ஒருமுறை head phone, ear phone க்கான சொற்களை ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதுவரை யாருந்தொடா ஒலிச்சொல் பற்றிக் கேட்டிருந்தார். நம்மூருக்கு telephone வந்து ஏறத்தாழ 70/80 ஆண்டுகளாகின. அப்போது நடந்த விந்தையைக் கருவிவழிப் புரியாது பேசும்/கேட்கும் வினை வழியே நம்மில் பலரும் புரிந்துகொண்டார். தமிழ்ச்சொல் ஆக்கையில், பேச்சை மட்டுங் கருதிக் கொண்டு, கேட்பதை மறந்து தொலைபேசியென்றே நாம் சொல்லத் தொடங்கினோம். அதைக் கருவி நோக்கிற் சொல்லவில்லை.
கருவி நுட்பம் அப்போது பலருக்குந் தெரியாது, நுட்பந் தெரிந்தவரும் டெலிபோன் என ஆங்கிலம் பேசிச் சென்றார். தமிழில் இதைச் சொல்ல, நுட்பியல் வளர, கருவிகளை இங்கு செய்ய, அப்போது யாரும் எண்ணியதில்லை. அது பொருளியல் வளர்ச்சி, நுட்பியற் கல்வி அறியாக் காலம். எனவே ’தொலைபேசி’ என்ற பயன்பாட்டுச்சொல்லே பெரிதும் பரவியது. இப்போது நுட்பியற் கல்வியைத் தமிழில் வளர்க்க வேண்டும் எனில், சண்டித்தனஞ் செய்யும் இவை போன்ற கணிசமான, தவறான, சொல்லாக்கங்களை மறுபார்வை செய்ய வேண்டும். (ஆனால் கேட்பதற்குத் தான் ஆட்கள் இல்லை. இராம.கி. வேண்டாத வேலை செய்வதாய்ப் பலரும் எண்ணிக்கொள்கிறார். இன்னும் ஆழமான சொற்கள் நம்மிடம் இல்லாததால் தான் head phone க்கும், ear phone க்கும் நாம் இப்போது அல்லாடுகிறோம். என்னைக் கேட்டால் ஏற்கனவே பழகிவிட்டதென்று சொல்லித் தொலை பேசியை மேலும் தொடருவதில் பயனில்லை. (வழக்கம் போல் என் பரிந்துரை இவ்வம்பலத்தில் எடுபடாது. இருப்பினும் முயல்கிறேன்.)
ஆங்கிலத்தில் phone-ற்கு ஒலியென்றே பெயர். ஆங்கிலத்தில். "elementary sound of a spoken language," 1866, from Greek phone "sound, voice," from PIE root *bha- (2) "to speak, tell, say." என்பார். *bha- (2) "to speak, tell, say." என்ற இந்தையிரோப்பிய வேரில் கிளைத்ததாய்க் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளேன். கேட்பதையும் ஆங்கிலத்தில் phone என்று தானே சொல்கிறார்?. பேச்சில் மட்டும் வரையறை இனங் காட்டுவது ஒருபக்கச் சார்பாய் எனக்குத் தெரிகிறது. ஒலியென்பது ஒல்லுங் குறிப்பில் எழுந்தது. ஒல்லல்= ஒசையெழுப்பல். ஓல்>ஒலி= ஓசை. பேசினாலும் ஓசையே, கேட்டாலும் ஓசையே. ஒலி என்பது இரண்டிற்கும் பொதுவானது. நம் ஒலிக்கும் இந்தையிரோப்பிய phone க்கும் தொடர்பு உள்ளதென்றே நான் கருதுவேன். அதையிங்கு வாதாடக் கூடாது. வேறிடத்திற் செய்யவேண்டும். இப்போதைக்கு phone-க்கு ஒலியென்று தமிழில் சொல்கிறோம் என்பது போதும்.
இற்றை அறிவியலில் அதிர்ச்சி, அலையென்றே ஒலி புரிந்து கொள்ளப் படுகிறது. ஒலிவழி பயன்படுத்தும் சில சொற்களை
phoneme (ஒலியன்),
phonetics (ஒலியெழுகை),
phonics (ஒலிகை),
phonogram (ஒலிக்கிறுவம்),
phonograph (ஒலிக்கிறுவி),
phonolite (ஒலிக்கல்),
phonology (ஒலியியல்),
phonophobia (ஒலிப்பயம்),
phony (வெற்றொலி)
என்று ஒலி வழியே சொல்லலாம். அப்படிச் சொல்வதால் ஒரு குழப்பமும் வராது. இணையான தமிழ்ச் சொற்களைப் பிறைக்குறிக்குள் கொடுத்துள்ளேன். இந்தப் பார்வையில் telephone இல் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நாம் பேசுகிறோம். telephone க்குள் ஏதோவொரு உறுப்பு அதிர்கிறது. அந்த அதிர்ச்சி மின்காந்த அலையாக மாற்றப் படுகிறது. பின் நேரடியாகவோ, அன்றேல் வானலையாகவோ அனுப்பப்பட்டு, இன்னொரு பக்கக் கருவியால் வாங்கப்பட்டு மீண்டும் அதிர்ச்சி/ஒலியென மாற்றப் படுகிறது. காதில் ஒலியையுணர்கிறோம். அதாவது நம் ஒலி- அதிர்ச்சி- மின்காந்த/வானலை- அதிர்ச்சி- ஒலி என மாற்றம் பெறுகிறது. நாம் ஒலிக்கிறோம். நம் ஒலியைக் கருவி வாங்கி, இன்னொரு பக்கம் ஒலிவிக்கிறது. எனவே ஒலிக்கவும் ஒலிவிக்கவுஞ் செய்யும் கருவியை ஒலிவி என்றே பொதுவாய்ச் சொல்லலாம். அப்பொழுது மாந்தப்பார்வையில் அன்றி கருவிப்பார்வையில் சொல்லமையும். கேட்கவும் சொல்லவும் சிறிய சொல்.
இனிக் கருவி சார்ந்த சில சொற்களை மட்டும் இங்கு குறித்துள்ளேன். (சில முன்னொட்டுச் சொற்களுக்கு விளக்கஞ் சொல்லவில்லை. அவற்றை விவரங் கேட்டால் சொல்கிறேன்.)
cellphone = சில்லொலிவி;
dictaphone = சொற்றொலிவி;
earphone = காதொலிவி;
electrocardiophone = மின்வழிக் குருதயவொலிவி;
electroencephalophone = மின்வழிக் கவாலவொலிவி;
electrophone = மின்னொலிவி;
encephalophone = கவாலவொலிவி;
gramophone = கிறுவவொலிவி;
handphone = கையொலிவி;
headphone = தலையொலிவி;
holophone = முழுதொலிவி;
kaleidophone = கலைதொலிவி;
linguaphone = மொழியொலிவி;
megaphone = மாகொலிவி;
microphone = நூகொலிவி;
mobile phone = நகரொலிவி,

payphone = பணவொலிவி;
picturephone = படவொலிவி;
radiophone = வானலையொலிவி;
saxophone = சாக்சோவொலிவி;
smartphone = சூடிகையொலிவி;
speakerphone = பேச்சொலிவி;
spectrophone = காட்சியொலிவி;
streophone = திசையொலிவி;
telephone = தொலையொலிவி;
videophone = விழியவொலிவி
இதில் கருவி சாராத, -phone என முடியும் வேறு சொற்களைக் குறிக்கவில்லை. இரண்டையும் பொருள்பார்த்துப் புரிந்து அவற்றில் வருவது ஒலியா, ஒலிவியா என்று குறிக்கவேண்டும்.
“தம்பி, அந்த காதொலிவியை எடு; பாட்டைக் கேட்கலாம்.”
”என்னோட சில்லொலிவியை யாரெடுத்தா? நான் வச்ச இடத்திலே இல்லையே?”
”இந்தத் தொலையொலிவி ரொம்ப நாளா வேலைசெய்யலே? பழுது பார்க்கோணும்.”
:இந்தக் காலத்துலெ, சில்லொலிவி விழியவொலியாயும் இருக்கு”
”அந்தத் திசையொலிவியோடே வெள்ளத்தை (volume) இவ்வளவு கூட்டணுமா? தெரு முழுக்கக் காது கிழிஞ்சிடும்”
இப்படி இயல்பாய்ப் பலவற்றை நல்ல தமிழில் சொல்லலாம். மனம் இருந்தால், வழியுண்டு.
அன்புடன்,
இராம.கி.
.

2 comments:
பயன்பாடுகளும் புதுக்கங்களும் அதிகமாக ஆக மொழியும் விருத்தியாக வேண்டி தாங்கள் எடுக்கும் முயற்சிகள் எங்களுக்கு பாடமாக இருக்கின்றன.
வரவேற்பு நிச்சயம் உண்டு. மனம் தளராமல் தமிழ்ப் பணி செய்ய வேண்டுகிறேன்
Post a Comment