Tuesday, January 24, 2006

கொன்றையும் பொன்னும் - 2

சிவநெறி, விண்ணெறிகளில் கொன்றை:
-------------------------------------
þதுவரைக்கும், தலைவன், தலைவி மட்டுந்தானே சங்க þலக்கியங்கள்லெ பார்த்தோம். þப்ப சிவநெறியிலெ கொன்றை பத்தி என்ன சொல்றாங்கன்னு பாப்போம். கொன்றைன்னா, சிவனுக்கு ரொம்ப பிடிச்சது. கொன்றை சூடி = கொன்றை மாலை சூடிய சிவன்.
"கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை" ன்னு ரொம்பச் சிறப்பா புற நானூறு - கடவுள் வாழ்த்துப் பாட்டுலெ வரும். "கொன்றை வேந்தன்" - னு þடைக்கால அவ்வையார் எழுதியதை நீங்க சின்னப் புள்ளையிலே படிச்சுருப்பீக.

"அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடை முடி மன்றப் பொதியினில் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்" ன்னு சாத்தனார் சிலப்பதிகாரம்-பதிகம் 39-41- ல் சொல்லுவார். கல்லாடத்திலேயும் பல þடத்திலெ கொன்றையும் சிவனும் பற்றி வரும்.

கொன்றைப் புறவு அகற்றி - கல்லாடம் 1.21,
கடுக்கை மலர் மாற்றி - கல்லாடம் 2.9,
கடுக்கைஅம் சடையினன் - கல்லாடம் 82.15;
பொன் சுடர் விரித்த கொத்தலர் கொன்றையும் - கல்லாடம் 20.25-28,
கொன்றை அம் துணரில்செவ்வழி குறித்து - கல்லாடம் 56.1-6)

þப்படியெல்லாம் சிவநெறியில் கொன்றை சிவனோட சேர்ந்தே வரும்.

þன்னும் தமிழிசையிலெ கூடக் கொன்றை þருக்கு. கொல்> கொன்றை> கொன்றையந் தீங்குழல் = கொன்றையில் செய்த குழல்
கொன்றை> கொன்றையந் தீம்பாணி = சுத்த சாவேரி ( ச ரி2 ம ப த2 ச. þது ஐந்து சுரங் கொண்ட ஒரு திறப் பண்.)
முல்லைத் தீம்பாணியோட (மோகனத்தோட) þளி (பஞ்சமம்), குரலாக (சட்சமம்) ஆனது கொன்றைத் தீம்பாணி (சுத்த சாவேரி).

தமிழிசையிலெ ஏகப்பட்ட பேரை வடமொழியிலெ மாத்தித் தொலச்சு, பாட்டெல்லாம் வேற மொழியிலெ பாடித் தமிழிசையே þல்லைன்னு ஆக்கிப் புட்டாங்க. நாமளும், þதெல்லாம் விளங்காத சங்கதின்னு நினைச்சு, அப்படியே விட்டுட்டு, மெல்லிசை, திரைப்படம், ராப்பு, பாப்புன்னு போய்க்கிட்டு þருக்கோம். நமக்கும் பொறுமையோட சொல்லித் தரவும் ஆளில்லை. þப்படி மீட்டுக் கொண்டார்றது ஏகப்பட்ட வேலைங்க. þதுலெ þந்தக் காலத்துலெ வீ.ப.கா.சுந்தரனாரப் பாáட்டனுங்க. அவரு பாட்டுப்பாடச் சொல்லித் தர மாட்டாரு. ஆனா நம்ம பரம்பரை என்னான்னு சொல்லித் தருவாரு. அவரு பொத்தகங்களைப் படிங்க. அதைப் படிக்கப் படிக்கத் தான் தமிழிசைன்னா என்னன்னு கொஞ்சÁ¡ÅÐ விளங்கும். அப்புறம் வேறெ யார்ட்டெயாவது þசை கத்துக்கலாம். அவரு சொல்ற படி, முல்லைத் தீம்பாணியும், அதிலேந்து பிறக்குற நாலு திறப்பண்களும் (¦¸¡ý¨Èò ¾£õÀ¡½¢ «Ð§Ä ´ñÏ) உலகத்துலே எல்லா நாடுகள்லேயும் ஆதிகாலந்தொட்டு þருக்காம். ¬¸ì கொன்றைத் தீம்பாணி அவ்வளவு ஒசத்தி.

பெரிய புராணத்துலெ ஆனாயர் புராணம் படிச்சீங்கன்னா, þது புடிபடும். ஆனாயர் கொன்றை மரத்தயே சிவனா நினச்சு வழிபடுறார்.

ஆனா, விண்ணெறியிலெ (வைணவத்திலெ) þப்படி þல்லைங்க; அவுங்களுக்கு கொன்றை மேலே கொஞ்சம் பிடிப்பு þல்லெ போலே þருக்கு. காந்தள் (அதுவும் மஞ்சள் கலந்த சிவப்புத்தான்; சில þடங்கள்லெ கருஞ் சிவப்பு) பத்திப் பல þடங்கள்லெ சொல்ற அவுங்களுக்கு கொன்றையை பத்தி ஒரு ஓர வஞ்சனை §À¡Ä; நாலாயிரப் பனுவல் முழுக்கப் படிச்சிங்கின்னா மொத்தமா ரெண்டு þடம் தவிர மிச்ச எங்கெயும் கொன்றையைப் பத்திச் சொல்லிற மாட்டாங்க (¦ÃñÎìÌ §ÁÄ þÕìÌíÌÈ ±ý À¢¨Æ Àò¾¢ì ¸£§Æ Å÷§Èý).

"கார்க்கோடல் பூச் சூடி வருகிற தாமோதரா" ன்னு கருஞ்சிவப்புக் காந்தள்ப் பூவைப் பத்திச் சொல்ற பெரியாழ்வார் (பனுவல் - 246), அதே நிறம் கொண்ட கொன்றையை ஒரே ஒரு þடத்துலெ (பனுவல் 349) மட்டும் சொல்றார்.

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச்சென்ற
உருப்பனை யோட்டிக் கொண்டு þட்டு உறைத்திட்ட உறைப்பன், மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறியாழியுங் காசும் கொண்டு
விருப்பொடு பொன்வழங்கும் வியன்மால் þருஞ் சோலையதே!

என்ன பண்றது! சோலைமலை (þது தாங்க மதுரைக்குப் பக்கத்தில் þருக்கும் அழகர் கோயில்) ஆச்சுதுங்களே. சொலிக்கிற சோலை மரம் கொன்றை தானுங்களே, சொல்லியாகணுமே, அதனாலே சொல்லிட்டாரு. (அதே நேரத்துலே பொருளை ரொம்பச் சிறப்பா வச்சுட்டாரு.) þன்னொரு þடம், சிவனை ஒட்டி, திருமாலை ஒசத்தி, திருமழிசை ஆழ்வார் சொன்னது.

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால் வணங்குபாத நின்மலா! நிலாயசீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே!

அவ்வளவுதான்; பெருமாள் அடியாருக்கு என்னவோ, கொன்றை மேலே ஒரு வேண்டாமை; ஆனா, கொல்லி காவலன்னு பல þடத்துலே குலசேகர ஆழ்வார் சொல்லிக்கிறார். அது வே¦È கதை. þன்னோரு சமயம் பார்க்கலாம்.
----------------------------------------------
þப்படி "கொன்றை மேல் என்னவோ ஒரு வேண்டாமை பெருமாள் அடியாருக்கு" என்று நா எழுதியவுடன், விண்ணவத்தில் ஆழ்ந்து தோய்ந்த நண்பர் நா.கண்ணன், "எனக்கென்னவோ இதில் முழு உடன்பாடு கிடையாது. ஆய்ந்ததில் இக்கூற்று பிழை என்றே படுகிறது." என்று சொல்லி "உருப்பிணி நங்கை தன்னை" என்ற பெரியாழ்வார் பாடலையும், "கோங்கலரும் பொழில் மாலிருஞ் சோலையில்" என்ற ஆண்டாள் பாசுரத்தையும், "மலர்ந்தே ஒழிந்தில மாலையும்" என்ற நம்மாழ்வார் திருவிருத்தத்தையும் முன்வைத்து அவர் கருத்தைச் சொல்ல விழைﺡர். அவருடைய அந்த மடலைத் தேடி𧼠þருக்§¸ý. þன்னும் அகப்படலை. அவருக்கு நான் அளித்த மறுமொழியை þங்§¸ þணைÕ째ý.
-------------------------------------------------
அண்ணாச்சி,

வெறுஞ் சப்பைக் கட்டு செய்யுறதுலே யாருக்குப் பலன்? திருமால் அடியாருக்கு முன்னே பிழையைப் பிழை என்று
ஒப்புக் கொள்றது தான் நாகரிகம். எட்டங்கம் (அஷ்டாங்கம்) தரையில் படக் கீழே விழவா? :-) எனக்கு நாலாயிரப்
பனுவல்லெ, விவரம் போதாது, இன்னும் ஆழம் போகோணும்னு நீங்க உணர்த்தியிருக்கீங்க. செய்யுறேன். கடல்லே
படகோட்டுறது எம்பூட்டு வேலைங்க! பெருமாள் தான் வழி காட்டோணும்.

ஆனாலும் பாருங்க இன்னும் எனக்கு மீசையிலே மண்ணொட்டல ;-).

நீங்க கூறிய இடங்கள்லெ, "உருப்பிணி நங்கை தன்னை" என்ற பெரியாழ்வார் பாடலும், "கோங்கலரும்
பொழில் மாலிருஞ் சோலையில்" என்ற ஆண்டாள் பாசுரமும், "மலர்ந்தே ஒழிந்தில மாலையும்" என்ற
நம்மாழ்வார் திருவிருத்தமும் கொன்றையை இயற்கை அளவிலேயே குறிக்கின்றன. மற்றவைகள் சிவனை இணைத்துத்
தானே குறிக்கின்றன? கொன்றை, தமிழகத்துலெ ஒரு காலத்துலெ பரந்து கிடந்த மரம். எனக்கென்னமோ,
ரொம்பக் கூடவே ஆழ்வார்கள் சொல்லியிருக்கலாமுண்ணு தோணுது :-).

அப்புறம், என்னங்க, இப்படி நினைச்சிட்டீக, சிவ நெறிக்கும் விண்ணெறிக்கும் பேதமுண்ணு நான்
சொல்லுவேணுங்களா? அதுவும் முடிவேந்தப் பெருமாளை நானே வணங்கும் போது?

சிவனை ஏற்றிப் பெருமாளைக் குறைச்சுச் சொல்றதும், பெருமாளை ஏற்றிச் சிவனைக் குறைச்சுச் சொல்றதும்
தமிழ்ச் சமய இலக்கியத்தில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டென்றே நான் எண்ணுகிறேன். அது மாமன்,
மச்சான், கணவன்/மனைவி கேலிசெய்து பேசிக் கொள்வது போல நமக்குள் அமைந்து கொண்டே தான் இருக்கும்.
ஒவ்வொன்றிலும் ஒரு சுவை இருந்து கொண்டே இருக்கும். என் கட்டுரையில் அந்தப் பகுதியைத் திரும்பிப் படித்துப்
பாருங்க. அப்பொழுது அந்த ஓர வஞ்சனையின் அடிப் பொருள் புலப்படும். அது மலர்ச் செண்டாலெ அடிக்கிறது
மாதிரி. உண்மையிலெயெ கண்டனம் செய்ஞ்சிருந்தா, தோரணை வேற மாதிரி இருந்திருக்குங்களெ!

பொன்னியின் செல்வன் படிச்சிருப்பீகளே, அதிலெ ஆழ்வார்க்கடியானுக்கும் வந்தியத்தேவனுக்கும் அங்கங்கே
இந்த விளையாட்டு வரும். அங்கே இன்னொருத்தரைக் குறை சொல்றதுண்ணு வராது. ஆனாலும் இந்த இடையாட்டு
நடந்து கொண்டே இருக்கும். கூடவே ஒரு நெருக்கமும் இருக்கும்.

ஓரவஞ்சனை, கோபங்கிறது எல்லாம் நாட்டுப்புற வழக்கில் ஒரு பேச்சுத் தோரணை, அண்ணாச்சி.

"ஏ, புள்ளெ, உங்ஙொப்பன் என்ன சொல்றாரு; எட்டுக் கல்லு மோதிரம் போட்டாக் குறைஞ்சா போயிருவாரு?
இல்ல, போட வக்கில்லயா? உக்கும், உங்க வீட்டப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்; எல்லாம் ஓர்
ஓரவஞ்சனை; பொச கெட்ட பயக........" - இப்படிப் போல ஒரு நெருக்கமான பேச்சு அண்ணாச்சி.

இப்ப சிவ நெறியிலே திருத்துழாயையோ, காயாம்பூவையோ யாராவது உசத்திப் பேசுவாங்களோ?
(அண்ணாச்சி, தேவாரத்திலே, திருவாசகத்துலெ இந்த இடத்துலே துழாய் பத்திப் பேசுறாங்கண்ணுட்டு
யாராச்சும் திமிசு கட்டிக்குணு வந்திராதீக! இந்த ஞான சுழியத்துக்குத் தாங்காது:-)), அது போல
கொன்றையைத் திருமாலோட சேர்த்துப் பேசிர மாட்டாங்கங்குறது அடிப்படையிலெ சரிதானுங்களே!

இது ஒருவிதமான பாவனை; அது இன்னொரு விதமான பாவனை.

அரியும் சிவனும் ஒண்ணுதாங்க அண்ணாச்சி! இதுக்கு யாராவது மல்லாடுவாகளா? யாரு யாரு மார்பிலெ
பாயுறது? அடுத்த கதையைப் பார்ப்போம். என்ன சொல்றீக?

அன்புடன்,
þராம.கி.

3 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,

சுழியத்துக்குளேதான் எல்லாம் அடக்கம் என்பதைத் தெரிந்தல்லவா தாங்களைத் தாங்களே ஞான சுழியம் என்றழைத்துக் கொள்ளுகிறீர்கள்.

கொன்றையைக் காணச் செல்லுமிடமில்லால் காந்தள்(கருப்பர்) முன்னே நிற்கிறார் அல்லவா? காந்தளையும் கொன்றையையும் வேறுபடுத்தல் அழகல்ல.

"அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு" அப்படி என்று சொல்வதுண்டல்லவா?

G.Ragavan said...

ஆகா! அருமையான கட்டுரை. மிகவும் அருமை. செய்தி பல தெரிந்து கொண்டேன்.

கொன்றை மலர் முந்தி நெறைய இருக்கும். நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப மதுரைல நெறைய பாத்திருக்கேன். இப்ப அதுக்கு குல்மொஹர்னு சொல்றாங்க பேரு. என்ன மொகரையோ.

ஞானசுழி என்ற பேரும் நல்லாருக்கு.

இராம.கி said...

அன்பிற்குரிய ஞா.வெ.,

சுழியத்துக்குள் எல்லாம் அடக்கம் என்பது உண்மைதான்; ஆனால் நான் ஞான சுழி என்பது இன்னும் உண்மை. நாம் அறியாதது இன்னும் உலகில் உண்டல்லவா?

காந்தளையும் கொன்றையும் வெவ்வேறு தானே? கொன்றையைச் சொல்வதால் காந்தளைக் குறைப்பதாகப் பொருள் இல்லை.

அரியும் சிவனும் ஒன்றுதான் என்பதில் நான் ஒருப்படுவேன்.

அன்பிற்குரிய இராகவன்,

குல்மோஹர் என்ற பெயர் அப்படியே வடபுலத்து மொழிபெயர்ப்பு. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் பேசியிருக்கிறேன். படித்து வாருங்கள்.

உங்கள் இருவரின் பின்னூட்டிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.