Sunday, October 10, 2021

Jeans

இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடைகளைக் குறிக்கும் குறுக்கப்பெயர். குறுக்கத்தை விரிக்காமால் தமிழில் இணையாக வரக்கூடிய பெயரை உருவாக்கமுடியாது. இதை யெல்லாம் அறிவதற்குக் கூடப் பொறுமையின்றி ஆங்கில ஆடைகளையும், அவற்றின் பெயர்களையும் நாம் பயன்படுத்தத் துடிக்கிறோம். jean (n.) என்பது பிரஞ்சு எழுத்துக்கூட்டின் வழி உருவான சொல் ஆங்கிலவழி எழுத்துக்கூட்டில் இது இத்தாலிய Genoa வகை ஆடைகளைக் குறிக்கும். [செனோவா (வகை) ஆடை] 

ஆங்கிலச் சொற்பிறப்பியலில் இதை "twilled cotton cloth," mid-15c., Geayne, short for Gene fustian, from Middle French jean fustian "fustian (a type of twilled cotton cloth) of Genoa," the Italian city, from Old French Jannes "Genoa," from Latin Genua (see Genoa). Compare obsolete jane, name of a small silver coin of Genoa that circulated in England 15c. The plural form jeans became standard by mid-19c. In the sense "trousers made of jeans" it is attested by 1908; noted as characteristic of teenagers from 1959. Not originally blue என்று குறிப்பார். இங்கே குறிப்பிட்டு அறிய வேண்டிய சொல் fustian (n.) என்பதாகும். 

தடிமனான பருத்தித் துணி (தடிமனான காடாத்துணி என்று சிவகங்கை மாவட்டத்தில் எங்கள் ஊர்ப்பக்கம் அழைப்பர். கடுவு>கடா>காடா இதை "thick cotton cloth," c. 1200, from Old French fustaigne, fustagne (12c., Modern French futaine), from Medieval Latin fustaneum, perhaps from Latin fustis "staff, stick of wood; cudgel, club" (see fustigate) as a loan-translation of Greek xylina lina "linens of wood" (i.e. "cotton"). But the Medieval Latin word also is sometimes said to be from Fostat, town near Cairo where this cloth was manufactured. [Klein finds this derivation untenable.] Figurative sense of "pompous, inflated language" recorded by 1590s என்று ஆங்கிலச் சொற்பிறப்பியல் வரையறுக்கும். 

fustigate (v.) "to cudgel, to beat," 1650s, back-formation from Fustication (1560s) or from Latin fusticatus, past participle of fusticare "to cudgel" (to death), from fustis "cudgel, club, staff, stick of wood," of unknown origin. De Vaan writes that "The most obvious connection would be with Latin -futare" "to beat," but there are evolutionary difficulties.

செனோவா என்ற ஊர்ப்பெயர் சொல்லாது ஆடையைக் குறிப்பிட வேண்டும் எனில் jeans dress ஐக் காடா ஆடை என்றும் Jeans pant ஐப் காடாக் காற்பற்றை என்றும், jeans jacket ஐப் காடா அங்கி என்றுஞ் சொல்லலாம். pants என்பது கூடப் pantaloons எனும் சொல்லின் சுருக்கம்.தான். இச் சுருக்கமும் நம்மூரில் பலருக்குந் தெரிவதில்லை.  காலைப் பற்றிக் கொள்ளும்படி தைக்கப்பட்ட ஆடை கால்பற்றை. ஆங்கிலச் சொற்பொருளும் அதுவே. ஆயினும் ”கால்பற்றை” என்று சொல்லத் தயக்கம்.கொண்டு பாண்ட் என்று சொல்வாரே நம்மில் 100க்குத் 99.9 ஆகும். இதேபோல் டிரௌசருக்கும் துருத்தி என்ற மாற்றுச் சொல்லுண்டு. ஆனாலும் பயன்படுத்தத் தயங்குவோம். நம் அடிமைத்தனம் என்றுமே மாறாது போலும். . 

”காடா”வென்று சொல்ல வேண்டாமெனில், துணிநெசவைப் பொறுத்துஞ் சொல்லலாம். இரட்டைநூல் வார்ப்பில் ஒற்றைநூல் ஊடு குறுக்கே போகும் நெசமைப்பு twill (n) கட்டுமானம் எனப்படும். "cloth woven in parallel diagonal lines," early 14c., Scottish and northern English variant of Middle English twile, from Old English twili "woven with double thread, twilled," partial loan-translation of Latin bilix "with a double thread" (with Old English twi- substituted for cognate Latin bi-, both from PIE root *dwo- "two"); the second element from Latin licium "thread," a word of unknown etymology. துமித்தல் = இரண்டாதல் என்பதன் அடிச்சொல் சங்கதத்தில் துவி- என்றாகும் . துவிநூல் ஆடை, துவிநூல் காற்பற்றை, துவிநூல் அங்கி என்று சொல்லலாம்,

செனோவா ஆடை, செனோவாக் காற்பற்றை, செனோவா அங்கி, அல்லது, 

காடா ஆடை, காடாக் காற்பற்றை, காடா அங்கி, அல்லது,

துவிநூல் ஆடை, துவிநூற் காற்பற்றை, துவிநூல் அங்கி

என்று ஏதேனும் ஒருவகையில் சொல்லலாம். இவற்றிற்கு நீலச்சாயம் ஏற்றுவது மட்டுமே வழக்கமல்ல. காக்கிச் சாயம், கறுப்புச் சாயம் எனப் பிறவற்றையும் ஏற்றுவார். நிறங்கள் அவ்வளவு முகன்மையில்லை. வேண்டுமெனில் இன்னும் ஒரு பெயரடையாய் முன்னால் குறிப்பிடலாம் (காட்டு நீலச் செனோவாக் காற்பற்றை, நீலப் புடைத்துணிக் காற்பற்றை, நீலத் துவிநூற் காற்பற்றை)  

என் பரிந்துரை முதலிலுள்ளதே. அந்தப் பட்டவம் பிறந்த ஊரின் பெருமையை நாம் ஏன் குலைக்கவேண்டும்? மற்ற 2 சொற்களுக்கான தமிழ்ச் சுருக்கங்களை சிலகாலம் அந்தச் சொல் பயன்பாட்டிற்கு வந்தபின் ஆக்கிக்கொள்ளலாம்.

அன்புடன்,

இராம.கி.

No comments: