Friday, April 15, 2005

மலரும் நினைவுகள்

எனக்குள் மலரும் நினைவுகள் ஏற்படுகின்றன.

1969-70 ஆகிய இரண்டாண்டுகளில் 10, 15 பேர் எங்கள் கல்லூரியில் குமுக நற்பணி மன்றம் ஒன்றில் மிகுந்த ஈடுபாட்டோ டு இருந்தோம். எங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து கோவை-அவினாசி சாலையில் சிறிது தூரம் போனால் சித்ரா என்ற சவளி ஆராய்ச்சி நிலையம் வரும். அது முடிந்தவுடன், இடப்பக்கம் திரும்பினால், 4, 5 கிலோமீட்டர்களில் தொட்டிப் பாளையம் என்ற சிற்றூர் வரும். அது ஒரு வளர்ச்சியடையாத ஆனால் அந்தப்பக்கத்து வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இடம் கொண்ட ஊர்.

அந்த ஊர் நெடுநாள் இரண்டு பட்டுக் கிடந்தது. ஒரு பக்கம் மேல் சாதியினர்; இன்னொரு பக்கம் மிகவும் தாழ்ந்த சாதியினர். நாங்கள் குமுக நற்பணியாக, முதலில் ஊருக்கு உள்வரும் சாலையை ஒழுங்கு படுத்தினோம். ஊர் ஏற்றுக் கொண்டது. இரண்டு பக்கத்து வீடுகளுக்கும் போனோம். ஏழை மக்களுக்குப் பொத்தகங்களும் துணிமணிகளும் கொடுத்தோம்; நல்ல வரவேற்பு இருந்தது. "சரி, ஆழ்ந்த பயனுள்ள வேலையைச் செய்யலாம்" என்று பாடம் சொல்லிக் கொடுக்க விழைந்தோம்.

இரண்டு பக்கத்திற்கும் நடுவில் ஒரு கோயில், அரசமரம் எல்லாம் இருந்தது. ஊரில் பெரிய பள்ளி எதுவும் கிடையாது. தொடக்கப்பள்ளி இருந்ததா என்று இப்பொழுது நினைவில் இல்லை; பெரிய மாணவர்கள் அங்கிருந்து நடந்து பெரிய சாலைக்கு வந்து பீளமேட்டுக்கு வந்து தான் படிக்க முடியும். நாங்கள் மாலை நேரங்களில் கோயிலுக்கு முன்னால் இருக்கிற தகரக் கொட்டகையில் இருந்து பாடம் சொல்லிக் கொடுப்பது என்று முடிவு செய்தோம். முதல் வாரம் சில மாணவர்கள் மட்டும் அந்தக் கூடத்தின் உள்ளே வந்தார்கள். மற்றவர்கள் வெளியேயே நின்றார்கள்.

"ஏம்பா, வெளியிலேயே நிற்கிறீங்க; உள்ளே வாங்க!", "
பரவாயில்லீங்கண்ணா. நீங்க அங்கேருந்தே பாடம் நடத்துங்க; எங்களுக்குக் கேக்குது"

முதலில் புரியவில்லை; பின்னால் பொறி தட்டியது; கீழ்சாதி மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினோம். மெதுவாகச் செய்தி கசியத் தொடங்கியது. நாங்கள் பாடம் நடத்துகிற, கோயிலுக்கு முன்னே இருக்கிற கூடம் மேல்சாதிக்காரர் கட்டியது. அந்தக் கோயிலும் மேல்சாதிக்காரப் பெரியவரின் முன்னோர் கட்டியது. கீழ்சாதிக்காரர் கூடத்திற்குக் கீழே இருந்து மட்டுமே சாமியைக் கும்பிட்டுக் கொள்ளலாம். அதற்கு மேல் எகிறினால், வேறு கதைதான். இது போக கீழ் சாதியினருக்கு மட்டுமே ஒரு கிராமத் தெய்வக் கோயில் அவர்கள் பக்கம் இருக்கிறது. அங்கு கூடம் கிடையாது.

இந்தச் சிக்கலான நிலையில் நாங்கள் எங்கள் குமுகச் சேவையைத் தொடர வேண்டுமானால் ஒன்று நாங்கள் இரண்டாகப் பிரிந்து இந்தக் கூடத்தில் ஒரு வகுப்பும், கீழ்சாதிக்காரர்கள் இடையே இன்னொரு இடம் ஏற்பாடு செய்து வேறொரு வகுப்புமாக நடத்துவது அல்லது புதிதாக பொதுக் கூடம் அமைப்பது என்ற இரண்டில் ஒருவழியில் தான் போக முடியும்.

நேரம் கிடைக்கக் கூடிய ஆர்வலர்கள் ஒரு சிலரே இருந்ததால் இரண்டாகப் பிரிவது என்பது இயலாத காரியம். அது கொள்கையளவில் எங்களுக்கு ஒப்பாத காரியமும் கூட. பொதுக் கூடம் அமைப்பதென்றால் அனுமதி கிடைப்பதற்கே பல அலுவங்கள் (offices) ஏறி இறங்க வேண்டும்; முடிவில் செயலில் இறங்கினோம். கல்லூரியே அமர்க்களப்பட்டது; பணம் திரட்டினோம். கட்டுமானப் பொருள்களை வாங்கினோம். ஒன்றிரண்டு கொத்தனார்களை வைத்துக் கொண்டு 60, 70 மாணவர்கள், ஒரு சில ஆசிரியர்கள் சித்தாள்களாக வேலை செய்தனர். ஒரு நல்ல நாளில் புதுக் கூடம், பழைய கூடத்திற்கு அருகிலேயே எழும்பியது; ஈரம் காய்வதற்கு முன்னேயே, எங்கள் கல்லூரி முதல்வரைக் கூட்டிக் கூடத்தையும் திறந்தோம்.

அப்பாடா, நம் தொழில்நுட்ப மூளையைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு வழி கண்டோ ம் என்று பெருமை கொண்டோ ம். பாட வகுப்புகள் மீண்டும் தொடங்கின. இந்த முறை இரண்டு பக்கத்திலும் போய் பெரிதாக ஊக்குவித்து வரவித்தோம். முடிவில் எங்கள் மர மண்டைகளுக்கு அந்த ஊரின் உள் நீரோட்டம் புரியவில்லை என்றுதான் பிறகு புரிந்தது. முதலில் எல்லோரும் தலையாட்டினார்களே என்று உவகையுற்றுக் கிடந்தோம் அல்லவா?

இந்த முறை, முதல் நாள் பாடத்திற்கு எல்லோரும் சேர்ந்துதான் இருந்தனர். இரண்டாம் நாள் ஆயிற்று. நன்றாகப் படிக்கிற கீழ் சாதிப்பையன் வரவில்லை;

"என்னடா, ஆச்சு அவனுக்கு,"
"தெரியலை, சார்"

மூன்றாம் நாள் இன்னும் இருவர் குறைந்தார்கள்; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக குறைந்து கொண்டே வந்தது. முடிவில் கீழ்சாதிக்காரர்களிடம் என்னவென்று கேட்க முற்பட்டோ ம். பல வற்புறுத்தலுக்குப் பின் செய்தி கசிந்தது. பெரியதனக்காரரும், அவர் சாதியினரும் புதிய கூடத்திற்குள்ளும் தாழ்ந்தவர்கள் வரக்கூடாது என்று ஒரு மிரட்டலுடன் கூறியிருக்கிறார்கள்.

கேட்டவுடன் எங்களுக்கு கோபம் கொப்புளித்தது. "ஏற்கனவே நடந்த சாதிக்கொடுமையே தவறு; அதைக் கேட்கப்போனால் வந்த இடத்தில் அரசியலாகிவிடும். நாம் கல்லூரி மாணவர்கள், செய்யவந்த வேலை வேறு" என்ற எண்ணத்தில் புதிய கூடம் எழுப்பினால், நாம் எழுப்பிய இந்தக் கூடத்திற்கே இவர்கள் சொந்தம் கொண்டாடி கீழ்ச்சாதியினரை விலக்குகிறார்களே; இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று எண்ணிப் போராட்டத்தைத் துவக்க வேண்டியது தான் என்று கீழ்ச்சாதியினரிடம் பேசத் தொடங்கினோம். அப்பொழுதுதான் அவர்கள் ஒவ்வொருவராக தயங்கி விலகத் தொடங்கினார்கள்.

"வேண்டாம் தம்பிகளா! நீங்க பாட்டுக்கச் சொல்லிட்டுப் போயிடுவீங்க; படப் போறது நாங்க; பேசாமெ விட்டுடுங்க. எங்க புள்ளைங்க படிக்கிற படி படிக்கட்டும்"

"இல்லைங்கய்யா! ஏன் இப்படிப் போராடுறதுக்குத் தயங்குறிங்க, நாங்கள்லாம் இருக்கோம். ரெண்டுலே ஒண்ணு பார்த்திரலாம்".

பல நேர அழுத்தத்திற்குப் பின், 1930 களை ஒட்டிய முன் காலக் கதை ஒன்று வெளிவந்தது.

ஊரில் பெரியதனக் காரர்களின் பக்கத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு பெரிய ஆழ்கிணறு இருக்கிறது. (இம்மாதிரிக் கிணறுகளை கோவைப் பக்கம் சேர்ந்தவர்கள் பார்த்திருக்கலாம்.) தாழ்ந்த சாதியினர் பக்கம் ஒரு கிணறும் கிடையாது. அப்படித் தோண்டுவதும் பெருஞ் செலவு கொண்டது. அவர்களால் முடியாது. எனவே இவர்கள் சிறிது தொலைவு போய் ஆட்கள் அதிகம் இல்லாத பொதுப் பகுதியில் தான் கொண்டு வர முடியும். இப்படியே தான் காலா காலத்திற்கும் நடந்து வந்திருக்கிறது. பின் ஒரு பொழுது பஞ்ச காலம் வந்திருக்கிறது. இந்தப் பக்கம் ஊருக்கு வெளியில் இருந்த ஆழமில்லாத கிணற்றில் தண்ணீர் வற்றியிருக்கிறது. இனி தண்ணீர் வேண்டும் என்றால் இன்னும் பல தூரம் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ஆடு மாடுகள் மேய்க்கிற ஒரு கீழ்ச் சாதிப் பையன் தனித்துப் போன விலங்கை விரட்டிக் கொண்டு வந்தவன் தாகம் பொறுக்காமல், பெரிய தனக்காரர் வீட்டுக் கிணற்றுக்குள் இறங்கித் தண்ணீர் குடித்திருக்கிறான். இதை யாரோ போய்ப் பார்த்து பெரிய தனக் காரரிடம் சொல்ல அங்கிருந்து ஆள் அம்பு எல்லாம் சீறிக் கொண்டு வந்து, இந்தப் பையனை கண்மண் பார்க்காமல் நையப் புடைத்து, பையன் ஓவென்று அலறிக் குரல் கொடுக்க, முடிவில் அவனைக் கொண்டு வந்து இந்தக் கோயில் முன்பு போட்டு, பின் இரு பக்கத்தாரும் கூடிக் கொந்தளிக்க, நாயம் கேட்டவரை மேல்தனக்காரர் மிரட்டியிருக்கிறார். ரெண்டு பக்கமும் வீச்சரிவாள் எடுக்கப் போக, காவலர் படை ஓடோ டி வந்திருக்கிறது, அன்றைய நிலையில் இரு சாராரையும் விலக்கிவிட்டு ஒரு மயான அமைதி. இத்தனை அடிதடியில் திகைத்துப் போய் நொறுங்கிப் போன பையன் சன்னி கண்டவனாகி காய்ச்சல் முற்றி கடைசி வரை பிழைக்கவே இல்லை. தங்கள் பையன் இறந்தது கண்டு குமுறி மீண்டும் கொந்தளித்து, கீழ்சாதிக்காரர்கள் எழும்பிவர, கடைசியில் சட்டமும் காவலும் மேலாட்களுக்கே துணையாய் இருப்பது கண்டு சோர்ந்து போய், தளர்ந்து, துவண்டு பொறுமிய நிலைக்கு வரும் போது பத்துப் பதினைந்து நாட்கள் கழிந்திருக்கிறது. அன்றில் இருந்து ஊர் இன்னும் நீறு பூத்த நெருப்பாகப் புகைந்து கொண்டே தான் இருக்கிறது.

இதற்கு அப்புறம், 1948-ல் தெலிங்கானாப் புரட்சியின் போது பொது உடமைத் தோழர் இராமமூர்த்தி தாழ்ந்த சாதியினரின் ஆதரவோடு சில காலம் இந்த ஊர்ப்பக்கம் தலை மறைவு வாழ்க்கை நடத்திய போதும் காவலரின் கெடுபிடி கூடவே இருந்திருக்கிறது. முடிவில் ஊர் தெரிந்தோ, தெரியாமலோ சிகப்புச் சாயம் பூசிக் கொண்டது.

நாங்கள் மறுபடி மேல்சாதியினர் பக்கம் போய் "படிக்கிற பிள்ளைகளை இப்படிச் சாதி வேறுபாடு காட்டி மிரட்டிக் கொண்டிருந்தால் இனி குமுகப் பணிக்கான வேலைகளை நிறுத்திவிடுவோம்; உங்கள் பிள்ளைகளும் தான் பாதிக்கப்படுவர்" என்பதை வேகத்தோடு சொல்லி மிரட்டிய பிறகு, சிறிது காலம் சும்மா இருந்தார்கள். ஆனால் அதற்கு அப்புறம் மேல் சாதியினரின் பிள்ளைகள் குறைய ஆரம்பித்தனர். இந்த உரசல்களுக்கு நடுவில், பருவம் போய்க் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கும் தேர்வு நெருங்கியது. நாங்களும் எங்களின் தேர்வுக்காகப் படிப்பதில் மும்முரம் ஆனோம்.

இந்த நிலையில் தமிழ் மன்ற ஆண்டு விழா வந்தது.

கோவைத் தொழில்நுட்பக் கல்லூரி நுண்கலைகளுக்குப் பெயர்போனது. அப்பொழுதெல்லாம், பூ.சா.கோ. பொறியியல் கள்லூரியில் நாடகப் போட்டி நடக்கும். பெரும்பாலும் எங்கள் கல்லூரியே வெற்றிபெறும். நான் பொறியியல் படிப்பின் 4, 5 வது ஆண்டுகளில் நாடகம், பேச்சு, கவிதை, கட்டுரை, தனித்தமிழ், தமிழில் அறிவியல்/பொறியியல் என மிகவும் திரிந்து கொண்டிருந்தேன். முந்தைய ஆண்டுதான் 'ஆயிரம் வாசல் இதயம்' என்று நான் எழுதிய நாடகம் பெரிதும் பேர் பெற்று பூ.சா.கோ. போட்டியில் பரிசு கொண்டது. எனவே இறுதியாண்டில், நான் செயலாளனாக இருந்த தமிழ் மன்ற ஆண்டுவிழாவில் ஒரு நாடகம் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்லூரி நண்பர்களிடம் இருந்தது.

ஈடுபாடு கொண்ட சில நண்பர்கள் சேர்ந்தோம். முடிவில் தொட்டிப் பாளையத்தில் கேள்விப் பட்ட 1930-களின் கதையையே சிறிது உணர்வு கூட்டிப் படைக்கலாம் என்று தொடங்கினோம். உரையாடல் எழுதி முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகத்தின் கதை சிறிது சிறிதாகத் திரிந்து பரவத் தொடங்கியது. இடது சாரிக்காரர்கள் வேண்டும் என்றே இந்தக் கதையைப் போடுகிறார்கள் என்று வலது சாரிக் காரர்கள், பழமை வாதிகள் சொல்லத் தொடங்கினார்கள். தாழ்ந்த சாதிக் காரர்களைப் பழிக்கப் போகிறார்கள் என்று முற்றிலும் புறம்பாக ஒரு ஊகமும் உலவத் தொடங்கியது. மொத்தத்தில் ஒரே குழப்பம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே! இந்த எண்ணங்கள் மற்ற கல்லூரிகள் ( பூ.சா.கோ பொறியியல், கலைக் கல்லூரிகள், அரசினர் பொறியியல், கலைக் கல்லூரிகள், வேளாண் கல்லூரி) எங்கும் பெரிதாகப் பரவத் தொடங்கின. இன்னதென்று புரியாத ஒரு புயல் பரவி வருவதைக் கல்லுரி நிர்வாகத்தினர் உணரத் தொடங்கினர். எங்கள் கல்லுரியின் முதல்வர் பூ.அர. இராமகிருஷ்ணன் (பேராயக் கட்சியின் முந்தையப் பாராளுமன்ற உறுப்பினர்) அரசியல், தொழில் காரணமாய் கல்லூரியில் பெரும்பாலும் இருந்ததில்லை ஆதலால், அவருடைய சார்பாக PA to Principal குருசாமி என்னைக் கூப்பிட்டு நிலையைச் சொல்லி உரையாடல் முழுக்க ஒரு ஆசிரியர் குழு படிக்க வேண்டும் என்றார். அவரும் கூடப் படித்தார். பல உரையாடல்கள் வெட்டப் பட்டன. சிலவற்றின் வேகம் குறைக்கப் பட்டது. முடிவில் கனல் குறையாத அளவுக்கு வெட்டுக்களை ஒப்புக் கொண்டோ ம். முன்னோட்டம் மேலும் தொடர்ந்தது.

ஆண்டு விழா நாள். அப்பொழுது மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் இருந்த பேராசிரியர் தெ.பொ.மீ. யைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். எங்கள் கல்லூரி மாணவர் தொகை 1500க் கும் குறைவாக இருந்தும், மற்ற கல்லூரி மாணவர்களும் நிறைந்து கிட்டத் தட்ட 2500/ 3000 பேர் கூடி விட்டனர். (இப்படித்தான் 1000 பேரைப் பார்த்தாயிற்று.) திறந்த வெளி அரங்கில் விழா. திரு குருசாமி தன் முதல்வர் ஒப்புதலோடும், தன் நண்பர் DSP -யின் உதவியோடும் ஒரு சிறு காவலர் படையையே இறக்கி இருந்தார்.

முதலில் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை, திரு. குருசாமியின் உரை, ஆண்டறிக்கை, பரிசளிப்புகள், மதிப்பிற்குரிய தெ.பொ.மீ.யின் தலைமை உரை, நன்றியுரை என எல்லாம் ஒழுங்கே முடிந்தது. நாட்டுவாழ்த்துக்குப் பின் தெ.பொ.மீ புறப்படுவதாக இருந்தார். நீண்ட வேண்டு கோளுக்குப் பின், நாடகத்தின் முதற் சில காட்சிகளைப் பார்த்துவிட்டுப் புறப்படுவதாக ஒப்புக் கொண்டார்.

"என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?" என்பது நாடகத்தின் தலைப்பு.

முதற் காட்சி ஒரு தேநீர்க் கடை. நான் தான், அந்தக் கடையின் உரிமையாளனாகிய நாயராக நடித்தேன். மிசைப் பலகையில் இரண்டு பேர் இருந்து கொண்டு செய்தித் தாள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரு அய்யர் உள்ளே வந்து நாட்டு நடப்பைப் பேசத் தொடங்குகிறார்.

இப்பொழுது தான் பார்வையாளர் பக்கம் இருந்து ஏழெட்டுக் கல் சரமாதிரியாக விழுகிறது. என்னையும் சேர்த்து மேடையில் இருக்கும் சிலர் மேல் நல்ல அடி. திகைத்துப் போன எங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. திரையை மூடினோம். அதற்குள் பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கூச்சல்; குழப்பம். ஆங்காங்கே பரவியிருந்த ஆசிரியர்களும் காவலர்களும் அமளியைக் குறைக்க முயல்கிறார்கள். இதற்கிடையில் மேடையிலேயே திரையைப் போடச் செய்த பின் அந்தத் திரைக்கு முன்னேயே வந்து," எவண்டா அவன், கல்லெறிந்த கோழை, துணிவிருந்தால் மேடைக்கு வாடா" என்று மேடையில் இருந்து நாங்கள் கத்துகிறோம். பிறகு எங்களைச் சமாதானப் படுத்த குருசாமி முயல்கிறார். அவரே மேடையில் உள்ள ஒலிபெருக்கிக்கு வந்து மாணவர்களை அமைதிப் படுத்துகிறார். "தெ.பொ.மீ.க்கு முன்னால் நாம் இருக்கிறோம். அவர் நம் விருந்தினர். நாடகம் நடக்கட்டும். எல்லோரும் பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். ஒரு அரை மணி நேரக் குழப்பத்திற்குப் பிறகு, நாடகம் தொடர்ந்தது.

ஊர் இரண்டு பட்டது; பஞ்ச காலம்; நீரில்லாமல் போனது; அதற்காக அலைவது; நாட்டில் சுதந்திரப் போராட்டப் பின்களம்; பல்வேறு தலைவர்கள் ஒற்றுமை பற்றிச் சொன்னவை; சிறுவன் கிணற்றிற்குள் தண்ணீர் குடித்தது; மேல்சாதியினர் அடிப்பது; கீழ்சாதியினர் குமுறி நாயம் கேட்பது; மிரட்டல்; கலவரம்; காவலர் வருவது; வெறி கூடியது; முடிவில் வெண்தாடி வேந்தர் அங்கு வந்து சாதி என்ற அநாகரிகத்தைப் புரியவைப்பது; என முடிவை மட்டும் மாற்றி பையன் இறக்காதது போலக் காட்டினோம். "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?" என்ற பாரதியின் குரல் பின்னிருந்து ஒலிக்கிறது.

கைதட்டு அடங்க 3.4 மணித்துளிகள் ஆனது. நடுவிலேயே எழுந்து போய்விடுவதாகச் சொன்ன தெ.பொ.மீ கடைசி வரை இருந்தார். முடிவில் சிற்றுந்தில் ஏறுமுன் சொன்னார். "தம்பி; உங்களுக்குத் துணிச்சல் கூட; சரியான கதையைத் திருப்பிச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவா இவ்வளவு தூரம் கலவரத்தைக் கிளப்பியது? இந்த நாடு எங்கே போகிறது?"

இப்படி தமிழ் நாட்டில் நடப்பது ஒன்றும் வியப்பே இல்லை. என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரியாமலே அரசியல் பண்ண வருகிற தமிழர்களை என்ன சொல்வது? பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். இதுதான் தமிழ் நாடு.

கீழை நாட்டுக் கவிஞன் (தலைவனாயும் இருந்தான்) சொன்னான்:

"புரட்சி என்பது தேனீர் விருந்தல்ல; அது ஒரு அழகிய ஓவியமும் அல்ல. அது தசையும் குருதியும் சேர்ந்த மக்களால் ஆனது. அது நளினமாக இருக்க இயலாது."

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

±ÉìÌû ÁÄÕõ ¿¢¨É׸û ²üÀθ¢ýÈÉ.

1969-70 ¬¸¢Â þÃñ¼¡ñθǢø 10, 15 §À÷ ±í¸û ¸øæâ¢ø ÌÓ¸ ¿üÀ½¢ ÁýÈõ ´ýÈ¢ø Á¢Ìó¾ ®ÎÀ¡ð§¼¡Î þÕ󧾡õ. ±í¸û §¸¡¨Å ¦¾¡Æ¢øÑðÀì ¸øæâ¢ø þÕóÐ §¸¡¨Å-«Å¢É¡º¢ º¡¨Ä¢ø º¢È¢Ð àÃõ §À¡É¡ø º¢òá ±ýÈ ºÅÇ¢ ¬Ã¡ö ¿¢¨ÄÂõ ÅÕõ. «Ð ÓÊó¾×¼ý, þ¼ôÀì¸õ ¾¢ÕõÀ¢É¡ø, 4, 5 ¸¢§Ä¡Á£ð¼÷¸Ç¢ø ¦¾¡ðÊô À¡¨ÇÂõ ±ýÈ º¢üê÷ ÅÕõ. «Ð ´Õ ÅÇ÷¨¼Â¡¾ ¬É¡ø «ó¾ôÀì¸òÐ ÅÃÄ¡üÈ¢ø ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ þ¼õ ¦¸¡ñ¼ °÷.

«ó¾ °÷ ¦¿Î¿¡û þÃñÎ ÀðÎì ¸¢¼ó¾Ð. ´Õ Àì¸õ §Áø º¡¾¢Â¢É÷; þý¦É¡Õ Àì¸õ Á¢¸×õ ¾¡úó¾ º¡¾¢Â¢É÷. ¿¡í¸û ÌÓ¸ ¿üÀ½¢Â¡¸, ӾĢø °ÕìÌ ¯ûÅÕõ º¡¨Ä¨Â ´ØíÌ ÀÎò¾¢§É¡õ. °÷ ²üÚì ¦¸¡ñ¼Ð. þÃñÎ Àì¸òРţθÙìÌõ §À¡§É¡õ. ²¨Æ Áì¸ÙìÌô ¦À¡ò¾¸í¸Ùõ н¢Á½¢¸Ùõ ¦¸¡Îò§¾¡õ; ¿øÄ ÅçÅüÒ þÕó¾Ð. "ºÃ¢, ¬úó¾ ÀÂÛûÇ §Å¨Ä¨Âî ¦ºöÂÄ¡õ" ±ýÚ À¡¼õ ¦º¡øÄ¢ì ¦¸¡Îì¸ Å¢¨Æ󧾡õ.

þÃñÎ Àì¸ò¾¢üÌõ ¿ÎÅ¢ø ´Õ §¸¡Â¢ø, «ÃºÁÃõ ±øÄ¡õ þÕó¾Ð. °Ã¢ø ¦Àâ ÀûÇ¢ ±Ð×õ ¸¢¨¼Â¡Ð. ¦¾¡¼ì¸ôÀûÇ¢ þÕ󾾡 ±ýÚ þô¦À¡ØÐ ¿¢¨ÉÅ¢ø þø¨Ä; ¦Àâ Á¡½Å÷¸û «í¸¢ÕóÐ ¿¼óÐ ¦Àâ º¡¨ÄìÌ ÅóÐ À£Ç§ÁðÎìÌ ÅóÐ ¾¡ý ÀÊì¸ ÓÊÔõ. ¿¡í¸û Á¡¨Ä §¿Ãí¸Ç¢ø §¸¡Â¢ÖìÌ ÓýÉ¡ø þÕì¸¢È ¾¸Ãì ¦¸¡ð¼¨¸Â¢ø þÕóÐ À¡¼õ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀÐ ±ýÚ ÓÊ× ¦ºö§¾¡õ. Ó¾ø Å¡Ãõ º¢Ä Á¡½Å÷¸û ÁðÎõ «ó¾ì ܼò¾¢ý ¯û§Ç Åó¾¡÷¸û. ÁüÈÅ÷¸û ¦ÅÇ¢§Â§Â ¿¢ýÈ¡÷¸û.

"²õÀ¡, ¦ÅǢ¢§Ä§Â ¿¢ü¸¢È£í¸; ¯û§Ç Å¡í¸!", "
ÀÚ¢øÄ£í¸ñ½¡. ¿£í¸ «í§¸Õó§¾ À¡¼õ ¿¼òÐí¸; ±í¸ÙìÌì §¸ìÌÐ"

ӾĢø ÒâÂÅ¢ø¨Ä; À¢ýÉ¡ø ¦À¡È¢ ¾ðÊÂÐ; ¸£úº¡¾¢ Áì¸Ç¢¼õ Å¢º¡Ã¢ì¸ò ¦¾¡¼í¸¢§É¡õ. ¦ÁÐÅ¡¸î ¦ºö¾¢ ¸º¢Âò ¦¾¡¼í¸¢ÂÐ. ¿¡í¸û À¡¼õ ¿¼òи¢È, §¸¡Â¢ÖìÌ Óý§É þÕì¸¢È Ü¼õ §Áøº¡¾¢ì¸¡Ã÷ ¸ðÊÂÐ. «ó¾ì §¸¡Â¢Öõ §Áøº¡¾¢ì¸¡Ãô ¦ÀâÂÅâý Óý§É¡÷ ¸ðÊÂÐ. ¸£úº¡¾¢ì¸¡Ã÷ ܼò¾¢üÌì ¸£§Æ þÕóÐ ÁðΧÁ º¡Á¢¨Âì ÌõÀ¢ðÎì ¦¸¡ûÇÄ¡õ. «¾üÌ §Áø ±¸¢È¢É¡ø, §ÅÚ ¸¨¾¾¡ý. þÐ §À¡¸ ¸£ú º¡¾¢Â¢ÉÕìÌ ÁðΧÁ ´Õ ¸¢Ã¡Áò ¦¾öÅì §¸¡Â¢ø «Å÷¸û Àì¸õ þÕ츢ÈÐ. «íÌ Ü¼õ ¸¢¨¼Â¡Ð.

þó¾î º¢ì¸Ä¡É ¿¢¨Ä¢ø ¿¡í¸û ±í¸û ÌÓ¸î §º¨Å¨Âò ¦¾¡¼Ã §ÅñÎÁ¡É¡ø ´ýÚ ¿¡í¸û þÃñ¼¡¸ô À¢Ã¢óÐ þó¾ì ܼò¾¢ø ´Õ ÅÌôÒõ, ¸£úº¡¾¢ì¸¡Ã÷¸û þ¨¼§Â þý¦É¡Õ þ¼õ ²üÀ¡Î ¦ºöÐ §Å¦È¡Õ ÅÌôÒÁ¡¸ ¿¼òÐÅÐ «øÄÐ Ò¾¢¾¡¸ ¦À¡Ðì ܼõ «¨ÁôÀÐ ±ýÈ þÃñÊø ´ÕÅƢ¢ø ¾¡ý §À¡¸ ÓÊÔõ.

§¿Ãõ ¸¢¨¼ì¸ì ÜÊ ¬÷ÅÄ÷¸û ´Õ º¢Ä§Ã þÕ󾾡ø þÃñ¼¡¸ô À¢Ã¢ÅÐ ±ýÀÐ þÂÄ¡¾ ¸¡Ã¢Âõ. «Ð ¦¸¡û¨¸ÂÇÅ¢ø ±í¸ÙìÌ ´ôÀ¡¾ ¸¡Ã¢ÂÓõ ܼ. ¦À¡Ðì ܼõ «¨ÁôÀ¦¾ýÈ¡ø «ÛÁ¾¢ ¸¢¨¼ôÀ¾ü§¸ ÀÄ «ÖÅí¸û (offices) ²È¢ þÈí¸ §ÅñÎõ; ÓÊÅ¢ø ¦ºÂÄ¢ø þÈí¸¢§É¡õ. ¸øæâ§Â «Á÷ì¸ÇôÀð¼Ð; À½õ ¾¢Ãðʧɡõ. ¸ðÎÁ¡Éô ¦À¡Õû¸¨Ç Å¡í¸¢§É¡õ. ´ýÈ¢ÃñÎ ¦¸¡ò¾É¡÷¸¨Ç ¨ÅòÐì ¦¸¡ñÎ 60, 70 Á¡½Å÷¸û, ´Õ º¢Ä ¬º¢Ã¢Â÷¸û º¢ò¾¡û¸Ç¡¸ §Å¨Ä ¦ºö¾É÷. ´Õ ¿øÄ ¿¡Ç¢ø ÒÐì ܼõ, À¨Æ ܼò¾¢üÌ «Õ¸¢§Ä§Â ±ØõÀ¢ÂÐ; ®Ãõ ¸¡öžüÌ Óý§É§Â, ±í¸û ¸øæâ Ó¾øŨÃì ÜðÊì ܼò¨¾Ôõ ¾¢È󧾡õ.

«ôÀ¡¼¡, ¿õ ¦¾¡Æ¢øÑðÀ ã¨Ç¨Âô ÀÂýÀÎò¾¢ þó¾î º¢ì¸ÖìÌ ÅÆ¢ ¸ñ§¼¡õ ±ýÚ ¦ÀÕ¨Á ¦¸¡ñ§¼¡õ. À¡¼ ÅÌôÒ¸û Á£ñÎõ ¦¾¡¼í¸¢É. þó¾ Ó¨È þÃñÎ Àì¸ò¾¢Öõ §À¡ö ¦À⾡¸ °ìÌÅ¢òÐ ÅÃÅ¢ò§¾¡õ. ÓÊÅ¢ø ±í¸û Áà Áñ¨¼¸ÙìÌ «ó¾ °Ã¢ý ¯û ¿£§Ã¡ð¼õ ÒâÂÅ¢ø¨Ä ±ýÚ¾¡ý À¢ÈÌ Òâó¾Ð. ӾĢø ±ø§Ä¡Õõ ¾¨Ä¡ðÊÉ¡÷¸§Ç ±ýÚ ¯Å¨¸ÔüÚì ¸¢¼ó§¾¡õ «øÄÅ¡?

þó¾ Ó¨È, Ó¾ø ¿¡û À¡¼ò¾¢üÌ ±ø§Ä¡Õõ §º÷óо¡ý þÕó¾É÷. þÃñ¼¡õ ¿¡û ¬Â¢üÚ. ¿ýÈ¡¸ô ÀÊì¸¢È ¸£ú º¡¾¢ô¨ÀÂý ÅÃÅ¢ø¨Ä;

"±ýɼ¡, ¬îÍ «ÅÛìÌ,"
"¦¾Ã¢Â¨Ä, º¡÷"

ãýÈ¡õ ¿¡û þýÛõ þÕÅ÷ ̨Èó¾¡÷¸û; ¿¡¦Ç¡Õ §ÁÉ¢Ôõ ¦À¡Ø¦¾¡Õ Åñ½Óõ ¬¸ ̨ÈóÐ ¦¸¡ñ§¼ Åó¾Ð. ÓÊÅ¢ø ¸£úº¡¾¢ì¸¡Ã÷¸Ç¢¼õ ±ýɦÅýÚ §¸ð¸ ÓüÀ𧼡õ. ÀÄ ÅüÒÚò¾ÖìÌô À¢ý ¦ºö¾¢ ¸º¢ó¾Ð. ¦Àâ¾É측ÃÕõ, «Å÷ º¡¾¢Â¢ÉÕõ Ò¾¢Â ܼò¾¢üÌûÙõ ¾¡úó¾Å÷¸û ÅÃìܼ¡Ð ±ýÚ ´Õ Á¢Ãð¼Ö¼ý ÜȢ¢Õ츢ȡ÷¸û.

§¸ð¼×¼ý ±í¸ÙìÌ §¸¡Àõ ¦¸¡ôÒÇ¢ò¾Ð. "²ü¸É§Å ¿¼ó¾ º¡¾¢ì¦¸¡Î¨Á§Â ¾ÅÚ; «¨¾ì §¸ð¸ô§À¡É¡ø Åó¾ þ¼ò¾¢ø «Ãº¢ÂÄ¡¸¢Å¢Îõ. ¿¡õ ¸øæâ Á¡½Å÷¸û, ¦ºöÂÅó¾ §Å¨Ä §ÅÚ" ±ýÈ ±ñ½ò¾¢ø Ò¾¢Â ܼõ ±ØôÀ¢É¡ø, ¿¡õ ±ØôÀ¢Â þó¾ì ܼò¾¢ü§¸ þÅ÷¸û ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡Ê ¸£ú¾¢Â¢É¨Ã Å¢Äì̸¢È¡÷¸§Ç; þ¨¾ þôÀʧ ŢðÎÅ¢¼ìܼ¡Ð ±ýÚ ±ñ½¢ô §À¡Ã¡ð¼ò¨¾ò ÐÅì¸ §ÅñÊÂÐ ¾¡ý ±ýÚ ¸£ú¾¢Â¢Éâ¼õ §Àºò ¦¾¡¼í¸¢§É¡õ. «ô¦À¡Øо¡ý «Å÷¸û ´ù¦Å¡ÕÅḠ¾Âí¸¢ Ţĸò ¦¾¡¼í¸¢É¡÷¸û.

"§Åñ¼¡õ ¾õÀ¢¸Ç¡! ¿£í¸ À¡ðÎì¸î ¦º¡øÄ¢ðÎô §À¡Â¢ÎÅ£í¸; À¼ô §À¡ÈÐ ¿¡í¸; §Àº¡¦Á Å¢ðÎÎí¸. ±í¸ Òû¨Çí¸ ÀÊì¸¢È ÀÊ ÀÊì¸ðÎõ"

"þø¨Äí¸ö¡! ²ý þôÀÊô §À¡Ã¡ÎÈÐìÌò ¾ÂíÌÈ¢í¸, ¿¡í¸ûÄ¡õ þÕ째¡õ. ¦Ãñ뤀 ´ñÏ À¡÷ò¾¢ÃÄ¡õ".

ÀÄ §¿Ã «Øò¾ò¾¢üÌô À¢ý, 1930 ¸¨Ç ´ðÊ Óý ¸¡Äì ¸¨¾ ´ýÚ ¦ÅÇ¢Åó¾Ð.

°Ã¢ø ¦Àâ¾Éì ¸¡Ã÷¸Ç¢ý Àì¸ò¾¢ø ÀÊì¸ðθټý ÜÊ ´Õ ¦Àâ ¬ú¸¢½Ú þÕ츢ÈÐ. (þõÁ¡¾¢Ã¢ì ¸¢½Ú¸¨Ç §¸¡¨Åô Àì¸õ §º÷ó¾Å÷¸û À¡÷ò¾¢Õì¸Ä¡õ.) ¾¡úó¾ º¡¾¢Â¢É÷ Àì¸õ ´Õ ¸¢½Úõ ¸¢¨¼Â¡Ð. «ôÀÊò §¾¡ñÎÅÐõ ¦ÀÕï ¦ºÄ× ¦¸¡ñ¼Ð. «Å÷¸Ç¡ø ÓÊ¡Ð. ±É§Å þÅ÷¸û º¢È¢Ð ¦¾¡¨Ä× §À¡ö ¬ð¸û «¾¢¸õ þøÄ¡¾ ¦À¡Ðô À̾¢Â¢ø ¾¡ý ¦¸¡ñÎ Åà ÓÊÔõ. þôÀʧ ¾¡ý ¸¡Ä¡ ¸¡Äò¾¢üÌõ ¿¼óÐ Åó¾¢Õ츢ÈÐ. À¢ý ´Õ ¦À¡ØÐ Àïº ¸¡Äõ Åó¾¢Õ츢ÈÐ. þó¾ô Àì¸õ °ÕìÌ ¦ÅǢ¢ø þÕó¾ ¬ÆÁ¢øÄ¡¾ ¸¢½üÈ¢ø ¾ñ½£÷ ÅüȢ¢Õ츢ÈÐ. þÉ¢ ¾ñ½£÷ §ÅñÎõ ±ýÈ¡ø þýÛõ ÀÄ àÃõ ¿¼ì¸ §ÅñÎõ. «ô¦À¡ØÐ ¾¡ý ¬Î Á¡Î¸û §Áöì¸¢È ´Õ ¸£úî º¡¾¢ô ¨ÀÂý ¾É¢òÐô §À¡É Å¢Äí¨¸ Å¢ÃðÊì ¦¸¡ñÎ Åó¾Åý ¾¡¸õ ¦À¡Ú측Áø, ¦Àâ ¾É측Ã÷ Å£ðÎì ¸¢½üÚìÌû þÈí¸¢ò ¾ñ½£÷ ÌÊò¾¢Õ츢ȡý. þ¨¾ ¡§Ã¡ §À¡öô À¡÷òÐ ¦Àâ ¾Éì ¸¡Ãâ¼õ ¦º¡øÄ «í¸¢ÕóÐ ¬û «õÒ ±øÄ¡õ º£È¢ì ¦¸¡ñÎ ÅóÐ, þó¾ô ¨À嬃 ¸ñÁñ À¡÷측Áø ¨¿Âô Ò¨¼òÐ, ¨ÀÂý µ¦ÅýÚ «ÄÈ¢ì ÌÃø ¦¸¡Îì¸, ÓÊÅ¢ø «Å¨Éì ¦¸¡ñÎ ÅóÐ þó¾ì §¸¡Â¢ø ÓýÒ §À¡ðÎ, À¢ý þÕ Àì¸ò¾¡Õõ ÜÊì ¦¸¡ó¾Ç¢ì¸, ¿¡Âõ §¸ð¼Å¨Ã §Áø¾É측Ã÷ Á¢ÃðÊ¢Õ츢ȡ÷. ¦ÃñÎ Àì¸Óõ Å£îºÃ¢Å¡û ±Îì¸ô §À¡¸, ¸¡ÅÄ÷ À¨¼ µ§¼¡Ê Åó¾¢Õ츢ÈÐ, «ý¨È ¿¢¨Ä¢ø þÕ º¡Ã¡¨ÃÔõ Å¢Ä츢ŢðÎ ´Õ ÁÂ¡É «¨Á¾¢. þò¾¨É «Ê¾Ê¢ø ¾¢¨¸òÐô §À¡ö ¦¿¡Úí¸¢ô §À¡É ¨ÀÂý ºýÉ¢ ¸ñ¼ÅÉ¡¸¢ ¸¡öîºø ÓüÈ¢ ¸¨¼º¢ Ũà À¢¨Æ츧Šþø¨Ä. ¾í¸û ¨ÀÂý þÈó¾Ð ¸ñÎ ÌÓÈ¢ Á£ñÎõ ¦¸¡ó¾Ç¢òÐ, ¸£úº¡¾¢ì¸¡Ã÷¸û ±ØõÀ¢ÅÃ, ¸¨¼º¢Â¢ø ºð¼Óõ ¸¡ÅÖõ §ÁÄ¡ð¸Ù째 Ш½Â¡ö þÕôÀÐ ¸ñÎ §º¡÷óÐ §À¡ö, ¾Ç÷óÐ, ÐÅñÎ ¦À¡ÚÁ¢Â ¿¢¨ÄìÌ ÅÕõ §À¡Ð ÀòÐô À¾¢¨ÉóÐ ¿¡ð¸û ¸Æ¢ó¾¢Õ츢ÈÐ. «ýÈ¢ø þÕóÐ °÷ þýÛõ ¿£Ú âò¾ ¦¿ÕôÀ¡¸ô Ò¨¸óÐ ¦¸¡ñ§¼ ¾¡ý þÕ츢ÈÐ.

þ¾üÌ «ôÒÈõ, 1948-ø ¦¾Ä¢í¸¡É¡ô ÒÃðº¢Â¢ý §À¡Ð ¦À¡Ð ¯¼¨Áò §¾¡Æ÷ þáÁã÷ò¾¢ ¾¡úó¾ º¡¾¢Â¢Éâý ¬¾Ã§Å¡Î º¢Ä ¸¡Äõ þó¾ °÷ôÀì¸õ ¾¨Ä Á¨È× Å¡ú쨸 ¿¼ò¾¢Â §À¡Ðõ ¸¡ÅÄâý ¦¸ÎÀ¢Ê ܼ§Å þÕó¾¢Õ츢ÈÐ. ÓÊÅ¢ø °÷ ¦¾Ã¢ó§¾¡, ¦¾Ã¢Â¡Á§Ä¡ º¢¸ôÒî º¡Âõ âº¢ì ¦¸¡ñ¼Ð.

¿¡í¸û ÁÚÀÊ §Áøº¡¾¢Â¢É÷ Àì¸õ §À¡ö "ÀÊì¸¢È À¢û¨Ç¸¨Ç þôÀÊî º¡¾¢ §ÅÚÀ¡Î ¸¡ðÊ Á¢ÃðÊì ¦¸¡ñÊÕó¾¡ø þÉ¢ ÌÓ¸ô À½¢ì¸¡É §Å¨Ä¸¨Ç ¿¢Úò¾¢Å¢Î§Å¡õ; ¯í¸û À¢û¨Ç¸Ùõ ¾¡ý À¡¾¢ì¸ôÀÎÅ÷" ±ýÀ¨¾ §Å¸ò§¾¡Î ¦º¡øÄ¢ Á¢ÃðÊ À¢ÈÌ, º¢È¢Ð ¸¡Äõ ÍõÁ¡ þÕó¾¡÷¸û. ¬É¡ø «¾üÌ «ôÒÈõ §Áø º¡¾¢Â¢Éâý À¢û¨Ç¸û ̨È ¬ÃõÀ¢ò¾É÷. þó¾ ¯Ãºø¸ÙìÌ ¿ÎÅ¢ø, ÀÕÅõ §À¡öì ¦¸¡ñÊÕó¾Ð. À¢û¨Ç¸ÙìÌõ §¾÷× ¦¿Õí¸¢ÂÐ. ¿¡í¸Ùõ ±í¸Ç¢ý §¾÷×측¸ô ÀÊôÀ¾¢ø ÓõÓÃõ ¬§É¡õ.

þó¾ ¿¢¨Ä¢ø ¾Á¢ú ÁýÈ ¬ñΠŢơ Åó¾Ð.

§¸¡¨Åò ¦¾¡Æ¢øÑðÀì ¸øæâ Ññ¸¨Ä¸ÙìÌô ¦ÀÂ÷§À¡ÉÐ. «ô¦À¡Ø¦¾øÄ¡õ, â.º¡.§¸¡. ¦À¡È¢Â¢Âø ¸ûæâ¢ø ¿¡¼¸ô §À¡ðÊ ¿¼ìÌõ. ¦ÀÕõÀ¡Öõ ±í¸û ¸øæâ§Â ¦ÅüÈ¢¦ÀÚõ. ¿¡ý ¦À¡È¢Â¢Âø ÀÊôÀ¢ý 4, 5 ÅÐ ¬ñθǢø ¿¡¼¸õ, §ÀîÍ, ¸Å¢¨¾, ¸ðΨÃ, ¾É¢ò¾Á¢ú, ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø/¦À¡È¢Â¢Âø ±É Á¢¸×õ ¾¢Ã¢óÐ ¦¸¡ñÊÕó§¾ý. Óó¨¾Â ¬ñξ¡ý '¬Â¢Ãõ Å¡ºø þ¾Âõ' ±ýÚ ¿¡ý ±Ø¾¢Â ¿¡¼¸õ ¦ÀâÐõ §À÷ ¦ÀüÚ â.º¡.§¸¡. §À¡ðÊ¢ø ÀÃ¢Í ¦¸¡ñ¼Ð. ±É§Å þÚ¾¢Â¡ñÊø, ¿¡ý ¦ºÂÄ¡ÇÉ¡¸ þÕó¾ ¾Á¢ú ÁýÈ ¬ñÎŢơŢø ´Õ ¿¡¼¸õ §À¡¼ §ÅñÎõ ±ýÈ ±¾¢÷À¡÷ôÒ ¸øæâ ¿ñÀ÷¸Ç¢¼õ þÕó¾Ð.

®ÎÀ¡Î ¦¸¡ñ¼ º¢Ä ¿ñÀ÷¸û §º÷󧾡õ. ÓÊÅ¢ø ¦¾¡ðÊô À¡¨ÇÂò¾¢ø §¸ûÅ¢ô Àð¼ 1930-¸Ç¢ý ¸¨¾¨Â§Â º¢È¢Ð ¯½÷× ÜðÊô À¨¼ì¸Ä¡õ ±ýÚ ¦¾¡¼í¸¢§É¡õ. ¯¨Ã¡¼ø ±Ø¾¢ Óý§É¡ð¼õ À¡÷òÐì ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð, ¿¡¼¸ò¾¢ý ¸¨¾ º¢È¢Ð º¢È¢¾¡¸ò ¾¢Ã¢óÐ ÀÃÅò ¦¾¡¼í¸¢ÂÐ. þ¼Ð º¡Ã¢ì¸¡Ã÷¸û §ÅñÎõ ±ý§È þó¾ì ¸¨¾¨Âô §À¡Î¸¢È¡÷¸û ±ýÚ ÅÄÐ º¡Ã¢ì ¸¡Ã÷¸û, ÀƨÁ Å¡¾¢¸û ¦º¡øÄò ¦¾¡¼í¸¢É¡÷¸û. ¾¡úó¾ º¡¾¢ì ¸¡Ã÷¸¨Çô ÀÆ¢ì¸ô §À¡¸¢È¡÷¸û ±ýÚ ÓüÈ¢Öõ ÒÈõÀ¡¸ ´Õ °¸Óõ ¯ÄÅò ¦¾¡¼í¸¢ÂÐ. ¦Á¡ò¾ò¾¢ø ´§Ã ÌÆôÀõ. °÷ þÃñÎ Àð¼¡ø Üò¾¡ÊìÌì ¦¸¡ñ¼¡ð¼õ ¾¡§É! þó¾ ±ñ½í¸û ÁüÈ ¸øæâ¸û ( â.º¡.§¸¡ ¦À¡È¢Â¢Âø, ¸¨Äì ¸øæâ¸û, «Ãº¢É÷ ¦À¡È¢Â¢Âø, ¸¨Äì ¸øæâ¸û, §ÅÇ¡ñ ¸øæâ) ±íÌõ ¦À⾡¸ô ÀÃÅò ¦¾¡¼í¸¢É. þýɦ¾ýÚ Ò⡾ ´Õ ÒÂø ÀÃÅ¢ ÅÕŨ¾ì ¸øÖâ ¿¢÷Å¡¸ò¾¢É÷ ¯½Ãò ¦¾¡¼í¸¢É÷. ±í¸û ¸øÖâ¢ý Ó¾øÅ÷ â.«Ã. þáÁ¸¢Õ‰½ý (§ÀáÂì ¸ðº¢Â¢ý Óó¨¾Âô À¡Ã¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷) «Ãº¢Âø, ¦¾¡Æ¢ø ¸¡Ã½Á¡ö ¸øæâ¢ø ¦ÀÕõÀ¡Öõ þÕó¾¾¢ø¨Ä ¬¾Ä¡ø, «ÅÕ¨¼Â º¡÷À¡¸ PA to Principal ÌÕº¡Á¢ ±ý¨Éì ÜôÀ¢ðÎ ¿¢¨Ä¨Âî ¦º¡øÄ¢ ¯¨Ã¡¼ø ÓØì¸ ´Õ ¬º¢Ã¢Â÷ ÌØ ÀÊì¸ §ÅñÎõ ±ýÈ¡÷. «ÅÕõ ܼô ÀÊò¾¡÷. ÀÄ ¯¨Ã¡¼ø¸û ¦Åð¼ô Àð¼É. º¢ÄÅüÈ¢ý §Å¸õ ̨Èì¸ô Àð¼Ð. ÓÊÅ¢ø ¸Éø ̨È¡¾ «Ç×ìÌ ¦ÅðÎì¸¨Ç ´ôÒì ¦¸¡ñ§¼¡õ. Óý§É¡ð¼õ §ÁÖõ ¦¾¡¼÷ó¾Ð.

¬ñΠŢơ ¿¡û. «ô¦À¡ØÐ ÁШÃô Àø¸¨Äì ¸Æ¸ò Ш½§Åó¾Ã¡ö þÕó¾ §ÀẢâÂ÷ ¦¾.¦À¡.Á£. ¨Âî º¢ÈôÒ Å¢Õó¾¢ÉḠ«¨Æò¾¢Õó§¾ý. ±í¸û ¸øæâ Á¡½Å÷ ¦¾¡¨¸ 1500ì Ìõ ̨ÈÅ¡¸ þÕóÐõ, ÁüÈ ¸øæâ Á¡½Å÷¸Ùõ ¿¢¨ÈóÐ ¸¢ð¼ò ¾ð¼ 2500/ 3000 §À÷ ÜÊ Å¢ð¼É÷. (þôÀÊò¾¡ý 1000 §À¨Ãô À¡÷ò¾¡Â¢üÚ.) ¾¢Èó¾ ¦ÅÇ¢ «Ãí¸¢ø Ţơ. ¾¢Õ ÌÕº¡Á¢ ¾ý Ó¾øÅ÷ ´ôÒ¾§Ä¡Îõ, ¾ý ¿ñÀ÷ DSP -¢ý ¯¾Å¢§Â¡Îõ ´Õ º¢Ú ¸¡ÅÄ÷ À¨¼¨Â§Â þÈ츢 þÕó¾¡÷.

ӾĢø ¿¢¸ú ¦¾¡¼í¸¢ÂÐ. ÅçÅüÒ¨Ã, ¾¢Õ. ÌÕº¡Á¢Â¢ý ¯¨Ã, ¬ñ¼È¢ì¨¸, ÀâºÇ¢ôÒ¸û, Á¾¢ôÀ¢üÌâ ¦¾.¦À¡.Á£.¢ý ¾¨Ä¨Á ¯¨Ã, ¿ýȢԨà ±É ±øÄ¡õ ´Øí§¸ ÓÊó¾Ð. ¿¡ðÎÅ¡úòÐìÌô À¢ý ¦¾.¦À¡.Á£ ÒÈôÀΞ¡¸ þÕó¾¡÷. ¿£ñ¼ §ÅñÎ §¸¡ÙìÌô À¢ý, ¿¡¼¸ò¾¢ý Ó¾ü º¢Ä ¸¡ðº¢¸¨Çô À¡÷òÐÅ¢ðÎô ÒÈôÀΞ¡¸ ´ôÒì ¦¸¡ñ¼¡÷.

"±ýÚ ¾½¢Ôõ þó¾î ;ó¾¢Ã ¾¡¸õ?" ±ýÀÐ ¿¡¼¸ò¾¢ý ¾¨ÄôÒ.

Ó¾ü ¸¡ðº¢ ´Õ §¾¿£÷ì ¸¨¼. ¿¡ý ¾¡ý, «ó¾ì ¸¨¼Â¢ý ¯Ã¢¨Á¡ÇÉ¡¸¢Â ¿¡ÂḠ¿Êò§¾ý. Á¢¨ºô ÀĨ¸Â¢ø þÃñÎ §À÷ þÕóÐ ¦¸¡ñÎ ¦ºö¾¢ò ¾¡û ÀÊòÐì ¦¸¡ñÎ þÕ츢ýÈÉ÷. ´Õ «öÂ÷ ¯û§Ç ÅóÐ ¿¡ðÎ ¿¼ô¨Àô §Àºò ¦¾¡¼í̸¢È¡÷.

þô¦À¡ØÐ ¾¡ý À¡÷¨Å¡Ç÷ Àì¸õ þÕóÐ ²¦ÆðÎì ¸ø ºÃÁ¡¾¢Ã¢Â¡¸ Ţظ¢ÈÐ. ±ý¨ÉÔõ §º÷òÐ §Á¨¼Â¢ø þÕìÌõ º¢Ä÷ §Áø ¿øÄ «Ê. ¾¢¨¸òÐô §À¡É ±í¸ÙìÌ §¸¡Àõ ¦À¡òÐì ¦¸¡ñÎ ÅÕ¸¢ÈÐ. ¾¢¨Ã¨Â ãʧɡõ. «¾üÌû À¡÷¨Å¡Ç÷¸û Áò¾¢Â¢ø ´§Ã Üîºø; ÌÆôÀõ. ¬í¸¡í§¸ ÀÃŢ¢Õó¾ ¬º¢Ã¢Â÷¸Ùõ ¸¡ÅÄ÷¸Ùõ «ÁÇ¢¨Âì ̨Èì¸ ÓÂø¸¢È¡÷¸û. þ¾ü¸¢¨¼Â¢ø §Á¨¼Â¢§Ä§Â ¾¢¨Ã¨Âô §À¡¼î ¦ºö¾ À¢ý «ó¾ò ¾¢¨ÃìÌ Óý§É§Â ÅóÐ," ±Åñ¼¡ «Åý, ¸ø¦ÄÈ¢ó¾ §¸¡¨Æ, н¢Å¢Õó¾¡ø §Á¨¼ìÌ Å¡¼¡" ±ýÚ §Á¨¼Â¢ø þÕóÐ ¿¡í¸û ¸òи¢§È¡õ. À¢ÈÌ ±í¸¨Çî ºÁ¡¾¡Éô ÀÎò¾ ÌÕº¡Á¢ ÓÂø¸¢È¡÷. «Å§Ã §Á¨¼Â¢ø ¯ûÇ ´Ä¢¦ÀÕ츢ìÌ ÅóÐ Á¡½Å÷¸¨Ç «¨Á¾¢ô ÀÎòи¢È¡÷. "¦¾.¦À¡.Á£.ìÌ ÓýÉ¡ø ¿¡õ þÕ츢§È¡õ. «Å÷ ¿õ Å¢Õó¾¢É÷. ¿¡¼¸õ ¿¼ì¸ðÎõ. ±ø§Ä¡Õõ ¦À¡Ú¨Á ¸¡ì¸ §ÅñÎõ" ±ýÚ §Åñθ¢È¡÷. ´Õ «¨Ã Á½¢ §¿Ãì ÌÆôÀò¾¢üÌô À¢ÈÌ, ¿¡¼¸õ ¦¾¡¼÷ó¾Ð.

°÷ þÃñÎ Àð¼Ð; Àïº ¸¡Äõ; ¿£Ã¢øÄ¡Áø §À¡ÉÐ; «¾ü¸¡¸ «¨ÄÅÐ; ¿¡ðÊø ;ó¾¢Ãô §À¡Ã¡ð¼ô À¢ý¸Çõ; Àø§ÅÚ ¾¨ÄÅ÷¸û ´üÚ¨Á ÀüÈ¢î ¦º¡ýɨÅ; º¢ÚÅý ¸¢½üÈ¢üÌû ¾ñ½£÷ ÌÊò¾Ð; §Áøº¡¾¢Â¢É÷ «ÊôÀÐ; ¸£úº¡¾¢Â¢É÷ ÌÓÈ¢ ¿¡Âõ §¸ðÀÐ; Á¢Ãð¼ø; ¸ÄÅÃõ; ¸¡ÅÄ÷ ÅÕÅÐ; ¦ÅÈ¢ ÜÊÂÐ; ÓÊÅ¢ø ¦Åñ¾¡Ê §Åó¾÷ «íÌ ÅóÐ º¡¾¢ ±ýÈ «¿¡¸Ã¢¸ò¨¾ô Òâ¨ÅôÀÐ; ±É ÓʨŠÁðÎõ Á¡üÈ¢ ¨ÀÂý þÈ측¾Ð §À¡Äì ¸¡ðʧɡõ. "±ýÚ ¾½¢Ôõ þó¾ ;ó¾¢Ã ¾¡¸õ?" ±ýÈ À¡Ã¾¢Â¢ý ÌÃø À¢ýÉ¢ÕóÐ ´Ä¢ì¸¢ÈÐ.

¨¸¾ðÎ «¼í¸ 3.4 Á½¢òÐÇ¢¸û ¬ÉÐ. ¿ÎÅ¢§Ä§Â ±ØóÐ §À¡öŢΞ¡¸î ¦º¡ýÉ ¦¾.¦À¡.Á£ ¸¨¼º¢ Ũà þÕó¾¡÷. ÓÊÅ¢ø º¢üÚó¾¢ø ²ÚÓý ¦º¡ýÉ¡÷. "¾õÀ¢; ¯í¸ÙìÌò н¢îºø ܼ; ºÃ¢Â¡É ¸¨¾¨Âò ¾¢ÕôÀ¢î ¦º¡øĢ¢Õ츢ȣ÷¸û. þÐÅ¡ þùÅÇ× àÃõ ¸ÄÅÃò¨¾ì ¸¢ÇôÀ¢ÂÐ? þó¾ ¿¡Î ±í§¸ §À¡¸¢ÈÐ?"

þôÀÊ ¾Á¢ú ¿¡ðÊø ¿¼ôÀÐ ´ýÚõ Å¢Âô§À þø¨Ä. ±ýÉ ¦º¡øÄ ÅÕ¸¢§È¡õ ±ýÀ¨¾ô Òâ¡Á§Ä «Ãº¢Âø Àñ½ ÅÕ¸¢È ¾Á¢Æ÷¸¨Ç ±ýÉ ¦º¡øÅÐ? ¦À¡ÚòÐì ¦¸¡ûÇò ¾¡ý §ÅñÎõ. þо¡ý ¾Á¢ú ¿¡Î.

¸£¨Æ ¿¡ðÎì ¸Å¢»ý (¾¨ÄÅÉ¡Ôõ þÕó¾¡ý) ¦º¡ýÉ¡ý:

"ÒÃ𺢠±ýÀÐ §¾É£÷ Å¢Õó¾øÄ; «Ð ´Õ «Æ¸¢Â µÅ¢ÂÓõ «øÄ. «Ð ¾¨ºÔõ ÌÕ¾¢Ôõ §º÷ó¾ Áì¸Ç¡ø ¬ÉÐ. «Ð ¿Ç¢ÉÁ¡¸ þÕì¸ þÂÄ¡Ð."

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

9 comments:

Thangamani said...

நல்ல பதிவு!

வெண்தாடி வேந்தர், கீழைநாட்டுக் கவிஞன் போன்றவர்களுக்கான பெயர்கள் வாசகர்கள் மனதில் உண்டாக்கும் மனச்சாய்வையும்,முற்பதிந்த சார்புக்கருத்துக்களையும் தூண்டுமெனக் கருதி அவற்றை தவிர்த்திருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். (நானும் அப்படிச் செய்வதுண்டு)
___
பிரயோகங்கள். இதற்கு தமிழில் எப்படிச் சொல்வது என்று சொல்லமுடியுமா?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//"ÒÃ𺢠±ýÀÐ *§¾É£÷ Å¢Õó¾øÄ;* «Ð ´Õ «Æ¸¢Â µÅ¢ÂÓõ «øÄ. «Ð ¾¨ºÔõ ÌÕ¾¢Ôõ §º÷ó¾ Áì¸Ç¡ø ¬ÉÐ. «Ð ¿Ç¢ÉÁ¡¸ þÕì¸ þÂÄ¡Ð."
//

¦Ã¡õÀ ¯ñ¨Á ³Â¡.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

நான் தெபொமி இனைப் பற்றிக் கேட்டிருந்தது விட்டுப்போனது :-(

அன்பின் இராமகி, தெபொமீ இனைப் பற்றி அண்மையிலே ஒரு சஞ்சிகையிலே பேச்சு-எதிர்ப்பேச்சு வந்திருந்தன; அவர் சாதியினை முன் வைத்தே பல்கலைக்கழகப்பேராசியர்களின் பதவிகளை நிரப்பினார் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து, உங்களுக்கு ஏதாவது விடயங்கள் அறிந்திருந்தால், எழுதுவீர்களா?

Mookku Sundar said...

அருமை ஐயா...

எல்லா வளங்களும் பெற்று நாமெல்லாம் முன்னேற்றப்பாதையில் போகும்போது இன்னமும் சாதி சாதி யென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிற்போக்குத்த்னம் என்கிறார்கள்.
இன்னமும் சில இடங்களிலும், பலர் மனங்களிலும் மறைமுகமாக இவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நோய் தீர்ந்து விட்டது என்று எல்லாரும் கையை வீசிக் கொண்டு போய் விட்டால், தீர்ப்பது எங்ங்னம்..??

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி, மதி, பெயரிலி மற்றும் மூக்கன்,

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி

தங்கமணி:

வெண்தாடி வேந்தர், கீழைநாட்டுக் கவிஞன் என்று அழைப்பது சொல்லாமற் சொல்லுவது தான். ஒரு சில பெயர்கள் நம்மவரைச் சிந்திக்கவிடாமல் தடுத்துவிடுகின்றன. பந்தை ஆடாமல் பந்தாளியை ஆடுவது நமக்கு மிக எளிதாக வந்த கலை. அண்மையில் பா.ம.க. சட்டப் பேரவையில் தமிழ்வழிப் பாடக் கல்வியைப் பற்றி அரசாணை போடுங்கள் என்று சொல்லும் போது அதற்கு விடை தராமல், உங்கள் சின்னய்யாவை வேட்டி கட்டச் சொல்லு என்று சொல்வது போல் திருப்பிவிடப் பலர் இருக்கிறார்கள். வேட்டி கட்டினவன் தான் தமிழனா? வேட்டி கட்டாதவன் தமிழன் இல்லையா? தமிழ்வழிப் பாடக் கல்விக்கும் அன்புமணி குப்பாயம் - குழாய்ச்சட்டை (coat- pant) போடுவதற்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. அந்த அம்மாவிற்கு அந்த நேரம் குறுக்கே ஏதோ சொல்ல வேண்டும். சொல்லியிருக்கிறார்கள். பேரவை முடிந்தது. இப்படி எதையோ நாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு சில பெயர்களை நேரடியாகக் கையாண்டால் புலனம் வேறெங்கோ போய்விடும். எனவே தவிர்த்தேன்.

ப்ரயோகம்: இதுவும் நம்மை மயக்குற வைக்கும் ஒரு சொல் தான். பயத்தல் என்பது கொடுத்தல். பலன் என்பது பயன் என்பதும் ஒன்றுதான். பழம் என்பதும் பலம் என்பதன் நீட்சி தான். வட இந்திய மொழிகளில் பல் என்பதும் இதைத்தான் குறிக்கிறது. நாமெல்லாம் சென்னைத் தமிழை (அது உண்மையில் வட ஆர்க்காட்டுத் தமிழின் வழி வந்தது) கொஞ்சம் இளக்காரமாய்ப் பார்ப்போம். அது தவறு. அவர்களும் சில அரிதான பலுக்கல்களை காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். தெற்கத்தித் தமிழ் உயர்ந்தது; வடக்கத்தித் தமிழ் குறைந்தது என்பதெல்லாம் போலி வாதம். வாயைப் பயம் என்று சென்னையிற் சொல்லுகிறார்களே அதில் வாயை என்பது தவறான பலுக்கு. ஆனால் பயம் பழத்தின் முந்தைய நிலை. மரம் நமக்குக் கொடுப்பது பயம்>பலம்>பழம்.

பயத்தல் என்ற தன்வினை பயக்குதல் என்ற பிறவினையை உருவாக்கும். நான் அவனைப் பயக்க வைப்பேன். (அதாவது கொடுக்க வைப்பேன்.) மேலை மொழிகளில் pay என்ற சொல் வருகிறதே, அதுவும் இதே கொடுத்தல் தான். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு வியக்க வைப்பது. அந்தத் தொடர்புகளில் இந்தப் பயத்தல் - to pay என்பதும் ஒன்று.

பயக்குதல் பயக்கம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். அது வடமொழியில் வழக்கம் போல் ரகரம் நுழைத்து ப்ரயோகம் என்று ஆகும். பயன்பாடு என்று பொருள்.

பெயரிலி:

தெ.பொ.மீ.யை எனக்கு மேலோட்டமாய்த் தான் தெரியும். அவருடைய சாதிச் சார்பான செயற்பாடுகள் எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கல்லூரிக்கு வரும்போது நடந்த நிகழ்வு இது. அவருடைய சொற்களை கூடியமட்டும் அப்படியே மறுபளித்திருக்கிறேன். அவரைப் பற்றிக் குறை கூறி சில செய்திகளை நானும் படித்திருக்கிறேன். ஆனாலும் பொதுவாக மாந்தர்கள் ஒரு கலவை தானே? நமக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு விழும்பத்தை (பிம்பத்தை) உருவாக்கிக் கொள்ளுகிறோம். பின்னால் அதற்கு முரணான செய்திகள் வரும்போது தடுமாறிப் போகிறோம்.

மூக்கன்:

உங்களுடைய பின்னூட்டு சற்று பொதுவானது. சாதி என்ற கூறு, தமிழர் குமுகாயத்தில் பன்னூறு ஆண்டுகளாய் பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இதில் இருந்தும் இன்னும் வெளிவந்த பாடில்லை. ஆனால் வரத்தான் வேண்டும். நிலவுடைமைக் குமுகாயத்தின் மிச்ச சொச்சமான இதன் பரிமானத்தை நாம் முற்றிலும் புரிந்து கொள்ளவில்லை. இதைப் பற்றிய என்னுடைய பார்வையை நான் ஒரு சிறிய பின்னூட்டில் தெரிவிக்க முடியாது. வாய்ப்பிருப்பின் ஒரு நாள் விரிவாக எழுதுவேன்.

அன்புடன்,
இராம.கி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நானெல்லாம் கைக்குழந்தையாய் இருந்த காலத்தில் நிகழ்ந்த உங்கள் கல்லூரி நாள் நடப்புக்களையும் குமுகாயப் பணிகளையும் சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.

புரட்சி பற்றி நீங்கள் எழுதியிருப்பது "எண்ணத்தில் எழுமாற்றம் புரட்சி" என்று பள்ளி நாள் தமிழ்ச் செய்யுளில் படித்ததை நினைவுறுத்துகிறது. சாதியை விலக்கும் புரட்சி ஒவ்வொருவரின் எண்ணத்திலும் உருவாக வேண்டும்.

பயம்->பலம்->பழம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். சென்னையிலே பயம் என்பார்களெனில் கொங்கு நாட்டிலே பெரும்பாலும் "பலம்" தான். (ழகரம் கொஞ்சம் வராது:-) ). காசியக் கேளுங்க - உப்புமாக்குப் பலம்போட்டுப் பெனஞ்சுக்கறது பத்திச் சொல்லுவார்! சரியாய் உச்சரிக்காத குறையென்றின்றி, பண்டைத் தமிழைப் பேணுகிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம் போலிருக்கிறதே! :-)

இராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு! இந்தச் சாதி சமாச்சாரம் என்னெக்கும் ஒழியாது போலத்தான் இருக்குங்க.
செல்வராஜ் - அது 'பளம்' இல்லைங்களா?

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ், இராதாகிருஷ்ணன்,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

சாதிச் சிக்கல் அழியும். மெதுவாகத்தான் அழியுமோ என்னவோ, தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.