Wednesday, April 13, 2005

சுரமண்டிலமும், பேரியாழும்

மூன்று மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் தனிமடலில் "சுரமண்டிலம் என்று வடநாட்டில் அழைக்கப் படும் இசைக் கருவியும், நம் சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் பேரியாழும் ஒன்று தானா?" என்று கேட்டிருந்தார். அவருக்கு மறுமொழி அனுப்பியிருந்தேன். அந்த மடலில் இருந்த செய்திகள் மற்றவருக்கும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

சுரமண்டிலமும், பேரியாழும்

மண்டிலம் என்ற சொல்லுக்கு வட்டம் என்றே பொருள் கொள்ளப்படும். மண்டித்தல் என்ற வினைக்கு "வளைந்து இருத்தல்" என்றே பொருள். "மண்டி போட்டு இரு". என்றால் காலை வளைத்து முழங்காலால் எடை தாங்கி நிற்றல் என்ற பொருள். மண்டி போடுதல் என்பது அந்தக் காலத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசான்கள் கொடுக்கும் ஒருவிதத் தண்டனை. மண்டுதல் என்பதும் வளைதலே. மண்டலம் என்பது ஒரு circle அல்லது region. வட்டம் என்ற உருவத்தை முழுமை பெற்றது என்றும், ஒரே மாதிரிச் சீராக இருக்கிறது என்றே நாம் விளங்கிக் கொள்ளுகிறோம். பொதுவாக மண்டலம் என்ற எழுத்துக்கூட்டு பூதியலான இடத்திற்கும் (physical place), மண்டிலம் என்ற எழுத்துக்கூட்டு அப்பூதியான கருத்தீட்டிற்கும் (abstract concept) பயன்படும். தொண்டை மண்டலம் என்னும் போது அது ஐம்புலன்களால் உணர முடிகிற ஒரு பூதியல் இடத்தைக் குறிக்கிறது; ஆனால் திங்கள் மண்டிலம் - நிலா சுற்றிவரும் பாதை - என்னும் போது, ஆறாவது அறிவால் மட்டுமே உணரக்கூடிய ஓர் அப்பூதியான சுற்றைக் (abstract circle) குறிக்கிறது.

ஆங்கிலத்திலும் round என்பதற்கு whole, complete என்ற பொருட்பாடுகள் வருகின்றனவல்லவா? தமிழில் மண்டில யாப்பு என்று சொல்லும் போது பாட்டில் வரும் அடிகள் எல்லாம் ஒரே அளவான அடிகளாய், ஒழுங்கோடு, சீராக முழுமை பெற்று வருவதாய்ப் பொருள் கொள்ளுகிறோம். நாலுசீர் அளவடி மண்டிலம் என்றால் எல்லாமே நாலுசீர்; ஐந்துசீர் நெடிலடி மண்டிலம் என்றால் எல்லா அடிகளும் அதே போல; ஆறுக்கு மேற்பட்ட கழிநெடிலடி மண்டிலம் என்றால் எல்லாமே அதே போல. மண்டில யாப்பில் முதல் அடி தொடங்கி முடியும் வரை எல்லாமே ஒன்றுபோல அடியின் அளவுகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் இணைக்குறள் ஆசிரியப்பாவோ, நேரிசை ஆசிரியப்பாவோ மண்டில யாப்பில் சேரா.

இது போன்ற மண்டில யாப்பை, வட்டம் என்ற சொல்லின் திரிவான வ்ருத்தம் என்ற சொல்லால் வடமொழி குறிக்கும். களப்பாளர் காலத்திற்கு அப்புறம் நம்மூரில் பாகத, சங்கதச் செல்வாக்கு மிகுந்ததால், நாமும் மண்டிலம் என்ற சொல்லை விட்டு விருத்தம் என்ற சொல்லைப் புழங்கத் தொடங்கினோம். இப்பொழுது விருத்தம் என்ற சொல்லே எங்கும் பரவலாய் இருக்கிறது. வடமொழியில் விருத்த யாப்பு என்பது ஒரு முகமையான யாப்பு.

வட்டம், மண்டிலம் என்பவற்றை வட்டணை, வட்டகை, வட்டாரம் என்றும் அதே பொருளில் சிலர் சொல்லுவதுண்டு.

மேலே சொன்ன மண்டிலத்தின் பொருளை நீட்டி, மற்ற எல்லா வட்டங்களுக்கும் சிலர் பயன்படுத்துவது உண்டு. குறிப்பாக, எந்த cycle -ம் நமக்கு ஒரு மண்டிலம் தான். சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தை 45 நாட்கள் உண்ணும் பருவமும் கூட மண்டிலம் என்றே அழைக்கப் படுகிறது. இசையில் ஓர் அடிப்படை அதிர்வை எடுத்துக் கொண்டு (காட்டாகப் பருவெண்- frequency - 240 Hz யை எடுத்துக்கொண்டு) அதன் இரண்டு மடங்குப் பருவெண் வரை (480 Hz) உள்ள அதிர்வலைகளின் அரங்கை (range of 240 Hz to 480 Hz) ஒரு மண்டிலம் என்று சொல்லுகிறோம். இந்த அரங்கைப் பொதுவாகச் சமன் மண்டிலம் அல்லது நட்ட மண்டிலம் (median cycle) என்று தமிழிசையில் சொல்லுவார்கள். 120 Hz ல் இருந்து 240 Hz வரை உள்ளதை மெலிவு மண்டிலம் அல்லது மந்த மண்டிலம் (lower cycle) என்றும் (மந்தம் = கீழுள்ளது), 480 Hz ல் இருந்து 960 Hz வரை உள்ளதை வலிவு மண்டிலம் அல்லது தார மண்டிலம் (higher cycle) என்றும் (தாரம் = உயர்ச்சி) சொல்லுவது உண்டு.

இப்படி ஓர் அரங்கின் மொத்த வீச்சையும் குறிக்காமல், நிலையான தொடக்க இடத்தை மட்டுமே அடையாளம் காட்டித் தாய்>தாயி என்றும் சொல்லுவதும் உண்டு. தாயக் கட்டம் என்ற விளையாட்டு நினைவிற்கு வருகிறதா? தாய்கின்ற இடங்களைக் கட்டம் கட்டமாய்க் கட்டி, அதில் நகர்த்தி விளையாடக் காய்களை வைத்து, ஒன்றிலிருந்து ஆறுவரை எண்களிட்ட இரு கட்டைகளைத் (தாயக் கட்டைகள்) தூக்கிப் போட்டு, விழும் எண்ணிற்குத் தக்கக் காய்களை நகர்த்தி, அங்கங்கே கட்டங்களில் தங்கி முடிவில் பழம் ஆகிற (அல்லது மலையேறுகிற) ஆட்டத்தைத் தாயம் என்று சொல்லுகிறோம். தாயத்தில் உள்ள கட்டங்கள் தாயக் கட்டங்கள். தாய்தல் என்ற வினையோடு தங்குவது என்று வினை தொடர்பு உடையது.

தாயியோடு ஸகரத்தைச் சேர்த்து அந்தச் சொல்லை வடமொழி தன் வயம் ஆக்கிக் கொள்ளும். நட்ட மண்டிலத்தின் தொடக்கத் தாயி 240 Hz, அது போல மந்த மண்டிலத்தின் தொடக்கத் தாயி 120 Hz; தார மண்டிலத்தின் தொடக்கத் தாயி 480 Hz. நாளவட்டத்தில் கருநாடக இசையில் ஸ்தாயி என்ற சொல் மண்டிலத்தையும் கூடக் குறிக்கத் தொடங்கியது. நட்டத் தாயி (நட்ட>மட்ட>மத்த>மத்ய; நகரமும் மகரமும் தமிழில் போலி; நுப்பது - முப்பது; நுனி - முனி) மத்ய ஸ்தாயி என்றும், மந்தத் தாயி (மந்த>மந்த்ர) மந்த்ர ஸ்தாயி என்றும், தாரத் தாயி தார ஸ்தாயி என்றும் வடமொழிப் பலுக்கில் அழைக்கப் படும்.

ஒவ்வொரு மண்டிலத்திற்குள்ளும் வரம்பற்ற அலகுகள் இருக்கின்றன. இருந்தாலும் ஏதோ ஒரு முறையில் 12 அலகுகளை மட்டுமே மடக்கை முறையில் (exponential) பிரித்துப் பார்ப்பது மேலை நாட்டு முறை. (ஓர் அலகும் இன்னோர் அலகில் இருந்து (1/2)^(1/12) என்ற முறையில் வேறுபடும்.) மேலை முறையில் ஒவ்வோர் அலகையும் அரைத் தானம் (half-tone) என்றே அழைப்பர்; இதற்கு மாறாக இந்திய முறையில் ஒரு மண்டிலத்தை 22 அலகுகளாய் மடக்கை முறையில் பிரித்துப் பார்ப்போம். (இப்படிப் பிரித்துப் பார்ப்பதிலும் வெவ்வேறு முறைகள் இருக்கின்றன.) இந்த 22 அலகுகளையும் 22 துடி என்று தமிழிசை சொல்லும். இந்தத் துடி என்னும் சொல்லை ஸ்துடி>ஸ்துதி>ஸ்ருதி என்று வடமொழிப் பலுக்கில் சொல்லுவார்கள். (22 துடிகளுக்கு மேல் அருகில் கூடிக் கும்மிக் குமுகிக் கிடக்கும் அலகுகளையும் இந்திய இசையில் ஆலத்தியின்(ஆலாபனையின்) போது தொட்டுப் பார்ப்பது உண்டு. அப்படிச் சேர்த்துக் குமுக்குவதைக் குமுக்கம்>கமகம் என்று தமிழிசை சொல்லும்.)

இந்திய முறையில் 22 துடிகளை 12 அரைத் தானமாய்ப் தொகுத்துப் பின் அதை 7 சுரமாய்த் தொகுப்பார்கள். அப்படித் தொகுத்து வந்த சுரங்கள் தான் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை. இவை வடமொழி பெயர்ப்பில் சத்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று அழைக்கப் படும். (குரல் என்ற சொல்லின் நேரடிப் பெயர்ப்பே சட்>சத்தம்>சத்யம்>சத்ஜம்; இது போல ஒவ்வொன்றும் தமிழ்ச் சுரங்களின் நேரடிப் பெயர்ப்புத்தான். அந்தச் செய்திகளை விரிவு கருதி இங்கே விடுக்கிறேன். வேறொரு முறை இன்னொரு கட்டுரையில் சொல்ல முயற்சிப்பேன்.)

ஒரு நாரைக் குறிப்பிட்ட இழுவிசையில் இழுத்துக் கட்டிப் பின் அதைச் சுண்டித் (சுண்டு = sound இந்தையிரோப்பியச் சொல்; சுள் என்று தெறித்தது என்று சொல்கிறோம் அல்லவா?) துடிக்கவைத்து நாம் இசையலையை எழுப்புகிறோம். நாரின் நீளம், தடிமன், வலிமை, மற்றும் நாரின் மேலுள்ள இழுவிசை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அதிர்வு (குறிப்பிட்ட பருவெண்) எற்படும். இப்படித் தனித்து அதிரும் போது நம் செவிக்கு இன்பம் பயக்காது. குறைந்தது ஐந்து நரம்புகளாவது அடுத்தடுத்து இருந்தால் அவற்றைச் சுண்ண்டும் போது எழும் அலைகள் இயைந்து (>இசைந்து) வரும் போது, நம் செவிக்கு அது இன்பம் கொடுக்கும். இப்படிச் சேர்ந்து வரும் இசைக் கோவைக்காக நரம்புக் கருவிகளில் நாம் ஒன்றிற்கு மேற்பட்ட நரம்புகளைக் கட்டுகிறோம். (நரல் என்னும் கற்றாழை நாரை முறுக்கிப் பிசின் ஏற்றி முதலில் செய்யப்பட்டது தான் நரம்பு. பின்னாளில் நரம்பு என்பது விலங்கில் இருந்தும் எடுக்கப்பட்டது; நாகரிகம் வளர்ந்த பின்னால் மாழை(metal)யில் இருந்தும் செய்யப்பட்டது.) அதே போலக் கோடு என்பது கொம்பு, எலும்பு என்ற பொருளைக் கொடுக்கும். விலங்காண்டி நிலையில் இப்படித்தான் நரம்புக் கருவிகள் அரத்தம் சதைக்கு நடுவில் எழுந்தன. சரியாகச் சொன்னால், music was not a tea party or a picnic; it had no religious overtones those days. it started from a brute existence of primitive life. தமிழ்ச் சொற்கள் மூலமாய்த்தான் நாம் இப்படி வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ் மாந்த வாழ்க்கையை உய்த்து அறிகிறோம். தமிழ் சொற்பிறப்பியலை விடாமல் ஆய்வது இப்படி பண்பாட்டு மூலம் காணுவதற்குத் தான்.

பஞ்ச மரபும், சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை அடியார்க்கு நல்லார் உரையும் நால்வகை யாழ்களை நமக்குக் காட்டுகின்றன.

பேரியாழ் பின்னும் மகரம் சகோடமுடன்
சீர்பொலியும் செங்கோடும் செப்பினரால் - தார்பொலிந்த
மன்ன! திருமாற! வண்கூடற் கோமானே!
இன்னம் உளவே பிற.

(பஞ்ச மரபு - 7 ம் பாட்டு)

"இன்னம் உளவே பிற" என்ற குறிப்பைக் கல்லாடத்தின் வழி "நாரதப் பேரியாழ், தும்புருக் கருவி, கீசகப் பேரியாழ், மருத்துவப் பெயர் பெறும் வானக் கருவி" என அறிகிறோம். கல்லாடம் என்ற நூலை மறைமலை அடிகளார் தன் ஆய்வின் படி (மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் - முதற்பகுதி, கழக வெளியீடு) ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ, ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ எழுந்த நூல் என்று நிறுவுவார்.

மஞ்ச மரபின் படி 21 நரம்பு கட்டியது பேரியாழ். 19 நரம்பு கட்டியது மகர யாழ், 14 நரம்பு கட்டியது சகோட யாழ், 7 நரம்பு கட்டியது செங்கோட்டு யாழ்

ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கும் நன்னரம்பு சொல்முறையே
மேல்வகை நூலோர் விதி.

செங்கோட்டு யாழின் பிற்கால மாற்றமே வீணை, கோட்டு வாத்தியம் போன்றவை. வீணைக்கும் யாழுக்கும் உள்ள வேறுபாடு, தந்திகளின் தொனிப்பை (tuning) மாற்றாமல் பல பண்களை இசைக்கும் வகையில் வீணை இருப்பதே. யாழிலோ தந்திகளை ஒரு சில குறிப்பிட்ட பண்களுக்கு எனத் தொனிக்க வைத்தால், பின்பு வேறு பண்களை இசைக்க வேண்டின், மீண்டும் தொனிப்பை மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும்; இந்த இக்கட்டினால், செம்பாலைக்கு (அரிகாம்போதி) என ஒரு முல்லையாழ், படுமலைப் பாலைக்கு (நடபைரவி) என ஒரு குறிஞ்சியாழ், கோடிப்பாலைக்கு (கரகரப்பிரியா) என ஒரு மருத யாழ், விளரிப் பாலைக்கு (இரு மத்திமத் தோடி) என ஒரு நெய்தல் யாழ் என்றெல்லாம் கருவிகள் செய்யப் பட்டன. பலபண்களை இசைக்கும் வகையில் செங்கோட்டு யாழ் செய்யப் பட்டது. செங்கோட்டு யாழ் என்பது நுட்பியலின் வளர்ச்சி.

மகர யாழ் என்பது கொம்பன் சுறாமீனின் (horned sharkl sword fish shark) எலும்பைத் தண்டாய்க் கொண்டது. இதை எறி சுறா என்று கலித்தொகை 131:7ந் மூலம் அறியாலாம். சுறாமீன் எலும்பு பெரிதானதால், அது கிட்டத்தட்ட நேர்கோடாய் இருந்தது; அல்லது அதைத் தேய்த்து நேர்கோடாய் ஆக்கிக் கொள்ளமுடியும். மகரயாழ் அமைப்பு நரம்புகளின் எண்ணிக்கையில் மாறுதல் இருந்தாலும் தோற்றத்தில் கிட்டத்தட்ட mandolin, guitar போன்றது.

சங்கோட யாழ் என்ற சொல் சகோடயாழ் என்று ஆனது. இதுவும் ஒரு நேர்கோட்டு யாழ் தான். ஆனால் இது செங்கோட்டு யாழையும் விடப் பெரியது. இரண்டு மண்டிலம் கொண்டது. குமரி மாவட்டத்தில் நேர்கோட்டு மரமான பாக்கு மரத்தைச் சகோட மரம் என்று சொல்லுவார்கள்.

செங்கோட்டு யாழ் பற்றி முன்பே பேசிவிட்டோ ம். இனிக் கல்லாடத்தில் 85 வது பாட்டைப் பார்ப்போம். முதலில் நாரதப் பேரியாழ்:

வடமொழி மதித்த இசைநூல் வழக்குடன்
அடுத்த எண்நான்கு அங்குலி அகத்தினும்
நாற்பதிற்று இரட்டி நால்அங் குலியினும்
குறுமையும் நெடுமையும் கோடல் பெற்றதாய்
ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து
கோடி மூன்றில் குறித்து மணிகுயிற்றி
இருநிலம் கிடத்தி மனம்கரம் கதுவ
ஆயிரத் தெட்டில் அமைத்தன பிறப்பு
பிறவிப் பேதத்து உறையது போல
ஆரியப் பதங்கொள் நாரதப் பேரியாழ்

இந்த யாழ் வட மொழியில் உள்ள இசைநூல் மரபின் படி செய்யப் பட்டது; 32 அணுங்குழை அகலமும், 84 அணுங்குழை நீளமும் கொண்ட பெட்டி; அதன் மேல் ஆயிரம் தந்திகள் பொருந்திக் கட்டியது. பெட்டிக்கு மூன்று கோடியில் மணிகளை இழைத்து இருக்கிறது. பெட்டி, நிலத்தில் கிடத்தப்பட்டே கதுவப் (வாசிக்கப்) பட்டது. ஆயிரதெட்டு வகையான பண்கள் பேத முறையில் ஆரிய வழக்கின்படி செய்யப்பட்டது நாரதப் பேரியாழ் (கருநாட இசையில் மேளகருத்தா ராகங்களும் அவற்றின் விரிவுகளும் பேத முறையில் தான் எழுப்பப் படுகின்றன).

இனித் தும்புருக் கருவி பற்றிப் பார்ப்போம்.

நன்னர்கொள் அன்பால் நனிமிகப் புலம்ப
முந்நான்கு அங்குலி முழுஉடல் சுற்றும்
ஐம்பதிற்று இரட்டி ஆறுடன் கழித்த
அங்குலி நெடுமையும் அமைத்து உள்தூர்ந்தே
ஒன்பது தந்திரி உறுந்தி நிலைநீக்கி
வறுவாய்க்காய் இரண்டு அணைத்து வரைகட்டி
தோள்கால் வதிந்து தொழிற்படத் தோன்றும்
தும்புருக் கருவியும் துள்ளிநின்று இசைப்ப

12 அணுங்குழைச் உடற் சுற்றளவு கொண்ட தண்டு; 94 அணுங்குழை நீளம்; ஒன்பது தந்திகள்; இரண்டு தந்திகள் வறுவாய் என்னும் அணைப்பின் மேல் வரைகட்டி இருக்கும்; தோளுக்கும் காலுக்குமாய் அடங்கும் வகையில் வைத்து இசைப்பது தும்புருக் கருவி. (கிட்டத்தட்ட இந்தக் காலத் தம்புராக் கருவியோ என்று எண்ணத் தோன்றுகிறது; ஆனால் தந்திகளின் எண்ணிக்கை?)

மூன்றாவது கீசகப் பேரியாழ்:

எழுஎன உடம்புபெற்று எண்பது அங்குலியின்
தந்திரி நூறு தழங்குமதி முகத்த
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல

திடமான உடல்பெற்று 80 அணுங்குழை நீட்சியுடன், 100 தந்திகள் பெற்று சந்திரன் போன்ற முகப்போர்வை பெற்ற கீசக யாழ்.

நாலாவது மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி: கல்லாட நூலிற்கு உரையில்லாமல் இந்தக் கருவியின் பெயரென்னவென்றே தெரியாமல் போய்விட்டது. ஓலைச் சுவடிகள் கிடைக்காமல் போனது நம்முடைய கெட்ட காலம்.

நிறைமதி வட்டத்து முயல்உரி விசித்து
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து
அந்நரம்பு இருபத்தாறு அங்குலி பெற
இடக்கரம் துவக்கி இடக்கீழ் அமைத்து
புறவிரல் மூன்றின் நுனிவிரல் அகத்தும்
அறுபத்து இரண்டு இசை அனைத்துயிர் வணக்கும்
மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி

முயலின் தோலை நிறைமதி வட்டம் போல் பத்தரின்மேல் போர்வையாகக் கட்டியிருக்கிறது; (வீணையில் அடியில் குடம் போல் இருக்கும் பகுதியைப் பத்தர் என்று சொல்லுவார்கள்.) நட்டநடுவில் 26 அணுங்குழை நீளம்; ஒரே ஒரு நரம்பு இடது கைப்பக்கம் துவக்கி இடக் கீழே இறுக்கிக் கட்டியிருக்கிறது; மூன்று விரலின் புறத்தாலும் நுனிவிரலின் உட்பக்கத்தாலுமாய் மீட்டி 62 சுரங்களை எழுப்பக் கூடிய ஒரு கருவி இது.

இதைப் படிக்கும் போது இந்தக் கருவியும் தம்புரா போலவே நமக்குத் தோற்றுகிறது; அதே நேரம் தும்புரு என்ற முந்தையப் பெயர் இந்தக் காலத் தம்புராவிற்கு அருகில் வருகிறது. எனவே மொத்தத்தில் இதுவா அதுவா என்பது ஆய்வு செய்யப் படவேண்டியது.

சந்தூர் என்ற வடநாட்டுக் கருவி 100 நரம்புகள் கொண்டது சத தாரம்>சந்தாரம்>சந்தார்>சந்தூர்; அது கீசகப் பேரியாழோடு உறழ்ந்ததா?(related?) என்று சொல்லத் தெரியவில்லை.

சுர மண்டிலம் என்ற வடநாட்டுக் கருவி பார்ப்பதற்கு நாரதப் பேரியாழ் போல் தோற்றம் அளிக்கிறது; ஆனால் 40 தந்திகள் தான் அதில் இருக்கின்றன. (SWARAMANDAL : A harp like instrument constructed with a box and approx. 40 strings. Used by some vocalists for strumming along with their performances.) ஓர்ந்து பார்த்தால், நம்மூர்ப் பேரியாழுக்கும் சுர மண்டிலத்திற்கும் தொடர்பு கிடையாது.

தமிழிசையின் கூறுகள் மொத்தத்தில் அங்கும் இங்குமாய் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. நமக்குப் புரியாமல், உரைகள் தொலைந்து போன காரணத்தால் விளங்காமல், கிடப்பவை ஏராளம். இசைஞர்கள் தமிழாய்வாளர்களும் சேர்ந்து வேலை செய்தால் தான் பலவற்றை மீட்டுக் கொண்டு வரலாம். இது ஒரு புலனாய்வு போலத் தான் இருக்கிறது.

நான் இசைஞன் அல்லன். எனவே நான் இந்தக் கட்டுரையில் கூறியவற்றை முற்று முழுதான முடிவு என்று எண்ணாதீர்கள். தமிழிசை அறிஞரான வீ.ப.கா.சுந்தரத்தின் ஆய்விற்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். அதே பொழுது சில இடங்களில் அவரிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறேன்.

வேறுபட்ட செய்திகளைத் தொகுத்து இறைவன் வழிகாட்ட விழைவிருப்பின் ஒரு நாள் வெளியிட வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ãýÚ Á¡¾í¸ÙìÌ ÓýÒ, ¿ñÀ÷ ´ÕÅ÷ ¾É¢Á¼Ä¢ø "ÍÃÁñÊÄõ ±ýÚ Å¼¿¡ðÊø «¨Æì¸ô ÀÎõ þ¨ºì ¸ÕÅ¢Ôõ, ¿õ ºí¸ þÄ츢Âò¾¢ø ¦º¡øÄôÀÎõ §Àâ¡Øõ ´ýÚ ¾¡É¡?" ±ýÚ §¸ðÊÕó¾¡÷. «ÅÕìÌ ÁÚ¦Á¡Æ¢ «ÛôÀ¢Â¢Õó§¾ý. «ó¾ Á¼Ä¢ø þÕó¾ ¦ºö¾¢¸û ÁüÈÅÕìÌõ ÀÂýÀÎõ ±ýÚ þíÌ À¾¢¸¢§Èý. ¯í¸û Å¡º¢ôÀ¢üÌ,

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

ÍÃÁñÊÄÓõ, §Àâ¡Øõ

ÁñÊÄõ ±ýÈ ¦º¡øÖìÌ Åð¼õ ±ý§È ¦À¡Õû ¦¸¡ûÇôÀÎõ. ÁñÊò¾ø ±ýÈ Å¢¨ÉìÌ "ŨÇóÐ þÕò¾ø" ±ý§È ¦À¡Õû. "ÁñÊ §À¡ðÎ þÕ". ±ýÈ¡ø ¸¡¨Ä ŨÇòÐ ÓÆí¸¡Ä¡ø ±¨¼ ¾¡í¸¢ ¿¢üÈø ±ýÈ ¦À¡Õû. ÁñÊ §À¡Î¾ø ±ýÀÐ «ó¾ì ¸¡Äò ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼ ¬º¡ý¸û ¦¸¡ÎìÌõ ´ÕÅ¢¾ò ¾ñ¼¨É. Áñξø ±ýÀÐõ ŨǾ§Ä. Áñ¼Äõ ±ýÀÐ ´Õ circle «øÄÐ region. Åð¼õ ±ýÈ ¯ÕÅò¨¾ ÓبÁ ¦ÀüÈÐ ±ýÚõ, ´§Ã Á¡¾¢Ã¢î º£Ã¡¸ þÕ츢ÈÐ ±ý§È ¿¡õ Å¢Çí¸¢ì ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¦À¡ÐÅ¡¸ Áñ¼Äõ ±ýÈ ±ØòÐìÜðÎ â¾¢ÂÄ¡É þ¼ò¾¢üÌõ (physical place), ÁñÊÄõ ±ýÈ ±ØòÐìÜðÎ «ôâ¾¢Â¡É ¸Õò¾£ðÊüÌõ (abstract concept) ÀÂýÀÎõ. ¦¾¡ñ¨¼ Áñ¼Äõ ±ýÛõ §À¡Ð «Ð ³õÒÄý¸Ç¡ø ¯½Ã Óʸ¢È ´Õ â¾¢Âø þ¼ò¨¾ì ÌȢ츢ÈÐ; ¬É¡ø ¾¢í¸û ÁñÊÄõ - ¿¢Ä¡ ÍüÈ¢ÅÕõ À¡¨¾ - ±ýÛõ §À¡Ð, ¬È¡ÅÐ «È¢Å¡ø ÁðΧÁ ¯½ÃìÜÊ µ÷ «ôâ¾¢Â¡É Íü¨Èì (abstract circle) ÌȢ츢ÈÐ.

¬í¸¢Äò¾¢Öõ round ±ýÀ¾üÌ whole, complete ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸û ÅÕ¸¢ýÈÉÅøÄÅ¡? ¾Á¢Æ¢ø ÁñÊÄ Â¡ôÒ ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð À¡ðÊø ÅÕõ «Ê¸û ±øÄ¡õ ´§Ã «ÇÅ¡É «Ê¸Ç¡ö, ´Øí§¸¡Î, º£Ã¡¸ ÓبÁ ¦ÀüÚ ÅÕž¡öô ¦À¡Õû ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¿¡Öº£÷ «ÇÅÊ ÁñÊÄõ ±ýÈ¡ø ±øÄ¡§Á ¿¡Öº£÷; ³óк£÷ ¦¿ÊÄÊ ÁñÊÄõ ±ýÈ¡ø ±øÄ¡ «Ê¸Ùõ «§¾ §À¡Ä; ¬ÚìÌ §ÁüÀ𼠸Ƣ¦¿ÊÄÊ ÁñÊÄõ ±ýÈ¡ø ±øÄ¡§Á «§¾ §À¡Ä. ÁñÊÄ Â¡ôÀ¢ø Ó¾ø «Ê ¦¾¡¼í¸¢ ÓÊÔõ Ũà ±øÄ¡§Á ´ýÚ§À¡Ä «Ê¢ý «Ç׸û þÕì¸ §ÅñÎõ. þó¾ «ÊôÀ¨¼Â¢ø þ¨½ìÌÈû ¬º¢Ã¢ÂôÀ¡§Å¡, §¿Ã¢¨º ¬º¢Ã¢ÂôÀ¡§Å¡ ÁñÊÄ Â¡ôÀ¢ø §ºÃ¡.

þÐ §À¡ýÈ ÁñÊÄ Â¡ô¨À, Åð¼õ ±ýÈ ¦º¡øÄ¢ý ¾¢Ã¢Å¡É ùÕò¾õ ±ýÈ ¦º¡øÄ¡ø ż¦Á¡Æ¢ ÌÈ¢ìÌõ. ¸ÇôÀ¡Ç÷ ¸¡Äò¾¢üÌ «ôÒÈõ ¿õãâø À¡¸¾, ºí¸¾î ¦ºøÅ¡ìÌ Á¢Ì󾾡ø, ¿¡Óõ ÁñÊÄõ ±ýÈ ¦º¡ø¨Ä Å¢ðΠŢÕò¾õ ±ýÈ ¦º¡ø¨Äô ÒÆí¸ò ¦¾¡¼í¸¢§É¡õ. þô¦À¡ØРŢÕò¾õ ±ýÈ ¦º¡ø§Ä ±íÌõ ÀÃÅÄ¡ö þÕ츢ÈÐ. ż¦Á¡Æ¢Â¢ø Å¢Õò¾ ¡ôÒ ±ýÀÐ ´Õ Ó¸¨ÁÂ¡É Â¡ôÒ.

Åð¼õ, ÁñÊÄõ ±ýÀÅü¨È Å𼨽, Å𼨸, Åð¼¡Ãõ ±ýÚõ «§¾ ¦À¡ÕÇ¢ø º¢Ä÷ ¦º¡øÖÅÐñÎ.

§Á§Ä ¦º¡ýÉ ÁñÊÄò¾¢ý ¦À¡Õ¨Ç ¿£ðÊ, ÁüÈ ±øÄ¡ Åð¼í¸ÙìÌõ º¢Ä÷ ÀÂýÀÎòÐÅÐ ¯ñÎ. ÌÈ¢ôÀ¡¸, ±ó¾ cycle -õ ¿ÁìÌ ´Õ ÁñÊÄõ ¾¡ý. º¢ò¾ ÁÕòÐÅò¾¢ø ´Õ ÁÕó¨¾ 45 ¿¡ð¸û ¯ñÏõ ÀÕÅÓõ ܼ ÁñÊÄõ ±ý§È «¨Æì¸ô Àθ¢ÈÐ. þ¨ºÂ¢ø µ÷ «ÊôÀ¨¼ «¾¢÷¨Å ±ÎòÐì ¦¸¡ñÎ (¸¡ð¼¡¸ô ÀÕ¦Åñ- frequency - 240 Hz ¨Â ±ÎòÐ즸¡ñÎ) «¾ý þÃñÎ Á¼íÌô ÀÕ¦Åñ Ũà (480 Hz) ¯ûÇ «¾¢÷ŨĸǢý «Ãí¨¸ (range of 240 Hz to 480 Hz) ´Õ ÁñÊÄõ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þó¾ «Ãí¨¸ô ¦À¡ÐÅ¡¸î ºÁý ÁñÊÄõ «øÄÐ ¿ð¼ ÁñÊÄõ (median cycle) ±ýÚ ¾Á¢Æ¢¨ºÂ¢ø ¦º¡øÖÅ¡÷¸û. 120 Hz ø þÕóÐ 240 Hz Ũà ¯ûǨ¾ ¦ÁÄ¢× ÁñÊÄõ «øÄÐ Áó¾ ÁñÊÄõ (lower cycle) ±ýÚõ (Áó¾õ = ¸£ØûÇÐ), 480 Hz ø þÕóÐ 960 Hz Ũà ¯ûǨ¾ ÅÄ¢× ÁñÊÄõ «øÄÐ ¾¡Ã ÁñÊÄõ (higher cycle) ±ýÚõ (¾¡Ãõ = ¯Â÷) ¦º¡øÖÅÐ ¯ñÎ.

þôÀÊ µ÷ «Ãí¸¢ý ¦Á¡ò¾ ţÔõ ÌȢ측Áø, ¿¢¨ÄÂ¡É ¦¾¡¼ì¸ þ¼ò¨¾ ÁðΧÁ «¨¼Â¡Çõ ¸¡ðÊò ¾¡ö>¾¡Â¢ ±ýÚõ ¦º¡øÖÅÐõ ¯ñÎ. ¾¡Âì ¸ð¼õ ±ýÈ Å¢¨Ç¡ðÎ ¿¢¨ÉÅ¢üÌ ÅÕ¸¢È¾¡? ¾¡ö¸¢ýÈ þ¼í¸¨Çì ¸ð¼õ ¸ð¼Á¡öì ¸ðÊ, «¾¢ø ¿¸÷ò¾¢ Å¢¨Ç¡¼ì ¸¡ö¸¨Ç ¨ÅòÐ, ´ýȢĢÕóÐ ¬ÚŨà ±ñ¸Ç¢ð¼ þÕ ¸ð¨¼¸¨Çò (¾¡Âì ¸ð¨¼¸û) à츢ô §À¡ðÎ, Å¢Øõ ±ñ½¢üÌò ¾ì¸ì ¸¡ö¸¨Ç ¿¸÷ò¾¢, «í¸í§¸ ¸ð¼í¸Ç¢ø ¾í¸¢ ÓÊÅ¢ø ÀÆõ ¬¸¢È («øÄÐ Á¨Ä§ÂÚ¸¢È) ¬ð¼ò¨¾ò ¾¡Âõ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. ¾¡Âò¾¢ø ¯ûÇ ¸ð¼í¸û ¾¡Âì ¸ð¼í¸û. ¾¡ö¾ø ±ýÈ Å¢¨É§Â¡Î ¾íÌÅÐ ±ýÚ Å¢¨É ¦¾¡¼÷Ò ¯¨¼ÂÐ.

¾¡Â¢§Â¡Î …¸Ãò¨¾î §º÷òÐ «ó¾î ¦º¡ø¨Ä ż¦Á¡Æ¢ ¾ý ÅÂõ ¬ì¸¢ì ¦¸¡ûÙõ. ¿ð¼ ÁñÊÄò¾¢ý ¦¾¡¼ì¸ò ¾¡Â¢ 240 Hz, «Ð §À¡Ä Áó¾ ÁñÊÄò¾¢ý ¦¾¡¼ì¸ò ¾¡Â¢ 120 Hz; ¾¡Ã ÁñÊÄò¾¢ý ¦¾¡¼ì¸ò ¾¡Â¢ 480 Hz. ¿¡ÇÅð¼ò¾¢ø ¸Õ¿¡¼¸ þ¨ºÂ¢ø Š¾¡Â¢ ±ýÈ ¦º¡ø ÁñÊÄò¨¾Ôõ ܼì ÌÈ¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ. ¿ð¼ò ¾¡Â¢ (¿ð¼>Áð¼>Áò¾>ÁòÂ; ¿¸ÃÓõ Á¸ÃÓõ ¾Á¢Æ¢ø §À¡Ä¢; ÑôÀÐ - ÓôÀÐ; ÑÉ¢ - ÓÉ¢) Áò Š¾¡Â¢ ±ýÚõ, Áó¾ò ¾¡Â¢ (Áó¾>ÁóòÃ) Áóòà Š¾¡Â¢ ±ýÚõ, ¾¡Ãò ¾¡Â¢ ¾¡Ã Š¾¡Â¢ ±ýÚõ ż¦Á¡Æ¢ô ÀÖ츢ø «¨Æì¸ô ÀÎõ.

´ù¦Å¡Õ ÁñÊÄò¾¢üÌûÙõ ÅÃõÀüÈ «Ä̸û þÕ츢ýÈÉ. þÕó¾¡Öõ ²§¾¡ ´Õ ӨȢø 12 «Ä̸¨Ç ÁðΧÁ Á¼ì¨¸ ӨȢø (exponential) À¢Ã¢òÐô À¡÷ôÀÐ §Á¨Ä ¿¡ðÎ Ó¨È. (µ÷ «ÄÌõ þý§É¡÷ «Ä¸¢ø þÕóÐ (1/2)^(1/12) ±ýÈ Ó¨È¢ø §ÅÚÀÎõ.) §Á¨Ä ӨȢø ´ù§Å¡÷ «Ä¨¸Ôõ «¨Ãò ¾¡Éõ (half-tone) ±ý§È «¨ÆôÀ÷; þ¾üÌ Á¡È¡¸ þó¾¢Â ӨȢø ´Õ ÁñÊÄò¨¾ 22 «Ä̸ǡö Á¼ì¨¸ ӨȢø À¢Ã¢òÐô À¡÷ô§À¡õ. (þôÀÊô À¢Ã¢òÐô À¡÷ôÀ¾¢Öõ ¦Åù§ÅÚ Ó¨È¸û þÕ츢ýÈÉ.) þó¾ 22 «Ä̸¨ÇÔõ 22 ÐÊ ±ýÚ ¾Á¢Æ¢¨º ¦º¡øÖõ. þó¾ò ÐÊ ±ýÛõ ¦º¡ø¨Ä ŠÐÊ>ŠÐ¾¢>ŠÕ¾¢ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÖ츢ø ¦º¡øÖÅ¡÷¸û. (22 ÐʸÙìÌ §Áø «Õ¸¢ø ÜÊì ÌõÁ¢ì ÌÓ¸¢ì ¸¢¼ìÌõ «Ä̸¨ÇÔõ þó¾¢Â þ¨ºÂ¢ø ¬Äò¾¢Â¢ý(¬Ä¡À¨É¢ý) §À¡Ð ¦¾¡ðÎô À¡÷ôÀÐ ¯ñÎ. «ôÀÊî §º÷òÐì ÌÓìÌŨ¾ì ÌÓì¸õ>¸Á¸õ ±ýÚ ¾Á¢Æ¢¨º ¦º¡øÖõ.)

þó¾¢Â ӨȢø 22 Ðʸ¨Ç 12 «¨Ãò ¾¡ÉÁ¡öô ¦¾¡ÌòÐô À¢ý «¨¾ 7 ÍÃÁ¡öò ¦¾¡ÌôÀ¡÷¸û. «ôÀÊò ¦¾¡ÌòÐ Åó¾ ÍÃí¸û ¾¡ý ÌÃø, Ðò¾õ, ¨¸ì¸¢¨Ç, ¯¨Æ, þÇ¢, Å¢Çâ, ¾¡Ãõ ±ýÀ¨Å. þ¨Å ż¦Á¡Æ¢ ¦ÀÂ÷ôÀ¢ø ºòƒõ, â„Àõ, ¸¡ó¾¡Ãõ, Áò¾¢Áõ, ÀïºÁõ, ¨¾Å¾õ, ¿¢„¡¾õ ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. (ÌÃø ±ýÈ ¦º¡øÄ¢ý §¿ÃÊô ¦ÀÂ÷ô§À ºð>ºò¾õ>ºòÂõ>ºòƒõ; þÐ §À¡Ä ´ù¦Å¡ýÚõ ¾Á¢úî ÍÃí¸Ç¢ý §¿ÃÊô ¦ÀÂ÷ôÒò¾¡ý. «ó¾î ¦ºö¾¢¸¨Ç Å¢Ã¢× ¸Õ¾¢ þí§¸ Å¢Î츢§Èý. §Å¦È¡Õ Ó¨È þý¦É¡Õ ¸ðΨâø ¦º¡øÄ ÓÂüº¢ô§Àý.)

´Õ ¿¡¨Ãì ÌÈ¢ôÀ¢ð¼ þØÅ¢¨ºÂ¢ø þØòÐì ¸ðÊô À¢ý «¨¾î ÍñÊò (ÍñÎ = sound þó¨¾Â¢§Ã¡ôÀ¢Âî ¦º¡ø; Íû ±ýÚ ¦¾È¢ò¾Ð ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ «øÄÅ¡?) ÐÊ츨ÅòÐ ¿¡õ þ¨ºÂ¨Ä¨Â ±ØôÒ¸¢§È¡õ. ¿¡Ã¢ý ¿£Çõ, ¾ÊÁý, ÅÄ¢¨Á, ÁüÚõ ¿¡Ã¢ý §ÁÖûÇ þØÅ¢¨º ¬¸¢ÂÅü¨Èô ¦À¡ÚòÐ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ «¾¢÷× (ÌÈ¢ôÀ¢ð¼ ÀÕ¦Åñ) ±üÀÎõ. þôÀÊò ¾É¢òÐ «¾¢Õõ §À¡Ð ¿õ ¦ºÅ¢ìÌ þýÀõ ÀÂ측Ð. ̨Èó¾Ð ³óÐ ¿ÃõҸǡÅÐ «Îò¾ÎòÐ þÕó¾¡ø «Åü¨Èî ÍññÎõ §À¡Ð ±Øõ «¨Ä¸û þ¨ÂóÐ (>þ¨ºóÐ) ÅÕõ §À¡Ð, ¿õ ¦ºÅ¢ìÌ «Ð þýÀõ ¦¸¡ÎìÌõ. þôÀÊî §º÷óÐ ÅÕõ þ¨ºì §¸¡¨Å측¸ ¿ÃõÒì ¸ÕÅ¢¸Ç¢ø ¿¡õ ´ýÈ¢üÌ §ÁüÀð¼ ¿ÃõÒ¸¨Çì ¸ðθ¢§È¡õ. (¿Ãø ±ýÛõ ¸üÈ¡¨Æ ¿¡¨Ã ÓÚ츢ô À¢º¢ý ²üÈ¢ ӾĢø ¦ºöÂôÀð¼Ð ¾¡ý ¿ÃõÒ. À¢ýÉ¡Ç¢ø ¿ÃõÒ ±ýÀРŢÄí¸¢ø þÕóÐõ ±Îì¸ôÀð¼Ð; ¿¡¸Ã¢¸õ ÅÇ÷ó¾ À¢ýÉ¡ø Á¡¨Æ(metal)¢ø þÕóÐõ ¦ºöÂôÀð¼Ð.) «§¾ §À¡Äì §¸¡Î ±ýÀÐ ¦¸¡õÒ, ±ÖõÒ ±ýÈ ¦À¡Õ¨Çì ¦¸¡ÎìÌõ. Å¢Äí¸¡ñÊ ¿¢¨Ä¢ø þôÀÊò¾¡ý ¿ÃõÒì ¸ÕÅ¢¸û «Ãò¾õ º¨¾ìÌ ¿ÎÅ¢ø ±Øó¾É. ºÃ¢Â¡¸î ¦º¡ýÉ¡ø, music was not a tea party or a picnic; it had no religious overtones those days. it started from a brute existence of primitive life. ¾Á¢úî ¦º¡ü¸û ãÄÁ¡öò¾¡ý ¿¡õ þôÀÊ ÅÃÄ¡üÈ¢üÌ ÓüÀð¼ ¾Á¢ú Á¡ó¾ Å¡ú쨸¨Â ¯öòÐ «È¢¸¢§È¡õ. ¾Á¢ú ¦º¡üÀ¢ÈôÀ¢Â¨Ä Å¢¼¡Áø ¬öÅÐ þôÀÊ ÀñÀ¡ðÎ ãÄõ ¸¡ÏžüÌò ¾¡ý.

Àïº ÁÃÒõ, º¢ÄôÀ¾¢¸¡Ãõ «Ãí§¸üÚ ¸¡¨¾ «Ê¡÷ìÌ ¿øÄ¡÷ ¯¨ÃÔõ ¿¡øŨ¸ ¡ú¸¨Ç ¿ÁìÌì ¸¡ðθ¢ýÈÉ.

§Àâ¡ú À¢ýÛõ Á¸Ãõ º§¸¡¼Ó¼ý
º£÷¦À¡Ä¢Ôõ ¦ºí§¸¡Îõ ¦ºôÀ¢Éáø - ¾¡÷¦À¡Ä¢ó¾
ÁýÉ! ¾¢ÕÁ¡È! Åñܼü §¸¡Á¡§É!
þýÉõ ¯Ç§Å À¢È.

(Àïº ÁÃÒ - 7 õ À¡ðÎ)

"þýÉõ ¯Ç§Å À¢È" ±ýÈ ÌÈ¢ô¨Àì ¸øÄ¡¼ò¾¢ý ÅÆ¢ "¿¡Ã¾ô §Àâ¡ú, ÐõÒÕì ¸ÕÅ¢, ¸£º¸ô §Àâ¡ú, ÁÕòÐÅô ¦ÀÂ÷ ¦ÀÚõ Å¡Éì ¸ÕÅ¢" ±É «È¢¸¢§È¡õ. ¸øÄ¡¼õ ±ýÈ á¨Ä Á¨ÈÁ¨Ä «Ê¸Ç¡÷ ¾ý ¬öÅ¢ý ÀÊ (Á¡½¢ì¸ Å¡º¸÷ ÅÃÄ¡Úõ ¸¡ÄÓõ - Ó¾üÀ̾¢, ¸Æ¸ ¦ÅǢ£Î) ³ó¾¡õ áüÈ¡ñÊý þÚ¾¢Â¢§Ä¡, ¬È¡õ áüÈ¡ñÊý ¦¾¡¼ì¸ò¾¢§Ä¡ ±Øó¾ áø ±ýÚ ¿¢Ú×Å¡÷.

Áïº ÁÃÀ¢ý ÀÊ 21 ¿ÃõÒ ¸ðÊÂÐ §Àâ¡ú. 19 ¿ÃõÒ ¸ðÊÂÐ Á¸Ã ¡ú, 14 ¿ÃõÒ ¸ðÊÂÐ º§¸¡¼ ¡ú, 7 ¿ÃõÒ ¸ðÊÂÐ ¦ºí§¸¡ðΠ¡ú

´ýÚõ þÕÀÐõ ´ýÀÐõ Àòм§É
¿¢ýÈ À¾¢É¡ýÌõ À¢ý§ÉØõ - ÌýÈ¡¾
¿¡øŨ¸ ¡ƢüÌõ ¿ýÉÃõÒ ¦º¡øӨȧÂ
§ÁøŨ¸ á§Ä¡÷ Å¢¾¢.

¦ºí§¸¡ðΠ¡Ƣý À¢ü¸¡Ä Á¡üȧÁ Å£¨½, §¸¡ðÎ Å¡ò¾¢Âõ §À¡ýȨÅ. Å£¨½ìÌõ ¡ØìÌõ ¯ûÇ §ÅÚÀ¡Î, ¾ó¾¢¸Ç¢ý ¦¾¡É¢ô¨À (tuning) Á¡üÈ¡Áø ÀÄ Àñ¸¨Ç þ¨ºìÌõ Ũ¸Â¢ø Å£¨½ þÕôÀ§¾. ¡Ƣ§Ä¡ ¾ó¾¢¸¨Ç ´Õ º¢Ä ÌÈ¢ôÀ¢ð¼ Àñ¸ÙìÌ ±Éò ¦¾¡É¢ì¸ ¨Åò¾¡ø, À¢ýÒ §ÅÚ Àñ¸¨Ç þ¨ºì¸ §ÅñÊý, Á£ñÎõ ¦¾¡É¢ô¨À Á¡üÈ¢ì ¦¸¡ñÎ þÕì¸ §ÅñÎõ; þó¾ þì¸ðÊÉ¡ø, ¦ºõÀ¡¨ÄìÌ («Ã¢¸¡õ§À¡¾¢) ±É ´Õ Óø¨Ä¡ú, ÀÎÁ¨Äô À¡¨ÄìÌ (¿¼¨ÀÃÅ¢) ±É ´Õ ÌȢﺢ¡ú, §¸¡ÊôÀ¡¨ÄìÌ (¸Ã¸ÃôÀ¢Ã¢Â¡) ±É ´Õ ÁÕ¾ ¡ú, Å¢Çâô À¡¨ÄìÌ (þÕ Áò¾¢Áò §¾¡Ê) ±É ´Õ ¦¿ö¾ø ¡ú ±ý¦ÈøÄ¡õ ¸ÕÅ¢¸û ¦ºöÂô Àð¼É. ÀÄÀñ¸¨Ç þ¨ºìÌõ Ũ¸Â¢ø ¦ºí§¸¡ðΠ¡ú ¦ºöÂô Àð¼Ð. ¦ºí§¸¡ðΠ¡ú ±ýÀÐ ÑðÀ¢ÂÄ¢ý ÅÇ÷.

Á¸Ã ¡ú ±ýÀÐ ¦¸¡õÀý ÍÈ¡Á£É¢ý (horned sharkl sword fish shark) ±Öõ¨Àò ¾ñ¼¡öì ¦¸¡ñ¼Ð. þ¨¾ ±È¢ ÍÈ¡ ±ýÚ ¸Ä¢ò¦¾¡¨¸ 131:7ó ãÄõ «È¢Â¡Ä¡õ. ÍÈ¡Á£ý ±ÖõÒ ¦À⾡ɾ¡ø, «Ð ¸¢ð¼ò¾ð¼ §¿÷§¸¡¼¡ö þÕó¾Ð; «øÄÐ «¨¾ò §¾öòÐ §¿÷§¸¡¼¡ö ¬ì¸¢ì ¦¸¡ûÇÓÊÔõ. Á¸Ã¡ú «¨ÁôÒ ¿ÃõҸǢý ±ñ½¢ì¨¸Â¢ø Á¡Ú¾ø þÕó¾¡Öõ §¾¡üÈò¾¢ø ¸¢ð¼ò¾ð¼ mandolin, guitar §À¡ýÈÐ.

ºí§¸¡¼ ¡ú ±ýÈ ¦º¡ø º§¸¡¼Â¡ú ±ýÚ ¬ÉÐ. þÐ×õ ´Õ §¿÷§¸¡ðΠ¡ú ¾¡ý. ¬É¡ø þÐ ¦ºí§¸¡ðΠ¡¨ÆÔõ Å¢¼ô ¦ÀâÂÐ. þÃñÎ ÁñÊÄõ ¦¸¡ñ¼Ð. ÌÁâ Á¡Åð¼ò¾¢ø §¿÷§¸¡ðÎ ÁÃÁ¡É À¡ìÌ ÁÃò¨¾î º§¸¡¼ ÁÃõ ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û.

¦ºí§¸¡ðΠ¡ú ÀüÈ¢ Óý§À §Àº¢Å¢ð§¼¡õ. þÉ¢ì ¸øÄ¡¼ò¾¢ø 85 ÅÐ À¡ð¨¼ô À¡÷ô§À¡õ. ӾĢø ¿¡Ã¾ô §Àâ¡ú:

ż¦Á¡Æ¢ Á¾¢ò¾ þ¨ºáø ÅÆì̼ý
«Îò¾ ±ñ¿¡ýÌ «íÌÄ¢ «¸ò¾¢Ûõ
¿¡üÀ¾¢üÚ þÃðÊ ¿¡ø«í ÌĢ¢Ûõ
ÌÚ¨ÁÔõ ¦¿Î¨ÁÔõ §¸¡¼ø ¦ÀüȾ¡ö
¬Â¢Ãõ ¾ó¾¢Ã¢ ¿¢¨È¦À¡Ð Å¢º¢òÐ
§¸¡Ê ãýÈ¢ø ÌÈ¢òÐ Á½¢Ì¢üÈ¢
þÕ¿¢Äõ ¸¢¼ò¾¢ ÁÉõ¸Ãõ ¸ÐÅ
¬Â¢Ãò ¦¾ðÊø «¨Áò¾É À¢ÈôÒ
À¢ÈÅ¢ô §À¾òÐ ¯¨ÈÂÐ §À¡Ä
¬Ã¢Âô À¾í¦¸¡û ¿¡Ã¾ô §Àâ¡ú

þó¾ ¡ú ż ¦Á¡Æ¢Â¢ø ¯ûÇ þ¨ºáø ÁÃÀ¢ý ÀÊ ¦ºöÂô Àð¼Ð; 32 «ÏíÌ¨Æ «¸ÄÓõ, 84 «ÏíÌ¨Æ ¿£ÇÓõ ¦¸¡ñ¼ ¦ÀðÊ; «¾ý §Áø ¬Â¢Ãõ ¾ó¾¢¸û ¦À¡Õó¾¢ì ¸ðÊÂÐ. ¦ÀðÊìÌ ãýÚ §¸¡Ê¢ø Á½¢¸¨Ç þ¨ÆòÐ þÕ츢ÈÐ. ¦ÀðÊ, ¿¢Äò¾¢ø ¸¢¼ò¾ôÀ𧼠¸ÐÅô (Å¡º¢ì¸ô) Àð¼Ð. ¬Â¢Ã¦¾ðΠŨ¸Â¡É Àñ¸û §À¾ ӨȢø ¬Ã¢Â ÅÆ츢ýÀÊ ¦ºöÂôÀð¼Ð ¿¡Ã¾ô §Àâ¡ú (¸Õ¿¡¼ þ¨ºÂ¢ø §ÁǸÕò¾¡ á¸í¸Ùõ «ÅüÈ¢ý Ţâ׸Ùõ §À¾ ӨȢø ¾¡ý ±ØôÀô Àθ¢ýÈÉ).

þÉ¢ò ÐõÒÕì ¸ÕÅ¢ ÀüÈ¢ô À¡÷ô§À¡õ.

¿ýÉ÷¦¸¡û «ýÀ¡ø ¿É¢Á¢¸ô ÒÄõÀ
Óó¿¡ýÌ «íÌÄ¢ Óد¼ø ÍüÚõ
³õÀ¾¢üÚ þÃðÊ ¬Ú¼ý ¸Æ¢ò¾
«íÌÄ¢ ¦¿Î¨ÁÔõ «¨ÁòÐ ¯ûà÷ó§¾
´ýÀÐ ¾ó¾¢Ã¢ ¯Úó¾¢ ¿¢¨Ä¿£ì¸¢
ÅÚÅ¡ö측ö þÃñÎ «¨½òРŨøðÊ
§¾¡û¸¡ø ž¢óÐ ¦¾¡Æ¢üÀ¼ò §¾¡ýÚõ
ÐõÒÕì ¸ÕÅ¢Ôõ ÐûÇ¢¿¢ýÚ þ¨ºôÀ

12 «Ïį́Æî ¯¼ü ÍüÈÇ× ¦¸¡ñ¼ ¾ñÎ; 94 «ÏíÌ¨Æ ¿£Çõ; ´ýÀÐ ¾ó¾¢¸û; þÃñÎ ¾ó¾¢¸û ÅÚÅ¡ö ±ýÛõ «¨½ôÀ¢ý §Áø ŨøðÊ þÕìÌõ; §¾¡ÙìÌõ ¸¡ÖìÌÁ¡ö «¼íÌõ Ũ¸Â¢ø ¨ÅòÐ þ¨ºôÀÐ ÐõÒÕì ¸ÕÅ¢. (¸¢ð¼ò¾ð¼ þó¾ì ¸¡Äò ¾õÒÃ¡ì ¸ÕÅ¢§Â¡ ±ýÚ ±ñ½ò §¾¡ýÚ¸¢ÈÐ; ¬É¡ø ¾ó¾¢¸Ç¢ý ±ñ½¢ì¨¸?)

ãýÈ¡ÅÐ ¸£º¸ô §Àâ¡ú:

±Ø±É ¯¼õÒ¦ÀüÚ ±ñÀÐ «íÌĢ¢ý
¾ó¾¢Ã¢ áÚ ¾ÆíÌÁ¾¢ Ó¸ò¾
¸£º¸ô §Àâ¡ú ¸¢¨ÇÔ¼ý ÓÃÄ

¾¢¼Á¡É ¯¼ø¦ÀüÚ 80 «ÏíÌ¨Æ ¿£ðº¢Ô¼ý, 100 ¾ó¾¢¸û ¦ÀüÚ ºó¾¢Ãý §À¡ýÈ Ó¸ô§À¡÷¨Å ¦ÀüÈ ¸£º¸ ¡ú.

¿¡Ä¡ÅÐ ÁÕòÐÅô ¦ÀÂ÷¦ÀÚõ Å¡Éì ¸ÕÅ¢: ¸øÄ¡¼ áÄ¢üÌ ¯¨Ã¢øÄ¡Áø þó¾ì ¸ÕŢ¢ý ¦À¦ÃýɦÅý§È ¦¾Ã¢Â¡Áø §À¡öÅ¢ð¼Ð. µ¨Äî ÍÅʸû ¸¢¨¼ì¸¡Áø §À¡ÉÐ ¿õÓ¨¼Â ¦¸ð¼ ¸¡Äõ.

¿¢¨ÈÁ¾¢ Åð¼òÐ ÓÂø¯Ã¢ Å¢º¢òÐ
¿¡ôÀñ ´ü¨È ¿ÃõÒ ¸ÊôÒ «¨ÁòÐ
«ó¿ÃõÒ þÕÀò¾¡Ú «íÌÄ¢ ¦ÀÈ
þ¼ì¸Ãõ ÐÅ츢 þ¼ì¸£ú «¨ÁòÐ
ÒÈÅ¢Ãø ãýÈ¢ý ÑɢŢÃø «¸òÐõ
«ÚÀòÐ þÃñÎ þ¨º «¨ÉòТ÷ ŽìÌõ
ÁÕòÐÅô ¦ÀÂ÷¦ÀÚõ Å¡Éì ¸ÕÅ¢

ÓÂÄ¢ý §¾¡¨Ä ¿¢¨ÈÁ¾¢ Åð¼õ §À¡ø Àò¾Ã¢ý§Áø §À¡÷¨Å¡¸ì ¸ðÊ¢Õ츢ÈÐ; (Å£¨½Â¢ø «Ê¢ø ̼õ §À¡ø þÕìÌõ À̾¢¨Âô Àò¾÷ ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û.) ¿ð¼¿ÎÅ¢ø 26 «ÏíÌ¨Æ ¿£Çõ; ´§Ã ´Õ ¿ÃõÒ þ¼Ð ¨¸ôÀì¸õ ÐÅ츢 þ¼ì ¸£§Æ þÚì¸¢ì ¸ðÊ¢Õ츢ÈÐ; ãýÚ Å¢ÃÄ¢ý ÒÈò¾¡Öõ ÑɢŢÃÄ¢ý ¯ðÀì¸ò¾¡ÖÁ¡ö Á£ðÊ 62 ÍÃí¸¨Ç ±ØôÀì ÜÊ ´Õ ¸ÕÅ¢ þÐ.

þ¨¾ô ÀÊìÌõ §À¡Ð þó¾ì ¸ÕÅ¢Ôõ ¾õÒá §À¡Ä§Å ¿ÁìÌò §¾¡üÚ¸¢ÈÐ; «§¾ §¿Ãõ ÐõÒÕ ±ýÈ Óó¨¾Âô ¦ÀÂ÷ þó¾ì ¸¡Äò ¾õÒáŢüÌ «Õ¸¢ø ÅÕ¸¢ÈÐ. ±É§Å ¦Á¡ò¾ò¾¢ø þÐÅ¡ «ÐÅ¡ ±ýÀÐ ¬ö× ¦ºöÂô À¼§ÅñÊÂÐ.

ºóà÷ ±ýÈ Å¼¿¡ðÎì ¸ÕÅ¢ 100 ¿ÃõÒ¸û ¦¸¡ñ¼Ð º¾ ¾¡Ãõ>ºó¾¡Ãõ>ºó¾¡÷>ºóà÷; «Ð ¸£º¸ô §À⡧ơΠ¯Èú󾾡?(related?) ±ýÚ ¦º¡øÄò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

Íà ÁñÊÄõ ±ýÈ Å¼¿¡ðÎì ¸ÕÅ¢ À¡÷ôÀ¾üÌ ¿¡Ã¾ô §Àâ¡ú §À¡ø §¾¡üÈõ «Ç¢ì¸¢ÈÐ; ¬É¡ø 40 ¾ó¾¢¸û ¾¡ý «¾¢ø þÕ츢ýÈÉ. (SWARAMANDAL : A harp like instrument constructed with a box and approx. 40 strings. Used by some vocalists for strumming along with their performances.) µ÷óÐ À¡÷ò¾¡ø, ¿õã÷ô §Àâ¡ØìÌõ Íà ÁñÊÄò¾¢üÌõ ¦¾¡¼÷Ò ¸¢¨¼Â¡Ð.

¾Á¢Æ¢¨ºÂ¢ý ÜÚ¸û ¦Á¡ò¾ò¾¢ø «íÌõ þíÌÁ¡ö ¾Á¢ú þÄ츢Âí¸Ç¢ø Å¢ÃÅ¢ì ¸¢¼ì¸¢ýÈÉ. ¿ÁìÌô Òâ¡Áø, ¯¨Ã¸û ¦¾¡¨ÄóÐ §À¡É ¸¡Ã½ò¾¡ø Å¢Çí¸¡Áø, ¸¢¼ôÀ¨Å ²Ã¡Çõ. þ¨º»÷¸û ¾Á¢Æ¡öÅ¡Ç÷¸Ùõ §º÷óÐ §Å¨Ä ¦ºö¾¡ø ¾¡ý ÀÄÅü¨È Á£ðÎì ¦¸¡ñÎ ÅÃÄ¡õ. þÐ ´Õ ÒÄÉ¡ö× §À¡Äò ¾¡ý þÕ츢ÈÐ.

¿¡ý þ¨º»ý «øÄý. ±É§Å ¿¡ý þó¾ì ¸ðΨâø ÜÈ¢ÂÅü¨È ÓüÚ Óؾ¡É ÓÊ× ±ýÚ ±ñ½¡¾£÷¸û. ¾Á¢Æ¢¨º «È¢»Ã¡É Å£.À.¸¡.Íó¾Ãò¾¢ý ¬öÅ¢üÌ ¿¡ý ¦ÀâÐõ ¸¼ýÀðÊÕ츢§Èý. «§¾ ¦À¡ØÐ º¢Ä þ¼í¸Ç¢ø «Åâ¼õ þÕóÐ §ÅÚÀðÎ þÕ츢§Èý.

§ÅÚÀð¼ ¦ºö¾¢¸¨Çò ¦¾¡ÌòÐ þ¨ÈÅý ÅÆ¢¸¡ð¼ Å¢¨ÆÅ¢ÕôÀ¢ý ´Õ ¿¡û ¦ÅǢ¢¼ §ÅñÎõ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

8 comments:

ROSAVASANTH said...

அன்புள்ள ராம்கி ஐயா அவர்களுக்கு, தொடர்ந்து நீங்கள் எழுதுவதை படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. இந்த பதிவுக்கு தொடர்பில்லாமல் ஒரு கேள்வி. Conjecture என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை ஒன்று தரமுடியுமா?

ROSAVASANTH said...

மன்னிக்கவும், ராம்கி என்று அவசரத்தில் எழுதிவிட்டதற்கு.

இராம.கி said...

அன்பிற்குரிய ரோசாவசந்த்,

நீங்கள் கூறிய சொல்லிற்கு உடனே வந்துவிடமுடியாது. ஏகப்பட்ட தொடர்பான சொற்களைப் பார்த்தபின் தான் அதற்குப் போகமுடியும். இது கொஞ்சம் நீண்ட இடுகை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் jet என்ற சொல்லைப் பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் எறி என்ற பொருளில் தான் இது வருகிறது. இது முதன்முதல் புழங்கியது 1420, "to prance, strut, swagger," from M.Fr. jeter "to throw, thrust," from L.L. jectare, abstracted from dejectare, projectare, etc., in place of L. jactare "toss about," freq. of jacere "to throw, cast," from PIE base *ye- "to do" (cf. Gk. iemi, ienai "to send, throw;" Hitt. ijami "I make"). Meaning "to sprout or spurt forth" is from 1692. The noun sense of "stream of water" is from 1696; that of "spout or nozzle for emitting water, gas, fuel, etc." is from 1825. Hence jet propulsion (1867) and the noun meaning "airplane driven by jet propulsion" (1944, from jet engine, 1943). The first one to be in service was the Ger. Messerschmitt Me 262. Jet stream is from 1947. Jet set first attested 1951, slightly before jet commuter plane flights began.

தமிழில் துல் என்னும் வேர் மேலிடுவதைக் குறிக்கும். துல்>தெல்>தெற்று. தெற்றுப் பல் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல். It is a tooth which is jetting out. தெற்றும் பல் தெறுத்திக் கொண்டு இருப்பதாகவும் சொல்லுவோம். துல் என்ற வேரில் இருந்து துருத்துதலும், துறுத்துதலும் இதே பொருளைக் குறித்துச் சொற்களாய் எழும். நீட்டிக் கொண்டிருக்கும் எதுவும் துருத்தி தான். "துருத்திக்கிணு வந்த்டாம் பாரு" என்று சொல்லுகிறோம் இல்லையா? நீர் நிலையில், ஆற்றில், கடலில் நிலம் நீருக்குள் நீட்டிக் கொண்டு இருந்தாலும் அதைத் துருத்தி என்று தான் சொல்லுவோம். காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ள ஊர் திருபூந்துருத்தி. அப்பரால் பாடப்பெற்ற தலம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் திருத்துருத்தி என்று அழைக்கப் படும். சிவநெறிக் குரவர் நால்வராலும் பாடப்பெற்ற தலம். துருத்தி என்பது வேறு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் சொல்லும் jetty தான்.

துருத்து>துருத்தி = jetty
1418, from O.Fr. jetee "a jetty, a projecting part of a building," from fem. pp. of jeter "to throw" (see jet (v.)). Notion is of a structure "thrown out" past what surrounds it.

தெற்றுதல் என்ற வினைச்சொல்லையும், புற என்ற முன்னொட்டையும் வைத்து, project (v), projective, projectively, projection, projectile என்பவற்றிற்கு முறையே புறத்தெற்று, புறத்தெற்றான, புறத்தெற்றாக, புறத்தெற்றம், புறத்தெற்று என்று சொல்லலாம். ஒரேசொல் சிலபோது வினையாகவும் பெயராகவும் ஆள்வதில் வியப்பில்லை.

துல் என்னும் வேர் துல்>தல்>தள்ளு என்றும் திரியும். இதைப் பயன்படுத்தி எற்றித் தள்ளு = jettyson என்று ஆளமுடியும்.
1425 (n.) "act of throwing overboard," from Anglo-Fr. getteson, from O.Fr. getaison "act of throwing (goods overboard)," especially to lighten a ship in distress, from L.L. jactionem (nom. jactatio), from jactatus, pp. of jectare "toss about" (see jet (v.)). The verb is first attested 1848.

இனித் தெற்று என்பது திற்று எனவும் திரியும். உடம்பில், ஆடையில் திற்றுத் திற்றாக அரத்தக் கறை (blood stain) இருக்கிறது என்று சொல்லும் போது இப்படி தெற்றித் தெரிவதையே குறிக்கிறோம். அந்தத் திற்றே சற்று பெரிதாக இருந்தால் திட்டு என்று சொல்லுவோம். "அதோ, அந்த மணல் திட்டில் தான் அந்தக் குடிசை இருந்தது." "ஆற்றின் நடுவில் திட்டுக்கள் உள்ளன." நிலத்தின் நடுவில் திட்டுக்களை உருவாக்குவது இந்தக் காலப் பழக்கம். There is a petrochemical project in Manali. இதைச் சொல்வதற்குத் திட்டு என்பதைத்தான் சேர்க்கமுடியும். ஏனென்றால் இது பெரியது அல்லவா? project (n) = புறத்திட்டு; மணலியில் ஒரு பாறைவேதியல் புறத்திட்டு உள்ளது. (திட்டில் இருந்து திட்டம் என்பதை உண்டாக்கி அதை plan, project, scheme, act இன்னும் என்னென்னவோ பலவற்றிற்கு ஒரு paraacetamol போல "சர்வரோக நிவாரணி"யாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். துல்லியம் பார்க்காததால், தமிழில் எதையும் சொல்ல வராது என்று இது போன்றவற்றால் நாமே சொல்லிக் கொள்கிறோம். நேரம் செலவழித்தால் எதையும் செய்யமுடியும். என்ன, கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும்.)

இனி அடுத்த தொகுதி subject (v), subjective, subjectively, subjection. இதை அகம் என்ற முன்னொட்டை வைத்து எளிதாக அகத்தெற்று, அகத்தெற்றான, அகத்தெற்றாக, அகத்தெற்றம் என்று சொல்லிவிடலாம். அதே பொழுது subject (n) என்பதைத் தெற்று வைத்துச் சொல்லமுடியாது. அதை அகத்திட்டு என்று சொல்லலாம். சிலபோது அகத்தீடு என்று நான் சொல்லியிருக்கிறேன். அதைக் காட்டிலும் அகத்திட்டு என்பது இன்னும் உகந்தது.

மூன்றாவது தொகுதி object (v), objection, objectionable இதை மறுத்தெற்று, மறுத்தெற்றம், மறுத்தெற்றான என்று சொல்லலாம். பேச்சுவழக்கில் எற்று என்பதை விடுத்தே சொல்லுகிறோம். இடம் பொருள் ஏவல் பார்த்து அதை அப்படிச் சுருக்கலாம். சில சட்ட ஆவணங்களில் அப்படி எழுத முடியாது. வெறும் மறுப்பு என்பது தட்டையாக இருக்கும்.

இனி object (n), objective, objectively என்ற தொகுதி. இங்கே வெளி/அல்லது பொது என்ற முன்னொட்டைப் பயன்படுத்தலாம். வெளித்திட்டு, வெளித்திட்டான, வெளித்திட்டாக (பொதுத்திட்டு, பொதுத்திட்டான, பொதுத்திட்டாக) என்பது இயல்பாக அமையும்.

அடுத்தது reject (v), reject (n), rejection, இங்கு விலக்கு என்ற வினையே முன்னொட்டாக அமையும்.
விலக்கெற்று, விலக்கெற்று, விலக்கெற்றம். மேலே சொன்ன மறுப்பைப் போல எற்று என்ற வினையை விடுத்துச் சுருக்கியும் சிலபோதுகளில் சொல்லலாம்.

முடிவாக நீங்கள் சொன்ன conjecture -க்கு வருகிறேன். இதற்குச் சொற்பிறப்பியல் அகரமுதலி c.1384, from L. conjectura "conclusion, interpretation," from conjectus, pp. of conicere "to throw together," from com- "together" + jacere "to throw." Originally of interpretation of signs and omens; sense of "forming of opinion without proof" is 1535 என்று குறிப்புத் தரும்.

கும்முதல் என்ற வினையில் இருந்து கும் என்ற முன்னொட்டு வரும் என்றாலும் இங்கே சொல்லுவதற்கு எளிதாய் சேர்தல் என்ற வினையைப் பயிலலாம். இனி தெற்று என்ற வினையில் முதல் மெய்யை நீக்கியும் தமிழில் அதே பொருள் வரும். இந்தப் பழக்கம் தமிழில் நெடுநாட்கள் உண்டு. அதாவது எற்று என்றாலும் தள்ளு என்ற பொருள் வரும். "அவன் பந்தை எற்றினான் (எத்தினான்)" என்ற ஆட்சியைப் பாருங்கள். எற்று என்ற சொல்லின் முன்னொலி நீண்டு ஏற்று என்றும் வரும். இதுவும் தள்ளுவது தான். ஆனால் மேலே தள்ளுவது. ஏற்று என்பது பெயர்ச்சொல்லாயும் அமையும்.

conjecture (v), conjecture (n)
சேர்ந்தேற்று, சேர்ந்தேற்று

தெற்று என்பதைப் போல நெற்று>நெற்றி என்பதும் முகத்தில் முன்வந்து மேடாய் இருக்கும் பகுதியைக் குறிக்கும். நகர, மகரப் போலியில் நெற்று மெற்று ஆகி மெற்று>மேற்று>மேட்டு என்றும் மேற்கு என்றும் திரிந்து மேட்டுப் பகுதியையும், மேல்>மேடு என்ற சொல்லையும் உருவாக்கும். இன்னும் பல ஒப்புச் சொற்களை எடுத்துக் கூறலாம். அப்புறம் எல்லாமாய்ப் பெரிதும் நீண்டுவிடும். இப்பொழுதே நீட்டி முழக்கியாயிற்று. எனவே நிறுத்திக் கொள்ளுகிறேன்.

காரணமில்லாமல் தேவநேயப்பாவாணரை நாம் மொழிஞாயிறு என்று சொல்லவில்லை. நம் மொழியின் பரப்பை நமக்கு உனர்த்தியவர் அவர்தான். அவருடைய சிறப்புப் புரியாமல் அவர் காலத்தில் அவரப் பேணவிட்டுவிட்டோ ம். அவரை நமக்கு எல்லாம் உணர்த்தியவர் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார். இருவரின் பிற கொள்கைகளில் நமக்கு முரண் இருந்தாலும், தமிழ்க் கொள்கையில் நாம் ஏற்கவேண்டியவர்களே.

அன்புடன்,
இராம.கி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஐயா, அருமையான விளக்கங்கள். புறத்திட்டு என்று உங்கள் பாவனையை ஒட்டி நானும் சமீப காலங்களில் பாவிக்க ஆரம்பித்திருக்கிறேன். சரியான விளக்கம் பற்றி உங்கள் பல உரைகளை இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ரோசாவின் கேள்வியின் புண்ணியத்தில் அதற்கான விளக்கத்தை இன்று தெரிந்து கொண்டேன்.

காசி கூறியதுபோல் கனமான பல தகவல்களைக் கொண்டு உங்கள் பதிவுகள் அமைவதால் எல்லாச் சமயங்களிலும் முழுவதுமாய் உள்வாங்கிக் கொள்ள இயலுவதில்லை. இருந்தாலும் உங்கள் பணியைத் தொடர்ந்து நீங்கள் செய்துவரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் பங்குக்கு அகரமுதலியைத் தமிழுக்கும் அதிகம் பயன்படுத்தவேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

Petrochemicalக்கும் பாறைவேதியல் சொல் பொருத்தமாய் அழகாய் இருக்கிறது. வேதியல்(=வேது+இயல்?) சரியா இல்லை வேதி+இயல்=வேதியியல் சரியா? வேதியல் எளிமையாக இருப்பதாய்ப் படுகிறது. ஆனாலும் அது இத்தனை காலம் புழங்கி வந்த வேதியியலுக்கு மாற்றாய் இருப்பதால் சரியான பாவனையா அல்லது எழுத்துப் பிழையா என்று தெளிவுறுத்திக் கொள்ளவும் இருக்கும் ஆர்வத்தில் கேட்கிறேன்.

பாருங்கள்! பெரிய ஆலமரத்தில் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பது போல உங்கள் இசைக்கருவிப் பதிவில் சேர்ந்தேற்றப் புறமாக ஒருவரும் பாறைவேதியற்பக்கமாய் ஒருவரும் இழுத்துக் கொண்டிருக்கிறோம். :-) நன்றி.

ROSAVASANTH said...

அன்புள்ள இராம கி ஐயாவிற்கு,

மிகவும் நன்றி. காலையில் எழுந்து இப்போதுதான் படிக்க முடிந்தது. இப்படி தமிழ் படிக்க இளம் வயதில் நேர்ந்திருந்தால் எங்கேயோ போயிருக்க கூடும். இப்படி ஒரு விரிவான விளக்கத்தைத்தான் எதிர்பார்த்தேன். அதனாலேயே கொஞ்சம் தயக்கமும் (உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுவேனோ என்று) உண்டானது. நான் மேலோட்டமாய் சிந்தித்து வைத்திருந்த அசட்டு வார்த்தைகளையும் விடவில்லை. இதை நீங்கள் உற்சாகத்துடன் செய்திருப்பீர்கள் என்று நினைப்பதால் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு விட்டேனோ என்று வருத்தம் அடையவில்லை. மீண்டும் மிகவும் நன்றி.

(கைவசம் இப்படி ஏகப்பட்ட ஐயங்கள் உள்ளது. அவ்வப்போது வந்து தொந்தரவு தருகிறேன்.)

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

வேதியியல் என்று தான் எழுதிவந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் வேதியல் என்றே ஊடே ஊடே எழுதிவருகிறேன். அந்த யிகரம் நாம் பலுக்கும் போது சொற்சுருக்கம் கருதி மறைகிறது என்பதால், இந்த முயற்சி.

மின்சாரத்தில் சாரம் போனதில்லையா? அதே போல தொழில்நுட்பத்தில் தொழில் தேவையில்லை இல்லையா? கணினியில் னி போனால் சொல்லுதற்கு எளிதாகும் இல்லையா? அதே போல வேதியியலில் யி என்பது இயற்கையாகவே போய்விடும் என்றே நான் எண்ணுகிறேன்.

சொற்கள் சொல்லச் சொல்ல பலரின் போக்கிற்குத் தகுந்தாற் போல் சுருங்கும், மிளிரும், திரியும். எது நிலைக்கும் என்பதைக் காண நாட்கள் பிடிக்கும். ஆனால் சுருங்கியதே நிலைக்கிறது என்பது பொது மரபு. எல்லாம் வேகமாய்ப் போய்க் கொண்டு இருக்கிறபோது இப்படி அமையத்தானே செய்யும்?

முடிக்குமுன் இன்னொரு செய்தி.

மட்டுறுத்தர் என்று தான் moderator என்பதற்கு மடற்குழுக்களில் பரிந்துரைத்தேன். திரு நாக.கணேசன் மட்டுநர் என்று சொன்னார். "அது சரியான பொருளில்லை; வேறு பொருள் கொடுக்கும்" என்று அவரோடு வாதிட்டேன். இடையில் இரண்டு சொற்களும் பிணைந்து யாரோ "மட்டுறுத்துநர்" என்று புழங்கத் தொடங்கினார்கள். இப்பொழுது நகரம் தவிர்த்து மட்டுறுத்தர் என்பது மீண்டும் புழங்குகிறது. எது நிலைக்கும் என்று யாருக்குத் தெரியும்? .

அன்புடன்,
இராம.கி.

Mannai Madevan said...

// காரணமில்லாமல் தேவநேயப்பாவாணரை நாம் மொழிஞாயிறு என்று சொல்லவில்லை. நம் மொழியின் பரப்பை நமக்கு உனர்த்தியவர் அவர்தான். அவருடைய சிறப்புப் புரியாமல் அவர் காலத்தில் அவரப் பேணவிட்டுவிட்டோம். அவரை நமக்கு எல்லாம் உணர்த்தியவர் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார். இருவரின் பிற கொள்கைகளில் நமக்கு முரண் இருந்தாலும், தமிழ்க் கொள்கையில் நாம் ஏற்கவேண்டியவர்களே. //

தமிழ் சமுதாயம் எந்த அறிஞர்களைத்தான் அவர்கள் வாழும் காலத்தில் போற்றி பேணியது. இந்த பண்பில் மட்டும் தமிழன் குன்றி நிற்பதின் காரணம் யாதோ நாம் அறியோம். இன்றேனும் இதில் மாற்றமிருப்பின் அதுவே நம் தமிழர்க்கு சிறப்பு சேர்ப்பதாய் அமையுமன்றோ!

தங்கள் எழுத்துகளை இவ்வளவு நாட்கள் படிக்காமல் போனோமே என வருந்துவதா? அன்றி, இவற்றை படிக்கும் வாய்ப்பு இன்றேனும் கிட்டியதே என மகிழ்வதா?

தங்கள் அகவை எதுவெனினும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்
மன்னை மாதேவன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மன்னை மகாதேவன்,

உங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.