அண்மையில், மின்தமிழ் மடற்குழுவில், ஒரு செவிமடல் படத்தைக் கொடுத்துப் பாகங்களுக்கான தமிழ்ச் சொற்களைத் திரு. தேமொழி கேட்டார். தோடு, தண்டட்டி, தொங்கட்டான் என வித விதக் காதணிகள் போடும் நம்மூரில், செவிமடல் பாகங்களுக்கான ”இணைத் தமிழ்ச் சொற்களைச்” சான்றோடு சொல்ல நம்மிடம் எழுத்துப் பதிவுகள் இல்லை. இவ்வணிகளைப் போடும் பழக்கமும் அருகி விட்டது. இனியும் இப்படியொரு சொல்லில்லாச் சோகம் வேண்டாம். படத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்க் கலைச் சொற்களைப் பார்ப்போம்.
முதலில் வருவது Helix (n.) இதற்கு விளக்கமாய், ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில், "a spiral thing," 1560s, originally of the volutes of Corinthian capitals, from Latin helix "spiral, a volute in architecture," from Greek helix (genitive helikos), a word used of anything in a spiral shape (an armlet, a curl of hair, the tendril of a vine, a serpent's coil), which is related to eilein "to turn, twist, roll," from PIE *wel-ik-, from root *wel- (3) "to turn, revolve," from PIE root *wel- (3) "to turn, revolve." The classical plural is helices என்று போட்டிருப்பர்.
தமிழில் spiralயைப் புரி என்போம். வலம்புரி/ இடம்புரிச் சங்கு எனும் சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension) மட்டும் விரியும். helix-ஓ, குத்துப் பரிமானத்திலும் (vertical dimension) விரியும். ”சுழிப்பு” என்ற சொல் முதலில் வட்டத்தைக் குறித்தாலும் வேக நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படுவதை மறக்க வேண்டாம். "சுழலுக்குள் மாட்டினான்" எனும்போது நம்மை அறியாமல் helix ஐச் சுழிகை என்ற சொல்லால் உணர்த்துகிறோம்.
சுல் எனும் வேரிலிருந்து சுழி எழுந்தது போல், சுரி என்ற சொல்லும் எழும். சுரிகுழல் = helical ஆகச் சுருண்டு கிடக்கும் முடிக்கற்றை. ”சுரிமுகம்” இது குத்துத் திசையிலும் சுருண்ட சங்கைக் குறிக்கும். நத்தைக்கூட்டைக் கூடச் சுரிமுகம் என்பார். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw) எனும் போது, திருகு என்ற சொல்லும் helical motion- யைக் குறிக்கிறது. முறுக்கு என்பதும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இக்கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகையையே helix-க்கு இணையாகக் கொள்ளலாம்.
அடுத்தது cartilage. இதைக் குருத்தெலும்பு என்பார். குருத்து = இளமை. cartilage (n.) "gristle; firm, elastic animal tissue," early 15c., from Old French cartilage and directly from Latin cartilaginem (nominative cartilago) "cartilage, gristle," which is possibly related to cratis "wickerwork".
மூன்றாவது சொல் snug (adj.) 1590s, "compact, trim" (of a ship), especially "protected from the weather," perhaps from a Scandinavian source such as Old Norse snoggr "short-haired," Old Swedish snygg, Old Danish snøg "neat, tidy," perhaps from PIE *kes- (1) "to scratch" (see xyster). Sense of "in a state of ease or comfort" first recorded 1620s. Meaning "fit closely" is first found 1838. தமிழில் சிக், நச், என்று ஒலிக்குறிப்புச் சொற்களால், பொருந்தப் பிடிக்கும் வினையைக் குறிப்போம். நெக்கு-தல் வினை, ஒன்று இன்னொன்றில் பொருந்தலையும். நெக்கு விடுதல் என்பது பொருத்துவாய் விடுதலையும் குறிக்கும். ”நெகிழ்ச்சி” என்பதும் கூட இதன் தொடர்ச்சியாகலாம். என்னைக் கேட்டால் நெக்கு என்பது snug இற்கு இணைகாட்டும் என்பேன்.
conch = சங்கு. இதற்குப் பெரிய விளக்கம் சொல்ல வேண்டாம்.
அடுத்தது Tragus = துருகு. (n.) eminence at the opening of the ear,செவி வாசலில் துருகி வரும் எழுச்சி. துரு-த்தல் = முன்வரல். " 1690s, Modern Latin, from Greek tragos in this sense (Rufus of Ephesus), properly "he-goat;" so called for the tuft of hair which grows there, which resembles a goat's beard.
Anti-Tragus = துருகெதிர். (பின்னொட்டையே பெரிதும் பயன்படுத்தும் மரபு தமிழில் உண்டு.)
Lobe மடல்; 2nd Lobe 2 ஆம் மடல்; 3rd Lobe 3 ஆம் மடல்
Rook = துருகடி. துருகு வளையத்தின் அடிப்பாகமாய் இது அமையும்.
Daith = குருத்தடி. (இன்னும் பொருத்தமான சொல்லைத் தேடவேண்டும்.)
No comments:
Post a Comment