இனி வார்த்தகம்/வர்த்தகம் (வாணிகம்), பரிவட்டணை (exchange), தடகு (trade), பரத்து (barter), மாற்றன் (merchant), குவிமாற்று (commerce), மாங்கர் (monger), பகரல் (to say a price), வில்நர் (vendor), கூவுகர் (hawker), பீடிகை/பெட்டிகை (shop), பெட்டிலர் (peddler), சுற்றலர் (sutler), கொள்ளை / கொளுதை (cost), போன்ற சொற்களுக்கும், முன்கொணர்வோர் (entrepreneur) என்பதற்கும் வருவோம். இவற்றிற் சில தமிழ் வரலாற்றுப்புலத்தில் மட்டும் எழுந்தவை; சில வேறு வரலாற்றுப் புலங்களில் எழுந்தவை (ஆயினும் தமிழ் மூலங் காட்டுகின்றன.) முழுமை கருதி இவை எல்லாவற்றையுமே இங்கு தொகுக்கிறேன். இரண்டாம் வகைக்குத் தமிழிலக்கியப் பயன்பாடுண்டா, அகராதிச் சேர்ப்புண்டா என்று கேட்டு விடாதீர். (இப்படிக் கேட்பது சிலருக்கு வாடிக்கை.) என் புரிதலால் இவற்றைச் சேர்க்கிறேன். தவிர, ‘யாவாரம்” பற்றிய சொற்களுக்குத் தமிழ் வேண்டுமில்லையா?
முதலில் வார்த்தகம். வில்லியர் போல் ”வாணியர் (வாள்+நி= வாணி= அம்பு)” என்றசொல் எழுந்ததென மேலேசொன்னேன். "வாணிய" என்பது வடக்கே போய் வாணிஜ ஆகி, யகரஞ்சேர்ந்து வாணிஜ்ய ஆகும். மோனியர் வில்லியம்சு वाणिज्य- traffic, trade, commerce, merchandise என்னும். கூரலகு குறிக்கும் வாளின் செய்பொருள் கல், செம்பு, பித்தளை, இரும்பெனப் படிப்படியாய் மாறியது. வாளும் வாரென (சோழ/சோள/ சோட/சோர என்ற சொற்றிரிவு போல்) வடக்கே திரிந்தது. ஒல்லியான (ஆனால் வலிந்த) மூங்கில்முனையில் வாரைப் பொருத்தி அக்காலத்தில் அம்புசெய்தார். வார்+த்+த்+அம்= வார்த்தமாகி அம்பைக் குறிக்கும். அம்புவிடல்= அம்புவார்த்தல். வார்த்தத்தை - அம்பை - ஆள்பவன் வார்த்தன். வார்த்தகம்/ வார்த்திகம்/ வார்த்தை= அம்பு விடுங் கலை, வாணிகம். தவிர, வார்தல்= ஒழுகல், வடிதல்; வார்த்தல்= ஒழுக்கல், ஊற்றல், வடித்தல். வார்த்தகம்= வடித்தபடியிருத்தல்; occupation பொருளுஞ் சொல்வர். (வாணிகம்/ வணிகம் போல்) வார்த்தகம்/ வர்த்தகம் என்பார். பெருக்கல் = வள(ர்)த்தல்> வள்த்தல் வடக்கே வர்த்தலாகி, வர்த்தமானமாகும். vardhamAna, vartam Ana. वर्धमान mfn. increasing, growing, thriving, prosperous. தவிர, வளருஞ்செயலால் vartamAna நிகழ்காலத்தையுங் குறிக்கும். :
அடுத்தது பண்டமாற்றில் (exchange) பயன்படும் ”பரிவட்டணை”. பெருங் கோயில் விழாச்சடங்குகள் முடிந்தபின் இறைவனருள் வழங்குமாப்போல், இறைத் திருமேனியைப் போர்த்திய ஆடையால், மண்டிகப்படி செய்தோர் தலையைச் சுற்றிப் பரிவட்டம் கட்டுவார். பரிதல்= சுற்றல், மாற்றாய்க் கொடுத்தல், வட்டணை= மண்டிலம். ஒரு மண்டிலம் முழுக்க விற்பனைப் பாதையைச் சுற்றிவந்து பரிமாற்றச் செயல்களுக்கு உறுதுணையாவது பரிவட்டணை யாகும். குமுகமெங்கும் ஒருவட்டம் போய்வந்தால் பல்வேறு பண்டங்கள் மாற்றுப்படும். தமிழ் வட்டணை சங்கதத்தில் வர்த்தனையாகும். பரிவட்டணை> பரிவர்த்தனை = exchange. தமிழருமை தெரியாதோர் வர்த்தனையைப் பிடித்துக்கொள்வார்.
அடுத்தது trade (n.) எனும் ஆங்கிலச்சொல் இற்றைத்தமிழில் இது தவறாகவும், மேலைமொழிகளில் சரியாகவும் பொருளாகிறது. late 14c.,"path, track, course of action," introduced by the Hanse merchants, from Middle Dutch or Middle Low German trade "track, course" (probably originally of a ship), cognate with Old English tredan (see tread (v.)) என்பார். பண்டமாற்றில் நடுநிற்கும் தரகென்று தமிழிற் சொன்னதால்,. தடகு*>தரகு எனும் முன்தோற்றத்தை விட்டுவிட்டோம். நாம் நெய்தல் நிலஞ் சேர்ந்தவர் என வையுங்கள். நம்முப்பை விற்றுத் தடகன் கொணர்ந்த நெல்லை வாங்குவோம். தடகன் அந்த உப்பைக் கொண்டுபோய்க் குறிஞ்சி, முல்லை, மருதத்தில் தடகன் விற்பான். தடஞ் சார்ந்த வாணிகன்/சாத்தன் தடகனென்று ஆனான். தடகு, சாத்திற்கு ஒரு மாற்றுப் பெயர். பேச்சு வழக்கில் சிலபோது டகரம் ரகரமாவது இங்குமாயிற்று. அதனாலேயே இற்றைத் தமிழர்க்குச் சொல் புரியாது போனது. தரகைக் commission என்றே இன்று பலரும் புரிந்து கொள்கிறோம். எந்தத் தமிழ் அகர முதலியும் தடகைப் பதியாது, (மூலந் தெரியாத, முதற் பொருள் அழிந்த) தரகையே பதிகிறது. (தரகிலிருந்தே தடகை இங்கு நான் மீட்டுருவஞ் செய்தேன்.).
அடுத்தது பரதரை/நுளையரை ஒட்டிப்பிறந்த பரத்து. பரத்தல்= ஒசையிடல். “ஓடியாங்க, ஒடியாங்க. வஞ்சிரம் 1 கிலோ 700 உருவா, இறால் 1 கிலோ 400 உருவா.... ” என்றெலாம் காசிமேட்டுக் கடற் கரையிற் கேட்கிறோமே, அது பரத்தல் தான். 14.208 ஊர்காண்காதை. சிலப்பதிகாரத்தில் “பறைக்கண் பராரையர்” என்ற தொடருக்கு “பறையின்கண் ஓசையிடுவோர். பராரை= பரையும் அரை” என்று பொருள் சொல்வர். பரத்தற் பொருள் தெரியாவிடின், இது விளங்காது. ”மீன்விலைப் பரதவர்” என்று 5.25 இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரஞ் சொல்லும். கடலில் பரந்துசென்று மீன்பிடிப்போர் தாம் கொணர்ந்த கடல்தாரத்தைக் கரையிற் பரத்தி, பின் பரைந்து கூவி வாணிகஞ் செய்வார். எல்லா மீன்களையுயும் இவரே உண்ணமுடியாது ஆகையால், மீனை மற்றபண்டங்களுக்கு மாற்றுவார். பரத்தை ஆங்கிலத்தில் barter என்பார். ஒரு வேளை மீன்வாடையும் பேச்சும், பலருக்கும் ஒவ்வாமை தந்தது போலும். ஏது காரணமோ barter க்கு ஏமாற்றுப் பொருளும் சொல்வர்.
பண்டமாற்றில் பண்டம் விடுத்து மாற்றெனினும் அதே பொருளுண்டு. வில்தல் எப்படி விற்றலையும், அம்புவிடுங் கலையையும் குறித்ததோ, அதுபோல் மால்தல்>மாற்றல் (மால்= நுளை, வலை) என்பது பண்ட மாற்றையும், மீன் பிடிப்பையுங் குறித்தது. மால்முடித்தல்= வலைபின்னல். மாற்றல்/ மாற்றுகை/ மாறாட்டம்= பண்டமாற்று. மாற்றுகிறவன் மாற்றன்/ மாற்றகன் (merchant). மாற்றை= merchandise. மாற்றிற்கு விலைப்பொருளுஞ் சொல்வர். அண்மையில் பண்டமாற்றின் தொடர்பாய் ஐராவதம் மகாதேவன் ஒரு சிந்துவெளிக் குறியீடு சொல்லி, அதன்வழி மாறனெனும் பாண்டியனின் குடும்பப்பெயரை விளக்குவார். அவ்விளக்கத்தை நான் ஒப்பாவிடினும், அவர் சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு சாத்திற் செல்லும் வாணிகன், பல்வேறு பண்டங்களைக் குவித்து வண்டிகளிலெடுத்துப் ஊரூராய் மாற்றி வருகிறான். ஒவ்வோர் ஊரிலும், அவனுடைய பண்டக்குவியல் மாறும். குவியலோடு அவன்செய்யும் மாற்றுவேலை இதனாலே குவிமாற்றாகும். ஆங்கிலத்தில் இதைக் commerce என்பார். ஆங்கிலச் சொற்பிறப்பியலார் இலத்தீன் வரை போய் அதற்குமேல் இச்சொல்லின் தோற்றம் தெரியாது என்பார். “தமிழ் தீண்டத்தகாத மொழியாயிற்றே?” அப்படித் தானே சங்கதர் மேலையரிடம் சொல்லி வைத்துள்ளார். பெரும்பாலான மேலையர் சங்கதத்தோடு நின்றுகொள்வார். ”அந்தச் சங்கதச்சொல் எங்கு கிளைத்தது?” என்று ஆயமாட்டார். சங்கதத்தால், நம்முடைய சாதிமுறைக் குழப்பங்களால், தமிழும் தமிழரும் இழந்தது மிகுதி.
மாலிற்பிறந்த மாற்றோடு மா(ல்)ங்கு / மா(ல்)ங்கர் (monger) எனுஞ் சொல்லும் உண்டு. இதைவிளங்க வினைச்சொல் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் வரும் ”ங்குச்” சொற்களை “lingering verbs" எனலாம். ஆங்கிலத்தின் present continuous போல் தோற்றினும் முற்றிலும் அப்படியில்லை. கீழே காட்டுக்களைப் பாருங்கள். "அசங்கல், அடங்கல், அணங்கல், அரங்கல், அலங்கல், இசங்கல், இடங்கல், இணங்கல், இயங்கல், இரங்கல், இலங்கல், இளங்கல், இறங்கல், உடங்கல், ,உணங்கல், உயங்கல், உலங்கல், உழங்கல், உறங்கல், கசங்கல், கரங்கல், கலங்கல்". இவற்றில் அங்குச் சாரியை நிற்கும். (இதுபோல் இங்கு/உங்கு/ங்குச் சாரியைகளுண்டு.) சாரியைகள் இல்லாமலும் தொடர்பான வினைச்சொற்களைப் பயில்கிறோம். மேற்சொன்னவற்றில் அங்குச்சாரியை விடுத்தால், ஊடே ஐகாரஞ் சேர்த்து, “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ......., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ....., உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” கிடைக்கும். [சொல் தெரியாது அல்லது இற்றைப்புழக்கமின்றி இடைவெளி காட்டினேன்.] இதுபோல் மற்ற ”ங்குவகைச்” சொற்களும்/ இல்லாதவையும் உண்டு
மால்+து= மாற்றென்பது ”ங்குச்சாரியை” இல்லாத சொல். இதில் ங்கு சேர்ந்தால், மால்+ங்கு= மா(ல்)ங்கு>மாங்கு ஆகும். ”மாங்கு” அகர முதலிகளில் இல்லை. ஆனால் வழக்கிலுண்டு. “இவன் ஏன் மாங்கு மாங்கென அலைகிறான்?” ஒவ்வொரு பண்டமாற்றிற்கும் (மாங்கிற்கும்) ஒரு சாத்தன் அலைகிறான் அல்லவா?. மாங்கர்= மாற்றலைத் தொடந்து (lingering) செய்பவர். Old English mangere "merchant, trader, broker," from mangian "to traffic, trade," from Proto-Germanic *mangojan (source also of Old Saxon mangon, Old Norse mangari "monger, higgler"), from Latin mango (genitive mangonis) "dealer, trader, slave-dealer," related to mangonium "displaying of wares." Not in Watkins or de Vaan, but Buck (with Tucker) describes it as "one who adorns his wares to give them an appearance of greater value" and writes it is probably a loan-word based on Greek manganon "means of charming or bewitching." Used in combinations in English at least since 12c.; since 16c. chiefly with overtones of petty and disreputable (for example ballad-monger "inferior poet," 1590s).
அடுத்தது பகரல். எச் சந்தைவிற்பனையிலும் அக்காலத்தில் வாங்குவோரைச் சத்தமாய் அழைத்து, ”என்ன அலகில் (எண்ணிக்கை/பருமன்/எடை) எவ்வளவு மதிப்பிற்குக் கொடுப்பது?” என்பதைப் பகருவர். பகர்தல்= விலைசொல்லல். பகர்ச்சி = விலை/price. பகர்வனர்= விற்போர். “பகர்வனர் திரிதரு நகர வீதியும்” என்பது 5.15. இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரம். இதேபோல் ”வெள்ளுப்புப் பகருநர்” என்பது 5.25. இந்திரவிழவு ஊரெடுத்த காதை. சிலப்பதிகாரம்.
.
அடுத்தது வில்நர்= விற்கிறவர் (vendor) இச்சொற்பிறப்பை contraction of venumdare "offer for sale," from venum "for sale" (see venal) + dare "to give" (from PIE root *do- "to give") என்பர். இதேபோல் கூவி (hawk; "to sell in the open, peddle," late 15c., back-formation from hawker "itinerant vendor" (c. 1400), agent noun from Middle Low German höken "to peddle, carry on the back, squat," from Proto-Germanic *huk-. Related: Hawked; hawking. Despite the etymological connection with stooping under a burden on one's back, a hawker is technically distinguished from a peddler by use of a horse and cart or a van) விற்போரைக் கூவுகர் (hawker) என்பார். இதே சொல்லைக் கூவியர் என்று .5.24. இந்திரவிழவு ஊரெடுத்த காதை, சிலப்பதிகாரம் சொல்லும்.
அடுத்தது பீடிகை. நாட்டுப்புறங்களில் பெட்டிக்கடை பார்த்திருக்கிறீர்களோ? அவை 3 சுவர், ஒரு முன்படல், ஒரு கூரை சேர்ந்து செங்கல் திண்ணையில் அமைந்தனவாய்ப் பீடங்களில் அமையும். அந்தக்கால மாநகரங்களில் பெருங்கடைகள் பெட்டித்தோற்றங் கொள்ளாது. ஆனால் 4 கால்கள் கொண்டு ஆற்றோரங்களில் சதுப்பு நிலங்களின் மேல், வீதிமேட்டை ஒட்டினாற்போல் பீடம் போட்டு அமைவது உண்டு. பீடிகைத்தெரு என்றதொரு பயன்பாடு 5.41. இந்திரவிழவு ஊரெடுத்த காதை. சிலப்பதிகாரத்தில் வரும். சிலம்பின் வண்ணிப்பிற்கு மேல் எழுத்தாளர் செயமோகன் தன் “கொற்றவை” புதினத்தில் கொடுத்திருப்பார். நம்மூர் திரைப்படங்களின் 70/80 ஆண்டு விவரிப்பை விட, சிலம்பிற்கான தமிழாசிரியர்களின் உண்மைக்குப் புறம்பான விவரிப்பை விட, இவரின் விவரிப்பு 2000 ஆண்டுக்கு முந்தைய உள்ளமையை அப்படியே காட்டும். பூம்புகார் இப்படி இருந்திருக்குமா? - என்று வியப்போம். இன்றுங்கூட பெருநகரங்களில் பெருங்கட்டடங்களின் தரைத்தளம் பீடத்தில் தான் அமைகிறது. பீடிகை/பெட்டிகை = கடை.
பீடிகை/பெட்டிகை போன்ற சிறப்பு இல்களிலிருந்து விற்கிறவர் பெட்டு+இல் = பெட்டில்>பெட்டிலர் (peddler; late 14c. (c. 1300 as a surname, Will. Le Pedelare), from peoddere, peddere (c. 1200, mid-12c. as a surname), of unknown origin. It has the appearance of an agent noun, but no corresponding verb is attested in Middle English. Perhaps a diminutive of ped "panier, basket," also of unknown origin, but this is attested only from late 14c. Pedlar, preferred spelling in U.K.,is attested from late 14c.) ஆவார்.
இருப்பதிலேயே மிகக் குறைந்தவர் தலையில் கூடையை வைத்துக் குடியிருப்புகளைச் சுற்றிச்சுற்றி வந்து விற்பவர் சுற்றாளர் (sutler; formerly also suttler, "person who follows an army to sell food to soldiers," 1580s, from Middle Dutch soeteler "small tradesman, peddler, victualer, camp cook" (Dutch zoetelaar), cognate with Middle Low German suteler, sudeler "person who performs dirty tasks," Middle High German sudelen "to cook badly," Middle Dutch soetelen "to cook badly." Probably also related to Dutch zieder, German sieden "to seethe," from Proto-Germanic *suth-, from PIE root *seut- "to seethe, boil".
அடுத்தது கொள்ளை/கொளுதை. பேச்சுவழக்கில் கொள்ளல் என்பது விலைக்கு வாங்கலைக் குறிக்கும். கொள்ளல்= to hold. கொள்ளுகை= act of holding. கொள்வோன்= வாங்குவோன். கொள்வினை/ கொடுப்பினை= கொடுக்கல்-வாங்கல்; கொள்வினை= procurement. கொள்முதல்= வாங்கின விலை. கொள்ளை= விலை. (costக்கு ஈடாய் இதைப் பாவிக்கலாமெனினும், காலமாற்றத்தில், இதன்பொருள் மாறிப் பொதுவழக்கில் பெருந்திருட்டு ஆகும்.) கொழுநன்= கொண்டவன். கொள்+ந்+து= கொண்டு. கொள்ளலுக்குப் பொறுதலென்றும் பொருளுண்டு. கொள்ளார்= பொறாதவர். ”இப்படி அடி மாட்டு விலைக்கு விற்கிறீரே? உமக்கு இது கொள்ளுமா? கட்டுபடியாகுமா?” என்கிறோம் இல்லையா? பொறுதற்பொருள் இதில் உறுதியாகவுண்டு, இதைக் cost ஆகப் புரிந்துகொள்ளலாம். கொள்ளை யெனுங் கெட்ட பொருளன்றி மாற்றிச்சொல்லுங் கட்டாயம் இப்போது வருகிறது. கொளு= செய்யுட் கருத்தை விளக்கும் சொற்றொடர். கொளுத்தல்/ கொளுவுதல்= கொள்ளச் செய்தல். கொளுத்தற் தொடர்பாய்க் கொளுதை என்பதைக் cost இற்கு ஈடாய்ச் சில காலமாய்ப் பயனுறுத்தி வருகிறேன். எச்சிக்கலும் எழவில்லை.
முடிவில் entrepreneur (n.). சந்தைக்குப் புதுப்பொருள்களைக் கொண்டுதருபவர். இவர் புத்தாக்கர் இல்லை. (அப்படிச் சிலர் தவறாய் மொழிபெயர்ப்பர்.) நம்மூருக்குப் புதிது கொண்டு வருபவர்/ கொணர்பவரை entrepreneur (n.) என்போம். ஆங்கிலத்தில் 1828, "manager or promoter of a theatrical production," reborrowing of French entrepreneur "one who undertakes or manages," agent noun from Old French entreprendre "undertake" (see enterprise). The word first crossed the Channel late 15c. (Middle English entreprenour) but did not stay. Meaning "business manager" is from 1852 என்பார். இதைப் புரிந்துகொள்ள enterprise (n.) என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
early 15c., "an undertaking," formerly also enterprize, from Old French enterprise "an undertaking," noun use of fem. past participle of entreprendre "undertake, take in hand" (12c.), from entre- "between" (see entre-) + prendre "to take," contraction of prehendere "to catch hold of, seize" (from prae- "before," see pre-, + -hendere, from PIE root *ghend- "to seize, take"). Abstract sense of "adventurous disposition, readiness to undertake challenges, spirit of daring" is from late 15c. சிவகங்கை மாவட்டத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா போய்வந்த நகரத்தாரை ஒரு காலத்திற் கொண்டுவிற்கப் போனதாய்ச் சொல்வர். ஒரு தேசத்தின் பொருட்களைக் கொண்டுபோய் இன்னொரு தேசத்தில் விற்பது. இது entrepreneur வேலை தான். entrepreneur = முன் கொண்டுவருவோர் > முன்கொணர்வார்
மேலே பல்வேறு ”வியாபாரச்” சொற்களுக்குப் பிறப்பும் (வாய்பகரம்> வியாபாரம்) விளக்கமுஞ் சொன்னேன். இவற்றில் பலவும் தமிழரிடம் புழங்கியுள்ளன. சில்வற்றிற்கு இயலுமைகள் உள்ளன. ஏனெனில் தமிழ் மூலங் காட்டுகிறது. வாணிகம் என்பது தமிழரிடம் இன்றுநேற்று ஏற்பட்டது அல்ல. குறைந்தது 2600 ஆண்டுகள் ஆவது இந்தப் புழக்கம் இருந்திருக்கிறது. பலகாலம் சொல்லியிருக்கிறேன். சங்கப்பாடல்களில் பாதிப்பாடல்கள் பாலைப் பாடல்கள். அவற்றில் பலவும் இராயலசீமை கடந்து வடக்கே போனதைக் குறிக்கும் பாடல்கள் தாம். இந்திய வரலாற்றை ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், இக்காலத்தில் ஆங்கிலம் இருப்பது போல் அக்கால வணிகமொழி என்பது தமிழே. வேறொரு தலைப்பில் இந்த உரையாடலைத் தொடர்வோம்.
”சாத்தன்” தொடர் இப்போதைக்கு முடிந்தது. (இத்தொடரில் பண்டம் பண்ணுவதையும் (பண்ணிகம்>பணிகம்> வணிகம்) சேர்த்தமையும் பொதினம் (business), மாறுகடை (market) போன்ற இன்னும் பல சொற்களைச் சொல்லவில்லை. அவற்றை வேறு கட்டுரையில் பார்ப்போம்.)
.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment