ஒருமுறை மின்தமிழ் மடற்குழுவில் ”stereotype என்ற ஆங்கிலச்சொல்லிற்கான தமிழாக்கம் என்ன?”வென்று திரு.தாமரைச்செல்வன் கேட்டிருந்தார் வேதிப் பொறியியலை ஒட்டிய தொழில்முறை ஆலோசனைப் பணியில் அப்போது ஆழ்ந்ததால் உடனே மறுமொழிக்க வாய்ப்பில்லாது போனது. பின் நேரம் கிடைத்தபின் சொன்னேன். இப்போது என் வலைப்பதிவில் சேமிக்கிறேன்.
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிப் பாத்திகட்டி அதிற் பழகும் ஆங்கிலச் சொற்களுக்கு விதப்பாகத் தமிழாக்கஞ் செய்வதை நான் எப்போதும் ஒப்புக் கொண்டதில்லை. கூடியமட்டும் துறைகளுக்கு பொதுவான தொடர்புச் சொற்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றிடை நிலவும் ஓரிமையை ஆழவுணர்ந்து, ”அதையெப்படித் தமிழிற் கொணரலாம்?” என்றே பார்ப்பேன். முன்சொன்னது போல் வினைச்சொல் காண முடியுமானால் அதையுந் தேடுவேன்.
இயற்கைப் பொருள்கள் எல்லாமே முப்பரிமானங் கொண்டவை. அறிவியல் வரிதியாய் அவற்றை அலசவும், ஆய்விற்காகவும் 1 பரிமான, 2 பரிமானப் பொருட்களை மாந்தர் கற்பித்துக் கொண்டார். ஒரு பரிமானப் பொருட்களுக்கு நீளம் அளவுகோலாகும் போது, இரு பரிமானப் பொருட்களுக்கு நீளமும் அகலமும் அளவைகளாகி, இரண்டையுஞ் சேர்த்துப் பரப்பென உணர்கிறோம். ஏனத்தின் வடிவுகொள்ளும் நீர்மப் பரப்பை ஏன வாய்வழி உணர்கிறோம். பரப்பின் வெவ்வேறு வடிவங்களாய் சதுகரம்> சதுரம், செவ்வஃகம்>செவ்வகம், வட்டம், நீள்வட்டம் எனப் பலவற்றையும் படிக்கிறோம்.
திடப்பொருளெனும் முப்பரிமானப் பொருட்களுக்கோ, நீள, அகலத்தோடு திட்பம்/திண்ணமெனும் (thickness) 3 ஆவது அளவுமுண்டு. திட்பு/திட்டு/திண் என்பவை ஒரே பொருளுணர்த்துங் குறுஞ் சொற்களாகும். ”அம்” எனும் ஈறு சேர்த்த திட்பம், தி(ட்)டம், திண்ணம் என்பவையும் அதேபொருள் உணர்த்தும். திடரென்பதும் (அம் ஈற்றுப் பெற்ற திடரமும்) திட்பு/திட்டு/திண் என்ற பொருளை உணர்த்தும். திடரல், திடர்தல் என்பது அடர்தல் விளைவால் திடப் படும் வினை குறிக்கும். திடப்படும் பொருள், உறுதியை, வலுவைப் பெறும்.
solid இற்குத் தமிழில் திண்மமென்றும், strong யைத் திடமென்றும், thick இற்குத் திட்பம்/திண்ணமென்றும், density யைத் திணிவு/அடர்த்தி என்றும் விதப்பாய்ப் பயன்படுத்துங் காரணத்தால் stereo விற்குத் திடர்/திடரம் என்ற சொல்லைப் பயன்படுத்த விழைகிறேன்.
[இங்கே ஓர் இடைவிலகல். பொறுமையிலாத் தமிழ் “விஞ்ஞானவாதிகள்” சிலர் கலைச்சொற்களை ஏதோ விளக்கந்தருஞ் சொற்களாகவே பார்க்கிறார். தமிழில் அவர்க்கு 4000 சொற்கள் தெரியுமென வையுங்கள். நாலாயிரத்தோடு முன்னொட்டு, பின்னொட்டு சேர்த்து உலகின் எல்லாப் பெயர்களுக்கும், வினைகளுக்கும் இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கி விடலாம் என்பதும், இல்லாவிடில், வெளிமொழிச் சொல்லை அப்படியே கடன்வாங்கி விடலாம் என்பதுமே இவ் “விஞ்ஞானவாதிகளின்” பரிந்துரையாக உள்ளது. தம் தமிழ்க் குறைவை மூடி மறைத்து தம் தமிங்கில நிறைவை வெளிப் படுத்தும் வடிகாலாகவே தமிழ்ச் சொல்லாக்கத்தை இவர் பார்க்கிறார். இதற்குத் தமிழறிஞரும் துணை போகிறார். பழந்தமிழிலக்கியச் சொற்களை ஆழங் காணாது, அவற்றைப் புதுமைப் படுத்தாது, ”சுவைத்தறிய மட்டுமே தமிழிலக்கியம்” என்ற மனப்பாங்கில் அறிவியல், நுட்பியற் சொற்களின் அடியூற்றை இலக்கியத்தில், நாட்டுவழக்கில் காணத் தவறிவிட்டார்.
நம் எல்லோரிடமும் (என்னையுஞ் சேர்த்தே சொல்கிறேன்.) உள்ள குறையே நம் தமிழ்ச்சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாதது தான். நம்மிடம் இருக்கும் 3000/4000 சொற்களை வைத்துப் பேர் பண்ணித், தமிங்கிலத்தில் பேசுவதாலேயே, “தமிழில் அறிவியலை, நுட்பியலைச் சொல்லமுடியாது” என்று கூக்குரலிடத் தொடங்கி விடுகிறோம். நம் தமிழ்ச் சொற்றொகுதியை 10000, 15000 அளவிற்காவது கூட்டிப் போவதே நம் சிந்தனை மாறத் தலையாய வழி. கூடவே தமிழென்றால் இளக்காரம் என்ற எண்ணத்தையும் போக்க வேண்டும். தவிரக் கலைச்சொல்லென்றால் ”அது எனக்குத் தெரிந்த தமிழில் விளக்கந் தருஞ் சொல்” என்று சொல்வதும் மாறவேண்டும்.
கலைச்சொல் என்பது சட்டென நம்சிந்தனையில் ஓர் ஒளிக்கீற்றை உருவாக்க வேண்டும். முழுப்பொருளையல்ல. இங்கே ”திட” என்ற ஒலி கேட்டவுடனே அதையொட்டிய கூறுகள் நமக்குத் தென்பட்டு விடும். மின் என்றால் இக்காலம் electricity நினைவிற்கு வருகிறதே, அதுபோற் கொள்க. . (இத்தனைக்கும் மின்னின் பழம்பொருள் ஒளி தான். மின்னைக் காட்டிலும் சிறப்பான கலைச்சொல்லுண்டோ? கலை (craft) க்குள் பயன்படுவது கலைச் சொல். ”எது கலைச்சொல்?” என்பது பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம். ]
stare என்பது திடர்ந்துபார்த்தல். அதாவது அசையாமற் திடமாய் நின்று கூர்ந்து பார்த்தல். இங்கே அழுந்தச் சொல்லவேண்டியது ”திடமான பார்வை” பற்றிய கருத்தே. அடுத்து stereo விற்கு வருவோம். இற்றைக் காலத்தில் பல்வேறு கூட்டுச்சொற்களுக்கு இது அடிப்படை. இந்த அடிச்சொல்லை தமிழில் இனங் காணாதிருந்தால், தொடர்புள்ள எல்லாக் கூட்டுச் சொற்களுக்கும் சுற்றி வளைத்தே சொற்களாக்கும் நிலைக்கு வந்து சேருவோம். (பலரும் இப்படியே செய்கிறார். மொழி வளர அது வழியில்லை.)
John Ayto வின் ”Bloomsbury Dictionary of Word Origins” என்ற பொத்தகத்தில் ”Greek stereos meant "solid". The earliest English Compund noun from it was stereometry, a mathematical term denoting the measurement of solid or three-dimentional objects. This was followed by Stereographic, stereotype (coined in French and originally used for a "solid" printing block; the metaphorical 'unvaried or conventional usage' emerged in the middle of the 19th century), stereoscope (a viewer for producing 'solid' three dimentional images), and stereophonic 'producing three-dimentional sound'. Stereo was used in the 19th century as an abbreviation for stereotype and stereoscopic; its use for stereophonic dates from 1950s” என்று போட்டிருப்பர்..
இணையத்தில் பலரும் பயன்படுத்தும் Etymonline வலைத்தளத்தில் “stereo- Look up stereo- at Dictionary.com. before vowels stere-, word-forming element meaning "solid, firm; three-dimensional; stereophonic," from comb. form of Greek stereos "solid," from PIE *ster- (1) "stiff, rigid, firm, strong" (cognates: Greek steresthai "be deprived of," steira "sterile," sterphnios "stiff, rigid," sterphos "hide, skin;" Latin sterilis "barren, unproductive;" Sanskrit sthirah "hard, firm," starih "a barren cow;" Persian suturg "strong;" Lithuanian storas "thick," stregti "to become frozen;" Old Church Slavonic strublu "strong, hard," sterica "a barren cow," staru "old" (hence Russian stary "old"); Gothic stairo "barren;" Old Norse stirtla "a barren cow," Old English starian "to stare," stearc "stiff, strong, rigid," steorfan "to die," literally "become stiff," styrne "severe, strict") என்று போட்டிருப்பார். தமிழின் திட்பு/திட்டு/.திண்/திட/.திடர் என்ற சொற்கள் எல்லாம் இதோடு தொடர்புடையவை.
[தமிழ் எந்தவிடத்தில் பிறமொழிகளோடு ஓட்டுகிறதென்று பாராது, அத் தொடர்பை முடிந்தாற் பயன்படுத்துவோமே என்று கொள்ளாது, காலஞ் சென்ற வில்லியஞ்சோன்சு, மாக்சுமுல்லர், மோனியர் வில்லியம்சு, வெல்லிசு, கால்டுவெல் போன்ற பழம் மேலையாய்வாளரின் முடிவுகளை அப்படியே கல்மேல் எழுத்தாகக் கொண்டு, முற்றுமுழுதான உண்மையென நம்பி, நமக்கு நன்றாகவே தெரியும் மொழியுறவுகளை மறைத்து, தமிழைத் தத்தளிக்க விடுவதே சொல்லாக்கரின் போக்காக இன்றிருக்கிறது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவை அடிக்கடி சொல்லும் இராம.கி இவர்களாற் தப்பாகவே அறியப்படுவதும் வழமையாகிப் போனது.]
மேற்சொன்ன stereo விளக்கத்தின்படி அடுத்து வருவது stereometry என்ற கூட்டுச் சொல்லாகும். இதில் metry என்பதை அளத்தலென்றே பொருள் கொள்கிறோம். metre என்ற அலகுப்பெயரும் அளத்தற் பொருள் கொண்டதே. கோல் என்ற சொல்லை இதற்கு ஈடாகத் தமிழில் நெடுங்காலம் புழங்கியுள்ளோம். தமிழில் மட்டுதல் வினைச்சொல் மதித்தலைக் குறிக்கும். இன்றுங்கூட “உங்களுக்கு என்னமாதிரி இது மட்டுப்படுகிறது?” எனும்போது நம்மையறியாமல் அளத்தலைச் சுட்டுகிறோம். மட்டிகை என்பது metric. மட்டிகையின் நீட்சியான மத்திகையும்/ மதிக்கையும் metry யைக் குறிக்க நல்ல சொற்களாகும். மத்திகையின் இன்னொரு வளர்ச்சியாய் ’மாத்திரி’ என்பதைப் பாவாணர் உருவாக்கினார். kilometre-ஐ, அயிரமாத்திரி என்று தனித்தமிழ் அன்பர் பயன்படுத்துவார். இன்னுஞ் சிலர் kilometre போன்ற அலகுச் சொற்களை வெறுமே ஒலிபெயர்த்து கிலோமீட்டர் என்று எழுதவேண்டுமென்பார். (நான் இரு விதமாயும் எழுதுவேன்.)
stereometry. என்பது திடர் மதிக்கை = திண்மப் பொருளின் முப்பரிமான அளவுகளை மதிக்கும் முறை.
stereographic என்பது இரு பரிமானப் பரப்புக் கொண்ட தாளில் ஒரு முப் பரிமானத் தோற்றத்தைக் குறிப்பிட்ட முறையில் கிறுவிக்காட்டும் முறை. பொறியியல் வரைவுப் (Engineering Drawing) பாடத்தில் இது விதப்பான படிப்பு. இதையறியாத பொறியாளர் இருக்கமுடியாது. கிறுவுதல் = வரைதல். (வரைதலை to draw என்பதற்கும் கிறுவுதலை to graph என்பதற்கும் விதப்பாக நான் பயன்படுத்துகிறேன். கிறுவுதலின் நீட்சியாய் கீறுதல், கீற்று, கீற்றம், கிறுக்குதல் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகிறோம்.)
projection= புறத்தெற்றம். தெற்றிக்காட்டல் என்பது எடுத்துக்காட்டலை/ வெளிக் காட்டலைக் குறிக்கும். தெற்றி>தெறி என்ற சொல் இற்றை இளைஞரிடை பெரிதும் பரவுகிறது. ஒரு திரைப்படங்கூட இப்பெயரில் வந்தது. தெற்றுப்பல் என்பது வாயிதழ்களுக்குள் அடங்காது வெளிவந்த பல். தெற்றலோடு ஒட்டிப் பல வட்டாரச் சொற்களுமுண்டு. தெற்றுதல் என்பது தெறிக்க வைக்கும் பிற வினைச் சொல்லாகும். (இன்னும் எத்தனை நாட்களுக்குத் தெற்றுதலை இராம.கி. மட்டும் புழங்கும் தனிச்சொல்லாய்ப் பார்த்து விக்கிப்பீடியா போன்ற களஞ்சியங்கள் ஒதுக்கி வைக்குமோ? தெரியாது. project என்ற சொல்லிற்கு இன்னும் எத்தனை நாள் திட்டமென்று இணை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்? என்னைக் கேட்டால் புறத்தெற்று என்று சொல்லிப் போவேன்.)
stereographic projection = திடர்க் கிறுவப் புறத் தெற்றம். = திண்மப் பொருளின் முப்பரிமானத்தையும் தாளிற் கிறுவிக் காட்டும் முறை.
அடுத்தது stereotype. முதலில் type ஐக் காண்போம். உத்தமத்திலும் (INFITT), வேறு சில மடற்குழுக்களிலும் typography பற்றி ஒரு கட்டுரை வெளியிட்ட நினைவிருக்கிறது.. mold தொழிலில் type என்பது முகன்மையானது. Mo(u)ld க்கு ஈடாக, ”வார்ப்படம்” என்பது நம்மூர் கொல்லுத்தொழில் நடைமுறையில் உண்டு. ஒரே மாதிரிப் பொம்மை, சிலை, மானுறுத்தத் தொழிற்பொருட்கள் (manufactured articles) போன்றவற்றைச் செய்யும் போது பல்வேறு அச்சுகளில் உருகிய மாழையை, (metal) அல்லது பலமரை (polymer) ஊற்றி வார்ப்பது இயல்பு. foundary என்பது வார்ப்படச்சாலை என நம்மூரில் அழைக்கப்பட்டது. வார்ப்புத்தொழிலின் நடைமுறைகள் பின் அச்சுத் தொழிலுக்கும் பயன் பட்டன. அச்சு வந்த புதிதில், வெவ்வேறு எழுத்துக்களைச் செய்ய இப்படித் தான் உருகிய ஈய மாழையை வார்ப்படத்தில் (mold) ஊற்றுவர். அப்படி வடிக்கப்பட்ட ஒவ்வொன்றும் வடிப்பு/வார்ப்பு (font) என்றே அழைக்கப்பட்டது.
கல்வெட்டுக்களிலும் இச்சொல்லுண்டு. foundary யில் செய்த எழுத்தச்சுகளை வார்ப்பு என்றழைப்பதே நம் பழம்வரலாற்றோடு தொடர்பு காட்டுஞ் சொல் ஆகும். இதற்குமாறாக ”எழுத்துரு” என்ற புதுச்சொல்லை கணிப்பொறியாளர் அழைப்பது ஒருவகையில் தத்தம் துறைகளுக்குப் பாத்தி கட்டும் வழக்கமே. ஒவ்வொரு துறையும் இப்படித் தனித்தனிப் பாத்தி கட்ட முற்பட்டால் தமிழில் அறிவியற் புரிதலே ஏற்படாது. ]இப்படித்தான் ஒரு காலத்தில் ”அருவி”யிருக்க ”நீர்வீழ்ச்சியை” உருவாக்கினார். அருவியில் அரிக்குஞ் செயல் (erosion) மட்டும் உள்ளது. ஆயினும் மலையிலிருந்து நீர்கொட்டுங் காட்சி நமக்குள் எழுகிறதே, அது எப்படி? ”வார்ப்பி”ருக்க ”எழுத்துரு” என்பது என்னைப் பொறுத்தவரைக் ”கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” தான்.]
stereotype = திடர்வடிப்பு = ஓர் அச்சில் வார்க்கப்படும் திண்ம வடிப்பு, மேலே John Ayto வின் விளக்கத்தைப் படியுங்கள். இச்சொல்லின் வரலாறு புரியும். அதை ஒதுக்கி இற்றைப்பொருளை மட்டும் விளக்குமாப் போல் அந்தரத்திற் சொல் படைக்க ஆசைப்படின் நானென் சொல்வது? முத்திரை குத்தல், அச்சு வடிப்பு, கடைந்தெடுத்த தோற்றம் போன்றன திடர்வடிப்பை நமக்குத் தெரிந்த வேறு போல்மத்தாற் (model) சொல்லிக்காட்டுவதாகும். அவ்வளவு தான். சுற்றி வளைத்துச் சொல்லுதல் என்பது எந்த மொழியையும் வளரவிடாது.
stereoscope = திடரங் காட்டி = திண்ம முப்பரிமானத்தையும் நமக்குக் காட்டுவிக்கும் கருவி; stereophonic = திடர் ஒலிப்பு,= முப்பரிமானத்திலும் நமக்கு வந்துசேரும் ஒலிப்பு. திடர் என்ற அடிச்சொல்லைக் கொண்டு மொத்த வரிசைக் கூட்டுச்சொற்களையும் சொல்லலாம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment