Sunday, April 24, 2005

நீலக்குயில்

நீலக்குயில்

அண்மையில் சிங்கை கமலாதேவியின் ஒரு மலையாளக் கவிதையை என்னுடைய வலைப்பதிவில் (www.valavu.blogspot.com) இட்டபொழுது, பின்னூட்டில் சிலர் கேள்வி கேட்டார்கள். அப்பொழுது முன்னாளில் ஒருமுறை அரையர் குழும்பில் நீலக்குயில் படத்துப் பாடல் ஒன்றினை இரா.முருகன் அங்கு இட்டதையும், அதற்கு ஒரு மொழிபெயர்ப்பு நான் கொடுத்ததையும் சொல்லியிருந்தேன்.

இன்று இரா.முருகன் அந்த மடலை எனக்கு முன்வரித்திருந்தார். மகிழ்ந்து போனேன். அவருக்கு நன்றி. கீழே அந்த மலையாளப் பாடலும், முருகனின் மொழிபெயர்ப்பும், என் மொழிபெயர்ப்பும் இருக்கின்றன.

இப்படி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நேரே பெயர்த்ததால் தான் இந்த நிறைவு ஏற்பட்டது. ஆங்கிலம் போய் வந்திருந்தால் இது குறைப்பேறாய்ப் போயிருக்கும். பல நல்ல தமிழ்ச் சொற்களின் மிச்ச சொச்சம் இன்னும் மலையாளத்தில் கால்கொண்டு இருக்கிறது. மலையாளத்தை ஏதோ ஓரளவு தெரிந்து கொண்டது எனக்கு இந்தத் தேடலில் உதவியாய் இருக்கிறது.

மீண்டும், மீண்டும் வலைப்பதிவு, மடற்குழு நண்பர்களுக்குச் சொல்லுவது. இலக்கியம் படிப்பதற்காகவாவது மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தமிழிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை நமக்குத் தெரிந்த உடனுறை மொழியாகத் தமிழர் கொள்ளுவது நல்ல பழக்கம்.

அன்புடன்,
இராம.கி.
-------------------------------------------------
In RayarKaapiKlub@yahoogroups.com, Krishnan Ramasamy wrote:
At 10:35 PM 05/28/2002 Tuesday +0530, you wrote:

நீலக்குயில் படத்தில் இடம் பெற்று இன்னும் மறக்கப்படாத மாப்ளா பாடல் இது. கமுகர புருஷோத்தமன் பாடியது (கே.ராகவன் பாடியது என்று சில இணையத் தளங்களில் போட்டிருக்கிறார்கள்).

பாடல் இதோ -

காயல் அரிகத்து வலையெறிஞ்சப்போழ்
வளை கிலுக்கிய சுந்தரி.
பெண்ணு கெட்டினு குரியெடுக்கும்போழ்
ஒரு நறுக்கினு சேர்க்கணே.

கண்ணினால் எண்டெ கரளின் உருளியில்
எண்ணெய் காச்சிய நொம்பரம்
கல்பில் அறிஞ்சப்போழ் இன்னு ஞம்மளு
கயறு பொட்டிய பம்பரம்.

சேர்ன்னு நின்னு வளர்ன்னு பொங்கியே
ஊரி நின்னுடெ கையினால் - நெய்ச்
சோறு வச்சது தின்னுவான் கொதி
ஏறேயுண்டெயென் நெஞ்சிலே.

கம்பெழும் நிண்டெ புரிகக் கொடியுடெ
அம்பு கொண்டு ஞரம்புகள்
கம்பொடிஞ்சொரு சீலக் குடையுடெ
கம்பிபோலெ வலிஞ்சு போய்.

குடவுமாய்ப் புழக் கடவில் வந்தெனைத்
தடவிலாக்கிய பைங்கிளி
ஒடுவில் நீயென்னெ சங்கடப்புழ
நடுவில் ஆக்கறு திக்களி.

வேறேயாணு விசாரமெங்கினில்
நேரமாயது சொல்லுவாய்.
வெறுதெ ஞானெந்து எரியும் வெயிலத்து
கயிலும் குத்தி நடக்கணே.

(காயல் - backwaters)

பாடலை இங்கே மொழிபெயர்க்கிறேன் -

காயல் அருகில் வலை வீசியபோது
வளை குலுக்கி நின்ற சுந்தரி.
கல்யாணத்துக்குச் சீட்டுக் குலுக்கும்போது
(என்) ஓலை நறுக்கையும் சேர்க்க வேணும்.

கண்களால் என் நெஞ்சின் தீச்சட்டியில்
எண்ணெய் காய்ச்சிய துன்பம்.
உள்ளத்தில் உணர்ந்தபோது இன்று நானொரு
கயறு அறுந்த பம்பரம்.

சேர்ந்து நின்று வளர்ந்து பொங்கி
எடுத்து உன் கையினால் - நெய்ச்
சோறு வைத்தது உண்ணவே - ஆசை
நிறைய உண்டு நெஞ்சிலே.
(மொழிபெயர்ப்பு நிறைவளிக்கவில்லை)

அசையும் உன் புருவக் கொடிகளின்
அம்பு கொண்டு நரம்புகள்
கம்பொடிந்த துணிக்குடையின்
கம்பி போல வளைந்ததே.

குடமுமாய் நதிக் கரையில் வந்தென்னைச்
சிறைபிடித்த பைங்கிளி
இறுதியில் நீ என்னைத் துன்பக்கடலில்
ஆழ்த்தும் இந்த விளையாட்டை விடு.

வேறு ஏதும் கவலையென்றால்
நேரே அதைச் சொல்லுவாய்.
சும்மா நான் எதற்கு
எரியும் வெய்யிலில்
துடுப்பும் ஏந்தி நடக்கிறேன்.

பாடலை இந்த இணையத் தளத்தில் கேட்டு மகிழலாம்.

www.keralam.org/Songs1.html

மத்தளராயன்
-----------------------------------------------------------
அன்பிற்குரிய மத்தளராயருக்கு,

நீங்கள் முன்னிட்ட நீலக்குயில் பாட்டைப் படித்தவுடன் அந்தச் சந்தத்தில் ஆழ்ந்து போனேன். அதற்குத்
தன்னானே சொல்லிப் பார்த்தேன்.

தன்ன னான்னனத் தன்ன னான்னனத்
தன்ன னான்னனத் தன்னனா

என்னைக் கொஞ்சம் மயங்க வைத்தது. பிறகு உங்கள் மொழிபெயர்ப்பையும், மலையாளப் பாட்டில் உள்ள
சில சொற்களையும் பார்த்தேன். நாம் அருகிப் பயனாக்கும் பல தமிழ்ச் சொற்கள் அப்படியே அதே பொருளில் மலையாளத்தில் பயிலுவதையும் அறிந்தேன். தமிழில் உள்ள எதுகை மோனை அமைப்புக்கள் சில
அப்படியே மலையாள மொழியில் அமைவதும் மனத்தில் ஒரு கீற்றைக் காட்டியது. அந்தச் சொற்களை
அப்படியே வைத்து சந்தம் குலையாமல் தமிழில் சொல்ல முடியுமா என்று பார்த்தேன். ஒரு இனிய உணர்வு. கீழே அந்தப் பெயர்ப்பு. சில இடங்களில் என் விளக்கமும் கீழே.

காயல் அருகினில் வலையெ றிக்கையில்
வளைகு லுக்கிய சுந்தரி
பெண்ணு கட்டிலே குறியெ டுக்கையில்
ஒரு நறுக்கினைச் சேர்க்கவே!

கண்ணி னால்எந்தன் கரளை உருளியில்
எண்ணெய் காய்ச்சிய நொம்பலம்
கற்பி லறிகையில் இன்று நானொரு
கயிறு போக்கிய பம்பரம்

சேர்ந்து நின்றுடன் வளர்ந்து பொங்கியே
ஊரும் நின்னுடைக் கையினால் - நெய்ச்
சோறு வைத்தது தின்னவே - கொதி
ஏற உண்டதென் நெஞ்சிலே

கம்பலைக் கும்உன்றன் புருவக் கொடியுடன்
அம்பு கொண்டு நரம்புகள்
கம்பொ டிந்தொரு சீலைக் குடையுடன்
கம்பி போலவே வளைந்து போய்

குடவு டன்புழைக் கடலில் வந்தெனைத்
தடவில் ஆக்கிய பைங்கிளி
முடிவில் நீயெனை சங்க டப்புழை
நடுவில் செய்வையோ கெக்களி

வேறே யாதெனும் விள்ளம் என்கினில்
நேரே ஆயது சொல்லுவாய்
வெறுமே நானெதற் கெரியும் வெய்யிலில்
கயிலைக் குத்தி நடக்கவே

அன்புடன்,
க. அரையன் (கருவரையன்).

பி.கு.

நறுக்கு என்றால் ஓலை நறுக்கு; இது புரியும் என்றே எண்ணுகிறேன்.
பெண்ணு கட்டு = தாலிக்கட்டு போல் திருமணத்தைக் குறிக்கும்.
குறியெடுக்கில் நறுக்குச் சேர்த்தல் = குடவோலை முறையில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் சடங்கோ? அதில் பாணர் தன் பெயருக்கும் ஒரு ஓலை போடச் சொல்லுகிறாரோ?
கரளை உருளி = கரிக்கறை பிடித்த வெண்கலப் பாண்டம். எண்ணெய் காய்ச்சும் பாண்டம் கரிப்பிடித்துத் தானே இருக்கும்.
நொம்பலம் = தமிழிலும் துன்பம் தான். நொய்ந்து போதல் = தளர்ந்து போதல்; நோய் = துவண்டு போதல். நொய்ம்பலம்>நொம்பலம்.
பொள்ளுதல்= துளையிடுதல். (துளைபட்டு நைந்து போனது என்பது பொட்டிப் போனது என்று சொல்லலாம். பொள்+து = பொட்டு). போக்குதலும் அழிந்து போனதையே குறிக்கும்.
கற்பு என்பது மலையாளத்தில் கல்பாகவே நிற்கும். அதன் பொருள் மனம் எனவும் தமிழில் உண்டு.
கற்பில் இருப்பது கற்பனை. கற்பித்துக் கொள்வது மனதில் உருவகிப்பதே.
ஊரி என்றால் இளமை என்றே தமிழில் பொருள் உண்டு. ஊரும் என்பது குறுகுறுப்பது.
கொதி என்பதற்கு ஆசை என்ற பொருள் தமிழிலும் உண்டு.
கம்பலைத்தல் = அசைதல்
குடவு = குடம்
புழைக்கடல் = backwaters (தமிழிலும் இதே பொருள் தான்.)
தடவு = தமிழிலும் சிறைச்சாலையே; தடை செய்தல், தடுத்து வைத்தல் என்ற ஆட்சிகளைப் பார்த்தால்
புரியும்.
சங்கடம் = துன்பம்
கெக்களி செய்தல் = களியாடல்
விள்ளம் = பிளவு; கவலுதல் என்பதும் இரண்டாகப் பிரிதல் தான். விள்தல்>வித்தாரம்>விதாரம்>விசாரம் = கவலை
கயில் = தமிழிலும் துடுப்புத் தான்.

In TSCII:

«ñ¨Á¢ø º¢í¨¸ ¸ÁÄ¡§¾Å¢Â¢ý ´Õ Á¨Ä¡Çì ¸Å¢¨¾¨Â ±ýÛ¨¼Â ŨÄôÀ¾¢Å¢ø (www.valavu.blogspot.com) þð¼¦À¡ØÐ, À¢ýëðÊø º¢Ä÷ §¸ûÅ¢ §¸ð¼¡÷¸û. «ô¦À¡ØÐ ÓýÉ¡Ç¢ø ´ÕÓ¨È «¨ÃÂ÷ ÌØõÀ¢ø ¿£ÄìÌ¢ø À¼òÐô À¡¼ø ´ýÈ¢¨É þá.ÓÕ¸ý «íÌ þ𼨾Ôõ, «¾üÌ ´Õ ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒ ¿¡ý ¦¸¡Îò¾¨¾Ôõ ¦º¡øĢ¢Õó§¾ý.

þýÚ þá.ÓÕ¸ý «ó¾ Á¼¨Ä ±ÉìÌ ÓýÅâò¾¢Õó¾¡÷. Á¸¢úóÐ §À¡§Éý. «ÅÕìÌ ¿ýÈ¢. ¸£§Æ «ó¾ Á¨Ä¡Çô À¡¼Öõ, Óոɢý ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒõ, ±ý ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒõ þÕ츢ýÈÉ.

þôÀÊ Á¨Ä¡Çò¾¢ø þÕóÐ ¾Á¢ØìÌ §¿§Ã ¦ÀÂ÷ò¾¾¡ø ¾¡ý þó¾ ¿¢¨È× ²üÀð¼Ð. ¬í¸¢Äõ §À¡ö Åó¾¢Õó¾¡ø þР̨Èô§ÀÈ¡öô §À¡Â¢ÕìÌõ. ÀÄ ¿øÄ ¾Á¢úî ¦º¡ü¸Ç¢ý Á¢îº ¦º¡îºõ þýÛõ Á¨Ä¡Çò¾¢ø ¸¡ø¦¸¡ñÎ þÕ츢ÈÐ. Á¨Ä¡Çò¨¾ ²§¾¡ µÃÇ× ¦¾Ã¢óÐ ¦¸¡ñ¼Ð ±ÉìÌ þó¾ò §¾¼Ä¢ø ¯¾Å¢Â¡ö þÕ츢ÈÐ.

Á£ñÎõ, Á£ñÎõ ŨÄôÀ¾¢×, Á¼üÌØ ¿ñÀ÷¸ÙìÌî ¦º¡øÖÅÐ. þÄ츢Âõ ÀÊôÀ¾ü¸¡¸Å¡ÅÐ Á¨Ä¡Çõ, ¸ýɼõ, ¦¾ÖíÌ ¬¸¢Â ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø ²§¾Ûõ ´ý¨È ¿ÁìÌò ¦¾Ã¢ó¾ ¯¼Û¨È ¦Á¡Æ¢Â¡¸ò ¾Á¢Æ÷ ¦¸¡ûÙÅÐ ¿øÄ ÀÆì¸õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
-------------------------------------------------
In RayarKaapiKlub@yahoogroups.com, Krishnan Ramasamy wrote:
At 10:35 PM 05/28/2002 Tuesday +0530, you wrote:

¿£ÄìÌ¢ø À¼ò¾¢ø þ¼õ ¦ÀüÚ þýÛõ ÁÈì¸ôÀ¼¡¾ Á¡ôÇ¡ À¡¼ø þÐ. ¸Ó¸Ã ÒÕ§„¡ò¾Áý À¡ÊÂÐ (§¸.á¸Åý À¡ÊÂÐ ±ýÚ º¢Ä þ¨½Âò ¾Çí¸Ç¢ø §À¡ðÊÕ츢ȡ÷¸û).

À¡¼ø þ§¾¡ -

¸¡Âø «Ã¢¸òРŨĦÂÈ¢ïºô§À¡ú
Å¨Ç ¸¢Ö츢 Íó¾Ã¢.
¦ÀñÏ ¦¸ðÊÛ Ìâ¦ÂÎìÌõ§À¡ú
´Õ ¿Úì¸¢Û §º÷츧½.

¸ñ½¢É¡ø ±ñ¦¼ ¸ÃÇ¢ý ¯ÕǢ¢ø
±ñ¦½ö ¸¡îº¢Â ¦¿¡õÀÃõ
¸øÀ¢ø «È¢ïºô§À¡ú þýÛ »õÁÙ
¸ÂÚ ¦À¡ðÊ ÀõÀÃõ.

§º÷ýÛ ¿¢ýÛ ÅÇ÷ýÛ ¦À¡í¸¢§Â
°Ã¢ ¿¢ýÛ¦¼ ¨¸Â¢É¡ø - ¦¿öî
§º¡Ú ÅîºÐ ¾¢ýÛÅ¡ý ¦¸¡¾¢
²§ÈÔñ¦¼¦Âý ¦¿ïº¢§Ä.

¸õ¦ÀØõ ¿¢ñ¦¼ Òâ¸ì ¦¸¡ÊÔ¦¼
«õÒ ¦¸¡ñÎ »ÃõÒ¸û
¸õ¦À¡Ê了¡Õ º£Äì ̨¼Ô¦¼
¸õÀ¢§À¡¦Ä ÅÄ¢ïÍ §À¡ö.

̼×Á¡öô ÒÆì ¸¼Å¢ø Å󦾨Éò
¾¼Å¢Ä¡ì¸¢Â ¨Àí¸¢Ç¢
´ÎÅ¢ø ¿£¦Âý¦É ºí¸¼ôÒÆ
¿ÎÅ¢ø ¬ì¸Ú ¾¢ì¸Ç¢.

§Å§ÈÂ¡Ï Å¢º¡Ã¦Áí¸¢É¢ø
§¿ÃÁ¡ÂÐ ¦º¡øÖÅ¡ö.
¦ÅÚ¦¾ »¡¦ÉóÐ ±Ã¢Ôõ ¦Å¢ÄòÐ
¸Â¢Öõ Ìò¾¢ ¿¼ì¸§½.

(¸¡Âø - backwaters)

À¡¼¨Ä þí§¸ ¦Á¡Æ¢¦ÀÂ÷츢§Èý -

¸¡Âø «Õ¸¢ø Å¨Ä Å£º¢Â§À¡Ð
Å¨Ç ÌÖ츢 ¿¢ýÈ Íó¾Ã¢.
¸ø¡½òÐìÌî º£ðÎì ÌÖìÌõ§À¡Ð
(±ý) µ¨Ä ¿Ú쨸Ôõ §º÷ì¸ §ÅÏõ.

¸ñ¸Ç¡ø ±ý ¦¿ïº¢ý ¾£îºðÊ¢ø
±ñ¦½ö ¸¡ö ÐýÀõ.
¯ûÇò¾¢ø ¯½÷ó¾§À¡Ð þýÚ ¿¡¦É¡Õ
¸ÂÚ «Úó¾ ÀõÀÃõ.

§º÷óÐ ¿¢ýÚ ÅÇ÷óÐ ¦À¡í¸¢
±ÎòÐ ¯ý ¨¸Â¢É¡ø - ¦¿öî
§º¡Ú ¨Åò¾Ð ¯ñ½§Å - ¬¨º
¿¢¨È ¯ñÎ ¦¿ïº¢§Ä.
(¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒ ¿¢¨ÈÅÇ¢ì¸Å¢ø¨Ä)

«¨ºÔõ ¯ý ÒÕÅì ¦¸¡Ê¸Ç¢ý
«õÒ ¦¸¡ñÎ ¿ÃõÒ¸û
¸õ¦À¡Êó¾ н¢į̀¼Â¢ý
¸õÀ¢ §À¡Ä ŨÇ󾧾.

̼ÓÁ¡ö ¿¾¢ì ¸¨Ã¢ø Åó¦¾ý¨Éî
º¢¨ÈÀ¢Êò¾ ¨Àí¸¢Ç¢
þÚ¾¢Â¢ø ¿£ ±ý¨Éò ÐýÀ츼Ģø
¬úòÐõ þó¾ Å¢¨Ç¡𨼠ŢÎ.

§ÅÚ ²Ðõ ¸Å¨Ä¦ÂýÈ¡ø
§¿§Ã «¨¾î ¦º¡øÖÅ¡ö.
ÍõÁ¡ ¿¡ý ±¾üÌ
±Ã¢Ôõ ¦Åö¢Ģø
ÐÎôÒõ ²ó¾¢ ¿¼ì¸¢§Èý.

À¡¼¨Ä þó¾ þ¨½Âò ¾Çò¾¢ø §¸ðÎ Á¸¢ÆÄ¡õ.

www.keralam.org/Songs1.html

Áò¾ÇáÂý
-----------------------------------------------------------
«ýÀ¢üÌâ Áò¾ÇáÂÕìÌ,

¿£í¸û Óýɢ𼠿£ÄìÌ¢ø À¡ð¨¼ô ÀÊò¾×¼ý «ó¾î ºó¾ò¾¢ø ¬úóÐ §À¡§Éý. «¾üÌò
¾ýÉ¡§É ¦º¡øÄ¢ô À¡÷ò§¾ý.

¾ýÉ É¡ýÉÉò ¾ýÉ É¡ýÉÉò
¾ýÉ É¡ýÉÉò ¾ýÉÉ¡

±ý¨Éì ¦¸¡ïºõ ÁÂí¸ ¨Åò¾Ð. À¢ÈÌ ¯í¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ô¨ÀÔõ, Á¨Ä¡Çô À¡ðÊø ¯ûÇ
º¢Ä ¦º¡ü¸¨ÇÔõ À¡÷ò§¾ý. ¿¡õ «Õ¸¢ô ÀÂÉ¡ìÌõ ÀÄ ¾Á¢úî ¦º¡ü¸û «ôÀʧ «§¾ ¦À¡ÕÇ¢ø Á¨Ä¡Çò¾¢ø À¢ÖŨ¾Ôõ «È¢ó§¾ý. ¾Á¢Æ¢ø ¯ûÇ ±Ð¨¸ §Á¡¨É «¨ÁôÒì¸û º¢Ä
«ôÀʧ Á¨ÄÂ¡Ç ¦Á¡Æ¢Â¢ø «¨ÁÅÐõ ÁÉò¾¢ø ´Õ ¸£ü¨Èì ¸¡ðÊÂÐ. «ó¾î ¦º¡ü¸¨Ç
«ôÀʧ ¨ÅòÐ ºó¾õ ̨Ä¡Áø ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓÊÔÁ¡ ±ýÚ À¡÷ò§¾ý. ´Õ þɢ ¯½÷×. ¸£§Æ «ó¾ô ¦ÀÂ÷ôÒ. º¢Ä þ¼í¸Ç¢ø ±ý Å¢Çì¸Óõ ¸£§Æ.

¸¡Âø «Õ¸¢É¢ø ŨĦ Ȣ쨸¢ø
ŨÇÌ Ö츢 Íó¾Ã¢
¦ÀñÏ ¸ð椀 ÌÈ¢¦Â Î쨸¢ø
´Õ ¿Ú츢¨Éî §º÷츧Å!

¸ñ½¢ É¡ø±ó¾ý ¸Ã¨Ç ¯ÕǢ¢ø
±ñ¦½ö ¸¡ö ¦¿¡õÀÄõ
¸üÀ¢ ÄÈ¢¨¸Â¢ø þýÚ ¿¡¦É¡Õ
¸Â¢Ú §À¡ì¸¢Â ÀõÀÃõ

§º÷óÐ ¿¢ýÚ¼ý ÅÇ÷óÐ ¦À¡í¸¢§Â
°Õõ ¿¢ýÛ¨¼ì ¨¸Â¢É¡ø - ¦¿öî
§º¡Ú ¨Åò¾Ð ¾¢ýɧŠ- ¦¸¡¾¢
²È ¯ñ¼¦¾ý ¦¿ïº¢§Ä

¸õÀ¨Äì Ìõ¯ýÈý ÒÕÅì ¦¸¡ÊÔ¼ý
«õÒ ¦¸¡ñÎ ¿ÃõÒ¸û
¸õ¦À¡ Êó¦¾¡Õ º£¨Äì ̨¼Ô¼ý
¸õÀ¢ §À¡Ä§Å ŨÇóÐ §À¡ö

Ì¼× ¼ýÒ¨Æì ¸¼Ä¢ø Å󦾨Éò
¾¼Å¢ø ¬ì¸¢Â ¨Àí¸¢Ç¢
ÓÊÅ¢ø ¿£¦Â¨É ºí¸ ¼ôÒ¨Æ
¿ÎÅ¢ø ¦ºö¨Å§Â¡ ¦¸ì¸Ç¢

§Å§È ¡¦¾Ûõ Å¢ûÇõ ±ý¸¢É¢ø
§¿§Ã ¬ÂÐ ¦º¡øÖÅ¡ö
¦ÅÚ§Á ¿¡¦É¾ü ¦¸Ã¢Ôõ ¦Åö¢Ģø
¸Â¢¨Äì Ìò¾¢ ¿¼ì¸§Å

«ýÒ¼ý,
¸. «¨ÃÂý (¸ÕŨÃÂý).

À¢.Ì.

¿ÚìÌ ±ýÈ¡ø µ¨Ä ¿ÚìÌ; þÐ ÒâÔõ ±ý§È ±ñϸ¢§Èý.
¦ÀñÏ ¸ðÎ = ¾¡Ä¢ì¸ðÎ §À¡ø ¾¢ÕÁ½ò¨¾ì ÌÈ¢ìÌõ.
ÌÈ¢¦ÂÎ츢ø ¿ÚìÌî §º÷ò¾ø = ̼§Å¡¨Ä ӨȢø ¦ÀñÏìÌ Á¡ôÀ¢û¨Ç §¾Îõ º¼í§¸¡? «¾¢ø À¡½÷ ¾ý ¦ÀÂÕìÌõ ´Õ µ¨Ä §À¡¼î ¦º¡øÖ¸¢È¡§Ã¡?
¸Ã¨Ç ¯ÕÇ¢ = ¸Ã¢ì¸¨È À¢Êò¾ ¦Åñ¸Äô À¡ñ¼õ. ±ñ¦½ö ¸¡öîÍõ À¡ñ¼õ ¸Ã¢ôÀ¢ÊòÐò ¾¡§É þÕìÌõ.
¦¿¡õÀÄõ = ¾Á¢Æ¢Öõ ÐýÀõ ¾¡ý. ¦¿¡öóÐ §À¡¾ø = ¾Ç÷óÐ §À¡¾ø; §¿¡ö = ÐÅñÎ §À¡¾ø. ¦¿¡öõÀÄõ>¦¿¡õÀÄõ.
¦À¡ûÙ¾ø= ШÇ¢ξø. (ШÇÀðÎ ¨¿óÐ §À¡ÉÐ ±ýÀÐ ¦À¡ðÊô §À¡ÉÐ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. ¦À¡û+Ð = ¦À¡ðÎ). §À¡ì̾Öõ «Æ¢óÐ §À¡É¨¾§Â ÌÈ¢ìÌõ.
¸üÒ ±ýÀÐ Á¨Ä¡Çò¾¢ø ¸øÀ¡¸§Å ¿¢üÌõ. «¾ý ¦À¡Õû ÁÉõ ±É×õ ¾Á¢Æ¢ø ¯ñÎ.
¸üÀ¢ø þÕôÀÐ ¸üÀ¨É. ¸üÀ¢òÐì ¦¸¡ûÅÐ Áɾ¢ø ¯ÕŸ¢ôÀ§¾.
°Ã¢ ±ýÈ¡ø þǨÁ ±ý§È ¾Á¢Æ¢ø ¦À¡Õû ¯ñÎ. °Õõ ±ýÀÐ ÌÚÌÚôÀÐ.
¦¸¡¾¢ ±ýÀ¾üÌ ¬¨º ±ýÈ ¦À¡Õû ¾Á¢Æ¢Öõ ¯ñÎ.
¸õÀ¨Äò¾ø = «¨º¾ø
Ì¼× = ̼õ
Ò¨Æ츼ø = backwaters (¾Á¢Æ¢Öõ þ§¾ ¦À¡Õû ¾¡ý.)
¾¼× = ¾Á¢Æ¢Öõ º¢¨È¨Ä§Â; ¾¨¼ ¦ºö¾ø, ¾ÎòÐ ¨Åò¾ø ±ýÈ ¬ðº¢¸¨Çô À¡÷ò¾¡ø
ÒâÔõ.
ºí¸¼õ = ÐýÀõ
¦¸ì¸Ç¢ ¦ºö¾ø = ¸Ç¢Â¡¼ø
Å¢ûÇõ = À¢Ç×; ¸ÅÖ¾ø ±ýÀÐõ þÃñ¼¡¸ô À¢Ã¢¾ø ¾¡ý. Å¢û¾ø>Å¢ò¾¡Ãõ>Å¢¾¡Ãõ>Å¢º¡Ãõ = ¸Å¨Ä
¸Â¢ø = ¾Á¢Æ¢Öõ ÐÎôÒò ¾¡ý. ¸ÅÖ¾ø ±ýÀÐõ þÃñ¼¡¸ô À¢Ã¢¾ø ¾¡ý. Å¢û¾ø>Å¢ò¾¡Ãõ>Å¢¾¡Ãõ>Å¢º¡Ãõ = ¸Å¨Ä.
¸Â¢ø = ¾Á¢Æ¢Öõ ÐÎôÒò ¾¡ý.

No comments: