hashtag என்பது hash ஓடு tag உம் இணைந்த கூட்டுச்சொல். இதைக் குறியட்டை என்று தமிழ்விக்சனரி சொல்வதை நான் ஏற்கத் தயங்குவேன். எக் கலைச்சொல்லையும் அதன் சொற்பிறப்பு, பயன்பாடு, இதற்கு ஏற்கனவே ஏதேனும் தமிழ்மரபுண்டா, இல்லையேல் தமிழ்ச்சிந்தனைக்குள் எப்படிக் கொண்டு வருவது என்று பார்க்கவேண்டும்.
hash என்பது அடிப்படையில் கட்டாரியைக் குறிக்கும். இரோப்பிய அரசர் காலங்களில் படையினர் பலரும் வைத்திருக்கும் ஓர் ஆயுதம் கட்டாரியாகும். (இக்கால buyonnet போல.). படையினர் போருக்குப் போகையில் மண்தரையில் கட்டாரியால் கீறிப் படம்போட்டு போகும்பாதை, போர்க்களம், கோட்டைகள் இருப்பிடம் என்று போர்த்தந்திரக்களை விளக்குவர். ஓரிடத்தைக் குறிக்க 2 குத்துக் கோடுகள், 2 கிடைக்கோடுகள் போட்டால் இடையில் ஓர் சதுரம் கிடைக்கும். அச்சதுரத்துள் எழுந்தையோ, எண்ணையோ குறிப்பார். அது குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும். அதன் 4 கோடுகளும் எல்லைகளைக் குறிக்கும். இக் கட்டாரிக்கட்டமே hash என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது. இக் கட்டக்குறி (hash sign) நாளடைவில் number என்பதையுங் குறித்தது.
hash (v.) Look up hash at Dictionary.com
1650s, "to hack, chop into small pieces," from French hacher "chop up" (14c.), from Old French hache "ax" (see hatchet). Hash browns (1926) is short for hashed browned potatoes (1886), with the -ed omitted, as in mash potatoes. The hash marks on a football field were so called by 1954, from their similarity to hash marks, armed forces slang for "service stripes on the sleeve of a military uniform" (1909), which supposedly were called that because they mark the number of years one has had free food (that is, hash (n.1)) from the Army; but perhaps there is a connection with the noun form of hatch (v.2)
கட்டாரி கொண்டு மண்ணிற் கீறி முகப்புப் போட்டு படையினருக்குக் காட்டுவது நம்மூர்ப் படைகளுக்கும் உண்டு. இன்றும் அடையாளங் காட்டுவது என்ற பொருளில், ”கட்டங் கட்டீட்டில்ல, பார்த்துக்கிறேன்” என்கிறோம் அல்லவா?. கட்டுதல் = வெட்டுதல் (to cut) இங்கே கீறுதலையும் குறிக்கலாம். கட்டும் ஆரி கட்டாரி. கட்டாரியின் அடுத்த வளர்ச்சி குந்தாலி - குத்தும் ஆலி; இன்னும் பெரிய வளர்ச்சி கோடு ஆலி = கோடாலி. ஆரி, ஆலி போன்ற சொற்கள் weapon என்று தமிழிற் பொருள்படும். இக்காலத்தமிழில் இதை எல்லாம் மறந்துவிட்டுக் கருவி (tool) என்றே எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம்.
கட்டாரிக் கட்டத்தில் நடுவே ஒரு கழியை நட்டு அதில் ஒரு தொங்கட்டானைத் தொங்கவிடுவார். தொங்குவது தோகையாகும். (மயிலின் தோகையும் ஒரு தொங்கட்டான் தான்.) இத்தோகை தான் ஆங்கிலத்தில் tag என்று அழைக்கப் படுகிறது.
tag (n.1) Look up tag at Dictionary.com
"small, hanging piece from a garment," c. 1400, of uncertain origin but probably from a Scandinavian source (compare Norwegian tagg "point, prong, barb," Swedish tagg "prickle, thorn") and related to Middle Low German tagge "branch, twig, spike"), from Proto-Germanic *tag-. The sense development might be "point of metal at the end of a cord, string, etc.," hence "part hanging loose." Or perhaps ultimately from PIE *dek-, a root forming words referring to fringe, horsetail, locks of hair" (see with tail (n.1)).
Meaning "a label" is first recorded 1835; sense of "automobile licence-plate" is recorded from 1935, originally underworld slang. Meaning "an epithet, popular designation" is recorded from 1961, hence slang verb meaning "write graffiti in public places" (1990).
tag (n.2) Look up tag at Dictionary.com
ஒரு பொத்தகத்தில் சில பக்கங்களின் ஓரத்தில் சில தோகைகளை ஒட்டிப் பின்னால் அவக்கரமாய் எடுத்து அப் பக்கத்தை விளக்கப் பயன்படுத்துவோம். தோகைகள் அடையாளங்காட்டவே பயன்படுகின்றன.
கட்டங்கட்டி நடுவில் ஒரு சதுரம் ஏற்படுத்தும் போது சுற்றிலும் 8 வெளிகள் ஏற்படும். சிறு வயத்தில் கட்டங்கட்டி விளையாட்டை 2 சிறுவர் ஆடும் பட்டறிவு உங்கள் நினைவிற்கு வருகிறதா? 0--9 வரையுள்ள எண்களால் இரண்டு பேர் இந்த வெளிகளை நிறைக்கலாம். எபடியாவது ஒரு கோட்டில் (நெடுக்கவோ, குறுக்கவோ, அல்லது ஊடுகோளையாகவோ (diagonal) ஒரே மாதிரி 3 எண்கள் வந்தால் வெற்றியென்போம். இந்தக் கட்டங் கட்டி விளையாட்டிற்கும் கட்டங்குறியே ஆடுகளம். .
கட்டந்தோகை>கட்டாந்தோகை என்பது hashtag ற்கு மிகச்சரியாய் வரும்.
இந்த உரையாடலின் கட்டாந்தோகை என்ன?
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment