general knowledge and common sense
general knowledge, common sense என்ற கூட்டுச்சொற்களுக்கான தமிழ் ஆக்கங்களைத் ஒருமுறை திரு.வேந்தனரசு கேட்டிருந்தார். இதற்கான விடையை மடற்குழுக்கலில் அப்போது தெரிவித்தேன். பின்னால் அதைச் சீர் படுத்தி வலைப்பதிவிலும் சேமித்தேன். general, common, public, overall, universal, collective, miscellaneous, widespread என நிகண்டிலுள்ள (thesaurus) பலவற்றிற்கும் ”பொது”வெனச் சொல்லியே நம்மிற் பலரும் ஒப்பேற்றுகிறோம். அப்படிச் சொல்வதைப் பெருமையாகவும் கருதுகிறோம்.
ஆங்கிலத்தில் 100 சொற்களைத் தெரியுமெனில், அதற்கீடாய் 10 தமிழ்ச் சொற்களை மட்டுஞ் சொல்லி, “இதுபோதும்; தமிழ் நமக்கென்ன சோறா போடுகிறது?” எனக் கழுத்துப் பட்டையைச் சுண்டி இளக்காரஞ் செய்வோர் நம்மிடை ஏராளம். இப்படிச் சிந்தனைத் தெளிவின்மைக்கும், மீளமீளத் தமிங்கிலத்துள் நுழைவதற்கும், தமிழ்ச் சொற்றொகுதி நம்மிடங் குறைவாய் உள்ளதே காரணமாகும். ஆங்கிலம் உலகில் ஓங்கியதற்குக் காரணம் ஒவ்வோர் கருத்திலும் நுணுகு வேறுபாடு கொண்ட இன்னொரு கருத்திற்குச் சொற்களை உருவாக்கியது தான். ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழிலும் சொல்துல்லியம் கூடினாற்றான் அது அறிவியல் மொழியாகும், இல்லா விட்டால் ஒப்பிற்குச் சப்பாணியாய் ஒப்பேற்று மொழியாகவே தங்கிப் போகும். மேற்சொன்ன ஒவ்வொரு ஆங்கிலச்சொல்லிற்கும் நுணுகிய வேறுபாடுகள் உண்டு. அவற்றை நம் பேச்சில் அப்படி வேறுபாடு காட்டினால் நாம் சொல்வதில் தெளிவிருக்கும். மெத்தப் படித்த தமிழரே அறிவியல் தமிழின் தேவையை உணராது popularization of Tamil என்பதிலேயே தங்கி விடுகிறார்,
துல்லியம் பற்றி பலருக்கும் அக்கறை இருப்பதில்லை. சொல் துல்லியத்தை நான் அழுத்துவதாலேயே, ’ஆங்கில ஒலியிற் இராம.கி. சொல்லமைக்கிறார்’ என்று வெற்றுப் பேச்சாற் குத்திக் கிழித்து நக்கலடித்து அடுத்த வேலை பார்க்கப் போவார். (இந்தையிரோப்பியத்தோடு தமிழிய மொழிகள் மிக நெருங்கியவை என்றேநான் இப்போதெல்லாம் எண்ணுகிறேன்.) இப்படிச் சொல்வோருக்கு கட்டுமானமாய் மறுமொழிக்கச் சிலபோது மனஞ் சலித்துத் ’தெரியாதுங்க’ என்றும் சொல்லியதுண்டு. ஆனாலும் மனமொரு குரங்கு. சிவனேயென்று சும்மாயிருக்காது, “இயல்கேள்விக்கு உம்மென இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்? தெரிந்ததைப் பரிமாறுவதில் மகிழ்ச்சி யுண்டே?” என்ற எண்ணமும் எழும். மீண்டும் மடலெழுத வந்து நிற்கிறேன்.
ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில்,
general (adj.)
c. 1200, "of wide application, generic, affecting or involving all" (as opposed to special or specific), from Old French general (12c.) and directly from Latin generalis "relating to all, of a whole class, generic" (contrasted with specialis), from genus (genitive generis) "stock, kind" (see genus).
என்று வரையறை போட்டிருப்பர். இதேபோலக் common னுக்கும்,
common (adj.)
c. 1300, "belonging to all, general," from Old French comun "common, general, free, open, public" (9c., Modern French commun), from Latin communis "in common, public, shared by all or many; general, not specific; familiar, not pretentious," from PIE *ko-moin-i- "held in common," compound adjective formed from *ko- "together" + *moi-n-, suffixed form of root *mei- (1) "change, exchange" (see mutable), hence literally "shared by all."
Second element of the compound also is the source of Latin munia "duties, public duties, functions," those related to munia "office." Perhaps reinforced in Old French by the Germanic form of PIE *ko-moin-i- (compare Old English gemæne "common, public, general, universal;" see mean (adj.)), which came to French via Frankish.
என்று போட்டிருப்பர். தமிழ்ப்பேச்சுவழக்கில் 2 பெயரடைகளும் பொது என்று (general - பொதுப்படை; common பொது) சொல்லி, சொல்லின் முன்னும் பின்னும் எந்தப் பொருண்மை பேசப் படுகிறதென்று சுற்றிவளைத்து உணர்த்துவோம். இதெல்லாம் சாத்தாரப் பேச்சு வழக்கிற்குச் சரி. ஆனால் அறிவியல் பூருவமான உரையாடல்களில் சரிவராது. இன்னுஞ் சொன்னால், general, common, public, overall, universal, collective, miscellaneous, widespread போன்றவற்றிற்குத் தமிழில் தனிச்சொற்கள் இருப்பது நல்லது தான்.
மேலுள்ள 2 வரையறைகளைப் படித்து ஓர்ந்து பார்த்தால் ஒன்று புரியும். common என்பது இடக்காலத்தை (space-time) ஒட்டிப் பேசுவது. ஆட்களோடு நேரடித் தொடர்பில்லாதது. ஊருக்கு நடுவே எல்லோரும் புழங்குவதற்குத் தக்க ஒரு நிலம் இருப்பின், அதைக் common land என்பர். common property, common language என்பதெல்லாம் common space உருவகத்துள் ஒருவகை. general etiquettes, general language, general upkeep என்பவை கூட்டத்தின் ஆட்களைப் பொறுத்தவை. பூதியலில் (physics) மொதுகைக்கும் (mass), வெள்ளத்திற்குமான (volume) கருத்தியல் வேறுபாட்டைப் புரிந்து கொள்கிறோம் பாருங்கள். [இது புரிந்த பின்னரே பூதியல் எனும் துறை வளர்ந்தது. பொருண்மையோடு (materiality) மொதுகையும், வெளியோடு வெள்ளமும் தொடர்பானவை. பேரண்ட வெளிகளில் பெரும்பாலும் மொதுகை நிறைந்துள்ளது. அதே பொழுது மொதுகையிலா வெற்றிட வெளிகளும் உண்டு.] அதுபோல general ஐயும் common ஐயும் வேறுபடப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்சொன்ன நுணுக்கம் புரியாது general ஐக் common னுக்கும், common ஐ general க்கும் பகரியாக்கிச் சிலர் புழங்குவார். என்ன செய்ய? ஆங்கில மரபுகள் தெரியா ஆசிரியர் இதை எல்லாமா சொல்லித் தருவார்? [ஓரூரில் தம்பிக் காரன் மணியமாய் இருந்தானாம். யாரோ ஒருவரின் அம்மா ஊரிற் தவறிப் போனாராம். துக்கம் கேட்ட தம்பி இறந்தவரின் பெருமை சொல்லி, “அவர் உங்களுக்கு மட்டுமா அம்மா? ஊருக்கே அம்மாவாய் இருந்தார்” என்றானாம். இதைப் பார்த்த அண்ணன்காரன், பின்னால் மணிய உரிமை கேட்டு, அடம்பிடித்து, அதற்குத் தம்பியும் ஒப்பி, தற்காலிக மணியம் ஆனானாம். இப்போது யாரோ ஒருவரின் மனைவி தவறிப் போனாராம். கேதங் கேட்ட அண்ணன்காரன் மனைவியிழந்தானைப் பார்த்து, “அவர் உங்களுக்கு மட்டுமா மனைவி?,,.” என்று சொன்னது தான் தாமதம், ஊரே சேர்ந்து அவனை மொத்தியதாம். மரபு தெரியாது பேசினால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.]. general, common என்பதன் வேறுபாடு தெரியாமல் ”பொது” என்று பேசுகிறவர் வாங்கிக் கட்டிக் கொள்ளத் தான் வேண்டும்.
தமிழில் கூட்டப்பொருளில் மாந்தருக்கும், இடவெளிகளுக்கும் வெவ்வேறு தனித்தனிச் சொற்களுண்டு. இணை (pair), குழு/குழும்பு (group, club), குடும்பு/குடும்பம் (family), கும்பு/குமுக்கு/கும்பல் (collection), குழுதை (collective), குழுமம் (company), திரள் (mass), சாதி (இன்றைக்குப் பொருள்மாறிப் போன சொல். தொல்காப்பியம், சங்க நூல்களில் கூட்டமென்ற பொருளைக் கொண்டது மாந்தச் சாதி, யானைச் சாதி, முதலைச்சாதி இப்படி வெவ்வேறுவகைக் கூட்டத்தாரை இச்சொல் குறிக்கும். சால்தல் (=நிறைதல்/கூடுதல்) வினையில் இருந்து சால்தி>சார்தி>சாதி என்ற இந்தச்சொல் உருவாகியது. பின்னால் களப்பிரர், பல்லவர் காலத்தில், செகுத்தலென்ற பிரிவினைக் கருத்தில் செகுதி>சகுதி>சாதி எனப் புரிந்துகொள்ளப்பட்டது அடிப்படையே இன்று மாறிப்போய்விட்டது.), கணம் (gana), கூட்டம் (large collection), குமுகம் (community), குமுகாயம் (large collection of communities), இனம் (genus) போன்ற சொற்கள் ஆட்களின் தொகுதியைக் குறிக்கும்.
அதே பொழுது, உலகம் (world), நாடு (country), தேசம் (nation) மாநிலம் (state/ province), திணை (இயற்கைப் பகுதி) ஊர் (domicile), நகரம் (town), கமம்/காமம் (village; பலரும் இதைத் தமிழல்லவென எண்ணிக் கொள்கிறோம். கிடையாது. கமம் நிறைந்தியலும் - தொல்காப்பியம் 838, உரியியல். காமத்தினுள் ரகரஞ் சேர்த்துச் சங்கதம் க்ராமமென்றாக்கியது.), கும்பம்/ கும்பை/ குடம்/ கூடம் (குடமுக்கு கும்பகோணம் என்றாகும். 2 உம் தமிழ் தான். குடம் போன்ற வளைந்த முக்கு. இங்கே குடம், கும்பம் என்ற சொற்கள் 3 ஆம் பரிமானத்தை யன்றி 2 ஆம் பரிமான வட்டத்தைக் குறிக்கும். கூடமெனில் கூடுமிடமென்றும் பொருள் உண்டு), களம் (கள்ளுதல் = கூடுதல்), கொட்டம்/கோட்டம் (மாந்தர் கூடுமிடம். பின்னால் கோயில்களுக்கு விதப்புப் பெயராகியது), சேரி (சேரும் இடம் சேரி; எந்த இழிவுப்பொருளுங் கிடையாது.), மன்று (மன்றம் என்று இன்று கூறுகிறோமே, அந்தக் கூடுமிடம்), வீடு/ மனை/ இல் என்பன ஆட்கள் நிறைந்திருக்கும் பல்வேறு common வெளிகளைக் குறிக்கும்.
தவிரக் குமம்/குமன், குலம், குடி போன்ற சொற்கள் ஆட்களையும், இடத்தையும் சேர்த்தே குறிக்கும். பல்வேறு இட/வெளிச்சொற்கள் ஆகு பெயராய் ஆட்களைக் குறிப்பதுமுண்டு. (தமிழ் உலகம்), ஆக இச்சொற்களை இடம், பொருள், ஏவல் பார்த்துப் பயன்கொள்ள வேண்டும். துல்லியம் பார்த்தால் ஆகுபெயர்ப் பழக்கத்தைக் கவனமாய்க் கையாள வேண்டும். [பலரும் கண்ட மேனிக்குப் பயன்படுத்துகிறார். இன்னொரு குறிப்பு. ஆட்கள் இல்லா வெளிகளும் இயற்கையிலுண்டு. கிரீன்லாந்து, அண்டார்ட்டிக்கா போன்றவை ஆட்கள் மீச்சிறிது வசிக்கும் இடங்கள்.]
general க்குச் சொல் தேடும்போது வழக்கம் போற் பெயர்ச்சொல்லை விட வினைச் சொல்லையே தேடுவேன். வெவ்வேறு விதச் சொற்களுக்கு விதத்தல் வினை இருப்பது போல் கூடுஞ் செயலைக் கணத்தல் என்றுஞ் சொல்லலாம். (கண என்பது கள்ளெனும் வேரடியிற் பிறந்த சொல் பன்மை காட்டும்போது கள்ளைச் சேர்க்கிறோம் பாருங்கள். கள்>கண்>கண>கணத்தல்.) கணமென்ற சொல்லே இதற்கு நொதுமலான, விதப்பற்ற பொருளைத் தருகிறது. கண(த்த)/கணத்தின் என்ற சொல் general க்கு அப்படியே கணகச்சிதமாய்ப் பொருந்தும். இதற்கு மாறாக அனைவரின், எல்லோரின் என்றும் பேச்சுவழக்கிற் சொல்கிறோம். அனைவரின் மொத்த அறிவு, எல்லோரின் மொத்த அறிவு என்பவையும் பூசிமெழுகும் பதங்கள் தான்.
இனிக் common க்கு வருவோம். தன்சொத்து, தன்வெளி, தன்சுற்றம், தன்மக்கள் என உரிமைகொண்டாடிய காலத்தில் எல்லோர்க்கும் பொதுவாய் (புல்லல் = தழுவல், பொருந்தல். புல்> பொல்> பொல்து>பொது>பொதுவல் (= தழுவிக் கொள்ளல்) என்பது தனிப்பட இல்லாது, எல்லோர்க்குந் தழுவிய, பொருந்திய நிலை.) உள்ள காரணத்தால் பொதியில்/பொதுவிடம் (common place), பொது மக்கள் (common people; முதலில் தன் சுற்றத்தாரைப் ”புறந் தள்ளிய மக்கள்” என்ற பொருள் கொண்டு, பின்னால் சுற்றாத்தாரும் சேர்ந்த ஆனால் சுற்றத்தைப் பேசாத பொருள் நிலைக்கு வந்து சேர்ந்தது.) என்ற பயன்பாடு எழுந்தது. மேலே குமம்/குமன் என்று சொன்னோம் பாருங்கள், அதுவும் பொதுவிற்குப் பகரியாய்ப் பயன்படலாம்.
அடுத்து, knowledge, sense என்ற சொற்களுக்கு வருவோம். ஆங்கிலத்தில் know என்பதற்கு
know (v.)
Old English cnawan (class VII strong verb; past tense cneow, past participle cnawen), "perceive a thing to be identical with another," also "be able to distinguish" generally (tocnawan); "perceive or understand as a fact or truth" (opposed to believe); "know how (to do something)," from Proto-Germanic *knew- (source also of Old High German bi-chnaan, ir-chnaan "to know"). This is from PIE root *gno- "to know" (source also of Old Persian xšnasatiy "he shall know;" Old Church Slavonic znati, Russian znat "to know;" Latin gnoscere; Greek *gno-, as in gignoskein; Sanskrit jna- "know"). For pronunciation, see kn-. Once widespread in Germanic, the verb is now retained there only in English, where it has widespread application, covering meanings that require two or more verbs in other languages (such as German wissen, kennen, erkennen and in part können; French connaître "perceive, understand, recognize," savoir "have a knowledge of, know how;" Latin scire "to understand, perceive," cognoscere "get to know, recognize;" Old Church Slavonic znaja, vemi). The Anglo-Saxons also used two distinct words for this, the other being witan (see wit (v.)).
என்றும், knowledge என்பதற்கு
knowledge (n.)
early 12c., cnawlece "acknowledgment of a superior, honor, worship;" for first element see know (v.). The second element is obscure, perhaps from Scandinavian and cognate with the -lock "action, process," found in wedlock. From late 14c. as "capacity for knowing, understanding; familiarity;" also "fact or condition of knowing, awareness of a fact;" also "news, notice, information; learning; organized body of facts or teachings." Sense of "sexual intercourse" is from c. 1400. Middle English also had a verb form, knoulechen "acknowledge" (c. 1200), later "find out about; recognize," and "to have sexual intercourse with" (c. 1300); compare acknowledge.
என்றும் போட்டிருப்பார். கண்வழி அறிவதெல்லாம் கண்டறிதலாகும். (காட்சி என்றுஞ் சொல்வார். அறிவென்ற பொருள் இன்றிதற்கு மறைந்து போனது.) இன்னொரு சிறிய சொல்லுமுண்டு. அது ஞானம். 50 ஆண்டுகளுக்கு முன் இதைத் தமிழில்லையென்று தவறாகப் புரிந்து பலரும் தவிர்த்தார். (நானுந் தவிர்த்தேன்.) கூடவே, ஆன்மீகஞ் சார்ந்த அறிவிற்கு மட்டுமே ஞானத்தைப் பயன்படுத்தினார். இப்படியே பொருளைக் குறுக்கிப் போவது சரியில்லை. சொல்லாய்வறிஞர் அருளி ”யா” என்ற பொத்தகத்தில் யா>ஞா>நா என்ற படியும், யோ>ஞோ>நோ என்ற படியும் இதை விவரித்திருப்பார். ஞா/ஞோ என்ற சொல் தான் know விற்குத் தொடர்பானது. இப்போது என்னைக் கேட்டால் ஞானத்தை நாம் தவிர்க்கவேண்டிய தேவையேயில்லை என்பேன்.
ஞானத்தோடு தொடர்புற்ற சொல் விஞ்ஞானம். இதில் ”வி” முன்னொட்டைச் சங்கதமென்று கருதியே ”அறிவியல்” என்பது தமிழிலெழுந்தது. வி எனும் இடைச்சொல்லிற்குத் தமிழிலும் சங்கதத்திலும் இன்மை (negation / privation), எதிரிடை (contrariety / deviation from right), வேறுபாடு/மாறுபாடு (difference / variety / manifoldness / change), மிகுதி (intensity) என்ற பொருள்களைச் சொல்வர். ஆனால் ஒவ்வோர் இடைச்சொல்லும் ஏதோவொரு வினைச்சொல்லிற் கிளைத்தது தான். வி என்ற முன்னொட்டு விள் எனும் வினையிற் பிறந்தது. விள்ளல் = வேறுபடுத்தல், விதத்தல். விள்+ ஞானம் = விஞ்ஞானம் (விள்ளிய/விள்கிற/விள்ளும் ஞானம்). இது தமிழ் தான். விள்ளல் = வேறுபடுத்தல். விள் + தல் = விட்டல். விட்டலின் தன்வினை விடுதல்>விதுதல். விதுதலின் பிறவினை விதுத்தல்>விதத்தல். விஞ்ஞானம் என்பது விதப்பான ஞானம் அவ்வளவுதான். இனி sense என்பதைப் பார்ப்போம்.
sense (n.)
c. 1400, "faculty of perception," also "meaning, import, interpretation" (especially of Holy Scripture), from Old French sens "one of the five senses; meaning; wit, understanding" (12c.) and directly from Latin sensus "perception, feeling, undertaking, meaning," from sentire "perceive, feel, know," probably a figurative use of a literally meaning "to find one's way," or "to go mentally," from PIE root *sent- "to go" (source also of Old High German sinnan "to go, travel, strive after, have in mind, perceive," German Sinn "sense, mind," Old English sið "way, journey," Old Irish set, Welsh hynt "way").
இதற்கு நான் புதுச்சொல்லைக் கூறவேண்டியதில்லை. புலன் என்பது எல்லோர்க்கும் தெரிந்தது தான். எனவே
general knowledge = கண ஞானம்
common sense = பொதுப் புலன்
common தொடர்பான சில கூட்டுச் சொற்களை இங்கு தொகுத்துள்ளேன். common law = பொதுச் சட்டம், commonality = பொதுவல், commoner = பொதுவர்/ குமுனர், commonly = பொதுவாக, commonness = பொதுமை, common place = பொது இடம், commons = பொதுவாளர்/ குமுனாளர், commonweal/commonwealth = குமுன வளம், common sense = பொதுப் புலன். commune = பொதுவம் /குமுனம், communicable = குமுனக்கூடிய,
Commune (n) = குமுன், Commune (v) = குமுதல், Community (n) = குமுனம், Communal (adj) = குமுனார்ந்த, Communism (n) = பொது உடைமை/ குமுனியம், Communion (n) = குமுனார்ந்தம், Communique (n) = தெரி(வி)க்கை/குமுனிகை, Communicable (adj) = படரும்/ குமுனிக்கத்தக்க, குமுனிக்கும், Communicate (v) = தெரிவி/குமுனிடு, Communication (n) = தெரிவிப்பு/குமுனீடு, Ex-communication (n) = குலநீக்கம்/ குமுனீக்கம், communicative = தெரிவிப்பான/ குமுனீட்டான, communicator = தெரிவிப்பாளர்/ குமுனீட்டாளர், commodity = குமலை, commodify = குமலை யாக்கு. commodious = குமலையாக, commoditization = குமலையாக்கம், commodore = குமலையர்
இம்மடலை முடிக்குமுன், public தவிர overall, universal, collective, miscellaneous, widespread என்ற சொற்களுக்கான தமிழாக்கங்களைப் பார்த்துவிடுவோம்.
overall = எல்லாவித,
universal - பேரண்ட
collective = குழுதை(யான)
miscellaneous, = விதவித
widespread = பரவல்
யாவரும்/எவரும் = who-so-ever
ஒவ்வொருவரும் = every one
public என்பதை வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment