Friday, May 01, 2020

சகட்டுப் பாகங்கள் - 1

http://valavu.blogspot.com/2018/08/5.html என்ற இடுகையில் சகடு என்ற சொல் எப்படிக் car ஐக் குறிக்குமென்று சொன்னேன். சகட்டின் பாகங்களை இதுவரை மொத்தமாக யாரும் தமிழில் குறிப்பிட்டதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சொற்கள் மட்டுமே வந்துள்ளன. நானே கூட http://valavu.blogspot.com/2008/04/tyre-brake-and-acceleration.html, http://valavu.blogspot.com/2018/09/clutch.html என்று 2 இடுகைகள் இட்டதோடு மேற்கொண்டு ஏதும் செய்யாது நிறுத்திவிட்டேன். ஆங்கிலத்தில்   
https://en.wikipedia.org/wiki/List_of_auto_parts என்ற விக்கிப்பீடியா தளத்தில் சகட்டின் பாகங்களைக் குறித்துள்ளார். அது நல்ல தொகுப்பு. தமிழில் அப்படியொரு தொகுப்பு இருந்தால் நன்றாய் இருக்கும். எனவே இங்கு என் முயற்சி எழுகிறது.

கூடவே  https://www.easypacelearning.com/all-lessons/english-level-2/1299-car-parts-vocabulary-list-learn-the-english-words-for-car-parts-using-pictures என்ற தளத்தில் படங்களோடு ஆங்கிலத்தில் பெயரிட்டுக் காட்டுவதையும் ஆர்வமுள்ளோர் பார்க்கலாம். நுட்பியலைத் தமிழில் சொல்லவேண்டுமானால், அதன் ஒரு கூறாய், மாகனப் பொறியியலை (mechanical engineering), இன்னும் விதப்பாய், ஆதநகர்த்துப் பொறியியலைச் (automotive engineering) சொல்லாமல் ஒதுக்கமுடியாது. அப்படிச் சொல்ல இது ஒரு முயற்சி.  சகட்டின் பாகங்கள் இந்த இழையில் பல்வேறு பகுதிகளாய் வருகின்றன.
--------------------------
Body components, including trim திடவம் சேர்ந்த பொதிப்பூண்கள்

Bonnet/hood 
   Bonnet/hood = பொத்து/ கூடு
Bumper
   Unexposed bumper = வெளிப்படாப் பம்பு  (தமிழிலும் பம்புதல் என்பது அடிபட்டு எழுவதைக் குறிக்கலாம்)
   Exposed Bumper = வெளிப்படும் பம்பு
Cowl screen = கவல் திரை
Decklid = தொக்குமூடி (தொக்கு = covering)
Fascia rear and support = பட்டையப் பின்னும், தாங்கியும்
Fender (wing or mudguard) வலுவெதிரி (சிறகு அல்லது மட்காப்பு)
Front clip (முன் கொக்கி)
Front fascia and header panel முன்னக பட்டையமும் தலைப் பள்ளயமும். பள்ளங்கள் உள்ள பலகை = panel.
Grille (also called grill) (கூண்டு)
Pillar and hard trim தூணும் கடுந்திடவமும்
Quarter panel = கால்வட்டப் படல்
Radiator core support = கதிர்வீச்சுக் கருத் தாங்கி
Rocker = ஆலாட்டி
Roof rack = கூரைச் சட்டம்
Spoiler = குலைப்பி (காற்றின் துருவளை இயக்கத்தைக் குலைப்பது)
Front spoiler (air dam) = முன்னகக் குலைப்பி (கால் அணை)
Rear spoiler (wing) = பின்னகக் குலைப்பி (சிறகு)
Rims = விளிம்புகள்
Hubcap = குடக்கொப்பி
Tire/Tyre = உருளி
Trim package = திடவப் பொக்கம்
Trunk/boot/hatch = தும்பி /பொத்தை/ கொடுகு யானையின் தும்பிக்கையில் வரும் தும்பி trunk என்று பொருள் கொள்ளும். பொத்தை என்பது பொருள்களை பொத்தி வைப்பது. கொடுகு என்பது கோடிப் பூட்டிவைப்பது.
Trunk/boot latch = தும்பி/பொத்தைத் தாழ்
Valance = வலங்கை
Welded assembly = பற்றுவிச் சேர்க்கை (பற்றுவி-த்தல் = to weld)

Doors = கதவுகள்

Anti-intrusion bar துருத்தெதிர் பாளை
Front Right Outer door handle = முன் வலச்சிறகு வெளிக்கதவுப் பிடி
Front Left Side Outer door handle = முன் இடச்சிறகு வெளிக்கதவுப் பிடி
Rear Right Side Outer door handle = பின் வலச்சிறகு வெளிக்கத்தவுப் பிடி
Rear Left Side Outer door handle = பின் இடச்சிறகு வெளிக்கதவுப் பிடி
Front Right Side Inner door handle = முன் வலச்சிறகு உட்கதவுப் பிடி
Front Left Side Inner door handle = முன் இடச்சிறகு உட்கதவுப் பிடி
Rear Right Side Inner door handle = பின் வலச்சிறகு உட்கதவுப் பிடி
Rear Left Side Inner door handle = பின் இடச்சிறகு உட்கதவுப் பிடி
Back Door Outer Door Handles = பின் கதவு வெளிக்கதவுப் பிடிகள்
Front Right Side Window motor = முன் வலச்சிறகுக் காலதர் நகர்த்தி
Front Left Side Window motor = முன் இடச்சிறகுக் காலதர் நகர்த்தி
Rear Right Side Window motor = பின் வலச்சிறகுக் காலதர் நகர்த்தி
Rear Left Side Window motor = பின் இடச்சிறகுக் காலதர் நகர்த்தி
Door control module = கதவுக் கட்டுறல் மூட்tடில்
Door seal = கதவுச் செள்ளு (செள்>செறு>செறிவு = நெருக்கம். செள்ளுதல் என்ற வினைச்சொல் இன்றில்லாது போய்விட்டது. ஆனால்  செளிம்பு = களிம்பு, செளிம்பூறல் = களிம்புப் பற்று, செளிம்பன் = obstinate person; செள்ளூ = உண்ணி வகை என்ற தொடர்புள்ள பெயர்ச்சொற்கள் உள்ளன. செள்ளு-தல் = to seal என்ற பொருள் இல்லாது இந்தப் பெயர்ச்சொற்கள் தனித்து எழ வாய்ப்பு இல்லை.)
Door water-shield = கதவின் நீர்க்கிடுகு
Hinge = கீல்
Door latch = கதவுத் தாள்
Door lock and power door locks = கதவுப்பூட்டும் புயவுக் கதவுப் பூட்டுகளும்
Central-locking = நடுவண் பூட்டுமுறை
Fuel tank (or fuel filler) door = எரிகித்தாங்கல் (எரிகி நிறைவுக்) கதவு

No comments: