தமிழ்ச் சொல்லாய்வுத் தளத்தில், தமிழ் என்பார், “Playlist என்பத்தைத் தமிழில் எப்படி சொல்லலாம்? 'பா-பட்டியல்' என்ற சொல்லைக் காட்டிலும் வேறு ஏதேனும் சொல் உள்ளதா? Playlist இற்குத் தமிழாக்கம் 'பட்டியலை' என்று ஏதோ ஒரு வலைதளத்தை என் நண்பர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்” என்று கேட்டார். பலரும், “பாமாலை, பாட்டுவரிசை, பா வரிசை” என்று சொன்னார். ஒருவர், “Please note that play in playlist doesn't refer to songs” என்றார். இன்னொருவர், “இயக்குதல் ஓட்டுதல் ஆடுதல் எனறும் பொருள் கொள்ளலாம். இயங்கு வரிசை” என்றார், இனி இடுகைக்கு வருவோம்.
playlist இல் முகன்மை play என்பதே. நாடகம், திரைப்படம் போன்றவற்றைப் பேசுகையில் “he played that part" என வருவதை ”அவர் அப் பாத்திரத்தில் நடித்தார்” என்று தமிழில் சொல்வோம். ஓர் இசைக் கச்சேரியில் he played that song என்பதை ”அவர் அப்பாட்டைப் பாடினார்” என்போம். சிறாருக்கான மாயக் காட்சியில் ” he played a magic" என்பதை ”மாயகர் ஒரு மாயஞ் செய்தார்” என்போம். இந்தியப் பெரும் கிட்டியாட்ட இழையின் (Indian Primier Cricket League) முடிவில் "CSK played against MI in the knock-out stage" என்பதை, “MIக்கு எதிராய் வீழ்த்தாட்டு நிலையில் CSK விளையாடியது” என்போம். சரி, கிட்டியாட்டம் விடுங்கள்; ஒரு பந்தாட்டத் துளணியில் (tournament), போட்டியில் (contest), அல்லது பந்தயத்தில் (competition) ”இரு வேறு அணிகள் போட்டியிடுகின்றன, ஆடுகின்றன” என்று சொல்லிவிடுவோம்.
played என்பதற்கு ”நடி, பாடு, மாயஞ் செய், விளையாடு, போட்டியிடு, ஆடு” என எத்தனை சொல்கிறோம் பாருங்கள். கேட்பின், “எம்தமிழ் சிறப்பெனச்” சட்டைக் கழுத்துப் பட்டையைத் தூக்கிவிட்டுக் கொள்வோம். (சிறப்புத்தான். மறுக்கேன். கொஞ்சம் உள்ளமை/real காண்போமா? சிலவற்றில் சிறப்பு, சிலவற்றில் ஒப்பேற்று. நம் குறைகளை எப்போது சரி செய்வோம்? நம் மொழி சிறப்பெனில் நம் மக்கள் ஏன் தமிங்கிலம் பழகுகிறார்? conspiracy theories do not take us long.) "ஒரு மொழி போல் இன்னொன்று வராது". "யானைக்கு நம்மிடம் 37 பெயர்கள் தெரியுமா?" ”நாம் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என ஒரேகரையால் சொல்கிறோம், ஆங்கிலேயன் sea shore, river bank, lake shore என விதவிதஞ் சொல்வான்” எனச் சப்பையும் கட்டுவோம். எனக்கும் ஒருசொல் - பலபொருள், பலசொல் - ஒருபொருள் தமிழிலுண்டெனத் தெரியும். பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால் எங்கு குறை, போதாமை உண்டோ, அங்கு சரி செய்யவேண்டாமா? இராம.கி.யின் வேண்டுதல் அதுவே. அதைச் செய்ய முனைந்தால் சாடுகிறீர்களே? அது எப்படி?
மீண்டும் play க்கு வருவோம். இது கலை, இசை, களியாட்டத் துறைகளுக்கு வரும் முன்னார் விளையாட்டுத் துறையில் இருந்தது. அதற்கும் முன் போர்த் துறையில் இருந்தது. போரில் மாந்தர் மடிகிறார். எனவே கொலை தவிர்க்கும் வகையில், எல்லாப் பொருதுகளும் (பொரு>போர், பொருதல் = போர்செய்தல், பொருந்துதல், நடித்தல், பொருநன் = போர்வீரன்) போலச் செய்வதாகின. பொருதலுக்கும் sports இற்கும், கும்மாளத்திற்கும் games இற்கும் இடையே உள்ள உறவை http://valavu.blogspot.com/2008/06/blog-post.html என்ற வலைப்பதிவில் பேசினேன். அதை ஒருமுறை படித்துவிடுங்கள். அப்பொழுது தான் நான் இங்கு தொடர்வது புரியும். இல்லாவிட்டால் புரியாது.
பொருதலின் இன்னொரு வெளிப்பாடு போலுதல். ஒன்றுபோல் இன்னொன்று செய்வது. போலுதல் = to play. இச்சொல் உங்களுக்குச் சற்று தரக் குறைவாய்த் தெரியலாம். ஓர் உதைப் பந்தாட்டட்த்தில் இரு அணியினரும் பந்துதைத்துப் பொருதுவது போல் போலுகிறார் என்றால் தவறா? வெளியில் இருந்து “அடி, குத்து, உதை” என்று போர்க்களச் சொற்களை, ஆட்டம் பார்ப்போர் வாயால் உதிர்க்கிறோமே? ஆட்டத்த்தில் உனக்கு aggression போதாது என்கிறோமே? இதெல்லாம் போலுதல் இல்லையா? இருந்தாலும் நடிப்பு என்ற செயல் சற்று நாணத்தைத் தருகிறதோ? எனவே தரங்குறையாமல் பொருதாட்டம் எனலாம். கிட்டியாட்டத்திலும் இரு தொகுவத்தார் (teams) போலித்துக் கொள்கிறார் அல்லது பொருதுகிறார்.
மாயகர் மாயம் செய்கையில் உண்மை போல் போலுகிறார்/ பொருதுகிறார். ஓர் இசைக்கச்சேரியில் பல்வேறு இசைக்கருவியாரும் (பாடுபவர் மிடற்றுக் கருவி கொண்டுள்ளார்.) பொருதுகிறார்/ பொருந்துகிறார். திரைப்படம்./நாடகத்தில் ஒரு நடிகர் ஒரு பாத்திரம் போல் போலுகிறார்/ பொருந்துகிறார்.
ஆகப் போலுதல். பொருதல் என்பது ஓர்ந்து பார்த்தால் எல்லாவிடங்களிலும் to play என்பதற்குச் சரிவரத்தான் செய்கிறது. பொருதல் என்பது ஒருவேளை சற்றுக் கண்ணியம் கூடியது போல் நமக்குத் தோற்றலாம். போலுதல் சற்று charlatan போல் தெரியலாம். எனவே பொருதல்/பொருவல் என்பதை வைத்துக் கொள்வோமா?
முடிக்குமுன் ஆங்கிலச் சொற்பிறப்பியல் பார்த்துவிடலாம். play (v.) என்பதற்கு, Old English plegan, plegian "move rapidly, occupy or busy oneself, exercise; frolic; make sport of, mock; perform music," from Proto-West Germanic *plegōjanan "occupy oneself about" (source also of Old Saxon plegan "vouch for, take charge of," Old Frisian plega "tend to," Middle Dutch pleyen "to rejoice, be glad," German pflegen "take care of, cultivate"), which is apparently connected to the root of plight (v.), but the ultimate etymology is uncertain என்று போட்டிருப்பார். எங்கிருந்து சொல் வந்ததென்று தெரியாது,. ஆனாலும் குத்துமதிப்பாய்ப் (guess) பரபர, விருவிரு, விரைவு என்ர கருத்தில் சொல்லி விட்டார். play என்பது விளையாட்டில், பொருதில் மட்டுமில்லையே, இசையில், பாட்டில், மாயம் செய்கையில் என விதவிதமாய் வருகிறதே? என் பரிந்துரை அப்படியே நிற்கிறது. போலுதல் என்பதே to play யோடு இணை காட்டுகிறது. மற்ற nostratic மொழிகளைக் காணவேண்டும். இது ஒரு முன்னீடு மட்டுமே.
playlist = பொருது வரிசை. ஒரு மல்லாளி இன்னொரு மல்லாளி பார்த்துக் கூறுகிறான். “பொருதுவோமா?” ஒரு கொக்கியாட்டத் தொகுவம் (hockey team) இன்னொரு தொகுவத்தைப் பார்த்துப் “பொருதுவோமா?” என்று கேட்கிறது. ஒரு மாயக்காரர், காண்போரிடம் ஒரு மாயத்தைப் பொருதிக் காட்டுகிறார். ஒரு தமிழிசைக் குழு, பாரதிதாசன் பாட்டோடு ஒரு பண்ணைப் பொருதிக் காட்டுகிறது. ஒரு கலைஞன் அப் பாத்திரத்தோடு பொருதிப் போனான். எல்லாவிடத்திலும் பொருதல் மட்டுமே பயனாகிறது. பொருள் விளங்குமென எண்ணுகிறேன்.
அன்புடன்,
இராம.கி
playlist இல் முகன்மை play என்பதே. நாடகம், திரைப்படம் போன்றவற்றைப் பேசுகையில் “he played that part" என வருவதை ”அவர் அப் பாத்திரத்தில் நடித்தார்” என்று தமிழில் சொல்வோம். ஓர் இசைக் கச்சேரியில் he played that song என்பதை ”அவர் அப்பாட்டைப் பாடினார்” என்போம். சிறாருக்கான மாயக் காட்சியில் ” he played a magic" என்பதை ”மாயகர் ஒரு மாயஞ் செய்தார்” என்போம். இந்தியப் பெரும் கிட்டியாட்ட இழையின் (Indian Primier Cricket League) முடிவில் "CSK played against MI in the knock-out stage" என்பதை, “MIக்கு எதிராய் வீழ்த்தாட்டு நிலையில் CSK விளையாடியது” என்போம். சரி, கிட்டியாட்டம் விடுங்கள்; ஒரு பந்தாட்டத் துளணியில் (tournament), போட்டியில் (contest), அல்லது பந்தயத்தில் (competition) ”இரு வேறு அணிகள் போட்டியிடுகின்றன, ஆடுகின்றன” என்று சொல்லிவிடுவோம்.
played என்பதற்கு ”நடி, பாடு, மாயஞ் செய், விளையாடு, போட்டியிடு, ஆடு” என எத்தனை சொல்கிறோம் பாருங்கள். கேட்பின், “எம்தமிழ் சிறப்பெனச்” சட்டைக் கழுத்துப் பட்டையைத் தூக்கிவிட்டுக் கொள்வோம். (சிறப்புத்தான். மறுக்கேன். கொஞ்சம் உள்ளமை/real காண்போமா? சிலவற்றில் சிறப்பு, சிலவற்றில் ஒப்பேற்று. நம் குறைகளை எப்போது சரி செய்வோம்? நம் மொழி சிறப்பெனில் நம் மக்கள் ஏன் தமிங்கிலம் பழகுகிறார்? conspiracy theories do not take us long.) "ஒரு மொழி போல் இன்னொன்று வராது". "யானைக்கு நம்மிடம் 37 பெயர்கள் தெரியுமா?" ”நாம் ஆற்றங்கரை, கடற்கரை, ஏரிக்கரை என ஒரேகரையால் சொல்கிறோம், ஆங்கிலேயன் sea shore, river bank, lake shore என விதவிதஞ் சொல்வான்” எனச் சப்பையும் கட்டுவோம். எனக்கும் ஒருசொல் - பலபொருள், பலசொல் - ஒருபொருள் தமிழிலுண்டெனத் தெரியும். பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால் எங்கு குறை, போதாமை உண்டோ, அங்கு சரி செய்யவேண்டாமா? இராம.கி.யின் வேண்டுதல் அதுவே. அதைச் செய்ய முனைந்தால் சாடுகிறீர்களே? அது எப்படி?
மீண்டும் play க்கு வருவோம். இது கலை, இசை, களியாட்டத் துறைகளுக்கு வரும் முன்னார் விளையாட்டுத் துறையில் இருந்தது. அதற்கும் முன் போர்த் துறையில் இருந்தது. போரில் மாந்தர் மடிகிறார். எனவே கொலை தவிர்க்கும் வகையில், எல்லாப் பொருதுகளும் (பொரு>போர், பொருதல் = போர்செய்தல், பொருந்துதல், நடித்தல், பொருநன் = போர்வீரன்) போலச் செய்வதாகின. பொருதலுக்கும் sports இற்கும், கும்மாளத்திற்கும் games இற்கும் இடையே உள்ள உறவை http://valavu.blogspot.com/2008/06/blog-post.html என்ற வலைப்பதிவில் பேசினேன். அதை ஒருமுறை படித்துவிடுங்கள். அப்பொழுது தான் நான் இங்கு தொடர்வது புரியும். இல்லாவிட்டால் புரியாது.
பொருதலின் இன்னொரு வெளிப்பாடு போலுதல். ஒன்றுபோல் இன்னொன்று செய்வது. போலுதல் = to play. இச்சொல் உங்களுக்குச் சற்று தரக் குறைவாய்த் தெரியலாம். ஓர் உதைப் பந்தாட்டட்த்தில் இரு அணியினரும் பந்துதைத்துப் பொருதுவது போல் போலுகிறார் என்றால் தவறா? வெளியில் இருந்து “அடி, குத்து, உதை” என்று போர்க்களச் சொற்களை, ஆட்டம் பார்ப்போர் வாயால் உதிர்க்கிறோமே? ஆட்டத்த்தில் உனக்கு aggression போதாது என்கிறோமே? இதெல்லாம் போலுதல் இல்லையா? இருந்தாலும் நடிப்பு என்ற செயல் சற்று நாணத்தைத் தருகிறதோ? எனவே தரங்குறையாமல் பொருதாட்டம் எனலாம். கிட்டியாட்டத்திலும் இரு தொகுவத்தார் (teams) போலித்துக் கொள்கிறார் அல்லது பொருதுகிறார்.
மாயகர் மாயம் செய்கையில் உண்மை போல் போலுகிறார்/ பொருதுகிறார். ஓர் இசைக்கச்சேரியில் பல்வேறு இசைக்கருவியாரும் (பாடுபவர் மிடற்றுக் கருவி கொண்டுள்ளார்.) பொருதுகிறார்/ பொருந்துகிறார். திரைப்படம்./நாடகத்தில் ஒரு நடிகர் ஒரு பாத்திரம் போல் போலுகிறார்/ பொருந்துகிறார்.
ஆகப் போலுதல். பொருதல் என்பது ஓர்ந்து பார்த்தால் எல்லாவிடங்களிலும் to play என்பதற்குச் சரிவரத்தான் செய்கிறது. பொருதல் என்பது ஒருவேளை சற்றுக் கண்ணியம் கூடியது போல் நமக்குத் தோற்றலாம். போலுதல் சற்று charlatan போல் தெரியலாம். எனவே பொருதல்/பொருவல் என்பதை வைத்துக் கொள்வோமா?
முடிக்குமுன் ஆங்கிலச் சொற்பிறப்பியல் பார்த்துவிடலாம். play (v.) என்பதற்கு, Old English plegan, plegian "move rapidly, occupy or busy oneself, exercise; frolic; make sport of, mock; perform music," from Proto-West Germanic *plegōjanan "occupy oneself about" (source also of Old Saxon plegan "vouch for, take charge of," Old Frisian plega "tend to," Middle Dutch pleyen "to rejoice, be glad," German pflegen "take care of, cultivate"), which is apparently connected to the root of plight (v.), but the ultimate etymology is uncertain என்று போட்டிருப்பார். எங்கிருந்து சொல் வந்ததென்று தெரியாது,. ஆனாலும் குத்துமதிப்பாய்ப் (guess) பரபர, விருவிரு, விரைவு என்ர கருத்தில் சொல்லி விட்டார். play என்பது விளையாட்டில், பொருதில் மட்டுமில்லையே, இசையில், பாட்டில், மாயம் செய்கையில் என விதவிதமாய் வருகிறதே? என் பரிந்துரை அப்படியே நிற்கிறது. போலுதல் என்பதே to play யோடு இணை காட்டுகிறது. மற்ற nostratic மொழிகளைக் காணவேண்டும். இது ஒரு முன்னீடு மட்டுமே.
அன்புடன்,
இராம.கி
No comments:
Post a Comment