"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"
இதற்கு உரை சொல்லுகின்ற உரையாசிரியர் இளம்பூரணர்
நிறுத்தளத்தல்,
பெய்தளத்தல்,
நீட்டியளத்தல்
தெறித்தளத்தல்,
தேங்க முகந்தளத்தல்,
சார்த்தியளத்தல்
எண்ணியளத்தல்
என ஏழு முறைகளைக் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறை என்பார். (இதேவரிசையைச் சற்றுமாற்றி, நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், எண்ணியளத்தல் என்று மற்றொரு உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவார்.)
இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிப்பிடுகின்றன என்று பார்த்தால், சில அளவைகள் உடனே புரிகின்றன; சில சட்டென்று புரிவதில்லை.
1. நிறுத்தல் என்பது எடையை அளப்பதைக் குறிப்பிடுகிறது.
2. பெய்தளத்தல் என்பது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுகிறது. [வெள்ளத்தை (volume) இந்தக் காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு" என்பதைக்கொண்டு தவறான முறையில் நாம் குறித்துவருகிறோம். கனமென்பதும் ஒருவகையில் எடையைக் குறிப்பதுதான். நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிந்துபெருகி வெளியை (space) அடைத்துள்ளனவோ, அப்பெருக்கைத் துல்லியங்கருதி, வெள்ளமென்றே குறிப்பிடலாம். ஏன், இப்படிப் பழஞ்சொல்லைத் தவிர்க்கிறோம் என்று புரியவில்லை. வெள்ளமென்ற சொல் பெருக்கைத்தானே குறிக்கிறது? சட்டென்று அது நம் மனத்தில் வெளியையும் குறிக்குமே?] இக்காலத்தில் பெய்தளத்தலுக்கு மாறாக, முகந்தளத்தல் என்றே சொல்கிறோம். குறிப்பாக, நீர்மம் (liquid), திண்மப் பொடிகளை (solid powders) அளக்க இந்த அளவைகளைப் பயன்படுத்துகிறோம். அப்படியெனில், பெய்தலளவை என்று ஏன் சொன்னார்? ஒருவேளை முகத்தளவை என்ற முறை, நீர்மத்திற்கு மட்டுமே இருந்ததா?
3. நீட்டியளத்தல் என்பது நீளத்தை அளப்பது. இதில் குழப்பமில்லை. ஆனால் இந்தப்புலம் அடிப்படையானது. மற்ற அளவைகளுக்கு வழிசெய்வது.
4. தெறித்தளப்பதென்பது சற்று விளங்காதுநிற்கிறது. தெறித்தலென்பதற்கு சிதறல், குலைதல், துள்ளி விழுதல், முரிதல், பிளத்தல், உடைத்தல், அறுதல், வேறுபடுதல், நீங்குதல், தவறுதல், செருக்காயிருத்தல், பிதுங்குதல், குறும்புபண்ணுதல், நரம்புதுடித்து நோவுண்டாதல், விரலாற்சுண்டுதல், விரலாலுந்துதல், முற்றுதல், தாக்கப்பட்டுவெளிப்படல் என்ற பொருட்பாடுகளை அகரமுதலிகள் காட்டும். இன்னொருபக்கம் இதே அகரமுதலிகள் தெறித்தளத்தல் என்பதற்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறித்து (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதென்று சொல்லும். இம்முறையில், செவியினருகே அதிர்வை ஏற்படுத்தி அதிர்வெண்ணை அளக்கிறாரா? அன்றி அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாரா? என்ன செய்கிறார்? தமிழறிஞர் சா.கணேசன் தெறித்தளத்தல் என்பது கால அளவைக் குறிப்பிடுவதாகவே சொல்வார். தெறிப்பென்பதைத் துடிப்பிற்கு இணையாகச் சொன்னால் கண்ணிமைத்தல், நொடித்தல் போன்றவை கூடத் தெறிப்பைக் குறிப்பதாய்க் கொள்ளலாமே?
5. இன்னுமொரு கேள்வி. அதுவென்ன தேங்கமுகந்தளத்தல்? தேங்கவெனும் முன்னொட்டு எதைக் குறிக்கிறது? தேங்கி இயல்பாகக்கிடந்ததையா? தேங்குதலென்பது நிறைதலையும், அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கலாமே? அறிவியலின் படி, திண்மப்பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமைக்குத் (porosity) தக்க மாறுபடும். அவற்றைத் தட்டித் தட்டி, அமுக்கியமுக்கி, வெள்ளத்தை நெருக்க/நெறிக்க முடியும்; ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறித்தளந்தது தான் அடுத்துவரும் தேங்கமுகத்தளவோ? வெறுமனே திண்மப்பொடியை தேக்கிமுகந்து அளக்காதிருந்தால், அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே அளக்கமுடியும். இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொத்தைத் திணிவு (bulk density), பெய்திணிவு (pour density), இறுக்கத்திணிவு (compact density)என்று வெவ்வேறு திணிவுகளை, திண்மப்பொடிகளை ஒட்டிப் பேசுவர்.
6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பது. கண்ணிமைக்கின்ற நேரம், விரல் நொடிக்கின்ற நேரம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவையெல்லாம் ஓர் ஒப்பீட்டு அளவுகள் தான். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units தான். மேற்கூறிய கண்ணிமைக் காலங்கூட ஒருவகைச் சார்த்தியளத்தல் தான். அதைத்தான் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறுகிறார். கண்ணிமைக்கும் அளவிற்கான நேரம். வேறொரு எடுத்துக்காட்டையும் இங்குதரமுடியும். இக்காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்தும்போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டங்கூடி வருகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையில் சார்த்தி, அளவெடுக்கிறோம். இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில் அளக்கப்படும் அலகுகளும் சார்த்தியளத்தல் முறையில் தான் அளக்கப்படுகின்றன. ஒருவகையில் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் போன்றவை வளர்ந்தேயிருக்காது என்றுஞ் சொல்லலாம்.
7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத்தான். எண்ணியலில் பயன்படுத்தும் முழுஎண்களும் (whole numbers), இயலெண்களும் (natural numbers), அரிதையெண்களும் (rational numbers), பின்னங்களும் (fractions), உள்ளமையெண்களும் (real numbers), பலக்கெண்களும் (complex numbers) என இந்த வளர்ச்சி விரிந்துகொண்டேபோகும். முடிவில் முடிவிலி, வரம்பிலி, கந்தழி என்றாகும்.
8. சரி, பரப்பை அளப்பதென்பது என்னவாயிற்று? அது ஏன் மேலுள்ள வரிசையிலில்லை? நீளம், மற்றும் வெள்ளம் வரும்பொழுது பரப்பென்பது ஏன் இவ்வரிசையில் சொல்லப்படவில்லை? பொதுவாக, அகலமாக அகண்டுகிடப்பது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth). இல்லை, எதையாவது நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டுவிட்டோ மா? தெரியவில்லை
மேலே எனக்குவிளங்காத கேள்விகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். விடை தெரிந்தவர்கள் எழுதினால் எல்லோருக்கும் பயன்படும். என்னவொரு நிலை பாருங்கள்? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவாக" இன்னும் எத்தனை கிடக்கும் இந்தத் தமிழில்?
அன்புடன்,
இராம.கி.

5 comments:
ஐயா, தமிழ் உலகம் மடற்குழுவில் உங்கள் வணிக ஆக்கமொன்றை படித்தேன். அதில் சில சொற்களுக்கு விளக்கம் சொல்லியிருந்தீர்கள். அதி சிறு சிறு சந்தேகம்.
இலங்கையில் வணிகம் = "Business" பயன்படுத்துவோம், இது பிழையா? மேலும் வணிகமும், வாணிபமும் ஒன்றா?
வணிகம் = "Business"
வர்த்தகம் = "Commerce"
வியாபாரம் = "Trade"
இந்த இலங்கை பயன்பாட்டில் ஏதும் பிழையுண்டா??
Dear Rama Ki
Have you ever wondered that, not even one year's name is in Tamil and we call April 14th as Tamil New Year ??
Arul
Dear Anony,
Thats because sanskrit emerged from tamil. Tamil calendar is the most perfect calendar in the whole world. Recent research has provided lots of material to support the theory that tamil is the mother of all languages. The names of tamil years are in sanskrit because they were named in the recent years (may be a 1000 years or so, when sanskrit was at its peak.) But tamil and tamil calendar has been there for thousands of years. Please refer to iraamaki's previous posts on tamil words and their roots. you can decide if they are sanskrit or tamil.
I am not sure, but, peithalathal could be viscosity (flow/ pour and measure). nerithalathal could be density (compress and measure). mukanthalathal looks like volume and thenga mukanthalathal looks like allow something to stagnate and measure the volume (could be frequency. this coincides with therithalathal - measure of frequency). These are just my views and I do not claim them to be correct.
on second thoughts, peithalathal could also have been velocity.
Post a Comment