Thursday, April 14, 2005

சித்தையும் கருதலும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நவம்பர் மங்கையர் மலரில் அதன் ஆசிரியர் மஞ்சுளா ரமேசு அவர்கள் எழுதிய "ஒரு வார்த்தையிலே வாழ்க்கை முழுவதும்" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கட்டுரை ஆசிரியர் இப்படித் தொடங்குகிறார்.
-----------------------------------------------------------
ச்ரத்தை என்ற ஒரு வார்த்தை வடமொழியில் இருக்கிறது. அதை அப்படியே முழுமையான அர்த்தத்தோடு மொழிபெயர்க்க முடியாது. பொதுவாகப் பேசும் போது பெரியவர்கள், 'உனக்குக் கொஞ்சமாச்சும் ச்ரத்தை இருக்கா?' என்று திட்டுவதைக் கேட்டிருக்கலாம். 'ச்ரத்தையாகப் படி' என்பார்கள். மற்றபடி இந்த வார்த்தை இந்தக் காலத்தில் மறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

என்ன, இந்த மாதம் சொல் ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? இந்த வார்த்தையின் மகிமையைப் பற்றி நான் அறிய நேர்ந்தபோது வியந்துதான் போனேன். இந்த ஒரு வார்த்தையிலேயே வாழ்க்கையின் தத்துவம் அடங்கிப் போய்விட்டதே என்று ஆச்சர்யமாக இருந்தது.

அக்கறை, கூர்ந்த கவனிப்பு, நம்பிக்கை, தர்மம் எனப் பலவிதமாக இந்த ச்ரத்தையை விவரித்துச் சொன்னாலும், முழுமையாக இதன்பொருளை விளக்க ஒரு வார்த்தை எனக்குத் தெரியவில்லை.
----------------------------------------------------------

இந்தக் கட்டுரை எழுதும் முன் ஆசிரியர் சிந்தித்துத் தான் எழுதினாரா என்று தெரியவில்லை. அதெப்படி வடமொழி முறையில் பலுக்கப்படுகிற ஒரே காரணத்தால், இந்தச் சொல்லின் வேர் தெரியாது, இதை வடமொழி என்று சொன்னார்? கூடவே இதை மொழிபெயர்க்க முடியாது என்று எப்படிச் சொன்னார்? புரியவே இல்லை. தமிழ்-வடமொழி இரண்டிற்கும் உள்ள இருவழிப் போக்கை உணராமல் எல்லாவற்றையும் வடமொழியில் இருந்தே கடன்பெற்றோம் என்று சொல்லும் போக்கு ஒரு சிலரிடம் தொடர்ந்து இருக்கிறது. அதில் இவரும் ஒருவர் போலும்.

பலநேரம், குறிப்பாகத் தாளிகைத்துறையில் இருப்பவர்கள் தங்களுக்குள்ளே ஒரு குழுவாகப் பேசிப் புழங்கும் சொற்களையே முற்று முழுதான உண்மை என்று எண்ணிக் கொண்டு, இதுபோலக் கருத்துச் சொல்வதைக் கண்டால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல வழக்குக்கள் உள்ள அகன்ற மொழி தமிழ் என்பது, இவர்களுக்கு என்றைக்கு விளங்கும்? நெல்லைத் தமிழை அறிந்தவர் அதுவே முழுத் தமிழ் என்று சொல்ல முடியுமா? ஆர்க்காட்டுத் தமிழை மட்டுமே அறிந்தவர் அதுவே தமிழென்று சொல்ல முடியுமா? இதுபோல சில வகுப்பார் பேசும் தமிழ் மட்டுமே தமிழ், மற்றவர்களுடைய தமிழ் ஓட்டை என்று கூறமுடியுமா?

கூர்ந்து கவனித்தால், தமிழ் மிடையங்களில் ஓரிரு வகுப்பார் மட்டுமே முன்னின்று, மற்றவர் பங்களிப்புக் குறைவதால், தமிழ் பற்றிய ஒருவித ஓரச் சிந்தனை எங்கும் பரவி வருகிறது என்று புரியும். இதை மாற்ற வேண்டுமானால், பல்வேறு விதமான மக்களும் தங்கள் பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றில்லை. வட்டார வழக்குகளும், நல்ல பழைய இலக்கிய வழக்குகளும் பரவலாக வேண்டும். படிக்கிற சிந்தனை கூடவேண்டும்.

இங்கே சிரத்தை, மற்றும் தொடர்புடைய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முற்படுகிறேன். இவை எல்லாமே பொருந்துதல் என்ற பொதுமைக் கருத்தின் வழியாகக் கிளர்ந்தவை. அறிவு பற்றிய சிந்தனைகள் எல்லாமே பொருந்துவதில் தான் தொடங்கும்.

தமிழில் அண்ணுதல் என்பது நெருங்கி வருதல் என்றும், பொருந்துதல் என்றும் பொருட்பாடு கொள்ளும். பொருந்துதல் என்பது இன்னும் ஆழமாகப் பொருந்தும் போது பற்றுதல் என்று ஆகும். அண்ணுதலின் வல்லினத் திரிவான அட்டுதல் என்பது ஒட்டுதலைக் குறிக்கும். அண்ணுதலின் திரிபான உண்ணுதலும் எண்ணுதலும் கூடப் பொருந்துதலையே குறிக்கும். உள்ளுதலின் மெல்லினத் திரிவு உண்ணுதல். உள்ளுகின்ற செயலைச் செய்வது உள்ளம். ஒரு பொருளைப் பற்றிப் அதோடு உள்ளத்தில் பொருந்துதலே எண்ணுதல். எண்ணுதலின் பெயர்ச்சொல் எண்ணம். உள்>அள்>அறி>அறிவு என்றும் இது இன்னொரு உருவம் கொள்ளும்.

இதே போல முன்னுதல் என்பதும் பொருந்துதலே. முன்னுதல் மன்னுதலாய்த் திரிந்து மனம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். மன்னுதல் மானுதல் என்றும் விரியும். மகர/நகரப் போலியில் முன்னுதல் நுன்னுதலாகும். நுன்னுதல்>நுனுதல்>நுனைதல்>நினைதல் என்று நினைவு என்னும் பெயர்ச்சொல்லை உருவாக்கும்.

கள்ளுதல் என்பதும் கூடுதல், பொருந்தல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். கள் என்னும் பெயர் பன்மை விகுதியாவது கூட்டப் பொருளில் தான். குல்>குள்>கள்>கரு>கருது = நினை; கருது>கருத்து

ஒன்றுதல் என்பதும் பொருந்துதலே; ஒன்றுதலே ஓர்தலாகும்; ஓர்தல்>ஓர்மை = நினைவு; ஓர்மை என்ற சொல் மலையாளத்தில் இன்றும் நினைவை உணர்த்தும் சொல்.

துன்னுதல் என்பதும் பொருந்துதலே; துன்னுதல்>தன்னுதல்>தானம் = பொருந்தி ஒரு நிலையில் நிற்றல்; தானம் வடமொழிப் பலுக்கலில் த்யானம் ஆகும். இது வடமொழிச் சொல் என்றே நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். இல்லை. அடிப்படை வினைச்சொல் தமிழில் தான் உண்டு.

கவ்விக் கொள்வது என்பது பற்றுதல். கவ்வும் செயலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் கவனம்; அதாவது பற்றிக் கொள்ளும் நிலை.

இதே பாணியில் சுள்>செள்>செள்+து>செட்டு>செத்து>சித்து என்று எழுந்த சொல்லே கருத்து, கருதியதை அடையும் திறம், அறிவுப் பொருள் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். சித்தில் பிறந்தது சிந்தனை; சித்தைச் செய்யும் கருவி சித்தம் என்னும் மனம்; சித்தின் அந்தம் (=முடிவு) சித்தாந்தம்; சித்தின் நீட்டம் சித்தை. அதை வடமொழிப் படுத்தி ச்ரத்தை என்கிறோம். ரகரம் இப்படி உள்ளே நுழைவது வடமொழிப் பலுக்கலில் உள்ள் ஒரு பாணி.

அன்பு, பத்தி (= பற்றிக்கொள்ளல்), நம்பிக்கை, விருப்பம், ஊற்றம் (= பற்றுக்கோடு), அசைவின்றி நிற்றல், அறிவு என்ற பொருட்பாடுகளைச் சித்தை என்ற சொல் குறிக்கிறது.

பொதுவாகத் தமிழ்ச் சொற்களின் ஆழத்தை அறியாமல் மேம்போக்காகப் புரிந்து கொண்டு, தாளிகை ஆசிரியர்கள் "தமிழில் இதைச் சொல்ல முடியாது, அதைச் சொல்ல முடியாது" என்று உரைப்பது குருடன் யானையைத் தடவிப் பார்ப்பது போல் தான்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

º¢ò¨¾Ôõ ¸Õ¾Öõ

þÃñÎ ¬ñθÙìÌ Óý ´Õ ¿ÅõÀ÷ Áí¨¸Â÷ ÁÄâø «¾ý ¬º¢Ã¢Â÷ ÁïÍÇ¡ çÁÍ «Å÷¸û ±Ø¾¢Â "´Õ Å¡÷ò¨¾Â¢§Ä Å¡ú쨸 ÓØÅÐõ" ±ýÈ ¸ðΨèÂô ÀÊì¸ §¿÷ó¾Ð. ¸ðΨà ¬º¢Ã¢Â÷ þôÀÊò ¦¾¡¼í̸¢È¡÷.
-----------------------------------------------------------
îÃò¨¾ ±ýÈ ´Õ Å¡÷ò¨¾ ż¦Á¡Æ¢Â¢ø þÕ츢ÈÐ. «¨¾ «ôÀʧ ÓبÁÂ¡É «÷ò¾ò§¾¡Î ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ ÓÊ¡Ð. ¦À¡ÐÅ¡¸ô §ÀÍõ §À¡Ð ¦ÀâÂÅ÷¸û, '¯ÉìÌì ¦¸¡ïºÁ¡îÍõ îÃò¨¾ þÕ측?' ±ýÚ ¾¢ðÎŨ¾ì §¸ðÊÕì¸Ä¡õ. 'îÃò¨¾Â¡¸ô ÀÊ' ±ýÀ¡÷¸û. ÁüÈÀÊ þó¾ Å¡÷ò¨¾ þó¾ì ¸¡Äò¾¢ø Á¨ÈóÐÅ¢ð¼Ð ±ý§È ¦º¡øÄÄ¡õ.

±ýÉ, þó¾ Á¡¾õ ¦º¡ø ¬Ã¡ö ±ýÚ §¸ð¸¢È£÷¸Ç¡? þó¾ Å¡÷ò¨¾Â¢ý Á¸¢¨Á¨Âô ÀüÈ¢ ¿¡ý «È¢Â §¿÷ó¾§À¡Ð Å¢Âóо¡ý §À¡§Éý. þó¾ ´Õ Å¡÷ò¨¾Â¢§Ä§Â Å¡ú쨸¢ý ¾òÐÅõ «¼í¸¢ô §À¡öŢ𼧾 ±ýÚ ¬îº÷ÂÁ¡¸ þÕó¾Ð.

«ì¸¨È, Ü÷ó¾ ¸ÅÉ¢ôÒ, ¿õÀ¢ì¨¸, ¾÷Áõ ±Éô ÀÄÅ¢¾Á¡¸ þó¾ îÃò¨¾¨Â Å¢ÅâòÐî ¦º¡ýÉ¡Öõ, ÓبÁ¡¸ þ¾ý¦À¡Õ¨Ç Å¢Çì¸ ´Õ Å¡÷ò¨¾ ±ÉìÌò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
----------------------------------------------------------

þó¾ì ¸ðΨà ±ØÐõ Óý ¬º¢Ã¢Â÷ º¢ó¾¢òÐò ¾¡ý ±Ø¾¢É¡Ã¡ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. «¦¾ôÀÊ Å¼¦Á¡Æ¢ ӨȢø ÀÖì¸ôÀθ¢È ´§Ã ¸¡Ã½ò¾¡ø, þó¾î ¦º¡øÄ¢ý §Å÷ ¦¾Ã¢Â¡Ð, þ¨¾ ż¦Á¡Æ¢ ±ýÚ ¦º¡ýÉ¡÷? ܼ§Å þ¨¾ ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ ÓÊ¡Р±ýÚ ±ôÀÊî ¦º¡ýÉ¡÷? Ò⧊þø¨Ä. ¾Á¢ú-ż¦Á¡Æ¢ þÃñÊüÌõ ¯ûÇ þÕÅÆ¢ô §À¡ì¨¸ ¯½Ã¡Áø ±øÄ¡Åü¨ÈÔõ ż¦Á¡Æ¢Â¢ø þÕó§¾ ¸¼ý¦Àü§È¡õ ±ýÚ ¦º¡øÖõ §À¡ìÌ ´Õ º¢Äâ¼õ ¦¾¡¼÷óÐ þÕ츢ÈÐ. «¾¢ø þÅÕõ ´ÕÅ÷ §À¡Öõ.

Àħ¿Ãõ, ÌÈ¢ôÀ¡¸ò ¾¡Ç¢¨¸òШÈ¢ø þÕôÀÅ÷¸û ¾í¸ÙìÌû§Ç ´Õ ÌØÅ¡¸ô §Àº¢ô ÒÆíÌõ ¦º¡ü¸¨Ç§Â ÓüÚ Óؾ¡É ¯ñ¨Á ±ýÚ ±ñ½¢ì ¦¸¡ñÎ, þЧÀ¡Äì ¸ÕòÐî ¦º¡øŨ¾ì ¸ñ¼¡ø Å¢Â측Áø þÕì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ÀÄ ÅÆìÌì¸û ¯ûÇ «¸ýÈ ¦Á¡Æ¢ ¾Á¢ú ±ýÀÐ, þÅ÷¸ÙìÌ ±ý¨ÈìÌ Å¢ÇíÌõ? ¦¿ø¨Äò ¾Á¢¨Æ «È¢ó¾Å÷ «Ð§Å ÓØò ¾Á¢ú ±ýÚ ¦º¡øÄ ÓÊÔÁ¡? ¬÷측ðÎò ¾Á¢¨Æ ÁðΧÁ «È¢ó¾Å÷ «Ð§Å ¾Á¢¦ÆýÚ ¦º¡øÄ ÓÊÔÁ¡? þЧÀ¡Ä º¢Ä ÅÌôÀ¡÷ §ÀÍõ ¾Á¢ú ÁðΧÁ ¾Á¢ú, ÁüÈÅ÷¸Ù¨¼Â ¾Á¢ú µð¨¼ ±ýÚ ÜÈÓÊÔÁ¡?

Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø, ¾Á¢ú Á¢¨¼Âí¸Ç¢ø µÃ¢Õ ÅÌôÀ¡÷ ÁðΧÁ ÓýÉ¢ýÚ, ÁüÈÅ÷ Àí¸Ç¢ôÒì ̨Èž¡ø, ¾Á¢ú ÀüȢ ´ÕÅ¢¾ µÃî º¢ó¾¨É ±íÌõ ÀÃÅ¢ ÅÕ¸¢ÈÐ ±ýÚ ÒâÔõ. þ¨¾ Á¡üÈ §ÅñÎÁ¡É¡ø, Àø§ÅÚ Å¢¾Á¡É Áì¸Ùõ ¾í¸û Àí¸Ç¢ô¨Àî ¦ºö ÓýÅçÅñÎõ. Á¨ÈÅ¡¸ ¿ÁìÌû§Ç ÀÆí¸¨¾¸û §ÀÍž¢ø À¦ɡýÈ¢ø¨Ä. Åð¼¡Ã ÅÆì̸Ùõ, ¿øÄ À¨Æ þÄ츢 ÅÆì̸Ùõ ÀÃÅÄ¡¸ §ÅñÎõ. ÀÊì¸¢È º¢ó¾¨É ܼ§ÅñÎõ.

þí§¸ º¢Ãò¨¾, ÁüÚõ ¦¾¡¼÷Ò¨¼Â ¦º¡ü¸¨Çô ÀüÈ¢î ÍÕì¸Á¡¸î ¦º¡øÄ ÓüÀθ¢§Èý. þ¨Å ±øÄ¡§Á ¦À¡Õóоø ±ýÈ ¦À¡Ð¨Áì ¸Õò¾¢ý ÅƢ¡¸ì ¸¢Ç÷ó¾¨Å. «È¢× ÀüȢ º¢ó¾¨É¸û ±øÄ¡§Á ¦À¡ÕóО¢ø ¾¡ý ¦¾¡¼íÌõ.

¾Á¢Æ¢ø «ñϾø ±ýÀÐ ¦¿Õí¸¢ ÅÕ¾ø ±ýÚõ, ¦À¡Õóоø ±ýÚõ ¦À¡ÕðÀ¡Î ¦¸¡ûÙõ. ¦À¡Õóоø ±ýÀÐ þýÛõ ¬ÆÁ¡¸ô ¦À¡ÕóÐõ §À¡Ð ÀüÚ¾ø ±ýÚ ¬Ìõ. «ñϾĢý ÅøÄ¢Éò ¾¢Ã¢Å¡É «ðξø ±ýÀÐ ´ðξ¨Äì ÌÈ¢ìÌõ. «ñϾĢý ¾¢Ã¢À¡É ¯ñϾÖõ ±ñϾÖõ ܼô ¦À¡Õóо¨Ä§Â ÌÈ¢ìÌõ. ¯ûپĢý ¦ÁøÄ¢Éò ¾¢Ã¢× ¯ñϾø. ¯ûÙ¸¢ýÈ ¦ºÂ¨Äî ¦ºöÅÐ ¯ûÇõ. ´Õ ¦À¡Õ¨Çô ÀüÈ¢ô «§¾¡Î ¯ûÇò¾¢ø ¦À¡Õóо§Ä ±ñϾø. ±ñϾĢý ¦ÀÂ÷¡ø ±ñ½õ. ¯û>«û>«È¢>«È¢× ±ýÚõ þÐ þý¦É¡Õ ¯ÕÅõ ¦¸¡ûÙõ.

þ§¾ §À¡Ä ÓýÛ¾ø ±ýÀÐõ ¦À¡Õóо§Ä. ÓýÛ¾ø Áý۾ġöò ¾¢Ã¢óÐ ÁÉõ ±ýÈ ¦ÀÂ÷¡ø¨Ä ¯ÕÅ¡ìÌõ. ÁýÛ¾ø Á¡Û¾ø ±ýÚõ ŢâÔõ. Á¸Ã/¿¸Ãô §À¡Ä¢Â¢ø ÓýÛ¾ø Ñý۾ġÌõ. ÑýÛ¾ø>ÑÛ¾ø>Ѩɾø>¿¢¨É¾ø ±ýÚ ¿¢¨É× ±ýÛõ ¦ÀÂ÷¡ø¨Ä ¯ÕÅ¡ìÌõ.

¸ûÙ¾ø ±ýÀÐõ Üξø, ¦À¡Õó¾ø ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸¨Çì ¸¡ðÎõ. ¸û ±ýÛõ ¦ÀÂ÷ Àý¨Á Ţ̾¢Â¡ÅÐ Üð¼ô ¦À¡ÕÇ¢ø ¾¡ý. Ìø>Ìû>¸û>¸Õ>¸ÕÐ = ¿¢¨É; ¸ÕÐ>¸ÕòÐ

´ýÚ¾ø ±ýÀÐõ ¦À¡Õóо§Ä; ´ýÚ¾§Ä µ÷¾Ä¡Ìõ; µ÷¾ø>µ÷¨Á = ¿¢¨É×; µ÷¨Á ±ýÈ ¦º¡ø Á¨Ä¡Çò¾¢ø þýÚõ ¿¢¨É¨Å ¯½÷òÐõ ¦º¡ø.

ÐýÛ¾ø ±ýÀÐõ ¦À¡Õóо§Ä; ÐýÛ¾ø>¾ýÛ¾ø>¾¡Éõ = ¦À¡Õó¾¢ ´Õ ¿¢¨Ä¢ø ¿¢üÈø; ¾¡Éõ ż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ò¡Éõ ¬Ìõ. þРż¦Á¡Æ¢î ¦º¡ø ±ý§È ¿õÁ¢ø ÀÄ÷ ±ñ½¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ. þø¨Ä. «ÊôÀ¨¼ Å¢¨É¡ø ¾Á¢Æ¢ø ¾¡ý ¯ñÎ.

¸ùÅ¢ì ¦¸¡ûÅÐ ±ýÀÐ ÀüÚ¾ø. ¸ù×õ ¦ºÂÄ¢ø þÕóÐ À¢Èó¾ ¦ÀÂ÷¡ø ¸ÅÉõ; «¾¡ÅÐ ÀüÈ¢ì ¦¸¡ûÙõ ¿¢¨Ä.

þ§¾ À¡½¢Â¢ø Íû>¦ºû>¦ºû+Ð>¦ºðÎ>¦ºòÐ>º¢òÐ ±ýÚ ±Øó¾ ¦º¡ø§Ä ¸ÕòÐ, ¸Õ¾¢Â¨¾ «¨¼Ôõ ¾¢Èõ, «È¢×ô ¦À¡Õû ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸¨Çì ¸¡ðÎõ. º¢ò¾¢ø À¢Èó¾Ð º¢ó¾¨É; º¢ò¨¾î ¦ºöÔõ ¸ÕÅ¢ º¢ò¾õ ±ýÛõ ÁÉõ; º¢ò¾¢ý «ó¾õ (=ÓÊ×) º¢ò¾¡ó¾õ; º¢ò¾¢ý ¿£ð¼õ º¢ò¨¾. «¨¾ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ îÃò¨¾ ±ý¸¢§È¡õ. øÃõ þôÀÊ ¯û§Ç ѨÆÅРż¦Á¡Æ¢ô ÀÖì¸Ä¢ø ¯ûû ´Õ À¡½¢.

«ýÒ, Àò¾¢ (= ÀüȢ즸¡ûÇø), ¿õÀ¢ì¨¸, Å¢ÕôÀõ, °üÈõ (= ÀüÚ째¡Î), «¨ºÅ¢ýÈ¢ ¿¢üÈø, «È¢× ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸¨Çî º¢ò¨¾ ±ýÈ ¦º¡ø ÌȢ츢ÈÐ.

¦À¡ÐÅ¡¸ò ¾Á¢úî ¦º¡ü¸Ç¢ý ¬Æò¨¾ «È¢Â¡Áø §Áõ§À¡ì¸¡¸ô ÒâóÐ ¦¸¡ñÎ, ¾¡Ç¢¨¸ ¬º¢Ã¢Â÷¸û "¾Á¢Æ¢ø þ¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð, «¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð" ±ýÚ ¯¨ÃôÀÐ ÌÕ¼ý ¡¨É¨Âò ¾¼Å¢ô À¡÷ôÀÐ §À¡ø ¾¡ý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

9 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

மதிப்பிற்குரிய இராமகி ஐயா,

ச்ரத்தை என்ற வார்த்தையை நான் அடிக்கடி உபயோகிக்கிறேனே? எப்படி அது வழக்கொழிந்துவிட்டது என்கிறீர்கள். "கொஞ்சமாவது செய்யற காரியத்துல ச்ரத்தை இருக்காடா ஒனக்கு?", என்று சொல்லிச்சொல்லி, என் மகன்களுக்குக் கூட இச்சொல் தெரியும். சமீபகாலம் வரை ஏதோ வசவுச்சொல் என்றெண்ணியிருந்தார்கள். ஒரு நாள் உட்காரவைத்து பொருள் சொன்னேன். dedication னச்சொல்றியா? என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

சரிதானோ என்று எனக்குப் பட்டது.

அது சரிதானா என்று உங்களைத்தான் கேட்க எண்ணினேன்.

இந்தப்பதிவை இருவரையும் படிக்கச் சொல்லப்போகிறேன்.

மிக நல்ல பதிவு.

அன்புடன், ஜெயந்தி

Thangamani said...

நானும் இந்தக் கட்டுரையை ம.மலரில் படித்தேன். அப்போது சிரத்தை வடமொழி வார்த்தையென்று எண்ணிக்கொண்டு அதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தை என்ன என்று யோசித்துப்பார்த்தேன். சரி நமக்கும் தெரியவில்லை, மஞ்சுளாவுக்கும் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
உங்கள் பதிவு இதை குறித்தது பற்றி மகிழ்ச்சி. சென்ற ஒரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு சொல் எப்படி உருவாகிறது, அதன் வேர்ச்சொல் என்ன அதன் மாற்றங்கள் இவைகளை முன்வைத்து எழுதப்பட்ட அகராதி/புத்தகம் தமிழுக்கு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். அப்படி இருக்குமாயின் தயவு செய்து சொல்லவும். சொல்லும் அதன் மாற்றங்களும், திரிபுகளும், பல சங்கதிகளை, புரிதல்களை எனக்கு சொல்லி வருகின்றன.

தியானம் என்ற சொல்லையும் நான் வடமொழியில் இருந்து வந்ததாகவே எண்ணியிருந்தேன்.

பதிவுக்கு மிக்க நன்றி!

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி,

வேர்ச்சொல் அதன் மாற்றங்கள் பற்றி எழுதப்பட்ட பொத்தகங்கள், அகரமுதலிகள் என்று தனியே கிடையாது. ஆனால் பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன், இரா.இளங்குமரன், தமிழக அரசு வெளியிட்டுவரும் சொற்பிறப்புப் பேரகரமுதலி (இப்பொழுது ககரம் வரை வந்திருக்கிறது. இன்னும் பல தொகுதிகள் வரவேண்டும்.), அந்தக்கால தென்மொழி இதழ்கள் ஆகிய பொத்தகங்களைப் பாருங்கள். உங்களுக்குப் பயன்படும். இவை போன்றவற்றின் பட்டியலை வேறு ஒருமுறை வலைப்பதிவில் இடுகிறேன்.

மேலே உள்ளவர்களுடன், ஒருசில இடங்களில் நான் மாறுபட்டாலும், பல இடங்களில் ஒருப்படுவேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஜெயந்தி,

சித்தை என்ற சொல்லை அழிந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை. திருமதி மஞ்சுளா ரமேஷ் சொல்லுகிறார். அவர் சொல்லுவதைத் தனித்துக் காட்ட மேலும் கீழுமாய் இரண்டு கோடுகள் போட்டிருந்தேனே?

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

நன்றி ஐயா!
சிரத்தை என்ற சொல் நாமும் பாவிப்பதுதான். (ஆனால் ச்ரத்தை என்ற உச்சரிப்பில் அன்று).
மேலும், இந்தக் கிழமையுடன் நின்று விடாது தொடர்ந்தும் இப்படியான தமிழ்ச் சேவையைச் செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கு.அரசேந்திரனின் "கல்" வேர்ச் சொல் பற்றிய விளக்கப் புத்தகம் வைத்துள்ளேன். அவ்வப்போது புரட்டுவதுண்டு. அவர் கிளிநொச்சி வந்திருந்த போது நேரிலும் சந்தித்துள்ளேன். அவரின் சில வாதங்கள் வியப்பாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழிலிருந்து தான் "பென்ரகன்" வந்தது என்பது. ஆனாலும் அவரின் உழைப்புக்கும் ஞானத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர் பாவாணரிடமிருந்து சில இடங்களில் வேறுபடுவதாகச் சொல்கிறார்கள்.

ஈழத்தில் விரைவாக என்ற சொல்லுக்குப்பதிலாக 'கெதியாக' அல்லது 'கெரியாக' என்ற சொற்களைப் பாவிப்பதை, "கதி" என்ற சொல்லிலிருந்து தான் அவை வந்ததாக விளக்கினார். அதேபோல் இன்னும் சிலவற்றையும்.

கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

நற்கீரன் said...

நீங்கள் மொழியை, தமிழ் சொற்களை கருவியாக கொண்டு, ஆழமான கருத்துக்களை எழிமையாக அணுகுகின்றீர்கள்.

"சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை" என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்படும் சிந்தை மனத்தை குறிக்கின்றதா? அப்படியானால் சிந்தனை மனத்தில் இருந்தா எழுகின்றது? மனத்தையும் மூளையையும் தமிழில் எப்படி தொடர்புகொள்வர்?

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் ஐயா,
நான் தான் இதழாசிரியர் சொன்னதை நீங்கள் சொன்னதாகத் தவறாகப் புரிந்துகொண்டேன். மன்னிக்கவும்.
நன்றி. அன்புடன், ஜெயந்தி

Mannai Madevan said...

அன்புகெழுமிய அய்யா!


தங்களின் பதிவுகளை படிக்கையில் என் இதயத்தில் ஒரு பேரானந்தம்
ஊற்றாய் பெருகுகின்றது.

வாழிய நும் பணி! வாழிய நீடு!!

அன்புடன்
மன்னை மாதேவன்.

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன், நற்கீரன், ஜெயந்தி, மன்னை மகாதேவன்,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

வசந்தன்:

கு.அரசேந்திரனின் கல் என்னும் பொத்தகத் தொகுதி படிக்க வேண்டியதும், கைவசம் வைத்திருக்க வேண்டியதும் ஆகும். அவர் பாவாணரில் இருந்து வேறுபடுவார். நானும் இவரில் இருந்து வேறுபடுவேன். இதுபோன்ற வேறுபடுதல் இயற்கையே. முன்னவர் செய்தவற்றை சீர்த்துக்கிப் பார்த்து ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றைத் தானே ஏற்றுக் கொள்ளமுடியும். ஆய்வில் முன்னேற்றம் என்பதே முன்னவரைக் கேள்வி கேட்பதில் தொடங்குகிறது.

நற்கீரன்:

சிந்தை மனதைக் குறிக்கிறதா என்றால் ஆமாம். ஆனால் மனது என்பது நெஞ்சில் இல்லை. நெஞ்சு என்பது குருதயத்தைக் (heart) குறிக்கிறது. மனது என்பது மூளையில் தான் இருக்கிறது. பல சொற்களின் புரிதல் மூளைக்கும் நெஞ்சுக்கும் உள்ள தவறான புரிதலால் தடைப்பட்டுப் போகிறது. இது ஒருவகையில் புவிநடுவக் கொள்கைப் போன்று மயக்கம் தருவது தான்.

அன்புடன்,
இராம.கி.