மாணிக்க வாசகர் காலத்தை நிறுவும் எத்தனையோ வகைகளில் ஒன்றாய் "மாணிக்கவாசகர் எம்மாதிரிப் பாவகைகளைக் கையாண்டார்" என்பதைச் சொல்வதும் ஒருமுறையே, முதலில் இதைக் கையாண்டவர் மறைமலை அடிகள். அவருடைய முடிவு கி.பி.3- ஆம் நூற்றாண்டு. நான் முற்றிலும் ஏற்கத் தயங்குவேன். மாணிக்க வாசகர் பற்றிய மறைமலை அடிகளின் ( மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்) ஆராய்ச்சி நூலை, வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள். அண்மையில் (2003) பூம்புகார் பதிப்பகம் [12 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 600 108] அதை மறுபதிப்பாக வெளியிட்டது.
மாணிக்க வாசகர் காலம் பற்றிய என் முழு இடுகையை இப்போது இட வில்லை. அதை முழுதுமெழுதக் காலம் பிடிக்கும். பாவகை வழிமுறை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன். ஓரோர் இலக்கிய ஆசிரியருக்கும், இலக்கிய காலத்திற்கும் விதப்பான யாப்புக் கைச்சாத்து (poetic signature) இருக்கிறது. யாப்புக் கைச்சாத்து என்பது ஓர் எண்ணல்ல. அதுவொரு பங்குப் பரவல் (distribution). பாரதிக்கென ஒரு பரவலுண்டு. கம்பனுக்கெனப் பரவலுண்டு; சங்கப் பாடல்களுக்கெனப் பரவலுண்டு. இவை ஒவ்வொன்றையும் சீர்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கலாம். ஏன், இன்னும் ஆழம்போய் அசைகளின் அடிப்படையிலும் கண்டுபிடிக்கலாம். அப்படியெனில் மாணிக்க வாசகரின் யாப்புக் கைச்சாத்து என்ன?
மரபுப் பாக்களில் ஒவ்வொன்றும், வெவ்வேறு அடிவரையறை கொண்டு, வெவ்வேறு சீரளவு காட்டுவதால், அடிப்படையில் ஒரலகைக் கொணர்வதாய் இங்கு சீர்களோடு நின்று கொள்கிறேன். இல்லாவிடில், நாரங்கையையும், ஆப்பிளையும் ஒப்பிட்டுக் கொண்டிருப்போம். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒப்பிட வேண்டுமெனில், சீர் அலகை அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டும். காட்டாக எண்சீர் ஆசிரிய விருத்தம் 32 சீர் கொண்டது; வெண்பா 15 சீர் கொண்டது; கட்டளைக் கலித்துறை 20 சீர் கொண்டது இப்படி..... ஒவ்வொன்றாய்க் கணக்கிட வேண்டும்,
சங்க காலத்தில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாவே பெரிதும் பயன்பட்டது. இப்போது ஒரு “புது இலக்கியம்” காண்கிறோமென வையுங்கள். அதனுள் பயிலும் ஓசைத்தொகுதிகளைச் சீரளவில் கணக்கிடும் போது இப்பாக்களே அதிக எண்ணிக்கையில் வந்தால் ”அவ்விலக்கியம் சங்ககால யாப்புக் கைச் சாத்து கொண்டது” என ஓரளவு துணிந்து சொல்லலாம். இதுபோல் வெண்பா வகை மேலிருந்தால் குறிப்பிட்ட இலக்கியம் சங்கம் மருவிய காலத்து யாப்புக் கைச்சாத்து சேர்ந்தது எனலாம். சங்கம் மருவிய காலத்தில் கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் போன்றவை வந்துவிட்டன. களப்பிரர் காலத்திலும் அவை விரவின. ஆசிரிய விருத்தம் என்பது களப்பிரர் காலத்தில் தோன்றி அதற்கப்புறம் பெரிதும் புழங்கியது. இன்னுஞ் சொன்னால் சங்கம் மருவிய காலத்திலேயே ஆசிரிய விருத்தம், கலிவிருத்தத் தாக்கத்தில் ஏற்பட்டுவிட்டது எனலாம். ஆயினும் பொ.உ.700 ஆண்டுகளுக்கு அப்புறமே ஆசிரிய விருத்தத் தாக்கம் இங்கு பெரிதும் கூடியது. அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் என்றெழுந்து பின் 12 சீர், 14 சீர், 16 சீர் என வகைதொகை இன்றி பெரிதும் வளர்ந்தது. இனி மாணிக்க வாசகருக்கு வருவோம்.
மாணிக்க வாசகர் பாடல்களைக் கொண்டு ஒரு பட்டியலிட்டால், கீழ்வருவது போல் அமையும். (இப்பட்டியலில் முதல் நிரை பாடப் பெற்ற தலத்தைக் குறிக்கிறது; இரண்டாம் நிரை பாடலுக்கு நம்பியாண்டார் நம்பி கொடுத்த தலைப்பு; மூன்றாம் நிரை பாடல் வகை; நாலாம் நிரை அடி அல்லது பாட்டுகளின் எண்ணிக்கை; ஐந்தாம் நிரை சீர்களின் எண்ணிக்கை; ஆறாம் நிரை அந்தந்தப் பாடலோ, பதிகமோ, சிறுபகுதியோ திருவாசகத்திலுள்ள மொத்த சீர்களில் எத்தனை விழுக்காடு கொண்டதென்று காட்டுகிறது.
அடி/பாட்டு சீர்கள் சீர் %
திருப்பெருந் சிவபுராணம் கலிவெண்பா 95 379 2.206952775
தில்லை கீர்த்தி திருஅகவல் நிலைமண்டில ஆசிரியப்பா 146 584 3.400687125
தில்லை திருவண்டப்பகுதி நிலைமண்டில ஆசிரியப்பா 182 728 4.239212718
தில்லை போற்றித்திருஅகவல் நிலைமண்டில ஆசிரியப்பா 225 900 5.240784953
திருப்பெருந் திருச்சதகம் கட்டளைக் கலித்துறை 10 200 1.164618878
கலிவிருத்தம் 10 160 0.931695103
எண்சீர் ஆசிரிய விருத்தம் 10 320 1.863390206
அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654

எழுசீர் ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
கட்டளைக் கலித்துறை 10 200 1.164618878
எண்சீர் ஆசிரிய விருத்தம் 10 320 1. .863390206
உத்தரகோச நீத்தல்விண்ணப்பம் கட்டளைக் கலித்துறை 50 1000 5.823094392
திருவண்ணா திருவெம்பாவை தரவிணைக்கொச்சகக் கலிப்பா 20 640 3.726780411
திருவண்ணா திரு அம்மானை ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா 20 480 2.795085308
தில்லை திருப்பொற்சுண்ணம் அறுசீர் ஆசிரிய விருத்தம் 20 480 2.795085308
தில்லை திருக்கோத்தும்பி நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா 20 320 1.863390206
தில்லை திருத்தெள்ளேனம் நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா 20 320 1.863390206
தில்லை திருச்சாழல் நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா 20 320 1..863390206
தில்லை திருப்பூவல்லி நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா 20 320 1.863390206
தில்லை திருவுந்தியார் கலித் தாழிசை 20 240 1.397542654
தில்லை திருத்தோள்நோக்கம் நாலடித்தரவுகொச்சகக்கலிப்பா 14 224 1.304373144
உத்தரகோச திருப்பொன்னூசல் ஆறடித்தரவுகொச்சகக்கலிப்பா 9 216 1.257788389
தில்லை அன்னைப் பத்து கலிவிருத்தம் 10 160 0.931695103
தில்லை குயிற்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
தில்லை திருத்தசாங்கம் நேரிசை வெண்பா 10 150 0.873464159
திருப்பெருந் திருப்பள்ளியெழு எண்சீர்ஆசிரிய விருத்தம் 10 320 1.863390206
தில்லை கோயில்மூத்தபதிகம் அறுசீர்ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
தில்லை கோயில்திருப்பதிகம் எழுசீர்ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருப்பெருந் செத்திலாப்பத்து எண்சீர்ஆசிரிய விருத்தம் 10 320 1.863390206
திருப்பெருந் அடைக்கலப்பத்து கலவைப் பாட்டு 10 160 0.931695103
திருப்பெருந் ஆசைப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் அதிசயப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் புணர்ச்சிப்பத்து எழுசீர் ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருப்பெருந் வாழாப்பத்து எழுசீர் ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருப்பெருந் அருட்பத்து எழுசீர் ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருக்கழுக் கழுக்குன்றப்பதிகம் எழுசீர்ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
தில்லை கண்டபத்து கொச்சகக் கலிப்பா 10 160 0.931695103
திருப்பெருந் பிரார்த்தனைப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் குழைத்தபத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் உயிருண்ணிப்பத்து கலி விருத்தம் 10 160 0.931695103
தில்லை அச்சப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் திருப்பாண்டிப்பதிகம் கட்டளைக் கலித்துறை 10 250 1.455773598
திருத்தோணிபிடித்தபத்து எழுசீர் ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருப்பெருந் திருவேசறவு கொச்சகக் கலிப்பா 10 160 0.931695103
திருவாரூர் திருப்புலம்பல் கொச்சகக் கலிப்பா 10 160 0.931695103
தில்லை குலாப்பத்து கொச்சகக் கலிப்பா 10 160 0.931695103
திருப்பெருந் அற்புதப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
திருப்பெருந் சென்னிப்பத்து ஆசிரிய விருத்தம் 10 280 1.63046643
திருப்பெருந் திருவார்த்தை அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
தில்லை எண்ணப்பதிகம் ஆசிரிய விருத்தம் 6 144 0.838525592
தில்லை யாத்திரைப்பத்து அறுசீர் ஆசிரிய விருத்தம் 10 240 1.397542654
தில்லை திருப்படைஎழுச்சி கலிவிருத்தம் 2 32 0.186339021
திருப்பெருந் திரு வெண்பா நேரிசை வெண்பா 11 165 0.960810575
திருப்பெருந் பண்டாய நான்மறை நேரிசை வெண்பா 7 105 0.611424911
தில்லை திருப்படையாட்சி பன்னிருசீர்ஆசிரிய விருத்தம் 8 384 2.236068247
தில்லை ஆனந்த மாலை அறுசீர் ஆசிரிய விருத்தம் 7 168 0.978279858
தில்லை அச்சோப் பதிகம் கலிவிருத்தம் 9 144 0.838525592
திருவாசகத்தில் மொத்தச் சீர்கள் 17173
திருக்கோவையார் மொத்தச் சீர்கள் 8000
இனி ஆறாம் நிரையிலுள்ள விழுக்காடுகளைப் பாவகையால் தொகுத்தால், கீழ்ப்பட்டியல் கிட்டும்.
.
திருவாசகம் மட்டும் திருவாசகம்+திருக்கோவையார்
பாவகை சீர்கள் சீர் % சீர்கள் சீர் %
வெண்பா 799 4.652652419 799 3.174035673
ஆசிரியப்பா 2212 12.8806848 2212 8.787192627
கலிப்பா 3640 21.19606359 3640 14.45993723
கலித்தாழிசை 240 1.397542654 240 0.953402455
கலித்துறை 1650 9.608105747 9650 38.33472371
கலிவிருத்தம் 816 4.751645024 816 3.241568347
ஆசிரிய விருத்தம் 7816 45.51330577 7816 31.04913995
17173 100 25173 100
இப்பட்டியலை மாணிக்கவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic signature) எனலாம். கூர்ந்துகவனியுங்கள் அவருடைய கைச்சாத்து ஆசிரிய விருத்தத்திற்கு மறுபக்கமாய்ப் பெரிதும் சாய்ந்திருப்பதை அறியலாம். அதிலும் திருப்படையாட்சி எனும் 12 சீர் விருத்தத்தை ஒரு வெளிப்புள்ளி (outlier) என்று கொண்டால், இத்தகைய கைச்சாத்து 9-ஆம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் சிற்றறிவிற்குப் படுகிறது. அதே பொழுது பொ.உ. 3 ஆம் நூற்றாண்டு என்றுஞ் சொல்லமாட்டேன். தவிர, களப்பிரர் காலத்தைப் பலரும் சொல்வது போல் பொ.உ.300 க்குச் சற்றுபின் என்றுங் கொள்ள மாட்டேன். என் கணிப்பில் அது பொ.உ.மு.400 க்கு அப்புறம் தான். (அதாவது மூர்த்திநாயனார் காலத்தில் தான்.) இப்போதைக்கு என் கணிப்பில் மாணிக்க வாசகரின் காலம் பொ.உ. 300 க்கும் பொ.உ.400 க்கும் இடைப்பட்ட காலம். மணிமேகலையின் காலம் பொ.உ.450 க்கு அருகில். மணிவாசரின் திருவாசகம் மணிமேகலைக்குச் சற்று முந்தையது என்றே கொள்கிறேன். :”மாணிக்கவாசகரின் காலத்தை” வேறு தொடரில் ஆழமாய்ப் பார்ப்போம். யாப்புக் கைச்சாத்து என்பது காலக் கணிப்பில் ஒரு கூறு. அவ்வளவு தான்.
தேவார மூவரின் கைச்சாத்தை நான் இன்னும் கண்டுபிடிக்க முற்படவில்லை. நேரம் கிடைப்பின் செய்வேன். அதற்கிடையில் வேறு யாரேனும் ஈடுபாடு உள்ளவர் கண்டு பிடித்துச் சொன்னால் இங்கே ஒப்பிடுவதற்குத் தோதாய் இருக்கும்.
அன்புடன்,
இராம.கி.

1 comment:
This methodology may give relative chronology, not a date of writing.
Post a Comment