இன்று குட்டக் குடலியலை (Gastro-enterology)ஒட்டிய, ”வெளிக்கிடல்” தொடர்பான, சில சொற்களைப் பேசப்போகிறோம். இதுபோன்றவற்றைப் பொது அரங்கில் பேசப் பலரும் வெட்கப் படுவோம். ஆனாலும் கலைச்சொற்களைத் தெரிந்து கொள்ளவாவது பேச வேண்டும்.
இனிப் புலனத்திற்கு வருவோம். நம்மில் பலரும் பேச்சுவழக்கில் இரைப்பை (= இரை கிடக்கும் பை) எனும் கூட்டுச் சொல்லால் stomach ஐக் குறிப்போம். பேச்சு வழக்கில் அது சரி. ஆனால், அறிவியல் கட்டுரைகளுக்கு அது சரிப்படாது. பொருட் குழப்பம் ஏற்படலாம். அதைத் தவிர்க்கக் ”குட்டம்” என்ற சொல் தேவைப்படுகிறது. (சொல் விளக்கத்திற்கு இரைப்பையைப் பயன் கொள்ளலாம்.)
குட்ட (gastro-) எனும் பெயரடையை gastro-: also gastero-, before vowels gastr-, scientific word-forming element meaning "stomach," from Greek gastro-, combining form of gaster (genitive gastros) "belly, paunch; womb" (see gastric). Also used in compounds in ancient Greek, as gastrobarys "heavy with child." என்றவாறு, ஆங்கிலச் சொற்பிறப்பியல் விளக்கும். Gastrointestinal (adj) = குட்டக் குடலிய
இனித் தொண்டையிலிருந்து, அண்டு (anus) வரை உடலில் அமையும் உணவுக் கணலைப் பார்ப்போம். [உள்வது> உண்பது. உள்வு> உணவு; அதுபோல், கணுவது/ கணுக்குவது (to connect) கணல்.]
தொண்டையையும் அண்டையும் பல்வேறு கட்டகங்களால், உணவுக்கணல் என்பது கணுக்கிறது. alimentary (adj.) "pertaining to nutrition," 1610s, from Medieval Latin alimentarius "pertaining to food," from Latin alimentum "nourishment, food," from alere "to nourish, rear, support, maintain," from PIE root *al- "to grow, nourish." இது போல் கணல் (canal. n.) early 15c., in anatomy, "tubular passage in the body through which fluids or solids pass;" mid-15c., "a pipe for liquid;" from French canal, chanel "water channel, tube, pipe, gutter" (12c.), from Latin canalis "water pipe, groove, channel," noun use of adjective from canna "reed". Sense transferred by 1670s to "artificial waterway for irrigation or navigation."
அடுத்துக் குட்டத் தொடர்ச்சியாய்ச் சிறுகுடலும், பெருங்குடலும் அமையும் தொகுதியான வயிறு (bowel) என்ற சொல்லைப் பார்ப்போம். (குழல்>குடல்) intestine (n.) "lower part of the alimentary canal," early 15c., from Old French intestin (14c.) or directly from Latin intestinum "a gut," plural (intestina), "intestines, bowels," noun use of neuter of adjective intestinus "inward, internal," from intus "within, on the inside" (from PIE *entos, suffixed form of root *en "in"). அடுத்து, bowel (n.) வயிறு (bowel), c. 1300, "human organs of the abdominal cavity," from late 14c. specifically "human intestines," from Old French boele "intestines, bowels, innards" (12c., Modern French boyau), from Medieval Latin botellus "small intestine," originally "sausage," diminutive of botulus "sausage," a word borrowed from Oscan-Umbrian.
சிறு குடலின் 3 பகுதிகளாய்ப் பன்னீரலகம் (duodenum), இழினம் (jejunum), ஈறியம் (ileum) என்பவற்றைச் சொல்வார். கீழே இம் மூன்று சொற்களின் விளக்கங்களைப் பாருங்கள்.
duodenum (n.) "first portion of the small intestine," late 14c., also duodene, from Medieval Latin duodenum digitorium "space of twelve digits," from Latin duodeni "twelve each" (from duodecim "twelve"). Coined by Gerard of Cremona (d. 1187) in "Canon Avicennae," a loan-translation of Greek dodekadaktylon, literally "twelve fingers long." The intestine part was so called by Greek physician Herophilus (c. 353-280 B.C.E.) for its length, which is about equal to the breadth of twelve fingers. The classical plural is duodena.
jejunum (n.) second division of the small intestine, late 14c., from Modern Latin noun use of Latin ieiunum, neuter of ieiunus "empty". Translating Greek nestis (Galen). So called because it typically is found empty during dissections, perhaps because it would tend to drain in a body laid on its back.
ileum (n.) lowest part of the small intestine, 1680s, medical Latin, from ileum, in medieval medicine "the part of the small intestines in the region of the flank," singular created from Latin ilia (pl.) "groin, flank," in classical Latin, "belly, the abdomen below the ribs," poetically, "entrails, guts." The word apparently was confused in Latin with Greek eileos "colic" (see ileus), or perhaps is a borrowing of it. The sense is "winding, turning," either via the Greek meaning or from the convolutions of the intestines.
மேற்சொன்ன சிறுகுடல் ஈறியத்திற்கு அப்புறம், நீளத் தூம்பான (tube) பெருங் குடல் கணுக்கப் படும். பெருங்குடலின் 3 பகுதிகளைக் குழகம் (colon), குத்தம் (rectum), அண்டு (anus) என்பார்.
குழகத்திலும் 4 பகுதிகள் உண்டு. அவற்றைக் கவுக்குயம் (caecum; entry point, about 6” long) ஏறு குழகம் (ascending colon), கிடைக் குழகம் (transverse colon), இழி குழகம் (descending colon) சகரக் குழகம் (sigmoid colon; headed across to the right) என்பார்.
முதலில் கவுக்குயத்தின் விளக்கம். caecum (n.) "the pouch at the beginning of the colon," 1721, from Latin intestinum caecum "blind gut," from neuter of caecus "blind, hidden," from Proto-Italic *kaiko-, from PIE *kehi-ko- "one-eyed," cognate with Old Irish ca'ech "one-eyed," coeg "empty," Welsh coeg-dall, Old Cornish cuic "one-eyed;" Gothic haihs "one-eyed, blind." So called for being prolonged into a cul-de-sac. கவ்வுதல் என்பது மூடுதலைக் குறிக்கும். குய்யம் = குழி, குழல். குயவன் குள்ளுகிறான்; எனவே குய்கிறான். குய்யம் = குழிவு. கவுக்குயம் என்பது முட்டுச் சந்து போன்ற பயன்பாடு/
அடுத்துச் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்குமுன் இருப்பதை வால் குடல்> வாற்குடல் (appendix) என்பார்.
பெருங்குடலின் சகரக் குழகத்திற்கு அப்புறம் குதம் (rectum) எனும் சினை வரும். (குற்றம்>குத்தம்>குதம். குதம் தமிழே. குற்றம் = செங்குத்தான குழல்.) இதைச் சிலர் மலக்குடல் எனும் கூட்டுச்சொல்லால் குறிப்பர். முன்சொன்னது போல், கூட்டுச்சொல்லை விட, தனிச்சொல் அதிகம் பயனுள்ளது.
முடிவில் குதத்தை அண்டி வருவது அண்டு anus (n.) ஆகும். அண்டுதல் = நெருங்குதல், பொருந்துதல், முட்டுதல். "inferior opening of the alimentary canal," 1650s, from Old French anus, from Latin anus "ring, anus," from PIE root *āno- "ring." So called for its shape; compare Greek daktylios "anus," literally "ring (for the finger)," from daktylos "finger."
அண்டின் வழியே பீ என்பது பிலிற்றப்பட்டு, வெளியாகிறது. பிலிற்றுவது பிலி> பிளி> பியி> பீ (”பீ” என்று சொல்ல நம்மவர் வெட்கி, இலக்கிய, இலக்கணங்களில் பவ்வீ என்பார்.) பொதுவாய் பவ்வி அல்லது பீ என்பது சற்று நீர்த்தன்மை கூடியதாகவே, அரைத் திண்மமாகவே (semi-solid) கொள்ளப் படும்.மேலையர் பீக்கு மாறாய், பிலிற்றும் வினையைப் புழுக்குவது என்று சொல்லிப் புழுப்பு> புகுப்பு> பூப் = poop என்பார்.
அண்டின் 2 முனைகளிலும் தசைகளாலான 2 விளுங்கைகள் (sphincter. விள்> விளு> விடு. விடுங்கை = வெளிவிடும் மூடி) உண்டு. sphincter (n.) 1570s, from French sphincter, from Late Latin sphincter "contractile muscle," from Greek sphinkter "band, lace, anything that binds tight," from sphingein "to squeeze, bind," of unknown origin. First used in anatomical sense by Galen. There are several in the body; the one usually meant is the sphincter ani.
அண்டின் மேல்பக்க உள்விளுங்கை, பீயை வெளியேற்றத் தானாய்த் திறக்கும். அண்டின் அடியில் உள்ள வெளிவிளுங்கையைத் தான், (வெளிக்கிட அணியம் ஆகுகையில்) கட்டுப்படுத்துகிறோம். அண்டில் சேர்ந்து போன பீ நம்மை வெளிக்கிடத் தூண்டுகிறது. அப்போது எழும் சில நரம்புச் செய்கைகள் உள் விளுங்கையைச் சற்றே இளக்குகின்றன, இந்த இளக்கமே ”கழிவறை எங்கே?” என நம்மைத் தேட வைக்கிறது.
பீக்கு இணையாய் மேலும் சொற்கள் உண்டு.
1.தொளு (=தொள்கு; தொழுவச் சேறு = stool = உணவுக் கழிவு)
2. சாணம். சாணி, (சண்ணுதல் = நீக்குதல்). சற்று நீர்த்தன்மையோடு இருக்கும்.
3. விட்டை = விள்ளியது, விட்டது, விட்டை. (முதல் 3 சொற்களும் விலங்குகள் தொடர்பாகவே பயில்வோம்.) சாணத்தை விட நீர்மை குறைந்தது.
4. புழுக்கை. கடினமானது. நீர்மை வெகுவாய்க் குறைந்தது. (இது விலங்குகளுக்கும், மாந்தருக்கும் சேர்த்துப் ப்யனாவது.
5. மலம் (சாப்பிட்ட உணவின் சாறு போகச் சக்கை உடம்பிற்குள் மலங்கி (=மயங்கி) வெளி வருவதால் இது மலம் ஆயிற்று. இது தமிழே.)
6. நரகல். நருங்குதல் = கொஞ்சங் கொஞ்சமாய், உலர்ந்து சுருங்கிக் கெட்டுப் போதல். நருங்கல்>நருகல்>நரகல்.
7. பீள்>பேள்.பேண்டு என்பது பீயின் திரிவாய்க் கொள்ளப்படும்.
8. வெளிக்கி (faeces) also faeces, c. 1400, "dregs," from Latin faeces "sediment, dregs," plural of faex (genitive faecis) "grounds, sediment, wine-lees, dregs," which is of unknown origin. Specific sense of "human excrement" is from 1630s in English but is not found in classical Latin. Hence Latin faex populi "the dregs of the people; the lowest class of society." மலத்திற்கு இடக்கரடக்கலாய் ஒருகாலம் இதைப் பயன்படுத்தினார். இப்போது அதுவும் அல்செங்கம்> அசிங்கம் = செங்கமல்லாதது = முறையல்லாததாய்த் தெரிவதால் சிலர் அதையும் பயனுறுத்தாது ஆங்கிலச் சொல்லான motion ஐப் அப்படியே பயனுறுத்துவார். 100க்கு 100 மருத்துவர் இதற்கான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவதே இல்லை எல்லாம் motion தான். இப்படித்தான் எல்லாருமாய்ச் சேர்ந்து தமிழைத் தொலைக்கிறோம்.) நம்மில் பலரும் இது ஏதோ, வீட்டில் அல்லாது வெளியில் போவது என்று எண்ணிக் கொள்கிறோம். அப்படியில்லை, இது உடம்பின் வெளிக்குத் தள்ளுவது. வெளிக்குதல்> வெளிக்கு>வெளிக்கி. ஈழத்தார் வெளிக்கு இடல்>வெளிக்கிடல்>வெளிக்கீடு என்று சொல்லுவார்.
9. எக்குவம் (எக்கி வெளிவந்தது excrement (n.) 1530s, "waste discharged from the body," from Latin excrementum, from stem of excretus, past participle of excernere "to sift out, discharge," from ex "out" (see ex-) + cernere "sift, separate" (from PIE root *krei- "to sieve," thus "discriminate, distinguish"). Originally any bodily secretion, especially from the bowels; exclusive sense of "feces" is since mid-18c.
முடிவாய்க் Constipation (கண்டிப்படுவம்) பற்றிய குறிப்பையும் பார்த்து விடுவோம். இது குட்டக்குடலியலில் சாத்தாரமாய்ச் சொல்லப்படும் சிக்கல் ஆகும். இதைப் பேச்சுவழக்கில் மலச்சிக்கல் (poop problem) என்பார்.
மலச்சிக்கலும் ஒரு கூட்டுச்சொல்லே. கலைச்சொல் அல்ல, ) constipation (n.) 1400, "costiveness, bowel condition in which evacuations are obstructed or difficult" from Late Latin constipationem (nominative constipatio), noun of state from past-participle stem of Latin constipare "to press or crowd together," from assimilated form of com- "together" நாம் + stipare "to cram, pack" (see stiff (adj.)). கண்டி> கட்டி. கற்கண்டு. candy போன்ற சொற்களை நினைவு கொள்க.
ஒரு வாரத்திற்கு 3 முறையாவது நாம் வெளிக்கியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில், கண்டிப் படுவம் ( constipation) ஆனதாகவே அறிந்தோர் வரையறுப்பார்.
அதேபொழுது எத்தனை முறை ஒருவர் வெளிக்கிப் போகிறார் என்பது அவரவரின் உடல்வாகு, வயிற்றுப் போக்கு ( bowel movement) ஆகியவற்றைப் பொறுத்தது.
இயல்பான வெளிக்கிகளுக்கு இடைப்பட்ட காலம் அதிகரிக்க, அதிகரிக்க நம் உடலில் மலச்சிக்கல் கூடுகிறது என்று பொருளாகும். அப்படி ஆகும்போது, மலம் மிக உலர்ந்தும் கட்டி (-கண்டி) யாகவும் ஆகும். வயிற்றுப் போக்கு வலி தருவதாயும், வெளிக்கிடச் சரவல் படுவதாகவும் உணர்வோம், சிலபோது, இன்னும் வயிற்றை முழுக்க வெளித்தள்ளவில்லையோ என்ற உணர்வும் கூட எழலாம்.
ஒரு வார வயிற்றுப் போக்குகளின் எண்ணிக்கை குறையக் குறைய, வெளிக்கித் தள்ளுவது கடினமானால், கண்டிப்படுவம் என்ற சிக்கல் தொடங்கி விட்டது என்று பொருளாகும். உணவுப் பழக்கம். நடைமுறை, நார்ப்பொருள் இல்லாமை ஆகிய பல காரணங்களல், இது ஏற்படலாம்.. மிகு வலியும், மலத்தில் அரத்தம் இழிவதும் ஏற்பட்டால், அதோடு கண்டிப்படுவம் 3 வாரங்களுக்கு மேல் இருந்தால், சிக்கல் என்ன என்பதை அறிய, மருத்துவரை நாடுவதே நல்லது. சொந்த மருத்துவம் வேண்டாம்.