மீண்டும் இன்னொரு “ஒன்றுபோற் தோன்றும் 3 சொற்கள்”
ஒருமுறை (காலஞ்சென்ற) மருத்துவர் செயபாரதி தமிழிணையம் மடற் குழுவில் “விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும், ஏன் Liberty, Freedom, Independance - இற்கும் இடையே கூட, வித்தியாசமுண்டு. சிந்தனைக்கு.." என்றெழுதினார். அது மிகவுண்மை. அதுபோற் கேள்வி முகநூலிலும் எழுந்தது. இதுபோற் கேட்க வேண்டியது தான். ஆனால் கூகுளில் தூழாவிப் மடற்குழுச் சிந்தனைகளைத் தேட நேரஞ் செலவழியாது, இளம்நண்பர் சட்டெனக் கேள்வி தொடுக்கிறார். இதனால் முன்பேசியவற்றை மீளப் பேசவேண்டியுள்ளது. எம்போலும் முதியோருக்கு இது சற்று அலுப்பைத் தரும்.

ஒரு கட்டுரை எழுத வேண்டுமாயிலும், பழம் எடுகோள்களைத் (references) தேடிப் பாராது, “இன்று புதிதாய்ப் பிறந்தோமெனப்” புதிய தலைமுறை இயங்கினால், தமிழ்க் குமுகம் தழைக்குமோ? அடுத்த நூறாண்டுகளில் தொடக்க நிலையிலேயே நாம் இருந்துவிட மாட்டோமோ? இது சரியா? (அகரமுதலிகளைப் புரட்டிப் பாராது சொற்களைப் பற்றி அடிப்படைக் கேள்விகள் முகநூலில் எழுவதுங்கூட வியப்பைத் தருகிறது.)
இப்போது liberal, liberty என்பவற்றை முதலிற் பார்ப்போம். இதற்கான விளக்கம் தமிழிணையம் மடற்குழுவின் அதன் ஒருங்கிணைப்பாளர் சிட்னி பாலாப் பிள்ளை கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்ட ”Masked fascists and hard liberals” தொடரின் இரண்டாம் பகுதியில் (http://valavu.blogspot.in/2005/05/masked-facists-and-hard-liberals-2.html) இருக்கிறது. liberal, liberty போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. நான் பெரிதும் எடுத்துக் காட்டும் "Dictionary of word origins" - இல்
"Latin word for 'free' was liber. It came from the same prehistoric source as Greek eleutheros 'free', which may have denoted 'people, nation' (in which case the underlying etymological meaning of the word would be 'being a member of the (free) people' as opposed to 'being a slave'). From liber was derived liberalis 'of freedom', which passed into English via Old French liberal. Its earliest English meanings were 'generous' and ' appropriate to the cultural pursuits of a 'free' man' (as in 'the liberal arts'). The connotations of 'tolerance' and 'lack of prejudice' did not emerge until th 18th century, and the word's use as a designation of a particulara political party in Britain dates from the early 19th century. Also fom Latin liber came English libertine and liberty"
என்று குறித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழாக்கம் காணுமுன், தமிழ்ச் சொற்கடலுள் கொஞ்சம் அடியாழம் போய் அங்கிருந்து மேல்வர வேண்டும். நாம் தொடங்கும் அடியாழம் பல சொற்களுக்கு வித்தான ஊகாரச்சுட்டு இது முன்மை, தோற்றம், வெளிவிடல், உயர்ச்சியெனும் பொருள்களைக் காட்டப் பயன்படுகிறது. இங்கே முன்னிலை, தோற்றப் பொருள்களைத் தவிர்த்து, வெளிவிடலையும், உயர்ச்சியையுங் காட்ட விழைகிறேன். கீழே வரும் சொற்களில், நுணுகிய வகையில் ஒரு கருத்தில் இன்னொன்று கிளர்ந்து தொடர்ச்சியாகப் பொருள் நீட்சியாவதைப் பார்க்கலாம். இந்த இயல்பு மலர்ச்சி தான், மொழியின் வளர்ச்சி. இதைப் புரிந்துகொண்டால், தமிழ் ஒரு இயல் மொழி; நாட்பட்ட மொழி என்பது புரிந்துவிடும். (வழக்கம் போல், மொழி ஞாயிறு பாவாணருக்கு நாம் கடம்படுகிறோம்.)
ஊ>உ>உய்>உய்த்தல்= முன்தள்ளல், செலுத்தல்; உய்>உயிர்; உயிர்த்தல்= மூச்சுவிடுதல்; மூச்சே உயிர்ப்பு எனப்பட்டது. ஊ> ஊது= காற்றைச் சேர்த்து வெளியிடு. ஊது> உது> உதை= காலால் முன்செலுத்து. உது> உந்து= முன்தள்ளூ. உய்> உய்தல்= முன்செல்லல், செல்லல். உய்> உய்ம்பு> உயும்பு> உயம்பு= முன்செலுத்து; மேற்செலுத்து. உயம்பு> அம்பு=முன்செலுத்திய கூரான கம்பு. உய்> ஒய்; ஒய்தல்= செலுத்தல். உய்> எய்; எய்தல்= அம்பைச் செலுத்தல். (வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு பரவளைவாய் (parabola) உயரப் போய் பின் தாழவந்து தாக்குவதை ஓர்ந்து பார்த்தால் விளங்கும். இப் பரவளைப் போக்கே உயரச் செலுத்தலையும், முன்செலுத்தலையும் அடுத்தடுத்த பொருள் நீட்சியாகக் கொள்ள வகைசெய்கிறது. பறவை, அம்பு போன்றவை இப்படிப் பரவளைவாகப் போவதைக் கண்ணுற்ற ஆதிமனிதனுக்கு உயரச் செல்லலும், முன்னே செல்லலும் ஒன்று மற்றொன்றின் வளர்ச்சியாகவே தென்படும். அம்பு மட்டுமின்றி, இற்றைக் கால ஏவுகணைகள் கூட இப்படிப் பரவளைவாய் எய்யப் படுகின்றன.)
உய்> உயங்கு> ஊங்கு= உயர்வு, மிகுதி. உய்> உயர்> உயரம். உயர்> ஊர்; ஊர்தல்= ஏறல், ஏறிச்செல்லல். ஊர்> ஊர்தி. ஊர்> ஊர்த்தம்> ஊர்த்வம் (வடமொழி); முயலகன் மேலேறித் தாண்டவம் ஆடியதால் ஊர்த்துவ தாண்டவம் ("இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!" எனும் தாண்டவம்.) உய்> ஒய்> ஒய்யல்= உயர்ச்சி. ஒய்யல்> ஒய்யாரம்= உயர்நிலை ("ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈரும்பேனும்" என்ற சொலவடை.). ஒய்> ஒயில்= ஒய்யாரம், உயரக் குதித்தாடும் கும்மி; ஒயில் ஆட்டம்= குதித்தாடும் ஆட்டம் (மயிலாட்டம் ஒரு மாதிரி, ஒயிலாட்டம் இன்னொரு மாதிரி.). ஓய்> ஓய்ங்கு> ஓங்கு= உயரம் (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி....). ஓங்கு> ஓக்கு> ஓக்கம்= உயரம், பெருமை. ஓய்> ஓய்ச்சு> ஓச்சு= உயர்த்து (கடிதோச்சி மெல்ல எறிக, குறள் 572). ஓய்> ஓப்பு; ஓப்புதல் உயர்த்தல். ஓப்பு> ஓம்பு; ஓம்பல்= உடல் உயருமாறு வளர்த்தல்; பேணல், காத்தல். உய்> உய்கு> உக்கு> உக்கம் = தலை, கட்டித்தூக்கும் கயிறு
உயும்பு> உயும்புதல்= மேலெழும்ப வைத்தல். உயும்பு= jump (yu என்று இதன் மாற்றொலியோடு jumpஐப் பலுக்கிப்பாருங்கள்; விளங்கும்). உயும்பு> உசும்பு; உசும்புதல்= உறங்கினவன் மெல்ல உடம்பசைத்து எழுதல். உசும்பு> உசுப்பு= உறக்கத்திலிருந்து எழுப்பு (பிறவினை). உய்> உய்கு> உகு> உகல்; உகல்தல்= அலையெழல். உகல்> உகள்> உகளுதல்= குதித்தல்= உயர எழும்பல். உகு> உகை; உகைத்தல்=எழுதல், எழுப்பல்; உயரக்குதித்தல். குதி> கொதி; கொதித்தல்=உயர எழும்புதல் (பால் கொதி வந்திருச்சா?) குது> கொது> கொந்து> கொந்து அளித்தல்= கடல் கிளர்ந்தெழுதல் குது> குது களித்தல் = உயர எழும்பி மகிழ்ந்து இருந்தல் (குதுகலித்தல் என்று எழுதுவதுமுண்டு. யாரோ வொரு நண்பர் குதுகலம் தமிழில்லை என்றார். அது தவறு.). புளித்துப் பொங்குதலும், உவர்த்துப் பொங்குதலும் உயர எழுவது தான்.
உகு> உகின்> எகின்= புளி. உய்> உய்வு> உவு> உவர்> உவரி= உவர் நீர்க்கடல், திருச்செந்தூருக்கு அருகிலுள்ள ஊர். உவு> உவண்= உப்பு. உவணம் =உயரப் பறக்கும் பருந்து. உவணை= தேவருலகம் உவச்சன்> ஓச்சன்> ஓசன்= தெய்வத்தை ஏத்துபவன். உய்> உய்வு> உய்பு> உய்ப்பு> உப்பு; உப்புதல்= எழுதல், பருத்தல், வீங்குதல். உப்பு> உம்பு> உம்பர்= மேல், மேலிடம், தேவர் (up, upper என்ற சொற்களும் அதே பொருளைத் தருகின்றன). உய்> உய்து> உய்த்து> உத்து> உத்தம்> உத்தரம்= உயர்ந்த இடம். உத்தரியம்= மேலாக அணிந்து கொள்ளும் துணி (வடமொழிச் சொல்). உகு> உகத்தல்= உயர்தல் "உகப்பே உயர்வு" (தொல். உரியியல், 8). உத்தம்> உச்சம்= உயர்ச்சி. உத்து> உச்சு> உச்சி= உச்சமான இடம்
உய்> எய்> ஏ> ஏவு; ஏவுதல்= செலுத்தல், தூண்டல்; ஏவு> ஏவல்> ஏவலன். ஏவு= அம்பு; ஏவுகணை. எய்> எயின்> எயினன்= அம்பெய்யும் வேடர்குடி; குறிஞ்சிநில மக்கள். எய்> எயில்= மறவர் இருந்து அம்பு எய்யும் மதில். உ> உன்; உன்னல்= உயர எழுதல். உன்னு> உன்னதம்= உயர்ந்தது (இதை வடமொழியெனப் பலரும் தவறாய் எண்ணுகிறார்.) உன்னு> உன்னிப்பு= உயரம். ஏ> எ> எஃகுதல்=ஏறுதல். ஏ> ஏகு> ஏகல்= மேலே செல்லல். எக்கல்= வெளித்தள்ளல். எக்கர்= கடல் வெளித் தள்ளிய மணல்மேடு. எகிரல்= எழுதல், குதித்தல். எய்> எய்ல்> எல்= வெளிவரல்; இடைவிடாது நாள்தோறும் தோன்றி மறையும் கதிரவன்; (helios) ஒளி.

எல்> எள்> எள்+து> எட்டு= உயர்ந்து அல்லது நீண்டு தொடு. எட்டு> எட்டம்= உயரம், தூரம் (சிவகங்கை வழக்கு). எட்டன்/ ஏட்டன்> சேட்டன்= தமக்கு உயர்ந்தோன்; அண்ணன் (மலையாளம்). சேட்டன்> சேத்தி> சேச்சி= அக்காள் (மலையாளம்). எட்டர்= அரசனுக்கு நாழிகைக் கணக்குரைக்கும் ஏத்தாளர். எட்டி= உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர் தலைவனுக்கு வழங்கிய பட்டம். எட்டி>செட்டி= வணிகன். எட்டு>செட்டு= வணிகனின் தன்மை. எட்டி>ஏட்டி> சேட்டி>சிரேஷ்டி (வடமொழியில் வணிகன் பெயர்). ஏட்டு>சேட்டு = வடநாட்டு வணிகன்
எட்டு> எடு= தூக்கு, நிறுத்து. எடுப்பு= உயர்வு. எடு> எடை= நிறை. எள்+னு= எண்ணு= மென்மேலும் கருது; கணக்கிடு. எண்= மென்மேலும் செல்லும் தொகை. எய்> எய்ம்பு> எம்பு; எம்புதல்= எழுதல், குதித்தல். எய்> எய்வு> எவ்வு; எவ்வுதல்= எழுதல், குதித்தல். எய்> எழு; எழுதல்= உயர்தல், கிளர்தல். எழு> எழுவு; எழுவுதல்= எழச் செய்தல். எழு> எழுச்சி= எழுந்த செயல்; எழுநிலை, எழு என்பது கட்டப்பட்ட நிலையிலிருந்து விடுபடும் நிலை குறிப்பதே. எழுந்து நிற்கும் தோற்றம் பொலிவாக உள்ளது. அது எழிலென்றே கூறப்படும். உயரத்தி; இருக்கும் மேகம் எழிலி. உயரத் திரைச்சீலை= எழினி. எழல்= எழும்பல். எழுமை= உயர்ச்சி. எழுவன் உயர்ந்தவனாகிறான், எளியன் தாழ்ந்தவன் ஆகிறான். உயர்ந்த நிலை, மிகுதியான நிலையும் ஆனபடியால் அதற்குத் தாராளப் பொருளும் வந்துவிடுகிறது.
போதல், என்ற சொல் போதரல், போதருதல் என்றாவதுபோல், எழுதல் எழுதரல் ஆகும். இப்படித் துணைவினை கொண்டு முடிப்பதும் ஒரு வழக்குத் தான். இளி எனில் இகழ்ச்சி. இளி வரல், இளி வரவும் இகழ்ச்சியே. வரலும் துணைவினை ஆகலாம். இப்படிப் புதிதாய் அமைவதே எழுவரல். எழுவல்> எழுவரல்= liberal. "இந்த வருசம் ரொம்ப மோசங்க; தேர்வு ரொம்பக் கடினம், எழுவரலா மதிப்பெண் (liberal-ஆ mark) போட்டாத்தான் உண்டு". "என்ன படிக்கிறீங்க?" "எழுவரற் கலைங்க; வரலாறு" "தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்சிகள் எழுவரற் பார்வை (liberal view) கொண்டவை; எல்லாவற்றையும் பொதுக்கையர் (fascists) என்றுவிட முடியாது. இன்னுஞ் சில கட்சிகள் எழுவரற் பார்வைக்கும் மேலே புரட்சிப்பார்வை (revolutionary view) கொண்டவை. குறிப்பாய்த் தாழ்ந்த மக்கள் (dalit people; தலித் எனும் மராட்டி வழக்கைப் பலுக்காது, தமிழ் வழக்கையே சொல்லலாம்) கட்சியெனில், புரட்சி, மறுக்காமல் இருக்கும். எழுவரல் எனும் போது "ஏற்றுக்கொள்ளூம் தன்மை" (tolerance), "பிரித்துப் பாராத் தன்மை (lack of prejudice) போன்றவையும் புலப்படும். "liberal" -இக்கு முலமான "எழுதல்", நம்மிடம் ஏற்கனவே இருப்பினும், ”எழுவரல்” எனும் வளர்ந்த கருத்து நமக்கு வெளியிலிருந்து வந்ததே.
எழுவரல், liberal உக்கு ஆவது போல் எழுவுதி, liberty க்குச் சரிவரும். எழுவுதி = எழமுடியுந் தன்மை; தாழாத் தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத் தன்மை. ஆனால் இச்சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறிப் பயன்படுத்துகிறார். துல்லியங் கருதின், சொல்லாட்சிகளை மாற்ற வேண்டுமென்றே நான் சொல்லுவேன். சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.
I have the liberty to do it. அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves. எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right. எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.
இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். (http://valavu.blogspot.in/2005/05/liberty-freedom-independance.html) சொற்பிறப்பியலின் படி, The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source. என்று சொல்வர்.
இவ்விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறாரே, அந்த உறவின் முறையில் உள்ளவர் எல்லாம் free; மற்றவர் free இல்லாதவர் என்று பொருள்படும்.. இவ் உறவின் முறையிலுள்ள நம்மவர் எல்லாம் பரிவுள்ளவர்; பரிவுக்குரியவர். மற்றவரோ பரிவுக்கு உள்ளுறாதாவர். "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்பதை எண்ணுங்கள். பரிதல் என்பது உற்றவருக்கு உரியது. இப்பரிவு நம்முறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டுமல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோர்க்கும் உரியதென்பது இற்றைச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. (பரிவுடைமைக்கும் பரியுடைமைக்கும் வேறுபாடு கொண்டால் நன்று.) தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமைகொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவன் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையாரென்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப்போலப் பரியுடைமை.
"அவனுக்குப் பரிந்து கேள்வி கேட்க வருகிறாயே?" எனில் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ, விட்டுக்கொடுக்க இயலாது என்றே பொருளாகும். "நான் பரியாமல் வேறு யார் பரிவார்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் நானும் மாந்தர்கள்" என்று பரியுடைமை நமக்குள் விரியும். பரி(தன்)மையை freeness எனலாம். பரிமையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத்தான் விட்டவெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழிபெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியெனினும், அடிப்படைப் பொருளை, விட்டவெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டுவரவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இச்சொல் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்தது. குறுகிய அரங்கென்று ஏன் சொல்கிறேன் எனில் விடுதலை எண்ணும்போது நாம் முன் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக விடுதலை எனும் போது ஏதோ ஒரு குறை, எதிர்மறைச் சொல்போல் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்து வரும் போக்கைச் சுட்டும். எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றாவெனில் ஏறத்தாழ ஒன்று. ஆனால் நுணுகிய வேறுபாடுண்டு. எழுவுதியில் தன்முனைப் போக்கு முகமையாகும். பரியுடைமையில் சுற்றியுள்ளோரைக் கருதும் போக்கு முகமையாகும். அடிமைத் தளையிலிருந்து பரியுடைமைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன் மூலம் பரியுடைமை அடைகிறோம்.
அடுத்து independence: ”புடலங்காய் பந்தலில் தொங்குகிறது”, ”நீல விதானத்து நித்திலப் பூம்பந்தற் கீழ் மாலை மாற்றினர்”, எனும் போது, பந்தல் மேலிருந்து தொங்குவதை புரிந்து கொள்கிறோம். பந்தல், காலில் நிற்கலாம்; மோட்டு வளையில் முட்டுக் கொடுத்தும் தொங்கலாம். பந்துதலின் அடிப்படை கட்டுவதே. கட்டுமானப் பெயர் பந்தல்/ பந்தர். ஒலை, துணி, தகரமெனக் கட்டும் பொருளுக்குத் தக்க பந்தல் அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலுமின்றிக் கீழுமின்றி நடுத்தரமாய் உள்ளதால் பந்தரித்தல் என்றும் பந்தரமென்றும் பின் அந்தரமென்றும் உருத் திரியும். பந்தப் படுவது, கட்டப்படுவதே. ஒன்றைச் சார்ந்து அல்லது அடுத்து, பந்தப் படுவது depend ஆகும். அதாவது பந்தப்பட்டு நிற்பதே depend. பந்தப்பட்ட நிலை dependent status. பந்தப்படா/ பந்துறா நிலை = independent status. இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலில் நிற்கும் நிலையென்று கொண்டு வட மொழியில் சுவ தந்திரம் என்றார். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றும் மொழி பெயர்க்கலாம். வெறுமே independent என்பதில் பொருள் வராது. independent of what என்ற கேள்வி உடனெழும். பலவிடங்களில் இதன் விடை தொக்கி நிற்கலாம். தொக்கி நிற்கும் இடங்களில் விடுதலை, சரியாகும்.
சிலர் independant ஐத் தன்னுரிமை எனச்சொல்ல விழைவர். தன்னுரிமை= self-right; liberty அல்ல. எத்தனையோ liberals, self-right groups- இல் உறுப்பினராவார். liberalism is different from self-right. பெரியார் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் திராவிடர் கழகமாய் மாற்றினார். அது ஒரு தன்னுரிமைக் கழகமே. அதை liberal ஆகக் கொள்வது அவ்வளவு சரியாகாது. self-righteous attitude- ஐயும் liberal attitude- ஐயும் எப்படிப் பிரித்துச் சொல்வது? தன்னுரிமை, எழுவுதி என என் வழியில் முடியும். A self-righteous individual need not be a liberal. தன்னுரிமையாளன் எழுவுதியாளனாய் இருக்க வேண்டியதில்லை. தன்னாண்மை, ஆணாதிக்க உணர்வைக் காட்டுமென்பதால் அதுபோன்ற சொல்லாக்கம் தவிர்ப்பது நல்லது. management - இற்குப் பலரும் பயன்படுத்தும் ’மேலாண்மையை’ இதே காரணத்தால் நான் தவிர்ப்பேன். அதோடு, to manage -இற்கு இணையாய், சுருங்கி, ’மேலாளல்’ வருவதில்லை. அதன் பொருள் to rule over என்றாகும். அதற்கு மாறாய் மானகைத்தல்= மான் (மாந்தரின் வேர்)+ அகைத்தல் (செலுத்தல்)= மாந்தரைச் செலுத்தல்= to manage என்றே பரிந்துரைக்கிறேன். இனி independent -ஐப் பயனுறுத்திச் சில வாக்கியங்களைப் பார்க்கலாம்.
India became independent in August 15, 1947. இங்கே independent of British rule எனத் தொக்கிநிற்கிறது. ”இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது” எனலாம் அல்லது 1947, ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்ததென்றுஞ் சொல்லலாம். There are 4 independent producers other than the MNC's for this drug in India. இங்கே விடுதலையும், வடமொழிச் சுதந்திரமும் சரிவரா. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவையே சரிவரும். ”தனிப்பட்ட/ தனித்த” மிகச் சரியாகப் பொருந்தும். "இந்தியாவில் இம்மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்." independence= பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை. freedom- இற்கும் independence- இற்கும் ஒற்றுமைகள் நிறையவிருந்தாலும் நுணுகிய வேறுபாடுமுண்டு. காட்டாகப் பரியுடைமை, இந்தியாவைப் பொறுத்தவரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; எந்நாளும் கையாளலாம்; ஆனால் காப்பாற்ற வேண்டும். தன்னாளுமை வந்து சேர்ந்து விட்டது. இழக்காதவரை, அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். மூன்று சொற்களுக்கும் இதுவரை கூறிய விளக்கங்கள் போதுமென எண்ணுகிறேன். துல்லியங்கருதி கீழ்க்கண்டவாறு தமிழில் புழங்கலாம்.
Liberty = எழுவுதி
freedom = பரியுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment