ஆங்கிலத்தில் advance (v.) என்பதற்கு,
mid-13c., avauncen (transitive), "improve (something), further the development of," from Old French avancir, avancier "move forward, go forward, set forward" (12c., Modern French avancer), from Vulgar Latin *abanteare (source of Italian avanzare, Spanish avanzar), from Late Latin abante "from before," composed of ab "from" (see ab-) + ante "before, in front of, against" (from PIE root *ant- "front, forehead"). Compare avant.
The unetymological -d- was inserted 16c. on mistaken notion that initial syllable was from Latin ad-. From c. 1300 as "to promote, raise to a higher rank." Intransitive sense "move forward, move further in front" is mid-14c.; transitive sense "bring forward in place, move (something) forward" is from c. 1500. Meaning "to give (money, etc.) before it is legally due" is first attested 1670s. Related: Advanced; advancing. The adjective (in advance warning, etc.) is recorded from 1843.
என்று பொருள்சொல்லி விளக்குவார். தமிழில் ஆகுதல் என்பது gets done என்ற பொருள் கொள்ளும். க, ய, வ ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று போலிகளாகி ஆகுதல் என்பது ஆயுதல், ஆவுதல் என்றும் பேச்சுவழக்கில் திரியும். இன்னுந் திரிந்து ஆதல்/ஆனல் என்றுஞ் சொல்வோம். ஆயுதலை/ஆதலை முன்தள்ளுவது ஆய்+உத்தம்= ஆயுத்தம் ஆகும். (உந்துதல்>உத்துதல்>உத்தம்= முன்தள்ளல் உச்சகாரம் என்பது முன்னிலைக்கான தமிழ்ச்சுட்டு. உந்துதலை உங்குதல் என்றுஞ் சொல்லலாம். ஆது+உங்கு = ஆதுவுங்கு என்று வகர உடம்படுமெய் சேர்த்து இந்தையிரோப்பியம் போகும். இதிலும் தமிழிய, இந்தையிரோப்பியத் தொடர்பு தெரிகிறது. சொன்னால் கேட்பதற்குத் தான் ஆட்கள் அணியமாய் இல்லை. உன்மத்தமாய் ”தமிழ்த்தொடர்பு” எதையும் மறுத்துவிடுவார். அந்த அளவிற்கு ஒரு மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது. என்ன சொல்ல?)
ஆயுத்தம் என்பது தமிழில் முன்னேற்பாட்டைக் குறிக்கும். ”என்னப்பா, ஆயுத்தமாகிட்டீங்களா?”, ”எல்லா ஆயுத்தமும் செய்யுங்க”, ”அவன் ஆயுத்தி இருந்தான்” ஆயுத்த கருமம் என்பது ஒன்று முடிவதற்கான முன்னேற்பாட்டுவேலை. இது ஆயுத்தகாரம் எனப்படும். ஆயுத்தகாரம்>அயுத்தகாரம்>அயுச்சகாரம்>அச்சகாரம்>அச்சாரம் எனப் பேச்சுவழக்கில் இன்னுந்திரியும். ”என்னப்பா, இப்பவே அச்சாரம் போடுறியே? கொஞ்சம் பொறுப்பா!” என்பதும் பேச்சுநடைமுறை தான். ஆனால் காரம்போட்டு நீட்டவேண்டாம் ஆயுத்தென்றாலே அச்சகார> அச்சாரப் பொருள் வந்துவிடும். ஆயுத்து என்பது முன்னேற்பாடுகளோடு சேர்ந்துவரும் நிதி, பணம் போன்றவற்றையும் குறிக்கலாம். loan advance, finance advance, journey advance போன்ற பலவிடங்களில் முதற்சொல் தொக்கிநின்று, வெறுமே advance என்று பலரும் புழங்குவார். இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற பல இடங்களில் ஆயுத்து என்பது advance க்குச் சரியாகவே இருக்கும்.
consortium advance = சேர்த்திய ஆயுத்து
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment