Thursday, June 24, 2004

புறத்திட்டு நிதி - 3

புறத்திட்டு நிதி பற்றித் தெரிந்து கொள்ள விழையும் நாம், அடுத்து "புதுக்கம் (production) என்றால் என்ன? புதுக்கத்தை செய்யுமுன் புதுக்கச் செய்முறை மற்றும் கட்டுமானத்தை (production process and construction) உருவாக்கும் புறத்திட்டு (project) என்றால் என்ன?" என்று பார்க்க வேண்டும்.

மாந்த வரலாற்றில் ஆறுகள் என்பவை விளைச்சலுக்கும், வணிகத்திற்கும், துணையாய் இருந்திருக்கின்றன. ஆற்றின் கரைகளில் கால்வாய் வெட்டி நீர்பாய்ச்சி, கூலங்களை விதைத்துப் பெருக்கி புதுக்கங்களைக் கூட்டி [புதுக்குவதே production எனப் பட்டது. புதுநெல்லில் பொங்கலிடுகிறோமே, அது புதுக்கத்தைக் கொண்டாடும் விழா தான். இந்தப் புதுக்கத்தை விளைப்பு/விளைச்சல் என்று சொல்லுவதும் உண்டு. மேலைநாடுகளிலும் வேளாண்மையில் இருந்தே தொழில் பற்றிய எல்லாச் சொற்களும் கிளர்ந்தன. ஒவ்வொரு புதுக்கும் (product) புதியது என்ற பொருளதே.]

ஆற்றின் கரைகள் திட்டுக்களாய் இருப்பதால் அங்கு படகுகள் அணைய முடிகிறது. ஆற்றின் நடுவிலும் சில திட்டுக்கள் இருக்கலாம். இந்தத் திட்டுக்களில் தான் கட்டுமானங்கள் ஏற்பட்டன. [திட்டுக்களுக்கு விளை என்ற பெயரும் உண்டு. தென்பாண்டி மண்டலத்தில் விளை என்று முடியும் மேட்டு நில ஊர்கள் பேர்பெற்றவை. பட்டிகள் பள்ளமானவை; விளைகள் மேடானவை. விளைகளில் ஆடியது விளையாட்டு.] வெளியே, புறத்தே நீட்டிக் கொண்டு இருக்கும் திட்டு புறத்திட்டு (project). அதனுடைய பொருள் நீட்சியாக எந்தப் புலத்திலும் வெளியே முன்வந்து தெரிகின்ற கட்டுமானங்கள், கட்டவேண்டிய கட்டுமானங்கள் எல்லாமே புறத்திட்டு என்று ஆயின. (இன்றைக்கு ஈழத்தில் இருக்கும் தலைமன்னார் துறைமுகம் மாதிட்டை/மாதிட்டம் (வழக்கில் மருவி மாதோட்டம்) என்றே அன்று சொல்லப் பட்டது; நாகபட்டினத்திலும் ஒரு திட்டை இருந்தது. திட்டையின் சொற்பிறப்பு பற்றியே ஒரு பெரிய கட்டுரை எழுதலாம்.) ஒவ்வொரு புறத்திட்டும், மாந்த வளர்ச்சிக்கு ஓர் அடையாளம். மாந்த வாழ்க்கை என்னும் ஆற்றில் இவையெல்லாம் நாம் அடைகின்ற துறைகள்.

இனிப் புதுக்கம் (production) என்பது தொழில் முறைப் படி என்ன என்று பார்ப்போமா?

ஓரு சில இயல் பொருட்களை (raw materials) வாங்கி, அவற்றைப் பல பூதிக வினை(physical process)களுக்கும் வேதியல் வினை(chemical process)களுக்கும் உட்படுத்தி, பின் அவற்றை நுகர்த்தி (consume), புதிய பொருட்களை விளைத்து, புதுக்குகிறோம். இந்தப் புதுக்கத்தின் போது மிகுந்த ஆற்றல் தேவைப் படுகிறது; கூடவே இன்னும் சில பொருட்களும் ஆற்றலை வினைகளின் ஊடே கொண்டு செல்லும் ஊடுழைகள் (utilities) ஆகின்றன.

இந்த வினைகளை எல்லாம் ஒருகாலத்தில் முற்றிலும் மாந்தப் படுத்தி, அதாவது மானுறுத்தி (manufacture)ச் செய்தாலும், இந்தக் காலத்தில் மானுறுத்தல் என்பது முற்றிலும் மாந்தச் செயல்முறையாய் இருப்பதில்லை; மாந்த உழைப்போடு, புதுக்கம் செய்யும் போது, பூதிக, வேதியல் வினைகளைச் செய்யச் செய்கலன்களும் (equipments), எந்திரங்களும் (machineries) நமக்குத் தேவைப் படுகின்றன. இந்தச் செய்கலன்களும், எந்திரங்களும் ஒரு தடவை பயன்படுத்தியபின் தூக்கி எறியக் கூடியவை அல்ல. திரும்பத் திரும்ப பலமுறை புதுக்கத்திற்குப் பயன்படக் கூடியவை. வேண்டுமானால், இடைவிடாத பயன்பாட்டில் இந்த எந்திரங்களும் செய்கலன்களும் சிறிதளவு தேய்மானம் அடையலாம். எனவே சுருக்கமாகச் சொன்னால், எந்த ஒரு புதுக்கத்திற்கும் தேவையானவை:

1. செய்கலன்கள் + எந்திரங்கள்
2. இயல்பொருட்கள்
3. ஊடுழைகள்
4. ஆற்றல்
5. இத்தனையும் நடத்திக் காட்ட மாந்த உழைப்பு
6. மாந்த உழைப்பை ஒழுங்கு படுத்த மானகைச் செயல்கள்

வெறும் தேய்மானம் மட்டுமே அடைந்து புதுக்கத்திற்குப் பயன்படும் வகையில் "நிலையுற்று இருக்கும்" காரணத்தால் செய்கலன்களையும், எந்திரங்களையும் நிலைத்த முதல் (fixed capital) என்று சொல்லுவதுண்டு. அதே பொழுது விளைபொருட்களை உருவாக்குவதில் நுகரப்படும் இயல் பொருட்கள், ஊடுழைகள், செலவுறும் ஆற்றல் போன்றவற்றை வேறுகொளும் முதல் (variabale capital) என்று சொல்லுவதுண்டு.

மானுறுத்து (manufacture) என்ற சொல் புதுக்கம் என்ற செயல்முறைக்கு மாற்றுச் சொல்லாகவே பல இடத்தும் பயன்படுத்தப் பெறுகிறது. மானுறுத்தப் பட்ட ஒவ்வொரு புதுக்கும் தன் நுகர்வுக்காக இருப்பது அல்ல; அது விற்பனைக்கெனவே உருவாக்கப் படுகிறது. ஒவ்வொரு புதுக்கிற்கும், எண்ணளவு (quantity) என்பதும் புதுக்கின் விலை அல்லது பகர்ச்சி (price) என்பதும் மானுறுத்தலில் முகமையானவை. எண்ணளவையோடு பகர்ச்சியைப் பெருக்கி விறபனைத் தொகை எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளுகிறோம். இந்தப் புதுக்கைச் செய்ய எவ்வளவு செலவாயிற்று (இயல்பொருட்கள், ஊடுழைகள், ஆற்றல், மாந்த உழைப்பு, மேற்பார்வை (supervision), இன்னும் மற்ற செலவுகள்) என்று கொள்ளுவது கொளுதகை (கொள்ளுவதற்கு எவ்வளவு தகும்?) - cost - என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கொளுதகையை அடக்கம் என்றும் சிலர் சொல்லுவதுண்டு. cost price என்பதை அடக்க விலை என்பார்கள். துல்லியம் கருதி கொளுதகை என்ற சொல்லை இங்கு பயில்கிறேன்.

ஒரு பொதினத்தை (business) நடத்துவது என்பதே விற்பனைத் தொகைக்கும் கொளுதகைத் தொகைக்கும் இடையில் உள்ள மீதத் தொகையை எப்படிக் கூட்டிக் கொண்டுவருவது என்று பொருள் கொள்ளப் படுகிறது. இந்த மீந்த தொகைக்கு இணையாக நம்மூர்க் கல்வெட்டுகளில் பொலுவு என்ற ஒரு நல்ல சொல் சொல்லப் படுகிறது. வெறுமே வெளிமொழிச் சொல்லான இலாபம் என்ற சொல்லைப் புழங்கிக் கொண்டு இருக்காமல் பழைய தமிழ்ச் சொல்லைப் புதிதாய்ப் புழங்க விடுவோம் என்று இந்தக் கட்டுரை முழுதும் பொலுவு என்ற சொல்லையே profit என்பதற்கு இணையாய்ப் புழங்க முற்படுகிறேன். (இதே போலப் பொலிசை என்ற சொல் வட்டி என்பதற்கு மற்றொரு சொல்லாய்க் கல்வெட்டுக்களில் புழங்கியிருக்கிறது.)

இனி கணக்கின் கூறுகளுக்குப் போகலாம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ÒÈò¾¢ðÎ ¿¢¾¢ - 3

ÒÈò¾¢ðÎ ¿¢¾¢ ÀüÈ¢ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ Å¢¨ÆÔõ ¿¡õ, «ÎòÐ "ÒÐì¸õ (production) ±ýÈ¡ø ±ýÉ? ÒÐì¸ò¨¾ ¦ºöÔÓý ÒÐì¸î ¦ºöÓ¨È ÁüÚõ ¸ðÎÁ¡Éò¨¾ (production process and construction) ¯ÕÅ¡ìÌõ ÒÈò¾¢ðÎ (project) ±ýÈ¡ø ±ýÉ?" ±ýÚ À¡÷ì¸ §ÅñÎõ.

Á¡ó¾ ÅÃÄ¡üÈ¢ø ¬Ú¸û ±ýÀ¨Å Å¢¨ÇîºÖìÌõ, Ž¢¸ò¾¢üÌõ, Ш½Â¡ö þÕó¾¢Õ츢ýÈÉ. ¬üÈ¢ý ¸¨Ã¸Ç¢ø ¸¡øÅ¡ö ¦ÅðÊ ¿£÷À¡ö, ÜÄí¸¨Ç Å¢¨¾òÐô ¦ÀÕ츢 ÒÐì¸í¸¨Çì ÜðÊ [ÒÐìÌŧ¾ production ±Éô Àð¼Ð. ÒЦ¿øÄ¢ø ¦À¡í¸Ä¢Î¸¢§È¡§Á, «Ð ÒÐì¸ò¨¾ì ¦¸¡ñ¼¡Îõ Ţơ ¾¡ý. þó¾ô ÒÐì¸ò¨¾ Å¢¨ÇôÒ/Å¢¨Çîºø ±ýÚ ¦º¡øÖÅÐõ ¯ñÎ. §Á¨Ä¿¡Î¸Ç¢Öõ §ÅÇ¡ñ¨Á¢ø þÕó§¾ ¦¾¡Æ¢ø ÀüȢ ±øÄ¡î ¦º¡ü¸Ùõ ¸¢Ç÷ó¾É. ´ù¦Å¡Õ ÒÐìÌõ (product) Ò¾¢ÂÐ ±ýÈ ¦À¡Õǧ¾.]

¬üÈ¢ý ¸¨Ã¸û ¾¢ðÎì¸Ç¡ö þÕôÀ¾¡ø «íÌ À¼Ì¸û «¨½Â Óʸ¢ÈÐ. ¬üÈ¢ý ¿ÎÅ¢Öõ º¢Ä ¾¢ðÎì¸û þÕì¸Ä¡õ. þó¾ò ¾¢ðÎì¸Ç¢ø ¾¡ý ¸ðÎÁ¡Éí¸û ²üÀð¼É. [¾¢ðÎì¸ÙìÌ Å¢¨Ç ±ýÈ ¦ÀÂÕõ ¯ñÎ. ¦¾ýÀ¡ñÊ Áñ¼Äò¾¢ø Å¢¨Ç ±ýÚ ÓÊÔõ §ÁðÎ ¿¢Ä °÷¸û §À÷¦ÀüȨÅ. Àðʸû ÀûÇÁ¡É¨Å; Å¢¨Ç¸û §Á¼¡É¨Å. Å¢¨Ç¸Ç¢ø ¬ÊÂРŢ¨Ç¡ðÎ.] ¦ÅÇ¢§Â, ÒÈò§¾ ¿£ðÊì ¦¸¡ñÎ þÕìÌõ ¾¢ðÎ ÒÈò¾¢ðÎ (project). «¾Û¨¼Â ¦À¡Õû ¿£ðº¢Â¡¸ ±ó¾ô ÒÄò¾¢Öõ ¦ÅÇ¢§Â ÓýÅóÐ ¦¾Ã¢¸¢ýÈ ¸ðÎÁ¡Éí¸û, ¸ð¼§ÅñÊ ¸ðÎÁ¡Éí¸û ±øÄ¡§Á ÒÈò¾¢ðÎ ±ýÚ ¬Â¢É. (þý¨ÈìÌ ®Æò¾¢ø þÕìÌõ ¾¨ÄÁýÉ¡÷ ШÈÓ¸õ Á¡¾¢ð¨¼/Á¡¾¢ð¼õ (ÅÆ츢ø ÁÕÅ¢ Á¡§¾¡ð¼õ) ±ý§È «ýÚ ¦º¡øÄô Àð¼Ð; ¿¡¸ÀðÊÉò¾¢Öõ ´Õ ¾¢ð¨¼ þÕó¾Ð. ¾¢ð¨¼Â¢ý ¦º¡üÀ¢ÈôÒ ÀüÈ¢§Â ´Õ ¦Àâ ¸ðΨà ±Ø¾Ä¡õ.) ´ù¦Å¡Õ ÒÈò¾¢ðÎõ, Á¡ó¾ ÅÇ÷ìÌ µ÷ «¨¼Â¡Çõ. Á¡ó¾ Å¡ú쨸 ±ýÛõ ¬üÈ¢ø þ¨Å¦ÂøÄ¡õ ¿¡õ «¨¼¸¢ýÈ Ð¨È¸û.

þÉ¢ô ÒÐì¸õ (production) ±ýÀÐ ¦¾¡Æ¢ø Ó¨Èô ÀÊ ±ýÉ ±ýÚ À¡÷ô§À¡Á¡?

µÕ º¢Ä þÂø ¦À¡Õð¸¨Ç (raw materials) Å¡í¸¢, «Åü¨Èô ÀÄ â¾¢¸ Å¢¨É(physical process)¸ÙìÌõ §Å¾¢Âø Å¢¨É(chemical process)¸ÙìÌõ ¯ðÀÎò¾¢, À¢ý «Åü¨È Ѹ÷ò¾¢ (consume), Ò¾¢Â ¦À¡Õð¸¨Ç Å¢¨ÇòÐ, ÒÐì̸¢§È¡õ. þó¾ô ÒÐì¸ò¾¢ý §À¡Ð Á¢Ìó¾ ¬üÈø §¾¨Åô Àθ¢ÈÐ; ܼ§Å þýÛõ º¢Ä ¦À¡Õð¸Ùõ ¬üÈ¨Ä Å¢¨É¸Ç¢ý °§¼ ¦¸¡ñÎ ¦ºøÖõ °Î¨Æ¸û (utilities) ¬¸¢ýÈÉ.

þó¾ Å¢¨É¸¨Ç ±øÄ¡õ ´Õ¸¡Äò¾¢ø ÓüÈ¢Öõ Á¡ó¾ô ÀÎò¾¢, «¾¡ÅÐ Á¡ÛÚò¾¢ (manufacture)î ¦ºö¾¡Öõ, þó¾ì ¸¡Äò¾¢ø Á¡ÛÚò¾ø ±ýÀÐ ÓüÈ¢Öõ Á¡ó¾î ¦ºÂøӨȡö þÕôÀ¾¢ø¨Ä; Á¡ó¾ ¯¨Æô§À¡Î, ÒÐì¸õ ¦ºöÔõ §À¡Ð, â¾¢¸, §Å¾¢Âø Å¢¨É¸¨Çî ¦ºöÂî ¦ºö¸Äý¸Ùõ (equipments), ±ó¾¢Ãí¸Ùõ (machineries) ¿ÁìÌò §¾¨Åô Àθ¢ýÈÉ. þó¾î ¦ºö¸Äý¸Ùõ, ±ó¾¢Ãí¸Ùõ ´Õ ¾¼¨Å ÀÂýÀÎò¾¢ÂÀ¢ý à츢 ±È¢Âì ÜʨŠ«øÄ. ¾¢ÕõÀò ¾¢ÕõÀ ÀÄÓ¨È ÒÐì¸ò¾¢üÌô ÀÂýÀ¼ì ÜʨÅ. §ÅñÎÁ¡É¡ø, þ¨¼Å¢¼¡¾ ÀÂýÀ¡ðÊø þó¾ ±ó¾¢Ãí¸Ùõ ¦ºö¸Äý¸Ùõ º¢È¢¾Ç× §¾öÁ¡Éõ «¨¼ÂÄ¡õ. ±É§Å ÍÕì¸Á¡¸î ¦º¡ýÉ¡ø, ±ó¾ ´Õ ÒÐì¸ò¾¢üÌõ §¾¨Å¡ɨÅ:

1. ¦ºö¸Äý¸û + ±ó¾¢Ãí¸û
2. þÂø¦À¡Õð¸û
3. °Î¨Æ¸û
4. ¬üÈø
5. þò¾¨ÉÔõ ¿¼ò¾¢ì ¸¡ð¼ Á¡ó¾ ¯¨ÆôÒ
6. Á¡ó¾ ¯¨Æô¨À ´ØíÌ ÀÎò¾ Á¡É¨¸î ¦ºÂø¸û

¦ÅÚõ §¾öÁ¡Éõ ÁðΧÁ «¨¼óÐ ÒÐì¸ò¾¢üÌô ÀÂýÀÎõ Ũ¸Â¢ø "¿¢¨ÄÔüÚ þÕìÌõ" ¸¡Ã½ò¾¡ø ¦ºö¸Äý¸¨ÇÔõ, ±ó¾¢Ãí¸¨ÇÔõ ¿¢¨Äò¾ Ó¾ø (fixed capital) ±ýÚ ¦º¡øÖÅÐñÎ. «§¾ ¦À¡ØРިǦÀ¡Õð¸¨Ç ¯ÕÅ¡ìÌž¢ø ѸÃôÀÎõ þÂø ¦À¡Õð¸û, °Î¨Æ¸û, ¦ºÄ×Úõ ¬üÈø §À¡ýÈÅü¨È §ÅÚ¦¸¡Ùõ Ó¾ø (variabale capital) ±ýÚ ¦º¡øÖÅÐñÎ.

Á¡ÛÚòÐ (manufacture) ±ýÈ ¦º¡ø ÒÐì¸õ ±ýÈ ¦ºÂøÓ¨ÈìÌ Á¡üÚî ¦º¡øÄ¡¸§Å ÀÄ þ¼òÐõ ÀÂýÀÎò¾ô ¦ÀÚ¸¢ÈÐ. Á¡ÛÚò¾ô Àð¼ ´ù¦Å¡Õ ÒÐìÌõ ¾ý Ѹ÷×측¸ þÕôÀÐ «øÄ; «Ð Å¢üÀ¨É즸ɧŠ¯ÕÅ¡ì¸ô Àθ¢ÈÐ. ´ù¦Å¡Õ ÒÐ츢üÌõ, ±ñ½Ç× (quantity) ±ýÀÐõ ÒÐ츢ý Å¢¨Ä «øÄÐ À¸÷ (price) ±ýÀÐõ Á¡ÛÚò¾Ä¢ø Ó¸¨Á¡ɨÅ. ±ñ½Ç¨Å§Â¡Î À¸÷¨Âô ¦ÀÕ츢 Å¢ÈÀ¨Éò ¦¾¡¨¸ ±ùÅÇ× ±ýÚ ¸½ì¸¢ðÎì ¦¸¡ûÙ¸¢§È¡õ. þó¾ô ÒÐì¨¸î ¦ºö ±ùÅÇ× ¦ºÄš¢üÚ (þÂø¦À¡Õð¸û, °Î¨Æ¸û, ¬üÈø, Á¡ó¾ ¯¨ÆôÒ, §ÁüÀ¡÷¨Å (supervision), þýÛõ ÁüÈ ¦ºÄ׸û) ±ýÚ ¦¸¡ûÙÅÐ ¦¸¡Ù¾¨¸ (¦¸¡ûÙžüÌ ±ùÅÇ× ¾Ìõ?) - cost - ±ýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. þó¾ì ¦¸¡Ù¾¨¸¨Â «¼ì¸õ ±ýÚõ º¢Ä÷ ¦º¡øÖÅÐñÎ. cost price ±ýÀ¨¾ «¼ì¸ Å¢¨Ä ±ýÀ¡÷¸û. ÐøÄ¢Âõ ¸Õ¾¢ ¦¸¡Ù¾¨¸ ±ýÈ ¦º¡ø¨Ä þíÌ À¢ø¸¢§Èý.

´Õ ¦À¡¾¢Éò¨¾ (business) ¿¼òÐÅÐ ±ýÀ§¾ Å¢üÀ¨Éò ¦¾¡¨¸ìÌõ ¦¸¡Ù¾¨¸ò ¦¾¡¨¸ìÌõ þ¨¼Â¢ø ¯ûÇ Á£¾ò ¦¾¡¨¸¨Â ±ôÀÊì ÜðÊì ¦¸¡ñÎÅÕÅÐ ±ýÚ ¦À¡Õû ¦¸¡ûÇô Àθ¢ÈÐ. þó¾ Á£ó¾ ¦¾¡¨¸ìÌ þ¨½Â¡¸ ¿õã÷ì ¸ø¦ÅðθǢø ¦À¡Ö× ±ýÈ ´Õ ¿øÄ ¦º¡ø ¦º¡øÄô Àθ¢ÈÐ. ¦ÅÚ§Á ¦ÅÇ¢¦Á¡Æ¢î ¦º¡øÄ¡É þÄ¡Àõ ±ýÈ ¦º¡ø¨Äô ÒÆí¸¢ì ¦¸¡ñÎ þÕ측Áø À¨Æ ¾Á¢úî ¦º¡ø¨Äô Ò¾¢¾¡öô ÒÆí¸ Å¢Î§Å¡õ ±ýÚ þó¾ì ¸ðΨà ÓØÐõ ¦À¡Ö× ±ýÈ ¦º¡ø¨Ä§Â profit ±ýÀ¾üÌ þ¨½Â¡öô ÒÆí¸ ÓüÀθ¢§Èý. (þ§¾ §À¡Äô ¦À¡Ä¢¨º ±ýÈ ¦º¡ø ÅðÊ ±ýÀ¾üÌ Áü¦È¡Õ ¦º¡øÄ¡öì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÒÆí¸¢Â¢Õ츢ÈÐ.)

þÉ¢ ¸½ì¸¢ý ÜÚ¸ÙìÌô §À¡¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: