Saturday, April 30, 2005

பேரிளம் பெண்ணின் பிரிவெனும் பாலை

பாவேந்தர் பாரதிதாசன் தன்னுடைய "குடும்பவிளக்கு" நூலில் முதியோர் காதலைப் பற்றி அழகுறச் சொல்லுவார். நேற்று அவர் பிறந்த நாள். முன்னால் எழுதிய பாட்டினை இங்கு இடுகிறேன். இது ஒரு பேரிளம் பெண்ணின் கூற்று.

அன்புடன்,
இராம.கி.

பேரிளம் பெண்ணின் பிரிவெனும் பாலை

காலையில் தொடங்கிப் பகலெலாம் ஓடி
மாலையில் முடங்கி நாலே அறைகளில்
அத்தான் எத்தனை முறைதான் வளைவது?

பேழை*1யின் அணிகலன் பெயர்த்தே இன்னொரு
பேழையில் அடைத்துக் கர்ப்பூரம் இட்டு,
அத்தான் எத்தனை முறைதான் காப்பது?

தூலமாய் உங்களின் பொத்தகம் தாள்களில்
தூசியைத் தட்டித் தொள்முறை அடுக்கினும்,
அத்தான் எத்தனை முறைதான் செய்வது?

பாழ்இரும் நேரம் பாயினில் புரண்டு
பதைத்துக் கனவிலே சட்டென விழித்து
அத்தான் எத்தனை நேரம் மிரள்வது?

கோதுமை உப்புமா; தயிற்சோ றூறுகாய்
குளம்பி*2யே கதியெனச் சாப்பாட்டுச் சுருக்கம்;
அத்தான் எத்தகை வழியினிக் குறைப்பது?

பாதம் அடுப்படி*3 பட்டதும் குறைவு;
பார்க்கவே ஒட்டா தொலைத்தொடர்க் காட்சிகள்;
அத்தான் எத்தனை நாட்களே நகர்வது?

பேதையை ஆற்றிடப் பிள்ளைகள் பேசினார்,
பெருந்தொலை விருந்து; என்னத்தைப் பேச?
அத்தான் எத்துணை ஏக்கமே கொள்வது?

ஆதர வுக்கெனத் தம்பியும் பேசினான்;
அடுத்தும தண்ணனும் நலம்பா ராட்டினார்;
அத்தான் எத்தனை முகமனைக் கேட்பது?

நாளும் பொழுதுமே கோயிலே குடியாய்,
மாகாளி யம்மன்; திருவலி தாயம்;
கோளறு குறுங்கால் ஈசரின் பேடு;
கொள்முகப் பேரியின் சந்தானப் பெருமாள்;
ஆளுடைப் பிள்ளை; சிவன்மால் ஆலயம்;
அத்தான் எத்தனை கோயிலுக் கேவது?

அடுத்த வெள்ளியில் திருவிளக் கேற்றி
சூழுற வழிபடப் பெயரையும் கொடுத்தேன்;
சோதியை வணங்க நூற்றெட்டுப் பேராம்;
கார்த்திகைச் சிட்டிகள் தேடி எடுத்து
கழுவிப் பளிச்சிடச் சாம்பலின் தேய்ப்பு;
அத்தான் எத்தனை கார்த்திகை வருவது?

ஆத்தியோ? இன்னொரு கிழமையும் கழியும்
அடுத்த ஞாயிற்றில் தொலைபேசி ஒலிக்கும்;
அத்தான் எத்தனை மணியொலி கேட்பது?

வார்த்தைகள்; பேச்சுகள்; வாரமும் நினைக்க;
வள்ளெனத் தோன்றும் "ஈதென்ன வாழ்க்கை?"
அத்தான் எத்தனை நினைவுகள் தோய்வது?

நேர்த்திக் கடன்போல் நீங்களும் நானும்
நினைவுகள் முயங்கியும் உடல்வே றிடத்தில்,
அத்தான் எத்தனை காலங்கள் பிரிவது?

கழுத்திரு*3 பூட்டி எழுநான்கு ண்டுகள்
கழிந்தும் இதுபோல் பிரிந்ததே இல்லை
அத்தான் எத்தனை உணர்வுகள் கோர்ப்பது?

தழுத்தே நினைந்து பனித்தன கண்கள்;
தானாய் அசைந்து சிலிர்த்தது உடம்பு;
அத்தான் இத்தகை உணர்வுமக் குண்டோ ?

வழுத்தியும் ஊடியும் பிறிதுநாள் கூடியும்
வாழ்ந்ததே நம்முடை வாழ்வியல் ஆச்சு;
அத்தகை வாழ்வியல் ஆமெனத் தொடருவோம்

நுழைதலுக் கனுமதி என்றுதான் கிட்டும்?
நோதலின் முடிவும் என்றுதான் நிகழும்?
அத்தான் இனிநான் ஒருகணம் பொறுக்கேன்!

பாடியவர்: இராம.கி.

தி½ை: பாலை

துறை: பொருள்வயின் பிரிந்தான் தலைவன்; வதுவை(wedding)யுற்ற நாளாய் கொழுநனைப் பிரியாத தலைவி, பிரிவின் ற்றாமையால், நுழைமதி(visa)ச் செயல்முறை நோக்கி வருந்தியது.

1. பேழை = cupboard
2 குளம்பி = coffee
3. கழுத்திரு = சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சாரார் திருமணத்தில் மணமகளுக்கு மணமகன் இடும் கழுத்து அணிகலன். கழுத்திருவும், தாலியும் சேர்ந்தே மணப்பெண்ணை மணவாழ்விற்குள் இட்டுவரும் சடங்கு அமையும்.

In TSCII:

À¡§Åó¾÷ À¡Ã¾¢¾¡ºý ¾ýÛ¨¼Â "ÌÎõÀÅ¢ÇìÌ" áÄ¢ø Ó¾¢§Â¡÷ ¸¡¾¨Äô ÀüÈ¢ «ÆÌÈî ¦º¡øÖÅ¡÷. §¿üÚ «Å÷ À¢Èó¾ ¿¡û. ÓýÉ¡ø ±Ø¾¢Â À¡ð欃 þíÌ þθ¢§Èý. þÐ ´Õ §ÀâÇõ ¦Àñ½¢ý ÜüÚ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

§ÀâÇõ ¦Àñ½¢ý À¢Ã¢¦ÅÛõ À¡¨Ä

¸¡¨Ä¢ø ¦¾¡¼í¸¢ô À¸¦ÄÄ¡õ µÊ
Á¡¨Ä¢ø Ó¼í¸¢ ¿¡§Ä «¨È¸Ç¢ø
«ò¾¡ý ±ò¾¨É ӨȾ¡ý ŨÇÅÐ?

§À¨Æ*1¢ý «½¢¸Äý ¦ÀÂ÷ò§¾ þý¦É¡Õ
§À¨Æ¢ø «¨¼òÐì ¸÷ôâÃõ þðÎ,
«ò¾¡ý ±ò¾¨É ӨȾ¡ý ¸¡ôÀÐ?

àÄÁ¡ö ¯í¸Ç¢ý ¦À¡ò¾¸õ ¾¡û¸Ç¢ø
ຢ¨Âò ¾ðÊò ¦¾¡ûÓ¨È «Î츢Ûõ,
«ò¾¡ý ±ò¾¨É ӨȾ¡ý ¦ºöÅÐ?

À¡úþÕõ §¿Ãõ À¡Â¢É¢ø ÒÃñÎ
À¨¾òÐì ¸ÉÅ¢§Ä ºð¦¼É ŢƢòÐ
«ò¾¡ý ±ò¾¨É §¿Ãõ Á¢ÃûÅÐ?

§¸¡Ð¨Á ¯ôÒÁ¡; ¾Â¢ü§º¡ êÚ¸¡ö
ÌÇõÀ¢*2§Â ¸¾¢¦ÂÉî º¡ôÀ¡ðÎî ÍÕì¸õ;
«ò¾¡ý ±ò¾¨¸ ÅƢ¢ɢì ̨ÈôÀÐ?

À¡¾õ «ÎôÀÊ*3 Àð¼Ðõ ̨È×;
À¡÷츧Š´ð¼¡ ¦¾¡¨Äò¦¾¡¼÷ì ¸¡ðº¢¸û;
«ò¾¡ý ±ò¾¨É ¿¡ð¸§Ç ¿¸÷ÅÐ?

§À¨¾¨Â üÈ¢¼ô À¢û¨Ç¸û §Àº¢É¡÷,
¦ÀÕ󦾡¨Ä Å¢ÕóÐ; ±ýÉò¨¾ô §Àº?
«ò¾¡ý ±òШ½ ²ì¸§Á ¦¸¡ûÅÐ?

¾Ã ×즸Éò ¾õÀ¢Ôõ §Àº¢É¡ý;
«ÎòÐÁ ¾ñ½Ûõ ¿ÄõÀ¡ áðÊÉ¡÷;
«ò¾¡ý ±ò¾¨É Ó¸Á¨Éì §¸ðÀÐ?

¿¡Ùõ ¦À¡ØЧÁ §¸¡Â¢§Ä ÌÊ¡ö,
Á¡¸¡Ç¢ ÂõÁý; ¾¢ÕÅÄ¢ ¾¡Âõ;
§¸¡ÇÚ ÌÚí¸¡ø ®ºÃ¢ý §ÀÎ;
¦¸¡ûÓ¸ô §Àâ¢ý ºó¾¡Éô ¦ÀÕÁ¡û;
Ù¨¼ô À¢û¨Ç; º¢ÅýÁ¡ø ÄÂõ;
«ò¾¡ý ±ò¾¨É §¸¡Â¢Öì §¸ÅÐ?

«Îò¾ ¦ÅûǢ¢ø ¾¢ÕÅ¢Çì §¸üÈ¢
ÝØÈ ÅÆ¢À¼ô ¦À¨ÃÔõ ¦¸¡Îò§¾ý;
§º¡¾¢¨Â Å½í¸ áü¦ÈðÎô §Àáõ;
¸¡÷ò¾¢¨¸î º¢ðʸû §¾Ê ±ÎòÐ
¸ØÅ¢ô ÀǢ¼î º¡õÀÄ¢ý §¾öôÒ;
«ò¾¡ý ±ò¾¨É ¸¡÷ò¾¢¨¸ ÅÕÅÐ?

ò¾¢§Â¡? þý¦É¡Õ ¸¢Æ¨ÁÔõ ¸Æ¢Ôõ
«Îò¾ »¡Â¢üÈ¢ø ¦¾¡¨Ä§Àº¢ ´Ä¢ìÌõ;
«ò¾¡ý ±ò¾¨É Á½¢¦Â¡Ä¢ §¸ðÀÐ?

Å¡÷ò¨¾¸û; §Àî͸û; Å¡ÃÓõ ¿¢¨Éì¸;
Åû¦ÇÉò §¾¡ýÚõ "®¦¾ýÉ Å¡ú쨸?"
«ò¾¡ý ±ò¾¨É ¿¢¨É׸û §¾¡öÅÐ?

§¿÷ò¾¢ì ¸¼ý§À¡ø ¿£í¸Ùõ ¿¡Ûõ
¿¢¨É׸û ÓÂí¸¢Ôõ ¯¼ø§Å È¢¼ò¾¢ø,
«ò¾¡ý ±ò¾¨É ¸¡Äí¸û À¢Ã¢ÅÐ?

¸Øò¾¢Õ*3 âðÊ ±Ø¿¡ýÌ ñθû
¸Æ¢óÐõ þЧÀ¡ø À¢Ã¢ó¾§¾ þø¨Ä
«ò¾¡ý ±ò¾¨É ¯½÷׸û §¸¡÷ôÀÐ?

¾Øò§¾ ¿¢¨ÉóÐ ÀÉ¢ò¾É ¸ñ¸û;
¾¡É¡ö «¨ºóÐ º¢Ä¢÷ò¾Ð ¯¼õÒ;
«ò¾¡ý þò¾¨¸ ¯½÷×Áì Ìñ§¼¡?

ÅØò¾¢Ôõ °ÊÔõ À¢È¢Ð¿¡û ÜÊÔõ
Å¡ú󾧾 ¿õÓ¨¼ Å¡úÅ¢Âø îÍ;
«ò¾¨¸ Å¡úÅ¢Âø ¦ÁÉò ¦¾¡¼Õ§Å¡õ

ѨƾÖì ¸ÛÁ¾¢ ±ýÚ¾¡ý ¸¢ðÎõ?
§¿¡¾Ä¢ý ÓÊ×õ ±ýÚ¾¡ý ¿¢¸Øõ?
«ò¾¡ý þÉ¢¿¡ý ´Õ¸½õ ¦À¡Ú째ý!

À¡ÊÂÅ÷: þáÁ.¸¢.

¾¢¨½: À¡¨Ä

ШÈ: ¦À¡ÕûÅ¢ý À¢Ã¢ó¾¡ý ¾¨ÄÅý; ÅШÅ(wedding)ÔüÈ ¿¡Ç¡ö ¦¸¡Ø¿¨Éô À¢Ã¢Â¡¾ ¾¨ÄÅ¢, À¢Ã¢Å¢ý üÈ¡¨Á¡ø, ѨÆÁ¾¢(visa)î ¦ºÂøÓ¨È §¿¡ì¸¢ ÅÕó¾¢ÂÐ.

1. §À¨Æ = cupboard
2 ÌÇõÀ¢ = coffee
3. ¸Øò¾¢Õ = º¢Å¸í¨¸ Á¡Åð¼ò¾¢ø ´Õ º¡Ã¡÷ ¾¢ÕÁ½ò¾¢ø Á½Á¸ÙìÌ Á½Á¸ý þÎõ ¸ØòÐ «½¢¸Äý. ¸Øò¾¢Õ×õ, ¾¡Ä¢Ôõ §º÷ó§¾ Á½ô¦Àñ¨½ Á½Å¡úÅ¢üÌû þðÎÅÕõ º¼íÌ «¨ÁÔõ.

3 comments:

Anonymous said...

Your method of describing all in this piece of writing is actually good, every one
be capable of effortlessly understand it, Thanks a lot.
My web site Rackmount Flight Cases

Anonymous said...

A motivating discussion is definitely worth comment.
I think that you need to write more on this issue, it might not be a taboo
matter but typically people don't speak about such subjects. To the next! Best wishes!!
Here is my webpage :: Boat stores specialist

Anonymous said...

Hello there! This article couldn't be written any better! Going through this post reminds me of my previous roommate! He continually kept talking about this. I am going to forward this information to him. Fairly certain he's going to have a very
good read. Thanks for sharing!

Also visit my weblog :: www.learnpaintlessdentremoval.com