Sunday, July 22, 2018

திருவள்ளுவராண்டு - 5

”திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். எனவே திருக்குறள் பிற்காலத்தது” என்று வரும் அடுத்த கருத்து சற்று வேடிக்கையானது. ஏனெனில் மொழியாளுமை பற்றிப் போகிற போக்கில் ஒரு பொதுக்கருத்தை இக்கூற்று சொல்லுகிறது. இதற்குச் செவிசாய்க்கு முன், ”இன்றெழுதுவோரின் தமிழ்நடை என்ன? இதையெப்படி வரையறுப்பது? என் நடை இன்னொருவர் நடைபோல் இருக்குமா? நடைகளுக்கென மட்டிகை (metric) என்ன?” என்று எண்ணிப் பார்க்கலாம். 20 ஆம். நூற்றாண்டில் இதுவரை வந்த ஆய்வுகளில் இப் புள்ளிவிவரங்களை நானெங்கும் கண்டதில்லை. ஆயினும் ”குறளில் வடசொற்கள் கூட”வென்றே சிலர் அடித்துவிடுகிறார். வையாபுரியார், கமில்சுவலபில் சொல்வதை நாமும் நம்பி முடிவுகளை எடுக்கிறோம். இது சரியா? நான் சொல்லவருவதை சற்று ஆழப் பாருங்கள். 

ஒரு புள்ளியியல் தரவாக, நானெழுதிய ஓராண்டுக் கட்டுரைகளில் ”தமிழ்ச் சொற்கள் எவ்வளவு? வடசொற்கள் எவ்வளவு?” எனத் தரம் பிரித்து ”100க்கு எவ்வளவாய்த் தமிழ்ச்சொற்களை இராம.கி. பயன்படுத்தினான்?” எனவொரு கணக்குப் போடலாம். இதுவும் ஒரு மட்டிகையே (metric). (இன்னும் வேறு மட்டிகைகளுமுண்டு. அவற்றை நானிங்கு பேசவில்லை.) இப்படித் தரம்பிரிப்பதிலும் சிக்கல் உண்டு. ஏதோவொரு சொல்லைப் பலரும் பெருவழக்காய் வடசொல்லென்கையில், ஆழவாய்ந்தால் அது தமிழ்ச்சொல் ஆகலாம். இதுபோல் தமிழ்ச்சொல் வடசொல்லாகலாம். வடசொல்/தமிழ்ச் சொல் பிரிப்பில் அகப்பார்வையும் (subjective view), மேம்போக்கும் (rash mentality) எப்போதுமுள்ளன.. பலரின் தமிழ்ச்சொல் ஆளுமையை எந்தத் தேர்வுமின்றி விருட்டாய்ப் (random) பார்த்து, கூறாக்கி (sample), நிரவலைக் (average) கணக்கிட்டு இக்காலத் தமிழ்நடைத் தரம் இத்தனையென ஓரளவு உறுதியோடு சொல்லலாம், இதுபோன்ற புள்ளிவிவரங்களிற் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை:

1. ”எவை தமிழ்?” என்பதிலுள்ள அகப்பார்வை; (ஒருவர் சங்கதமென்பது இன்னொருவருக்குத் தமிழாகலாம். ஒரு காலநிலையில் இது தனியாருக்கு உள்ள படிப்பாழம், ஆய்வு ஆகியவற்றைப் பொறுத்தது. நடைபற்றிய மதிப்பீட்டில், அலசலில், பெரிதும் தாக்கந்தருவது இத்தகை அகப்பார்வைகளே. வையாபுரியார், கமில்சுவலபில் எனப்பலருந் தந்தது அகப்பார்வை தான். பல்வேறு அகப்பார்வைகளிலிருந்து புறப்பார்வைக்கு (objective view) எப்படி வருகிறோமென்பதிலும் நம்மூரில் வரைமுறையில்லை. உகமைகள் (opinions) எல்லாமே ஆய்வென்று சொல்லப்படுகின்றன; இவற்றின் வேறுபாடு தெரிவதில்லை.

2. எடுத்துள்ள கூறின் அளவென்ன? [கூறளவு (sample size) கூடக்கூட தரவின் மதிப்பீட்டு மெய்ம்மை கூடும். வெறுமே ஓரிரு ஆவணங்களை வைத்து மதிப்பிடப் போவது “கரணம் தப்பினால் மரணம்” போலவே அமையும். பெரிய கூறளவென்பது 21 ஆம் நூற்றாண்டு ஆவணங்களுக்கு ஒருவேளை சரி ஆகலாம். நூற்றாண்டுகள் முன்செல முன்செல, சிறிய கூறளவின் காரணத்தால் பிழை பெரிதாய்ப்  பாதிக்கும். தொல்காப்பியமெனில், பொ.உ.மு. 500/700 களில் அந்த ஒரு நூலே நமக்குக் கிட்டியது. எனவே அதன்மேல் நம் கணக்கீட்டை போடும்போது கொஞ்சம் உப்புச்சேர்ந்தே அதை மதிக்க முடியும். (இதற்காகவே பலரும் மிக வாய்ப்பாய் அதை 1000 ஆண்டுகள் பின் தள்ளுவார். தொல்காப்பியத்தைக் கீழிறக்கின், தமிழ் “காலி” என்பது அவரெண்ணம். ஏனெனில் நமக்குக் கிடைத்தவையுள் அது முதல் இலக்கியம்/இலக்கணம். சங்ககால நூல்களும் பல நூற்றாண்டு விரவிப் பரந்தவை. (பொ.உ.மு.550 - பொ.உ.220).] மொத்தத்தில் கூறளவென்பது கிடுக்கான விதயம் (critical matter). 

3. கூறின் அடங்கலைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள விருட்டுமை. (rndomness. விருப்பு வெறூப்பிலா விருட்டுத்தன்மை எல்லாப் புள்ளிவிவரங்களுக்கும் முகன்மை ஆனது. எனக்கு வேண்டிய ஆசிரியரின் ஆக்கங்களை மட்டும் கணக்கிற் கொண்டு ஒரு நூற்றாண்டில், சங்கதத் தாக்கமேயில்லை என்றும், வேறு ஆக்கங்களை வைத்துச் சங்கதத்தாக்கம் அதிகமென்றும் சொல்லலாம். நாம்தான் ஏகப்பட்ட சுவடிகளை நம் முட்டாள்தனத்தால், வெள்ளம், நெருப்பு, செல்லரிப்பு, கவனமின்மை, அறியாமை என அழித்தொழித்திருக்கிறோமே? எத்தனை பரண்களிலிருந்து நம் சுவடிகள் தொலைந்து போயின?)

4. என்ன விதமான எழுத்தாவணங்கள்? (பாரதி தன் உரைநடையில் அளவிற்கு அதிகமாய்ச் சங்கதம் புழங்குவான். அவனுடைய அன்றாடப்பேச்சு ஒருவேளை மணிப்பவளமாய் இருந்திருக்கலாம். அவன் கவிதையில் மட்டும் கவனமாய்த் தமிழ்ச்சொற்கள் மிகும். இதேபோற் கம்பன்காலக் கல்வெட்டிற் சங்கதம் மிகும்; கம்பனோ நற்றமிழில் வடவெழுத்து ஒரீஇ எழுதுவான். அது அவன்நடை. என் செய்வது? இதற்குள்ள வழிமுறையென்ன? ஓர்ந்து பார்த்தோமா? எழுத்தாவணம் தேர்ந்தெடுப்பதிலும் நாம் பிழை செய்யலாம். புள்ளியியல் அறிவியல் முறை என்றால் இதையெல்லாம் பார்க்கத்தான் வேண்டும்.)

5. பெயர்ச்சொற்களில் வடசொற்புழக்கம் கூட இருக்கலாம். வினைச் சொற்களில் அது மீக்குறைந்திருக்கலாம். மொழியை, நடையை நிருணயிப்பதில் வினைச்சொற்களுக்குப் பெரிதும் பங்குண்டு. “ஆ பம்பு ஸ்டார்ட்டியதல்லே?” என்ற மலையாளப் பழக்கம் இப்போது தமிங்கிலத்திலும் உள்வந்து கொண்டிருக்கிறது. பண்ணித்தமிழ் ”டூத்தமிழாய்” மாறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படிக் கணக்குப்போடப் போகிறோம்? (இராம.கி. போன்றோர் கவலைப்படுவது ஏனென்று இப்பொழுது உங்களுக்குப் புரியலாம். தமிங்கிலம் வினைச்சொற்களில் விளையாடத் தொடங்கியுள்ளது. இது இன்னும் பெரிய இக்கு.)

இவை ஒவ்வொன்றிலும் புறப்பார்வை கூடவேண்டும். எல்லாம் தெரிந்தவர் போல் வையாபுரியாரையும், கமில் சுவலபில்லையும் சொல்லிக்கொள்வதில் பொருளில்லை. திருக்குறளில் 102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கமில்சுவலபில் கூறுவார். ”அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வடமொழிச் சொற்கள் திருக்குறளில் உள்ளன” என்று திரு. ஆச்சாரியுங் கூறுவார்.. சுவலபில் எழுதிய ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்னும் பொத்தகத்தின் 170,171-ஆம் பக்கங்களில் குறளில் பயன்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறும் வடமொழிச் சொற்களைக் காணலாம். வையாபுரியாரோ, இதை 120க்கு மேலென்பார். வையாபுரியார் சொற்களையே இங்கு எடுத்துக்கொள்கிறேன். பலநேரங்களில் ”துபாஷி”களை நேரடியாகவே அலசிவிடுவது நல்லது. கமில்சுவலபில் போன்ற மேலையர் பெரும்பாலும் கிளிப்பிள்ளைகளே.  ”துபாஷி”கள் சிந்தனையே மேலையரிடம் வெளிப்படுகிறது.. என்பதிவுகள் இனி நீளலாம். கீழ்வரும் 120க்கும் மேற்பட்ட சொற்களைப் பேசுகையில் வேறு வழியில்லை. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

அகரம் (1), அங்கணம் (720), அச்சு (175), அதி (636), அந்தம் (563), அமா (814), அமரர் (121), அமிழ்தம் (11), அமைச்சு (381), அரங்கு (401), அரசர் (381), அரண் (381), அவம் (266), அவலம் (1072), அவி (259), அவை (332), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆசை (266), ஆணி (667), ஆதி (1), ஆயிரம் (259), இசை (231), இந்திரன் (25), இமை (775), இரா (1168), இலக்கம் (627), உரு (261), உருவு (667), உலகம் (11), உலகு (1),  உல்கு (756), உவமை (7), உறு (498), ஏமம் (306), ஏர் (14), கஃசு (1037), கணம் (29), கணிச்சி (1251), கதம் (130), கந்து (507), கலுழும் (1173), கவரி (969), கழகம் (935), களம் (1224), களன் (780), கனம் (1081), காமன் (1197), காரணம் (270), காரிகை (571), காலம் (102), கானம் (772), குடங்கர் (890), குடி (171), குடும்பம்(1029), குணம் (29), குலம் (956), குவளை (1114), கூர் (599), கொக்கு (490), கோடி (337), கோட்டம் (119), கோட்டி (401),

சமன் (118), சலம் (660), சிவிகை (37), சுதை (714), சூதர் (932), சூது (931), தகா (486), தவம் (19), தாமரை (1103), திண்மை (54), திரு (168), துகில் (1087), துலை (986), தூது (681), தெய்வம் (43), தேயம் (753), தேவர் (1073), தொடி (911), தோட்டி (24), தோணி (1068), தோள் (149), நத்தம் (360), நாவாய் (496), நித்தம் (532), நீர (13), நுதுப்பேம் (1148), பக்கம் (620), பகுதி (111), படாம் (1087), படிவத்தர் (1311), பண்டம் (475), பதம் (548), பயன் (2), பாத்தன் (1311), பளிங்கு (706), பள்லி (840),  பாகம் (1092), பாக்கியம் (1141), பாவம் (146), பீழிக்கும் (843), பீழை (658), புருவம் (1086), பூசனை (18), பூதங்கள் (271), பேடி (614), பேய் (565), மங்கலம் (60), மடமை (89), மதலை (449), மதி (636), மந்திரி (639), மயிர் (964), மயில் (1081), மனம் (7), மணி (1273), மா(68), மாடு (400), மானம் (384), மீன் (931), முகம் (90), யாமம் (1136), வஞ்சம் (271), வண்ணம் (561), வளை (1157), வள்ளி (1304), வித்தகர் (235), வேலை (1221). 

முதலில் வருவது அகரம் (1). இது முதலெழுத்தைக் குறிக்கும். கூடவே எல்லா எழுத்துப்பெயர்களின் பின்வரும் ஒரு சாரியையாகவும் இது பயன்படும்.. க்+அகரம் = ககரம், ம்+அகரம் = மகரம் ..... என்று இது போகும். அகலுதல்/அகருதல் வினைக்கு விரிதலே முதற்பொருள். இதை அங்காத்தல் என்றும் மொழியாளர் சொல்வர். அகரமென்ற பெயர் இவ்வினைச்சொல்லில் எழுந்தது. இவ்விளக்கம் சங்கத இலக்கணத்தில் எங்குதேடினுங் கிடைக்காது. வாயை விரிக்காது எவ்வெழுத்தையும் நாம் பலுக்கமுடியாது. அக்ஷரம் என்ற சங்கதச் சொல்லுக்கு வாய்விரித்தற் பொருள் உள்ளதாய் நானறியேன். தவிர ”அக்ஷரம்” என்ற சொல் மேலை இந்தோயிரோப்பியனிற் கிடையாது. அது ஆல்பா, பீட்டா என்றே போகும். ”அக்ஷர” வடஇந்திய மொழிகளிலும் மற்ற திராவிட மொழிகளிலுமேயுண்டு. இதன் அடிப்படைப் பொருள் தமிழில் மட்டுமே விளக்கப்படும். இந்நிலையில் வடமொழியிலிருந்து தமிழா? தமிழிலிருந்து வடமொழியா? நீங்களே ஓர்ந்து கொள்ளுங்கள். சற்று விரிவென்றாலும் script grammar பற்றிச் சிலவற்றை ஆங்கிலத்திற் சொல்லவிழைகிறேன். (இது நான் வேறு நூலில் சொல்லிய கருத்து.)

When 2 persons exchange syllabic streams on a specific language pattern, both semantic content and information-conveying are important. Phonemes are classified into vowels (uyir/உயிர்) and consonants (mey/மெய்). In an alphabet/syllabary, the verbal noun 'Eluthal (எழுதல்)' means rising. This denotes sound that rises through human throat and other body devices. Similarly another verbal noun 'iluththal (இலுத்தல்)> izhuththal (இழுத்தல்)' denotes pulling and drawing and hence writing (இலக்குதல்). That is why the same word எழுத்து denotes both the sound and the writing.

Vowel (உயிர் எழுத்து) denotes a vocal (V) sound involving no closure, friction or contact of the tongue or lips. The verbal noun uythal (உய்தல்) is to take in air for sustaining life and uyithal (உயிதல்) is blowing out of air. In terms of articulation, while all vowels orginate at the throat and opening of the mouth, additional processes come into play to change the quality. Based on this secondary process, the vowels are divided into 3 categories, viz. 1) Pronounciation of அ and ஆ with unrestricted opening of the mouth 2) Pronounciation of இ. ஈ. எ. ஏ and ஐ with mouth opening and tongue-bottom touching the bottom teeth. 3) Prounciation of உ, ஊ, ஒ, ஓ and ஔ with the mouth opening and lips rounding. The vowels அ, இ, உ are called demonstratives and ஆ, ஏ, ஓ coming at the word-ends are called interrogatives.

Both vocalization (for vowels) and air-flow restrictions (for consonants) occur during articulation. Phonetically every speech consists of a stream of syllables with vowels being the stream peaks and consonants (the slope defining) the peak onsets or coda. There are 2 ways of looking at peak partition, one before and one after. If we partition the stream after every peak, we are splitting into open syllables. If we partition it before every peak, we are splitting into closed syllables. Both are valid view-points. While the open syllables are preferred in Lingusitics, the closed ones are adopted in Tamil Prosodics (யாப்பு). .

Under this perspective, a pure consonant is really not a sound but a restriction to close the vocal tract partially before a vowel is raised. In articulatory phonetics, it is called “con-sonant” meaning “together with voice” In Tamil also, the term மெய் (மே(யுதல்)>மேய்>மெய்) means dwelling on. (மாயோன் மேயக் காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேயத் தீம்பூனல் உலகமும், வருணன் மேயப் பெருமணல் உலகமும்). i.e. ‘voice’ dwells on ‘consonant’. For example, if the back-end of the tongue touches the velum (மெல்லண்ணம்) and restricts the air passage, a modified sound like க emerges instead of அ. This modification occurs because of a restriction க் placed on the air-passage. Sounds like க are restricted vowels [known as consonant-vowels (உயிர்மெய்)]. This is expressed through a relation க்+அ = க. A pure consonant (M) is difficult to articulate without the help of vowels.

In a phonetics laboratory, it is approached through artificial cutting of an audiofile from the left or the right of a syllable having that consonant. For example, in the word உகு, if the front and back உ are removed, we get க். All consonants exhibit a dot-marker on the top of the consonant base. When we learn to pronounce க் in elementary schools, we take the help of vowels by saying either இக் (closed syllable) or க (open syllable). A simar practice is followed for other consonants. As a name, it is called இக்கன்னா or ககரம். ’ன்னா’ is a suffix added to aid pronunciation. (It may be a surprise to know that ‘ன்னா’ is also added in Sinhala alphabet teaching.) Consonants are taught n the north-indian regions through open and not closed syllables.

Within the Tamil script, the vowels are called Vகரம் or Vகாரம் or Vகான் (where V represent the letters like அ, ஊ etc Eg. அகரம், ஊகாரம், etc. கரம், காரம் and கான் are also called as letter increments – எழுத்துச் சாரியைகள்). அஃகாரம்/அஃகான் is the name for aaythem. Similarly, Cகரம் or Cகாரம் or Cகான் (where C represent the respective alphaconsonant க, ஞ, த, ம, ன etc Eg. ககரம், ஞகரம், தகரம், மகாரம், னஃகான், etc.) are the names of the consonants. There is also a practice of calling consonants as இக்கன்னா, இஞ்ஞன்னா, இத்தன்னா, இம்மன்னா and இன்னன்னா in primary schools. But the 216 consonant-vowels are always called as ககர அகரம் ஙகர ஆகாரம், சகர இகரம், ஞகர ஈகாரம், டகர உகரம், ணகர ஊகாரம், தகர எகரம், நகர ஏகாரம், பகர ஐகாரம், மகர ஐகாரம், றகர ஒகரம், னகர ஓகாரம், யகர ஔகாரம் etc. with consonant names coming first and vowel names second. Sometimes, பீ is euphemistically referred to as பகர ஈகாரம், பு as உப்பகாரம், சு as உச்சகாரம் etc.

அகரம் வடசொல் என்ற வையாபுரியார் அகாரம், அஃகான் என்ற மாற்றுச் சொற்களுக்கு என்ன சொல்வார்? அவை தமிழா, சங்கதமா? அகரம் என்ற சொல்லே தமிழில்லை என்று வையாபுரியாராற் சொல்லப்பட்ட தமிழிற்றான், இந்தியாவின் ஆக முந்தையக் கல்வெட்டு பொ.உ.மு.490 இல் கிடைத்திருக்கிறது. (இன்னும் முட்டாள்தனமாய் அசோகன் ப்ராமி என்று சிலர் சொல்வதிற் பொருளென்ன?) இயற்கை எல்லா மாகயங்களையும் (magics) நம் கண்முன் செய்தாலும் உண்மை என்பது எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது. அடுத்த சொல்லான அங்கணத்திற்கு (720) வருவோம்..

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்

அங்கணம் என்பது சாய்க்கடை சாய்வான கடை.= சாய்வான ஓட்டம். இங்கே gravity flow வால் கழிவுநீரோட்டம் நடைபெறுகிறது. எந்தவொரு சாய்க்கடையிலும் சாய்வு இல்லாவிட்டால் நீரோடாது. அண்மையில் கீழடி அகழாய்விற்கு அப்புறமும் சாய்க்கடை என்பது தமிழர்க்குத் தெரியாதென்று சொல்ல முடியுமோ?. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கு+அணம் = அங்கணம்.  தம் கூட்டத்தார் அல்லாதார் முன் பேசிப் பெருமைகொள்வது அங்கணத்துள் மக்கிக் கெட்டுப்போகும் அமுது போன்றது என்கிறார் திருவள்ளுவர். இங்கே நகர நாகரிகம் தெரிந்தவரே குறள் சொல்கிறார் என்பதை நினைவுகொள்ளுங்கள்.. தமிழர் நாகரிகத்தில் நகர அமைப்பும், அங்கணக் கட்டுமானமும் உண்டு. கட்டுமானம் வைத்திருப்போர் சொல் இல்லாதிருப்பாரா? அங்கணம் கிட்டத்தட்ட எல்லாத் திராவிட மொழிகளிலும் இருக்கிறது.

அடுத்த பதிவிற்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: