ஏனத்தில் பற்றிக்கொள்ளும் அழுக்கு, துரு, தூசு போன்றவை கறையெனப் படும். கறுப்பு, களங்கமென்றும் சொல்வர். மாசு, மறு என்பனவும் இதே பொருள் குறிப்பனவே. கரு>கறு என்று இச்சொல் பிறந்தது. பெரும்பாலான அழுக்கு, துரு, தூசு, மாசு, மறு போன்றன கருநிறத்தில் இருப்பதால் ”கறு” ஏற்பட்டது. கறள் என்பதும் rust, dross, stain தான். கறுவிற்கும் கறளுக்கும் ஆன வேறுபாடு மிக நுண்ணியது. கறு என்பது ”ஏனத்தில் பிடித்துக்கொண்டதா, பிடிக்காததா?” என்று தரம்பார்த்துப் பிரித்துச்சொல்வதில்லை. தனித்து இருந்தாலும் அது கறுவே. கறள் என்பது கறு+அள்= கறள் அள்ளிக் (பிடித்துக்) கொண்ட கறு கறளாகும். அட்டக்கரி என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? பாத்திரத்தில் பிடித்துக் கொண்ட கரி. அள்+து= அட்டு>அட்டுதல் = நெருங்குதல், பிடித்துக்கொள்ளல் இதனாலேயே கறள், கறடென்றும் ஆகும்.
கூர்ங்கருவியால் ”கறகற” என்று தேய்த்துக் கறட்டையெடுப்பது கறண்டுதல்/கரண்டுதல் எனப்பட்டது. (கரகர/கறகற என்ற ஒலிக்குறிப்பும் இதனுள் சேர்ந்து கொண்டது.) பாத்திரத்தின் உள்ளே ஒரு கலவைப் பொருள் (நீர்மமும் திண்மத்துகளும் சேர்ந்தது, கூட்டு, பருப்பு, மசியல், பச்சடி, சட்டினி, சாம்பார் என்ற பல்வேறு பொருட்களும் நம் சமையலிற் கலவைகள் தாம்) இருந்தால் திண்மத்துகள் கீழே தேங்காது இருக்கும்படியும், அள்ளும்படியும் இருக்கும் அகப்பையைக் கறண்டி என்பார். கறளித்தல், கறண்டித்தல் என்பது கறளை எடுப்பது. பேச்சுவழக்கில் கரண்டித்தல் எனும் பிறவினைச்சொல் கரண்டுதல் எனும் தன்வினையாகவும் மாறும். கறண்டுதல், வறண்டுதல் என்றுஞ் சொல்லப் படும். இதுவே ஆங்கிலத்தில் scratch, scrub எனப்படுகிறது. தேங்காய் நாரால், தாவரநாரால், புல்லால், மாழைக் கம்பியால், பொத்திகையால் (plastic) என விதவிதமாய் இன்று பெருகிப்போன scrubbing pad ஐக் கறண்டை எனலாம். (கரண்டைக் கால் என்பது வேறு. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கலாம்.) இது கறளைக் கறண்டியெடுக்கும் கறண்டை.
bacto scrub = பட்டுயுரிக் கறண்டை [பட்டுயிரியைப் (bacteria, பட்டையாய் நீண்டு கிடக்கும் நுண்ணுயிரி; நீளம் அதிகமாகி அகலம் மிகக்குறைந்த பொருள்கள் தமிழில் பட்டை எனப்படும். அது flat ஆக இருக்கத் தேவையில்லை) போக்கும் கறண்டை என்ற சான்றிதழ் பெற்றது.]
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment