Kavignar Thamarai தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் “
Fashion, trend, Vogue, Style, Costume, outfit, makeover, Boutique போன்றவற்றுக்கான தமிழ்ச் சொற்கள் தர முடியுமா ?.மோஸ்தர் என்பது சமக்கிருதமா ? அல்லது தமிழ் வேர்ச்சொல் உண்டா ?” என்று கேட்டிருந்தார். அவருக்க்கு நான் கொடுத்த மறுமொழி:
Fashion: பட்டவம், படியம், ஒயில் என்று 3 சொற்களை இதற்கு ஈடாய்ப் பயனுறுத்தியுள்ளேன். கொஞ்சம் அலங்காரம் வேண்டுமென்றால் ஒயிலே சரிவரும். இல்லை யெனில் பட்டவமே சரி. அதையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன்.
Trend = போக்கு, பெரிதும் சரிவரும்
Vogue = வழமை. ஈழத்தவர் பெரிதும் பயன் படுத்துவார். நாம் வழக்கம் பயன் படுத்துவோம்,
Costume = கட்டாடை. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்குத் தக்கக் கட்டும் ஆடை இது.
Make-up: ஒப்பனை make-over: (ஒரு பாத்திரத்திற்குத் தக்க மாற்றிக் கொள்வதால், இது) மாற்றனை
Boutique:பூட்டிகை. பல்வேறு அழகு, ஒப்பனை ஏந்துகளை நாம் பூணிக் கொள்கிறோம். அதாவது பூட்டிக் கொள்கிறோம். அது பூச்சாகலாம், பூணாகலாம், பொருந்தாகலாம். பொதுவாய்ப் பூட்டிகை எனலாம்.
மோஸ்தர் என்பது mauzūn என்னும் அரபிச் சொல்லில் எழுந்தது.
அன்புடன்,
இராம.கி,
4 comments:
நன்று.. Trendy க்கு எச்சொல் பொருந்தும் ஐயா ?
trendy என்பது பெயரடை தானே? போக்கான, போக்காய், போக்காக என்று இடத்திற்குத் தக்க சொல்லுங்கள். கொஞ்சம் தமிழ் இலக்கணம் படியுங்கள்.
சிறந்த சொல்லாய்வு
மகிழ்ச்சி ஐயா!
“உதென்ன புது மோடியாய் இருக்கு?”
என்ற கேள்வி ஒருவரின் புது மாதிரியான சிகையலங்காரம், புதுவித ஆடை என்பவற்றை பகிடி பண்ணி அல்லது அவரது அந்தப் புதிய தோற்றத்தில் எடுபட்டு (கவரப்பட்டு) கேட்கப்படும்.
இன்னுமொரு இடத்தில் மோடி ஓடி வந்தார்.
அந்தநாளைகளில் நாட்டுக்கூத்தை வடமோடி, தென்மோடி என வகைப்படுத்தினார்கள்.
இங்கே மோடி எனப்பட்டது வகை, வழமை, போக்கு, முறை என்றெல்லாம் விளங்கிக் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Post a Comment