ஒருமுறை ”realm of nucleons என்ற சொற்றொடரை எப்படித்தமிழில் சொல்வது?” என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டார். அதற்கிட்ட மறுமொழியை இப்போது வலைப்பதிவில் சேமிக்கிறேன்.
domain
இதற்குக் கொற்றம் என்ற சொல்லை முன்பு பரிந்துரைத்தேன். இன்றது இணையத்தில் ஓரளவு புழக்கத்திலுள்ளது. கூகுள்செய்தால் உங்களுக்குத் தெரியவரும்.
realm
late 13c., "kingdom," from Old French reaume, probably from roiaume "kingdom," altered (by influence of Latin regalis "regal") from Gallo-Roman *regiminem, accusative form of Latin regimen
"system of government, rule," from regere "to rule, to direct, keep straight, guide" (from PIE root *reg- "move in a straight line," with derivatives meaning "to direct in a straight line," thus "to
lead, rule"). Transferred sense "sphere of activity" is from late 14c.
இதை அரையலம் என்னலாம். அரையன்>அரைசன் போன்ற சொற்களோடு தொடர்புடையது. இன்று இராயல சீமா என்கிறாரே, அது அரையலச் சீமை. மண்டலம் போல் லகரம் இதில் உள்நுழையும். அரையலங்கள் குறுநில மன்னர் ஆட்சிசெய்யும் பகுதிகள். அரசராளும் முழு அரையம் போன்றதன்று. பல அரையங்கள் சேர்ந்தது வேந்தம். வேந்தர் ஆட்சிசெய்வது..
nucleon
nucleus என்பதைப் பலகாலம் நெற்று என்றே நான் சொல்லிவந்துள்ளேன். கரு என்பதைப் பலரும் பயன்படுத்துவார். அப்பொழுது core என்பதற்கு வேறொரு பெயரடையைச் சேர்க்கவேண்டும். சொல் நீளும். நீளச்சொற்கள் அறிவியல் தமிழில் ஒருநாளும் பயன்படா. என்னைக் கேட்டால் கரு என்பதை coreக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
nuclear science = நெற்று அறிவியல்;
nuclear physics = நெற்றுப் பூதியல்.
nuclear engineering = நெற்றுப் பொறியியல்
கணக்கற்ற நெற்றுச் சொற்களை இதுபோல் எண்ணிப் பார்க்கலாம். விரிவஞ்சி நான் அவற்றைப் பட்டியலிடவில்லை. சிலவற்றை மட்டுஞ் சொல்கிறேன்.
nuclear energy நெற்று ஆற்றல்
nuclear war = நெற்றுப்போர்,
nuclear winter = நெற்று வாடைக்காலம்
nuclear family = நெற்றுக்குடும்பம்
mono-nuclear = முகன நெற்று
thermonuclear = தெறுமநெற்று
நெற்றின் பகுதிகளாய்,
nucleon = நெற்றுவி;
proton = முன்னி;
electron = மின்னி;
neutron = நொதுமி (நொதுமல் = neutral என்பதற்கான பழந்தமிழ்ச் சொல்.)
என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றிலும் ஏராளங் கூட்டுச்சொற்கள் உள்ளன. அணு என்ற பின்னொட்டுச்சொல்லை நான் இவற்றோடு சேர்ப்பதில்லை. சொல் நீளும். வெறும் இகரத்திலேயே n எனும் ஈற்றுப் பொருளைக் கொண்டுவந்துவிடலாம். நெற்றுவி தவிர்த்து முன்னி, மின்னி, நொதுமி போன்ற சொற்களை 47 ஆண்டுகளாய் நான் பழகிவருகிறேன். இது வரை ஒரு மொழிபெயர்ப்புச் சிக்கலையும் கொடுக்கவில்லை.
electrical engineering = மின்னியற் பொறியியல் (சுருக்கமாய் மின் பொறியியல்);
electronic engineering = மின்னியியற் பொறியியல் (சுருக்கமாய் மின்னிப் பொறியியல்). கவனம் வேண்டும். ஒரு யிகரம் தவறினால் பொருள் விலகிப் போகும்.
realm of nucleons = நெற்றுவி அரையலம்
அன்புடன்,
இராம.கி.

1 comment:
அருமையான மொழி பெயர்ப்பு ஐயா. வாழிய வளமுடன்... சுந்தர் பரந்தாமன்
Post a Comment