Friday, July 03, 2026

வெவ்வேறு Lorry - களும் truck களும்.

சொல் புதிது வலைத்தளத்தில் container lorry, tanker lorry, pick-up lorry, tipper lorry என்ற 4 சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் 

கேட்டார்.(Lorry(n.) என்ற பிரித்தானியச் சொல்லிற்கு நிகராய் Truck எனும் அமெரிக்கச் சொல்லும் உண்டு. முதலில் Lorry என்ற சொல்லைப் பார்ப்போம்.

Lorry (n) 

"a truck; a long wagon with a flat bed and four wheels," 1838, British railroad word, probably from verb lurry "to pull, tug" (1570s), which is of uncertain origin. The meaning "large motor vehicle for carrying goods on roads" (equivalent of U.S. truck (n.1)) is attested by 1911.

உழறு-தல் = இழுத்துக் கொண்டு அலை-தல் 

உழன்று-தல்= களைப்புறல்

உழற்று-தல் = அலையச் செய்தல், சுழற்றுதல், வருத்தத்தோடு கழித்தல். 

எனவே Lorry யை உழறி என்பதில் தவறில்லை. (உழலுதலும் இதோடு தொடர்புடையதே.) இனி truck  ஐப் பார்ப்போம்.

truck(n.1)   

[vehicle] 1610s, originally "small solid wheel or roller" (especially one on which the carriages of a ship's guns were mounted), said to be probably from Latin trochus "iron hoop," from Greek trokhos "wheel," from trekhein "to run". The sense was extended to "cart for carrying heavy loads" (1774), especially strong and heavy two- and four-wheeled vehicles with a low body; then in American English to "motor vehicle for carrying heavy loads" (1902), a shortened form of motor truck in this sense, which is attested by 1901.

பொருட்களை ஏற்றிக் கொண்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய்வந்து அலைவதைத் திகிரை (திகிரி = Disc/k) எனலாம். ஏற்கனவே நாம் பயிலும் உருளை, உருடை  உருதை போன்ற சொற்களை இங்கு நினைவில் கொள்க. 

container lorry = கூண்டு உழறி

tanker lorry = தாங்கு உழறி  

pick-up lorry = பற்று உழறி

tipper lorry = கொட்டு உழறி

Container Truck கூண்டுத் திகிரை 

tanker Truck = தாங்குத் திகிரை

Pick-up Truck = பற்றுத் திகிரை 

tipper Truck = கொட்டுத் திகிரை 

அன்புடன், 

இராம, கி