Monday, April 18, 2005

உறவுகள்

அய்யா, ஆத்தா பற்றி ஒருமுறை முன்பு சிங்கை திருவாட்டி கமலாதேவிக் கேட்க, என் கருத்தைப் பின்னால் சொன்னேன். அதை இங்கே வலைப்பதிவில் தருகிறேன்.

"பெற்றோரைப் பற்றி" என்ற ஒரு அருமையான நூலை தஞ்சைப் பல்கலைக் கழக மொழியறிஞர் ப.அருளி வெளியிட்டிருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல். அதில் விளக்கமாக இவை போன்ற சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பொத்தகத்தில் உள்ள பல அருமையான கருத்துக்களில் நான் ஒன்று பட்டாலும், சிலவற்றில் வேறுபடுவேன்.

இங்கே என்வழியில் இச்சொற்களையும் அவற்றை ஒட்டியவை பற்றியும் எனக்கே உரிய முறையில் நோக்குகிறேன். அதே பொழுது எனக்குமுன் இவை பற்றி ஆய்வு செய்த பாவாணர், அருளி, இளங்குமரன் ஆகியோரின் கருத்துக்கள் இங்கே இடையூடுவதை நினைவு படுத்தவேண்டும்.

அம்மா என்ற சொல் தான் முதலில் பார்க்க வேண்டிய சொல். இது விலங்குகள், குறிப்பாக ஆ வினம், எழுப்பும் ஒலியை ஒட்டி எழுந்த ஒப்பொலிச் சொல்லாகும். ஒப்பொலி என்பது ஒன்றைப் போல் இன்னொன்று அப்படியே ஒலிக்கும் வகையாகும். இந்த "மா" என்னும் விளி ஒலியே ஆவினத்தைக் குறிப்பதற்கு விதப்பாகி (specific)ப் பின் விலங்கினத்தையே குறிப்பதற்குப் பொது(generic)வானது. மாந்த வாழ்வில், ஆவின் பங்கு மிகப் பெரியது. அதைப் பற்றியே நீண்ட கட்டுரை எழுதலாம். (இற்றைக் காலக் கொள்கையின் காரணமாய்ப் பழசை மறந்து, அல்லது மறைத்து 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்னே ஆவின் ஊனே இந்திய மாந்தன் சாப்பிடாதது போலப் பம்மாத்துப் பண்ணி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, வரலாற்றுப் பொத்தகங்களை மாற்றி எழுத, சென்ற பாரதிய சனதாவின் இந்திய அரசு சட்டம் பிறப்பித்துக் கொண்டிருந்தது. பேராயக் (congress) கட்சியும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று எண்ணி ஒரு சமயம் அதற்கு ஆமாம் போட்டுக் கொண்டிருந்தது.)

மா வென்னும் ஒலியே, ஆவினத்தையும், விலங்குகளையும் குறித்தது போக, நம்மைப் பெற்றவளுக்கும் விளியாகவும் பெயராகவும் அமைந்தது. மாட்டின் கன்று தாயை விளிப்பது இந்த ஒலியால் தானே! உலகத்தின் பல மொழிகளில் இந்த அறதப் பழஞ் சொல்/ஒலி தான் தாயைக் குறிக்கப் புழங்குகிறது.

'மா'வைப் பலுக்க வாயை மூடித் திறக்கிற போது, பலருக்கும் அ என்ற உயிர் முதலில் சேர்ந்தார்ப்போல் எழுவது இயற்கையே. இப்படி எழுந்த சொல் தான் "அம்மா" என்பதாகும்.

மாந்தன் நாகரிகம் அடைவதற்கு முன்னால், விலங்காண்டி நிலையில், தாயே குடும்பத் தலைவியாய் இருந்தாள். அந்தக் குமுகாயத்தில் யார் தந்தை என்பது குடும்ப உறுப்பினருக்கும் வெளியாருக்கும் தெரியாதிருக்கலாம். ஆனால், தாய் என்ற தலைவி தெரிந்திருந்தாள். பிற்காலத்தில் குடும்ப உறவுகள் ஒழுங்காகி, "இந்த உறவு ஏற்றுக் கொள்ளக் கூடியது, இது தகாதது" என்று கட்டுப் படுத்தப் பட்ட காரணத்தால், இப்படித் தாயை மட்டுமே அடையாளம் காட்டி, தந்தை யாரென்று தெரியாத ஒரு தாய் வழிக் குமுகாயம் நமக்கு வியப்பாகவும், ஒருவகையில் பொருந்தாதது போலவும், சில போது அருவருப்பாகவும் காட்சியளிக்கலாம். ஆனால் மாந்தவியலார் தங்கள் ஆய்வின் மூலம் இப்படி ஒரு மாந்தக் குமுகாயம் ஒரு காலத்தில் அமைந்திருந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். இவ்வழக்கத்தின் மிச்ச சொச்சங்கள், மாற்றங்கள் தான் இற்றைக் கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் உள்ள மருமக்கள் வழித் தாயமாகும். (தாய் தான் இங்கே ஒரு கூட்டுக் குடும்பத்தை நிருவகிக்கிறவள். தந்தையல்ல.)

தமிழ் நாட்டிற் பல இடங்களிலும், ஒருசில குடும்பச் சடங்குகளில், தந்தைக்கு முதலிடம் கொடுக்காது, தாய்வழியான மாமனுக்கு முதலிடம் கொடுக்கும் வழக்கம் இருப்பது கூட இப்பழைய தாய்வழிக் குமுகாயத்தின் எச்சம் தான். இராகுல சங்கிருத்தியாயனின் "வால்கா முதல் கங்கை வரை" படித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். (இது போல "பஃறுளி முதல் கங்கை வரை" என்று எழுதத்தான் நம்மூரில் ஆய்வும் இல்லை; ஆளும் இல்லை. என்ன செய்வது? நம் நிலை அப்படி :-))

மாந்தனுக்கு முதலில் புரிந்த முதல் உறவு தாயேயாகும்! பிறகுதான் மற்றவை எல்லாம்.

அன்றாடம் வேட்டைக்கு அலைந்து தன் கணத்தை ஒட்டியவர்களுக்காக உணவைத் தேடும் போது, தாயே தலைவியாகிறாள். ஆனால் நாளாவட்டத்தில், அன்றாடம் அலைவதற்குப் பதிலாக தாங்கள் உண்ணக் கூடிய விலங்குகளை தங்களுக்கு அருகிலேயே வளர்த்துப் பின் வேண்டும் போது அவற்றைக் கொன்று பசி போக்கிக் கொள்ளும் நிலை வந்த பிறகு ஆட்டு மந்தைகளும், மாட்டுத் தொழுக்களும் பெருகின. (தொழுக்கள் பெருகும் போது மாந்தக் கூட்டமும் தொழுதி>தொகுதி, தொகை என்ற சொற்களால் அறியப்படத் தொடங்கியது.

கணத்தில் உறுப்பினர் தொகை பெருகப் பெருக, மந்தைகளுள் விலங்குகளின் எண்ணிக்கை பெருகப் பெருக, வேலைப் பகிர்வும் பெருகியது. "இது என்னுடையது" என்ற எண்ணம் தனிச் சொத்தை உருவாக்கிற்று. இந்தக் காலத்திற்றான், தாய்வழிக் குமுகாயம் போய், தந்தைவழிக் குமுகாயம் வந்துசேர்ந்தது. "என் சொத்து என் மக்களுக்குப் போகவேண்டும்" என்ற விழைவில், "கற்பு" என்பது முன்னிடம் பெறுகிறது. கற்பிற்கும் சொத்திற்கும் பெருத்த தொடர்புண்டு. பெண் என்பவள் மனையாள், இல்லாள் என்று ஆகிறாள். குடும்பம் என்ற கட்டுப்பாடு வருகிறது. இது உலகம் எங்கணும் எதோ ஒரு காலகட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த மாற்றத்தில் அப்பா என்பவர் முதலிடம் பெறுகிறார். அப்பாவைக் குறிக்கும் சொல்லும் அம்மா என்ற சொல்லிலிருந்தே ஒரு சிறிய திரிவு முறையில் பெறப் படுகிறது.

நம் மக்களில் ஒரு சாரார் மெல்லின இரட்டையை அப்படியே ஒலிப்பதும், இன்னொரு சாரார் அதற்கு ஈடாக, மெல்லொலியோடு அதன் இணை வல்லொலியைச் சேர்த்துப் பலுக்குவதும், இன்னுஞ் சிலர் முழுதும் வல்லினமாய் மெல்லின இரட்டையை மாற்றிப் பலுக்குவதும் நம் தமிழ் இயல்புதான். கேரளத்தார் மெல்லின இரட்டையாகப் பல சொற்களைப் பலுக்க (காட்டு: 'வ்ந்நு'), கீழைப்பக்கத்தில் உள்ள நாம் மெல்வல் இணையாக(காட்டு: 'வந்து')ப் பலுக்குகிறோம்.

ஒருசாரார் கும்மல் என்றால் இன்னொரு சாரார் கும்பல் என்கிறோம். அதுபோல அம்மா என்பது அம்பா என்றும் ஒலிக்கப்படுவது உண்டு. அந்த அம்பா தான் அம்பாள் என்று இந்தக் காலத்தில் சிவன் கோயிலில் இறைவியை அழைக்கும் சொல்லுக்கு முதலாக இருக்கிறது. இந்த அம்பா என்ற பலுக்கல் முதலில் அம்மாவைக் குறித்து பின் அப்பாவையும் குறித்திருக்க வேண்டும். சிறு குழந்தை அம்மாவையும் அப்பாவையும் வேறுபடுத்திக் கூப்பிடும் முன் அம்பா என்று குழறிக் கூப்பிடுவதை இன்றும் உன்னித்துப் பார்த்து அறிய முடியும்.

இந்த 'அம்பா' என்ற சொல் மேலுந் திரிந்து 'அப்பா' என்று ஆகும் வாய்ப்புண்டு. தமிழில் "சொந்தம்" என்பது "சொத்தாக" ஆவது போல், மெல்லும் வல்லும் சேர்ந்த இணையொலி, முற்றிலும் வல்லின இரட்டையாக மாறுவதற்கு ஏகப்பட்ட எடுத்துக் காட்டுகளை நீங்களே காண முடியும். நாளடைவில் அம்பா என்ற சொல் அருகி இலக்கியத்தில் மட்டுமே பயன்படுகிறது. அம்மா என்ற சொல்லின் வல்லினத் திரிபான அப்பா என்பது குடும்பத் தலைவனைக் குறிக்கிறது. இந்தச் சொல் வாயிதழை மூடித் திறந்தாலே வருவதால் ஒலிக்கவும் எளிதாக இருக்கிறது.

மொத்தத்தில் அம்மா, அம்பா, அப்பா என எல்லாமே ஓர் ஒப்பொலியின் தொடர்பால் ஏற்பட்டவையாகும்.

இனி அய், ஆய் போன்ற சொற்களுக்கு வருவோம். இது ஒரு நீண்ட பயணம்.

தமிழில் மூன்று சுட்டொலிகள் உண்டு. ஆ, ஈ, ஊ என மூன்று நெடில்களாகவும், அ, இ, உ என மூன்று குறில்களாகவும் இவை ஒலிக்கப் படுகின்றன. சேய்மையில் உள்ளவை ஆ வென்றும், அண்மையில் உள்ளவை ஈ என்றும், முன்மையில் உள்ளவை ஊ என்றும் குறிக்கப் பெறுகின்றன. சேய்மைக் கருத்தும், அண்மைக் கருத்தும் தமிழகப் பேச்சில் இருந்தாலும், இந்த முன்மைக் கருத்தில் படர்க்கை என்பது ஈழத் தமிழர்கள் இடையே மட்டுமே இருக்கிறது. அவன்/இவன்/உவன் என்ற சொற்களில் உவன் என்றால் யாரென்றே தமிழகத்தில் உள்ள பலருக்கும் தெரியாது.

ஊ/உ என்பவை முன்னிலையில் உள்ள எல்லாப் பொருள்களையும் குறிக்கும். யான்/ஞான்/நான் என்ற வளர்ச்சி போன்றே ஊன்/ஞூன்/நூன்/நீன்/நீ என்ற வளர்ச்சியும் தமிழ்/மலையாளப் பலுக்கல் முறையில் இயல்பானதுதான். இதே போல முன்னிலைப் பெயரின் வேற்றுமையடியும் உன்/ஞுன்/நுன்/நின் என்று வளரும். முன்னிலைப் பன்மையும் ஊம்/ஞூம்/நூம்/நீம் என்று வளர்ந்து பின் இரட்டைப் பன்மையில் நீம்/நீங்கள் என்று வளரும். இரட்டைப் பன்மையின் வேற்றுமையடியாக உங்கள்/ஞுங்கள்/நுங்கள்/நிங்கள் என்று வளரும். இங்கும் இரட்டை மெல்லொலியில் மலையாளத்தில் ஒலிப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த முன்னிலைச் சுட்டின் வளர்ச்சியாகப் பல சொற்கள் (பாவாணர் ஆய்வின் படி கிட்டத்தட்ட 75% தமிழ்ச் சொற்கள்) கிளைத்துள்ளன.

"ஊய்" என்ற வீளை ஒலியைக் கிளப்பிக் கொண்டு, ஒரு மாட்டை, மாட்டு மந்தையை, மாட்டு வண்டியை, விலங்குக் கூட்டத்தை விரட்டிக் கொண்டு போகிறோம் அல்லவா? இங்கும் முன்னிலைச் சுட்டொலிதான் முதலிடம் பெறுகிறது. இத்தகைய ஒலிப்பு, "ஊய்" என்ற கூப்பாடு, விலங்கு வேட்டையில் எழுகிற இயற்கையான செயல். கூச்சல் போட்டே விலங்குகளை விரட்ட முடியும், வேட்டையாடவும் முடியும். அந்தச் செயலாலே, ஊய்த்தல் என்ற வினைக்கு செலுத்துவது, நடத்துவது, விரைவு என்ற பொருள்கள் வருகின்றன. அப்படி ஊய்த்து, ஊய்த்து, முடிவில் தளர்ந்தும் போகிறோம். கீழே உள்ள சொல் தொகுதிகளைப் பாருங்கள்.

உய்த்தல் = முன் தள்ளல், செலுத்துதல்
ஊய்த்தல்>உகைத்தல்>அகைத்தல் = செலுத்துதல்
உய்தல்>ஒய்தல் = செலுத்தல்
ஓய்த்தல்>ஓய்ச்சல்>ஆய்ச்சல் = வேகம்
ஒய்>ஒய்யென = விரைவாக
ஓய்தல்>ஆய்தல்>அயர்தல்= தளர்தல்
ஆயம் = வருத்தம்
ஆயாதம்>ஆயாசம் = களைப்பு

ஒரு செயலில் ஊய்ந்த காரணத்தால் ஓய்ந்து போகிறோம்; தளர்ந்து போகிறோம். அந்த நிலை ஒய்வு என்று ஆகிறது. இது இன்னம் நீண்டு, வாழ்விலே ஓய்ந்து போனால், "அவருக்கு என்னய்யா, எல்லாம் ஓய்ஞ்சு போச்சு; ஆளு கதை அவ்வளவுதான்". வாழ்வில் ஓய்ந்து போன நிலை ஓயுள்>ஆயுள்

இதே போல இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால், உய்>உயிர்; உயிர்த்தல் = மூச்சுவிடுதல் என்ற பொருள் வருகிறது. (இதே உயிர் என்று பொருள் கொண்டு அதே பொழுது ஒரே மாதிரி ஒலி கொண்ட air என்ற சொல்லை ஒட்டித்தான் இந்தையிரோப்பிய மொழிகளும் உள்ளன. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவைச் சொன்னால் ஏற்கத்தான் நாம் தயங்கிக் கொண்டே இருக்கிறோம். உறவு சொல்லும் இராம.கி.யையும் திட்டிக் கொண்டேயிருக்கிறோம். இது ஏதோ செய்யக் கூடாத செயல் போல ஒதுங்கிக் கொண்டும் இருக்கிறோம்.)

"உயிர்தரு" என்ற அழகான தமிழ்ச் சொல்லே, வழக்கம் போல உயிர்த்ரு>உயிர்ச்ரு>உச்சரு>உச்சரி என்றாகி இன்று உச்சரித்தல் என்று சொல்லுகிறோம். அதாவது "வாயைத் திறந்து ஒலி கொடப்பா, காற்றை வெளியேவிடு" என்று பொருள்'

இன்னும் சில வளர்ச்சியைப் பாருங்கள்.

உய்ந்துதல்>உந்துதல் = முன் தள்ளல்
உய்க்கும் = கொண்டு செல்லும்; "புற நின்று உய்க்கும் " - (புறம் 98:16)
உய்>ஒய். ஒய்தல் = செலுத்துதல் "உப்பொய் ஒழுகை" என்பது புறம் 116.
ஒய்யல் = செலுத்துகை (பிங்கலம்)
ஒய்>ஒயு>ஒசு = செலுத்து; ஓசுநர் = மரக்கலம் செலுத்துநர்
ஒய்>எய், எய்தல் = அம்பைச் செலுத்துதல்

இனிச் செலுத்துதல் என்பது 'கொண்டு போதல்' என்ற நீட்சி பெற்று புதிய பொருள் கொடுக்கும்.
ஊய் = கொண்டுபோதல்
ஊய்கின்ற (கொண்டு போகிற) பொருள் ஊயி>ஊசி. இது நுண்ணியதாகவும் கூர்மையானதாகவும் இருப்பதால் ஊய் என்பதற்கு நுணுகுதல் என்ற பொருளும் மேற்கொண்டு வருகிறது.
ஊய்தல்>ஆய்தல் = நுணுகுதல்
ஆய்தம் = நுணுகிய ஒலி.
ஆய்தல் = நுணுகிப் பார்ப்பது; ஆர ஆய்வது ஆராய்ச்சி [இங்கே பார்த்தல் என்ற பொருட்பாடு எழுவதைக் கூர்ந்து கவனியுங்கள். இந்தப் பொருட்பாடு இன்னும் பல சொற்களைப் பார்த்தல் தொடர்பால் எழுப்பும். அவற்றை இங்கு நான் சொல்லாது தவிர்க்கிறேன். இன்னொரு வாய்ப்பிற் வேறொரு கட்டுரையிற் பார்ப்போம்.]

இனி முன் தள்ளுவதில் இருந்து மேலே போவோம். முன்னே இருப்பது என்ற கருத்து, காலப் பரிமானம் கருதி மேலோர் என்றும் பொருளைக் கொள்ளும். முன்னோர் என்னும் போது நமக்கு முந்தியவர்கள், மேலோர் என்ற பொருளைக் கொள்ளுகிறோம். அதனாலேயே, ஊங்கு = முன்பு; ஊங்கணோர் = முன்னோர் என்ற பொருள்கள் பெறுகின்றன.

நாளடைவில் ஊகாரமும், உகரமும் மேலானவை, உயர்ந்தவை என வளர்ச்சியுற்ற முறையில் கருத்துக்களைக் குறிக்கின்றன. "உடம்பால் உயர்தலும் நிலைமையால் உயர்தலும் இடத்தால் உயர்தலும் என உயர்தல் மூன்று வகை" என்பார் பாவாணர்.

உய்>உய்கு>உகு>உகப்பு = உயர்வு
"உகப்பே உயர்வு" என்பது தொல்காப்பியம். (உரியியல், 8)
உகளல் = உயர்தல்
உகு>உகை>உகைத்தல் = மேற்செலுத்தல், உகைத்தல்>அகைத்தல்
உகைத்தல், உச்சம் (நல்ல செந்தமிழ்ச் சொல்; வடமொழிச் சோதிய நூல்களில் பயிலப் படுகிறது), உக்கம் (=உயர்ச்சி, முடி), உயரம், உப்புதல், உம்பர், உவணம், என்ற சொற்களையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

உக்கு>ஊக்கு = உயர்த்து; "என்னை ஊக்குவிக்க வேண்டும்" என்றால் "உயர்த்த வேண்டும்" என்று பொருள். ஒரு பொருளை உயர்த்த வேண்டும் எண்ணும் போது "ஊம்" என்ற ஒலி எழுப்பிக் கொண்டே முயலுவதை நாம் பார்த்திருப்போம்.
ஊக்கு>ஊங்கு>ஊங்கல் = ஆடுதல், மேலே போகவைக்கும் செயல், ஊங்கல்>ஊஞ்சல்
இதே போல, ஊய்>ஊயல்>ஊசல் (ஆங்கிலத்தில் ஊசலாட்டு oscillate ஆகும்)
உவச்சன்>ஓச்சன்>ஓசன் = தெய்வத்தை ஏத்துபவன்
உய்>உய்ந்நு>உந்நு>உன்னுதல் = உயரவெழுதல்
உய்யல்>ஒய்யல்=உயர்ச்சி, ஒய்யாரக் கொண்டை = உயர்ந்த கொண்டை
ஒயில் = உயரக் குதித்தாடும் கும்மி

பல மொழிகளில் உகரம் ஒகரமாகிப் பின் அகரமாவது இயற்கை. தமிழிலேயே மற்றவர் சொல்லுவதை ஓப்புக் கொள்ளும் செயலைத் தானே ஊம் கொட்டுவது என்று சொல்லுகிறோம். ஊம்>உம் என்றுமாகி உடன்பாட்டு இடைச்சொல்லைக் குறிக்கும். "அவனும் நானும் போனோம்" என்பது சேர்ந்த நிலையைக் குறிக்கும். இந்த ஊம் என்பதே ஈழத்தமிழர் வாயில் "ஓம்" என்று ஒலிக்கிறது. "ஓம் போட்டால் என்னவெண்டு அருத்தம்? சொல்லுங்கோவன்"
"சரியெண்டு கேட்டுக் கொள்றன்" என்று அருத்தம்.

அதே "ஓம்" தமிழகத் தமிழர் வாயில் "ஆம்" என்று ஒலிக்கும். ஊம்>ஓம்>ஆம். இது இன்னும் வடக்கே போய் ஹாம்>ஹாங் என்று ஒலிக்கும். எனவே ஊ>ஓ>ஆ என்றாவது ஒன்றும் வியப்பில்லை.

வேட்டுவ நிலையில் ஊய்த்துக் கொண்டு (செலுத்திக் கொண்டு) (அதாவது மேய்த்துக் கொண்டு) கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவள் தாய். ஊய்>ஓய்>ஆய்

ஆய் என்ற சொல்லுக்கு செலுத்துதல், நடத்துதல், தலைவி என்றெல்லாம் இதனாற் பொருள் கொள்ளும். பின் தாய்வழிக் குமுகாயம் மாறித் தந்தைவழிக் குமுகாயம் வரும் போது அப்பன் ஆயன் ஆகிறான், அம்மை ஆயி ஆகிறாள். ஆயன் என்பது மந்தைகளின் தலைவன் என்ற பொருளையும் கொள்ளுகிறது. ஆயின் கூட்டம் ஆயம்; அதாவது கணம்.

ஆயன்>அய்யன் = கூட்டுக் குடும்பத்தின் தலைவன். இன்றைக்கு இந்தச் சொல் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதிரிப் புழங்கும். எங்கள் சிவகங்கைப் பக்கத்தில் இந்தச் சொல் தந்தையின் தந்தையைக் குறிக்கிறது; சில இடங்களில் தந்தையையும் குறிக்கிறது. இன்னும் சில இடங்களில் இது அண்ணனையுங் குறிக்கலாம்.

ஆயி>ஆயித்தி>ஆய்த்தி>ஆத்தி (அடி ஆத்தி, இவுக இவ்வளவு பேசுறாகளே!)
ஆத்தி>ஆத்தா (அடி ஆத்தா, இவளுக்கு இவ்வளவு வாயா?)

பின் தமிழில் பால் குறிக்கிற காலம் வந்தவுடன், ளகரம் என்ற ஈறு பெண்மையைக் குறிக்க, அம்மா அம்மாள் ஆனாள்; அக்கா அக்காள் ஆனாள்; ஆத்தா ஆத்தாள் ஆனாள் (பொத்தகம் புத்தகம் ஆனது போல பேச்சுத் தமிழ் தாங்க, முதல் வடிவம்! இலக்கியத் தமிழ் எல்லாம் அப்புறம் தான்.)

இன்னும் வளர்ச்சியில் ஆயம் என்பது கூட்டுக் குடும்பத்தைக் குறித்து ஆயம்>ஆய்ம்>ஆம் என்று ஆனது. ஆமை உடையவன் ஆமுடையான் ஆனான்; ஆமை உடையவள் ஆமுடையாளானாள். அது திரிந்து ஆம்படையான், ஆம்படையாள், ஆம்பிளையான், ஆம்பிளையாள் என்றெல்லாம் ஆயிற்று.

ஏற்கனவே நான் பலமுறை என் கட்டுரைகளிற் கூறியது போல C1V1 (C என்பது மெய், V என்பது உயிர்) என்று தொடரும் பல சொற்கள் C1v1C2v2 என்று விரிவது தமிழில் பெரிதும் உண்டு. (இந்த நடைமுறை தலைக்கீழாக C1v1C2v2 >C1V1 என்று ஆவதுமுண்டு.

இன்னொரு வகையில் ஆய்த்தி>ஆய்ச்சி>ஆச்சி ஆவாள். இவள் கூட்டுக் குடும்பத்தின் தலைவி. நெல்லைப் பக்கம் தந்தையின் தாய் ஆச்சி எனப் படுவாள். எங்கள் பக்கம் வீட்டின் தலைவியும், அக்கையும் ஆச்சி எனப் படுவார்கள். "பெரியாச்சி சொன்னாச் சொன்னதுதான்; அப்பறம் என்ன பேச்சுப் பேசிகிட்டு, வா புள்ளெ, போகலாம்"

ஆயத்தின் தலைவன் ஆய்த்தன் என்றும் அழைக்கப் பட்டான். ஆய்த்தன்>அய்த்தன்>அத்தன் = தந்தை. "பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா " என்ற தேவாரப் பாடலில் சுந்தரர் "அத்தா" என்றும் அழைக்கிறார் அல்லவா? அவன் இறைவன், தலைவன் என்பதால் இந்தப் பெயர் வருகிறது.

அம்மம்மா, அப்பப்பா, அம்மப்பா, அப்பம்மா, அத்தாச்சி - இப்படிப் பலவகையில் உறவுகள் பெருகும்.

இனி அய்யன் என்ற சொல்லே யகரம்>ஞகரம்>நகரம் என்ற போலியில் அய்யன்>அய்ஞன்>அய்நன் என்று ஆகும். அய்நன் மேலும் திரிந்து அய்ணன்>அண்ணன் என்றாகும்.

இதே போல அய்யை>அய்ஞை>அய்ங்ஙை>அங்ஙை>அங்கை>அக்கை என்று விரியும். இன்னொரு விதமாக அய்யை>அய்ஞை>அய்நை>அந்நை>அன்னை என்றும் விரியும்.

அங்கை என்பது முதலில் தாய்க்கும் பின் அக்கைக்கும் வந்த பெயர்களாகும். இதன் காரணமாகவே மகன் என்பதற்கும் அங்கன், அங்கயன், அங்கசன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. அங்கப் பால் என்பது தாயின் முலைப் பால்; அங்க மணி என்பது மகளுக்குக் கொடுக்கும் சீர்ப் பொருள். அங்கலி = முலை; அங்கிகை = முலையை மூடிப் பெண்கள் அணியும் கச்சு; (இந்தக் காலத்தில் இரவிக்கை). ஆண் மார்பை மூடி அணியும் உடைக்கு அங்கி என்று பெயர். அங்கலிங்கம் = வீர சிவ நெறியினர் மார்பில் அணியும் இலிங்கம். அங்காரகம் என்றால் உடம்பின் மேலே பூசும் வாசனைப் பொருள். அங்காரகன் = உடம்பின் மேல் செவ்வண்ணம் பூசிக் கொண்ட செவ்வாய்க் கோள். அங்கனை என்றாலே பெண் என்றுதான் பொருள். அங்கியம்>அங்கிசம் என்பது தாய்வழி வரும் மரபு, பாகம். (கன்னன் - கர்ணன் - தாய்வழி மட்டுமே அறிந்தவன். (ராதேயன் அல்லவா; பின்னாளில் குந்தேயனாகச் சொல்ல முடியாமற் கிடந்தானே?) அதனால் அவன் அங்கன். இந்த அங்கனுக்காகவே காட்டை அழித்து துரியன் உருவாக்கிய நாடு அங்க நாடு.

அங்கை என்ற சொல் தாயைக் குறித்து இருந்தால் தான் மேலே கூறிய பொருள்கள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கு இருக்கும்.

அங்காத்தல் = வாய் இதழ்களை மேலே கொண்டு செல்லுதல். (அய் என்ற வேரோடு மேல் என்ற பொருள் தொடர்புறுவதைக் காணலாம். அங்காத்தல் என்ற சொல்லோடு அண்ணாத்தல் என்ற இணைச் சொல்லைப் பார்த்தால் இந்த அண்ணா என்பதற்கும் அங்கா என்பதற்கும் இருக்கும் ஒப்புமை புலப்படும்.

தாய், தந்தை, அண்ணன், அக்கை என இருக்கும் உறவுகள் ஒரு காலத்தில் குழம்பித்தான் கிடந்தன. இது கட்டுப்பாடற்ற நிலையில் குமுகாயம் முதலில் எழுந்த நிலையைக் குறிக்கும். இது ஏதோ எகிப்திய அரச குடும்பம் மட்டும் செய்ததல்ல. மாந்த வரலாறே குழம்பித்தான் தொடங்கியது. ஒன்றொன்றாக மாந்த வரலாற்றின் வளர்ச்சியில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பட்டன. முதலில் ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையோடு கூடக் கூடாது (புணரக் கூடாது) என்ற கட்டுப்பாடு எழுந்தது; அடுத்து ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு. மூன்றாவதாய் தந்தையின் அண்ணன், தம்பி ஆகியவர்களின் மக்களோடு கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு. இதே போல தாயுடைய அக்கை, தங்கையின் மக்களோடு கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு.

இன்னும் ஒரு கட்டம் போய் மாமன் மக்கள், அத்தை மக்கள் ஆகியோரோடு கூடக் கூடாது என்ற கட்டுப்பாடு, இந்தக் காலத்தில் மருத்துவக் காரணம் காட்டி ஒரு கருத்து வெகுவாக வலியுறுத்தப் பட்டு வருகிறது. (தமிழர்கள், ஓரளவு ஆந்திரர்கள் இப்படி மாமன் மக்கள், அத்தை மக்களை மணப்பதை இன்னும் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.) எங்கிருந்து எங்கே வளர்ந்திருக்கிறோம் பாருங்கள்?

இனி அம்மாவின் உடன்பிறந்தான் அம்மாவன் ஆனான். அதை அம்மான் என்றும் மாமன் என்றும் திரித்து வழங்குகிறோம். அத்தனின் உடன்பிறந்தாள் அத்தை ஆனாள்.

இன்னொரு செய்தி:, "அத்தன்" என்ற சொல் "அந்தன்" என்றும் திரிந்திருக்க வேண்டும் என்று புலவர் இரா. இளங்குமரன் தன் "தமிழ் வளம் - சொல் " என்ற பொத்தகத்தில் எடுத்துரைப்பார். அது மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே! உணர்வு வெளிப்பாட்டில் எழும் விளிச் சொல் எல்லாமே உறவு அடிப்படையிலேயே எழுகின்றன, "அம்மாடியோ, அய்யோ, அச்சோ, அன்னோ, ஆத்தோ, அக்கக்கோ, அண்ணாவோ" என்றெல்லாம் எழும் போது இதே போல் எழும் "அந்தோ" என்ற சொல் யாரைக் குறிக்க முடியும் என்று ஊகித்துப் பார்த்தால் அது அந்தை என்ற சொல்லைத்தானே குறிக்க முடியும் என்று புரியும். இதற்கு அணையாக சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, எயினந்தை, ஆந்தை, பூந்தை என்ற சங்க காலப் புலவர்களின் பெயரை எடுத்துக் கூறி அவற்றைத் தந்தையில் இருந்து புணர்த்திப் பெறுவதைக் காட்டிலும் அந்தையில் இருந்து பெறுவது மிக எளிது என்று இளங்குமரன் நிறுவுவார்.

அந்தன் என்ற பொருள் பெரியவன், முதல்வன் என்ற பொருளில் இன்னொரு அன் ஈறு பெற்று அந்தனன்>அந்தணன் என்று ஆகும். அய்யன் என்றாலும் அதே பொருள் தான். இன்றைக்கு இதைச் சாதிப் பொருளில் சொன்னாலும் இதன் பிறப்பு உறவுமுறைப் பெயர்களில் இருக்கிறது. இன்றையப் பெருமானர்கள் பற்றி எழுதினால் அவர்களும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். மற்றவர்களும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உணர்வுகள் கொப்புளிக்கும் போது, எழுதத்தான் நமக்குத் தயக்கமாய் இருக்கிறது.

இனி தம் என்னும் தன்மைப் பொருளோடு சேர்ந்து இந்த உறவுகள் புதுவடிவம் கொள்ளும்

தம் + ஆய் >தம்மாய்>தவ்வாய்>தவ்வை (மகர, வகரப் போலி)>தய்யை (வகர, யகரப் போலி)>தாய்
தம் + அப்பன்>தமப்பன்>தகப்பன்
தம் + அந்தை = தம்மந்தை>தவ்வந்தை>தய்யந்தை>தய்ந்தை>தந்தை
தம்+ அய்யன் = தமய்யன்>தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம்+ அங்கை = தமங்கை>தவங்கை>தய்ங்கை>தங்கை

நம் + அங்கை >நங்கை = மங்கை (நகர, மகரப் போலி; நுப்பது - முப்பது, நுனி - முனி என்ற போலிகளை நோக்குங்கள்)

தம்+பின் =தம்பின்>தம்பி
நம்+பின் = நம்பின்>நம்பி

அம்மாவை ஒட்டி அம்மாவன் வந்தது போல, அ(ய்)த்தையை ஒட்டி வந்த சொல் அ(ய்)த்தையன். பின்னளில் அது அய்த்தான்>அத்தான் என்றாயிற்று. இன்று சில வட்டாரங்களில் இது அத்தையின் மகனைக் குறிக்கிறது.

சிற்றப்பன், பெரியப்பன், சின்னம்மா, பெரியம்மா போன்றவை எழுந்த காரணம் வெள்ளிடை மலை. நான் சொல்ல வேண்டாம்.

கொண்டவன் கொழுநன். கொள்ளுதல் என்ற வினை கொழுதல் என்று ஆகும். கொழுநவன் என்ற சொல் இயல்பாகத் திரிந்து கணவன் ஆகும். மனையாள், இல்லாள் என்ற சொற்கள் பற்றி நான் சொல்ல வேண்டாம். கொழுநனின் உடன்பிறந்தான் கொழுந்தன். கொழுநனின் உடன்பிறந்தாள் கொழுந்தியாள்

புகுந்த இடத்தில் பெண்ணுக்குத் துணை ஆத்துணையாள் (ஆம் = அகம்)>ஞாத்துணையாள்>நாத்துணையாள்>நாத்துணாள்

இதே போல முயத்தல் என்பது தழுவுதல், புணருதல். "போழப்படா முயக்கு - பிரிக்க முடியாத தழுவல்/புணர்ச்சி" என்பார் வள்ளுவர். முயக்கக் கூடியவன் முயத்தன்>முயத்தனன்>மைத்துனன்>மச்சினன். "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து" என்று கனாக் கண்டதை ஆண்டாள் பாடுகிறாளே அது இப்படித்தான். முயத்துனம்>மைதுனம். மைத்துனம் என்பது புணர்ச்சிக்கான சொல். சுய மைதுனம் (masterbation) என்று சில எழுத்தாளர்கள் வடமொழியாய் நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். அது திரிந்து கிடக்கும் தமிழ் தான். சுய என்ற முன்னொட்டு பற்றி இன்னொரு இடத்தில் எழுதுவேன்.

கூட்டுக் குடும்பத்தலைவன் முது கிழமாகப் போன பின்னால் அவன் பட்டவன் ஆகிறான். பட்டமரம், பட்டறிவு, பட்டுக்கிடப்பான் என்ற சொல்லாட்சிகளைப் பார்த்தால், பட்டவன் பாட்டன் ஆன கதை புலப்படும்.

தந்தை தாதையாகி, அவனுடைய தாதை தாத்தன் ஆகிறான். (இது அப்பப்பன் போன்ற சொல்லாட்சி தான்.)

பாட்டனின் தந்தை பூட்டன் என்பது எதுகையில் வந்த சொல். பூட்டு என்பது ஒருவகை பிணிப்பு; மேலும் பொருத்திக் கூறுதல். இங்கு உறவுப் பிணிப்பைக் குறிக்கிறதோ, என்னவோ?

அவனுக்கும் தந்தை நம் அறிவுக்குப் புலப்படாமல் சேய்மையில் இருப்பதால் அவன் சேயோன்.

மா என்ற சொல்லின் வாரிசுகளான மான் (பெருமான்), மாள் (வேண்மாள்) என்பவை, பின் மேலே சொன்னது போல மகன், மகள் என்று ஒலித்திரிவு கொண்டன. நெடில் குறில் ஆகிச் சில பொழுது ககரத்தை உடன் கொண்டுவருவது தமிழர்களின் இயற்கை. வேங்கடவன் இன்றையத் தமிழர் வாயில் வெங்கடன் என்றும் பலுக்கப் படுகிறானே; கோடைக் கானல் கொடைக் கானல் ஆகிறதே! (இதைத் தமிழர் வேங்கடம், கோடை என்று சரியானபடி பலுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய விழைவு.)

மகன், மகள் வழிப் பெருகுகிற மக்கள் சொத்தின் வெளிப்பாடாக பாட்டனின் பெயரைக் கொண்டு பெயரன், பெயர்த்தி ஆயினர்.

நம் சொத்துக்கு உரிமையானவன் கொள்ளுப் பெயரன். கொள்ளுதல் = உரிமை கொண்டாடுதல். இதே பொருளில் தலைகீழாக பூட்டன் கொள்ளுப் பாட்டன் ஆனான். அதாவது அவன் சொத்துக்கு நாம் உரிமை கொண்டாடுகிறோம்.

எள்ளுப் பெயரன். அவன் நான்கு தலைமுறை தள்ளிப் போகும் போது அவனுக்குச் சொத்து எள்ளளவு கிடைத்தாலே வியப்புத்தான். அவன் அவ்வளவு தள்ளியவன். இருந்தாலும் பெயரன். இதே போலத்தான் சேயோன் எள்ளுப் பாட்டன் ஆகிறான்.

எல்லாமே கடைசியில் சொத்துத் தாங்க!

ஆக

சேயோன்
பூட்டன்
பாட்டன்
தந்தை
மகன்
பெயரன்
கொள்ளுப் பெயரன்
எள்ளுப் பெயரன்

என எட்டுத் தலைமுறைகளுக்கு தமிழர்கள் உறவுகள் நீளும். அதனால் தான் செல்வம் கூடியவனைப் பார்த்து, "அவனுக்கு இருக்கிற சொத்துக்கு எட்டுத் தலைமுறைக்கு வரும், அப்பா" என்று சொல்லுகிறோம்.

பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவரான பிரடரிக் ஏஞ்சல்சு "குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் "தமிழர்கள் தங்களின் எட்டுத் தலைமுறை உறவுகளை குழப்பம் ௾ல்லாமல் விவரிக்க முடியும் நிலையில் இருக்கிறார்கள்" என்றும், "இது போல வேறு யாரும் செய்வதில்லை" என்றும் வியந்து கூறுவார்.

இந்தத் தெளிவு ஏற்படப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதனால் தான், குமரிநாட்டையும், பஃறுளி ஆற்றையும் இருந்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம். வாழ்ந்து அழிந்த இனம் தான் இப்படி உறவுகளை வகைப் படுத்த முடியும், இல்லையா?

"அவர் யாருன்னு கேக்குறீங்களா? அவர் என் சின்ன மாமனார் கொழுந்தியாவுக்கு அண்ணன் மருமகன்" இது நமக்கு எளிது. எங்கே ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்களேன்?

நண்பர் ஒருவர் கேட்டார்:" உங்க அப்பாவுக்கு நீங்க எத்தனாவது மகன்?" ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்துத் தான் கூறமுடியும். (இது போலத் தமிழில் சொல்ல முடியாத ஆங்கிலச் சொற்றொடர்களும் உள்ளன.) ஒவ்வொரு மொழியும் பண்பாடும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டவை. ஒன்றில் இருந்து ஒன்றை உருமாற்றுவது என்பது கிட்டத்தட்டத்தான் முடியும்.

அப்ப வரட்டுங்களா! இதோட வலைப்பதிவுலே நாள்காட்டச் சொல்லி ஒரு வாரம் ஆயிப் போச்சு. இனி வேறே யாரோ ஒருத்தர் வந்து நாள் காட்டுவார். எனக்குச் சொல்லிக் கொள்கிற நேரம் வந்தாச்சு. ஏதோ ஒருவாரம் சுவையாச் சொன்னேன்னு நெனச்சுக்கிறேன். தப்புத் தவறு இருந்து போனாப் போகுதுன்னு விட்டுருங்க. இன்னோரு நாள் பார்ப்போம். எல்லாரும் நல்லாயிருங்க. இன்னைக்குச் சித்திரை 5 திங்கள் கிழமை ஆயில்ய நாள். குடந்தைச் சாரங்கபாணி கோயில் ஆராவமுதன் தேர்.

"ஆரா அமுதே! அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்கு
கின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும்
செழுநீர் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!
கண்டேன் எம்மானே!"

- நம்மாழ்வார், நாலாயிரப் பனுவல் - 3194

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¯È׸û

«ö¡, ¬ò¾¡ ÀüÈ¢ ´ÕÓ¨È ÓýÒ º¢í¨¸ ¾¢ÕÅ¡ðÊ ¸ÁÄ¡§¾Å¢ì §¸ð¸, ±ý ¸Õò¨¾ô À¢ýÉ¡ø ¦º¡ý§Éý. «¨¾ þí§¸ ŨÄôÀ¾¢Å¢ø ¾Õ¸¢§Èý.

"¦Àü§È¡¨Ãô ÀüÈ¢" ±ýÈ ´Õ «Õ¨ÁÂ¡É á¨Ä ¾ï¨ºô Àø¸¨Äì ¸Æ¸ ¦Á¡Æ¢ÂÈ¢»÷ À.«ÕÇ¢ ¦ÅǢ¢ðÊÕ츢ȡ÷. ¸ð¼¡ÂÁ¡¸ô ÀÊì¸ §ÅñÊ ´Õ áø. «¾¢ø Å¢Çì¸Á¡¸ ­Ð §À¡ýÈ ¦º¡ü¸¨Çô ÀüÈ¢ ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. «ÅÕ¨¼Â ¦À¡ò¾¸ò¾¢ø ¯ûÇ ÀÄ «Õ¨ÁÂ¡É ¸ÕòÐì¸Ç¢ø ¿¡ý ´ýÚ Àð¼¡Öõ, º¢ÄÅüÈ¢ø §ÅÚÀθ¢§Èý.

þí§¸ ±ýÅƢ¢ø ­î¦º¡ü¸¨ÇÔõ «Åü¨È ´ðʨŠÀüÈ¢ ±É째 ¯Ã¢Â ӨȢø §¿¡ì̸¢§Èý. «§¾ ¦À¡ØÐ ±ÉìÌÓý ­¨Å ÀüÈ¢ ¬ö× ¦ºö¾ À¡Å¡½÷, «ÕÇ¢, ­ÇíÌÁÃý ¬¸¢§Â¡Ã¢ý ¸ÕòÐì¸û ­í§¸ ­¨¼äÎŨ¾ ¿¢¨É× ÀÎò¾§ÅñÎõ.

«õÁ¡ ±ýÈ ¦º¡ø ¾¡ý ӾĢø À¡÷ì¸ §ÅñÊ ¦º¡ø. þРŢÄí̸û, ÌÈ¢ôÀ¡¸ ¬ Å¢Éõ, ±ØôÒõ ´Ä¢¨Â ´ðÊ ±Øó¾ ´ô¦À¡Ä¢î ¦º¡ø. ´ô¦À¡Ä¢ ±ýÀÐ ´ý¨Èô §À¡ø ­ý¦É¡ýÚ «ôÀʧ ´Ä¢ìÌõ Ũ¸. þó¾ "Á¡" ±ýÛõ ŢǢ ´Ä¢§Â ¬Å¢Éò¨¾ì ÌÈ¢ôÀ¾üÌ Å¢¾ôÀ¡¸¢ (specific)ô À¢ý Å¢Äí¸¢Éò¨¾§Â ÌÈ¢ôÀ¾üÌô ¦À¡Ð(generic)Å¡ÉÐ. Á¡ó¾ Å¡úÅ¢ø, ¬Å¢ý ÀíÌ Á¢¸ô ¦ÀâÂÐ. «¨¾ô ÀüÈ¢§Â ¿£ñ¼ ¸ðΨà ±Ø¾Ä¡õ. (þý¨ÈìÌì ¦¸¡û¨¸Â¢ý ¸¡Ã½Á¡öô Àƨº ÁÈóÐ, «øÄÐ Á¨ÈòÐ 4000, 5000 ¬ñθÙìÌ Óý§É ¬Å¢ý °§É ­ó¾¢Â Á¡ó¾ý º¡ôÀ¢¼¡¾Ð §À¡Äô ÀõÁ¡òÐô Àñ½¢ §¾÷¾Ä¢ø ¦ÅüÈ¢ ¦ÀÚžü¸¡¸, ÅÃÄ¡üÚô ¦À¡ò¾¸í¸¨Ç Á¡üÈ¢ ±Ø¾ ¦ºýÈ þó¾¢Â «ÃÍ ºð¼õ À¢ÈôÀ¢òÐì ¦¸¡ñÊÕó¾Ð. §ÀáÂì (congress) ¸ðº¢Ôõ §¾÷¾Ä¢ø ¦ÅøÄ §ÅñÎõ ±ýÚ ±ñ½¢ ´Õ ºÁÂõ «¾üÌ ¬Á¡õ §À¡ðÎì ¦¸¡ñÊÕó¾Ð.)

Á¡ ¦ÅýÛõ ´Ä¢§Â, ¬Å¢Éò¨¾Ôõ, Å¢Äí̸¨ÇÔõ ÌÈ¢ò¾Ð §À¡¸, ¿õ¨Áô ¦ÀüÈÅÙìÌõ «¨Áó¾Ð. Á¡ðÊý ¸ýÚ ¾¡¨Â ŢǢôÀÐ ­ó¾ ´Ä¢Â¡ø ¾¡§É! ¯Ä¸ò¾¢ý ÀÄ ¦Á¡Æ¢¸Ç¢ø þó¾ «È¾ô ÀÆï ¦º¡ø/´Ä¢ ÒÆí̸¢ÈÐ.

'Á¡'¨Åô ÀÖì¸ Å¡¨Â ãÊò ¾¢Èì¸¢È §À¡Ð, ÀÄÕìÌõ « ±ýÈ ¯Â¢÷ ӾĢø §º÷ó¾¡÷ô§À¡ø ±ØÅÐ ­Âü¨¸§Â. þôÀÊ ±Øó¾ ¦º¡ø ¾¡ý "«õÁ¡".

Á¡ó¾ý ¿¡¸Ã¢¸õ «¨¼Å¾üÌ ÓýÉ¡ø, Å¢Äí¸¡ñÊ ¿¢¨Ä¢ø, ¾¡§Â ÌÎõÀò ¾¨ÄÅ¢. «ó¾ì ÌÓ¸¡Âò¾¢ø ¡÷ ¾ó¨¾ ±ýÀÐ ¦¾Ã¢Â¡Áø ­Õì¸Ä¡õ. ¬É¡ø, ¾¡ö ±ýÈ ¾¨ÄÅ¢ ¦¾Ã¢ó¾¡û. þó¾ì ¸¡Äò¾¢ø ÌÎõÀ ¯È׸û ´ØíÌ ¬¸¢, "þó¾ ¯È× ²üÚì ¦¸¡ûÇì ÜÊÂÐ, ­Ð ¾¸¡¾Ð" ±ýÚ ¸ðÎô ÀÎò¾ô Àð¼ ¸¡Ã½ò¾¡ø, ­ôÀÊò ¾¡¨Â ÁðΧÁ «¨¼Â¡Çõ ¸¡ðÊ, ¾ó¨¾ ¡¦ÃýÚ ¦¾Ã¢Â¡¾ ¾¡ö ÅÆ¢ì ÌÓ¸¡Âõ ±ýÀÐ ¿ÁìÌ Å¢ÂôÀ¡¸×õ, ´ÕŨ¸Â¢ø ¦À¡Õ󾡾Р§À¡Ä×õ, º¢Ä§À¡Ð «ÕÅÕôÀ¡¸×õ ¸¡ðº¢ÂÇ¢ì¸Ä¡õ. ¬É¡ø Á¡ó¾Å¢ÂÄ¡÷ ¾í¸û ¬öÅ¢ý ãÄõ þôÀÊ ´Õ ¿¡û þÕ󾨾 ¯Ú¾¢ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û. ­ó¾ ÅÆì¸ò¾¢ý Á¢îº ¦º¡îºí¸û, Á¡üÈí¸û ¾¡ý §¸ÃÇò¾¢Öõ, ÌÁâ Á¡Åð¼ò¾¢Öõ ¯ûÇ ÁÕÁì¸û ÅÆ¢ò ¾¡Âõ. (¾¡ö ¾¡ý «ó¾ì ÜðÎì ÌÎõÀò¨¾ ¿¢ÕŸ¢ì¸¢ÈÅû.) ¾Á¢ú ¿¡ðÊø ÀÄ ­¼í¸Ç¢Öõ, º¢Ä º¼í̸Ǣø ¾ó¨¾ìÌ Ó¾Ä¢¼õ ¦¸¡Î측Ð, ¾¡Â¢ý ÅÆ¢Â¡É Á¡ÁÛìÌ Ó¾Ä¢¼õ ¦¸¡ÎìÌõ ÅÆì¸õ ܼ ­þó¾ô À¨Æ ¾¡öÅÆ¢ì ÌÓ¸¡Âò¾¢ý ±îºõ ¾¡ý. þáÌÄ ºí¸¢Õò¾¢Â¡ÂÉ¢ý "Å¡ø¸¡ Ó¾ø ¸í¨¸ ŨÃ" ÀÊò¾Å÷¸ÙìÌ ¿¡ý ¾¡ö ÅÆ¢ì ÌÓ¸¡Âõ ÀüÈ¢î ¦º¡øÄ ÅÕÅÐ ÒâÔõ. (­Ð §À¡Ä "À·ÚÇ¢ Ó¾ø ¸í¨¸ ŨÃ" ±ýÚ ±Ø¾ò¾¡ý ¬ö×õ þø¨Ä; ¬Ùõ ­ø¨Ä. ±ýÉ ¦ºöÅÐ? ¿õ ¿¢¨Ä «ôÀÊ :-))

Á¡ó¾ÛìÌ Ó¾Ä¢ø Òâó¾ Ó¾ø ¯È× ¾¡§Â! À¢È̾¡ý ÁüȨŠ±øÄ¡õ. «ýÈ¡¼õ §Åð¨¼ìÌ «¨ÄóÐ ¾ý ¸½ò¨¾ ´ðÊÂÅ÷¸Ù측¸ ¯½¨Åò §¾Îõ §À¡Ð, ¾¡§Â ¾¨ÄÅ¢. ¬É¡ø ¿¡Ç¡Åð¼ò¾¢ø, «ýÈ¡¼õ «¨ÄžüÌô À¾¢Ä¡¸ ¾¡í¸û ¯ñ½ì ÜÊ ŢÄí̸¨Ç ¾í¸ÙìÌ «Õ¸¢§Ä§Â ¨ÅòÐ ÅÇ÷òÐô À¢ý §ÅñÎõ §À¡Ð «Åü¨Èì ¦¸¡ýÚ Àº¢ §À¡ì¸¢ì ¦¸¡ûÙõ ¿¢¨Ä Åó¾À¢ÈÌ ¬ðÎ Á󨾸Ùõ, Á¡ðÎò ¦¾¡Øì¸Ùõ ¦ÀÕ¸¢É. ¸½ò¾¢ø ¯ÚôÀ¢É÷ ¦¾¡¨¸ ¦ÀÕ¸, Á󨾸Ùû Å¢Äí̸Ǣý ±ñ½¢ì¨¸ ¦ÀÕ¸, §Å¨Ä À¸¢÷× ±ýÀÐõ ¦ÀÕ¸¢ÂÐ. "­Ð ±ýÛ¨¼ÂÐ" ±ýÈ ±ñ½õ ¾É¢î ¦º¡ò¨¾ ¯Õš츢üÚ. ­ó¾ì ¸¡Äò¾¢ø ¾¡ý, ¾¡öÅÆ¢ì ÌÓ¸¡Âõ §À¡ö, ¾ó¨¾ÅÆ¢ì ÌÓ¸¡Âõ Åó¾Ð. "±ý ¦º¡òÐ ±ý Áì¸ÙìÌô §À¡¸§ÅñÎõ" ±ýÈ Å¢¨ÆÅ¢ø, "¸üÒ" ±ýÀÐ ÓýÉ¢¼õ ¦ÀÚ¸¢ÈÐ. ¦Àñ ±ýÀÅû Á¨É¡û, ­øÄ¡û ±ýÚ ¬¸¢È¡û. ÌÎõÀõ ±ýÈ ¸ðÎôÀ¡Î ÅÕ¸¢ÈÐ. ­Ð ¯Ä¸õ ±í¸Ïõ ±§¾¡ ´Õ ¸¡Ä¸ð¼ò¾¢ø ¿¼ó¾¢Õ츢ÈÐ. ­ó¾ Á¡üÈò¾¢ø «ôÀ¡ ±ýÀÅ÷ ӾĢ¼õ ¦ÀÚ¸¢È¡÷. «ôÀ¡¨Åì ÌÈ¢ìÌõ ¦º¡øÖõ «õÁ¡Å¢ø þÕó§¾ ¾¢Ã¢× ӨȢø ¦ÀÈô Àθ¢ÈÐ.

¿õ Áì¸Ç¢ø ´Õ º¡Ã¡÷ ¦ÁøÄ¢É ­Ã𨼨 «ôÀʧ ´Ä¢ôÀÐõ, ­ý¦É¡Õ º¡Ã¡÷ «¾üÌ ®¼¡¸, ¦Áø¦Ä¡Ä¢§Â¡Î «¾ý ­¨½ Åø¦Ä¡Ä¢¨Âî §º÷òÐô ÀÖìÌÅÐõ ¿õ ¾Á¢ú ­ÂøÒ¾¡ý. §¸ÃÇò¾¡÷ ¦ÁøÄ¢É ­Ãð¨¼Â¡¸ô ÀÄ ¦º¡ü¸¨Çô ÀÖì¸ (¸¡ðÎ: 'ùóÑ'), ¸£¨ÆôÀì¸ò¾¢ø ¯ûÇ ¿¡õ ¦ÁøÅø þ¨½Â¡¸(¸¡ðÎ: 'ÅóÐ')ô ÀÖì̸¢§È¡õ. ´Õº¡Ã¡÷ ÌõÁø ±ýÈ¡ø ­ý¦É¡Õ º¡Ã¡÷ ÌõÀø ±ý¸¢§È¡õ. «Ð§À¡Ä «õÁ¡ ±ýÀÐ «õÀ¡ ±ýÚõ ´Ä¢ì¸ôÀÎÅÐ ¯ñÎ. «ó¾ «õÀ¡ ¾¡ý «õÀ¡û ±ýÚ ­ó¾ì ¸¡Äò¾¢ø ­¨ÈÅ¢¨Â «¨ÆìÌõ ¦º¡øÖìÌ Ó¾Ä¡¸ ­Õ츢ÈÐ. ­ó¾ «õÀ¡ ±ýÈ ÀÖì¸ø ӾĢø «õÁ¡¨Åì ÌÈ¢òÐ À¢ý «ôÀ¡¨ÅÔõ ÌÈ¢ò¾¢Õì¸ §ÅñÎõ. º¢Ú ÌÆó¨¾ «õÁ¡¨ÅÔõ «ôÀ¡¨ÅÔõ §ÅÚÀÎò¾¢ì ÜôÀ¢Îõ Óý «õÀ¡ ±ýÚ ÌÆÈ¢ì ÜôÀ¢ÎŨ¾ ¯ýÉ¢òÐô À¡÷òÐ «È¢Â ÓÊÔõ.

þó¾ '«õÀ¡' ±ýÈ ¦º¡øÖìÌ '«ôÀ¡' ±ýÚ ¾¢Ã¢Â Å¡öôÒñÎ. ¾Á¢Æ¢ø "¦º¡ó¾õ" "¦º¡òÐ" ¬ÅÐ §À¡ø, ¦ÁøÖõ ÅøÖõ §º÷ó¾ ­¨½¦Â¡Ä¢, ÅøÄ¢É ­Ãð¨¼Â¡¸ Á¡ÚžüÌ ²¸ôÀð¼ ±ÎòÐì ¸¡ðθ¨Ç ¿£í¸§Ç ¸¡½ ÓÊÔõ. ¿¡Ç¨¼Å¢ø «õÀ¡ ±ýÈ ¦º¡ø «Õ¸¢ ­Ä츢Âò¾¢ø ÁðΧÁ ÀÂýÀθ¢ÈÐ. «õÁ¡ ±ýÈ ¦º¡øÄ¢ý ÅøÄ¢Éò ¾¢Ã¢À¡É «ôÀ¡ ÌÎõÀò ¾¨ÄŨÉì ÌȢ츢ÈÐ. þó¾î ¦º¡ø š¢¾¨Æ ãÊò ¾¢Èó¾¡§Ä ÅÕž¡ø ´Ä¢ì¸×õ ±Ç¢¾¡¸ þ­Õ츢ÈÐ.

¦Á¡ò¾ò¾¢ø «õÁ¡, «õÀ¡, «ôÀ¡ ±øÄ¡§Á ´ô¦À¡Ä¢Â¢ý ¦¾¡¼÷À¡ø ²üÀð¼¨Å.

þÉ¢ «ö, ¬ö §À¡ýÈ ¦º¡ü¸ÙìÌ Åէšõ. ­Ð ´Õ ¿£ñ¼ À½õ.

¾Á¢Æ¢ø ãýÚ Í𦼡Ģ¸û ¯ñÎ. ¬, ®, ° ±É ãýÚ ¦¿Êø¸Ç¡¸×õ, «, ­, ¯ ±É ãýÚ ÌÈ¢ø¸Ç¡¸×õ ­¨Å ´Ä¢ì¸ô Àθ¢ýÈÉ. §ºö¨Á¢ø ¯ûǨŠ¬ ¦ÅýÚõ, «ñ¨Á¢ø ¯ûǨŠ® ±ýÚõ, Óý¨Á¢ø ¯ûǨŠ° ±ýÚõ ÌÈ¢ì¸ô ¦ÀÚ¸¢ýÈÉ. §ºö¨Áì ¸ÕòÐõ, «ñ¨Áì ¸ÕòÐõ ¾Á¢Æ¸ô §Àø ­Õó¾¡Öõ, þó¾ Óý¨Áì ¸Õò¾¢ø À¼÷쨸 ±ýÀÐ ®Æò ¾Á¢Æ÷¸û þ¨¼§Â ÁðΧÁ þ­Õ츢ÈÐ. «Åý/þÅý/¯Åý ±ýÈ ¦º¡ü¸Ç¢ø ¯Åý ±ýÈ¡ø ¡¦Ãý§È ¾Á¢Æ¸ò¾¢ø ¯ûÇ ÀÄÕìÌõ ¦¾Ã¢Â¡Ð.

°/¯ ±ýÀ¨Å ÓýÉ¢¨Ä¢ø ¯ûÇ ±øÄ¡ô ¦À¡Õû¸¨ÇÔõ ÌÈ¢ìÌõ. ¡ý/»¡ý/¿¡ý ±ýÈ ÅÇ÷ §À¡ý§È °ý/œý/áý/¿£ý/¿£ ±ýÈ ÅÇ÷Ôõ ¾Á¢ú/Á¨Ä¡Çô ÀÖì¸ø ӨȢø þÂøÀ¡Éо¡ý. ­§¾ §À¡Ä ÓýÉ¢¨Äô ¦ÀÂâý §ÅüÚ¨ÁÂÊÔõ ¯ý/šý/Ñý/¿¢ý ±ýÚ ÅÇÕõ. ÓýÉ¢¨Äô Àý¨ÁÔõ °õ/œõ/áõ/¿£õ ±ýÚ ÅÇ÷óÐ À¢ý þÃð¨¼ô Àý¨Á¢ø ¿£õ/¿£í¸û ±ýÚ ÅÇÕõ. ­Ãð¨¼ô Àý¨Á¢ý §ÅüÚ¨ÁÂÊ¡¸ ¯í¸û/ší¸û/Ñí¸û/¿¢í¸û ±ýÚ ÅÇÕõ. þíÌõ ­Ã𨼠¦Áø¦Ä¡Ä¢Â¢ø Á¨Ä¡Çò¾¢ø ´Ä¢ôÀ¨¾ ±ñ½¢ô À¡÷ì¸ §ÅñÎõ.

þó¾ ÓýÉ¢¨Äî ÍðÊý ÅÇ÷¡¸ô ÀÄ ¦º¡ü¸û (À¡Å¡½÷ ¬öÅ¢ý ÀÊ ¸¢ð¼ò¾ð¼ 75% ¾Á¢úî ¦º¡ü¸û) ¸¢¨ÇòÐûÇÉ.

"°ö" ±ýÈ Å£¨Ç ´Ä¢¨Âì ¸¢ÇôÀ¢ì ¦¸¡ñÎ, ´Õ Á¡ð¨¼, Á¡ðÎ Á󨾨Â, Á¡ðÎ ÅñʨÂ, Å¢ÄíÌì Üð¼ò¨¾ Å¢ÃðÊì ¦¸¡ñÎ §À¡¸¢§È¡õ «øÄÅ¡, ­íÌõ ÓýÉ¢¨Äî Í𦼡Ģ¾¡ý ӾĢ¼õ ¦ÀÚ¸¢ÈÐ. þò¾¨¸Â ´Ä¢ôÒ, "°ö" ±ýÈ ÜôÀ¡Î, Å¢ÄíÌ §Åð¨¼Â¢ø ±Ø¸¢È ­Âü¨¸Â¡É ¦ºÂø. Üîºø §À¡ð§¼ Å¢Äí̸¨Ç Å¢Ãð¼ ÓÊÔõ, §Åð¨¼Â¡¼×õ ÓÊÔõ. «ó¾î ¦ºÂÄ¡§Ä, °öò¾ø ±ýÈ Å¢¨ÉìÌ ¦ºÖòÐÅÐ, ¿¼òÐÅÐ, Å¢¨Ã× ±ýÈ ¦À¡Õ¦ÇøÄ¡õ ÅÕ¸¢ýÈÉ. «ôÀÊ °öòÐ, °öòÐ, ÓÊÅ¢ø ¾Ç÷óÐõ §À¡¸¢§È¡õ. ¸£§Æ ¯ûÇ ¦º¡ø ¦¾¡Ì¾¢¸¨Çô À¡Õí¸û.

¯öò¾ø = Óý ¾ûÇø, ¦ºÖòоø
°öò¾ø>¯¨¸ò¾ø>«¨¸ò¾ø = ¦ºÖòоø
¯ö¾ø>´ö¾ø = ¦ºÖò¾ø
µöò¾ø>µöîºø>¬öîºø = §Å¸õ
´ö>´ö¦ÂÉ = Å¢¨ÃÅ¡¸
µö¾ø>¬ö¾ø>«Â÷¾ø= ¾Ç÷¾ø
¬Âõ = ÅÕò¾õ
¬Â¡¾õ>¬Â¡ºõ = ¸¨ÇôÒ

´Õ ¦ºÂÄ¢ø °öó¾ ¸¡Ã½ò¾¡ø µöóÐ §À¡¸¢§È¡õ; ¾Ç÷óÐ §À¡¸¢§È¡õ. «ó¾ ¿¢¨Ä ´ö× ±ýÚ ¬¸¢ÈÐ. ­Ð ­ýÉõ ¿£ñÎ, Å¡úÅ¢§Ä µöóÐ §À¡É¡ø, "«ÅÕìÌ ±ýÉö¡, ±øÄ¡õ µöïÍ §À¡îÍ; ¬Ù ¸¨¾ «ùÅÇ×¾¡ý". Å¡úÅ¢ø µöóÐ §À¡É ¿¢¨Ä ´Ôû>¬Ôû

þ§¾ §À¡Ä ­ý¦É¡Õ ÀâÁ¡½ò¾¢ø À¡÷ò¾¡ø, ¯ö>¯Â¢÷; ¯Â¢÷ò¾ø = ãîÍŢξø ±ýÈ ¦À¡Õû ÅÕ¸¢ÈÐ. (­§¾ ¯Â¢÷ ±ýÚ ¦À¡Õû ¦¸¡ñÎ «§¾ ¦À¡ØÐ ´§Ã Á¡¾¢Ã¢ ´Ä¢ ¦¸¡ñ¼ air ±ýÈ ¦º¡ø¨Ä ´ðÊò¾¡ý ­ó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ùõ ¯ûÇÉ. ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸ÙìÌõ þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸ÙìÌõ ¯ûÇ ¯È¨Åî ¦º¡ýÉ¡ø ²ü¸ò¾¡ý ¿¡õ ¾Âí¸¢ì ¦¸¡ñ§¼ þÕ츢§È¡õ. ­Ð ²§¾¡ ¦ºöÂì ܼ¡¾ ¦ºÂø §À¡Ä ´Ðí¸¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ.)

"¯Â¢÷¾Õ" ±ýÈ «Æ¸¡É ¾Á¢úî ¦º¡ø§Ä, ÅÆì¸õ §À¡Ä ¯Â¢÷òÕ>¯Â¢÷îÕ>¯îºÕ>¯îºÃ¢ ±ýÈ¡¸¢ ­ýÚ ¯îºÃ¢ò¾ø ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. «¾¡ÅÐ "Å¡¨Âò ¾¢ÈóÐ ´Ä¢ ¦¸¡¼ôÀ¡, ¸¡ü¨È ¦ÅǢŢÎ" ±ýÚ ¦À¡Õû'

þýÛõ º¢Ä ÅÇ÷¨Âô À¡Õí¸û.

¯öóоø>¯óоø = Óý ¾ûÇø
¯öìÌõ = ¦¸¡ñÎ ¦ºøÖõ "ÒÈ ¿¢ýÚ ¯öìÌõ " - (ÒÈõ 98:16)
¯ö>´ö. ´ö¾ø = ¦ºÖòоø "¯ô¦À¡ö ´Ø¨¸" ±ýÀÐ ÒÈõ 116.
´öÂø = ¦ºÖòШ¸ (À¢í¸Äõ)
´ö>´Ô>´Í = ¦ºÖòÐ; µÍ¿÷ = ÁÃì¸Äõ ¦ºÖòп÷
´ö>±ö, ±ö¾ø = «õ¨Àî ¦ºÖòоø

þÉ¢î ¦ºÖòоø ±ýÀÐ '¦¸¡ñÎ §À¡¾ø' ±ýÈ ¿£ðº¢ ¦ÀüÚ Ò¾¢Â ¦À¡Õû ¦¸¡ÎìÌõ.
°ö = ¦¸¡ñΧÀ¡¾ø
°ö¸¢ýÈ (¦¸¡ñÎ §À¡¸¢È) ¦À¡Õû °Â¢>°º¢. ­Ð Ññ½¢Â¾¡¸×õ Ü÷¨Á¡ɾ¡¸×õ þÕôÀ¾¡ø °ö ±ýÀ¾üÌ ÑÏ̾ø ±ýÈ ¦À¡ÕÙõ §Áü¦¸¡ñÎ ÅÕ¸¢ÈÐ.
°ö¾ø>¬ö¾ø = ÑÏ̾ø
¬ö¾õ = Ñϸ¢Â ´Ä¢.
¬ö¾ø = Ñϸ¢ô À¡÷ôÀÐ; ¬Ã ¬öÅÐ ¬Ã¡ö

þÉ¢ Óý ¾ûÙž¢ø þÕóÐ §Á§Ä §À¡§Å¡õ. Óý§É ­ÕôÀÐ ±ýÈ ¸ÕòÐ ¸¡Äô ÀâÁ¡Éõ ¸Õ¾¢ §Á§Ä¡÷ ±ýÚõ ¦À¡Õ¨Çì ¦¸¡ûÙõ. Óý§É¡÷ ±ýÛõ §À¡Ð ¿ÁìÌ Óó¾¢ÂÅ÷¸û, §Á§Ä¡÷ ±ýÈ ¦À¡Õ¨Çì ¦¸¡ûÙ¸¢§È¡õ. «¾É¡§Ä§Â, °íÌ = ÓýÒ; °í¸§½¡÷ = Óý§É¡÷ ±ýÈ ¦À¡Õû¸û ¦ÀÚ¸¢ýÈÉ.

¿¡Ç¨¼Å¢ø °¸¡ÃÓõ, ¯¸ÃÓõ §ÁġɨÅ, ¯Â÷ó¾¨Å ±É ÅÇ÷ÔüÈ Ó¨È¢ø ¸ÕòÐ츨Çì ÌȢ츢ýÈÉ. "¯¼õÀ¡ø ¯Â÷¾Öõ ¿¢¨Ä¨Á¡ø ¯Â÷¾Öõ ­¼ò¾¡ø ¯Â÷¾Öõ ±É ¯Â÷¾ø ãýÚ Å¨¸" ±ýÀ¡÷ À¡Å¡½÷.

¯ö>¯öÌ>¯Ì>¯¸ôÒ = ¯Â÷×
"¯¸ô§À ¯Â÷×" ±ýÀÐ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ. (¯Ã¢Â¢Âø, 8)
¯¸Çø = ¯Â÷¾ø
¯Ì>¯¨¸>¯¨¸ò¾ø = §Áü¦ºÖò¾ø, ¯¨¸ò¾ø>«¨¸ò¾ø
¯¨¸ò¾ø, ¯îºõ (¿øÄ ¦ºó¾Á¢úî ¦º¡ø; ż¦Á¡Æ¢î §º¡¾¢Â áø¸Ç¢ø À¢Äô Àθ¢ÈÐ), ¯ì¸õ (=¯Â÷, ÓÊ), ¯ÂÃõ, ¯ôÒ¾ø, ¯õÀ÷, ¯Å½õ, ±ýÈ ¦º¡ü¸¨Ç ±ñ½¢ô À¡÷ì¸Ä¡õ.
¯ìÌ>°ìÌ = ¯Â÷òÐ; "±ý¨É °ìÌÅ¢ì¸ §ÅñÎõ" ±ýÈ¡ø "¯Â÷ò¾ §ÅñÎõ" ±ýÚ ¦À¡Õû. ´Õ ¦À¡Õ¨Ç ¯Â÷ò¾ §ÅñÎõ ±ñÏõ §À¡Ð "°õ" ±ýÈ ´Ä¢ ±ØôÀ¢ì ¦¸¡ñ§¼ ÓÂÖŨ¾ ¿¡õ À¡÷ò¾¢Õô§À¡õ.
°ìÌ>°íÌ>°í¸ø = ¬Î¾ø, §Á§Ä §À¡¸¨ÅìÌõ ¦ºÂø, °í¸ø>°ïºø
­§¾ §À¡Ä, °ö>°Âø>°ºø (¬í¸¢Äò¾¢ø °ºÄ¡ðÎ oscillate ¬Ìõ)
¯Åîºý>µîºý>µºý = ¦¾öÅò¨¾ ²òÐÀÅý
¯ö>¯öóÑ>¯óÑ>¯ýÛ¾ø = ¯ÂæÅؾø
¯öÂø>´öÂø=¯Â÷, ´ö¡Ãì ¦¸¡ñ¨¼ = ¯Â÷ó¾ ¦¸¡ñ¨¼
´Â¢ø = ¯ÂÃì ̾¢ò¾¡Îõ ÌõÁ¢

ÀÄ ¦Á¡Æ¢¸Ç¢ø ¯¸Ãõ ´¸ÃÁ¡¸¢ô À¢ý «¸ÃÁ¡ÅÐ ­Âü¨¸. ¾Á¢Æ¢§Ä§Â ÁüÈÅ÷ ¦º¡øÖŨ¾ µôÒì ¦¸¡ûÙõ ¦ºÂ¨Äò ¾¡§É °õ ¦¸¡ðÎÅÐ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. °õ>¯õ ±ýÚÁ¡¸¢ ¯¼ýÀ¡ðÎ ­¨¼î¦º¡ø¨Äì ÌÈ¢ìÌõ. "«ÅÛõ ¿¡Ûõ §À¡§É¡õ" ±ýÀÐ §º÷ó¾ ¿¢¨Ä¨Âì ÌÈ¢ìÌõ. ­ó¾ °õ ±ýÀ§¾ ®Æò¾Á¢Æ÷ š¢ø "µõ" ±ýÚ ´Ä¢ì¸¢ÈÐ.

"µõ §À¡ð¼¡ø ±ýɦÅñÎ «Õò¾õ? ¦º¡øÖí§¸¡Åý"
"ºÃ¢¦ÂñÎ §¸ðÎì ¦¸¡ûÈý" ±ýÚ «Õò¾õ.

«§¾ "µõ" ¾Á¢Æ¸ò ¾Á¢Æ÷ š¢ø "¬õ" ±ýÚ ´Ä¢ìÌõ. °õ>µõ>¬õ. ­Ð ­ýÛõ ż째 §À¡ö †¡õ>†¡í ±ýÚ ´Ä¢ìÌõ. ±É§Å °>µ>¬ ¬ÅÐ ´ýÚõ Å¢ÂôÒ ­ø¨Ä.

§ÅðÎÅ ¿¢¨Ä¢ø °öòÐì ¦¸¡ñÎ (¦ºÖò¾¢ì ¦¸¡ñÎ) («¾¡ÅÐ §ÁöòÐì ¦¸¡ñÎ) Üð¼ò¨¾ ¾¨Ä¨Á§ÂüÚ ¿¼òÐÀÅû ¾¡ö. °ö>µö>¬ö

¬ö ±ýÈ ¦º¡ø ¦ºÖòоø, ¿¼òоø, ¾¨ÄÅ¢ ±ý¦ÈøÄ¡õ ­¾É¡ø ¦À¡Õû ¦¸¡ûÙõ. À¢ý ¾¡öÅÆ¢ì ÌÓ¸¡Âõ Á¡È¢ò ¾ó¨¾ÅÆ¢ì ÌÓ¸¡Âõ ÅÕõ §À¡Ð «ôÀý ¬Âý ¬¸¢È¡ý, «õ¨Á ¬Â¢ ¬¸¢È¡û. ¬Âý ±ýÀÐ Á󨾸Ǣý ¾¨ÄÅý ±ýÈ ¦À¡Õ¨ÇÔõ ¦¸¡ûÙ¸¢ÈÐ. ¬Â¢ý Üð¼õ ¬Âõ; «¾¡ÅÐ ¸½õ.

¬Âý>«öÂý = ÜðÎì ÌÎõÀò¾¢ý ¾¨ÄÅý. ­ý¨ÈìÌ ­ó¾î ¦º¡ø ´ù¦Å¡Õ Åð¼¡Ãò¾¢Öõ ´ù¦Å¡Õ Á¡¾¢Ã¢ô ÒÆíÌõ. ±í¸û º¢Å¸í¨¸ô Àì¸ò¾¢ø þó¾î ¦º¡ø ¾ó¨¾Â¢ý ¾ó¨¾¨Âì ÌȢ츢ÈÐ; º¢Ä ¦À¡ØÐ ¾ó¨¾¨ÂÔõ ÌȢ츢ÈÐ. ­ýÛõ º¢Ä þ­¼í¸Ç¢ø þÐ «ñ½¨Éì ÌÈ¢ì¸Ä¡õ.

¬Â¢>¬Â¢ò¾¢>¬öò¾¢>¬ò¾¢ («Ê ¬ò¾¢, ­×¸ ­ùÅÇ× §ÀÍÈ¡¸§Ç!)
¬ò¾¢>¬ò¾¡ («Ê ¬ò¾¡, ­ÅÙìÌ ­ùÅÇ× Å¡Â¡?)

À¢ý ¾Á¢Æ¢ø À¡ø ÌÈ¢ì¸¢È ¸¡Äõ Åó¾×¼ý, ǸÃõ ±ýÈ ®Ú ¦Àñ¨Á¨Âì ÌÈ¢ì¸, «õÁ¡ «õÁ¡û ¬É¡û; «ì¸¡ «ì¸¡û ¬É¡û; ¬ò¾¡ ¬ò¾¡û ¬É¡û (¦À¡ò¾¸õ Òò¾¸õ ¬ÉÐ §À¡Ä §ÀîÍò ¾Á¢ú ¾¡í¸, Ó¾ø ÅÊÅõ! ­Ä츢Âò ¾Á¢ú ±øÄ¡õ «ôÒÈõ ¾¡ý.)

þýÛõ ÅÇ÷¢ø ¬Âõ ±ýÀÐ ÜðÎì ÌÎõÀò¨¾ì ÌÈ¢òÐ ¬Âõ>¬öõ>¬õ ±ýÚ ¬ÉÐ. ¬¨Á ¯¨¼Åý ¬Ó¨¼Â¡ý; ¬¨Á ¯¨¼Â­Åû ¬Ó¨¼Â¡û. «Ð ¾¢Ã¢óÐ ¬õÀ¨¼Â¡ý, ¬õÀ¨¼Â¡û, ¬õÀ¢¨Ç¡ý, ¬õÀ¢¨Ç¡û ±ý¦ÈøÄ¡õ ¬Â¢üÚ. ²ü¸É§Å ÀÄÓ¨È ¿¡ý ÜÈ¢ÂÐ §À¡Ä C1V1 (C ±ýÀÐ ¦Áö, V ±ýÀÐ ¯Â¢÷) ±ýÚ ¦¾¡¼Õõ ÀÄ ¦º¡ü¸û C1v1C2v2 ±ýÚ Å¢Ã¢ÅÐ ¾Á¢Æ¢ø ¦ÀâÐõ ¯ñÎ. ¦ÀÕõÀ¡Öõ C2 ±ýÀÐ ¸¸ÃÁ¡¸§Å «§¾ ¦À¡ØÐ †¸Ãõ §À¡Ä§Å ´Ä¢ì¸ô Àξø ¯ñÎ. ¬õ>«¸õ ±ýÚ Å¢Ã¢Ôõ; ÌÎõÀõ, ţΠ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. ¬Ó¨¼Â¡ý «¸Ó¨¼Â¡ý ¬Å¡ý; ¬Ó¨¼Â¡û «¸Ó¨¼Â¡û ¬Å¡û.

þý¦É¡Õ Ũ¸Â¢ø ¬öò¾¢>¬ö>¬îº¢ ¬Å¡û. þÅû ÜðÎì ÌÎõÀò¾¢ý ¾¨ÄÅ¢. ¦¿ø¨Äô Àì¸õ ¾ó¨¾Â¢ý ¾¡ö ¬îº¢ ±Éô ÀÎÅ¡û. ±í¸û Àì¸õ Å£ðÊý ¾¨ÄÅ¢Ôõ, «ì¨¸Ôõ ¬îº¢ ±Éô ÀÎÅ¡÷¸û. "¦Àâ¡ ¦º¡ýÉ¡î ¦º¡ýÉо¡ý; «ôÀÈõ ±ýÉ §ÀîÍô §Àº¢¸¢ðÎ, Å¡ Òû¦Ç, §À¡¸Ä¡õ"

¬Âò¾¢ý ¾¨ÄÅý ¬öò¾ý ±ýÚõ «¨Æì¸ô Àð¼¡ý. ¬öò¾ý>«öò¾ý>«ò¾ý = ¾ó¨¾. "À¢ò¾¡! À¢¨ÈÝÊ! ¦ÀÕÁ¡§É! «ÕÇ¡Ç¡ " ±ýÈ §¾Å¡Ãô À¡¼Ä¢ø Íó¾Ã÷ "«ò¾¡" ±ýÚõ «¨Æ츢ȡ÷ «øÄÅ¡? «Åý þ­¨ÈÅý, ¾¨ÄÅý ±ýÀ¾¡ø þ­ó¾ô ¦ÀÂ÷ ÅÕ¸¢ÈÐ.

«õÁõÁ¡, «ôÀôÀ¡, «õÁôÀ¡, «ôÀõÁ¡, «ò¾¡îº¢ - ­ôÀÊô ÀÄŨ¸Â¢ø ¯È׸û ¦ÀÕÌõ.

þÉ¢ «öÂý ±ýÈ ¦º¡ø§Ä ¸Ãõ>»¸Ãõ> ¿¸Ãõ ±ýÈ §À¡Ä¢Â¢ø «öÂý>«ö»ý>«ö¿ý ±ýÚ ¬Ìõ. «ö¿ý §ÁÖõ ¾¢Ã¢óÐ «ö½ý>«ñ½ý ±ýÚ ¬Ìõ.

þ§¾ §À¡Ä «ö¨Â>«ö¨»>«öí¨¹>«í¨¹>«í¨¸>«ì¨¸ ±ýÚ Å¢Ã¢Ôõ. ­ý¦É¡Õ Å¢¾Á¡¸ «ö¨Â> «ö¨»> «ö¨¿> «ó¨¿> «ý¨É ±ýÚõ ŢâÔõ.

«í¨¸ ±ýÀРӾĢø ¾¡öìÌõ À¢ý «ì¨¸ìÌõ Åó¾ ¦ÀÂ÷¸û. ­¾ý ¸¡Ã½Á¡¸§Å Á¸ý ±ýÀ¾üÌõ «í¸ý, «í¸Âý, «í¸ºý ±ýÈ ¦ÀÂ÷¸û ²üÀð¼É. «í¸ô À¡ø ±ýÀÐ ¾¡Â¢ý Ó¨Äô À¡ø; «í¸ Á½¢ ±ýÀÐ Á¸ÙìÌì ¦¸¡ÎìÌõ º£÷ô ¦À¡Õû. «í¸Ä¢ = Ó¨Ä; «í¸¢¨¸ = ӨĨ ãÊô ¦Àñ¸û «½¢Ôõ ¸îÍ; (­ó¾ì ¸¡Äò¾¢ø ­ÃŢ쨸). ¬ñ Á¡÷¨À ãÊ «½¢Ôõ ¯¨¼ìÌ «í¸¢ ±ýÚ ¦ÀÂ÷. «í¸Ä¢í¸õ = ţà º¢Å ¦¿È¢Â¢É÷ Á¡÷À¢ø «½¢Ôõ ­Ä¢í¸õ. «í¸¡Ã¸õ ±ýÈ¡ø ¯¼õÀ¢ý §Á§Ä âÍõ Å¡º¨Éô ¦À¡Õû. «í¸¡Ã¸ý = ¯¼õÀ¢ý §Áø ¦ºùÅñ½õ âº¢ì ¦¸¡ñ¼ ¦ºùÅ¡öì §¸¡û. «í¸¨É ±ýÈ¡§Ä ¦Àñ ±ýÚ¾¡ý ¦À¡Õû. «í¸¢Âõ>«í¸¢ºõ ±ýÀÐ ¾¡öÅÆ¢ ÅÕõ ÁÃÒ, À¡¸õ. (¸ýÉý - ¸÷½ý - ¾¡öÅÆ¢ ÁðΧÁ «È¢ó¾Åý. (᧾Âý «øÄÅ¡; À¢ýÉ¡Ç¢ø Ìó§¾ÂÉ¡¸î ¦º¡øÄ ÓÊ¡Áü ¸¢¼ó¾¡§É?) «¾É¡ø «Åý «í¸ý. þó¾ «í¸Û측¸§Å ¸¡ð¨¼ «Æ¢òÐ ÐâÂý ¯Õš츢 ¿¡Î «í¸ ¿¡Î.

«í¨¸ ±ýÈ ¦º¡ø ¾¡¨Âì ÌÈ¢òÐ ­Õó¾¡ø ¾¡ý §Á§Ä ÜȢ ¦À¡Õû¸û ±øÄ¡ÅüÈ¢üÌõ µ÷ ´ÕíÌ þÕìÌõ.

«í¸¡ò¾ø = Å¡ö ­¾ú¸¨Ç §Á§Ä ¦¸¡ñÎ ¦ºøÖ¾ø. («ö ±ýÈ §Å§Ã¡Î §Áø ±ýÈ ¦À¡Õû ¦¾¡¼÷ÒÚŨ¾ì ¸¡½Ä¡õ. «í¸¡ò¾ø ±ýÈ ¦º¡ø§Ä¡Î «ñ½¡ò¾ø ±ýÈ ­¨½î ¦º¡ø¨Äô À¡÷ò¾¡ø ­ó¾ «ñ½¡ ±ýÀ¾üÌõ «í¸¡ ±ýÀ¾üÌõ ­ÕìÌõ ´ôÒ¨Á ÒÄôÀÎõ.

¾¡ö, ¾ó¨¾, «ñ½ý, «ì¨¸ ±É þÕìÌõ ¯È׸û ´Õ ¸¡Äò¾¢ø ÌÆõÀ¢ò¾¡ý ¸¢¼ó¾É. þÐ ¸ðÎôÀ¡¼üÈ ¿¢¨Ä¢ø ÌÓ¸¡Âõ ӾĢø ±Øó¾ ¿¢¨Ä¨Âì ÌÈ¢ìÌõ. ­Ð ²§¾¡ ±¸¢ô¾¢Â «Ãº ÌÎõÀõ ÁðÎõ ¦ºö¾¾øÄ. Á¡ó¾ ÅÃÄ¡§È ÌÆõÀ¢ò¾¡ý ¦¾¡¼í¸¢ÂÐ. ´ý¦È¡ýÈ¡¸ Á¡ó¾ ÅÃÄ¡üÈ¢ý ÅÇ÷¢ø ¸ðÎôÀ¡Î¸û ²üÀÎò¾ô Àð¼É. ӾĢø ´Õ ¾¨ÄÓ¨È ­ý¦É¡Õ ¾¨ÄӨȧ¡Πܼì ܼ¡Ð (Ò½Ãì ܼ¡Ð) ±ýÈ ¸ðÎôÀ¡Î ±Øó¾Ð; «ÎòÐ ´Õ¾¡ö Å¢üÚô À¢û¨Ç¸û ܼì ܼ¡Ð ±ýÈ ¸ðÎôÀ¡Î. ãýȡž¡ö ¾ó¨¾Â¢ý «ñ½ý, ¾õÀ¢ ¬¸¢ÂÅ÷¸Ç¢ý Á츧ǡΠܼì ܼ¡Ð ±ýÈ ¸ðÎôÀ¡Î. ­§¾ §À¡Ä ¾¡Ô¨¼Â «ì¨¸, ¾í¨¸Â¢ý Á츧ǡΠܼì ܼ¡Ð ±ýÈ ¸ðÎôÀ¡Î.

þýÛõ ´Õ ¸ð¼õ §À¡ö Á¡Áý Áì¸û, «ò¨¾ Áì¸û ¬¸¢§Â¡§Ã¡Î ܼì ܼ¡Ð ±ýÈ ¸ðÎôÀ¡Î, ­ó¾ì ¸¡Äò¾¢ø ÁÕòÐÅì ¸¡Ã½õ ¸¡ðÊ ´Õ ¸ÕòÐ ¦ÅÌÅ¡¸ ÅÄ¢ÔÚò¾ô ÀðÎ ÅÕ¸¢ÈÐ. (¾Á¢Æ÷¸û, µÃÇ× ¬ó¾¢Ã÷¸û þôÀÊ Á¡Áý Áì¸û, «ò¨¾ Áì¸¨Ç Á½ôÀ¨¾ þýÛõ ̨ÈòÐì ¦¸¡ñ¼¾¡öò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.) ±í¸¢ÕóÐ ±í§¸ ÅÇ÷ó¾¢Õ츢§È¡õ À¡Õí¸û?

þÉ¢ «õÁ¡Å¢ý ¯¼ýÀ¢Èó¾¡ý «õÁ¡Åý ¬É¡ý. «¨¾ «õÁ¡ý ±ýÚõ Á¡Áý ±ýÚõ ¾¢Ã¢òÐ ÅÆí̸¢§È¡õ. «ò¾É¢ý ¯¼ýÀ¢Èó¾¡û «ò¨¾ ¬É¡û.

þý¦É¡Õ ¦ºö¾¢:, "«ò¾ý" ±ýÈ ¦º¡ø "«ó¾ý" ±ýÚõ ¾¢Ã¢ó¾¢Õì¸ §ÅñÎõ ±ýÚ ÒÄÅ÷ þá. þ­ÇíÌÁÃý ¾ý "¾Á¢ú ÅÇõ - ¦º¡ø " ±ýÈ ¦À¡ò¾¸ò¾¢ø ±ÎòШÃôÀ¡÷. «Ð Á¢¸×õ ²üÚì ¦¸¡ûÇì Üʧ¾! ¯½÷× ¦ÅÇ¢ôÀ¡ðÊø ±Øõ Å¢Ç¢î ¦º¡ø ±øÄ¡§Á ¯È× «ÊôÀ¨¼Â¢§Ä§Â ±Ø¸¢ýÈÉ, "«õÁ¡Ê§Â¡, «ö§Â¡, «î§º¡, «ý§É¡, ¬ò§¾¡, «ì¸ì§¸¡, «ñ½¡§Å¡" ±ý¦ÈøÄ¡õ ±Øõ §À¡Ð ­§¾ §À¡ø ±Øõ "«ó§¾¡" ±ýÈ ¦º¡ø ¡¨Ãì ÌÈ¢ì¸ ÓÊÔõ ±ýÚ °¸¢òÐô À¡÷ò¾¡ø «Ð «ó¨¾ ±ýÈ ¦º¡ø¨Äò¾¡§É ÌÈ¢ì¸ ÓÊÔõ ±ýÚ ÒâÔõ. ­¾üÌ «¨½Â¡¸ º¡ò¾ó¨¾, ¦¸¡üÈó¨¾, ¸£Ãó¨¾, ±Â¢Éó¨¾, ¬ó¨¾, âó¨¾ ±ýÈ ºí¸ ¸¡Äô ÒÄÅ÷¸Ç¢ý ¦À¨à ±ÎòÐì ÜÈ¢ «Åü¨Èò ¾ó¨¾Â¢ø þÕóÐ Ò½÷ò¾¢ô ¦ÀÚŨ¾ì ¸¡ðÊÖõ «ó¨¾Â¢ø ­ÕóÐ ¦ÀÚÅÐ Á¢¸ ±Ç¢Ð ±ýÚ ­ÇíÌÁÃý ¿¢Ú×Å¡÷.

«ó¾ý ±ýÈ ¦À¡Õû ¦ÀâÂÅý, Ó¾øÅý ±ýÈ ¦À¡ÕÇ¢ø þý¦É¡Õ «ý ®Ú ¦ÀüÚ «ó¾Éý>«ó¾½ý ±ýÚ ¬Ìõ. «öÂý ±ýÈ¡Öõ «§¾ ¦À¡Õû ¾¡ý. þý¨ÈìÌ þ¨¾î º¡¾¢ô ¦À¡ÕÇ¢ø ¦º¡ýÉ¡Öõ þ¾ý À¢ÈôÒ ¯È×Ó¨Èô ¦ÀÂ÷¸Ç¢ø þÕ츢ÈÐ. þý¨ÈÂô ¦ÀÕÁ¡É÷¸û ÀüÈ¢ ±Ø¾¢É¡ø «Å÷¸Ùõ ÒâóÐ ¦¸¡ûÇ Á¡ð§¼ý ±ý¸¢È¡÷¸û. ÁüÈÅ÷¸Ùõ ÒâóÐ ¦¸¡ûÇ Á¡ð§¼ý ±ý¸¢È¡÷¸û. ¯½÷׸û ¦¸¡ôÒÇ¢ìÌõ §À¡Ð, ±Ø¾ò¾¡ý ¿ÁìÌò ¾Âì¸Á¡ö þÕ츢ÈÐ.

þÉ¢ ¾õ ±ýÛõ ¾ý¨Áô ¦À¡Õ§Ç¡Î §º÷óÐ þó¾ ¯È׸û ÒÐÅÊÅõ ¦¸¡ûÙõ

¾õ + ¬ö > ¾õÁ¡ö> ¾ùÅ¡ö>¾ù¨Å (Á¸Ã, ŸÃô §À¡Ä¢)>¾ö¨Â (ŸÃ, ¸Ãô §À¡Ä¢)>¾¡ö
¾õ + «ôÀý> ¾ÁôÀý > ¾¸ôÀý
¾õ + «ó¨¾ ¾õÁó¨¾>¾ùÅó¨¾>¾öÂó¨¾>¾öó¨¾>¾ó¨¾
¾õ+ «öÂý >¾ÁöÂý>¾¨ÁÂý
¾õ + «ì¨¸ >¾Á쨸
¾õ+ «í¨¸ > ¾Áí¨¸>¾Åí¨¸>¾öí¨¸>¾í¨¸

¿õ + «í¨¸ >¿í¨¸ = Áí¨¸ (¿¸Ã, Á¸Ãô §À¡Ä¢; ÑôÀÐ - ÓôÀÐ, ÑÉ¢ - ÓÉ¢ ±ýÈ §À¡Ä¢¸¨Ç §¿¡ìÌí¸û)

¾õ+À¢ý >¾õÀ¢ý>¾õÀ¢
¿õ+À¢ý> ¿õÀ¢ý>¿õÀ¢

«õÁ¡¨Å ´ðÊ «õÁ¡Åý Åó¾Ð §À¡Ä, «(ö)ò¨¾¨Â ´ðÊ Åó¾ ¦º¡ø «(ö)ò¨¾Âý. À¢ýÉÇ¢ø «Ð «öò¾¡ý>«ò¾¡ý ±ýȡ¢üÚ. þýÚ º¢Ä Åð¼¡Ãí¸Ç¢ø þÐ «ò¨¾Â¢ý Á¸¨Éì ÌȢ츢ÈÐ.

º¢üÈôÀý, ¦ÀâÂôÀý, º¢ýÉõÁ¡, ¦ÀâÂõÁ¡ §À¡ýȨŠ±Øó¾ ¸¡Ã½õ ¦ÅûÇ¢¨¼ Á¨Ä. ¿¡ý ¦º¡øÄ §Åñ¼¡õ.

¦¸¡ñ¼Åý ¦¸¡Ø¿ý. ¦¸¡ûÙ¾ø ±ýÈ Å¢¨É ¦¸¡Ø¾ø ±ýÚ ¬Ìõ. ¦¸¡Ø¿Åý ±ýÈ ¦º¡ø þÂøÀ¡¸ò ¾¢Ã¢óÐ ¸½Åý ¬Ìõ. Á¨É¡û, þøÄ¡û ±ýÈ ¦º¡ü¸û ÀüÈ¢ ¿¡ý ¦º¡øÄ §Åñ¼¡õ. ¦¸¡Ø¿É¢ý ¯¼ýÀ¢Èó¾¡ý ¦¸¡Øó¾ý. ¦¸¡Ø¿É¢ý ¯¼ýÀ¢Èó¾¡û ¦¸¡Øó¾¢Â¡û

ÒÌó¾ ­¼ò¾¢ø ¦ÀñÏìÌò Ш½ ¬òШ½Â¡û (¬õ = «¸õ)>»¡òШ½Â¡û>¿¡òШ½Â¡û>¿¡òн¡û

þ§¾ §À¡Ä ÓÂò¾ø ±ýÀÐ ¾Ø×¾ø, Ò½Õ¾ø. "§À¡ÆôÀ¼¡ ÓÂìÌ - À¢Ã¢ì¸ ÓÊ¡¾ ¾ØÅø/Ò½÷" ±ýÀ¡÷ ÅûÙÅ÷. ÓÂì¸ì ÜÊÂÅý ÓÂò¾ý>ÓÂò¾Éý>¨ÁòÐÉý>ÁÉý. "¨ÁòÐÉý ¿õÀ¢ ÁÐݾÉý ÅóÐ" ±ýÚ ¸É¡ì ¸ñ¼¨¾ ¬ñ¼¡û À¡Î¸¢È¡§Ç «Ð þôÀÊò¾¡ý. ÓÂòÐÉõ>¨ÁÐÉõ. ¨ÁòÐÉõ ±ýÀÐ Ò½÷îº¢ì¸¡É ¦º¡ø. Í ¨ÁÐÉõ (masterbation) ±ýÚ º¢Ä ±Øò¾¡Ç÷¸û ż¦Á¡Æ¢Â¡ö ¿¢¨ÉòÐì ¦¸¡ñÎ ±Øи¢È¡÷¸û. «Ð ¾¢Ã¢óÐ ¸¢¼ìÌõ ¾Á¢ú ¾¡ý. Í ±ýÈ Óý¦É¡ðÎ ÀüÈ¢ þý¦É¡Õ þ¼ò¾¢ø ±ØЧÅý.

ÜðÎì ÌÎõÀò¾¨ÄÅý ÓÐ ¸¢ÆÁ¡¸ô §À¡É À¢ýÉ¡ø «Åý Àð¼Åý ¬¸¢È¡ý. Àð¼ÁÃõ, Àð¼È¢×, ÀðÎ츢¼ôÀ¡ý ±ýÈ ¦º¡øġ𺢸¨Çô À¡÷ò¾¡ø, Àð¼Åý À¡ð¼ý ¬É ¸¨¾ ÒÄôÀÎõ.

¾ó¨¾ ¾¡¨¾Â¡¸¢, «ÅÛ¨¼Â ¾¡¨¾ ¾¡ò¾ý ¬¸¢È¡ý. (þÐ «ôÀôÀý §À¡ýÈ ¦º¡øġ𺢠¾¡ý.)

À¡ð¼É¢ý ¾ó¨¾ âð¼ý ±ýÀÐ ±Ð¨¸Â¢ø Åó¾ ¦º¡ø. âðÎ ±ýÀÐ ´ÕŨ¸ À¢½¢ôÒ; §ÁÖõ ¦À¡Õò¾¢ì ÜÚ¾ø. ­íÌ ¯È×ô À¢½¢ô¨Àì ÌȢ츢ȧ¾¡, ±ýɧš?

«ÅÛìÌõ ¾ó¨¾ ¿õ «È¢×ìÌô ÒÄôÀ¼¡Áø §ºö¨Á¢ø þ­ÕôÀ¾¡ø «Åý §º§Â¡ý.

Á¡ ±ýÈ ¦º¡øÄ¢ý Å¡Ã¢Í¸Ç¡É Á¡ý (¦ÀÕÁ¡ý), Á¡û (§ÅñÁ¡û) ±ýÀ¨Å, À¢ý §Á§Ä ¦º¡ýÉÐ §À¡Ä Á¸ý, Á¸û ±ýÚ ´Ä¢ò¾¢Ã¢× ¦¸¡ñ¼É. ¦¿Êø ÌÈ¢ø ¬¸¢î º¢Ä ¦À¡ØÐ ¸¸Ãò¨¾ ¯¼ý ¦¸¡ñÎÅÕÅÐ ¾Á¢Æ÷¸Ç¢ý ­Âü¨¸. §Åí¸¼Åý ­ý¨ÈÂò ¾Á¢Æ÷ š¢ø ¦Åí¸¼ý ±ýÚõ ÀÖì¸ô Àθ¢È¡§É; §¸¡¨¼ì ¸¡Éø ¦¸¡¨¼ì ¸¡Éø ¬¸¢È§¾! (­¨¾ò ¾Á¢Æ÷ §Åí¸¼õ, §¸¡¨¼ ±ýÚ ºÃ¢Â¡ÉÀÊ ÀÖò¾¡ø º¢ÈôÀ¡¸ ­ÕìÌõ ±ýÀÐ ±ýÛ¨¼Â Å¢¨Æ×.)

Á¸ý, Á¸û ÅÆ¢ô ¦ÀÕ̸¢È Áì¸û ¦º¡ò¾¢ý ¦ÅÇ¢ôÀ¡¼¡¸ À¡ð¼É¢ý ¦À¨Ãì ¦¸¡ñÎ ¦ÀÂÃý, ¦ÀÂ÷ò¾¢ ¬Â¢É÷.

¿õ ¦º¡òÐìÌ ¯Ã¢¨Á¡ÉÅý ¦¸¡ûÙô ¦ÀÂÃý. ¦¸¡ûÙ¾ø = ¯Ã¢¨Á ¦¸¡ñ¼¡Î¾ø. ­§¾ ¦À¡ÕÇ¢ø ¾¨Ä¸£Æ¡¸ âð¼ý ¦¸¡ûÙô À¡ð¼ý ¬É¡ý. «¾¡ÅÐ «Åý ¦º¡òÐìÌ ¿¡õ ¯Ã¢¨Á ¦¸¡ñ¼¡Î¸¢§È¡õ.

±ûÙô ¦ÀÂÃý. «Åý ¿¡ýÌ ¾¨ÄÓ¨È ¾ûÇ¢ô §À¡Ìõ §À¡Ð «ÅÛìÌî ¦º¡òÐ ±ûÇÇ× ¸¢¨¼ò¾¡§Ä Å¢ÂôÒò¾¡ý. «Åý «ùÅÇ× ¾ûÇ¢ÂÅý. ­Õó¾¡Öõ ¦ÀÂÃý. ­§¾ §À¡Äò¾¡ý §º§Â¡ý ±ûÙô À¡ð¼ý ¬¸¢È¡ý.

±øÄ¡§Á ¸¨¼º¢Â¢ø ¦º¡òÐò ¾¡í¸!

¬¸

§º§Â¡ý
âð¼ý
À¡ð¼ý
¾ó¨¾
Á¸ý
¦ÀÂÃý
¦¸¡ûÙô ¦ÀÂÃý
±ûÙô ¦ÀÂÃý

±É ±ðÎò ¾¨ÄӨȸÙìÌ ¾Á¢Æ÷¸û ¯È׸û ¿£Ùõ. «¾É¡ø ¾¡ý ¦ºøÅõ ÜÊÂŨÉô À¡÷òÐ, "«ÅÛìÌ ­Õì¸¢È ¦º¡òÐìÌ ±ðÎò ¾¨ÄÓ¨ÈìÌ ÅÕõ, «ôÀ¡" ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

¦À¡Ðר¼¨Áì ¦¸¡û¨¸Â¢ý Óý§É¡Ê¸Ç¢ø ´ÕÅÃ¡É À¢Ã¼Ã¢ì ²ïºøÍ "ÌÎõÀõ, ¾É¢î ¦º¡òÐ, «ÃÍ ¬¸¢ÂÅüÈ¢ý §¾¡üÈõ" ±ýÈ áÄ¢ø "¾Á¢Æ÷¸û ¾í¸Ç¢ý ±ðÎò ¾¨ÄÓ¨È ¯È׸¨Ç ÌÆôÀõ þøÄ¡Áø Å¢ÅÃ¢ì¸ ÓÊÔõ ¿¢¨Ä¢ø ­Õ츢ȡ÷¸û" ±ýÚõ, "­Ð §À¡Ä §ÅÚ Â¡Õõ ¦ºöž¢ø¨Ä" ±ýÚõ Å¢ÂóÐ ÜÚÅ¡÷.

þó¾ò ¦¾Ç¢× ²üÀ¼ô ÀÄ áüÈ¡ñθû ¬¸¢Â¢Õì¸ §ÅñÎõ. «¾É¡ø ¾¡ý, ÌÁâ¿¡ð¨¼Ôõ, À·ÚÇ¢ ¬ü¨ÈÔõ þÕó¾¢Õì¸ §ÅñÎõ ±ýÚ ¿õÒ¸¢§È¡õ. Å¡úóÐ «Æ¢ó¾ ­Éõ ¾¡ý ­ôÀÊ ¯È׸¨Ç Ũ¸ô ÀÎò¾ ÓÊÔõ, þø¨Ä¡?

"«Å÷ ¡ÕýÛ §¸ìÌÈ£í¸Ç¡? «Å÷ ±ý º¢ýÉ Á¡ÁÉ¡÷ ¦¸¡Øó¾¢Â¡×ìÌ «ñ½ý ÁÕÁ¸ý" ­Ð ¿ÁìÌ ±Ç¢Ð. ±í§¸ ¬í¸¢Äò¾¢ø ¦º¡øÄ¢ô À¡Õí¸§Çý?

¿ñÀ÷ ´ÕÅ÷ §¸ð¼¡÷:" ¯í¸ «ôÀ¡×ìÌ ¿£í¸ ±ò¾É¡ÅÐ Á¸ý?" ¬í¸¢Äò¾¢ø ­¨¾î ÍüÈ¢ ŨÇòÐò ¾¡ý ÜÈÓÊÔõ. (þÐ §À¡Äò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓÊ¡¾ ¬í¸¢Äî ¦º¡ü¦È¡¼÷¸Ùõ ¯ûÇÉ.) ´ù¦Å¡Õ ¦Á¡Æ¢Ôõ ÀñÀ¡Îõ ´ù¦Å¡Õ ¾É¢ò¾ý¨Á ¦¸¡ñ¼¨Å. ´ýÈ¢ø ­ÕóÐ ´ý¨È ¯ÕÁ¡üÚÅÐ ±ýÀÐ ¸¢ð¼ò¾ð¼ò¾¡ý ÓÊÔõ.

«ôÀ ÅÃðÎí¸Ç¡! þ§¾¡¼ ŨÄôÀ¾¢×§Ä ¿¡û¸¡ð¼î ¦º¡øÄ¢ ´Õ Å¡Ãõ ¬Â¢ô §À¡îÍ. þÉ¢ §Å§È ¡§Ã¡ ´Õò¾÷ ÅóÐ ¿¡û ¸¡ðÎÅ¡÷. ±ÉìÌî ¦º¡øÄ¢ì ¦¸¡û¸¢È §¿Ãõ Åó¾¡îÍ. ²§¾¡ ´ÕÅ¡Ãõ ͨÅÂ¡î ¦º¡ý§ÉýÛ ¦¿ÉîÍ츢§Èý. ¾ôÒò ¾ÅÚ þÕóÐ §À¡É¡ô §À¡ÌÐýÛ Å¢ðÎÕí¸. þý§É¡Õ ¿¡û À¡÷ô§À¡õ. ±øÄ¡Õõ ¿øġ¢Õí¸. þý¨ÉìÌî º¢ò¾¢¨Ã 5 ¾¢í¸û ¸¢Æ¨Á ¬Â¢ø ¿¡û. ̼ó¨¾î º¡Ãí¸À¡½¢ §¸¡Â¢ø ¬Ã¡ÅÓ¾ý §¾÷.

"¬Ã¡ «Ó§¾! «Ê§Âý ¯¼Äõ
¿¢ýÀ¡ø «ýÀ¡§Â,
¿£Ã¡ö «¨ÄóÐ ¸¨Ã ×ÕìÌ
¸¢ýÈ ¦¿ÎÁ¡§Ä,
º£Ã¡÷ ¦ºó¦¿ø ¸Åâ Å£Íõ
¦ºØ¿£÷ ¾¢Õì̼ó¨¾
²Ã¡÷ §¸¡Äõ ¾¢¸Æì ¸¢¼ó¾¡ö!
¸ñ§¼ý ±õÁ¡§É!"

- ¿õÁ¡úÅ¡÷, ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅø - 3194

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

ROSAVASANTH said...

ஒரு வாரம் மிகவும் பயனுள்ள வகையில் திருவாரமாய் கழிந்தது. மிகவும் நன்றி. நாள் காட்டாத மற்ற நேரங்களிலும் தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Chandravathanaa said...

இராம.கி அவர்களுக்கு

உங்களது மற்றைய பதிவுகள் போலவே இதுவும்
பத்திரப் படுத்தி வைத்திருக்க வேண்டிய நல்ல பதிவு.
நிறைய விடயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

SnackDragon said...

unicode
மறுமொழியிடவில்லையென்றாலும் தொடர்ந்து வாசித்து வந்தேன். நல்ல பதிவுகள், நிறைய தெரிந்து கொள்ள இருக்கிறது. நன்றி. தொடர்ந்து வாசிப்பேன்.

Kasi Arumugam said...

மீண்டும் படிக்கப் பத்திரப்படுத்தவேண்டிய பதிவுகள். நன்றி. அருமையான வாரம். சிரமம் பாராமல் நிறைய எழுதியதற்கு தனியாக நன்றி இராம. கி. அவர்களே.

இராதாகிருஷ்ணன் said...

சிறந்ததொரு வாரம்! வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நட்சத்திரப் பதிவுகளுக்கு மிக்க நன்றி!

வசந்தன்(Vasanthan) said...

அன்பு ஐயா!
நன்றி. இந்தக் கிழமையை அருமையாக நடத்திச் சென்றீர்கள்.
"உ"கர சுட்டெழுத்தை ஈழத்தமிழர்கள்தான் அதிகம் பாவிக்கிறார்கள். அதே போல் "ஏ"காரத்தை வினாவெழுத்தாக மொழியின் இறுதியில் பாவிப்பவர்களும் ஈழத்தமிழர்களே என்று நினைக்கிறேன். எடுத்துக்காட்டு: வருவியே?, போவியே?, சாப்பிட்டியே?
அதேபோல் "ஓ"காரமும் அவர்களிடமே அதிகம் வினாவெழுத்தாகப் பாவனையிலிருக்கிறது போலும். எடுத்துக்காட்டு: வருவியோ?, போவியோ? சாப்பிட்டியோ?

சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி. "சுத்தம்" என்பது தமிழ்ச்சொல்லா? முனைவர் கு.அரசேந்திரன் அது தமிழ்தான் எனச்சொன்னார். எப்படி விளக்கினார் என மறந்துவிட்டேன். ஆனால் இச்சொல் தமிழன்று என்றே பல இடங்களில் கருதப்படுகிறது. உங்கள் விளக்கம் என்ன?

Anonymous said...

இதைப் படிக்கையில் தோன்றிய சிறு சிந்தனை... :

சேயானை ஓட்டன் என்றும் சொல்வார்கள்.
முருகன் பாண்டியரசனாக குமரிக்கண்டத்தில் வாழ்ந்தது உண்மையானால்,
அவனிறந்து பல்லாண்டுகளின் பின்னர் அவனை நடுகற் றெய்வமாக வணங்கியும்
ஓட்டன் அல்லது சேயான் என்றும் அவன் கொள்ளு/எள்ளுப் பெயரன்கள்
அழைத்து வந்ததும், பிற்பாடு அவன் வழித்தோன்றல்கள் சேயோன் என்னும்
பெயரில் தங்கள் ஓட்டனை வணங்கியதாகவும் கொள்ளலாம்.
அதுவே சேயோன் என்று அவன் பெயராக நிலைத்துவிட்டிருக்கலாம்.

நிகில்.