Thursday, June 17, 2004

எங்கோ எழுந்துவரும் தாழி

சுரித்து நுரைத்து விரித்துத் திரைத்து,
அரித்துக் காலடி கறளி - என்னை

முறித்துச் சமனைத் துலத்தி விழுத்தி,
மறித்துச் சவட்டும் அலைகள்; - கன்னச்

சிறக்கில் இழுத்து செவிட்டில் அறையும்
முறுக்கு வேக முயக்கு; - என்றன்

உடக்கின் வியர்வை உணக்கும் கசக்கில்
முடக்கும் குருணை நெரிப்பு; - தென்னங்

கிழக்கில் நிலைத்துச் சொடுக்கும் தாழில்
துளிக்கும் சூல்கள் இருந்தால் - நின்னைத்

தெரித்து இழுத்து சேர்த்தி அணைப்பேன்
விரிக்கும் மழையே, வா!வா!

அன்புடன்,
சோழிங்க நல்லூர் கடற்கரையில் இருந்து,
இராம.கி.

In TSCII:

ÍâòРѨÃòРŢâòÐò ¾¢¨ÃòÐ,
«Ã¢òÐì ¸¡ÄÊ ¸ÈÇ¢ - ±ý¨É

ÓÈ¢òÐî ºÁ¨Éò ÐÄò¾¢ Å¢Øò¾¢,
ÁÈ¢òÐî ºÅðÎõ «¨Ä¸û; - ¸ýÉî

º¢È츢ø þØòÐ ¦ºÅ¢ðÊø «¨ÈÔõ
ÓÚìÌ §Å¸ ÓÂìÌ; - ±ýÈý

¯¼ì¸¢ý Å¢Â÷¨Å ¯½ìÌõ ¸ºì¸¢ø
Ó¼ìÌõ ÌÕ¨½ ¦¿Ã¢ôÒ; - ¦¾ýÉí

¸¢Æ츢ø ¿¢¨ÄòÐî ¦º¡ÎìÌõ ¾¡Æ¢ø
ÐÇ¢ìÌõ Ýø¸û þÕó¾¡ø - ¿¢ý¨Éò

¦¾Ã¢òÐ þØòÐ §º÷ò¾¢ «¨½ô§Àý
ŢâìÌõ Á¨Æ§Â, Å¡!Å¡!

«ýÒ¼ý,
§º¡Æ¢í¸ ¿øæ÷ ¸¼ü¸¨Ã¢ø þÕóÐ,
þáÁ.¸¢.

No comments: