Monday, September 17, 2018

Anti-type of drugs

பல்வேறு எதிர்ப்பு மருந்துகளின் தமிழாக்கப் பெயர்கள்  கீழே வருகின்றன. இவற்றை ஆங்கிலத்திலேயே இனிமேலும் புழங்காது தமிழிலும் புழங்க முயலுவோம். (ஒரு சில நண்பர்களின் தூண்டலால் இதைச் செய்தேன்.)

Anthelminthic. = ஒட்டுண்ணி எதிர்ப்பி. [helminth (n.) "intestinal worm," 1852, from helmintho-, stem of Greek helmins "parasitic worm," from suffixed form of PIE root *wel- (3) "to turn, revolve."]

Antibacterial = பட்டுயிரி எதிர்ப்பி [bacteria (n.) [1847, plural of Modern Latin bacterium, from Greek bakterion "small staff," diminutive of baktron "stick, rod, staff, cudgel." So called because the first ones observed were rod-shaped. Introduced as a scientific word 1838 by German naturalist Christian Gottfried Ehrenberg. The Greek word is from a PIE *bak- "staff used for support, peg" (compare Latin baculum "rod, walking stick;" Irish bacc, Welsh bach "hook, crooked staff;" Middle Dutch pegel "peg, pin, bolt"). De Vaan writes, "Since *b was very rare in PIE, and Celtic shows an unexplained geminate, we are probably dealing with a loanword from an unidentified source."]

Antibiotic = உயிரி எதிர்ப்பி [biotic (adj.) "pertaining to life," 1847, also biotical (1847), from Latin bioticus, from Greek biotikos "pertaining to life," from bios "life," from PIE root *gwei- "to live." Biotic factor was in use by 1907. Related: Biotical. Biotics "science of vital functions and manifestations; powers and qualities peculiar to living organisms" (T. Sterry Hunt) is from 1882.]

Anticoagulant = குவல் எதிர்ப்பி [coagulate (v.) early 15c., "to clot, congeal, become curdled, change from a liquid into a thickened mass; to make to clot," from Latin coagulatus, past participle of coagulare "to cause to curdle," from cogere "to curdle, collect" (see cogent). The earlier verb was coagule, c. 1400, from Old French coaguler and directly from Latin. Related: Coagulated; coagulating.]. cogent (adj.) "compelling assent or conviction," 1650s, from French cogent "necessary, urgent" (14c.), from Latin cogentem (nominative cogens), present participle of cogere "to curdle; to compel; to collect," literally "to drive together," from assimilated form of com "together" (see co-) + agere "to set in motion, drive, drive forward; to do, perform" (from PIE root *ag- "to drive, draw out or forth, move").] பால்போன்ற ஒரு நீர்மத்தில் கொழுப்புப் பொருளும் (எண்ணை/வெண்ணைப்பொருளும்) நீரும் சேர்ந்து பிரியாதபடி இருக்குகிறது. இதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறிட்டு நீரக அயனிச் செறிவைக் காடிநோக்கி மாற்றிவிட்டால், கொழுப்பு திரண்டு குவ்விவிடும்/கூடிவிடும். நீர் தனியே பிரியும். எண்ணெய்ப் பொருள் குவலுகிற காரணத்தால் இந்நிகழ்வைக் குவலுதல் என்று சொல்வோம். குவலாது பால் போல் ஓர் உயிர் நீர்மத்தை வைப்பதற்குக் குவலெதிர்ப்பியைச் சேர்ப்பார்கள்.  .

Anticonvulsant = குலைவு எதிர்ப்பி convulse (v.) 1640s, "to shake or disturb by violent, irregular action" (transitive); 1680s, "to draw or contract spasmodically or involuntarily" (intransitive); from Latin convulsus, past participle of convellere (transitive only) "to pull away, to pull this way and that, wrench," hence "to weaken, overthrow, destroy," from assimilated form of com "with, together" (see con-) + vellere "to pluck, pull violently" (see svelte)] குலைவு என்பது ஒழுங்கற்ற முறையில் அதிர்ச்சியோடு, வன்முறை காட்டுவது தான்.
--------------------
Anti -emetic = ஓக்கள எதிர்ப்பி [emetic 1650s (n.), 1660s (adj.), from French émétique (16c.), from Latin emeticus, from Greek emetikos "causing vomiting," from emesis "vomiting," from emein "to vomit," from PIE *weme- "to spit, vomit" (see vomit (v.)).] (வாயிலிருந்து எகிறிவந்து வெளியே கொட்டுவதை வாயாலெடுத்தல் என்பதும், வா(ய்)ந்தி என்பதும் வட்டாரச் சொற்களாகும்.. அதே போல் ஓக்களம் என்பது சிவகங்கை மாவட்ட வட்டாரச்சொல்லாகும். vomit என்பதை வா(ய்)ந்ந்தி என்று சொல்வதால், இங்கே ஓக்களம் என்ற சொல்லைத் தேர்ந்தேன். ஓக்களித்தல் என்பது தொழிற்பெயர். இச்செயலின் போது வாய் ஓ எனத் திறக்கிறது. .

Antifilarial = இழையுரு எதிர்ப்பி [Filariasis is a parasitic disease caused by an infection with roundworms of the Filarioidea type.[1] These are spread by blood-feeding black flies and mosquitoes. This disease belongs to the group of diseases called helminthiases.] file = இழை; filaria = இழையுரு

Antihaemophilic = செம்பால்விழை எதிர்ப்பி [hemo- word-forming element meaning "blood," perhaps via Old French hemo-, Latin haemo-, from Greek haimo-, contraction of haimato-, combining form of haima "blood" (see -emia).] குருதிக்கு பல்வேறு சொற்கள் தமிழிலுண்டு. அதில் செம்பாலும் ஒன்று. அதை இங்கு பயன்படுத்துகிறேன்.

Antihistamine = குத்தமைன் எதிர்ப்பி [histo- medical word-forming element, from Greek histos "warp, web," literally "anything set upright," from histasthai "to stand," from PIE root *sta- "to stand, make or be firm." Taken by 19c. medical writers as the best Greek root from which to form terminology for "tissue, structural element of the animal body."] (அமைன் என்ற சொல்லை வெறும் எழுத்துப்பெயர்ப்பு செய்தேன்.)

Anti-hormone = சுரநீர் எதிர்ப்பி [A hormone (from the Greek participle “ὁρμῶ”, "to set in motion, urge on") is any member of a class of signaling molecules produced by glands in multicellular organisms that are transported by the circulatory system to target distant organs to regulate physiology and behaviour.]

Anti-microbial = நூகுயிர் எதிர்ப்பி
--------------------
Antileprotic = குட்ட எதிர்ப்பி [leprosy என்பது தொழுநோய், குட்டநோய் என்றும் விதவிதமாய்ச் சொல்லப்படும். குட்டம் என்ற சொல் இங்கு ஆளப்படுகிறது.)

Anti-malarial. = சதுப்புநோய் எதிர்ப்பி [malaria (n.) 1740, from Italian mal'aria, from mala aria, literally "bad air," from mala "bad" (fem. of malo, from Latin malus; see mal-) + aria "air" (see air (n.1)). Probably first used by Italian physician Francisco Torti (1658-1741). The disease, now known to be mosquito-borne, once was thought to be caused by foul air in marshy districts] நிலம் சதுப்பாய் இருந்தால் அந்த இடத்தில் கொசுக்கள் கூடும். கொசுவை ஒட்டியுள்ள நுண்ணுயிரி இந்நோயை வளர்க்கும். இதைச் சதுப்புநோய் என்றே சொல்லலாம்.
.
Antiperistalsis= பரிச்சுருக்க எதிர்ப்பு, Antiperistaltic= பரிச்சுருக்க எதிர்ப்பி [peristaltic (adj.) 1650s, from Modern Latin, from Greek peristaltikos (Galen), literally "contracting around," from peri "around, about" (see peri-) + stalsis "checking, constriction," related to stellein "draw in, bring together; set in order" (see diastole).]

Antiplasmodial = பால்மவூடி எதிர்ப்பி [A multinucleate, often large mass of protoplasm that moves and ingests food and is characteristic of the vegetative phase of plasmodial slime molds.]. [plasma (n.) 1712, "form, shape" (earlier plasm), from Late Latin plasma, from Greek plasma "something molded or created," hence "image, figure; counterfeit, forgery; formed style, affectation," from plassein "to mold," originally "to spread thin," from PIE *plath-yein, from root *pele- (2) "flat; to spread." Sense of "liquid part of blood" is from 1845; that of "ionized gas" is 1928.] [Protozoa (n.) 1828, from Modern Latin Protozoa, coined 1818 by German zoologist Georg August Goldfuss (1782-1848) from Greek protos "first" (see proto-) + zoia, plural of zoion "animal" (from PIE root *gwei- "to live"). Originally including sponges and corals; current sense is from 1845.].

[குருதியில் உள்ள பல்வேறு பொருள்களை எடுத்துவிட்டால் மிஞ்சுவது பால்மம். சிலவகைப் பூச்சிகள் கடிக்கும் போது தம் உடம்பிலுள்ள குருதியை உறிஞ்சுகின்றன. அதேபொழுது தம்மைப் பற்றியுள்ள முதற்றளைகளை (முதற்றளை = முதல்+தளை; தளை = விலங்கு) நம் குருதிப் பால்மத்திற்குள் பரப்பிவிடுகின்றன. இப் பால்மங்களின் ஊடே வளரக்கூடியது இம் முதற்றளைகள். அதனால் இவற்றை பால்மவூடி என்கிறோம்.]
-----------------
(Antipyretic = எரிச்சல் எதிர்ப்பி

Antiseptic = சீழ்ப்பு எதிர்ப்பி [septic (adj.) c. 1600, from Latin septicus "of or pertaining to putrefaction," from Greek septikos "characterized by putrefaction," from sepein "make rotten or putrid, cause to rot" (see sepsis). Septic tank is attested from 1902.] putrefaction ஆனதையே தமிழில் சீழ் என்கிறோம். சீழ்த்தல் என்பது தொழிற்பெயர்.

Antispasmodic = இழுப்பு எதிர்ப்பி [spasmodic (adj.) 1680s, from French spasmodique, from Medieval Latin spasmodicus, from Greek spasmodes "of the nature of a spasm," from spasmos (see spasm) + -odes "like" (see -oid).] .[spasm (n.) late 14c., "sudden violent muscular contraction," from Old French spasme (13c.) and directly from Latin spasmus "a spasm," from Greek spasmos "a spasm, convulsion," from span "draw up, tear away, contract violently, pull, pluck," from PIE *spe- "stretch." Figurative sense of "a sudden convulsion" (of emotion, politics, etc.) is attested from 1817.]

Antitetanus = திணுக்கு எதிர்ப்பி tetanus (n.) infectious disease, late 14c., from Latin tetanus "tetanus," from Greek tetanos "tetanus, muscular spasm," literally "a stretching, tension," from teinein "to stretch" (from PIE root *ten- "to stretch"); "so called because the disease is characterized by violent spasms and stiffness of the muscles" [tension என்பதைத் தமிழில் திணுக்கு என்றே சொல்லுவோம்.]

Antithyroid = தொண்டைச் சிதைவு எதிர்ப்பி [thyroid (adj.) 1690s (in reference to both the cartilage and the gland), from Greek thyreoiedes "shield-shaped" (in khondros thyreoiedes "shield-shaped cartilage," used by Galen to describe the "Adam's apple" in the throat), from thyreos "oblong, door-shaped shield" (from thyra "door," from PIE root *dhwer- "door, doorway") + -eides "form, shape" (see -oid). The noun, short for thyroid gland, is recorded from 1849.] (தொள் என்பது துளையோடு தொடர்புடையது. தொள்>தொன்ஐ; துவாரம் என்ற சங்கதச் சொல்லும் நம் துளையோடு தொடர்புடையதே. தொண்டைக்கு அருகில் வளரும் கட்டி “தையாய்ட்டுக்” கட்டி. இதுபோன்ற உடற்சிதைவுகள் “தைராய்டு“ தொடர்பானவை.

Antitoxin = நச்சு எதிர்ப்பி

அன்புடன்,
இராம.கி,

No comments: