நண்பர் ஒருவர், தனி மடலில், “பத்ம பூசன், பத்ம விபூசன் ஆகியவற்றிற்குத் தமிழாக்கம் என்ன?” என்று கேட்டார்.
”பூட்டுதல் = பொருத்தல். சிவகங்கை மாவட்டத்தில் நகரத்தார் திருமணங்களில், தாலி கட்டுவதைத் திருப்பூட்டுதல் என்பார். அணி/அணம் = நகை போன்றது. பூட்டணம்> பூடணம்> பூஷணம் என்று சங்கதத்தில் அமையும். பத்ம பூஷணம் - தாமரைப் பூடணம். பத்ம விபூஷணம் = தாமரை விகு பூடணம். விகுதல்>வீங்குதல் = பெருகுதல்” என்றேன்
“பதுமம் தமிழ் அல்லவா ?” என்று மீண்டும் வின்வினார்.
“பள்>படு->படி> பதி->பதம்/பாதம் என்ற சொல்வரிசை பள்ளத்தில் பதியும் பாதச்சொல்லுக்குக் கொண்டு போகும். பாதத்தின் அடிப்பாகம் சிவப்பானதால், தாமரை நிறமும், பாதம்/பதத்தின் அடிநிறமும் ஒப்பிட்டுப் பதப்பெயர் தாமரைக்கு ஆகுபெயராகிக் பதுமம் எனும் 2 ஆம் நிலைப் பெயர் கிளர்ந்தது.
தாமரை முதற்பெயர், பதுமம் 2 ஆம் நிலை. எதை விரும்புவீர் என்பது உம் உகப்பு. ”பத்மம்” சங்கத பாரதத்தில் (பொ.உ.400) தான் முதலில் புழங்கியது. அது தமிழ்ச்சொல்லே. நான் முதல்நிலைச் சொல்லை இங்கு பயனுறுத்தினேன்” என விடையளித்தேன்.
No comments:
Post a Comment