Sunday, June 20, 2004

மகப்பேற்று உறுதி

மகப்பேற்று உறுதி

சிலநாள் எதிலுமோர் சிந்தனைச் சலிப்பு;
எழுதத் தொடங்கும் போதெலாம் ஏனோ,
பாதியில் நின்று நகரவே மறுக்குது;
மீதியை முடிக்கச் சண்டியம் பண்ணுது;
ஏனிது மறுகல்? எங்குதான் தொய்வு?
நானினி எழுத்தில் இடைவெளி விடவோ?
நாளுறு புலனம் மாற்றியும் பார்க்கவோ?
மீளுறு பார்வை யாளனாய் இருப்பமா?
உம்மெனும் எனக்குள் ஊற்றுகள் வரும்வரை
சும்மா இருப்பதே சுகமெனக் கொள்வமா?
முந்தி முன்னியும் முனையறுந் ததனால்
சிந்தனைத் தபுத்தல் செறிவதே நெறியோ?

அடச்சே, மனமே! ஆழவே தூங்குக,
காலையில் எழுந்தே பணிசெயல் வேண்டும்;
கொஞ்சம் எழுதிய கட்டுரை முடித்து
அஞ்சலை மடற்குழுக்(கு) அனுப்பவும் வேண்டும்;
நாளை மறுநாள் நிறுவனத் திற்கென
நேர்பரத் தீட்டைச் சரிசெயல் வேண்டும்.
மகப்பேறு மனையில் உறவினர் பார்த்து
பேர்த்தி பிறந்ததை வாழ்த்தவே வேண்டும்;

இன்னொரு நாள்வரும் எப்பவும் போலவே,
சிந்தனை ஆய்வைத் அப்பவே தொடரலாம்.

அன்புடன்,
இராம.கி.

பரத்தீடு = presentation

Á¸ô§ÀüÚ ¯Ú¾¢

º¢Ä¿¡û ±¾¢Ö§Á¡÷ º¢ó¾¨Éî ºÄ¢ôÒ;
±Ø¾ò ¦¾¡¼íÌõ §À¡¦¾Ä¡õ ²§É¡,
À¡¾¢Â¢ø ¿¢ýÚ ¿¸Ã§Å ÁÚìÌÐ;
Á£¾¢¨Â ÓÊì¸î ºñÊÂõ ÀñÏÐ;
²É¢Ð ÁÚ¸ø? ±í̾¡ý ¦¾¡ö×?
¿¡É¢É¢ ±Øò¾¢ø þ¨¼¦ÅÇ¢ Å¢¼§Å¡?
¿¡ÙÚ ÒÄÉõ Á¡üÈ¢Ôõ À¡÷츧š?
Á£ÙÚ À¡÷¨Å ¡ÇÉ¡ö þÕôÀÁ¡?
¯õ¦ÁÛõ ±ÉìÌû °üÚ¸û ÅÕõŨÃ
ÍõÁ¡ þÕôÀ§¾ ͸¦ÁÉì ¦¸¡ûÅÁ¡?
Óó¾¢ ÓýÉ¢Ôõ Ó¨ÉÂÚó ¾¾É¡ø
º¢ó¾¨Éò ¾Òò¾ø ¦ºÈ¢Å§¾ ¦¿È¢§Â¡?

«¼î§º, ÁɧÁ! ¬Æ§Å àí̸,
¸¡¨Ä¢ø ±Øó§¾ À½¢¦ºÂø §ÅñÎõ;
¦¸¡ïºõ ±Ø¾¢Â ¸ðΨà ÓÊòÐ
«ïº¨Ä Á¼üÌØì(Ì) «ÛôÀ×õ §ÅñÎõ;
¿¡¨Ç ÁÚ¿¡û ¿¢ÚÅÉò ¾¢ü¦¸É
§¿÷ÀÃò ¾£ð¨¼î ºÃ¢¦ºÂø §ÅñÎõ.
Á¸ô§ÀÚ Á¨É¢ø ¯ÈÅ¢É÷ À¡÷òÐ
§À÷ò¾¢ À¢È󾨾 Å¡úò¾§Å §ÅñÎõ;

þý¦É¡Õ ¿¡ûÅÕõ ±ôÀ×õ §À¡Ä§Å,
º¢ó¾¨É ¬ö¨Åò «ôÀ§Å ¦¾¡¼ÃÄ¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

ÀÃò¾£Î = presentation

No comments: