2018 திசம்பரில் முகநூலின் ஓரிடத்தில் kinetics என்பதை வேகவியல் என்று குறித்ததைப் பார்த்தேன். அப்படிச் சொல்லாமல் கிளரியல் எனறே சொல்லலாம். கிளர்தல் = மேலெழுதல், நிலையாது இருத்தல். வேகம் என்பது speed என்றே புரிந்துகொள்ளப்படும். இங்கு சொல்லப்படுவது வேதிகளில் ஒன்று இன்னொன்றோடு சேரும்போது எப்படிக் கிளர்ந்துகொள்ளும் என்பதைக் குறிக்கிறது. சில பொருட்கள் கிளரும். சில கிளர்ந்து எரியும், சில கிளர்ந்து வெடிக்கும். சில கிளராது கிடக்கும். சில வேதிகள் வினையூக்கிகள் (catalysts) இருந்தால் தான் கிளர்ந்து கொள்ளும்.kinetics ஐi இயக்கவியல் என்பதில் நான் தயங்குவேன். இயக்கம் என்பதை பொதுவாக motion என்ற சொல்லிற்கு ஈடாக வைத்துக்கொள்வது நல்லது. அதுபோல் கதி என்ற சொல்லை velocityக்கு ஈடாக 1950 களிலிருந்தே பழகியுள்ளார். அதில் எந்தக் குறையையும் நான் காணவில்லை.
No comments:
Post a Comment