யக்கன் என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் யா எனும் வேரில் கிளைத்தது. ”யக்கன்” வடமொழியில் ”யக்ஷன்” ஆவான். யக்கர்/யக்ஷர் என்பவர் அக்கால ஈழத்தின் பழங்குடிகள் என்று இந்தியத் தொன்மங்களும், இலங்கையின் மகா வம்சமும் கூறும். அவர்கள் ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலும் கூடப் பழங்குடிகள் தான். சமண சமயத்துப் பெண்பால் துறவியரைக் கூட இயக்கியர் (யக்ஷியர்) என்றே அழைத்தனர். இயக்கி>இசக்கி என்ற பெயருங்கூடத் தமிழரால் கரும்பொருளில் ஆளப்படும். பதினெட்டாம் படிக் கருப்பரைப் போல, இசக்கியம்மனும் கருப்புத் தான்.
(இயக்கி/இயக்கர் என்ற சொல்லுக்கு இயக்கக் கூடியவர் என்றெலாம் பொருள் சொல்வது கருத்துமுதல் பார்வையாகும். பொதுவாகப் பழைய நாட்டுப்புறப் பெயர்கள் இயற்கைப் பொருள், நிறம், பழக்கவழக்கம் பற்றியே இடப் படும். அவ்வகையில் இயக்கிப் பெயரைக் கருப்புப் பொருளிலேயே கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் கருப்பு என்று சொல்லப் பெரும்பாலான தமிழர் வெட்கப்பட வில்லை. பல தமிழர் பெயர்களின் உட்பொருள் கருப்பு என்றேயிருந்தது. ஆனால், இக்காலத்தில் "கருப்பாயி" என்றபெயரை எத்தனை தமிழ்ப் பெண்கள் வைத்துக் கொள்வார்? தமிழரில், ஆண், பெண் என 2 பாலரில் பலரும் இஷ், புஷ் என்றும், வடமொழிப் பெயரும், வட இந்தியப் பெயரும் அல்லவா தேடுகிறார்?)
யக்கன் என்ற சொல் அருளியார் முறையில், ய>ஞ>ந என்ற திரிவில், நக்கன் என்று ஆகும். நக்கன் எனில் கருப்பனென்று பொருள் கொள்ளும். நக்கர் இருந்த இடம் (கருப்பர் இடம்; நக்கவரம்; இற்றை நிக்கோபார்). நக்கவரத்தில் குடி இருந்தவரை நக்க சாரணர் என்று மணிமேகலை குறிக்கும். நக்கர் என்று சொல்லுக்கு ஆடையற்றவர் என்ற பொருள், ஒரு வழிப்பொருளே ஆகும். அந்த வழிப் பொருளின் காரணத்தையே மேலே குறித்துள்ளேன்.
யக்கரின் தலைவனாய் குள்ளக் குபேரனை இந்தியத் தொன்மங்கள் குறிக்கும் [குவை = குகை; பள்ளம்; பள்ளத்தில் குவிந்து கிடக்கும் மணி, செல்வம். குவையின் அரன் குவையரன்> குபேரன். (அரன் = காப்பாற்றுபவன்) இங்கும் தமிழ் மூலம் தான் துணைக்கு வரும். இந்தியத் தொன்மங்கள் பலவிற்கும் தமிழே அடிப்படை.] குவையரனைச் செல்வந்தன் என்றது அக்கால ஈழத் தீவில் கிடைத்த மணிகளாலும் மாணிக்கத்தாலுமே ஆகும் (மணிபல்லவம் என்ற தீவின் பெயர் கூட மாணிக்கம் கிடைக்குமிடம் என்பதனால் ஏற்பட்டது தான்).
"இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் நயக்க நின்றவன்" - 5ம் திருமறை சித்தத் தொகை திருக்குறுந்தொகை, 25ம் பாட்டு
நக்கரென்ற பெயரைக் கொஞ்சம் நீட்டித்தான் நம் தமிழர் பிற்காலத்தில் சொன்னார். (நாகரைப் பாம்போடு தொடர்புறுத்தியது வழிப்பொருளால் எனலாம்.) நாகருக்கும், தமிழருக்கும் இடையே நிறைய இன உறவுகள் ஏற்பட்டுள்ளன. (இற்றை நிலையில் ஈனியலால் - genetics - பெரிதும் கலந்து போன தமிழரையும் நாகரையும் பிரித்தறிவது சரவலான செயல். ஆனாலும் ஈனியல் முயன்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றி இங்கெழுதினால் சொல்ல வந்த செய்தி விலகிப் போகும் என்பதால் தவிர்க்கிறேன்.)

இந்நாகரே இந்தியாவின் பழங்குடிகள் என இன்று அறியப்படுகிறார். இவர் பேசிய மொழிக்குடும்பம் இன்றைக்கு முண்டாமொழிக் குடும்பம் எனப் படுகிறது. தமிழ் மொழி முதலில் ஏற்பட்ட நிலையில், முண்டா மொழிக் குடும்பத்திற்கும், தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோ தொடர்பு ஆழமாய் இருந்திருக்க வேண்டும். நாகரில் பலரும், தமிழ் பேசிப் புலமையும் பெற்று, சங்க காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளார். (காட்டாக, முரஞ்சியூர் முடிநாக அரையர் என்பாரை இங்கு சொல்லலாம்.) நாகரின் பெயரால் நாவலந்தீவில் பல ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் உள்ளன. (காட்டாக, நாகர் கோயில், நாக(ர்) பட்டினம், நாகப்பூர், நாகநாடு போன்றவற்றைச் சொல்லலாம்.)
இதே நக்கர் பெயர்தான் வியப்பூட்டும் வகையில் பல்வேறு இந்தையிரோப்பிய மொழிகளில் negro, nigger எனத் தோற்றம் காட்டுகிறது. அதேபோல நக்கரின் தோற்றமே நக்கெட் (naked) என்று ஆடையற்ற நக்கு நிலையையும் காட்டுகிறது. இந்தையிரோப்பியக் குடும்பம் எனப்படும் வடமொழியிலும் நக்கனம்> நக்(g)நம் என்றுசொல் நக்குத் தன்மையைக் காட்டும். தமிழிலும் நக்கனம், நக்கு என்பவை அம்மணத்தையே குறிக்கும்.
கீழேயுள்ள மற்ற சொல்தொகுதிகளையும் நோக்குங்கள்.
நக்கன் = அம்மணன், அருகன், சிவன்; ஆடையற்ற நிலையில், அல்லது வெறும் புலித்தோலை அரையில் கட்டிய சிவன் என்ற பொருளில், திருமந்திரத்தில் இச் சொற்றொடர் ஆளப்படும். "நக்கு அரையனை" என்ற தொடர் 5ம் திருமுறை, 22.திருக்குடமூக்கு, 5 வது பாட்டு. "குரக்குக் கா நக்கனை" என்ற தொடர் 5 ம் திருமுறை, 75, திருக்குரக்குக் கா, 4, 8 வது பாட்டுக்கள்
நக்கினம் = பெண்குறி; நக்கினிகை = அம்மணமாய் உள்ள பெண்; (அம்மன் கோயில் கருவறை வாசலில் இருக்கும் இயக்கினிகள் மேலே சிறு கச்சையோடு தான் உருவம் கொண்டிருப்பார்.)
ஆனாலும், நக்கர் என்றசொல்லின் தொடக்கம் தெரியவில்லை என்றே மேலைச் சொற்பிறப்பு அகரமுதலிகள் குறிக்கும்.
O.E. nacod "nude," also "not fully clothed," from P.Gmc. *nakwathaz (cf. O.Fris. nakad, M.Du. naket, Du. naakt, Ger. nackt, O.N. no..kkvidr, O.Swed. nakuder, Goth. naqads "naked"), from PIE base *neogw- "naked" (cf. Skt. nagna, Hittite nekumant-, L. nudus, Lith. nuogas, O.C.S. nagu-, O.Ir. nocht, Welsh noeth). Applied to qualities, actions, etc., from 16c. (originally in naked truth, 1585). Phrase naked as a jaybird (1943) was earlier naked as a robin (1879, in a Shropshire context); the earliest comparative was naked as a needle (1377).
மேற்கூறிய அத்தனை பொருள்களையும் தமிழ்வேர் வழி பொருத்திப் பார்த்தால் தான் உள்ளே ஓடும் ஒருங்குமை, கருப்பு என்ற பொருளில், நமக்குப் புரியும். உறுதியாக, மாந்தனின் தொடக்க நிலைக்கும், முல்லை நில வாழ்க்கைவரை ஏற்பட்ட வாழ்வு முறைகளுக்கும், தமிழுக்குமாய் ஏதோ ஒரு தொடர்புள்ளது; ஆனால் அது என்ன என்று முற்றுமுழுதாக விளங்கவில்லை.
இனிக் கருப்பைக் குறிக்க யா எனும் வேரில் யக்கன் என்ற சொல் பிறந்தது போல, யாவர் என்பதும் பிறக்க முடியும். யாவர்/யாவகர் என்பவரும் கருப்பரே. (இந்தொனேசியாவின் ஒரு தீவான யாவகத் தீவும் கருப்பர் தீவு என்ற பொருளிலே பெயரிடப் பட்டுள்ளது. இந்தொனேசியாவின் மற்ற தீவுகளின் பெயர்களை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.)
யாவகர் என்பதன் திரிவான யாவகர்> ஸ்யாவகர்> சாவகர்> ஸ்ராவகர் என்பதையே இல்லறம் ஒழுகும் பொதுமக்களைக் குறிக்கச் செயின நெறி பயன்படுத்தும். செயின நெறி பொதுவாக பெண்மக்களை உயர்ந்த துறவி நிலைக்கு ஏற்றவராய்க் கொள்ளாது. அவரைத் துறவி நிலைக்கு அணுக்கத் தொண்டராய்த்தான் கருதும். அதனால் தான் மக்களின் பெயரான இயக்கரின் பெண்பாலான இயக்கியர் என்பதே பெண்துறவியருக்குப் பெயராய்க் கொள்ளும். யாவக நெறி / சாவக நோன்பு என்பதும் இல்லறம் கடைப்பிடிக்கும் மக்களின் நெறி என்ற பொருள் கொள்ளும்.
அடுத்து, யா எனும் வேரிலிருந்து வேறொரு ஈற்றில் அதே பொருளில் யாமன்> யமன் என்ற சொல் பிறக்க முடியும். யாமம் என்பதும் கருமைப் பொருளையே காட்டுகிறது. சூரியன் மறைந்து பிறகுள்ள நேரம் யாமம் என்றும், குறிப்பாக நள்ளிரவு நேரம் யாமம் என்றும் சொல்லப்படும். (அது வழக்கம் போல் திரிந்து சாமம்> ஜாமம் என்றும் பின்னால் வடமொழியில் பலுக்கப்படும்.) கருப்பு நிறத்தவனான, இறப்பைக் கொண்டு வருபவனாக கருதப்டும் கூற்றுவன், யமன் எனப்படுவான். கூற்றுவனைக் குறிக்கும் காலன் என்ற சொல்லும் கூடக் கருப்பன் என்றே பொருள் கொள்ளும். யமன் ஏறி வரும் விலங்கு கூட கருமை நிறத்து எருமையாகும். யமம் என்ற சொல்லுக்கும் காக்கை, காரி (=சனி) என்ற பொருள்களும் உண்டு. இவை எல்லாமே கருப்புத் தான்.
பொதுவாக யாமன்> யம்மன்> யமன் என்பவன் கருப்பானவனே! கருப்பர் வாழ்ந்ததிசை யாமத்திசை; அதனால்தான் தென் திசை யாம திசை> யமதிசை ஆயிற்று. யமன் எனும் கூற்றுவன் திசை தென் திசையாயிற்று. இறந்தவர் இருள் நிறைந்த உலகத்திற்கு போவதாகக் கொண்ட தொன்மமும், தென்புலத்தார் என்றே சொல்ல வைத்தது.
தென் திசையில் எழுந்த கடற்கோளால் பல இனத்தவர் தெற்கில் அழிந்திருக்கிறார். எனவே முன்னோர் எனப்படுவோர் தமிழர் மரபில் தென்புலத்தார் ஆனார். (பார்ப்பனர் முறையில் தர்ப்பணம் செய்பவர் தென்புலத்தாருக்குத் தான் எள்ளுப்பிண்டம் வைத்து வழிபாடு செய்கிறார்.)
[பார்ப்பனருள்ளும் பல தமிழ் வழக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை அவரும் அறியாதுள்ளார்; மற்றோரும் அறியாதுள்ளா. அருத்தம் புரியாச் சண்டைகளில் பலவற்றை எல்லோருமே இழந்து கொண்டிருக்கிறோம். எதை எடுத்தாலும் அதற்கு வடமொழி அடிப்படை காட்டும் வழக்கத்தைத் தமிழரில் பலரும் எப்போது விடப்போகிறாரோ, தெரியாது. பெரும்பாலான செய்திகளின் அடிப்படை நம்மைப் பொருத்தவரை தமிழில் தான் உண்டு. பார்ப்பனரில் பல கோத்திரப் பெயர்கள் கூட முற்றிலும் தமிழே. காட்டகப் பெருகச் சனம்>ப்ருகச் சனம் (சிலர் இதை ப்ருகச் சரனம் என்றுகூடச் சொல்வார்) = பெருகிய கூட்டம், பெரிய கூட்டம் என்று பொருள். கூட்டப் பொருள் கொண்ட கணம் என்ற தமிழ்ப் பெயர் தான் சனம் என்று இக்காலத்தில் பலுக்கப் படுகிறது.]
மறுபடியும் மறுபடியும் ஏற்பட்ட தென்திசை அழிவைக் கண்டு (அது ஆழிப் பேரலைப் போன்றதாகலாம்; என்னவென்று சொல்லத் தெரியவில்லை.) அச்சம் உற்றே, தமிழர் தம் நடைமுறையில், இடுகாட்டில் தெற்கே தலையும் வடக்கே காலும் இருக்கும் படி, இறந்தர் முகத்தையும் சற்றே திருப்பி வடக்கு நோக்கி இருக்குமாறும் வைத்துப் புதைப்பார். யாமத்திசை அந்த அளவிற்குத் தமிழரை அச்சுறுத்தியுள்ளது.
மனையடி சாற்றங்களிலும் (சாற்றம்>சாத்தம்>சாத்ரம்) தென்மேற்கு திசையை யம திசை என்றே சொல்வார். தென்மேற்குப் பக்கத்தில் மனைவாயில் கூடாதென மனையடி சாற்றத்தில் சொல்வதற்கும் இந்த ஆயிரமாண்டு அழிவுகளைப் பற்றிய பயமே காரணமாகும். பொதுவாக வடக்கை மங்கல திசை என்பார்; துறக்கம் பெறும் திசை வடகிழக்கு நோக்கியே (குயிலை மலை = கயிலை மலை; குயில்ந்து>குவிந்து உயர்ந்து நிற்கும் மலை குயிலை மலை) என்பதால் தமிழர் வடக்கிருக்கும் நோன்பு கொண்டது இத் தொன்மங்களின் தொடர்ச்சியால் என்றும் புரிந்து கொள்ளலாம்.
உயிரை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றுவன்; இவன் கரிய நிறம் உடையவன் (புற. 4:10-12) என்ற கருத்தை ஓர்ந்து பார்த்தால் சொல்லவரும் செய்தி புரியும்.
முன்சொன்னது போல யகரச் சொற்கள் யகரம்> ஞகரம்> நகரம் என்று திரிந்தது முதல்வகை என்றால், இன்னும் இருவகைத் திரிவுகளும் தமிழியற் சொற்களில் ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இரண்டாம் வகையில், யகரம் கெட்டு அகரமாகும் (அதாவது ய>அ);
மூன்றாம் வகையில் யகரத்தின் முன் ஸகரம் சேர்ந்து பின்னால் சகரமாக/ஜகரமாகத் திரித்தொலிக்கும்; (அதாவது ய>ஸ்ய>ச)
முதல் வகைத் திரிவில், யம்மன்>ஞம்மன்>நம்மன்>நம்மண்>நம்மணம் = அம்மணம் என்ற மாற்றமும், இரண்டாம் வகைத் திரிவில், யம்மன்> அம்மன்> அம்மண்> அம்மணம் (=யாமணம்) என்ற மாற்றமும் ஏற்படும்.
நக்கனம், அம்மணம், ஆகியவை தவிர நிர்வாணம், அற்றம் (இலக்கிய வழக்கு; ஒன்றும் இல்லாமல் அற்றுப் போவது அற்றம்.), முண்டம் (தலையிலாது மழுக்கையாவது என்ற பொருளில் தொடங்கிப் பின்னால் ஆடையிலாது போவதையும் குறித்த சொல்; முண்டிதம் = மொட்டை), மொட்டைக் கட்டை (முண்டம் போன்ற பொருளே இதற்குமுண்டு.) போன்றவை கூட ஆடையற்ற நிலையைத் தமிழில் குறிக்கும். தவிர, பிறந்த மேனி என்ற வழக்கும் தென்பாண்டியில் உண்டு; "பொட்டுக்கு ஓர்ஆடையில்லாமல், பிறந்த மேனிக்குக் கிடக்கிறான், பாருங்கள்" என்பார்.
மேலே பேரா. தொ.பரமசிவன் கூறியது போல் "சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர்." இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், குளிர் கூடிய வடபுலத்திலும், மணல் வாரியடிக்கும் அரச பூதனம் (இராஜஸ்தான்), கூர்ச்சரம் போன்ற இடங்களிலும் சுவேதம்பரரே மிகுதியாய் இருந்தார்; வெய்யில் மிகுந்து காய்ச்சும் தென்புலத்திலோ திகம்பரரே மிகுதியானார். மயிலை. சீனி. வேங்கடசாமியாருடைய "சமணமும் தமிழும்" பொத்தகத்தில் சொல்வது போல, "இப்போதும் தமிழ்நாட்டுச் சமணர் திகம்பர சமணரே". திகம்பர சமணருள்ளும் குருமார் மட்டுமே ஆடையிலாது இருப்பார் என்பதையும், சாவக நோன்பிகள் (இல்லற நோன்பிகள்) ஆடை அணிந்திருப்பார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். "ஏன் திகம்பர சமணம் தெற்கே பெரிதும் பரவியது?" என்பது ஆய்விற்கு உரிய கேள்வி.
இவ்வரிசையில், நிர்வாணம் என்பதைப் பார்ப்போம். இச் சொல்லுக்கு, ஆடையற்ற நிலை என்பது மட்டுமே பொருளல்ல; வீடுபேறு என்பதும் கூட அதன் பொருளாகும். ஆனால் அது வட புலத்தில் ஏற்பட்ட இரண்டாம் நிலைப் பொருள். [அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்முறை நெறியில், சங்க காலத்தின் இறுதி வரை, நாலாவது பொருள் அழுத்தமாகச் சொல்லப் பட வில்லை. இன்னும் கூர்ந்து சொன்னால், அறம், பொருள், இன்பம் என்ற வகையிற் கூட சங்ககால வாழ்க்கை முறை பார்க்கப் படவில்லை. இம் முன்று வகைப் பார்வையே, சங்கம் மருவிய காலத்தில் (அதாவது மெய்யியல் பார்வை தமிழ்நாட்டில் பெரிதும் பரவிய காலத்தில்) ஏற்பட்டது தான். சங்க காலத்தில் வாழ்க்கை என்பது அகம், புறம் என 2 வகைகளாகவே பகுக்கப் பட்டது.]
நிர்வாணம் என்ற சொல் பெருத்த வழக்குப் பெற்றது வேத மறுப்பு நெறிகளால் தான். இச் சொல்லின் ஒலிப்பைப் பார்த்தால், ஒரு சில பொதுக் கருத்துகளைக் கூறலாம். மகரவொலிச் சொற்கள் பலவும் வடக்கே போகப் போக வகரவொலி பெறுவது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பழக்கம். மகரமும் வகரமும் தமிழிலும் கூட ஒன்றிற்கொன்று போலிகளே. அதே காரணத்தால் அவை ஒன்றிற்கொன்று மோனையாயும் அமையும். காட்டாக, விண்ணைக் குறிக்கும் மானம்> வானமாகும்; அவ்வகையில், நிர்வாணம் என்ற சொல்லின் முந்தைய நிலை நிர்மாணம் என்றூகிக்க முடியும்.
இன்னும் ஆழ்ந்துபார்த்தால், நிர்மாணம்/ நிர்வாணம் என்ற வீடுபேற்றுச் சிந்தனை வேத நெறியில் அவ்வளவு பெரிதாகச் சொல்லப் படுவதில்லை. நிர்மாணம் என்ற கருத்து வேதமறுப்பு நெறிகளில் இருப்பதாகும்.
வேதமறுப்பு நெறிகளின் மொழியான பாகதத்தில் "ர்ம" என்ற எழுத்துக் கூட்டு வருவதில்லை. அதில் "ம்ம" என்றே வரும். ம்ம>ர்ம போன்ற திரிவுகள் பாகதத்திற்கும் சங்கதத்திற்கும் இடையே பரக்கவும் உண்டு. சமணத்தின் மொழியான அறுத்த மாகதியும், புத்தத்தின் மொழியான பாலியும் பாகதத்தின் இரு வேறு பேச்சு வழக்குகள். இரண்டிலுமே "ர்ம" என்ற ஒலிக்கூட்டு கிடையாது. எனவே நிர்மாணத்தின் முந்தைய நிலை வேதமறுப்பு நெறிகளின் தொடக்க காலத்தை வைத்துப் பார்த்தால், நிம்மாணம் என்பதாகவே இருக்க முடியும். நிர்வாணத்தின் சொற்பிறப்பு நம்மனம்> நம்மானம்> நிம்மானம்> நிர்மாணம்> நிர்வாணம் என்ற முறையிலேயே அமைய முடியும்.
அது எப்படி ஆடையற்ற நிலைக்கும் வீடு பேறுக்கும் ஒரே சொல் ஏற்பட்டது என்பது அடுத்த கேள்வி.
அன்புடன்,
இராம.கி.