Tuesday, June 29, 2004

புறத்திட்டு நிதி - 4

ஒரு பொதினத்தில் முகன்மையான வருமானம் (main revenue) என்பது விற்பனையில் கிடைக்கும் வருமானமே (sales revenue). மற்ற பணப் பெருக்க(cash flow)மெல்லாம் கொளுதகை(cost), கொளுதகை - எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் கொளுதகையே.

வருமானத்திற்கும் கொளுதகைக்கும் இருக்கும் உள்ள மீதந் தான் பொதினத்தின் சம்பாதிப்பு வருமானம் (earned revenue).

பொதுவாக வரலாற்றுக் கொளுதகை (historical cost) என்பது நடந்து முடிந்தது; எனவே அது ஏற்கனவே இருந்த நேர்த்தித் திறனைப் (efficiency) பொருத்தது. மாறாக, முன்தேர்ந்த கொளுதகை (pre-determined cost) என்பது இனி வரப்போகும் செலவைக் குறிப்பது. இந்த இரண்டு கொளுதகைகள் தான் எந்தக் கொளுதகுத்தலிலும் (costing) பயன்படுகின்றன. இவற்றை வைத்தே, குறிப்பாக முன்தேர்ந்த கொளுதகைக்கும், உரியாய் நடந்த கொளுதகை(real actual cost)க்கும் இடையே உள்ள வேறுபாடுகளை(differences)த் தெரிந்து கட்டுப்படுத்துவதே பணப்பகுப்பு கட்டுறல் (budgetory control) என்று மானகைப் படிப்பில் (management studies) சொல்லப் படுகிறது. ஒரு பொதினத்தை மானகைப் படுத்துவது என்பது இந்த வேறுபாடுகளைக் களைப்பதும் குறைப்பதுமே ஆகும்.

ஒரு பொதினத்தின் அன்றாட நடப்பு என்பது இது போன்ற வழமையான கணக்கீட்டுப் பழக்கமே (conventional accounting practice). நேரியலான கணக்கீட்டுப் பருவம் (normal accounting period) என்பது ஓராண்டு. இதை இந்தியா போன்ற நாடுகளில் ஏப்ரலிலிருந்தே பெரும்பாலும் தொடங்குவார்கள். ஆண்டுக் கணக்கு என்பது மார்ச்சு 31-ல் முடியும். ஒரு பொதினம் பொலுவோடு நடக்கிறதா என்று அறிய ஆண்டு வருமானத்தை, அதுவரை போட்ட முதலீட்டோ டு ஒப்பிட்டுச் சொல்லுவது வழக்கம். ஆனால் அவ்வளவு எளிமையாகப் பார்ப்பது பல சிக்கல்களையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது; ஏனெனில் இந்தச் சொற்களை பலரும் பல மாதிரிப் புரிந்துகொள்ளுகிறார்கள்.

இப்பொழுது ஒவ்வொரு கொளுதகையையும் விவரமாய்ப் பார்ப்போம்.

இனி வரும் பத்திகளில் ஆண்டுக் கொளுதகைகளையும் வருமானங்களையும் A என்ற குறியீட்டால் அழைப்போம். விற்பனையால் வரும் ஆண்டு வருமானத்தை - Annual Sales - A(S) என்றும், ஆண்டின் மொத்தச் செலவை - Annual total expenditure - A(TE) என்றும் சொல்லுவோம். அப்பொழுது,

ஆண்டுப் பண வருமானம் - Annual Cash Income - A(CI) = A(S) - A(TE) -----சமன் (5)

இந்த வருமானத்திற்கு அரசாங்கம் இடும் வருமான வரி - Income Tax A(IT) - யை இதிலிருந்து கழிக்க, ஆண்டு நிகரப் பண வருமானம் - Annual net cash income - கிடைக்கும்.

ஆண்டு நிகரப் பண வருமானம் A(NCI) = A(CI) - A(IT) -----சமன் (6)

அரசாங்க வருமான வரி என்பது வரிபோடக் கூடிய வருமானம் - taxable income - என்பதில் இருந்து கணக்குப் போட்டுக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. இதற்காக, ஆண்டுப் பண வருமானத்தில் இருந்து தேய்மானக் கொள்ளுகை - depreciation charge A(D) - யையும், வேறு உள்ளேறுகை - Allowance A(A) -களையும் கழித்து வருவதையே வரிபோடக் கூடிய வருமானம் (taxable income) என்று சொல்லுகிறோம். இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை வருமான வரி - income tax "t" - என்று சொல்லுவோம். இந்தியாவில் இது 35% ஆகும். எனவே,

ஆண்டு வருமான வரி - Annual Income Tax A(IT) = [A(CI) - A(D) - A(A)]*t -----சமன் (7)

மேலே உள்ள சமன் பாட்டில் t என்பது பின்ன வரிவீதத்தைக் (fractional tax rate) குறிக்கும். இங்கே வரி எவ்வளவு என்று கணிப்பதை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறேன். உண்மையில் அது ஒவ்வொரு நாட்டிலும் விதிமுறைகளுக்குத் தகுந்தாற் போல் பெரிதும் பலக்கியதாய் (complex) இருக்கும். பலுக்குமைக்குள் (complexity) ஆழ்ந்து நாம் சொல்லவந்த செய்தி முழுகிப் போகக் கூடாது என்று எளிமையோடே இங்கு நின்று கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ÒÈò¾¢ðÎ ¿¢¾¢ - 4

´Õ ¦À¡¾¢Éò¾¢ø Ó¸ý¨ÁÂ¡É ÅÕÁ¡Éõ (main revenue) ±ýÀРŢüÀ¨É¢ø ¸¢¨¼ìÌõ ÅÕÁ¡É§Á (sales revenue). ÁüÈ À½ô ¦ÀÕì¸(cash flow)¦ÁøÄ¡õ ¦¸¡Ù¾¨¸(cost), ¦¸¡Ù¾¨¸ - ±íÌõ ¿£ì¸ÁÈ ¿¢¨ÈóÐ ¿¢üÌõ ¦¸¡Ù¾¨¸§Â.

ÅÕÁ¡Éò¾¢üÌõ ¦¸¡Ù¾¨¸ìÌõ þÕìÌõ ¯ûÇ Á£¾ó ¾¡ý ¦À¡¾¢Éò¾¢ý ºõÀ¡¾¢ôÒ ÅÕÁ¡Éõ (earned revenue).

¦À¡ÐÅ¡¸ ÅÃÄ¡üÚì ¦¸¡Ù¾¨¸ (historical cost) ±ýÀÐ ¿¼óÐ ÓÊó¾Ð; ±É§Å «Ð ²ü¸É§Å þÕó¾ §¿÷ò¾¢ò ¾¢È¨Éô (efficiency) ¦À¡Õò¾Ð. Á¡È¡¸, Óý§¾÷ó¾ ¦¸¡Ù¾¨¸ (pre-determined cost) ±ýÀÐ þÉ¢ ÅÃô§À¡Ìõ ¦ºÄ¨Åì ÌÈ¢ôÀÐ. þó¾ þÃñÎ ¦¸¡Ù¾¨¸¸û ¾¡ý ±ó¾ì ¦¸¡Ù¾Ìò¾Ä¢Öõ (costing) ÀÂýÀθ¢ýÈÉ. þÅü¨È ¨Åò§¾, ÌÈ¢ôÀ¡¸ Óý§¾÷ó¾ ¦¸¡Ù¾¨¸ìÌõ, ¯Ã¢Â¡ö ¿¼ó¾ ¦¸¡Ù¾¨¸(real actual cost)ìÌõ þ¨¼§Â ¯ûÇ §ÅÚÀ¡Î¸¨Ç(differences)ò ¦¾Ã¢óÐ ¸ðÎôÀÎòÐŧ¾ À½ôÀÌôÒ ¸ðÎÈø (budgetory control) ±ýÚ Á¡É¨¸ô ÀÊôÀ¢ø (management studies) ¦º¡øÄô Àθ¢ÈÐ. ´Õ ¦À¡¾¢Éò¨¾ Á¡É¨¸ô ÀÎòÐÅÐ ±ýÀÐ þó¾ §ÅÚÀ¡Î¸¨Çì ¸¨ÇôÀÐõ ̨ÈôÀЧÁ ¬Ìõ.

´Õ ¦À¡¾¢Éò¾¢ý «ýÈ¡¼ ¿¼ôÒ ±ýÀÐ þÐ §À¡ýÈ ÅƨÁÂ¡É ¸½ì¸£ðÎô ÀÆ츧Á (conventional accounting practice). §¿Ã¢ÂÄ¡É ¸½ì¸£ðÎô ÀÕÅõ (normal accounting period) ±ýÀÐ µÃ¡ñÎ. þ¨¾ þó¾¢Â¡ §À¡ýÈ ¿¡Î¸Ç¢ø ²ôÃĢĢÕó§¾ ¦ÀÕõÀ¡Öõ ¦¾¡¼íÌÅ¡÷¸û. ¬ñÎì ¸½ìÌ ±ýÀÐ Á¡÷îÍ 31-ø ÓÊÔõ. ´Õ ¦À¡¾¢Éõ ¦À¡Ö§Å¡Î ¿¼ì¸¢È¾¡ ±ýÚ «È¢Â ¬ñÎ ÅÕÁ¡Éò¨¾, «ÐŨà §À¡ð¼ Ӿģ𧼡Π´ôÀ¢ðÎî ¦º¡øÖÅÐ ÅÆì¸õ. ¬É¡ø «ùÅÇ× ±Ç¢¨Á¡¸ô À¡÷ôÀÐ ÀÄ º¢ì¸ø¸¨ÇÔõ, ÌÆôÀò¨¾Ôõ ¯ÕÅ¡ì̸¢ÈÐ; ²¦ÉÉ¢ø þó¾î ¦º¡ü¸¨Ç ÀÄÕõ ÀÄ Á¡¾¢Ã¢ô ÒâóЦ¸¡ûÙ¸¢È¡÷¸û.

þô¦À¡ØÐ ´ù¦Å¡Õ ¦¸¡Ù¾¨¸¨ÂÔõ Å¢ÅÃÁ¡öô À¡÷ô§À¡õ.

þÉ¢ ÅÕõ Àò¾¢¸Ç¢ø ¬ñÎì ¦¸¡Ù¾¨¸¸¨ÇÔõ ÅÕÁ¡Éí¸¨ÇÔõ A ±ýÈ ÌȢ£ð¼¡ø «¨Æô§À¡õ. Å¢üÀ¨É¡ø ÅÕõ ¬ñÎ ÅÕÁ¡Éò¨¾ - Annual Sales - A(S) ±ýÚõ, ¬ñÊý ¦Á¡ò¾î ¦ºÄ¨Å - Annual total expenditure - A(TE) ±ýÚõ ¦º¡ø֧šõ. «ô¦À¡ØÐ,

¬ñÎô À½ ÅÕÁ¡Éõ - Annual Cash Income - A(CI) = A(S) - A(TE) -----ºÁý (5)

þó¾ ÅÕÁ¡Éò¾¢üÌ «Ãº¡í¸õ þÎõ ÅÕÁ¡É Åâ - Income Tax A(IT) - ¨Â þ¾¢Ä¢ÕóÐ ¸Æ¢ì¸, ¬ñÎ ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éõ - Annual net cash income - ¸¢¨¼ìÌõ.

¬ñÎ ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éõ A(NCI) = A(CI) - A(IT) -----ºÁý (6)

«Ãº¡í¸ ÅÕÁ¡É Åâ ±ýÀÐ Åâ§À¡¼ì ÜÊ ÅÕÁ¡Éõ - taxable income - ±ýÀ¾¢ø þÕóÐ ¸½ìÌô §À¡ðÎì ¸ñÎÀ¢Êì¸ §ÅñÊ ´ýÚ. þ¾ü¸¡¸, ¬ñÎô À½ ÅÕÁ¡Éò¾¢ø þÕóÐ §¾öÁ¡Éì ¦¸¡ûÙ¨¸ - depreciation charge A(D) - ¨ÂÔõ, §ÅÚ ¯û§ÇÚ¨¸ - Allowance A(A) -¸¨ÇÔõ ¸Æ¢òÐ ÅÕŨ¾§Â Åâ§À¡¼ì ÜÊ ÅÕÁ¡Éõ (taxable income) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þ¾¢ø ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ Å¢Ø측𨼠ÅÕÁ¡É Åâ - income tax "t" - ±ýÚ ¦º¡ø֧šõ. þó¾¢Â¡Å¢ø þÐ 35% ¬Ìõ. ±É§Å,

¬ñÎ ÅÕÁ¡É Åâ - Annual Income Tax A(IT) = [A(CI) - A(D) - A(A)]*t -----ºÁý (7)

§Á§Ä ¯ûÇ ºÁý À¡ðÊø t ±ýÀÐ À¢ýÉ Åâţ¾ò¨¾ì (fractional tax rate) ÌÈ¢ìÌõ. þí§¸ Åâ ±ùÅÇ× ±ýÚ ¸½¢ôÀ¨¾ Á¢¸ ±Ç¢¨Á¡¸î ¦º¡øĢ¢Õ츢§Èý. ¯ñ¨Á¢ø «Ð ´ù¦Å¡Õ ¿¡ðÊÖõ Å¢¾¢Ó¨È¸ÙìÌò ¾Ìó¾¡ü §À¡ø ¦ÀâÐõ ÀÄ츢¾¡ö (complex) þÕìÌõ. ÀÖį̀ÁìÌû (complexity) ¬úóÐ ¿¡õ ¦º¡øÄÅó¾ ¦ºö¾¢ Óظ¢ô §À¡¸ì ܼ¡Ð ±ýÚ ±Ç¢¨Á§Â¡§¼ þíÌ ¿¢ýÚ ¦¸¡ûÙ¸¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

chemical process என்பதற்கு வினை என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறீர்கள். அப்போது reactionக்கு என்ன சொல்வீர்கள் ? process control என்பதைச் செயலாக்கக் கட்டுப்பாடு என்று கூறலாம் என்று எண்ணினேன். அதை விட வினைக் கட்டுப்பாடு பொருத்தமானதா ? நீங்களும் ஒரு வேதிப்பொறியியலாளர் என்றறிந்தும் சிறப்பான தமிழ்ப் பதங்களைத் தருவதை அறிந்தும் உங்களிடம் இவற்றைப் பற்றி விவாதித்து அறிந்து கொள்ள எண்ணுகிறேன்.

Complexity என்பதற்கு ஒரு இடத்தில் பலக்குமை என்றும் வேறிடத்தில் பலுக்குமை என்றும் சொல்லி இருக்கிறீர்கள். எழுத்துப் பிழையா ? இரண்டு வடிவமும் சரியா ? இதன் வேர் என்னவென்று புரிபடவில்லை.

ரகர எழுத்துக்களில் சொற்களை ஆரம்பிக்கக் கூடாது என்கிற விதி ஏன் இருக்கிறது என்பதற்குச் சரியான விளக்கம் இல்லை என்று இனி அதனைக் கடைப் பிடிப்பதில்லை என்று சில காலம் முன் எண்ணினேன். எனது பெயர் முன்னெழுத்துக் கூட இரா. என்பதில் இருந்து ரா. என்றே இனிப் பாவிக்கலாம் எனவும் நினைத்தேன். நீங்களோ ரூபாய் என்பதைக் கூட உருபாய் என்று எழுதுகிறீர்கள். ஏன் ? இந்த விதிக்குச் சரியான காரணம், இன்னும் ஏன் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும் பதில் கூறுவீர்களா ?

நன்றி.

இராம.கி said...

«ýÒ¨¼Â£÷,

Í½í¸¢ ÁÚ¦Á¡Æ¢ôÀ¾üÌô ¦À¡ÚòÐì ¦¸¡ûÙí¸û. ÁüÈ §Å¨Ä¸Ç¢ø ¬úóÐÅ¢ð§¼ý.

¾í¸Ù¨¼Â ÓýÉ¢¨¸(comment)ìÌ ¿ýÈ¢. ¦À¡ÐÅ¡¸ ¦º¡üÀ¢ÈôÒ, þ¨½î¦º¡ü¸û, ¾Á¢ú ÁÃÒ §À¡ýȨŠÀ¡÷ò§¾ ¦º¡ü¸¨Çô ÀâóШÃôÀÐ ±ý ÅÆì¸õ. ¿¡ý ±Ø¾¢ ÅÕõ ¸ðΨø¨Ç Á¼üÌØì¸Ç¢Öõ ±ý ŨÄôÀ¾¢Å¢Öõ ÀÊòÐÅó¾¡ø «Ð ÒÄôÀÎõ. §Á§Ä process ±ýÈ ¦º¡øÖìÌ Å¢¨É ±ýÚ ±Ø¾¢ÂÐ ´Õ Ũ¸Â¢ø §Áõ§À¡ì¸¡É§¾. ÐøÄ¢ÂÁ¡¸(accurate)î ¦º¡øÄ §ÅñΦÁýÈ¡ø «¨¾î ¦ºÖò¾õ ±ý§È ¦º¡øÄ §ÅñÎõ. ±ý ŨÄôÀ¾¢Å¢ø þÉ¢ò ¾¢Õò¾¢ì ¦¸¡û§Åý.

to proceed - ¦ºøÖ¾ø;
procedure = ¦ºÂøÓ¨È
process = ¦ºÖò¾õ (¦ºÖòоø ±ýÀÐ À¢ÈÅ¢¨É; ¦ºøÖ¾ø ±ýÀÐ ¾ýÅ¢¨É. ¿£í¸û Å¢ÕõÀ¢Â µÃ¢Ä츢üÌ ´ý¨È ¿¼ò¾¢î ¦ºøÅÐ ¦ºÖò¾õ ±ýÚ ¦º¡øÄô ÀÎõ. «Ð Å¢Äí̸¨Ç§Â¡, Á¡ó¾¨Ã§Â¡, ¯Â¢ÃüȨŨ§¡, ±¨¾î ¦ºÖò¾¢É¡ø «Ð ¦ºÖò¾§Á. ¦ºÖò¾ø ±ýÀÐõ ¦ºöò¾ø>¦ºö¾ø ±ýÀÐõ ¦¾¡¼÷À¡É¨Å.)
chemical process - §Å¾¢î ¦ºÖò¾õ;
physical process - â¾¢î ¦ºÖò¾õ.
(§Å¾¢Å¢¨É, ⾢Ţ¨É ±ýȾ¢ø ¦À¡Õû Å¢ÇíÌõ ±ýÈ¡Öõ «¨Å ÐøÄ¢Âõ þøÄ¡¾¨Å§Â.)
process engineering = ¦ºÖò¾ô ¦À¡È¢Â¢Âø
process engineer = ¦ºÖò¾ô ¦À¡È¢»÷
reaction = (±¾¢÷)Å¢¨É; ±¾¢÷ «øÄÐ ÁÚ ±ýÈ Óý¦É¡ð¨¼ ¦ÀÕõÀ¡Öõ ¾Á¢Æ¢ø ¾Å¢÷òÐŢΧšõ.
process control = ¦ºÖò¾ì ¸ðÎÚò¾ø. ¸ðÎìÌû þÕì¸ ¨Åò¾§Ä ¸ðÎÚò¾ø ±ýÚ ¬Ìõ.
control engineering = ¸ðÎÚòÐô ¦À¡È¢Â¢Âø

complexity ±ýÀ¾üÌ ÀÄį̀Á ±ýÀ§¾ ºÃ¢; ÀÖį̀Á ±ýÚ ±Ø¾¢ÂÐ «Åì¸Ãò¾¢ø ¯ÕÅ¡É ¾ð¼îÍô À¢¨Æ. ÁýÉ¢Ôí¸û. ±Ç¢¨Á¡ö þøÄ¡Áø, ÀÄ츢ÂÐ, Àĸ¢ì ¸¢¼ôÀÐ, ÀÄÅ¡¸¢ì ¸¢¼ôÀÐ, ÀÄÅ¢¾Á¡ö °ÎÚÅ¢ô À¢ýÉ¢ì ¸¢¼ôÀÐ complexity (= many sidedness). Àø ±ýÀ§¾ þó¾î ¦º¡øÄ¢ý §Å÷; ¬í¸¢Äî ¦º¡øÄ¢ý ¦º¡üÀ¢Èô¨Àì Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø ¦º¡øÄ¢ý ¦À¡Õû ÒâÔõ.

¾Á¢Æ¢ø øà Ӿü ¦º¡ü¸û ¸¢¨¼Â¡. Ã, á Å¢ø ¦¾¡¼íÌžü¦¸øÄ¡õ þ¸Ãõ §À¡ðÎ ±Ø¾¡Áø, «ó¾ó¾î ¦º¡ü¸Ç¢ý ¦º¡üÀ¢ÈôÒ ±ýÉ ±ýÚ «È¢óÐ ±Ø¾§ÅñÎõ. ¸¡ð¼¡öò ¾Á¢Æ¢ø «¸Ãò¾¢ø ¦¾¡¼íÌõ ¦º¡ø «Ãò¾õ; þРż¦Á¡Æ¢ìÌô §À¡ö Ãò¾õ ±ýÚ ¬Ìõ; ¿¡õ Á£ñÎõ «¨¾ò ¾Á¢Æ¡ìÌž¡ö ±ñ½¢ì ¦¸¡ñÎ þÃò¾õ ±ýÚ ±ØÐÅÐ ºÃ¢ÂøÄ; ÀÄÕõ «ôÀÊî ¦ºö¸¢È¡÷¸û. «§¾ §À¡Ä «Ãí¸¿¡¾ý>Ãí¸¿¡¾ý>þÃí¸¿¡¾ý ±ýÚ ¬ÅÐõ ¾ÅÚ.

þ§¾ §À¡Äò ¾¡ý ¯ÕÅ¡ö ±ýÈ ¦º¡ø¨ÄÔõ À¡÷ì¸ §ÅñÎõ. ¯ÕÅõ «îºÊòÐ ¦ÅǢ¢¼ô ÀΞ¡ø þó¾ ¿¡½Âí¸û ¯ÕÅ¡ö>¯ÕÀ¡ö ±ÉôÀð¼É. (¯ÕÅõ ±ýÈ ¾Á¢úî ¦º¡ø ż¦Á¡Æ¢Â¢ø åÀõ ±ýÚ ¬Ìõ.) «¾É¡ø ¯ÕÅ¡¨Â þåÀ¡ö ±ýÚ ±ØÐÅÐ ¾ÅÚ.

þó¾ øà Ӿø ż¦Á¡Æ¢ò §¾¡üÈî ¦º¡ü¸û ÀÄÅüÈ¢Öõ ¯û§Ç ¦À¡¾¢óÐ ¸¢¼ìÌõ ¯ÕôÀÊÂ¡É ¾Á¢úî ¦º¡ü¸¨Ç «È¢óÐ ±ØÐÅÐ ¿øÄÐ. þó¾î ¦º¡ü¸û ÀÄÅü¨ÈÔõ ŢâòÐ ±Ø¾ §¿Ãõ ÀüÈ¡¾¾É¡ø, ¾Å¢÷츢§Èý.

¾Á¢ú þÄ츽 ÅÆ¢, ¦Á¡Æ¢Ó¾ø ÅÕõ ±ØòÐì¸û ´Õ º¢Ä ÁðÎõ þÕóÐ ÁüȨŠ«øÄ¡Ð §À¡ÉÐ ²ý ±ýÈ §¸ûÅ¢ ¦Á¡Æ¢Â¢ÂÄ¢ý «ÊôÀ¨¼ì §¸ûÅ¢; «¨¾ Å¢Çì¸ô §À¡É¡ø ŢâÔõ. ¦À¡ÐÅ¡ö þÐ §À¡ýÈ Å¢¾¢¸û ¦Á¡Æ¢¨Â ŨÃÂ¨È ¦ºöÀ¨Å ±ýÚ ¦¸¡ûÙÅÐ ¿øÄÐ. ¸¡ø Àó¾¡ð¼ò¾¢ø ²ý 11 §À÷ Å¢¨Ç¡θ¢È¡÷¸û ±ýÀÐ §À¡ýÈ §¸ûÅ¢¸ÙìÌ Å¢¨¼ ¦º¡øÄÄ¡õ; ¬É¡ø «Ð ŨÃÂ¨È ¦À¡Úò¾ ÒÄÉõ ±ýÀ¾¡ø ¡Õõ ²üÚì ¦¸¡ûÙÅÐ §À¡ø Å¢¨¼ ¦º¡øÖÅÐ ¸ÊÉõ.

¦Á¡ò¾ò¾¢ø «ó¾ó¾ ¦Á¡Æ¢¸Ç¢ý þÂø§À «¨Å ±ýÚ ¦¸¡ûÇ §ÅñÊÂÐ ¾¡ý.

¿õ¨Áô §À¡ýÈÅ÷¸û µÃÇ× Å¼¦Á¡Æ¢î ¦º¡ü¸¨ÇÔõ, «ñ¨Á¢ø «ÇÅ¢üÌ Á£È¢ ¬í¸¢Äî ¦º¡ü¸¨ÇÔõ ÒÆí¸¢ò ¾ÎÁ¡È¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ. «Åü¨Èò ¾Å¢÷òÐ ¿øÄ ¾Á¢ú¿¨¼¨Âô ÀÆ̧šõ; «Ð ´ýÚõ ºÃÅÄ¡É ¦ºÂø «øÄ; ±Ç¢¾¡É§¾; ¦ºöžüÌ ÁÉõ §ÅñÎõ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Anonymous said...

I must congratulate with you Krishnan because of this wonderful blog! It's really full of informations! Maybe you could be interested in having a look to my internet site that includes informations about scommesse ... if you are interested in scommesse it's the right place for you!

Anonymous said...

அன்புடையீர்,

சுணங்கி மறுமொழிப்பதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். மற்ற வேலைகளில் ஆழ்ந்துவிட்டேன்.

தங்களுடைய முன்னிகை(comment)க்கு நன்றி. பொதுவாக சொற்பிறப்பு, இணைச்சொற்கள், தமிழ் மரபு போன்றவை பார்த்தே சொற்களைப் பரிந்துரைப்பது என் வழக்கம். நான் எழுதி வரும் கட்டுரைகளை மடற்குழுக்களிலும் என் வலைப்பதிவிலும் படித்துவந்தால் அது புலப்படும். மேலே process என்ற சொல்லுக்கு வினை என்று எழுதியது ஒரு வகையில் மேம்போக்கானதே. துல்லியமாக(accurate)ச் சொல்ல வேண்டுமென்றால் அதைச் செலுத்தம் என்றே சொல்ல வேண்டும். என் வலைப்பதிவில் இனித் திருத்திக் கொள்வேன்.

to proceed - செல்லுதல்;
procedure = செயல்முறை
process = செலுத்தம் (செலுத்துதல் என்பது பிறவினை; செல்லுதல் என்பது தன்வினை. நீங்கள் விரும்பிய ஓரிலக்கிற்கு ஒன்றை நடத்திச் செல்வது செலுத்தம் என்று சொல்லப் படும். அது விலங்குகளையோ, மாந்தரையோ, உயிரற்றவையையோ, எதைச் செலுத்தினால் அது செலுத்தமே. செலுத்தல் என்பதும் செய்த்தல்>செய்தல் என்பதும் தொடர்பானவை.)
chemical process - வேதிச் செலுத்தம்;
physical process - பூதிச் செலுத்தம்.
(வேதிவினை, பூதிவினை என்றதில் பொருள் விளங்கும் என்றாலும் அவை துல்லியம் இல்லாதவையே.)
process engineering = செலுத்தப் பொறியியல்
process engineer = செலுத்தப் பொறிஞர்
reaction = (எதிர்)வினை; எதிர் அல்லது மறு என்ற முன்னொட்டை பெரும்பாலும் தமிழில் தவிர்த்துவிடுவோம்.
process control = செலுத்தக் கட்டுறுத்தல். கட்டுக்குள் இருக்க வைத்தலே கட்டுறுத்தல் என்று ஆகும்.
control engineering = கட்டுறுத்துப் பொறியியல்

complexity என்பதற்கு பலக்குமை என்பதே சரி; பலுக்குமை என்று எழுதியது அவக்கரத்தில் உருவான தட்டச்சுப் பிழை. மன்னியுங்கள். எளிமையாய் இல்லாமல், பலக்கியது, பலகிக் கிடப்பது, பலவாகிக் கிடப்பது, பலவிதமாய் ஊடுறுவிப் பின்னிக் கிடப்பது complexity (= many sidedness). பல் என்பதே இந்தச் சொல்லின் வேர்; ஆங்கிலச் சொல்லின் சொற்பிறப்பைக் கூர்ந்து கவனித்தால் சொல்லின் பொருள் புரியும்.

தமிழில் ரகர முதற் சொற்கள் கிடையா. ர, ரா வில் தொடங்குவதற்கெல்லாம் இகரம் போட்டு எழுதாமல், அந்தந்தச் சொற்களின் சொற்பிறப்பு என்ன என்று அறிந்து எழுதவேண்டும். காட்டாய்த் தமிழில் அகரத்தில் தொடங்கும் சொல் அரத்தம்; இது வடமொழிக்குப் போய் ரத்தம் என்று ஆகும்; நாம் மீண்டும் அதைத் தமிழாக்குவதாய் எண்ணிக் கொண்டு இரத்தம் என்று எழுதுவது சரியல்ல; பலரும் அப்படிச் செய்கிறார்கள். அதே போல அரங்கநாதன்>ரங்கநாதன்>இரங்கநாதன் என்று ஆவதும் தவறு.

இதே போலத் தான் உருவாய் என்ற சொல்லையும் பார்க்க வேண்டும். உருவம் அச்சடித்து வெளியிடப் படுவதால் இந்த நாணயங்கள் உருவாய்>உருபாய் எனப்பட்டன. (உருவம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் ரூபம் என்று ஆகும்.) அதனால் உருவாயை இரூபாய் என்று எழுதுவது தவறு.

இந்த ரகர முதல் வடமொழித் தோற்றச் சொற்கள் பலவற்றிலும் உள்ளே பொதிந்து கிடக்கும் உருப்படியான தமிழ்ச் சொற்களை அறிந்து எழுதுவது நல்லது. இந்தச் சொற்கள் பலவற்றையும் விரித்து எழுத நேரம் பற்றாததனால், தவிர்க்கிறேன்.

தமிழ் இலக்கண வழி, மொழிமுதல் வரும் எழுத்துக்கள் ஒரு சில மட்டும் இருந்து மற்றவை அல்லாது போனது ஏன் என்ற கேள்வி மொழியியலின் அடிப்படைக் கேள்வி; அதை விளக்கப் போனால் விரியும். பொதுவாய் இது போன்ற விதிகள் மொழியை வரையறை செய்பவை என்று கொள்ளுவது நல்லது. கால் பந்தாட்டத்தில் ஏன் 11 பேர் விளையாடுகிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லலாம்; ஆனால் அது வரையறை பொறுத்த புலனம் என்பதால் யாரும் ஏற்றுக் கொள்ளுவது போல் விடை சொல்லுவது கடினம்.

மொத்தத்தில் அந்தந்த மொழிகளின் இயல்பே அவை என்று கொள்ள வேண்டியது தான்.

நம்மைப் போன்றவர்கள் ஓரளவு வடமொழிச் சொற்களையும், அண்மையில் அளவிற்கு மீறி ஆங்கிலச் சொற்களையும் புழங்கித் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். அவற்றைத் தவிர்த்து நல்ல தமிழ்நடையைப் பழகுவோம்; அது ஒன்றும் சரவலான செயல் அல்ல; எளிதானதே; செய்வதற்கு மனம் வேண்டும்.