Monday, September 28, 2020

வலசை

வலை-த்தல்>வல-த்தல்  (தன் வினை)= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வருதல்

வலை-யித்தல்>வல-யித்தல்>வலசி-த்தல் (பிற வினை) =   இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும்படி செய்வித்தல்

வலையம்>வலயம் = வளையம், வட்டம்

வலசை= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும் செய்கை. பறவைகள் வான்வழியே வலசை போகின்றன - என்பார், இதுபோலவே சில படகுகளும், கலங்களும், வங்கங்களும் கடல்வழியே வலசை போய்வரலாம். அந்தக்காலத்தில் SS Rajula, MV Chidambaram என்ற கப்பல்கள் சென்னை-நாகை-பினாங்கு- சிங்கை என்று ஒருவழியிலும், திரும்பி சிங்கை- பினாங்கு- நாகை - சென்னை என்று மீள மீள வலசை போய்வந்தன.  இன்றும் பினாங்குத் தீவிற்கும், பட்டர்வொர்த் என்னும் மலேயத் தீவுக்குறையில் உள்ள துறைமுகத்திற்கும் இடையே அரைமணி/ஒருமணிக்கு ஒருமுறை பெரும்படகு ஒன்று போய்வரும். நம்மூரில் குமரிமுனையில், குமரித்துறை- விவேகானந்தர் பாறை = வள்ளுவர் பாறை; மீண்டும் வள்ளுவர் பாறை - விவேகானந்தர் பாறை - குமரித்துறை என்று படகுகள் போய்வரும்.

ferry (v.) = வலயி-த்தல், வலசி-த்தல்

Old English ferian "to carry, convey, bring, transport" (in late Old English, especially over water), from Proto-Germanic *farjan "to ferry" (source also of Old Frisian feria "carry, transport," Old Norse ferja "to pass over, to ferry," Gothic farjan "travel by boat"), from PIE root *per- (2) "to lead, pass over." Related to fare (v.). 

ferry (n.) = வலசை

early 15c., "a passage over a river," from the verb or from Old Norse ferju-, in compounds, "passage across water," ultimately from the same Germanic root as ferry (v.). Meaning "place where boats pass over a body of water" is from mid-15c. The sense "boat or raft to convey passengers and goods short distances across a body of water" (1580s) is a shortening of ferry boat (mid-15c.).

ferry boat = வலசைப் படகு. 

1 comment:

Unknown said...

நன்றி ஐயா!