Tuesday, April 12, 2005

வரமொன்று வேண்டும்

Iவரமொன்று வேண்டும்

(சோழிங்க நல்லூர் வருவதற்கு முன்னால் சென்னை அண்ணா நகரில் குடியிருந்தேன். அப்பொழுது இருந்த சூழ்நிலை பற்றி கொஞ்சம் ஆற்றாமையோடு சொன்னது இது. முற்றிலும் ஒரு நடுவருக்கப் பார்வை.)

நான்யார் என்குவீ ராயின் நானோ,

கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்
தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்;
கோடியில் பிறந்தே கூவக் கரையினில்
வாடி வறண்டே மாள்வனும் அல்லன்;
மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;
நாவலந் தீவினில் நான்ஒரு நடுவன்;
நடுவனின் வேண்டுகை பொருளற்றுத் தோன்றலாம்;
கொடுப்பதும் விடுப்பதும் கொடையோர்க்(கு) உகப்பு;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

காலையில் எழும்பி கடன்களுக்(கு) இடையே,
வேலையிற் செலும்வரை வெம்புரை*4 அடித்து,
வாரிய நீர்*5க்கென வழிமேல் கருத்து,
தாரை நீர்பெறத் தாங்கலை*6 வருத்தி,
தளவீ(டு)*7 எங்கணும் துழவிப் பொருதி,
மழைவரம் அறிந்திடத் தொலைக்காட்சி பார்த்து,
அலைபடும் நாள் இனி அமையா திருக்க,
புழை*8தனிப் பொருத்தி எனக்கே எனக்காய்,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

பணிக்கென இருவளை உந்திலே*9 ஏகையில்,
கணக்கிலாக் கூட்டம் கடுகி விரைந்திடும்
அகவளைச் சாலை*10யின் துரப்பிலே*11 சிக்கா(து),
இகந்து சீறிட, யாக்கையில் பொருத்தமாய்,
இணைத்த சிறகுகள் எடுத்தே விரித்து,
நினைத்த போதினில் நெடுந்தொலை நகர்வாய்,
பாடி*12யில் எழுந்த பாலம் தொடங்கி,
ஓடிப் பறந்தே உதயம்*13 போகவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

வரவுகள் நாலு எனில் செலவுகள் நாலரை;
உறவுகள், அடுத்தவர், ஒப்பிடச் செய்வதால்,
காட்சிக் கிடங்காய் வீட்டையே மாற்றினால்,
தேட்டிய சம்பளம் மீத்தவா செய்யும்?
வெம்பிப் பிதுங்கி விழைவுகள் கூட்டி,
நம்பி உழன்று நாணும் போதிலே
தோதுகள் அறிந்து துணையாள் புரிதரப்
போதும் எமக்கெனும் பொந்திகை*14 கிடைக்கவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

இத்தனை காலம் எத்தனை துன்பம்?
நத்தியர் வஞ்சம்; நயக்குறை; இழிவு;
நம்பிஏ மாந்தது; நடிப்பும் நழுவலும்;
கும்பியும் நெஞ்சும் குறுகிய கசப்பும்;
பொத்தித் துறக்க, பொதிவே*15 நினைக்க,
சித்தம் சீர்பட, செழுமை துலங்கிட,
உறுதியில் ஒன்றிட, உற்றவர் சேர்ந்திட,
மறதிநீர் மாந்தியே வாழ்வில் நிலைகொள,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

இருக்கவோ அகவை எழுபதே சாலும்,
இருப்பினில் நோவுகள் எட்டா திருந்தால்!
நோவின் வலியோ, நுவலரின் இரட்டை
நாவினில் இருந்து நம்விதி தொலைப்பதால்!
நோவினில் நொய்ந்து சீரழி யாதே,
ஆவதில் நிறைந்து, அடைவதாய்த் தூங்கி,
அழும்பிய படியே சாயவும் வேண்டும்;
விழுமமே எச்சமாய் வீற்றிருக் கட்டும்;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

அன்புடன்,
இராம.கி.

1. உணக்குதல் = சுடுதல்; இங்கு வனைந்த பானையைச் சுடுதல்
2. நடுவன் என்றவுடன் வழக்காடு மன்றம் பட்டிமண்டபம் போன்றவற்றின் நடுவர் என்று எண்ண வேண்டாம். இங்கே பாடுகிறவன் ஒரு நடுத்தர வருக்கன். அந்த அளவில் இந்த நடுவன் வேண்டும் சிறுவகை(?) வரங்களை இந்தச் சிறுங்(!?) கவிதை பட்டியல் இடுகிறது.
3. துறக்கன் = சொர்க்கத்தான்; இப்படி மேலே ஏகி மேவவும் முடியாது, கீழே பரவிப் பாவவும் முடியாது இருக்கும் துறக்கம் தான் திரிசங்கு சொர்க்கம் என்பது.
4. வெம்புரை = வறண்டு போன borewell
5. வாரிய நீர் = metro water
6. தாங்கல் = tanker
7. தள வீடு = apartment house
8. புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம் = backwaters). செயற்கைப் புழைக்கரத்தைத் தான் வடமொழிப் படுத்தி புஷ்கரம் என்று நம்மூர்ப் பெருமாள் கோயில்களில் சொல்லுகிறார்கள். (இதுபோன்ற புழைக்கரத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து குளத்திற்கு கால்வாய் மூலம் நீர் வரத்து இருக்க வேண்டும்.)
9. இருவளை உந்து = two wheeler
10.அகவளைச் சாலை = inner ring road
11.துரப்பு = traffic
12.பாடி = சென்னை நகர் அகவளைச் சாலையின் வடபுலத்தில் உள்ள ஒரு பகுதி
13.உதயம் = சென்னை நகர் தென்புலத்தில் அசோக் நகர் முடிவில் இருக்கும் உதயம் திரையரங்கு. வட சென்னையில் உள்ள பாடியில் இருந்து உதயம் வரை மிகக் கூடுதலாய் இருக்கும் துரப்புத் தான் இந்தக் காலத்தில் காலை, மாலை நேரங்களில் சென்னையிலேயே அடர்ந்த துரப்பு. இதில் புகுந்து வெளிவருவது பெருமப் பயத்தனம் (ப்ரம்ம ப்ரயத்தனம் என்று வடமொழியில் இதைப் பெயர்ப்பார்கள்).
14.பொந்திகை = திருப்தி; satisfaction
15.பொதிவு = positive; பல இடங்களில் நேர்மறை என்ற சொல் positive என்பதற்குப் பொருந்தி வருவதில்லை. அதே பொழுது நேர்மறை என்ற சொல் directness என்பதற்கு மிகப் பொருந்தி நிற்கும். எனவே தான் நேர்மறை என்ற சொல்லை இங்கு ஆளத் தவிர்க்கிறேன். (அப்படி நேர்மறை என்ற சொல்லைச் சொல்ல வேண்டுமானால் மறை என்ற ஈற்றைத் தவிர்க்கலாம்; மாறாக, நேரிய என்றே சொல்லலாம்.)

In TSCII

ÅæÁ¡ýÚ §ÅñÎõ

(§º¡Æ¢í¸ ¿øæ÷ ÅÕžüÌ ÓýÉ¡ø ¦ºý¨É «ñ½¡ ¿¸Ã¢ø ÌÊ¢Õó§¾ý. «ô¦À¡ØÐ þÕó¾ Ýú¿¢¨Ä ÀüÈ¢ ¦¸¡ïºõ ¬üÈ¡¨Á§Â¡Î ¦º¡ýÉÐ þÐ. ÓüÈ¢Öõ ´Õ ¿ÎÅÕì¸ô À¡÷¨Å.)

¿¡ý¡÷ ±ýÌÅ£ á¢ý ¿¡§É¡,

§¸¡Ê¢ø À¢Èó§¾ Á¡¼Á¡ Ç¢¨¸Â¢ø
§¾Ê ¦ºøÅõ §¾öôÀÛõ «øÄý;
§¸¡Ê¢ø À¢Èó§¾ ÜÅì ¸¨Ã¢ɢø
Å¡Ê ÅÈñ§¼ Á¡ûÅÛõ «øÄý;
§ÁÅ×õ À¡Å×õ ¦ÁöÔÈ¡ò ÐÈì¸ý*3;
¿¡ÅÄó ¾£Å¢É¢ø ¿¡ý´Õ ¿ÎÅý;
¿ÎÅÉ¢ý §ÅñΨ¸ ¦À¡ÕÇüÚò §¾¡ýÈÄ¡õ;
¦¸¡ÎôÀÐõ Å¢ÎôÀÐõ ¦¸¡¨¼§Â¡÷ì(Ì) ¯¸ôÒ;

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

¸¡¨Ä¢ø ±ØõÀ¢ ¸¼ý¸Ùì(Ì) þ¨¼§Â,
§Å¨Ä¢ü ¦ºÖõŨà ¦ÅõÒ¨Ã*4 «ÊòÐ,
šâ ¿£÷*5ì¦¸É ÅÆ¢§Áø ¸ÕòÐ,
¾¡¨Ã ¿£÷¦ÀÈò ¾¡í¸¨Ä*6 ÅÕò¾¢,
¾ÇÅ£(Î)*7 ±í¸Ïõ ÐÆÅ¢ô ¦À¡Õ¾¢,
Á¨ÆÅÃõ «È¢ó¾¢¼ò ¦¾¡¨Ä측𺢠À¡÷òÐ,
«¨ÄÀÎõ ¿¡û þÉ¢ «¨Á¡ ¾¢Õì¸,
Ò¨Æ*8¾É¢ô ¦À¡Õò¾¢ ±É째 ±É측ö,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

À½¢ì¦¸É þÕÅ¨Ç ¯ó¾¢§Ä*9 ²¨¸Â¢ø,
¸½ì¸¢Ä¡ì Üð¼õ ¸Î¸¢ Å¢¨Ãó¾¢Îõ
«¸Å¨Çî º¡¨Ä*10¢ý ÐÃôÀ¢§Ä*11 º¢ì¸¡(Ð),
þ¸óÐ º£È¢¼, ¡쨸¢ø ¦À¡Õò¾Á¡ö,
þ¨½ò¾ º¢È̸û ±Îò§¾ ŢâòÐ,
¿¢¨Éò¾ §À¡¾¢É¢ø ¦¿Î󦾡¨Ä ¿¸÷Å¡ö,
À¡Ê*12¢ø ±Øó¾ À¡Äõ ¦¾¡¼í¸¢,
µÊô ÀÈó§¾ ¯¾Âõ*13 §À¡¸§Å,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

ÅÃ׸û ¿¡Ö ±É¢ø ¦ºÄ׸û ¿¡Ä¨Ã;
¯È׸û, «Îò¾Å÷, ´ôÀ¢¼î ¦ºöž¡ø,
¸¡ðº¢ì ¸¢¼í¸¡ö ţ𨼧 Á¡üȢɡø,
§¾ðÊ ºõÀÇõ Á£ò¾Å¡ ¦ºöÔõ?
¦ÅõÀ¢ô À¢Ðí¸¢ Å¢¨Æ׸û ÜðÊ,
¿õÀ¢ ¯ÆýÚ ¿¡Ïõ §À¡¾¢§Ä
§¾¡Ð¸û «È¢óРШ½Â¡û Òâ¾Ãô
§À¡Ðõ ±Á즸Ûõ ¦À¡ó¾¢¨¸*14 ¸¢¨¼ì¸§Å,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

þò¾¨É ¸¡Äõ ±ò¾¨É ÐýÀõ?
¿ò¾¢Â÷ Åïºõ; ¿Âį̀È; þÆ¢×;
¿õÀ¢² Á¡ó¾Ð; ¿ÊôÒõ ¿ØÅÖõ;
ÌõÀ¢Ôõ ¦¿ïÍõ ÌÚ¸¢Â ¸ºôÒõ;
¦À¡ò¾¢ò ÐÈì¸, ¦À¡¾¢§Å*15 ¿¢¨Éì¸,
º¢ò¾õ º£÷À¼, ¦ºØ¨Á ÐÄí¸¢¼,
¯Ú¾¢Â¢ø ´ýÈ¢¼, ¯üÈÅ÷ §º÷ó¾¢¼,
ÁȾ¢¿£÷ Á¡ó¾¢§Â Å¡úÅ¢ø ¿¢¨Ä¦¸¡Ç,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

þÕ츧š «¸¨Å ±ØÀ§¾ º¡Öõ,
þÕôÀ¢É¢ø §¿¡×¸û ±ð¼¡ ¾¢Õó¾¡ø!
§¿¡Å¢ý ÅÄ¢§Â¡, ÑÅÄâý þÃð¨¼
¿¡Å¢É¢ø þÕóÐ ¿õÅ¢¾¢ ¦¾¡¨ÄôÀ¾¡ø!
§¿¡Å¢É¢ø ¦¿¡öóÐ º£ÃÆ¢ ¡§¾,
¬Å¾¢ø ¿¢¨ÈóÐ, «¨¼Å¾¡öò àí¸¢,
«ØõÀ¢Â Àʧ º¡Â×õ §ÅñÎõ;
Å¢ØÁ§Á ±îºÁ¡ö Å£üÈ¢Õì ¸ðÎõ;

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1. ¯½ì̾ø = Íξø; þíÌ Å¨Éó¾ À¡¨É¨Âî Íξø
2. ¿ÎÅý ±ýÈ×¼ý ÅÆ측ΠÁýÈõ ÀðÊÁñ¼Àõ §À¡ýÈÅüÈ¢ý ¿ÎÅ÷ ±ýÚ ±ñ½ §Åñ¼¡õ. þí§¸ À¡Î¸¢ÈÅý ´Õ ¿Îò¾Ã ÅÕì¸ý. «ó¾ «ÇÅ¢ø þó¾ ¿ÎÅý §ÅñÎõ º¢ÚŨ¸(?) ÅÃí¸¨Ç þó¾î º¢Úí(!?) ¸Å¢¨¾ ÀðÊÂø þθ¢ÈÐ.
3. ÐÈì¸ý = ¦º¡÷ì¸ò¾¡ý; þôÀÊ §Á§Ä ²¸¢ §ÁÅ×õ ÓÊ¡Ð, ¸£§Æ ÀÃÅ¢ô À¡Å×õ ÓÊ¡РþÕìÌõ ÐÈì¸õ ¾¡ý ¾¢Ã¢ºíÌ ¦º¡÷ì¸õ ±ýÀÐ.
4. ¦ÅõҨà = ÅÈñÎ §À¡É borewell
5. šâ ¿£÷ = metro water
6. ¾¡í¸ø = tanker
7. ¾Ç ţΠ= apartment house
8. Ò¨Æ = ¦ºÂü¨¸ì ÌÇõ («øÄÐ þÂü¨¸ì ¸Æ¢Ó¸õ = backwaters). ¦ºÂü¨¸ô Ò¨Æì¸Ãò¨¾ò ¾¡ý ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ Ò‰¸Ãõ ±ýÚ ¿õã÷ô ¦ÀÕÁ¡û §¸¡Â¢ø¸Ç¢ø ¦º¡øÖ¸¢È¡÷¸û. (þЧÀ¡ýÈ Ò¨Æì¸Ãò¾¢üÌ «Õ¸¢ø ¯ûÇ ¬üÈ¢ø þÕóÐ ÌÇò¾¢üÌ ¸¡øÅ¡ö ãÄõ ¿£÷ ÅÃòÐ þÕì¸ §ÅñÎõ.)
9. þÕÅ¨Ç ¯óÐ = two wheeler
10.«¸Å¨Çî º¡¨Ä = inner ring road
11.ÐÃôÒ = traffic
12.À¡Ê = ¦ºý¨É ¿¸÷ «¸Å¨Çî º¡¨Ä¢ý żÒÄò¾¢ø ¯ûÇ ´Õ À̾¢
13.¯¾Âõ = ¦ºý¨É ¿¸÷ ¦¾ýÒÄò¾¢ø «§º¡ì ¿¸÷ ÓÊÅ¢ø þÕìÌõ ¯¾Âõ ¾¢¨ÃÂÃíÌ. ż ¦ºý¨É¢ø ¯ûÇ À¡Ê¢ø þÕóÐ ¯¾Âõ Ũà Á¢¸ì Üξġö þÕìÌõ ÐÃôÒò ¾¡ý þó¾ì ¸¡Äò¾¢ø ¸¡¨Ä, Á¡¨Ä §¿Ãí¸Ç¢ø ¦ºý¨É¢§Ä§Â «¼÷ó¾ ÐÃôÒ. þ¾¢ø ÒÌóÐ ¦ÅÇ¢ÅÕÅÐ ¦ÀÕÁô ÀÂò¾Éõ (ôÃõÁ ôÃÂò¾Éõ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø þ¨¾ô ¦ÀÂ÷ôÀ¡÷¸û).
14.¦À¡ó¾¢¨¸ = ¾¢Õô¾¢; satisfaction
15.¦À¡¾¢× = positive; ÀÄ þ¼í¸Ç¢ø §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø positive ±ýÀ¾üÌô ¦À¡Õó¾¢ ÅÕž¢ø¨Ä. «§¾ ¦À¡ØÐ §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø directness ±ýÀ¾üÌ Á¢¸ô ¦À¡Õó¾¢ ¿¢üÌõ. ±É§Å ¾¡ý §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø¨Ä þíÌ ¬Çò ¾Å¢÷츢§Èý. («ôÀÊ §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø¨Äî ¦º¡øÄ §ÅñÎÁ¡É¡ø Á¨È ±ýÈ ®ü¨Èò ¾Å¢÷ì¸Ä¡õ; Á¡È¡¸, §¿Ã¢Â ±ý§È ¦º¡øÄÄ¡õ.)

5 comments:

காசி (Kasi) said...

//கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்
தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்;
கோடியில் பிறந்தே கூவக் கரையினில்
வாடி வறண்டே மாள்வனும் அல்லன்;//

திரு. இராம.கி.,

கோடி என்ற சொல் இரு இடத்திலும் நன்றாகப் பொருந்தியிருப்பது சுவையாக இருக்கிறது.

நீங்கள் பொருள் விளக்கிய சொற்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல சொற்கள் உடனடி வாசிப்பில் எனக்குப் புரியவில்லை. அகராதியை துணைக்கொள்ளும் பழக்கத்தை தமிழுக்கும் நீட்ட்வேண்டிய தேவையை முன்ன்மே சொல்லியிருக்கிறீர்கள், எனவே என்ன செய்யவேண்டும் என்பது புரிகிறது. செய்வேன்.

இன்னும் நீங்கள் எழுதியது எல்லாமே வாசிக்கவில்லை. கனமாக இருப்பதால் பொறுத்து வாசிக்கவேண்டும். நன்றி.

அன்புடன்,
-காசி

இராதாகிருஷ்ணன் said...

//புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம் = backwaters).// இந்தப் புழை என்ற சொல்லை மலையாளத்தில் நிறையப் புழங்கக் கேட்டுள்ளேன். மழம்புழா, பாரதப்புழா, புழய்க்கடவில், இத்யாதி...

எங்கூர் பக்கம் கொல்லைப்புறத்தைச் சிலசமயங்களில் 'பொடக்காலி' என்பார்கள். இது 'புழய்க்கடவின்' சிதைவோ என்னவோ.

இராம.கி said...

அன்பிற்குரிய காசி, இராதா கிருஷ்ணன்,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

காசி: சொற்கள் ஏதேனும் விளக்கம் வேண்டுமானால் கேளுங்கள், சொல்லுகிறேன். நாம் அகரமுதலியைப் புரட்ட வேண்டும் என்பது நம் நண்பர்கள் எல்லோருக்கும் நான் வைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ் தாய்மொழியாய் இருப்பதாலேயே நமக்கு எல்லாம் தெரியும் என்பது தவறான கருதுகோள். இன்றைய நிலையில் வெறும் 3000 சொற்களை வைத்து, இடை இடையே ஆங்கிலம் கலந்து நாம் ஒப்பேற்றிவிடமுடியும். ஆனால் அது சரியான வழியா? தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, கயானா தமிழர்கள் போல் நாமும் எதிர்காலத்தில் ஆக வேண்டுமா? நம்முடைய சொல் தொகுதியை ஏன் நாம் கூட்டிக் கொள்ளக் கூடாது? அதில் என்ன தவறு என்று தான் எல்லோரையும் கேட்கிறேன்.

இராதாகிருஷ்ணன்:

புழைக்கடை ஒருவேளை metathesis என்ற முறையில் (தசை - சதை, குமிடி - குடிமி>குடுமி என்பவை metathesis என்பதற்கு எடுத்துக் காட்டுகள்) புடக்கழையாய்த் திரிந்து பின் வழமையான முறையில் புடக்கழை>புடக்கலி>புடக்காலி>பொடக்காலி என்று மாறியிருக்கலாம். அருகில் இருந்து கவனித்த நீங்கள் தான், உங்கள் பகுதியினர் தான் சரியாகச் சொல்ல முடியும்.

அன்புடன்,
இராம.கி.

[காசி: என்னுடைய தமிழாசிரியரும், அறிவியற்சிந்தனையும் என்ற நேற்றைய இடுகை (இந்திய நேரம் இரவு 9.30 மணி) தமிழ் மணம் திரட்டியில் வரமாலே போனதே? அது எதனால்? நான் ஏதாவது அனுப்புவதில் பிழை செய்திருக்கிறேனா?]

மன்னை மாதேவன் said...

காக்கை சிறகினைப்போல் - உம்
யாக்கைக்கு பொருந்தியதாய் - பெரும்
போக்கு சிறகு பெற்று!

பாடி நீர் செல்கையிலே – மகிழ்வில்
பாடி நீர் செல்வதற்கு அந்த
ஆடிய பாதனையே – நானும்
அன்புடன் வேண்டுகிறேன்!

அன்புடன்
மன்னை மாதேவன்.


(கான மயில் ஆட கண்ட வான் கோழி யென பேதை என் உளர் வரிகள்)

இராம.கி said...

அன்புள்ள மன்னை மகாதேவனுக்கு,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.