðÎðÎô §À¡É¡, «ôÒÈõ §¾÷ ¿¸Ã¡Ð.)

żõ ÒÊì¸ ÅóÐðʸǡ? «ôÒÈõ «Ð ±ýÉ, Å¡Ãõ, ¿¡û¸¡ðÎÈÐýÛ §¸ûÅ¢ §¸ìÌÈ£¸§Ç¡? §Å§È ´ýÛõ þø¨Ä, Á¡É¢ (§¾¡Æ÷Û «Õò¾õ). Å¡ÃõÉ¡ ¯Ã¢¨Á. "þó¾ ´Õ Å¡Ãõ ¿£ ´Ç¢ÃÄ¡õ, ¿¡í¸ûÄ¡õ ¿£ þÕìÌÈ (þ)Ä쨸§Â À¡÷ô§À¡õ; ¿£ ÌðÊì¸Ã½õ «ÊîÍì ¸¡ðÎ"ýÛ þ׸ ¯Ã¢¨Á ¦¸¡ÎìÌÈ¡¸. ¿¡Á «ó¾ ¯Ã¢¨Á¨Â Å¡í¸¢ì̧ȡõ.

¾Á¢ú§Ä Å¡Ãõ, ¸¢Æ¨Á, ¬ú «ôÀÊ ±¨¾î ¦º¡ýÉ¡Öõ ¯Ã¢¨ÁýÛ «Õò¾õ.

Å¡ÃòÐìÌ 10 ÌÆ¢ ±Îò¾¢ÕìÌýÉ¡ Ìò¾¨¸ìÌ 10 ÌÆ¢ ¿¢Äõ ±Îò¾¢ÕìÌýÛ ¦À¡Õû. Å¡Ã측ÃýÉ¡ ¯ØÈÐìÌ ¯Ã¢¨Á ¦¸¡ñ¼ ÌÊ¡ÉÅýÛ «Õò¾õ. §º¡ÁÅ¡ÃõÉ¡ §º¡ÁÛìÌ (¿¢Ä×ìÌ) ¯Ã¢¨ÁÂ¡É ¿¡û. ¿Áì¸ÎòÐ ¿õÁ ¦º¡òÐìÌ Å¡Ãõ ¦¸¡ñ¼Åý ¿õÁ šâÍì ¸¡Ãý. "þЧÄ÷óÐ þÐŨÃìÌõ þýÉ¡ÕìÌ ¯Ã¢¨Á"ýÛ ¿¢Äò¾¢§Ä ÅÃõÒ Å¨ÃïÍ «¨¾ ±ØòÐ â÷ÅÁ¡¸×õ ŨÃïÍ ¦¸¡Îì̧ȡÁ¢ø§Ä, «ÐÉ¡§Ä þÐ Å¡Ãõ. It is a right marked on land and confirmed through writing.

þ§¾ §À¡Ä ¸¢Æ¡÷É¡§Ä ¯Ã¢¨Á ¦¸¡ñ¼Å÷Û ¾¡ý ¦À¡Õû; «Ã¢º¢ø ¸¢Æ¡÷É¡ «Ã¢º¢øíÌÈ °Ã¢§Ä ²¸ôÀð¼ ¿¢ÄòÐìÌî ¦º¡ó¾ì¸¡Ã÷Û ¦º¡øÄÄ¡õ. ¾¢í¸û ¸¢Æ¨ÁýÉ¡, ¾¢í¸ÙìÌ ¯Ã¢¨ÁÂ¡É ¸¢Æ¨Á. ¿¢ÄòÐ§Ä §¸¡Î ¸¢Æ¢îÍ, (¸¢û íÌÈ «Ê¡øÖìÌ §¿¡ñÎÅÐ, ¸£ÚÅÐýÛ ¦À¡Õû. ±ý¨Éì ¸¢ûÇ¡§¾ýÛ ¦º¡ø§È¡Á¢ø¨Ä¡? ¸¢ûÇ¢§Ä÷óÐ Åó¾Ð ¾¡ý ¸¢Æ¢. ¸¢ÇÅ¢ì ¦¸¡ÎòÐíÌÈÐ ¸¢ÇÈ¢ì ¦¸¡Îò¾Ð ¾¡ý; ¸¢Ç×>¸¢Æ×>¸¢Æ¡. ¸¢Ç×¾ø = §À;øíÌÈ ¦À¡Õû þý¦É¡Õ Á¡¾¢Ã¢ì ¸¢¨ÇìÌõ. «¨¾Ôõ þó¾ ¯Ã¢¨Áô ¦À¡Õ¨ÇÔõ ÌÆôÀ¢ì¸ô À¼¡Ð.) µ¨Ä¢§Ä ¸¢ÚÅ¢ì ¦¸¡ÎòÐ («¾¡ÅÐ ¸£÷óÐ ¦¸¡ÎòÐ) ¯Ú¾¢ ¦ºöÔÈ ¯Ã¢¨ÁìÌ ¸¢Æ¨ÁýÛ §À÷.

þ§¾ §À¡Äò¾¡ý Á¨Ä¡Çò¾¢§Ä ¾¢í¹û ¬ú ±ýÚ ¦º¡øÖÅ¡¸. «Ð ¬û>¬ú>¬ú ýÛ ¿£Ùõ. ¾Á¢Æ¢ø ÅÕõ º¢Ä Ò½÷ Å¢¾¢¸û À¡¾¢Â¡ ¿¼ó¾¡ô§À¡Ä, Á¨Ä¡Çò¾¢§Ä ÅÕõ. ¬û + ¨º = ¬ð¨º ..... ¬ðº¢ ýÛ Åó¾¡ø «Ð ¾Á¢ú. ¬ú ýÛ Åó¾¡ø «Ð Á¨Ä¡Çõ. (ÀÄ ¾Á¢úî ¦º¡ü¸Ç¢ý ãÄõ ¸ñÎÀ¢Ê째¡ÏõÉ¡ Á¨Ä¡Çõ, ¸ýɼõ, ¦¾ÖíÌ ¦¸¡ïºÁ¡ÅÐ ÀƸ¢Â¢Õ째¡Ïõ. þ¦¾øÄ¡õ þýÛõ ºÃ¢Â¡ô ÀÊì¸Á¡ð§¼í̧ȡõ.) ¬Ù¾Öõ ¯Ã¢¨Áô ¦À¡ÕÇ¢ø ¾¡ý ÅÕÐ.

þó¾ì ¸¡Äò ¾Á¢ú§Ä Å¡Ãõ¸¢È ¦º¡ø¨Ä ÁðÎõ ¾¡ý À¢ø§È¡õ. ¬É¡ø ¦Ã¡õÀ ¿¡ð¸û ÓýÉ¡Ê, ¸¢Æ¨ÁíÌÈ ¦º¡øÖõ 7 ¿¡ð¸¨Çì ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø ÀÂýÀðÊÕìÌ.

«Ð ±ôÀÊ »¡Â¢Ú, ¾¢í¸û, ¦ºùÅ¡ö, «È¢Åý (Ò¾ý), Ţ¡Æý, ¦ÅûÇ¢, ¸¡Ã¢(ºÉ¢)íÌÈ ´Õ ´ØíÌ þó¾ì ¸¢Æ¨Áì ¸½ì¦¸ÎôÀ¢ø Åó¾ÐýÛ ¦¾Ã¢Ô§Á¡? ¦º¡øĢΧÈý. «ó¾ì ¸¡Äò¾¢§Ä ¿õã÷§Ä ÒÅ¢ ¿ÎÅì ¦¸¡û¨¸¾¡ý (earth centric doctrine). Ýâ ¿ÎÅì ¦¸¡û¨¸ ¸¢¨¼Â¡Ð. «¾¡ÅÐ "¿¡Á Íò¾¨Ä, ÝâÂý¾¡ý ¿õ¨Áî Íò¾¢ ÅÕž¡¸" ¿õ Óý§É¡÷¸û ¿¢¨ÉîÍ츢ɡ¸. ¿õÁ ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢Ôõ. þÕôÀ¾¢§Ä ÒÅ¢ìÌò ¦¾¡¨ÄÅ¢ø þÕôÀÐ ¸¡Ã¢ì §¸¡û. «Îò¾Ð Ţ¡Æý, «Îò¾Ð ¦ºùÅ¡ö, «Îò¾Ð ÝâÂý, «Îò¾Ð ¦ÅûÇ¢, «Îò¾Ð «È¢Åý. ´ù¦Å¡Õ ¿¡Ç¢Öõ ´ù¦Å¡Õ Á½¢Â¢ø ´ù¦Å¡Õ §¸¡û ¬ðº¢ ¦ºöž¡ö Óý§É¡÷¸û ¸Õ¾¢É¡¸. þó¾ì ¸½ì¸¢ý ¦¾¡¼ì¸õ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á. ¿õãâø ¿¡û ¦¾¡¼íÌÅÐ ¸¡¨Ä ¬Ú Á½¢ìÌ. ¸¡Ã¢ì¸¢Æ¨Á ¸¡¨Ä 6 Á½¢ìÌ ¸¡Ã¢Â¢ý ¬ðº¢ (=¸¢Æ¨Á = Å¡Ãõ) 7 Á½¢ìÌ Å¢Â¡Æý, 8 Á½¢ìÌ ¦ºùÅ¡ö, 9 Á½¢ìÌ ÝâÂý, 10 Á½¢ìÌ ¦ÅûÇ¢, 11 Á½¢ìÌ «È¢Åý; 12 Á½¢ìÌ ¾¢í¸û; «ÎòÐ À¢üÀ¸ø 1 Á½¢ìÌ Á£ñÎõ ¸¡Ã¢ ..... þôÀʧ ÍüÈ¢ì ¦¸¡ñÎ §À¡É¡ø «Îò¾ ¿¡û ¸¡¨Ä ¬Ú Á½¢ìÌ »¡Â¢Úõ, ãýÈ¡ÅÐ ¿¡û ¸¡¨Ä 6 Á½¢ìÌò ¾¢í¸Ùõ, ¿¡Ä¡ÅÐ ¿¡û ¸¡¨Ä ¬ÚÁ½¢ìÌî ¦ºùÅ¡Ôõ, ³ó¾¡ÅÐ ¿¡û ¸¡¨Ä «È¢ÅÛõ, ¬È¡ÅÐ ¿¡û ¸¡¨Ä Ţ¡ÆÛõ, ²Æ¡ÅÐ ¿¡û ¸¡¨Ä ¦ÅûÇ¢Ôõ ÅóÐ §ºÕõ. ¬¸ ¿õã÷ì ¸½ì¸¢ý ÀÊ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á¾¡ý Ó¾ü¸¢Æ¨Á; ¸¨¼º¢§Ä ¦ÅûÇ¢ì ¸¢Æ¨Á (ͧÁâÂý, À¡À¢§Ä¡É¢Âý, ±¸¢ôÐ ±øÄ¡§Á þôÀÊò¾¡ý. «¾É¡ø ¾¡ý þýÚõ ¿ÎÅì ¸¢ÆìÌ ¿¡Î¸Ç¢ø (middle east countries) Å¡Ãõ þôÀÊ þÕ츢ÈÐ. ¿õã÷§ÄÔõ ¦ÅûÇ¢ì ¸¢Æ¨Á §¸¡Â¢ÖìÌô §À¡ÅÐ ÅÆì¸õ ¾¡§É! ²ýÉ¡ «Ð Å¡Ã þÚ¾¢. ±ýɧš ¦¾Ã¢Â¨Ä, ¦Åû¨Ç측Ãý ÅÆ츢ø ¿¡Á Á¡È¢ô §À¡ö, »¡Â¢üÚì ¸¢Æ¨Á¨Â Å¡Ã þÚ¾¢Â¡ Á¡ò¾¢ô §À¡ð§¼¡õ. (ÁÃÒìÌ ÓÃñ ¾¡ý.)

¦ÀÕõ ¦À¡ØиǢø Ó¾ü¸¡Äõ Ü¼ì ¸Õò¾ ¸¡Äõ ¾¡ý (¸¡÷ ¸¡Äõ). ´Õ ¸¡ÄòÐ§Ä ¬Å½¢ Á¡ºòÐ§Ä ÅÕºõ ¦¾¡¼íÌɾ¡ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ §¸¡Ê ¸¡ðÎÐ. [«öÂö§Â¡ ¦¾¡ø¸¡ôÀ¢ÂõÛ ¦º¡øÄ¢ôÒð¼§É? «ôÒÈõ Á¡ðÎÅñ椀 §À¡È¾¡ ¡áîÍõ ¦º¡øÄô §À¡È¡¸. ¯ñ¨Á§Ä Á¡ðÎÅñ椀 §À¡ÈÐ ¾ôÀ¢ø¨Äí¸. «Ð§Ä ÁðÎõ ¾¡ý §À¡§ÅýÉ¡ò ¾ôÒ. §¾¨ÅìÌó ¾Ìó¾¡ôÒ§Ä Á¡ðÎ ÅñʧÄÔõ §À¡¸Ä¡õ; ¿£Ã¡Å¢ þبÅò ¦¾¡¼Ã¢Â¢Öõ (train with a steam engine) §À¡¸Ä¡õ; ¾¡¨Ãô ÀȨÉ¢Öõ (jet plane) §À¡¸Ä¡õ. ;-)].

ºÃ¢, þÐŨÃìÌõ Å¡Ãõ À¡÷ò¾¡îÍ; Å¡Ãò¾¢ø µù¦Å¡Õ ¸¢Æ¨ÁìÌõ ±ôÀÊô §À÷ ÅóÐîÍýÛ À¡÷ò¾¡îÍ. «ôÒÈõ, «¦¾ýÉ ¿¡û¸¡ðÎíÌÈ£¸§Ç¡? §Å§È ´ñÏõ þø¨Ä, ¿ðºò¾¢Ãõ ¾¡ý. Å¡É¢Âø Àò¾¢ Å¢ÅÃÁ¡î ¦º¡øĢ츢𧼠Åó§¾ý, ±ý§É¡¼ ¸¡Äí¸û ¸ðΨâ§Ä. ¿Î×§Ä Å¢ðÎô §À¡îÍ. ¦¾¡¼§Ã¡Ïõ. ¿¡û¸¡ðÎ ±ýÈ ¦º¡øÄ¢ý ÅÇ÷ þôÀÊò¾¡ý. ¿¡û¸¡ðÎ> ¿¡û¸¡ð¼õ> ¿¡ì¸¡ð¼õ> ¿¡ì¸¡òÃõ> ¿¡ì„òÃõ> ¿ì„òÃõ. Å¡É¢Âø «È¢× ¿õÓ÷§Ä ¦¾ü§¸÷óÐ ¾¡ý §À¡ÉÐýÛ ¬ÆÁ¡, «ÊîÍî ¦º¡øÄ ÓÊÔõ. þ¨¾ô ¦ÀÕ¨ÁìÌî ¦º¡øĨÄ. Å¡É¢Âü ¦º¡ü¸¨Ç ¬öïÍ À¡÷ò¾ÐÉ¡§Ä ¦º¡ø§Èý. «¨¾ô Àò¾¢ô §ÀÍÉ¡ þí§¸ ¿£ñÎÕõ. «¾É¡§Ä þô§À¡¨¾ìÌ ¿¡û¸¡ðÎìÌ Åէšõ.

¿¡¨Çì ¸¡ðÎÈÐ ¿¡û¸¡ðÎ. ÒŢ¢§Ä÷óÐ ¿¢Ä¨Åô À¡÷ò¾¡ ±ó¾ Å¢ñÁ£ý À¢ýÒÄÁ¡ò ¦¾Ã¢Ô§¾¡ «Ð¾¡ý «ý¨È ¿¡¨Çì ¸¡ðÎõ Å¢ñÁ£ý.

"¿¢Ä×ìÌô À¢ýÉ¡Ê º¢ò¾¢¨ÃÁ£ý ¦¾Ã¢ïÍÐ À¡Õí¸, «ý¨É츢ò¾¡ý ¿¡ý «×¸¨Ç «í¨¸ ÅîÍô À¡÷ò§¾ý (À¡÷ò¾¢¸Ç¡, ÅîÍô À¡ì̧ÈýÛ ¾¢Õ¦¿ §ÅÄ¢ô §ÀîÍ ¯û§Ç ÅóÐÕîÍ. º¢Å¸í¨¸, þáÁ¿¡¾ÒÃõ, Å¢Õп¸÷, ¦¿ø¨Äô §ÀøÄ¡õ ¦¸¡ïºõ ¦¿ÕíÌÉ¡ôÒ§Ä, Á¡È¢ Á¡È¢ì ¸ÄóÐ §À¡Ìõ.) Å¢Çí̾¡ ¯í¸ÙìÌ?"

«ó¾ì ¸¡ÄòÐ§Ä Ó¾ø§Ä Å¡É¢Âø ¸½ì¦¸øÄ¡õ ºó¾¢ÃÁ¡Éõ ¾¡ý. ºó¾¢Ã¨É ¨ÅòÐ Á¡É¢ôÀÐ («ÇŢξø = ÁÎò¾ø = to meaure; ÁðÎôÀ¼Ä¢§Â ±ýÈ¡ø ¿õ «ÇÅ£ðÊüÌû ÅÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ¦À¡Õû.) ºó¾¢ÃÁ¡Éõ. (±í¦¸í¦¸øÄ¡õ «ÇÅ¢ÎÈÐ ÅÕ§¾¡ «í¦¸øÄ¡õ Á¡Éõ¸¢ÈÐ ¾Á¢úø§Ä ÅóÐÕõ. ¸ðÎÁ¡Éõ, ¦ºöÁ¡Éõ, ÀÊÁ¡Éõ, ¦ÅÌÁ¡Éõ, «ÏÁ¡Éõ - ¦º¡øĢ𧼠§À¡¸Ä¡õ.) À¢ýÉ¡§Ä Ýâ ºó¾¢ÃÁ¡Éõ Åó¾¡Öõ, ºó¾¢ÃÁ¡ÉíÌÈ «ÊôÀ¨¼ Á¨È¨Ä; þýÛõ ¿õãâø ÀÆì¸ò¾¢§Ä þÕìÌ.

"±ýÉí¸, ¨ÀÂÛìÌì ¸ø¡½Á¡§Á?"
"¬Á¡í¸, ¨Å¸¡º¢ À¾¢¦ÉðÎ ¯ò¾¢Ã𼡾¢ ¿¡û"

þýÉÓõ ¿¡ðÎôÒÈò¾¢ø þôÀÊò¾¡ý ¦º¡øÖÅ¡¸. þÐ ¦ÅÌ ¿¡¨ÇÂô ÀÆì¸õ. ¸ø¦ÅðÎì¸û ÀĨ¾ô À¡÷ò¾¡Öõ «ÅüÈ¢ø ¿¡ð¸¨Ç þôÀÊò¾¡ý ÌȢÕôÀ¡¸. (¿õÓ¨¼Â Àñʨ¸¸¨ÇÔõ ¿¡û¸¡ð¨¼ ÅîÍò¾¡ý ¦º¡ø§È¡õ. ¨¾ôâºõ, ÀíÌÉ¢ ¯ò¾¢Ãõ, Á¡º¢ Á¸õ, ¾¢Õ§Å¡½õ, ¾¢ÕÅ¡¾¢¨Ã, ¾¢Õì ¸¡÷ò¾¢¨¸ þôÀʧ §À¡Ìõ.) ÒŢ¢ø þÕóÐ ¿¢Ä¨Åô À¡÷ìÌõ §À¡Ð ¦¾Ã¢¸¢ýÈ ¿¡û¸¡ð¨¼§Â «ó¾ ¿¡ÙìÌô ¦ÀÂḠ¨Å츢ÈÐ ¿£ñ¼¿¡û ÀÆì¸õ.

¿¡û¸¡ðÎ áüÚì ¸½ì¸¢ø þÕó¾¡Öõ (þô¦À¡ØÐ ¾Á¢úÁ½ì ¸½ìÌô ÀÊ ¦Á¡ò¾ ¿¡û¸¡ðÎ 464 ±ýÚ ¦º¡øÄ §ÅñΧÁ¡? :-)) 28 Å¢¾ôÒ ¿¡û¸¡ðÎì Üð¼í¸¨Ç (special astral families) ӾĢø ¾É¢ «¨¼Â¡Çõ ¸¡ðÊô À¢ý ´ý¨È ¿£ì¸¢ 27 ³ ÅîÍ츢ɡ¸. ´ù¦Å¡Õ ¿¡û¸¡ðÎì Üð¼ò¾¢üÌõ Á¡ó¾ì ¸ñ½¢üÌò ¦¾Ã¢¸¢ýÈ ¯ÕÅ¸í¸¨Ç§Â ¦ÀÂḠ¬îÍ. ´ù¦Å¡Õ ¦À¡Ø¾¢Öõ ´ù¦Å¡Õ ¿¡û¸¡ðΠŢ¾ôÀ¡ö þÕìÌõ.

¿¡û¸¡ðÎíÌÈÐ ¦ÅÚõ ¦º¡Ä¢ôÒ ÁðÎÁ¢ø§Ä. ¿¡û¸¡ðÎì¸ûíÌÈ À¢ýÒÄí¸¨Ç ÅîÍò¾¡ý ÒÅ¢, ÝâÂý, ¿¢Ä× þýÛõ ÁüÈ §¸¡û¸Ç¢ý ¿¸÷§Â ¸½¢ì¸¢È¡¸.

´ù¦Å¡Õ ¿¡û¸¡ðÎõ ´ù¦Å¡ÕÅ¢¾õ. «¨Å «ñ¼ò¾¢ø ¿¢¨ÈïÍ ¸¢¼ó¾¡Öõ º¢Ä ¿¡û¸¡ðÎì¸¨Ç Å¢¾ôÀ¡ö ¯½÷§È¡õ. ¾Á¢ÆÕìÌ ¾¢ÕÅ¡¾¢¨Ã, ¾¢Õ§Å¡½õ, ¸¡÷ò¾¢¨¸ §À¡ýȨŠ¦Ã¡õÀ Å¢¾ôÀ¡É¨Å. ¯ñ¨Á¢ø þ¨Å ¾Á¢ÆÛìÌ ÁðÎÁøÄ¡Áø, ͧÁâÂ÷, ±¸¢ô¾¢Â÷, Á¡Â¡, þýÛõ À¨Æ ¿¡¸Ã¢¸ÕìÌõ Å¢¾ôÀ¡É¨Å§Â ¾¢ÕÅ¡¾¢¨Ã ¾¡ý ±¸¢ô¾¢Ââý µÃ¢Âý. ¸¡÷ò¾¢¨¸ ¾¡ý pleieades. ¬¾¢¨ÃíÌÈ Å¢¾ôÀ¡É ¦º¡ø§Ä astra ±ýÈ ¦À¡Ð¨Á¡øÖìÌ þ¨½Â¡ þÕìÌ. §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢ø star ±ýÈ ¦º¡øÖìÌ þ¨½ þô§À¡ò ¦¾Ã¢Ô¾¡?

Å¢ñ½¢ø Á¢ÛìÌõ þó¾ ¬¾¢¨Ã¸û þø¨ÄýÉ¡ Á¡ó¾ «È¢× ÅÇ÷ó¾¢ÕìÌÁ¡íÌȧ¾ §¸ûÅ¢ì ÌÈ¢¾¡ý.

«üÀÛìÌô À×ÍÅó¾¡ «÷ò¾ (þ)áò¾¢Ã¢Â¢§Ä ¦¸¡¨¼ôÀ¢ÊôÀ¡É¡õ Û ¦º¡øÖÅ¡¸. ̨¼¨Âô À¢ÊîÍ츢𧼠¯í¸ÙìÌ ¿¡û ¸¡ðΧÈý, Å¡í¸.

þý¨É츢 ÀíÌÉ¢ Á¡ºõ Àý¢ ¿¡û. ¾¢í¸ì¸¢Æ¨Á.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

13 comments:

துளசி கோபால் said...

என்னங்க ஐயா,

வணக்கம். நல்லா இருக்கீங்களா?

நாள் காட்டுறதுல இத்தனை சமாச்சாரங்க இருக்குதா!!!
இன்னைக்குத்தான் ஓரளவுக்குத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

Thangamani said...

வாங்க, வாங்க..

இந்த வாரம் தமிழ் வாரமாய் இருக்கும்.

நன்றிகள்!

இராதாகிருஷ்ணன் said...

மறுபடியும் ஒரு சுத்து வந்துடலாம்னு சொல்லிட்டு வந்தீங்க, வந்ததும் பொறுப்பக் குடுத்துட்டாங்களே! ;-)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்பின் இராம.கி அவர்களுக்கு, இந்த வார நட்சத்திரமாய் உங்களைக் காண மகிழ்ச்சி. தமிழில் சிறப்பான சொற்களைப் புதிதுபுதிதாய் அறிமுகப்படுத்தும் உங்கள் பணி மகத்தானது. உங்களைப் படித்து நிறையக் கற்றுக் கொள்கிறேன். நன்று. நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய துளசி கோபால், மூர்த்தி, தங்கமணி, இராதாகிருஷ்ணன், செல்வராஜ்

உங்களின் வரவேற்பிற்கு நன்றி. என்னால் முடிந்ததைச் சொல்ல முயலுவேன்.

அன்புடன்,
இராம.கி.

meenamuthu said...

இந்த வார நட்சத்திரமாய் தங்களை இன்றுதான் பார்த்தேன்!
தாமதமான பின்னூட்டம் மன்னியுங்கள்.செட்டிநாட்டு பேச்சுத்தமிழை
எழுத்தில் பார்க்கும் போது மிகவும் பூரிப்பாய் இருக்கிறது!
உங்களின்(நானறியாத)தமிழ் சொற்களை படிக்கும் போது
மிகவும் பிரமிப்பாய் இருக்கும்!

வளவுக்குள்ள நீங்க எழுதுறதை எப்பவும் வந்து படிச்சுப் பாப்பேன்.

அன்புடன்
மீனா.

Mookku Sundar said...

ஐயாவுக்கு வணக்கம்.

இந்த வாரம் தீந்தமிழாரமாக்க நினைத்து
அழைத்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்புடன்

என்றென்றும் அன்புடன்

வசந்தன்(Vasanthan) said...

வணக்கம் ஐயா!
நல்லாயிருக்கு உங்கட பதிவு.
நிறைய அறிஞ்சு கொண்டேன்.
ஈழத்தில இன்னும் நாங்கள் வாரம் எண்டத "கிழமை" எண்டு தான் பாவிக்கிறனாங்கள்.
சொல்லப்போனா வாரம் எண்ட சொல் எங்களுக்குத் தெரிஞ்சிருக்கே ஒழிய அதப் பாவிக்கிறதில்ல. அந்த ஏழு நாட்களையும் ஒரு கிழமை எண்டுதான் பாவிக்கிறனாங்கள். உங்கட பதிவப் பாக்கேக்க இப்பிடி "கிழமை" எண்ட பாவனை அழிஞ்சு போச்சு எண்ட தொனி தெரிஞ்சுது அதுதான் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவமெண்டு வந்தனான்.
நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய மீனா, மூக்கன், வசந்தன்

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி:

மீனா:
உங்களுடய இடுகைகளைத் தோழியர் பக்கத்தில் படித்திருக்கிறேன். நல்ல நடை உங்களுக்குக் கைவந்திருக்கிறது. தொடருங்கள்.

மூக்கன்:
தீந்தமிழா, வெறுந்தமிழா என்பதை வாரக் கடைசியில் சொல்லுங்கள். என்னால் முயன்றவரை ஈர்ப்பாகச் சொல்ல முயலுவேன்.

வசந்தன்:

கிழமை என்பது அழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாட்டுப் பழக்கம் வைத்துச் சொன்னேன். அந்தந்த நாட்களைச் சொல்லும் போது கிழமை என்பதைச் சேர்த்துச் சொல்லும் தமிழகத்தார், 7 நாள் தொகுதியை வாரம் என்றே சொல்கிறார்கள். நீங்கள் கிழமை என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறீர்கள். இப்படித்தான் ஒவ்வொரு வட்டாரமும் ஒவ்வொன்றைப் பேணுகிறது.

தமிழ் என்பது தமிழகம் மட்டுமில்லை. ஈழமும் சேர்ந்தது தான் என்று பல இடத்தும் சொல்லிவருகிறேன். அதே போல நம்முடைய மிச்ச சொச்சங்கள், வழக்காறுகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவற்றிலும் உள்ளன. நாம் அவற்றையும் மீள்பார்வை செய்ய வேண்டும். இதே போல சிங்களத்திலும் இந்தக் கூறுகள் இருக்கக் கூடும். நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

கூடவே ஒரு வேண்டுகோள். ஈழ வட்டாரச் சொல் அகர முதலியை யாராவது தொகுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துச் சொல் ஒன்றென்றென்றால் கிழக்குப் பக்கம் இன்னொன்று இருக்கும். வெவ்வேறு நடைமுறைகளை விட்டுவிடக் கூடாது. காட்டாகத் தமிழகத்தில் நெல்லைத்தமிழ் தொகுதி ஒன்றாகவும், குமரித்தமிழ் தொகுதி இன்னொன்றாகவும் சில சொற்களில் காட்டும். அண்மையில் இது போல தமிழகத்தில் வட்டார அகரமுதலிகள் வெளியிடப் படுகின்றன. ஈழத்தில் இருந்தும் அப்படி வெளிவர வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

நன்றி ஐயா!
நீங்கள் சொல்வது சரி.
எனக்கு இன்னொரு ஆச்சரியம்.
'பறைதல்' என்பதை பேசுதல் என்ற பொருளில் நாங்கள் பயன்படுத்துகிறோம். அதையே மலையாளிகளும் பயன்படுத்துகிறார்கள். இந்த சொல்லை வைத்தே நான் மலையாளியாக அடையாளங்காணப்பட்ட சம்பவமும் நடந்தது. (எமது ஓசை லயமும் கிட்டத்தட்ட மலையாளிகள் போல இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு) 'பறை' எனும் வினைச்சொல் பேசும் பொருளில் தமிழகத்தில் பயன்படுத்தப் படுவதில்லை என நினைக்கிறேன். அது எப்படி இடையில் தமிழகத்தில் இல்லாமல் ஈழத்திலும் கேரளாவிலும் ஒரு சொல் ஒரே பொருளில் பாவனையிலிருக்கிறது?

நீங்கள் சொல்லவது போல், ஈழத்தில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் (எது சரி? வடக்குக்கும் - வடக்கிற்கும்) இடையில் மொழிப்பாவனையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இராம.கி said...

இது ஒன்றும் வியப்பில்லை வசந்தன். சேரலமும் ஒரு நாலு நூற்றாண்டுகளுக்கு தமிழ் பேசிய ஓரிடம் தான். இன்றைக்கும் நமக்கு மிக அண்மையில் உள்ள ஒரு மொழி அது. பொதுவாக இப்படித் தனித்துப் போன சில வட்டாரங்களில் (தீவு என்ற காரணத்தால் ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு அப்புறம் தமிழகத்தில் இருந்து தொடர்பு குறைந்து தனித்துப் போன ஈழமும், இதே போல சேரமான் பெருமாள் காலத்தில் இருந்து தொடர்புகள் குறைந்து போன சேரலமும் பழம் சொல்லாட்சிகளைத் தேக்கி வைத்திருப்பது மொழியியலில் இயற்கை. அதனால் தான் இவற்றை நாடி நாம் சில பழைய ஆட்சிகளைத் தேடுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அப்ப வாரம் வட மொழிச் சொல் இல்லையா? சரியாப் போச்சு..நீங்க சொனதுக்கு அப்புறம் தான் எங்க ஊர்ல நிலம், ஆட்டுக்குட்டி எல்லாம் வாரத்துக்கு விடுறது நினைப்பு வந்துச்சு..இப்படி சொற்களை தொடர்பு படுத்தி பார்க்காம விட்டுடுறோமே?

கட்டுமானம் போன்ற சொற்களில் உள்ள மானத்தின் பொருளை இப்ப தான் கண்டுக்க முடிஞ்சது. வாழ்க உங்கள் தமிழ்ப்பணி.

அண்மையில் தமிழ் விக்கிபீடியாவில் பூமிக் கோளுக்கு இணையான தமிழ்ச் சொல் குறித்து குழப்பம் வந்தது. வேதனை தான். புவி நல்ல தமிழ்ச் சொல்லா?

Ganesh said...

ஐய்யா,

ஒரு ஐயம், மணி என்கிற அளவிடு தமிழர்களிடம் கிடையாது என்று உங்கள் வலைப்பதிவில் சொல்லி படித்தேன். ஆனால் இந்த பதிவில் கிழமைக்கு விளக்கம் அளிகையில் மணி என்ற அளவை உபயூகாபடுத்தி உள்ளிற். அப்படி என்றாள் ஒரு மணி நேரம் என்ற குறிஈடு நம்மிடம் இருந்ததா?