ஒரு பதின்ம அகவைப் பெண்ணைப் போல, கண்கள் வியக்க, கணிக்குள் தமிழ் தெரிவது பற்றி கடந்த 10, 15 ஆண்டுகளாய் பூத்து மலர்ந்து பூரித்து நிற்கிறோம். இன்னும் கனவுகள் கொள்ளுகிறோம். "ஆகா, எங்கள் மொழி இங்கே பூத்துவிட்டது" ஆனால், கொஞ்சம் மயக்கத்தில் மாலுறுகின்ற நிலை விடுத்து, மெய்நிலைக்கு வருவோமா?
தமிழ்க் கணிமைக்கான மாறுகடை (market) எது என்று முன்னொரு முறை கேட்டிருந்தேன். அதைப் பற்றி மடற்குழுக்களில் யாரும் உரையாடக் காணோம். அதை தமிழ் உலகம் மடற்குழுவிலும் கூட ஓரிருமுறை பகிர்ந்து கொண்டேன். கீழே உள்ள மடல் 2003 தமிழ் இணைய மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னால் எழுதியது. (அதில் நானும் ஒருங்குறி பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.) கொஞ்சம் பரபரப்புக் கூடிய அந்த நேரத்தில் மனத்தில் ஒரு வெறுமை அப்போது நிலவியது. இப்பொழுது இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் நிலைமை மாறியதாய் எனக்குத் தெரியவில்லை. மீண்டும் அந்த உரையாட்டை வலைப்பதிவுகளில் தூண்ட வேண்டி, அதே மடலை மறுபதிப்புச் செய்ய முற்படுகிறேன்.
தமிழ் இணையம் என்ற விதயத்தை (ஏதேனும் ஒன்றை விதந்து பேசினால் அது விதயம்; விதயம் வடமொழியில் விஷயம் என்று ஆகும். நம்முடைய மூலம் தெரியாமல் நாம் அதை விடயம் என்று எழுதிக் கொண்டு இருக்கிறோம். இனிமேலாவது மாற்றிக் கொள்ளுவோமா?) உள்ளடக்கியது தமிழ்க்கணிமை. அதாவது தமிழ்க்கணிமை என்ற கொத்துக்குள் (set) தமிழ் இணையம் என்பது ஓர் உட்கொத்து (subset). புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழக, ஈழம் இரண்டோ டும் தொடர்பு கொள்ளுவதற்காகத் தமிழ் இணையம் பயன்படும். ஆனால் அந்த எதிர்பார்ப்போடு மட்டுமே எல்லாம் முடிந்ததா? தமிழ்க் கணிமை என்பது அதற்கும் மேலே பரந்தது அல்லவா? இந்தப் புரிதலோடு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
தமிழ்க் கணிமை என்பது ஏதோ வெற்றிடத்தில் வேலை செய்கிறதா? அதற்குத் தேவை (demand) இருக்கிறதா? அல்லது மானகை இயலில் (management science) சொல்லுவது போல, வெறுமே மேலிருந்து கீழாய் (top down) வலிந்து அளிக்கப் படுகிறதா (அளிப்பு = supply)? யாருக்காக இந்தக் கடை விரிக்கப் படுகிறது? இதைக் கொள்வார் யார்?
கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா? நான் தமிழ்நாட்டுப் பின்புலம் வைத்துப் பேசுகிறேன்.
இன்றைக்கு இந்தியாவில் ஓரளவு கூர்த்திறன் (somewhat skilled) கொண்ட எந்த வேலைக்கும் ஒரு நாளைக்கு ரூ 120 கொடுத்தாலே மிக அதிகம்; பல இடங்களில் ரூ 100 தான் கிடைக்கிறது. பெண்களுக்கு ரூ 70 ல் இருந்து ரூ 80 தான் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ 16. இதே பொழுது அமெரிக்காவில் (இதை ஒரு எடுத்துக்காட்டிற்குச் சொல்கிறேன்) ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 16 வெள்ளி கிடைக்கிறது. ஆக இரண்டிற்கும் இடையே 45/46 மடங்கு வேறுபாடு இருக்கிறது.
இப்பொழுது ஒரு வேளைச் சாப்பாட்டைப் பார்ப்போம். சென்னையில் ஓரளவு நல்ல உணவை ஓர் உணவகத்தில் ஒரு வேளைக்குச் சாப்பிட வேண்டுமானால் இப்பொழுது ரூ 30 பக்கத்தில் ஆகிறது. அதே பொழுது அமெரிக்காவில் வயிறு நிறையச் சாப்பிட வேண்டுமானால் 6ல் இருந்து 8 வெள்ளிக்குள் செய்துவிட முடியும். மாந்த உழைப்பில் கணக்குப் பார்த்தால், ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு அமெரிக்காவில் 30 நுணுத்தங்கள் உழைத்தாலே போகும்; மாறாக 2 மணி நேரம் உழைத்தால் தான் உருப்படியான ஒரு வேளைச் சாப்பாட்டை இந்தியாவில் பெற முடியும். அதாவது உயிர் வாழ்வதற்கே, இந்தியாவில் கூட நேரம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. அப்புறமல்லவா, களியாட்டம், திரைப்படம், தொலைக்காட்சி, தாளிகைகள் என்பவை; அதற்கும் அப்புறம் அல்லவா, கணி என்பது வந்துசேரும்?
அமெரிக்காவில் ஒரு நல்ல மிசைக்கணியை (desktop Computer) கிட்டத் தட்ட வெ. 400ல் இருந்து 500 க்குள் வாங்கி விடலாம். வெ. 400 என்று வைத்துக் கொண்டாலே 25 மணி நேரம் வேலை செய்தால் போதும். இந்தியாவிலோ இப்பொழுது ஒரு மிசைக்கணி வாங்க ரூ 25000 ஆகிறது. அதாவது கிட்டத்தட்ட 1500 மணி நேரம் உழைக்கவேண்டும். அதாவது கிட்டத்தட்ட 188 நாட்கள் (8மணி நேர வேலை) உழைக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் நிலையில் இதைச் சம்பாதிக்க, வேறு செலவுகள் இல்லாமல் இருந்தால், ஓராண்டு, ஈராண்டு கூட ஆகலாம். இன்றைக்கு இருக்கும் நிலையில் கணி வாங்கிப் பயன்படுத்துவது என்பது ஒரு சராசரித் தமிழனுக்கு எட்டாக் கொம்பே. ஒரு வேளை கணினியின் விலை ரூ 10000 க்குக் கீழே வருமானால் வீட்டுக் கணி என்பது தமிழ்நாட்டில் ஓரளவு பரவலாகக் கூடும்.
இந்த நிலையில் ஒரு அடிப்படைச் சொவ்வறையான Microsoft Office suite, கிட்டத்தட்ட ரூ 3000க்கு விற்கிறது. இதை இந்தியாவில் எத்தனை பேர் வாங்க முடியும்? ஏன் இந்தியாவில் சொல்லாமல் கொள்ளாமல், சொவ்வறைப் புரட்டு (software piracy) நடக்கிறது என்று இப்பொழுது புரிகிறதா? இதுபோன்ற அலுவச் சொவ்வறை (Office software) ரூ 500 க்கு விற்றால், புரட்டை நிறுத்தி நேர்மையான முறையில் சொவ்வறை வாங்கக் கூட்டம் பெருகும்.
ஆங்கிலச் சொவ்வறையே இப்படி புரட்டாகிப் போகும் போது தமிழ்ச் சொவ்வறை என்பது விலையில்லாமல் இருந்தால் தான் வாங்கிக் கொள்ளலாம் என்று மக்கள் எண்ணத் தொடங்குகிறார்கள். இந்த நிலையில் தமிழ்ச் சொவ்வறைகளுக்கு மாறுகடை (market) என்ன? தமிழ்ச் சொவ்வறையின் தேவை என்ன என்று மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறோமா? "அதனால் என்ன செய்ய முடியும், எதற்கு அது உதவியாக இருக்கும்" என்று நாம் புரிய வைத்திருக்கிறோமா? தமிழ்ச் சொவ்வறையை வாங்கியே ஆகவேண்டிய கட்டாயம் தான் என்ன?
இது போன்ற கேள்விகளைக் கவனிக்காமல், தமிழில் வரும் சொவ்வறைகள் "அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், ஒருங்குறி, TAB/TAM/TSCII" என எங்கோ கற்பனை உலகத்தில் அல்லவா இருக்கிறோம்?
நாம் எல்லோரும் (நண்பர்கள், உறவினர்கள்) ஒருவருக்கொருவர் தமிழில் மடல்கள் எழுதிக் கொண்டால், மின்னஞ்சல் நிரலைத் தமிழில் கொண்டுவருவதில் பயனுண்டு. நாம் தான் சட்டென்று ஆங்கிலத்திற்குத் தாவி விடுகிறோமே? தமிங்கிலத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுகிறோமே? அப்புறம் என்ன தமிழில் சொவ்வறை? தமிழில் இடைமுகம்? அலுவலகத்திற்குத் தேவையான ஆவணங்கள், விரிதாள், பரத்திக் காட்டுதல் (presentation), திட்டமிடுதல் போன்றவற்றைத் தமிழில் செய்தால், அதன் காரணமாய்த் தமிழில் அலுவச் சொவ்வறை (office software) செய்வதில் பொருள் உண்டு. இது நடக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு அலுவலகங்களில் (அது பொதுத்துறையோ, தனித்துறையோ) தமிழ் இருக்கவேண்டுமே? எங்கு இருக்கிறது சொல்லுங்கள்? இங்கு தான் 99.9 விழுக்காடு ஆங்கிலம் பரவிக் கிடக்கிறதே? மாந்த ஊற்றுகைத் துறையில் (Human Resource Department) -ல் மட்டும் அவ்வப்போது சுற்றறிக்கைகளை அந்தந்த அலுவற் பலகைகளில் ஒட்டுவதற்குத் தமிழ் வேண்டியிருக்கிறது. இது தவிர, அரசு அலுவங்களில் ஏதோ வேண்டா வெறுப்பாக இருக்கிறது. ஆனால் அது வளருவதற்கு மாறாக அஃகித்துக் (அஃகுதல் = சுருங்குதல். அஃகனம் = சுருக்கம்; அஃகனம்>அஃகினம்>அக்ஷினம். இது அகரம் தொலைத்து க்ஷணித்தல் என்று வடமொழி வடிவம் பெறும்.) கொண்டிருக்கிறது.
கும்பணி(company)களின் கணக்கு வழக்காவது தமிழில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இருந்த தமிழ்க் கணக்குப் பழக்கம் கூட மாறி, இப்பொழுது ஆங்கிலத்திற்கு அல்லவா எல்லோரும் தாவிவிட்டனர்? அப்புறம் எப்படி Talley போல ஒரு சொவ்வறை தமிழில் வரும்?
பிள்ளைகளுக்குத் தமிழில் சொல்லிக் கொடுக்கத் தமிழில் சொவ்வறை வேண்டும் என்றால், நம் பிள்ளைகள் தமிழில் படிப்பதையே நிறுத்திக் கொண்டு வருகிறோமே, அப்புறம் எப்படி? மேலும் எல்லா இளையரையும் மடிக்குழைப் பள்ளிகளுக்கு (matriculation schools)ப் படையெடுக்க வைத்தபிறகு, சாகப் போகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று அடித்துக் கொள்ளுவதில் பொருளென்ன? அப்புறம் கல்வி பற்றிச் சொவ்வறைகள் வந்து பலன் என்ன?
என்ன இது, இவ்வளவு இடிந்த தொனியில் நான் பேசுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். நாம் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இதற்கு நடுவில் ஒருங்குறி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குள் வேறுபாடு?
மொத்தத்தில் ஒன்றும் புரியவில்லை. வள்ளலார் சொன்னாராம்: "கடைவிரித்தேன், கொள்வாரில்லை". தமிழ்க்கணிமையில் வேலை செய்யும் இளைஞர்களே! தமிழ்ச் சொவ்வறைகளின் மாறுகடை எங்கே? அதைக் கொள்பவர் யார்?
அன்புடன்,
இராம.கி.
In TSCII,
¾Á¢ú츽¢¨Áì ¸¨¼Å¢Ã¢ôÒõ ¦¸¡ûÅ¡÷ þøÄ¡¨ÁÔõ
´Õ À¾¢ýÁ «¸¨Åô ¦Àñ¨½ô §À¡Ä, ¸ñ¸û Å¢Âì¸, ¸½¢ìÌû ¾Á¢ú ¦¾Ã¢ÅÐ ÀüÈ¢ ¸¼ó¾ 10, 15 ¬ñθǡö âòÐ ÁÄ÷óÐ ââòÐ ¿¢ü¸¢§È¡õ. þýÛõ ¸É׸û ¦¸¡ûÙ¸¢§È¡õ. "¬¸¡, ±í¸û ¦Á¡Æ¢ þí§¸ âòÐÅ¢ð¼Ð" ¬É¡ø, ¦¸¡ïºõ ÁÂì¸ò¾¢ø Á¡ÖÚ¸¢ýÈ ¿¢¨Ä Å¢ÎòÐ, ¦Áö¿¢¨ÄìÌ ÅէšÁ¡?
¾Á¢úì ¸½¢¨Áì¸¡É Á¡Ú¸¨¼ (market) ±Ð ±ýÚ Óý¦É¡Õ Ó¨È §¸ðÊÕó§¾ý. «¨¾ô ÀüÈ¢ Á¼üÌØì¸Ç¢ø ¡Õõ ¯¨Ã¡¼ì ¸¡§½¡õ. «¨¾ ¾Á¢ú ¯Ä¸õ Á¼üÌØÅ¢Öõ ܼ µÃ¢ÕÓ¨È À¸¢÷óÐ ¦¸¡ñ§¼ý. ¸£§Æ ¯ûÇ Á¼ø 2003 ¾Á¢ú þ¨½Â Á¡¿¡ðÊüÌ ´Õ Å¡Ãõ ÓýÉ¡ø ±Ø¾¢ÂÐ. («¾¢ø ¿¡Ûõ ´ÕíÌÈ¢ ÀüÈ¢ ´Õ ¸ðΨà ÀÊò§¾ý.) ¦¸¡ïºõ ÀÃÀÃôÒì ÜÊ «ó¾ §¿Ãò¾¢ø ÁÉò¾¢ø ´Õ ¦ÅÚ¨Á «ô§À¡Ð ¿¢ÄÅ¢ÂÐ. þô¦À¡ØÐ þýÛõ þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É. þÕó¾¡Öõ ¿¢¨Ä¨Á Á¡È¢Â¾¡ö ±ÉìÌò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. Á£ñÎõ «ó¾ ¯¨Ã¡𨼠ŨÄôÀ¾¢×¸Ç¢ø àñ¼ §ÅñÊ, «§¾ Á¼¨Ä ÁÚÀ¾¢ôÒî ¦ºö ÓüÀθ¢§Èý.
¾Á¢ú þ¨½Âõ ±ýÈ Å¢¾Âò¨¾ (²§¾Ûõ ´ý¨È Å¢¾óÐ §Àº¢É¡ø «Ð Å¢¾Âõ; Å¢¾Âõ ż¦Á¡Æ¢Â¢ø Å¢„Âõ ±ýÚ ¬Ìõ. ¿õÓ¨¼Â ãÄõ ¦¾Ã¢Â¡Áø ¿¡õ «¨¾ Å¢¼Âõ ±ýÚ ±Ø¾¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ. þÉ¢§ÁÄ¡ÅÐ Á¡üÈ¢ì ¦¸¡û٧šÁ¡?) ¯ûǼ츢ÂÐ ¾Á¢ú츽¢¨Á. «¾¡ÅÐ ¾Á¢ú츽¢¨Á ±ýÈ ¦¸¡òÐìÌû (set) ¾Á¢ú þ¨½Âõ ±ýÀÐ µ÷ ¯ð¦¸¡òÐ (subset). ÒÄõ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸ÙìÌ ¾Á¢Æ¸, ®Æõ þÃñ§¼¡Îõ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙžü¸¡¸ò ¾Á¢ú þ¨½Âõ ÀÂýÀÎõ. ¬É¡ø «ó¾ ±¾¢÷À¡÷ô§À¡Î ÁðΧÁ ±øÄ¡õ ÓÊ󾾡? ¾Á¢úì ¸½¢¨Á ±ýÀÐ «¾üÌõ §Á§Ä ÀÃó¾Ð «øÄÅ¡? þó¾ô Ò⾧ġΠ¦¸¡ïºõ ±ñ½¢ô À¡Õí¸û.
¾Á¢úì ¸½¢¨Á ±ýÀÐ ²§¾¡ ¦ÅüÈ¢¼ò¾¢ø §Å¨Ä ¦ºö¸¢È¾¡? «¾üÌò §¾¨Å (demand) þÕ츢Ⱦ¡? «øÄÐ Á¡É¨¸ þÂÄ¢ø (management science) ¦º¡øÖÅÐ §À¡Ä, ¦ÅÚ§Á §ÁÄ¢ÕóÐ ¸£Æ¡ö (top down) ÅÄ¢óÐ «Ç¢ì¸ô Àθ¢È¾¡ («Ç¢ôÒ = supply)? ¡Õ측¸ þó¾ì ¸¨¼ Ţâì¸ô Àθ¢ÈÐ? þ¨¾ì ¦¸¡ûÅ¡÷ ¡÷?
¦¸¡ïºõ ¬úóÐ À¡÷ô§À¡Á¡? ¿¡ý ¾Á¢ú¿¡ðÎô À¢ýÒÄõ ¨ÅòÐô §À͸¢§Èý.
þý¨ÈìÌ þó¾¢Â¡Å¢ø µÃÇ× Ü÷ò¾¢Èý (somewhat skilled) ¦¸¡ñ¼ ±ó¾ §Å¨ÄìÌõ ´Õ ¿¡¨ÇìÌ å 120 ¦¸¡Îò¾¡§Ä Á¢¸ «¾¢¸õ; ÀÄ þ¼í¸Ç¢ø å 100 ¾¡ý ¸¢¨¼ì¸¢ÈÐ. ¦Àñ¸ÙìÌ å 70 ø þÕóÐ å 80 ¾¡ý ¦¸¡Î츢ȡ÷¸û. «¾¡ÅÐ ´Õ Á½¢ §¿Ãò¾¢üÌ å 16. þ§¾ ¦À¡ØÐ «¦Áâ측Ţø (þ¨¾ ´Õ ±ÎòÐ측ðÊüÌî ¦º¡ø¸¢§Èý) ´Õ Á½¢ §¿Ãò¾¢üÌì ̨Èó¾Ð 16 ¦ÅûÇ¢ ¸¢¨¼ì¸¢ÈÐ. ¬¸ þÃñÊüÌõ þ¨¼§Â 45/46 Á¼íÌ §ÅÚÀ¡Î þÕ츢ÈÐ.
þô¦À¡ØÐ ´Õ §Å¨Çî º¡ôÀ¡ð¨¼ô À¡÷ô§À¡õ. ¦ºý¨É¢ø µÃÇ× ¿øÄ ¯½¨Å µ÷ ¯½Å¸ò¾¢ø ´Õ §Å¨ÇìÌî º¡ôÀ¢¼ §ÅñÎÁ¡É¡ø þô¦À¡ØÐ å 30 Àì¸ò¾¢ø ¬¸¢ÈÐ. «§¾ ¦À¡ØÐ «¦Áâ측Ţø ÅÂ¢Ú ¿¢¨ÈÂî º¡ôÀ¢¼ §ÅñÎÁ¡É¡ø 6ø þÕóÐ 8 ¦ÅûÇ¢ìÌû ¦ºöÐÅ¢¼ ÓÊÔõ. Á¡ó¾ ¯¨ÆôÀ¢ø ¸½ìÌô À¡÷ò¾¡ø, ´Õ §Å¨Çî º¡ôÀ¡ðÊüÌ «¦Áâ측Ţø 30 ÑÏò¾í¸û ¯¨Æò¾¡§Ä §À¡Ìõ; Á¡È¡¸ 2 Á½¢ §¿Ãõ ¯¨Æò¾¡ø ¾¡ý ¯ÕôÀÊÂ¡É ´Õ §Å¨Çî º¡ôÀ¡ð¨¼ þó¾¢Â¡Å¢ø ¦ÀÈ ÓÊÔõ. «¾¡ÅÐ ¯Â¢÷ Å¡úžü§¸, þó¾¢Â¡Å¢ø ܼ §¿Ãõ ºõÀ¡¾¢ì¸ §ÅñÊ¢Õ츢ÈÐ. «ôÒÈÁøÄÅ¡, ¸Ç¢Â¡ð¼õ, ¾¢¨ÃôÀ¼õ, ¦¾¡¨Ä측ðº¢, ¾¡Ç¢¨¸¸û ±ýÀ¨Å; «¾üÌõ «ôÒÈõ «øÄÅ¡, ¸½¢ ±ýÀÐ ÅóЧºÕõ?
«¦Áâ측Ţø ´Õ ¿øÄ Á¢¨ºì¸½¢¨Â (desktop Computer) ¸¢ð¼ò ¾ð¼ ¦Å. 400ø þÕóÐ 500 ìÌû Å¡í¸¢ Å¢¼Ä¡õ. ¦Å. 400 ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ñ¼¡§Ä 25 Á½¢ §¿Ãõ §Å¨Ä ¦ºö¾¡ø §À¡Ðõ. þó¾¢Â¡Å¢§Ä¡ þô¦À¡ØÐ ´Õ Á¢¨ºì¸½¢ Å¡í¸ å 25000 ¬¸¢ÈÐ. «¾¡ÅÐ ¸¢ð¼ò¾ð¼ 1500 Á½¢ §¿Ãõ ¯¨Æ츧ÅñÎõ. «¾¡ÅÐ ¸¢ð¼ò¾ð¼ 188 ¿¡ð¸û (8Á½¢ §¿Ã §Å¨Ä) ¯¨Æì¸ §ÅñÎõ. þý¨ÈìÌ þÕìÌõ ¿¢¨Ä¢ø þ¨¾î ºõÀ¡¾¢ì¸, §ÅÚ ¦ºÄ׸û þøÄ¡Áø þÕó¾¡ø, µÃ¡ñÎ, ®Ã¡ñΠܼ ¬¸Ä¡õ. þý¨ÈìÌ þÕìÌõ ¿¢¨Ä¢ø ¸½¢ Å¡í¸¢ô ÀÂýÀÎòÐÅÐ ±ýÀÐ ´Õ ºÃ¡ºÃ¢ò ¾Á¢ÆÛìÌ ±ð¼¡ì ¦¸¡õ§À. ´Õ §Å¨Ç ¸½¢É¢Â¢ý Å¢¨Ä å 10000 ìÌì ¸£§Æ ÅÕÁ¡É¡ø Å£ðÎì ¸½¢ ±ýÀÐ ¾Á¢ú¿¡ðÊø µÃÇ× ÀÃÅÄ¡¸ì ÜÎõ.
þó¾ ¿¢¨Ä¢ø ´Õ «ÊôÀ¨¼î ¦º¡ùŨÈÂ¡É Microsoft Office suite, ¸¢ð¼ò¾ð¼ å 3000ìÌ Å¢ü¸¢ÈÐ. þ¨¾ þó¾¢Â¡Å¢ø ±ò¾¨É §À÷ Å¡í¸ ÓÊÔõ? ²ý þó¾¢Â¡Å¢ø ¦º¡øÄ¡Áø ¦¸¡ûÇ¡Áø, ¦º¡ùŨÈô ÒÃðÎ (software piracy) ¿¼ì¸¢ÈÐ ±ýÚ þô¦À¡ØÐ Ò⸢Ⱦ¡? þЧÀ¡ýÈ «ÖÅî ¦º¡ùÅ¨È (Office software) å 500 ìÌ Å¢üÈ¡ø, ÒÃ𨼠¿¢Úò¾¢ §¿÷¨ÁÂ¡É Ó¨È¢ø ¦º¡ùÅ¨È Å¡í¸ì Üð¼õ ¦ÀÕÌõ.
¬í¸¢Äî ¦º¡ùŨȧ þôÀÊ ÒÃ𼡸¢ô §À¡Ìõ §À¡Ð ¾Á¢úî ¦º¡ùÅ¨È ±ýÀРŢ¨Ä¢øÄ¡Áø þÕó¾¡ø ¾¡ý Å¡í¸¢ì ¦¸¡ûÇÄ¡õ ±ýÚ Áì¸û ±ñ½ò ¦¾¡¼í̸¢È¡÷¸û. þó¾ ¿¢¨Ä¢ø ¾Á¢úî ¦º¡ùŨȸÙìÌ Á¡Ú¸¨¼ (market) ±ýÉ? ¾Á¢úî ¦º¡ùŨÈ¢ý §¾¨Å ±ýÉ ±ýÚ Áì¸ÙìÌô Òâ ¨Åò¾¢Õ츢§È¡Á¡? "«¾É¡ø ±ýÉ ¦ºö ÓÊÔõ, ±¾üÌ «Ð ¯¾Å¢Â¡¸ þÕìÌõ" ±ýÚ ¿¡õ Òâ ¨Åò¾¢Õ츢§È¡Á¡? ¾Á¢úî ¦º¡ùÅ¨È¨Â Å¡í¸¢§Â ¬¸§ÅñÊ ¸ð¼¡Âõ ¾¡ý ±ýÉ?
þÐ §À¡ýÈ §¸ûÅ¢¸¨Çì ¸Åɢ측Áø, ¾Á¢Æ¢ø ÅÕõ ¦º¡ùŨȸû "«¨¾î ¦ºö §ÅñÎõ, þ¨¾î ¦ºö §ÅñÎõ, ´ÕíÌÈ¢, TAB/TAM/TSCII" ±É ±í§¸¡ ¸üÀ¨É ¯Ä¸ò¾¢ø «øÄÅ¡ þÕ츢§È¡õ?
¿¡õ ±ø§Ä¡Õõ (¿ñÀ÷¸û, ¯ÈÅ¢É÷¸û) ´ÕÅÕ즸¡ÕÅ÷ ¾Á¢Æ¢ø Á¼ø¸û ±Ø¾¢ì ¦¸¡ñ¼¡ø, Á¢ýÉïºø ¿¢Ã¨Äò ¾Á¢Æ¢ø ¦¸¡ñÎÅÕž¢ø ÀÂÛñÎ. ¿¡õ ¾¡ý ºð¦¼ýÚ ¬í¸¢Äò¾¢üÌò ¾¡Å¢ Ţθ¢§È¡§Á? ¾Á¢í¸¢Äò¾¢ø ´ÕÅÕ즸¡ÕÅ÷ §Àº¢ì ¦¸¡ûÙ¸¢§È¡§Á? «ôÒÈõ ±ýÉ ¾Á¢Æ¢ø ¦º¡ùŨÈ? ¾Á¢Æ¢ø þ¨¼Ó¸õ? «ÖÅĸò¾¢üÌò §¾¨ÅÂ¡É ¬Å½í¸û, Ţ⾡û, ÀÃò¾¢ì ¸¡ðξø (presentation), ¾¢ð¼Á¢Î¾ø §À¡ýÈÅü¨Èò ¾Á¢Æ¢ø ¦ºö¾¡ø, «¾ý ¸¡Ã½Á¡öò ¾Á¢Æ¢ø «ÖÅî ¦º¡ùÅ¨È (office software) ¦ºöž¢ø ¦À¡Õû ¯ñÎ. þÐ ¿¼ì¸ §ÅñÎÁ¡É¡ø ¾Á¢ú¿¡ðÎ «ÖÅĸí¸Ç¢ø («Ð ¦À¡ÐòШȧ¡, ¾É¢òШȧ¡) ¾Á¢ú þÕ츧ÅñΧÁ? ±íÌ þÕ츢ÈÐ ¦º¡øÖí¸û? þíÌ ¾¡ý 99.9 Å¢Ø측Π¬í¸¢Äõ ÀÃÅ¢ì ¸¢¼ì¸¢È§¾? Á¡ó¾ °üÚ¨¸ò ШÈ¢ø (Human Resource Department) -ø ÁðÎõ «ùÅô§À¡Ð ÍüÈȢ쨸¸¨Ç «ó¾ó¾ «ÖÅü ÀĨ¸¸Ç¢ø ´ðΞüÌò ¾Á¢ú §ÅñÊ¢Õ츢ÈÐ. þÐ ¾Å¢Ã, «ÃÍ «ÖÅí¸Ç¢ø ²§¾¡ §Åñ¼¡ ¦ÅÚôÀ¡¸ þÕ츢ÈÐ. ¬É¡ø «Ð ÅÇÕžüÌ Á¡È¡¸ «·¸¢òÐì («·Ì¾ø = ÍÕí̾ø. «·¸Éõ = ÍÕì¸õ; «·¸Éõ>«·¸¢Éõ>«‡¢Éõ. þÐ «¸Ãõ ¦¾¡¨ÄòÐ ‡½¢ò¾ø ±ýÚ Å¼¦Á¡Æ¢ ÅÊÅõ ¦ÀÚõ.) ¦¸¡ñÊÕ츢ÈÐ.
ÌõÀ½¢(company)¸Ç¢ý ¸½ìÌ ÅÆ측ÅÐ ¾Á¢Æ¢ø þÕ츢Ⱦ¡ ±ýÈ¡ø «Ð×õ þø¨Ä. º¢Å¸í¨¸ Á¡Åð¼ò¾¢ø ´Õ ¸¡Äò¾¢ø þÕó¾ ¾Á¢úì ¸½ìÌô ÀÆì¸õ ܼ Á¡È¢, þô¦À¡ØÐ ¬í¸¢Äò¾¢üÌ «øÄÅ¡ ±ø§Ä¡Õõ ¾¡Å¢Å¢ð¼É÷? «ôÒÈõ ±ôÀÊ Talley §À¡Ä ´Õ ¦º¡ùÅ¨È ¾Á¢Æ¢ø ÅÕõ?
À¢û¨Ç¸ÙìÌò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îì¸ò ¾Á¢Æ¢ø ¦º¡ùÅ¨È §ÅñÎõ ±ýÈ¡ø, ¿õ À¢û¨Ç¸û ¾Á¢Æ¢ø ÀÊôÀ¨¾§Â ¿¢Úò¾¢ì ¦¸¡ñÎ ÅÕ¸¢§È¡§Á, «ôÒÈõ ±ôÀÊ? §ÁÖõ ±øÄ¡ þ¨Ç¨ÃÔõ ÁÊį̀Æô ÀûÇ¢¸ÙìÌ (matriculation schools)ô À¨¼¦ÂÎì¸ ¨Åò¾À¢ÈÌ, º¡¸ô §À¡¸¢È §¿Ãò¾¢ø ºí¸Ã¡, ºí¸Ã¡ ±ýÚ «ÊòÐì ¦¸¡ûÙž¢ø ¦À¡Õ¦ÇýÉ? «ôÒÈõ ¸øÅ¢ ÀüÈ¢î ¦º¡ùŨȸû ÅóÐ ÀÄý ±ýÉ?
±ýÉ þÐ, þùÅÇ× þÊó¾ ¦¾¡É¢Â¢ø ¿¡ý §À͸¢§Èý ±ýÚ ±ñ½¢Å¢¼¡¾£÷¸û. ¿¡õ ±ýÉ ¦ºö¾¢Õ츢§È¡õ ±ýÚ ±ñ½¢ô À¡Õí¸û. þ¾üÌ ¿ÎÅ¢ø ´ÕíÌÈ¢ ±ôÀÊ þÕì¸ §ÅñÎõ ±ýÚ ¿ÁìÌû §ÅÚÀ¡Î?
¦Á¡ò¾ò¾¢ø ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä. ÅûÇÄ¡÷ ¦º¡ýɡáõ: "¸¨¼Å¢Ã¢ò§¾ý, ¦¸¡ûšâø¨Ä". ¾Á¢ú츽¢¨Á¢ø §Å¨Ä ¦ºöÔõ þ¨Ç»÷¸§Ç! ¾Á¢úî ¦º¡ùŨȸǢý Á¡Ú¸¨¼ ±í§¸? «¨¾ì ¦¸¡ûÀÅ÷ ¡÷?
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
9 comments:
Å¢¾Âõ ±ýÈ ¦º¡ø þÂøÀ¡¸ þÕ츢ÈÐ. §¾¨Å¢øÄ¡Áø
Å¢¼Âõ ±ýÚ ±ØÐõ ¸ð¼¡Âò¨¾ò ¾Å¢÷츢ÈÐ.
¦º¡ü¸û §ÁÖõ ¦À¡í¸ðÎõ.
{
"vidhayam" enRa sol iyalbAga uLLathu. soRkal mElum pongattum.
}
«ýÒ¼ý
¿¡¸.þÇí§¸¡Åý
elangovan
ஐய்யா, மிகவும் தேவையான நேர்த்தியான பதிவு. தமிழ் திறமூல மென்பொருட்களை உருவாக்குகின்ற பணியிலிருக்கும் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதற்குத்தான் தமிழ்வழிக்கல்வியும், தமிழ்வழிக்கல்வியில் பயின்றோர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கேட்டு தமிழ்ச்சான்றோர் பேரவையின் சார்பில் உண்ணாநோன்பெல்லாம் இருந்தார்கள். வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது தமிழ் வழிக்கல்விக்கு கொஞ்சம் உயிரூட்டும் என்று நம்பினார்கள். அது கருணாநிதியின் ஆட்சியிலேயே சட்டச்சிக்கல் அது இதுவென்று சொல்லப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேவை மட்டும் உருவாக்கப்பட்டிருந்தால் தமிழுக்கு சொவ்வறை (ஏன் மென்பொருளுக்கு என்ன?) உருவாக்கப்பட்டிருக்காதா?
ஐயா! (இப்பிடிக் கூப்பிடுறதில உங்களுக்கு மனச்சிக்கல் எதுவுமில்லைத்தானே? சிலருக்கு அக்கா எண்டு கூப்பிடக் கூடப்பிடிப்பதில்லை:D)
பதிவுக்கு நன்றி. மிசை என்பதை நாம் பாவிக்கும் மேசைக்கு இணையாகத்தான் பயன்படுத்தியுள்ளீர்களா?
முனைவர் கு. அரசேந்திரன் இப்பிடியொரு விளக்கம் அளித்த ஞாபகம். மீசை கூட அதன் தொடர்ச்சியே என்றும் அறிந்த ஞாபகம். இங்கே மிசைக் கணிணி என்ற சொல்லைப் பார்த்தபோது வந்தது. நான் சொன்னது சரிதானே?
தங்கமணி சொன்னது போல் தேவையை உருவாக்குதல்தான் முதற்படி.
தமிழில் ஈடுபாடு உங்களுக்கு இருக்கின்றது, எனக்கு இருக்கின்றது. எல்லா விடயங்களிலும் மாறுகடை தேட முடியாது.
ஐய, முக்கியமான கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களைப் போன்றவர்கள் தளராமல் இருக்க வேண்டும். அப்படி முடுக்கிவிடுவோர் இருந்தால் தான் பலருக்கும் ஊக்கமாய் இருக்கும்.
(தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகள் வருவது ஓரளவு சரி செய்யப்பட்டிருக்கிறது. உள்ளே இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. அவை விரைவில் செய்யப்படும்).
பெருமூச்சுதான் வருதுங்க ஐயா!
«ýÀ¢üÌâ þÇí§¸¡Åý,
¯í¸û ÅÃÅ¢üÌ ¿ýÈ¢. Å¢¾Âõ ±ýÈ ãÄõ ±íÌõ ÀÃÅðÎõ. Å¢¼Âõ, Å¢„Âõ §À¡¸ðÎõ.
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
அன்பிற்குரிய நாராயண், தங்கமணி, வசந்தன், நற்கீரன், செல்வராஜ், இராதாகிருஷ்ணன்,
உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.
நாராயண்:
தமிழ் நம்முடைய குடும்பங்களிலும் புழங்கி, அலுவங்களிலும் புழங்கினால் தான் தமிழ்ச் சொவ்வறை உருவாக்குவதில் பொருள் உண்டு. அதை இழக்கக் கூடாது என்று சொல்லுவதற்கே இந்தப் பதிவை இட்டேன். நம்மில் பலரும் கணியில் தமிழ் என்றால் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்க்கிறோம். இதன் முழு அகலத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தமிழில் இடைமுகம் காட்டுவதும் கூட ஏதோ மேலிருந்து கீழ் என்ற நிலையில் அளிப்பை (supply) மட்டுமே பார்த்து தேவை (demand) ஏதென்று உணர மாட்டேன் என்கிறோம்.
தங்கமணி:
கருணாநிதியார் சட்டச் சிக்கல் என்று சொன்னதெல்லாம் ஒருவகையில் பம்மாத்தே. கழகங்களின் (இரண்டையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.) ஆட்சியில் தான் ஒருவருக்கொருவர் போட்டியில் மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. செய்து கொடுக்கப் பணம் தண்ணீராய் ஓடிற்று. தமிங்கிலம் உள்ளே வர உறுதுணையாய் இருந்தது கழகங்களே. எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரிந்தே தான் தங்கள் சொந்த நலன்களை மேல்வைத்து குமுகநலனைத் தொலைத்தார்கள்.
அவர்களுடைய ஆட்சியில் தேவை என்பது மழுங்கடிக்கப் பட்டது. இருந்தாலும் இன்னும் காலம் முடிந்துவிடவில்லை. இப்பொழ்தும் கூடச் சீர் செய்ய முடியும். அதை நோக்கி நாம் நகரவேண்டும்.
சொவ்வறை என்ற சொல்லை பயனாக்கி இரண்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. அந்தப் பதிவை ஒருநாள் தேடி எடுத்துப் போடுகிறேன். மென்பொருள், மென்கலன் என்ற இரண்டையுமே நான் ஓரொரு பொழுதுகளில் உரையாட்டில் பயன்படுத்தினாலும், கொஞ்சம் கொஞ்சமாய் சொவ்வறைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். சொல்லின் நீட்சியில் மென்பொருளும், மென்கலனும் வாய்ப்பாக வரவில்லை என்பதே என் கருத்து.
வசந்தன்:
அய்யா என்று சொல்லுவதில் எனக்கு ஒன்றும் மனச்சிக்கல் கிடையாது.
மிசை என்பது மேடு, மேல் என்ற பொருள் கொண்டது. மேசை என்ற போர்த்துகீசியச் சொல்லைக் காட்டிலும் மிசை என்ற தமிழ்ச்சொல் உகந்தது. எனவே பயில்கிறேன். மீ என்ற ஓரெழுத்து ஒருமொழி கூட மேல் என்னும் பொருளைத் தரும். நண்பரே! இந்தக் கணினியை விடுத்துக் கணி என்ற ஓரசையைப் பழகுங்கள். கணினி என்று தமிழ்நாட்டாரும், கணனி என்று ஈழத்தாரும் பழகியதைத் தவிர்க்கலாம்; அப்படிச் சொல்வதில் ஒரு பலுக்க எளிமை கிடைக்கிறது; பொருள் மாறவில்லை. கணி என்று சுருக்கம் கிட்டத்தட்ட ஒரு முன்னொட்டாகவே மாறுகின்ற வாய்ப்புக் கொண்டது. மின்சாரத்தில் சாரத்தைத் தூக்கி எறிந்து மின் என்பதே electricity என்பதைக் குறிக்கும் நிலையில் முன்னோட்டாக அது மாறவில்லையா? அதைப்போல கணியும் ஆகட்டும்.
நற்கீரன்:
எல்லா விதயங்களிலும் (விதயம் போய் விஷயமாய் ஆகிப் பின் விடயமாய் மாறி தமிழில் மீண்டும் வந்து உருமாறிக் கிடக்கிறது. விதத்தல் என்ற வினையில் இருந்து பிறந்த சொல்லான விதயத்தை மீட்டுக் கொண்டுவருவோம்.) மாறுகடை வேண்டுமா என்பது ஆழமான பொருளியல் கேள்வி. இன்றைக்கு மார்க்சீய வாதிகளும் கூட மாறுகடை தேவை என்றே சொல்லுகிறார்கள். மாறுகடை இல்லாமல் அரசோ, அரசு சார்ந்தோ, திணிக்கும் எதையும் பெரும்பாலான குமுகாயங்கள் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் தூக்கி எறிந்துவிடுகின்றன. அந்தக் கால சோவியத் ஒன்றியம் ஏன் குலைந்தது என்பதை கொஞ்சம் ஆழமாகப் பொருளியல் வழி பார்க்க வேண்டும். சோவியத் ஒன்றியத்தில் சமவுடைமை (socialism) நடக்கவில்லை. அரச முதலாளியமே (state capitalism) நடந்தது. அது சிக்கித் தவித்த ஒரு விதயம் இந்த மாறுகடையின் தேவை பற்றியது. சோவியத் ஒன்றியம் காணாமற் போனது பற்றித் தமிழில் யாரும் இன்னும் விளக்கமாய் எழுதக் காணோம்.
செல்வராஜ்:
தளராமல் இருப்பேன். ஆனால் நிலைமை அவ்வளவு ஊக்கம் தருவதாய் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ்ச் சொவ்வறைக்கு மாறுகடை இருக்கிறதா என்பது அடிப்படைக் கேள்வி. இல்லையென்றால் இன்னொரு மாறன் வந்துடின்னும் கொஞ்ச நாளில் இன்னொரு இலவச அடர்வட்டு (CD) வெளியிட்டுக் கொண்டிருப்பார். அப்பொழுதும் நம் குறை சொல்லிக் கொண்டிருப்போம். குறை சொல்லுவதும் அன்றோடு போகும். மீண்டும் மீண்டும் ஒரு மைக்ரோ சாவ்ட் ஆங்கிலச் சொவ்வறையை வாங்கியோ, அல்லது புரட்டுப் படி எடுத்தோ, புழங்கிக் கொண்டிருப்போம். அப்புறம் கணியில் தமிழ் என்பது ஒரு ஒப்புக்குச் சப்பாணியாய்ச் சடங்காகிப் போகும்.
ஒருவேளை வன்னியில் அது சடங்கில்லாமல் இருக்கலாம்.
இராதாகிருஷ்ணன்:
பெருமூச்சு இன்று வரலாம்; ஆனால் விவரம் தெரிந்தவர்கள் இதை நம்மைச் சுற்றிலும் பரப்பவேண்டும். நாம் தமிழ் புழங்கினால் தான் தமிழில் சொவ்வறை என்பதில் பொருள் உண்டு. நாமே புழங்கவில்லை என்றால், அப்புறம் இவையெல்லாம் யாருக்கு? கோயிலில் வைத்துக் கும்பிடவா?
அன்புடன்,
இராம.கி.
«ýÀ¢ý «ö¡,
Žì¸õ.
"ÅÇ×", «¾ý À嬃 þ¨½Âì ÌÓ¸ò¾¢üÌ
«Ç¢ì¸ò ¦¾¡¼í¸¢ þÕôÀ¨¾ì ¸¡Ïõ§À¡Ð
Á¸¢ú¡¸ þÕ츢ÈÐ.
§ÅÕõ ²Ã½Óõ þøÄ¡ ¦ÅüÚî ¦º¡ü¸Ç¢ø
þÕóÐ ¾Á¢ú Å¢ÎÀ¼ §ÅñÊÂÐ Á¢¸×õ «Åº¢Âõ.
¦Áý¸Äý, ¦Áý¦À¡Õû ±ýÀÉ «ôÀÊô Àð¼
¦ÅüÚî ¦º¡ü¸Ç¢ø º¢Ä. þó¾ Á¡¾¢Ã¢ ¦º¡ü¸¨Ç
¨ÅòÐì ¦¸¡ñÎ ´Õ ¸½¢»É¡ø «¨ÃôÀì¸
¦Á¡Æ¢Â¡ì¸ì ¸ðΨà ܼ §¿÷ò¾¢Â¡¸ ±Ø¾ ÓÊ¡Ð
±ýÀÐ ±ÉÐ Àð¼È¢×.
¾Á¢úì ¸õôäð¼÷ §À¡ýÈ þ¾ú¸û
ÁüÚõ ¸½¢É¢ ÁÄ÷¸¨Çò ¾¡í¸¢
ÅÕõ ÀÄ ²Î¸¨Çô ÀÊìÌõ §À¡Ð ´Õ ¾Á¢ÆÉ¡¸×õ,
¸½¢»É¡¸×õ ¿¡ý Á¢¸×õ ¦Åð¸ô Àθ¢§Èý.
þ¨Å ÁüÚõ þ¨Å §À¡ýÈ ÑðÀò¨¾ ÍÁìÌõ
±ØòÐì¸û ¾Á¢Æ÷¸Ç¢ý «ÅÁ¡Éî º¢ýÉõ.
þõÁ¡¾¢Ã¢ ¸ðΨøû ÅÆ¢§Â ÑðÀõ ÅÕŨ¾ Å¢¼
ÅáÁø þÕôÀ§¾ §Áø.
ÀÄ Ð¨È¸ÙìÌõ ²üÀðÊÕìÌõ þó¾ þì¸ðÊø
þÕóÐ ¾Á¢Æ¸õ Å¢ÎÀ¼, ¯í¸Ù¨¼Â ¦º¡ü¸û
ÅÇÅ¢ý ÅÆ¢§Â ÅÆ¢ ¸¢¨¼ì¸î ¦ºö§ÅñÎõ.
«ýÒ¼ý
ÌðÎÅý
Post a Comment