Monday, June 07, 2004

அரபு நுழைவு

சவுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் போய்வந்து கொண்டிருந்த போது எழுதியது:

அரபு நுழைவு

ஓடு களத்தில் வானெழு பறனை(1)
ஒத்திடும் போதே, எனக்குள் கற்பனை!
"கூடொரு கைப்பை மடிக்கணி தானே;
கூறரை மணியில் வெளியே றிடலாம்"
-------------------------------------------
பாலத் தோடு பறனை அணைய,
பரபரப் பேறி, பைகளை இடுக்கி,
வேலைக் கெனவே விரைகிற கூட்டம்
விலகும் கதவில் முந்துறத் துடிக்கும்.

வான்புகற்(2) கட்டிடம் கீழ்த்தலம் வந்தால்
வரிசை மூன்று குடிப்புகல்(3) நாடி;
மூம்பைக் கூட்டமே முடியா நிலையில்
சென்னைப் பெருக்கம் நானூற் றைம்பது;

வரிசை; குழப்பம்; வாய்மொழி ஏவல்;
வந்தவர் குழறும் இந்திய மொழிகள்;
புரிசைக் காவலன் மிரட்டும் தோரணை;
பொத்தகம், படிவம் புரியா மொழியில்;

ஒட்டகம் ஓட்டிய சட்டாம் பிள்ளையன்
முட்டாமல் பின்னே முறுவலா செய்வான்?
அவனுக்கு எல்லாமே மந்தைகள் தானே?
அதட்டலும் கத்தலும் சரளமாய் வந்தன!

"ஆங்கே ஈங்கே ஃகூனாக்(4) ஃகேனா(5)
ஆய்! ஓய்!" என்றே அதியிடும் காரம்;
"நாங்களா உங்களை எம்மூர் அழைத்தோம்?"
நமுட்டுச் சிரிப்பு; முகத்தினில் ஏளனம்;

வீரமும், தீரமும், வியலகப் பேச்சும்,
ஆடி, ஒடுங்கி, அடுத்தவன் புகலில்,
பாரதப் புதல்வர் பைய நகர்ந்தார்;
பட்டயர்(6) ஏளனம் பார்த்தால் முடியுமோ?

முணுக்கெனக் கோவம் மூள்பவர் கூட,
முப்ப தாயிரம் முகவர்(7)க் களித்து,
தனக்கு நுழைமதி(8) கொண்டதை நிலைக்க,
முணக லோடு முன்நகர் காட்சி

பாம்பணை ஏணிப் பரம்பத வரிசை;
பதட்டம்; கையில் கடப்புகற்(9) பொத்தகம்;
நோன்பும் வேண்டலும் அமைதியும் பார்த்து,
நுழைமதி ஒப்பி, பொளியிட(10)ச் செய்மோ?

பொளியைப் பெற்றபின், சுங்கம்(11) நுழைந்தால்,
பொட்டலம் பிய்த்து, பொருட்கள் சிதைத்து,
வெளியே எடுத்து, விரவிப் போட்டு,
மருந்தை(12)த் தேடும், மற்றொரு அரபி

ஓரா யிரத்தில் ஒருவனைத் தேடி
ஓய்ந்ததால், வந்தவர் உடமையைக் குலைத்து,
வாரா தீரெனச் சொல்வதும் கலைதான்!
வருகெனச் சொல்ல, முறுவலா வேண்டும்?

வெந்து கொதித்துச் சுண்ணாம் பாகி,
வெளியே உடைமைத் தரதர விழுத்தும்,
நெஞ்சம் பொறுமை நிறைந்த தமிழன்!!
நினைவெல் லாமே வெள்ளி(13)க் கணக்கு!!!

பின்னே,

வந்த இடத்தில் வாய்தடு மாறி
வையப் போனால், வீட்டில் உறவோர்
சொந்த நிலைமை தொங்கி விடாதோ?
கொள்க பொறுமை! இன்னும் பொறுமை!

இத்தகைக் காட்சி என்முனே எழுந்தும்,
"எனக்குமா சோதனை?" என்ற மதர்ப்பில்
சிற்றதி காரி அனுமதி பெற்று
செல்கிறேன் பின்னே கூக்குரல் எழுந்தது!

"யாரது அங்கே? எப்படிச் சென்றான்?
சுங்கம் கடக்க அத்தனை விரசோ?
இளையவன் அனுமதித் தூக்கிக் கடாசு
பின்னே போய்நில்! அப்புறம் பார்ப்போம்"

என்றொரு பேரதி காரியின் வன்மம்;
இனியொரு இரண்டு அரைமணி நேரம்
ஆண்டவா! என்றேன் வரிசையில் நின்றேன்
"அத்தனை சோதனை இனிக் கொளல் ஆமோ?

படுத்தும் அரபியில் இனி நுழை வேனோ?
பாழும் வேலைக்கு நான்பணி வேனோ?"
பிடித்தொரு உறுதி கொண்டது எப்படி?
பிள்ளைப் பிறப்பில் தாய்கொளும் உறுதி!
-------------------------------
வெளியே வந்தால் முகமது நிற்கிறான்
வேகமாய்த் துரவும்(14) சோமாலித் தொண்டன்
"கெய்ஃப் ஃகாலக், சாதீக்"(15)- முகமது கேள்வி
அல்ஃகம்துலில்லா(16), முஃக்முத் - மறுமொழி நான்தான்

1. பறனை = plane
2. வான்புகல் = airport
3. குடிப்புகல் = immigration
4. ஃகூனாக் = hunak ('there' in arabic)
5. ஃகேனா = hena ('here' in arabic)
6. பட்டயர் = uniformed men
7. முகவர் = agent
8. நுழைமதி = visa
9. கடப் புகல் = புகற் கடவு என்பதை மாற்றிப் போட்டது; கடவுதல் = to pass; புகல் = port; புகற் கடவு = pass port
10.பொளியிடுதல் = to stamp
11.சுங்கம் = customs
12.மருந்து = drug; Saudi Arabia is scared about drugs
13.வெள்ளி = American Dollar
14.துரவுதல் = to drive
15.கெய்ஃப் ஃகாலக், சாதீக் = நிலைமை எப்படி இருக்கு? நண்ப!
16.அல்ஃகம்துலில்லா= கடவுளுக்கு நன்றி (அவரால் நன்றாக இருக்கிறேன் என்பது உட்பொருள்)

º×¾¢ìÌ þÃñÎ ¬ñθÙìÌ Óý §À¡öÅóÐ ¦¸¡ñÊÕó¾ §À¡Ð ±Ø¾¢ÂÐ:

«ÃÒ Ñ¨Æ×

µÎ ¸Çò¾¢ø Å¡¦ÉØ ÀȨÉ(1)
´ò¾¢Îõ §À¡§¾, ±ÉìÌû ¸üÀ¨É!
"ܦ¼¡Õ ¨¸ô¨À ÁÊ츽¢ ¾¡§É;
ÜȨà Á½¢Â¢ø ¦ÅÇ¢§Â È¢¼Ä¡õ"
-------------------------------------------
À¡Äò §¾¡Î À鬃 «¨½Â,
ÀÃÀÃô §ÀÈ¢, ¨À¸¨Ç þÎ츢,
§Å¨Äì ¦¸É§Å Å¢¨Ã¸¢È Üð¼õ
Å¢ÄÌõ ¸¾Å¢ø ÓóÐÈò ÐÊìÌõ.

Å¡ýÒ¸ü(2) ¸ðʼõ ¸£úò¾Äõ Åó¾¡ø
Å⨺ ãýÚ ÌÊôÒ¸ø(3) ¿¡Ê;
ãõ¨Àì Üð¼§Á ÓÊ¡ ¿¢¨Ä¢ø
¦ºý¨Éô ¦ÀÕì¸õ ¿¡ëü ¨ÈõÀÐ;

Å⨺; ÌÆôÀõ; Å¡ö¦Á¡Æ¢ ²Åø;
Åó¾Å÷ ÌÆÚõ þó¾¢Â ¦Á¡Æ¢¸û;
Òâ¨ºì ¸¡ÅÄý Á¢ÃðÎõ §¾¡Ã¨½;
¦À¡ò¾¸õ, ÀÊÅõ Òâ¡ ¦Á¡Æ¢Â¢ø;

´ð¼¸õ µðÊ ºð¼¡õ À¢û¨ÇÂý
Óð¼¡Áø À¢ý§É ÓÚÅÄ¡ ¦ºöÅ¡ý?
«ÅÛìÌ ±øÄ¡§Á Á󨾸û ¾¡§É?
«¾ð¼Öõ ¸ò¾Öõ ºÃÇÁ¡ö Åó¾É!

"¬í§¸ ®í§¸ ·ÜÉ¡ì(4) ·§¸É¡(5)
¬ö! µö!" ±ý§È «¾¢Â¢Îõ ¸¡Ãõ;
"¿¡í¸Ç¡ ¯í¸¨Ç ±õã÷ «¨Æò§¾¡õ?"
¿ÓðÎî º¢Ã¢ôÒ; Ó¸ò¾¢É¢ø ²ÇÉõ;

Å£ÃÓõ, ¾£ÃÓõ, Å¢Âĸô §ÀîÍõ,
¬Ê, ´Îí¸¢, «Îò¾Åý ҸĢø,
À¡Ã¾ô Ò¾øÅ÷ ¨À ¿¸÷ó¾¡÷;
Àð¼Â÷(6) ²ÇÉõ À¡÷ò¾¡ø ÓÊÔ§Á¡?

ÓÏ즸Éì §¸¡Åõ ãûÀÅ÷ ܼ,
ÓôÀ ¾¡Â¢Ãõ Ó¸Å÷(7)ì ¸Ç¢òÐ,
¾ÉìÌ Ñ¨ÆÁ¾¢(8) ¦¸¡ñ¼¨¾ ¿¢¨Äì¸,
Ó½¸ §Ä¡Î Óý¿¸÷ ¸¡ðº¢

À¡õÀ¨½ ²½¢ô ÀÃõÀ¾ Å⨺;
À¾ð¼õ; ¨¸Â¢ø ¸¼ôÒ¸ü(9) ¦À¡ò¾¸õ;
§¿¡ýÒõ §Åñ¼Öõ «¨Á¾¢Ôõ À¡÷òÐ,
ѨÆÁ¾¢ ´ôÀ¢, ¦À¡Ç¢Â¢¼(10)î ¦ºö§Á¡?

¦À¡Ç¢¨Âô ¦ÀüÈÀ¢ý, Íí¸õ(11) ѨÆó¾¡ø,
¦À¡ð¼Äõ À¢öòÐ, ¦À¡Õð¸û º¢¨¾òÐ,
¦ÅÇ¢§Â ±ÎòÐ, Å¢ÃÅ¢ô §À¡ðÎ,
ÁÕó¨¾(12)ò §¾Îõ, Áü¦È¡Õ «ÃÀ¢

µÃ¡ ¢Ãò¾¢ø ´ÕŨÉò §¾Ê
µö󾾡ø, Åó¾Å÷ ¯¼¨Á¨Âì ̨ÄòÐ,
šá ¾£¦ÃÉî ¦º¡øÅÐõ ¸¨Ä¾¡ý!
ÅÕ¦¸Éî ¦º¡øÄ, ÓÚÅÄ¡ §ÅñÎõ?

¦ÅóÐ ¦¸¡¾¢òÐî Íñ½¡õ À¡¸¢,
¦ÅÇ¢§Â ¯¨¼¨Áò ¾Ã¾Ã Å¢ØòÐõ,
¦¿ïºõ ¦À¡Ú¨Á ¿¢¨Èó¾ ¾Á¢Æý!!
¿¢¨É¦Åø Ä¡§Á ¦ÅûÇ¢(13)ì ¸½ìÌ!!!

À¢ý§É,

Åó¾ þ¼ò¾¢ø Å¡ö¾Î Á¡È¢
¨ÅÂô §À¡É¡ø, Å£ðÊø ¯È§Å¡÷
¦º¡ó¾ ¿¢¨Ä¨Á ¦¾¡í¸¢ Å¢¼¡§¾¡?
¦¸¡û¸ ¦À¡Ú¨Á! þýÛõ ¦À¡Ú¨Á!

þò¾¨¸ì ¸¡ðº¢ ±ý ±ØóÐõ,
"±ÉìÌÁ¡ §º¡¾¨É?" ±ýÈ Á¾÷ôÀ¢ø
º¢üȾ¢ ¸¡Ã¢ «ÛÁ¾¢ ¦ÀüÚ
¦ºø¸¢§Èý À¢ý§É ÜìÌÃø ±Øó¾Ð!

"¡ÃÐ «í§¸? ±ôÀÊî ¦ºýÈ¡ý?
Íí¸õ ¸¼ì¸ «ò¾¨É Ţ纡?
þ¨ÇÂÅý «ÛÁ¾¢ò àì¸¢ì ¸¼¡Í
À¢ý§É §À¡ö¿¢ø! «ôÒÈõ À¡÷ô§À¡õ"

±ý¦È¡Õ §Àþ¢ ¸¡Ã¢Â¢ý ÅýÁõ;
þÉ¢¦Â¡Õ þÃñÎ «¨ÃÁ½¢ §¿Ãõ
¬ñ¼Å¡! ±ý§Èý Å⨺¢ø ¿¢ý§Èý
"«ò¾¨É §º¡¾¨É þÉ¢ì ¦¸¡Çø ¬§Á¡?

ÀÎòÐõ «ÃÀ¢Â¢ø þÉ¢ Ñ¨Æ §Å§É¡?
À¡Øõ §Å¨ÄìÌ ¿¡ýÀ½¢ §Å§É¡?"
À¢Êò¦¾¡Õ ¯Ú¾¢ ¦¸¡ñ¼Ð ±ôÀÊ?
À¢û¨Çô À¢ÈôÀ¢ø ¾¡ö¦¸¡Ùõ ¯Ú¾¢!
-------------------------------
¦ÅÇ¢§Â Åó¾¡ø Ó¸ÁÐ ¿¢ü¸¢È¡ý
§Å¸Á¡öò ÐÃ×õ(14) §º¡Á¡Ä¢ò ¦¾¡ñ¼ý
"¦¸ö·ô ·¸¡Äì, º¡¾£ì"(15)- Ó¸ÁÐ §¸ûÅ¢
«ø·¸õÐÄ¢øÄ¡(16), Ó·ìÓò - ÁÚ¦Á¡Æ¢ ¿¡ý¾¡ý

1. À鬃 = plane
2. Å¡ýÒ¸ø = airport
3. ÌÊôÒ¸ø = immigration
4. ·ÜÉ¡ì = hunak ('there' in arabic)
5. ·§¸É¡ = hena ('here' in arabic)
6. Àð¼Â÷ = uniformed men
7. Ó¸Å÷ = agent
8. ѨÆÁ¾¢ = visa
9. ¸¼ô Ò¸ø = Ò¸ü ¸¼× ±ýÀ¨¾ Á¡üÈ¢ô §À¡ð¼Ð; ¸¼×¾ø = to pass; Ò¸ø = port; Ò¸ü ¸¼× = pass port
10.¦À¡Ç¢Â¢Î¾ø = to stamp
11.Íí¸õ = customs
12.ÁÕóÐ = drug; Saudi Arabia is scared about drugs
13.¦ÅûÇ¢ = American Dollar
14.ÐÃ×¾ø = to drive
15.¦¸ö·ô ·¸¡Äì, º¡¾£ì = ¿¢¨Ä¨Á ±ôÀÊ þÕìÌ? ¿ñÀ!
16.«ø·¸õÐÄ¢øÄ¡= ¸¼×ÙìÌ ¿ýÈ¢ («Åáø ¿ýÈ¡¸ þÕ츢§Èý ±ýÀÐ ¯ð¦À¡Õû)

No comments: