Tuesday, June 15, 2004

தமிழ்வழிக் கல்வி

தமிழ்வழிக் கல்வி பற்றி அவ்வப்பொழுது தமிழ் உலகத்தில் பேசியிருக்கிறோம். இருந்தாலும் இந்தப் புலனம் அவ்வப்போது கிளர்ந்து கொண்டே இருக்கிறது. நண்பர் வெங்கடேசு அவருடைய தனிக் கருத்தை "நேசமுடன்" என்ற மடலில் சொல்லியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு; மற்றவர்கள் அதற்கு எதிர்வினை செய்யும் முகத்தான் ஒரு தனி மனிதரைச் சாடுவது அழகல்ல.

தமிழ்வழிக் கல்வி என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தோடு எழுந்த ஒரு பிறழ்ச்சனை. பள்ளிப் படிப்பு என்பது ஒருபக்கம் ஆங்கில வழியிலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக் குருகுல வழியிலும் (திண்ணைப் பள்ளிக்கூடம் போன்றதொரு அமைப்பு) நடந்து கொண்டிருந்ததை மாற்றி ஆங்கில நடைமுறையில், ஆனால் தமிழ்மொழி வழியாக, ஒரு பள்ளித் திட்டம் கொண்டு வருவதை பேராயக் கட்சியின் பெரிய தலைவர்கள் பலரும் 1935-ல் இருந்தே செய்து வந்தார்கள். இந்த முயற்சி ஏதோ திராவிடக் கட்சிகளோ, அல்லது அவற்றிற்கு முந்தைய நயன்மைக் கட்சியோ (justice party) கொண்டுவந்தது அல்ல; இன்னும் சொல்லப் போனால், நயன்மைக் கட்சியில் இருந்த பலரும் ஆங்கில வழிக் கல்விதான் தொடர வேண்டும் என்று அப்போது விரும்பினர்.

தமிழ்வழிக் கல்வியைத் தூக்கிப் பிடித்தவர்கள் இராசாசி, சத்திய மூர்த்தி, காமராசர், சி.சுப்பிரமணியம் போன்றோரே. விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர்களுக்கு, காந்தியத்தின் பால் ஈர்ப்புக் கொண்ட இவர்களுக்குத் தமிழ்வழிக் கல்வி என்பது இயல்பாக எழுந்த ஒரு கொள்கை. இவர்களை எல்லாம் மறந்துவிட்டுத் தமிழ்வழிக் கல்வி பற்றி இன்று தமிழ்நாட்டில் பேச முடியாது. பேராயக் கட்சிக்கு மாறாய் இருந்த நயன்மைக் கட்சியில் இருந்து பின்னால் வெளிவந்த பெரியார் கூடப் பெரிய அளவு தமிழ்வழிக் கல்விக்குத் துணை போனார் என்று கூறமுடியாது; ஆனால் அவருடைய மாணாக்கரான அண்ணா தமிழ் வழிக் கல்விக்குத் துணை போனார். பின்னால் கருணாநிதியாரின் முதல் அரச காலம் வரை தமிழ் வழிக் கல்வி தமிழ்நாட்டில் அழுந்திச் சொல்லப் பட்டே வந்தது. பள்ளிப் பாடங்களைத் (ஏன் கல்லூரிப் பாடங்களைக் கூடத்) தமிழில் சொல்லிக் கொடுப்பதே சரி என்று பெரும்பாலோர் நினைத்தார்கள். அதன் விளைவாக, எழுபதுகளின் தொடக்கத்தில் கல்லூரிப் பாடங்களை எப்படித் தமிழில் சொல்லிக் கொடுப்பது என்று பலரும் பேசிக் கொண்டிருந்தோம். பெரும் அறிஞர்கள், மொழியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாம் அதில் ஈடுபட்டார்கள்; பல்வேறு துறைகளின் கலைச்சொற்கள் அந்தப் பொழுதிலேயே உருவாக்கப் பட்டு வந்தன. தவிர 65-ல் இருந்து 72 வரை ஒரு வகை இடதுசாரிப் போக்கு இந்திய நாடெங்கும் பரவியிருந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இடது சாரி மனப்பான்மை என்பது சிறப்பாக வெளிப்பட்டது. அந்த இடதுசாரிப் போக்கிற்கு தாய்மொழிக் கல்வி என்பது ஓர் அடிப்படைப் புலனம்.

இன்றைக்கு குமுகாயம் பெரிதும் மாறிவிட்டது. இடது சாரிப் போக்கு மிகவும் குறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் பணம், பணத்திற்கான பரிதவிப்பு, ஐம்புலன் நுகர்ச்சிக்கென அலைபடுதல் என்றே மக்களில் பலரும் இயங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பேராயக் கட்சியின் நாட்டு விடுதலை பற்றிய கருத்துக்கள், காந்திய வாதம், திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்தில் கொண்டுவந்த தமிழ் எழுச்சிப் போக்கு எல்லாம் இன்றைக்குக் கானல் நீராய் ஆகி விட்டன. 67-ல் தி.மு.க. வெற்றிபெற பல இளைஞர்கள் உழைத்ததெல்லாம் ஒரு கனவு போல் தெரிகிறது. இவையெல்லாம் இந்த நாட்டில் தான் நடந்தனவா என்று இன்றைக்கு வியக்கச் செய்தாலும் அவையெல்லாம் நடந்தது உண்மை.

பொதுவாக 70களில் தான் தமிழ்நாட்டில் பலரும் உயர்நிலைப் பள்ளி அளவில் படிக்கத் தொடங்கினார்கள். இந்தக் கட்டத்தில் தான், கல்விக்குக் காமராசர் என்ற சொலவடையின் ஆழத்தை உணரவும், பேராயக் கட்சியின் முதல் 20 ஆண்டுச் செயல்களின் பயனை நுகரவும் செய்தனர்; (ஆனால் இதன் பலனைப் பெற்றவர்கள் திராவிடக் கட்சியினர்.) பள்ளியிறுதித் தேர்வு எழுதுவோர் தொகை கூடிக் கொண்டே போனது. வேலைகளுக்கான போட்டியும் கூடிக் கொண்டே போனது. கல்லூரியை முட்டுவோர் தொகையும் கூடியது. மக்கள் தொகை இப்பொழுது இருக்கும் அளவுக்கு எண்ணிக்கையிற் பெருகாமல் இருந்த போது, ஒரு வேலைக்கு 3 பேர் போட்டி என்னும் நிலையைக் குமுகாயம் செரித்துக் கொண்டது. ஆனால் இன்றோ, ஏதொன்றிற்கும் 50 - லிருந்து 100 மடங்கு ஆட்கள் போட்டியிடுகிறார்கள். (அதாவது பொருளாதார வேலை வாய்ப்புக்கள் கூடவில்லை. அண்மைத் தேர்தலிலுமே வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பெரும் பிறழ்ச்சனையாகப் பேசப்பட்டது.)

இந்தப் போட்டியோடு ஒரு சாதியப் பின்னணியும் ஊடாடியது உண்டு. 1970-களில் 3ல் ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் அதில் அதிக விழுக்காட்டு வேலைகள் மேனிலைச் சாதியினருக்கே கிடைத்தன. பிற்பட்டோ ருக்கும், தாழ்த்தப்பட்டோ ருக்கும் கிடைத்த வேலை வாய்ப்புக்கள் குறைந்தே இருந்தன. இதன் விளைவாக 70-களின் பிற்பாதியில் பிற்பட்டோ ரிடையே எழுச்சி ஏற்படத் தொடங்கியது. எழுச்சியின் விளைவை தி.மு.க. ஆழமாக உணர்ந்தது. பிற்பட்டோ ர் ஆதரவு அவர்களுக்குக் குறைந்துவரத் தொடங்கியது. அவர்கள் கட்சி உடைந்தது. இருவேறு பங்காளிகளாய் இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. இரண்டு கட்சிகளுமே பிற்பட்டோ ரின் ஆதரவை நாடுவதற்காய்ப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சாதிய வழி தனிச்சேர்க்கை (reservation) என்பது பெரிய கொள்கையாய் மாறியது. இதனால் பிற்படுத்தப் பட்டோ ர் கொஞ்சம் கொஞ்சமாய் 80 களின் தொடக்கத்தில் கணிசமாக வேலைபெறத் தொடங்கினார்கள். ஆனால் தாழ்த்தப் பட்டோ ர் அதே பொழுது அந்த அளவுக்கு உயரவில்லை. 90களின் இறுதியில் தான் தாழ்த்தப்பாட்டோ ர் தாங்கள் குரலை ஓங்கி எழுப்பிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

தவிர ஒரு பொருளியற் காரணமும் கூடவே இருந்தது; 1970 களின் பின்பாதிகளில், வேலை வாய்ப்பிற்குப் பலரும் போட்டியிடத் தொடங்கினார்கள். வேலைதேடுவோர் எதிர்ப்பார்ப்பிற்கு ஈடு கொடுத்து முதலீடுகள் தமிழ்நாட்டில் வளரவில்லை. நடுவண் அரசு நிறுவனங்களின் முதலீடு தென்னிந்தியாவில் பெரிதும் குறைந்து போனது. கடைசியாகத் தமிழ்நாட்டில் நடுவண் அரசால் ஏற்படுத்தப் பட்ட பெரிய முதலீடு திருச்சிராப்பள்ளியில் வந்த பாரத மிகுமின் நிறுவனமே (BHEL). அதற்கு அப்புறம், நடுவண் அரசின் முதலீடு பெரிய அளவில் இந்த மாநிலத்தில் ஏற்படவே இல்லை. (வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது என்ற சொலவடை இதனால் தான் தமிழ்நாட்டில் பரவலாய்ப் புழங்கியது.) தமிழ்நாட்டு அரசாலும் பெரிய முதலீடுகளை உருவாக்க முடியவில்லை. தவிரப் பொதுத் துறைகளிலும், மின்வாரியத்திலும் வேலைக்கு ஆளெடுப்பதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

அரசு நிறுவனங்கள் வேலைக்கு எடுப்போரின் பள்ளிப் படிப்பு ஆங்கிலத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்தது. கிடைக்கும் வேலைகளும் எண்ணிக்கையில் குறைந்தே இருந்தன. பள்ளி வரை தமிழில் படித்து பின் கல்லூரியில் ஆங்கிலத்திற்கு மாறிப் படித்தவர்களும் மிகவும் குறைந்து இருந்தார்கள். ஆனால் விழுக்காட்டில் பார்த்தால் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதியினருக்கு அரசைச் சார்ந்து வேலை கிடைத்தது. [காட்டாக அன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1500 பொறிஞர்களே தமிழ்நாட்டில் இருந்து ஓவ்வொரு ஆண்டும் வெளியே வந்தார்கள். அரசு சார்ந்த துறைகள், நிறுவனங்களில் (குறிப்பாக பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், சில அரசு நிறுவனங்களில்) மட்டுமே 500/600 பேருக்கு வேலைகிடைத்தது. மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலோ, மற்ற சொந்தத் தொழில்களிலோ தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.]

இதனால் பெரும்பாலோர் வேலைக்கென தனியார் துறையையே நாட வேண்டியிருந்தது. ஒன்றிற்கு 20, 30 எனப் போட்டி இருக்கும் போது, போட்டி போடுபவர்களிடம் பெரிதும் திறமை வேறுபாடு இல்லாத போது, ஏதாவது ஒன்றைக் காட்டிப் போட்டி போடுபவர்களை வேறுபடுத்திக் காட்டி தாங்கள் செய்வது சரியென்று காட்டிக் கொள்வதற்காய்த் தனியார் துறையினர் ஆங்கிலவழிப் பள்ளிப்படிப்பை தேர்விற்கான காரணியாய்க் கொள்ளத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் போட்டி நடுவில், பள்ளிவரை தமிழில் படித்து பின் கல்லூரியில் ஆங்கில வழி படித்தவரைக் காட்டிலும், ஐந்து அகவையிலிருந்து 21 அகவை வரை ஆங்கிலம் வழிப் படித்தவர் மேல் என்ற போக்கைத் தனியார் துறையினர் காட்டத் தொடங்கினார்கள். வெள்ளைக் கழுத்து வேலைகளுக்கு ஆங்கிலம் தேவையென்ற சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாய்க் கசிந்தது. நீலக் கழுத்து வேலைகள் இங்கு குறைவாக ஏற்பட்டதால், தமிழன் வெள்ளைக் கழுத்து வேலைக்குச் சிறந்தவன் என்ற தவறான கருத்துப் பரவிய நிலையால் (மாறுகடையா - marketing - பஞ்சாபியை எடு; நிதித்துறையா - தமிழனை எடு, இப்படி ஒரு பாத்திகட்டும் வழக்கம் இந்தியாவில் இன்றும் உண்டு.), நுனி நாக்கு ஆங்கிலத்தில் விளையாட்டுக் காட்டும் போக்கு வெற்றிகரமாய்த் தொடங்கியது.

சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே அப்பொழுது இருந்த மடிக்குழைப் (matriculation) பள்ளியாளர்கள் இதைத் தாங்கள் முன்னேற வழியாகக் கொண்டார்கள். முதலில் கிறித்தவ விடையூழியர் (Christian missionaries) பள்ளிகளுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டது. பின்னர் கிறித்துவ விடையூழியர் பள்ளிகள் போலக் காட்டிக் கொண்ட போலிப் பள்ளிகள் எழுந்தன. பள்ளிப் படிப்பு ஒரு பத்தாண்டுகளில் பெரும் வணிகமாய் மாறிற்று மடிக்குழைப் பள்ளிகளில் படித்தவர்கள் தஃசுப் புஃசுவென்று ஆங்கிலம் பேசுவதும், அதனால் அவர்களுக்கு நகர வாழ்க்கையில் முன்னிலை பெறுவதும் ஒரு நளினமாகக் குமுகாயத்தில் தோன்றத் தொடங்கியது. மொத்தத்தில் இந்தக் கானல் நீரை நோக்கிப் படித்த நடுத்தர வருக்கம் ஓடத் தொடங்கியது. அவரைப் பார்த்து ஏழையரும் படியெடுக்கத் தொடங்கினார்கள். இன்றைக்கும் வேலை என்பது ஆங்கிலவழிப் படித்ததால் கிடைப்பதில்லை; யாருக்கு யாரைத் தெரியும்? யார் பரிந்துரை செய்வார்கள்? - என்பவையே வேலை கிடைப்பதற்கான அடிப்படை. இதில் பாடமொழி என்பது ஒப்புக்குச் சொல்லும் ஒரு பேச்சு. ஏழையோ, நடுத்தர வருக்கமோ எல்லாம் இதே நிலை தான். மொழியை வைத்துத் தான் வேலை என்பது காதில் பூ சுற்றும் வேலை.

தமிழ்நாட்டுக் குமுகாயத்தில் ஆங்கில வழிப் படிப்பைப் பற்றி இப்படி ஒரு மனப்பான்மை போலியாய் எழுந்தது; இதற்குத் தனியார் துறை உறுதுணையாய் இருந்தார்கள். (எந்த ஒரு நிறுவனத்திலும் எதிர்பார்ப்பு என்பது ஒன்று, நடப்பு என்பது இன்னொன்று. தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்; பள்ளியில் ஆங்கில வழிப் படித்ததால் எந்தவிதமான நிலைப்பட்ட சிறப்பும் இரண்டாவது மூன்றாவது ஆண்டில் வருவதில்லை. இந்த ஆங்கில, தமிழ் பாட மொழியில் படித்தவர்களின் வேறுபாடு என்பது முதலாண்டு வேலை பார்ப்பில் ஒரு சில மேனிலைகளை ஆங்கில வழி படித்தோருக்கு முன்னேற்றம் எனக் கொடுத்தாலும், நாளாவட்டத்தில் நிறுவனத்துள் வேலைத்திறன் என்பது பெரிதாகப் பேசப்படுமே ஒழிய, அவர் எந்த மொழியில் படித்தார் என்பதல்ல. இன்றும் கூட ஒரு பொதுவான செய்தியை தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒரு பக்கத்திற்கு உருப்படியாகச் சொந்தமாய் எழுதத் தெரியாதவர்கள் 100க்கு 95 பேர் இருக்கின்றனர். இதில் ஆங்கில வழிப் படிப்பென்ன, தமிழ் வழிப் படிப்பென்ன? எல்லாம் ஒன்றுதான். குறைப் படிப்பு சொல்லிக் கொடுத்த பின்னால். அதை எந்த மொழி வழியாகச் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற கேள்வியில் ஏற்றிச் சொல்வது முறையான அணுகு முறை அல்ல. இன்றைக்கும் தவறான அணுகு முறையில் ஆங்கில வழிப் படித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது என்பதே உண்மை. இந்த அணுகு முறையைத் தவறென்று சொல்ல அறிவாளிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், குமுகத் தலைவர்கள் பொறுமையோடு சொல்லி மக்களுக்கு விளக்கி அரசு நடவடிக்கைகளால் மாற்ற வேண்டும். அதே பொழுது ஆங்கில மொழியறிவையும், பேச்சுத் திறனையும், எழுத்துத் திறனையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. தமிழ்வழிக் கல்வி என்பதும், ஆங்கில மொழி அறிவு என்பதும் முரண்பட்டவை அல்ல; அவை இரண்டும் ஒரே பொழுது உடன் இருக்கக் கூடியவைதான். தமிழ்நாட்டில் பலரும் மொழியறிவையும், பாடமொழி என்பதையும் குழப்பிக் கொள்கிறார்கள் என்பது என் தாழ்மையான எண்ணம். நானே எத்தனையோ பேரை வேலைக்கு எடுப்பதில் எங்கள் நிறுவனத்தில் தேர்வுக் குழுவில் ஒரு சில ஆண்டுகள் இருந்திருக்கிற பட்டறிவால் சொல்லுகிறேன்.)

1967க்குப் பின்னால் பேராயக் கட்சியைக் குழிதோண்டி தமிழ்நாட்டில் புதைத்த பிறகு, திராவிடக் கட்சி ஒன்று இரண்டாகிப் பங்காளிச் சண்டையில் சிக்கிக் கொண்டு, அவர்களுக்குள் எழுந்த போட்டியால், அதே பொழுது அரசு அதிகாரிகளின் வழி காட்டுதலில், அரச நடவடிக்கைகள் மூலம் தாங்களும், தங்கள் கட்சியும் பணம் சம்பாரிக்க முடியும் என்ற எண்ணம் எழுந்ததால், தமிழ்நாட்டின் நிலை தட்டுக் கெட்டுப் போயிற்று. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினர். அப்படி வாங்கிய சித்திரங்களில் ஒன்று தான் மடிக்குழைப் பள்ளிகள் பெருத்துப் போன நிலை. இத்தனை மடிக்குழைப் பள்ளிகள் எல்லாம் திராவிடக் கட்சிகளின் அரசுக் காலத்திலேயே உருவானவை. ஆக, நம் கண்ணெதிரேயே கல்வித் துறையில் ஒரு பெரிய பம்மாத்து நடந்தது; அதற்குத் திராவிடத் தலைவர்கள் பலரும் துணையாய் இருந்தனர். தமிழ்வழிக் கல்வி தொலைந்தது தமிழை மேடையில் முழக்கிய தலைவர்களால் தான் என்பது நம் நெஞ்சை குலைய வைக்கும் ஓர் உண்மை. மொத்தத்தில் இவர்களுக்குக் கொள்கை என்பது அன்றாடம் மாற்றும் ஆடையாயிற்று. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பதுபோல் தொலைந்து போன தமிழ்க் கல்வியை இப்பொழுது நாமெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

இதில் ஒரு தனி மனிதரைப் போட்டுச் சாடிக் கொண்டிருப்பதில் பலனில்லை. சூக்குமம் மடிக்குழைப் பள்ளிகளைக் கட்டுப் படுத்துவதிலும், கல்வித் திட்டத்திலும் இருக்கிறது. தமிழ் வழிக்கல்வியை ஊட்டி வளர்ப்பது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளைக் கூட்டுவதில் உள்ளது; வேலைக்கேற்ற படிப்பு என்பதில் உள்ளது; வேலை வாய்ப்புக்களைக் கூட்டுவதில் உள்ளது; ஆங்கில மொழியறிவை வளர்ப்பதில் உள்ளது; அதே பொழுது தமிழ்வழிப் படிப்பு என்பதைப் பெரிதும் பரவலாக்கித் தேவைப்பட்டால் கட்டாயமாக்குவதிலும் உள்ளது.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் முடிவுறாத புலனம் இது. உருப்படியான தலைவர்கள் நமக்கு இல்லை; அதனால் இந்தப் பிறழ்ச்சனையில் பிறழ்ந்து கிடக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இதன் ஒரு படியை இராயர் குழும்பிற்கும் அனுப்புகிறேன். அங்கும் இந்தப் புலனம் பேசப்படக் கூடும்.

In TSCII:

¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ÀüÈ¢ «ùÅô¦À¡ØÐ ¾Á¢ú ¯Ä¸ò¾¢ø §Àº¢Â¢Õ츢§È¡õ. þÕó¾¡Öõ þó¾ô ÒÄÉõ «ùÅô§À¡Ð ¸¢Ç÷óÐ ¦¸¡ñ§¼ þÕ츢ÈÐ. ¿ñÀ÷ ¦Åí¸§¼Í «ÅÕ¨¼Â ¾É¢ì ¸Õò¨¾ "§¿ºÓ¼ý" ±ýÈ Á¼Ä¢ø ¦º¡øĢ¢Õ츢ȡ÷. «¾üÌ «ÅÕìÌ ¯Ã¢¨Á ¯ñÎ; ÁüÈÅ÷¸û «¾üÌ ±¾¢÷Å¢¨É ¦ºöÔõ Ó¸ò¾¡ý ´Õ ¾É¢ ÁÉ¢¾¨Ãî º¡ÎÅÐ «Æ¸øÄ.

¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ±ýÀÐ þó¾¢Â Ţξ¨Äô §À¡Ã¡ð¼ò§¾¡Î ±Øó¾ ´Õ À¢ÈúÉ. ÀûÇ¢ô ÀÊôÒ ±ýÀÐ ´ÕÀì¸õ ¬í¸¢Ä ÅƢ¢Öõ, þý¦É¡Õ Àì¸õ ¾Á¢ú¿¡ðÎì ÌÕÌÄ ÅƢ¢Öõ (¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ §À¡ýȦ¾¡Õ «¨ÁôÒ) ¿¼óÐ ¦¸¡ñÊÕ󾨾 Á¡üÈ¢ ¬í¸¢Ä ¿¨¼Ó¨È¢ø, ¬É¡ø ¾Á¢ú¦Á¡Æ¢ ÅƢ¡¸, ´Õ ÀûÇ¢ò ¾¢ð¼õ ¦¸¡ñÎ ÅÕŨ¾ §ÀáÂì ¸ðº¢Â¢ý ¦Àâ ¾¨ÄÅ÷¸û ÀÄÕõ 1935-ø þÕó§¾ ¦ºöÐ Åó¾¡÷¸û. þó¾ ÓÂüº¢ ²§¾¡ ¾¢Ã¡Å¢¼ì ¸ðº¢¸§Ç¡, «øÄÐ «ÅüÈ¢üÌ Óó¨¾Â ¿Âý¨Áì ¸ðº¢§Â¡ (justice party) ¦¸¡ñÎÅó¾Ð «øÄ; þýÛõ ¦º¡øÄô §À¡É¡ø, ¿Âý¨Áì ¸ðº¢Â¢ø þÕó¾ ÀÄÕõ ¬í¸¢Ä ÅÆ¢ì ¸øÅ¢¾¡ý ¦¾¡¼Ã §ÅñÎõ ±ýÚ «ô§À¡Ð Å¢ÕõÀ¢É÷.

¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢¨Âò à츢ô À¢Êò¾Å÷¸û þạº¢, ºò¾¢Â ã÷ò¾¢, ¸¡Ááº÷, º¢.ÍôÀ¢ÃÁ½¢Âõ §À¡ý§È¡§Ã. Ţξ¨Äô §À¡Ã¡ð¼ò¾¢ø ÀíÌ ¦¸¡ñ¼ þÅ÷¸ÙìÌ, ¸¡ó¾¢Âò¾¢ý À¡ø ®÷ôÒì ¦¸¡ñ¼ þÅ÷¸ÙìÌò ¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ±ýÀÐ þÂøÀ¡¸ ±Øó¾ ´Õ ¦¸¡û¨¸. þÅ÷¸¨Ç ±øÄ¡õ ÁÈóÐÅ¢ðÎò ¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ÀüÈ¢ þýÚ ¾Á¢ú¿¡ðÊø §Àº ÓÊ¡Ð. §ÀáÂì ¸ðº¢ìÌ Á¡È¡ö þÕó¾ ¿Âý¨Áì ¸ðº¢Â¢ø þÕóÐ À¢ýÉ¡ø ¦ÅÇ¢Åó¾ ¦Àâ¡÷ ܼô ¦Àâ «Ç× ¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ìÌò Ш½ §À¡É¡÷ ±ýÚ ÜÈÓÊ¡Ð; ¬É¡ø «ÅÕ¨¼Â Á¡½¡ì¸Ã¡É «ñ½¡ ¾Á¢ú ÅÆ¢ì ¸øÅ¢ìÌò Ш½ §À¡É¡÷. À¢ýÉ¡ø ¸Õ½¡¿¢¾¢Â¡Ã¢ý Ó¾ø «Ãº ¸¡Äõ Ũà ¾Á¢ú ÅÆ¢ì ¸øÅ¢ ¾Á¢ú¿¡ðÊø «Øó¾¢î ¦º¡øÄô À𧼠Åó¾Ð. ÀûÇ¢ô À¡¼í¸¨Çò (²ý ¸øæâô À¡¼í¸¨Çì ܼò) ¾Á¢Æ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ§¾ ºÃ¢ ±ýÚ ¦ÀÕõÀ¡§Ä¡÷ ¿¢¨Éò¾¡÷¸û. «¾ý Å¢¨ÇÅ¡¸, ±ØÀиǢý ¦¾¡¼ì¸ò¾¢ø ¸øæâô À¡¼í¸¨Ç ±ôÀÊò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀÐ ±ýÚ ÀÄÕõ §Àº¢ì ¦¸¡ñÊÕ󧾡õ. ¦ÀÕõ «È¢»÷¸û, ¦Á¡Æ¢Â¡Ç÷¸û, ¬º¢Ã¢Â÷¸û, Á¡½Å÷¸û ±øÄ¡õ «¾¢ø ®ÎÀð¼¡÷¸û; Àø§ÅÚ Ð¨È¸Ç¢ý ¸¨Ä¡ü¸û «ó¾ô ¦À¡Ø¾¢§Ä§Â ¯ÕÅ¡ì¸ô ÀðÎ Åó¾É. ¾Å¢Ã 65-ø þÕóÐ 72 Ũà ´Õ Ũ¸ þ¼Ðº¡Ã¢ô §À¡ìÌ þó¾¢Â ¿¡¦¼íÌõ ÀÃŢ¢Õó¾Ð. ÌÈ¢ôÀ¡¸ò ¾Á¢ú¿¡ðÊÖõ, §¸ÃÇõ, §ÁüÌ Åí¸õ, ¬ó¾¢Ãõ §À¡ýÈ Á¡¿¢Äí¸Ç¢ø þ¼Ð º¡Ã¢ ÁÉôÀ¡ý¨Á ±ýÀÐ º¢ÈôÀ¡¸ ¦ÅÇ¢ôÀð¼Ð. «ó¾ þ¼Ðº¡Ã¢ô §À¡ì¸¢üÌ ¾¡ö¦Á¡Æ¢ì ¸øÅ¢ ±ýÀÐ µ÷ «ÊôÀ¨¼ô ÒÄÉõ.

þý¨ÈìÌ ÌÓ¸¡Âõ ¦ÀâÐõ Á¡È¢Å¢ð¼Ð. þ¼Ð º¡Ã¢ô §À¡ìÌ Á¢¸×õ ̨ÈóÐÅ¢ð¼Ð. ±íÌ À¡÷ò¾¡Öõ À½õ, À½ò¾¢ü¸¡É Àâ¾Å¢ôÒ, ³õÒÄý Ѹ÷îº¢ì¦¸É «¨ÄÀξø ±ý§È Áì¸Ç¢ø ÀÄÕõ þÂíÌõ ¿¢¨Ä ²üÀðÎÅ¢ð¼Ð. §ÀáÂì ¸ðº¢Â¢ý ¿¡ðΠŢξ¨Ä ÀüȢ ¸ÕòÐì¸û, ¸¡ó¾¢Â Å¡¾õ, ¾¢Ã¡Å¢¼ Óý§ÉüÈì ¸Æ¸õ ¦¾¡¼ì¸ò¾¢ø ¦¸¡ñÎÅó¾ ¾Á¢ú ±Øô §À¡ìÌ ±øÄ¡õ þý¨ÈìÌì ¸¡Éø ¿£Ã¡ö ¬¸¢ Å¢ð¼É. 67-ø ¾¢.Ó.¸. ¦ÅüÈ¢¦ÀÈ ÀÄ þ¨Ç»÷¸û ¯¨Æò¾¦¾øÄ¡õ ´Õ ¸É× §À¡ø ¦¾Ã¢¸¢ÈÐ. þ¨Å¦ÂøÄ¡õ þó¾ ¿¡ðÊø ¾¡ý ¿¼ó¾ÉÅ¡ ±ýÚ þý¨ÈìÌ Å¢Âì¸î ¦ºö¾¡Öõ «¨Å¦ÂøÄ¡õ ¿¼ó¾Ð ¯ñ¨Á.

¦À¡ÐÅ¡¸ 70¸Ç¢ø ¾¡ý ¾Á¢ú¿¡ðÊø ÀÄÕõ ¯Â÷¿¢¨Äô ÀûÇ¢ «ÇÅ¢ø ÀÊì¸ò ¦¾¡¼í¸¢É¡÷¸û. þó¾ì ¸ð¼ò¾¢ø ¾¡ý, ¸øÅ¢ìÌì ¸¡Ááº÷ ±ýÈ ¦º¡ÄŨ¼Â¢ý ¬Æò¨¾ ¯½Ã×õ, §ÀáÂì ¸ðº¢Â¢ý Ó¾ø 20 ¬ñÎî ¦ºÂø¸Ç¢ý ÀÂ¨É Ñ¸Ã×õ ¦ºö¾É÷; (¬É¡ø þ¾ý ÀĨÉô ¦ÀüÈÅ÷¸û ¾¢Ã¡Å¢¼ì ¸ðº¢Â¢É÷.) ÀûǢ¢ھ¢ò §¾÷× ±ØЧš÷ ¦¾¡¨¸ ÜÊì ¦¸¡ñ§¼ §À¡ÉÐ. §Å¨Ä¸Ùì¸¡É §À¡ðÊÔõ ÜÊì ¦¸¡ñ§¼ §À¡ÉÐ. ¸øæâ¨Â ÓðΧš÷ ¦¾¡¨¸Ôõ ÜÊÂÐ. Áì¸û ¦¾¡¨¸ þô¦À¡ØÐ þÕìÌõ «Ç×ìÌ ±ñ½¢ì¨¸Â¢ü ¦ÀÕ¸¡Áø þÕó¾ §À¡Ð, ´Õ §Å¨ÄìÌ 3 §À÷ §À¡ðÊ ±ýÛõ ¿¢¨Ä¨Âì ÌÓ¸¡Âõ ¦ºÃ¢òÐì ¦¸¡ñ¼Ð. ¬É¡ø þý§È¡, ²¦¾¡ýÈ¢üÌõ 50 - Ä¢ÕóÐ 100 Á¼íÌ ¬ð¸û §À¡ðÊ¢θ¢È¡÷¸û. («¾¡ÅÐ ¦À¡ÕÇ¡¾¡Ã §Å¨Ä Å¡öôÒì¸û ܼŢø¨Ä. «ñ¨Áò §¾÷¾Ä¢Ö§Á §Å¨Ä¢øÄ¡ò ¾¢ñ¼¡ð¼õ ´Õ ¦ÀÕõ À¢ÈúÉ¡¸ô §ÀºôÀð¼Ð.)

þó¾ô §À¡ðʧ¡Π´Õ º¡¾¢Âô À¢ýɽ¢Ôõ °¼¡ÊÂÐ ¯ñÎ. 1970-¸Ç¢ø 3ø ´ÕÅÕìÌ §Å¨Ä ¸¢¨¼ò¾¡Öõ «¾¢ø «¾¢¸ Å¢Ø측ðÎ §Å¨Ä¸û §ÁÉ¢¨Äî º¡¾¢Â¢ÉÕ째 ¸¢¨¼ò¾É. À¢üÀ𧼡ÕìÌõ, ¾¡úò¾ôÀ𧼡ÕìÌõ ¸¢¨¼ò¾ §Å¨Ä Å¡öôÒì¸û ̨Èó§¾ þÕó¾É. þ¾ý Å¢¨ÇÅ¡¸ 70-¸Ç¢ý À¢üÀ¡¾¢Â¢ø À¢üÀ𧼡⨼§Â ±Ø ²üÀ¼ò ¦¾¡¼í¸¢ÂÐ. ±Ø¢ý Å¢¨Ç¨Å ¾¢.Ó.¸. ¬ÆÁ¡¸ ¯½÷ó¾Ð. À¢üÀ𧼡÷ ¬¾Ã× «Å÷¸ÙìÌì ̨ÈóÐÅÃò ¦¾¡¼í¸¢ÂÐ. «Å÷¸û ¸ðº¢ ¯¨¼ó¾Ð. þÕ§ÅÚ Àí¸¡Ç¢¸Ç¡ö þÃñÎ ¸ðº¢¸û ²üÀð¼É. þÃñÎ ¸ðº¢¸Ù§Á À¢üÀ𧼡âý ¬¾Ã¨Å ¿¡Îžü¸¡öô Àø§ÅÚ ÓÂüº¢¸Ç¢ø ®ÎÀð¼¡÷¸û. º¡¾¢Â ÅÆ¢ ¾É¢î§º÷쨸 (reservation) ±ýÀÐ ¦Àâ ¦¸¡û¨¸Â¡ö Á¡È¢ÂÐ. þ¾É¡ø À¢üÀÎò¾ô À𧼡÷ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö 80 ¸Ç¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø ¸½¢ºÁ¡¸ §Å¨Ä¦ÀÈò ¦¾¡¼í¸¢É¡÷¸û. ¬É¡ø ¾¡úò¾ô À𧼡÷ «§¾ ¦À¡ØÐ «ó¾ «Ç×ìÌ ¯ÂÃÅ¢ø¨Ä. 90¸Ç¢ý þÚ¾¢Â¢ø ¾¡ý ¾¡úò¾ôÀ¡ð§¼¡÷ ¾¡í¸û ÌÃ¨Ä µí¸¢ ±ØôÀ¢ì ¦¸¡ûÇò ¦¾¡¼í¸¢É¡÷¸û.

¾Å¢Ã ´Õ ¦À¡ÕÇ¢Âü ¸¡Ã½Óõ ܼ§Å þÕó¾Ð; 1970 ¸Ç¢ý À¢ýÀ¡¾¢¸Ç¢ø, §Å¨Ä Å¡öôÀ¢üÌô ÀÄÕõ §À¡ðÊ¢¼ò ¦¾¡¼í¸¢É¡÷¸û. §Å¨Ä§¾Î§Å¡÷ ±¾¢÷ôÀ¡÷ôÀ¢üÌ ®Î ¦¸¡ÎòРӾģθû ¾Á¢ú¿¡ðÊø ÅÇÃÅ¢ø¨Ä. ¿ÎÅñ «ÃÍ ¿¢ÚÅÉí¸Ç¢ý ӾģΠ¦¾ýÉ¢ó¾¢Â¡Å¢ø ¦ÀâÐõ ̨ÈóÐ §À¡ÉÐ. ¸¨¼º¢Â¡¸ò ¾Á¢ú¿¡ðÊø ¿ÎÅñ «Ãº¡ø ²üÀÎò¾ô Àð¼ ¦Àâ ӾģΠ¾¢ÕáôÀûǢ¢ø Åó¾ À¡Ã¾ Á¢ÌÁ¢ý ¿¢ÚÅɧÁ (BHEL). «¾üÌ «ôÒÈõ, ¿ÎÅñ «Ãº¢ý ӾģΠ¦Àâ «ÇÅ¢ø þó¾ Á¡¿¢Äò¾¢ø ²üÀ¼§Å þø¨Ä. (żìÌ ÅÇ÷¸¢ÈÐ; ¦¾üÌ §¾ö¸¢ÈÐ ±ýÈ ¦º¡ÄŨ¼ þ¾É¡ø ¾¡ý ¾Á¢ú¿¡ðÊø ÀÃÅÄ¡öô ÒÆí¸¢ÂÐ.) ¾Á¢ú¿¡ðÎ «Ãº¡Öõ ¦Àâ Ӿģθ¨Ç ¯ÕÅ¡ì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ¾Å¢Ãô ¦À¡Ðò ШȸǢÖõ, Á¢ýšâÂò¾¢Öõ §Å¨ÄìÌ ¬¦ÇÎôÀÐõ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ì ̨Èó¾Ð.

«ÃÍ ¿¢ÚÅÉí¸û §Å¨ÄìÌ ±Îô§À¡Ã¢ý ÀûÇ¢ô ÀÊôÒ ¬í¸¢Äò¾¢ø þÕó¾¢Õì¸ §ÅñÎõ ±ýÈ ±¾¢÷À¡÷ô¨Àì ¦¸¡ñÊÕì¸Å¢ø¨Ä. «ó¾ì ¸¡Äò¾¢ø ¦À¡ÕÇ¡¾¡Ã ÅÇ÷ Á¢¸×õ ̨ÈóÐ þÕó¾Ð. ¸¢¨¼ìÌõ §Å¨Ä¸Ùõ ±ñ½¢ì¨¸Â¢ø ̨Èó§¾ þÕó¾É. ÀûÇ¢ Ũà ¾Á¢Æ¢ø ÀÊòÐ À¢ý ¸øæâ¢ø ¬í¸¢Äò¾¢üÌ Á¡È¢ô ÀÊò¾Å÷¸Ùõ Á¢¸×õ ̨ÈóÐ þÕó¾¡÷¸û. ¬É¡ø Å¢Ø측ðÊø À¡÷ò¾¡ø ¸¢ð¼ò¾ð¼ ãýÈ¢ø ´ÕÀ̾¢Â¢ÉÕìÌ «Ã¨ºî º¡÷óÐ §Å¨Ä ¸¢¨¼ò¾Ð. [¸¡ð¼¡¸ «ý¨È ¿¢¨Ä¢ø ¸¢ð¼ò¾ð¼ 1500 ¦À¡È¢»÷¸§Ç ¾Á¢ú¿¡ðÊø þÕóÐ µù¦Å¡Õ ¬ñÎõ ¦ÅÇ¢§Â Åó¾¡÷¸û. «ÃÍ º¡÷ó¾ Шȸû, ¿¢ÚÅÉí¸Ç¢ø (ÌÈ¢ôÀ¡¸ ¦À¡ÐôÀ½¢ò ШÈ, ¿£÷ôÀ¡ºÉò ШÈ, §À¡ìÌÅÃòÐò ШÈ, Á¢ýšâÂõ, º¢Ä «ÃÍ ¿¢ÚÅÉí¸Ç¢ø) ÁðΧÁ 500/600 §ÀÕìÌ §Å¨Ä¸¢¨¼ò¾Ð. ÁüÈÅ÷¸û ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸Ç¢§Ä¡, ÁüÈ ¦º¡ó¾ò ¦¾¡Æ¢ø¸Ç¢§Ä¡ ¾í¸¨Ç ¿¢Úò¾¢ì ¦¸¡ñ¼¡÷¸û.]

þ¾É¡ø ¦ÀÕõÀ¡§Ä¡÷ §Å¨Äì¦¸É ¾É¢Â¡÷ ШȨ§ ¿¡¼ §ÅñÊ¢Õó¾Ð. ´ýÈ¢üÌ 20, 30 ±Éô §À¡ðÊ þÕìÌõ §À¡Ð, §À¡ðÊ §À¡ÎÀÅ÷¸Ç¢¼õ ¦ÀâÐõ ¾¢È¨Á §ÅÚÀ¡Î þøÄ¡¾ §À¡Ð, ²¾¡ÅÐ ´ý¨Èì ¸¡ðÊô §À¡ðÊ §À¡ÎÀÅ÷¸¨Ç §ÅÚÀÎò¾¢ì ¸¡ðÊ ¾¡í¸û ¦ºöÅÐ ºÃ¢¦ÂýÚ ¸¡ðÊì ¦¸¡ûžü¸¡öò ¾É¢Â¡÷ ШÈ¢É÷ ¬í¸¢ÄÅÆ¢ô ÀûÇ¢ôÀÊô¨À §¾÷Å¢ü¸¡É ¸¡Ã½¢Â¡öì ¦¸¡ûÇò ¦¾¡¼í¸¢É¡÷¸û. ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö §À¡ðÊ ¿ÎÅ¢ø, ÀûǢŨà ¾Á¢Æ¢ø ÀÊòÐ À¢ý ¸øæâ¢ø ¬í¸¢Ä ÅÆ¢ ÀÊò¾Å¨Ãì ¸¡ðÊÖõ, ³óÐ «¸¨Å¢ĢÕóÐ 21 «¸¨Å Ũà ¬í¸¢Äõ ÅÆ¢ô ÀÊò¾Å÷ §Áø ±ýÈ §À¡ì¨¸ò ¾É¢Â¡÷ ШÈ¢É÷ ¸¡ð¼ò ¦¾¡¼í¸¢É¡÷¸û. ¦Åû¨Çì ¸ØòÐ §Å¨Ä¸ÙìÌ ¬í¸¢Äõ §¾¨Å¦ÂýÈ º¢ó¾¨É ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡öì ¸º¢ó¾Ð. ¿£Äì ¸ØòÐ §Å¨Ä¸û þíÌ Ì¨ÈÅ¡¸ ²üÀ𼾡ø, ¾Á¢Æý ¦Åû¨Çì ¸ØòÐ §Å¨ÄìÌî º¢Èó¾Åý ±ýÈ ¾ÅÈ¡É ¸ÕòÐô ÀÃŢ ¿¢¨Ä¡ø (Á¡Ú¸¨¼Â¡ - marketing - ÀﺡÀ¢¨Â ±Î; ¿¢¾¢òШÈ¡ - ¾Á¢Æ¨É ±Î, þôÀÊ ´Õ À¡ò¾¢¸ðÎõ ÅÆì¸õ þó¾¢Â¡Å¢ø þýÚõ ¯ñÎ.), ÑÉ¢ ¿¡ìÌ ¬í¸¢Äò¾¢ø Å¢¨Ç¡ðÎì ¸¡ðÎõ §À¡ìÌ ¦ÅüÈ¢¸ÃÁ¡öò ¦¾¡¼í¸¢ÂÐ.

¦ºý¨É §À¡ýÈ ¿¸Ãí¸Ç¢ø ÁðΧÁ «ô¦À¡ØÐ þÕó¾ ÁÊį̀Æô (matriculation) ÀûǢ¡Ç÷¸û þ¨¾ò ¾¡í¸û Óý§ÉÈ ÅƢ¡¸ì ¦¸¡ñ¼¡÷¸û. ӾĢø ¸¢È¢ò¾Å Å¢¨¼äÆ¢Â÷ (Christian missionaries) ÀûÇ¢¸ÙìÌ ´Õ ¸¢Ã¡ì¸¢ ²üÀð¼Ð. À¢ýÉ÷ ¸¢È¢òÐŠŢ¨¼äÆ¢Â÷ ÀûÇ¢¸û §À¡Äì ¸¡ðÊì ¦¸¡ñ¼ §À¡Ä¢ô ÀûÇ¢¸û ±Øó¾É. ÀûÇ¢ô ÀÊôÒ ´Õ Àò¾¡ñθǢø ¦ÀÕõ Ž¢¸Á¡ö Á¡È¢üÚ ÁÊį̀Æô ÀûÇ¢¸Ç¢ø ÀÊò¾Å÷¸û ¾·Íô ҷͦÅýÚ ¬í¸¢Äõ §ÀÍÅÐõ, «¾É¡ø «Å÷¸ÙìÌ ¿¸Ã Å¡ú쨸¢ø ÓýÉ¢¨Ä ¦ÀÚÅÐõ ´Õ ¿Ç¢ÉÁ¡¸ì ÌÓ¸¡Âò¾¢ø §¾¡ýÈò ¦¾¡¼í¸¢ÂÐ. ¦Á¡ò¾ò¾¢ø þó¾ì ¸¡Éø ¿£¨Ã §¿¡ì¸¢ô ÀÊò¾ ¿Îò¾Ã ÅÕì¸õ µ¼ò ¦¾¡¼í¸¢ÂÐ. «Å¨Ãô À¡÷òÐ ²¨ÆÂÕõ ÀʦÂÎì¸ò ¦¾¡¼í¸¢É¡÷¸û. þý¨ÈìÌõ §Å¨Ä ±ýÀÐ ¬í¸¢ÄÅÆ¢ô ÀÊò¾¾¡ø ¸¢¨¼ôÀ¾¢ø¨Ä; ¡ÕìÌ Â¡¨Ãò ¦¾Ã¢Ôõ? ¡÷ ÀâóШà ¦ºöÅ¡÷¸û? - ±ýÀ¨Å§Â §Å¨Ä ¸¢¨¼ôÀ¾ü¸¡É «ÊôÀ¨¼. þ¾¢ø À¡¼¦Á¡Æ¢ ±ýÀÐ ´ôÒìÌî ¦º¡øÖõ ´Õ §ÀîÍ. ²¨Æ§Â¡, ¿Îò¾Ã ÅÕ츧Á¡ ±øÄ¡õ þ§¾ ¿¢¨Ä ¾¡ý. ¦Á¡Æ¢¨Â ¨ÅòÐò ¾¡ý §Å¨Ä ±ýÀÐ ¸¡¾¢ø â ÍüÚõ §Å¨Ä.

¾Á¢ú¿¡ðÎì ÌÓ¸¡Âò¾¢ø ¬í¸¢Ä ÅÆ¢ô ÀÊô¨Àô ÀüÈ¢ þôÀÊ ´Õ ÁÉôÀ¡ý¨Á §À¡Ä¢Â¡ö ±Øó¾Ð; þ¾üÌò ¾É¢Â¡÷ Ð¨È ¯ÚШ½Â¡ö þÕó¾¡÷¸û. (±ó¾ ´Õ ¿¢ÚÅÉò¾¢Öõ ±¾¢÷À¡÷ôÒ ±ýÀÐ ´ýÚ, ¿¼ôÒ ±ýÀÐ þý¦É¡ýÚ. ¾É¢Â¡÷ ¿¢ÚÅÉí¸Ç¢ø §Å¨Ä À¡÷ôÀÅ÷¸ÙìÌ ¿ýÈ¡¸§Å ¦¾Ã¢Ôõ; ÀûǢ¢ø ¬í¸¢Ä ÅÆ¢ô ÀÊò¾¾¡ø ±ó¾Å¢¾Á¡É ¿¢¨ÄôÀð¼ º¢ÈôÒõ þÃñ¼¡ÅÐ ãýÈ¡ÅÐ ¬ñÊø ÅÕž¢ø¨Ä. þó¾ ¬í¸¢Ä, ¾Á¢ú À¡¼ ¦Á¡Æ¢Â¢ø ÀÊò¾Å÷¸Ç¢ý §ÅÚÀ¡Î ±ýÀРӾġñÎ §Å¨Ä À¡÷ôÀ¢ø ´Õ º¢Ä §ÁÉ¢¨Ä¸¨Ç ¬í¸¢Ä ÅÆ¢ ÀÊò§¾¡ÕìÌ Óý§ÉüÈõ ±Éì ¦¸¡Îò¾¡Öõ, ¿¡Ç¡Åð¼ò¾¢ø ¿¢ÚÅÉòÐû §Å¨Äò¾¢Èý ±ýÀÐ ¦À⾡¸ô §ÀºôÀΧÁ ´Æ¢Â, «Å÷ ±ó¾ ¦Á¡Æ¢Â¢ø ÀÊò¾¡÷ ±ýÀ¾øÄ. þýÚõ ܼ ´Õ ¦À¡ÐÅ¡É ¦ºö¾¢¨Â ¾Á¢Æ¢§Ä¡, ¬í¸¢Äò¾¢§Ä¡ ´Õ Àì¸ò¾¢üÌ ¯ÕôÀÊ¡¸î ¦º¡ó¾Á¡ö ±Ø¾ò ¦¾Ã¢Â¡¾Å÷¸û 100ìÌ 95 §À÷ þÕ츢ýÈÉ÷. þ¾¢ø ¬í¸¢Ä ÅÆ¢ô ÀÊô¦ÀýÉ, ¾Á¢ú ÅÆ¢ô ÀÊô¦ÀýÉ? ±øÄ¡õ ´ýÚ¾¡ý. ̨Èô ÀÊôÒ ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾ À¢ýÉ¡ø. «¨¾ ±ó¾ ¦Á¡Æ¢ ÅƢ¡¸î ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¡÷¸û ±ýÈ §¸ûŢ¢ø ²üÈ¢î ¦º¡øÅÐ Ó¨ÈÂ¡É «ÏÌ Ó¨È «øÄ. þý¨ÈìÌõ ¾ÅÈ¡É «ÏÌ Ó¨È¢ø ¬í¸¢Ä ÅÆ¢ô ÀÊò¾ÅÕìÌ ÓýÛâ¨Á «Ç¢ì¸ô Àθ¢ÈÐ ±ýÀ§¾ ¯ñ¨Á. þó¾ «ÏÌ Ó¨È¨Âò ¾Å¦ÈýÚ ¦º¡øÄ «È¢Å¡Ç¢¸û, ¸øŢ¡Ç÷¸û, «Ãº¢ÂøÅ¡¾¢¸û, ÌÓ¸ò ¾¨ÄÅ÷¸û ¦À¡Ú¨Á§Â¡Î ¦º¡øÄ¢ Áì¸ÙìÌ Å¢Ç츢 «ÃÍ ¿¼ÅÊ쨸¸Ç¡ø Á¡üÈ §ÅñÎõ. «§¾ ¦À¡ØÐ ¬í¸¢Ä ¦Á¡Æ¢ÂÈ¢¨ÅÔõ, §ÀîÍò ¾¢È¨ÉÔõ, ±ØòÐò ¾¢È¨ÉÔõ ¿¡ý ̨ÈòÐ Á¾¢ôÀ¢¼Å¢ø¨Ä. ¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ±ýÀÐõ, ¬í¸¢Ä ¦Á¡Æ¢ «È¢× ±ýÀÐõ ÓÃñÀð¼¨Å «øÄ; «¨Å þÃñÎõ ´§Ã ¦À¡ØÐ ¯¼ý þÕì¸ì Üʨž¡ý. ¾Á¢ú¿¡ðÊø ÀÄÕõ ¦Á¡Æ¢ÂÈ¢¨ÅÔõ, À¡¼¦Á¡Æ¢ ±ýÀ¨¾Ôõ ÌÆôÀ¢ì ¦¸¡û¸¢È¡÷¸û ±ýÀÐ ±ý ¾¡ú¨ÁÂ¡É ±ñ½õ. ¿¡§É ±ò¾¨É§Â¡ §À¨Ã §Å¨ÄìÌ ±ÎôÀ¾¢ø ±í¸û ¿¢ÚÅÉò¾¢ø §¾÷×ì ÌØÅ¢ø ´Õ º¢Ä ¬ñθû þÕó¾¢Õì¸¢È Àð¼È¢Å¡ø ¦º¡øÖ¸¢§Èý.)

1967ìÌô À¢ýÉ¡ø §ÀáÂì ¸ðº¢¨Âì ÌÆ¢§¾¡ñÊ ¾Á¢ú¿¡ðÊø Ò¨¾ò¾ À¢ÈÌ, ¾¢Ã¡Å¢¼ì ¸ðº¢ ´ýÚ þÃñ¼¡¸¢ô Àí¸¡Ç¢î ºñ¨¼Â¢ø º¢ì¸¢ì ¦¸¡ñÎ, «Å÷¸ÙìÌû ±Øó¾ §À¡ðÊ¡ø, «§¾ ¦À¡ØÐ «ÃÍ «¾¢¸¡Ã¢¸Ç¢ý ÅÆ¢ ¸¡ðξĢø, «Ãº ¿¼ÅÊ쨸¸û ãÄõ ¾¡í¸Ùõ, ¾í¸û ¸ðº¢Ôõ À½õ ºõÀ¡Ã¢ì¸ ÓÊÔõ ±ýÈ ±ñ½õ ±Ø󾾡ø, ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ¾ðÎì ¦¸ðÎô §À¡Â¢üÚ. ¸ñ½¢ÃñÎõ Å¢üÚî º¢ò¾¢Ãõ Å¡í¸¢É÷. «ôÀÊ Å¡í¸¢Â º¢ò¾¢Ãí¸Ç¢ø ´ýÚ ¾¡ý ÁÊį̀Æô ÀûÇ¢¸û ¦ÀÕòÐô §À¡É ¿¢¨Ä. þò¾¨É ÁÊį̀Æô ÀûÇ¢¸û ±øÄ¡õ ¾¢Ã¡Å¢¼ì ¸ðº¢¸Ç¢ý «ÃÍì ¸¡Äò¾¢§Ä§Â ¯ÕšɨÅ. ¬¸, ¿õ ¸ñ¦½¾¢§Ã§Â ¸øÅ¢ò ШÈ¢ø ´Õ ¦Àâ ÀõÁ¡òÐ ¿¼ó¾Ð; «¾üÌò ¾¢Ã¡Å¢¼ò ¾¨ÄÅ÷¸û ÀÄÕõ Ш½Â¡ö þÕó¾É÷. ¾Á¢úÅÆ¢ì ¸øÅ¢ ¦¾¡¨Äó¾Ð ¾Á¢¨Æ §Á¨¼Â¢ø ÓÆ츢 ¾¨ÄÅ÷¸Ç¡ø ¾¡ý ±ýÀÐ ¿õ ¦¿ï¨º ̨Ä ¨ÅìÌõ µ÷ ¯ñ¨Á. ¦Á¡ò¾ò¾¢ø þÅ÷¸ÙìÌì ¦¸¡û¨¸ ±ýÀÐ «ýÈ¡¼õ Á¡üÚõ ¬¨¼Â¡Â¢üÚ. ¸ñ¦¸ð¼ À¢ÈÌ Ýâ Žì¸õ ±ýÀЧÀ¡ø ¦¾¡¨ÄóÐ §À¡É ¾Á¢úì ¸øÅ¢¨Â þô¦À¡ØÐ ¿¡¦ÁøÄ¡õ §¾Êì ¦¸¡ñÊÕ츢§È¡õ.

þ¾¢ø ´Õ ¾É¢ ÁÉ¢¾¨Ãô §À¡ðÎî º¡Êì ¦¸¡ñÊÕôÀ¾¢ø ÀÄÉ¢ø¨Ä. ÝìÌÁõ ÁÊį̀Æô ÀûÇ¢¸¨Çì ¸ðÎô ÀÎòО¢Öõ, ¸øÅ¢ò ¾¢ð¼ò¾¢Öõ þÕ츢ÈÐ. ¾Á¢ú ÅÆ¢ì¸øÅ¢¨Â °ðÊ ÅÇ÷ôÀÐ ¾Á¢ú¿¡ðÊø ¦¾¡Æ¢ø Ӿģθ¨Çì ÜðΞ¢ø ¯ûÇÐ; §Å¨Ä째üÈ ÀÊôÒ ±ýÀ¾¢ø ¯ûÇÐ; §Å¨Ä Å¡öôÒ츨Çì ÜðΞ¢ø ¯ûÇÐ; ¬í¸¢Ä ¦Á¡Æ¢ÂÈ¢¨Å ÅÇ÷ôÀ¾¢ø ¯ûÇÐ; «§¾ ¦À¡ØÐ ¾Á¢úÅÆ¢ô ÀÊôÒ ±ýÀ¨¾ô ¦ÀâÐõ ÀÃÅġ츢ò §¾¨ÅôÀð¼¡ø ¸ð¼¡ÂÁ¡ìÌž¢Öõ ¯ûÇÐ.

þýÛõ ±Ø¾¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. ¬É¡ø ÓÊ×È¡¾ ÒÄÉõ þÐ. ¯ÕôÀÊÂ¡É ¾¨ÄÅ÷¸û ¿ÁìÌ þø¨Ä; «¾É¡ø þó¾ô À¢ÈúÉ¢ø À¢ÈúóÐ ¸¢¼ì¸¢§È¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

À¢.Ì. þ¾ý ´Õ Àʨ þáÂ÷ ÌØõÀ¢üÌõ «ÛôÒ¸¢§Èý. «íÌõ þó¾ô ÒÄÉõ §ÀºôÀ¼ì ÜÎõ.

3 comments:

achimakan said...

ஐயா, தங்கள் அளவுக்கு இவ்வளவு விரிவாக சொல்லத் தெரியாவிட்டாலும் இதே போன்ற உணர்வுகளை கீழ்க்காணும் எனது பதிவில் வெளிப்படுத்தி உள்ளேன் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்:

http://achimakan.blogspot.com/2004/04/blog-post_23.html

இராம.கி said...

«ýÀ¢üÌ⠬Á¸ý,

¯í¸Ù¨¼Â «Õ¨ÁÂ¡É ¸ðΨè TSCII - ¢ø Á¡üÈ¢ ¾Á¢Øĸõ Á¼üÌØÅ¢üÌ «È¢Ó¸ô ÀÎòÐõ Ũ¸Â¢ø «ÛôÀ¢¨Åò§¾ý. «¾üÌ ¿øÄ ÅçÅüÒ þÕó¾Ð. ¯í¸û þΨ¸¸¨Çò ¦¾¡¼Õí¸û. «ùÅô§À¡Ð þó¾ô Àì¸Óõ Å¡Õí¸û.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

achimakan said...

மிக்க நன்றி ஐயா.