Friday, July 31, 2009

இடியப்பம் - 3

மா என்ற சொல்லைப் பற்றியும், அதே பொருள் சுட்டும் ”அருப்பம், பிட்டம், நுவணை, பிண்டி, இடி” போன்ற சொற்களின் பிறப்பையும், சேவை, noodle ஆகிய சொற்களின் பிறப்பையும் விளக்குவதாகச் சொல்லியிருந்தேன்.

முதலில் வருவது அருப்பம். அரிசியின் சொற்பிறப்பைத் தெரிந்து கொண்டால், அருப்பம் பிறந்தவகை உடனே புரியும்.

அல் என்னும் வேருக்குச் “சில், துண்டு” என்ற பொருள்களுண்டு. அல்>அல்கு>அல்குதல் என்பது ”சிறுத்தல்” என்ற பொருள் கொள்ளும். லகர, ரகரத் திரிவில் அல்>அர்>அரி>அரிசி என்றாகும். சிறுத்துக் கிடப்பதால் அரி என்றும், அதையே நீட்டி அரியி>அரிசி என்றும் சொல்லியிருக்கிறார்கள். [வரகிற்கும் அரிக்கும் தொடர்பு இல்லை. வறகு>வரகு என்பது புன்செய் நிலத்தில் விளையும் பயிர்.] ”வ்ரிஹி” என்ற சங்கதச் சொல்லைக் காட்டி, ”அதிலிருந்துதான் அரி வந்தது; கோதுமை, பார்லி, அரிசி என எல்லாவற்றையும் குறித்தது” என்று சிலர் குறிப்பார்கள். ஆனால் மற்ற எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் வ்ரிஹி போன்ற சொல் பொதுவான கூலத்தை (தான்யத்தை) உணர்த்தியதில்லை. ஆனாலும் ”சங்கதமே முதல்” என்று முழக்குகிறவர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் நெல்லைக் குறித்துத் தமிழில் வரியெனும் சொல் இருக்கிறது. [தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் வரி உண்டு. பனியார் என்னும் திராவிட மொழியில் வெர்சி என்பதும் கோண்டியில் வர்ஞ்சி என்பதும் உண்டு.] வரியில் இருந்து வெகு எளிதில் திரிந்து வ்ரிஹி ஏற்பட முடியும். இருப்பினும் மறுப்பார்கள். அது என்னவோ, தமிழ் என்று வரும்போது, ”மற்ற தமிழிய மொழிகளில் இது போன்ற சொல் இருக்கிறதா? இல்லை எனில் இது கடன்” என்று கவனமாய்ச் சொல்பவர்கள் சங்கதத்திற்கு மட்டும், இந்நெறியைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாகச் “நான் சொல்கிறேன், கேட்டுக்கொள்” என்பதே பாடமாய் இருக்கிறது..

இன்னுஞ் சிலர் ”தென்மேற்குச் சீனம், இந்திய வடகிழக்கு மாநிலங்கள் வழியாகவும் அரிசி இந்தியத் துணைக்கண்டத்துள் வந்தது, முண்டா மொழியில் இருந்து கடன்பெற்றது” என்பார்கள். அதற்கான தரவுகள் மிகவும் குறைந்தே இருக்கின்றன. என்னுடைய இன்றையப் புரிதலில் அரியைத் தமிழ்ச்சொல்லாகவே கொள்கிறேன்.

இதே சிறுமைக் கருத்தில் தான் அல்>அர்>அரு>அருப்பு>அருப்பம் = சிறியது, நுண்ணியது என்று பொருள் கொள்ளும்..

அடுத்தது பிட்டும், பிண்டியும் ஆகும். ஒரு மாவுப்பொருளை, ஆகச் சிறு அளவிற்கு பிளந்து கொண்டே போனால் பிள்+து = பிட்டு கிடைக்கும். இந்தச் சொற்பிறப்பில் மெல்லினம் ஊடொலிக்க, பிள்+ந்+து = பிண்டு>பிண்டி என்ற சொல் பிறக்கும். முன்னோருக்குச் செய்யும் ”நீத்தோர் நினைவுச் சடங்கில்” எள், அரிசி, பால், தயிர் சேர்த்து உருண்டை பிடித்து வைக்கும் பிண்டமும், பிண்டி என்றே சொல்லப்படும். ஒரே உருவமும், ஒலிப்பும் கொண்ட இரு “பிண்டி”களும் இருவேறு வகையில் பிறந்தவை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இடி என்பது உரலில் அரிசியை உலக்கையால் இடித்துப் பெறும் மாவாகும். மாவிடித்தல் சங்க காலம் தொட்டே நம்மிடம் இருந்திருக்கிறது. ”இடிக்கலப்பு அன்ன நறுவடி மாவின் வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்” என்பது மலைபடுகடாம் 512 ஆம் வரி. இருண்ட மத்தளம் போன்ற பலாப் பழத்தைப் பேசிய பாணர், "இடித்த மாவாய்த் திரைந்து வடியும் சேறு கொண்ட மாம்பழத்தை" இங்கு பேசுகிறார். [மாம்பழங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மாவுச் சேறாய் விளங்கும் பழம் (பங்கனப்பள்ளி இந்த வகை), இன்னொன்று நார்நாராய் இருக்கும் பழம் (ரொமானி என்று இந்தக் காலத்தில் சொல்லுவார்கள்.) [அல்போன்சா இரண்டும் கலந்தது. பங்கனப் பள்ளியைக் காட்டிலும் நார் அதில் கூட உண்டு.] ”மாவு போல் சதை கொண்ட பழம்” என்று சொல்ல, மாவுப் பண்டங்களை நெடுங்காலம் பழகியிருக்க வேண்டும். தமிழில் செயற்கைப் பொருள் இயற்கை நிகழ்வுக்கு உவமமாய்ச் சொல்லப் படுவது மிகவும் அரிது. இடித்தல் வினை சங்க காலத்தில் இருந்து பேசப்படுவதால் தான் மாவுப்பொருட் சிற்றுண்டிகள் நம்மிடம் நெடுங்காலம் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

இடித்தல் வினை மாவிற்கு மட்டும் பயன்படுவது அல்ல. மா இடிப்பது போல அவல் இடிப்பதும் உண்டு. இதுவும் உரல்-உலக்கையைக் கொண்டு செய்வது தான். ”பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை” - அகநானூறு. 141, 17-18; பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை - குறுந்தொகை 238. ஈரம் உலராப் பச்சரிசியை நெல்லின் கதிரோடு எடுத்து முறித்து உதிர்த்து இடித்துப் பெறூவது பாசவல் (= பச்சையான அவல்). இதுபோக உலரவல் என்பதும் உண்டு. இடிசல் என்ற சொல் நொறுங்கிய அரிசி முதலிய கூலங்களைக் (தானியங்களைக்) குறிக்கும். இடிப்பு என்ற பெயர்ச்சொல் மாவைக் குறிக்கும். பின்னால் இடி என்ற சொல்லும் மாவைக் குறித்திருக்கிறது. ”இடிபு = இடிகை, நொறுங்கல் ஞாற்சி.... ஆட்டம் இடிபு,,,நுந்தை எனவும் ஒட்டிக் கொள்க” என்று தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 145 ஆம் நூற்பாவிற்கு இளம்பூரணர் உரையில் இடிபு என்ற தொழிற்பெயர் வரும். ”மாவாகில் .... கூறிடல் அப்பமும் இடியப்பமும் கொழுக்கட்டையே” என்று நீரரர் நிகண்டில் 5,4 நூற்பாவில் வரும். இடியல் என்ற சொல்லுக்குப் பிட்டு என்ற பொருளும் உண்டு. திருநெல்வேலிப் புராராணத்தில் நாட்டுப் படலத்தில் ”எட்டடுக்குத் தாம்பாளமாம் இடியாப்பம் நெய் தோசை” என்று வரும்.

ஆக இடித்தல் என்பது தமிழன் வாழ்வில் மிகவும் நாட்பட்டது. உரல்-உலக்கைக் கருவியை ஒருவன் தன் வாழ்வில் கைக்கொண்ட பின்னால், எல்லாக் கூலங்களையும் அதில் போட்டு இடித்துப் புதிது புதிதாய் ஏதேனும் செய்யக் கை குறுகுறுக்காதோ? அப்படிச் செய்தால், இடியப்ப மாவு நம்மூரில் வாராதோ? உரலையும் உலக்கையும் சிந்து சமவெளி நாகரிகத்திலேயே கண்டு பிடித்திருக்கிறார்களே?. ஆட்டுரலும், அதன் குழவியும் கருங்கல்லில் இருப்பது நம்மூர்ப் பழக்கம் தானே? உரல் இருந்தால் மா நம்மூரில் இல்லாது போகுமா?

கூலங்களை மட்டும் அல்லாது, கிளிஞ்சல்களை உரலில் போட்டு இடித்து சுண்ணம் செய்யும் தொழிலும் இங்கு இருந்தது. [முத்துக் குளித்த தென்பாண்டிநாடு, கிளிஞ்சல்களைச் சும்மாவா விட்டிருக்கும்? கிளிஞ்சல் சுண்ணத்தால் ஆனது என்று தெரிந்த பிறகு, “குறித்தல் - தவறுதல்” முயற்சிகள் தொடராதோ? “பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்” - மதுரைக்காஞ்சி 399; ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் - சிலம் 1, 57 என்ற வரிகளும் சுண்ணாம்பு இடித்த கதையைச் சொல்கின்றனவே? ”அஞ்சனப்பூழி அரிதாரத்து இன்னிடியல்” என்று சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக் குரவையில் கொளுச்சொல் பகுதியின் இரண்டாம் அடியில் இடியல் என்னும் சொல் சுண்ணப் பொடியைக் குறிக்கும். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட வீடுகளுக்கு வழவழச் சுண்ணாம்புச் சாந்து பூசும் வழக்கத்தால், சுண்ணாம்புக்கு கிளிஞ்சலை இடிக்கும் தொழில் 60 ஆண்டுகளுக்கு முன்னாலும் கூட இருந்தது. செட்டிநாட்டுப் பக்கம் உள்ள சுண்ணச் சாந்து இன்றும் வியக்கத் தக்க வகையில் வழவழப்பாக, வெள்ளைவெளேரென்று காட்சியளிக்கும். [ஆனால் இந்த 60 ஆண்டுகளில் சுண்ணச்சாந்து செய்யும் முறை வினைஞர்க்கு (technicians) மறந்து போய், மீண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தேர்வார்ந்த முறையில் தலை தூக்கி எழுகிறது.]

இனி நுவணை, மாவு என்ற சொற்களைப் பார்ப்போம். அரிசியிடிப்பில் குருணை, நொய் என்ற சொற்கள் எழும். குருணை பெரியது, நொய் சிறியது. “ஏடி, நொய்யாய் அரைக்கப் (இடிக்கப்) படாதோ? ரொம்பக் குருணையா இருக்கே?” என்ற பேச்சை எண்ணிப் பாருங்கள். நொய்யி/நொசி/நொசிவு என்பவை நொய்தலுக்கு உறவு; ஆங்கில nice-ற்கு இணையானது. நொய்ந்தது மெலிவதால், நோய் எனும் பெயர்ச்சொல் எழும். நொடித்தல் நொய்தலோடு சேர்ந்ததால், நொட்டம்>நட்டம்>நஷ்டம் கிளைக்கும். நொள்ளலும் நொய்தலோடு தொடர்புள்ளது தான். நொய்தல்>நொகுதல்>நொகை = negative என்பதும் இதே வினையில் எழலாம். பொதிவாய்ப் (positive) பார்ப்பதற்கு மாறாய் நொகையாய் (negative) ஒருசிலர் பார்ப்பார் இல்லையா? பொதிவெண்களும் (positive numbers), நொகையெண்களும் (negative numbers), பலக்கெண்களும் (complex numbers) இல்லாக் கணிதம் இன்று ஏது? நுல்>நுள்>நுய்>நொய்>நொய்வு என்ற சொற்பிறப்பு ஆழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. நுல்>நுள்>நுண்>நுணுகுதல் என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம் நுய்>நுய்வு>நுவ்வு>நூ என்பது சிறிய எள்ளைக் குறிக்கும். நூ என்னும் ஓரெழுத்தொருமொழி இற்றைத் தமிழில் வழக்கின்றிப் போனாலும், தெலுங்கில் நிலைத்து நிற்கிறது. நூநெய் = எள் நெய் = எண்ணெய். அதோடு நுவ்வு>நுவல்>நோல்>நோலை என்று திரிந்து எள்ளுருண்டையைக் குறிக்கும். இன்னும் வேறுவகையில், நுவ்வு>நுவல்>நுவள்>நுவணை என்ற வளர்ச்சியில் நுட்பம் என்னும் பொருளையும் குறிக்கும்.

நுவ்வுதல்>நூவுதல்>நூகுதல் திரிவில் “micro" வுக்கு இணையாய் நூகு எனும் முன்னொட்டுப் பிறக்கும். நுவ்வுதலில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் நுவணை. இடித்த மா என்ற பொருளில் “மென் தினை நுவணை யுண்டு” என்ற வரி ஐங்குறுநூறு 285ஆம் பாடலில் வரும். சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு தான் ஆகப் பழமையானது என்று சொல்லுவார்கள். அதன் காலம் கி.மு.500-200 கணக்கில் இருக்கும். இங்கே இடித்த திணை மா குறிக்கப் படுகிறது. நுவணை என்பது நுவணம் என்றும் திரிந்து இடித்த மாவைக் குறிக்கும். [நுவணை என்ற ஒரே சொல் இடித்த மா என்னும் பூதியற் பொருளையும் (physical substance), நுட்பம் என்னும் வழிமுறையையும் குறித்தாலும், நுண்மைப் பொருள் இரண்டிலும் ஊடுருவி நிற்கிறது.]

நுய்>நொய்>நொய்வு என்ற சொல் நொவ்வு>நவ்வு என்றும் ஒலிப்புத் திரிவில் மாறும். அடுத்து படுதல்>பாடு என்றும், பெறுதல்>பேறு என்றும் வினைச்சொல்/பெயர்ச்சொல் உருவாவது போல நவ்வுதல் வினைச்சொல் நாவு எனும் பெயரை உருவாக்கியிருக்க வேண்டும். [குறித்துக் கொள்ளுங்கள்: வேண்டும் என்றே என் ஊகத்தைச் சொல்லியிருக்கிறேன். காரணம் இருக்கிறது.]

நகர, மகரப் போலி என்பது தமிழில் மிகுதியாய் உண்டு. நுப்பது/முப்பது நுடம்/முடம், நுனி/முனி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதே வழக்கில் நாவு>மாவு ஆக மாறும். முன்னே சொன்ன காரணம் இதுதான். மாவு எனும் பெயர்ச்சொல் பொடி, துகள் என்ற பொருளில் அகரமுதலிகளில் இருக்கிறது. ஆனால், அதற்குப் பின்புலமாய் ஒரு வினைச்சொல்லும் மகர எழுத்தில் தொடங்கக் காணோம். நகர. மகர போலியை இங்கு உருவகித்தால் ஒழிய, வினைச்சொல் கிடைப்பதில்லை. எனவே நொய்வு>நொவ்வு>நவ்வு>*நாவு>மாவு என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ”காயங் கொண்டன மாவிருந்து” என்பது மலைபடுகடாம் 126 ஆம் வரி. அரிசியைப் புடைப்பதை நெல்லைப் பக்கம் நாவுதல் என்றே சொல்லுவார்கள். அதன் பொருள் கொழித்தல் to winnow and clear grain from stones என்றாகும். கொழிக்கும் வினையில் அளவு வாரியாகத் திண்மச் சில்லுகள் பிரித்து, துகள்கள் பறந்து போக, அரிசியும், கல்லும் தனித்துப் பிரிக்கப் படும். அதாவது கொழித்தல் வினையில் மூன்று புதுக்குகள் (products) கிடைக்கும். ஒன்று கல், இரண்டு அரிசி, மூன்று நாம் ஒதுக்கும் துகள். நாவு என்னும் சொல் கல்லைக் குறிப்பதில்லை. நாவு பொடியையே குறித்திருக்க வேண்டும் என்பதை நெல்லை வழக்கைக் கொண்டே முடிவு செய்கிறோம்.

மாவைப் பார்த்த நாம், மாவும் நீரும் கலந்த கலவையை இழையாக மாற்றி உருவாக்கும் சில சிற்றுண்டிகளைப் பார்க்கலாமா?

முதலில் வருவது தேங்குழல். பலரும் அது தேன்போல இருப்பது என்று சொல்லுவார்கள். இத்தனைக்கும் அது இனிப்புக் கிடையாது, அப்புறம் எங்கே தேன் வந்தது? உண்மையில் தேங்குழலுக்கான உரலில் ஈரமாவை வைத்து அதன் மேல் குழவியை வைத்து அழுத்தும் போது நீளமாக இழை வருகிறது. இந்த இழையைக் கொதிக்கும் எண்ணெயின் மேல் விழவைத்துச் வட்டமாய் சுற்றிச் சுற்றித் தேங்குழலை வார்ப்பார்கள். வேறு ஒன்றுமில்லை. தீர்தல் என்றால் தமிழில் நீளுதல் என்று பொருள். [சூடாமணி நிகண்டு]. தொடர்ந்து வருதலை தொயர்ந்து வருதல் என்று சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். “இப்படி விடாமத் தொயர்ந்துக்கினே வந்தா என்ன செய்யுறது?” தொயர்தல்>துயர்தல்>தியர்தல்>தீர்தல், தவிரத் தொய்தல் என்பது துவளுதற் பொருளைக் குறிக்கும். துவளும் பொருள் நீளும். தொய்யவிடுதல் = கயிறு போன்ற நீண்ட பொருளைத் தளரவிடுதல்] ஒரு குழல் போல இங்கே மாவு தொய்வதால் இது தொய்ங்குழல்>தெய்ங்குழல்>தேய்ங்குழல்>தேங்குழல் என்றும், தீர்ங்குழல்>தீங்குழல்>தேங்குழல் என்றும் நடந்திருக்கலாம். எது என்று உறுதி சொல்ல மேலும் தரவுகள் வேண்டும்.

அடுத்தது சேவை. இங்கும் நீட்சிப் பொருளே உண்டு. சேய்மை என்ற சொல்லுக்கு நீளம் என்னும் பொருளை(யாழ்ப்பாண அகராதி காட்டும். சேய்வு>சேவு>சேவை = நீண்டது. காரச்சேவு என்ற பயன்பாட்டையும் இங்கு நோக்கலாம். சந்தகம் என்ற சொல் கொங்கு வட்டாரத்தில் புழங்கும் சொல். [சந்தவம் என்பது திருச்சி வட்டாரத்தில் புழங்கும் சொல்.] நொளுநொளுத்தல் எப்படி நீளம் என்ற சொல்லை உருவாக்கியதோ, அதே போலச் சொளுசொளுத்தல் என்பது இன்னொரு வகை நீளச் சொல்லை உருவாக்கும். சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள். சோடி, ஜோடியானது போல் தான் இது. மழையால் தரை கூழ்போற் குழைந்து, சேறாதலைச் சொளுசொளுத்தல் என்று தென்பாண்டி நாட்டிலும், யாழ்ப்ப்பாணத்திலும் சொல்லுவார்கள். சோறு குழைவதும் கூடச் சொளுசொளுத்தல் என்று சொல்லப் பெறும். ஒல்லியாகிப் போனவன் “சொள்ளைப் பயல்” என்று சொல்லப்படுவான். [மெலிந்தது நீளும் என்பதைக் கவனத்திற் கொள்க.] சொள்ந்தது சந்தது என்று எளிதிற் திரியும். பின் நீண்டது என்ற பொருள் கொள்ளும். சந்தகம், சந்தவம் = இடியப்பம். சந்தகை = இடியப்பக் குழல், சந்தகைப் பலகை.

அடுத்தது noodle = "narrow strip of dried dough," 1779, from Ger. Nudel, of unknown origin. W.Flem. noedel and Fr. nouille are Ger. loan-words. The older noun meaning "simpleton, stupid person" (1753) probably is an unrelated word, as is the slang word for "head" (attested from 1914). என்னால் நீட்டல், நீடல் என்ற வினைச்சொல்லை எண்னாது இருக்க முடியவில்லை. யாராவது ஒருவர் இத்தாலிக்குப் போய் எப்படி noodle பெயரோடு வந்து சேர்ந்தது என்று ஆய்ந்து பார்க்கட்டும்.

விக்கிப் பீடியாவில் பார்த்த செய்தியை முழுமை கருதி இங்கே வெட்டி ஓடுகிறேன்.

“Rice noodles are noodles that are made from rice. Their principal ingredients are rice flour and water. However, sometimes other ingredients such as tapioca or corn starch are also added in order to improve the transparency or increase the gelatinous and chewy texture of the noodles.

Rice noodles are most commonly used in the cuisines of East and Southeast Asia, and are available fresh, frozen, or dried, in various shapes and thicknesses. In Tamil Nadu and parts of Kerala, Sri Lanka, Singapore, Malaysia, Idiappam, a type of rice noodles. Idiappam is usually freshly made at home and tend to be far more tender with distinctive texture, as against the dried form of Chinese noodles. A variation of Idiappam, known as sevai in Tamil Nadu, is used as the base in savoury preparations; it is also called santhakai or sandhavai in the Coimbatore region of Tamil Nadu. A similar mode of preparation called savige is popular in Karnataka.

Shāhe fěn (沙河粉, also called hé fěn)
Chee cheong fun (豬腸粉)
Rice vermicelli (米粉, mǐ fěn; also called "rice sticks")
Guilin rice noodles (桂林米粉)
Silver needle noodles (银针粉)
Mixian (米线, from Yunnan Province)
Ba'nh canh
Ba'nh phở
Shavige (ಶಾವಿಗೆ)
Idiappam (இடியாப்பம்)
Sevai (சேவை|சேவை/சந்தகை/சேமியா)

Dishes using la mian are usually served in a beef or mutton-flavored soup, but sometimes stir-fried and served with a tomato-based sauce. Literally, 拉 (lā) means to pull or stretch, while 麵 (miàn) means noodle. The hand-making process involves taking a lump of dough and repeatedly stretching it to produce many strands of thin, long noodle.

China
Small restaurants serving Lanzhou-style la mian are very common in eastern Chinese cities. They tend to serve a variety of low cost meals, with a choice of la mian, 'dāo xīao mìan' (刀削麵, knife-sliced noodles) and perhaps Xi'an-style 'paomo' (泡饃, steamed bread). Noodles may be served with beef or mutton, either in soup or stir-fried. Many of these la mian restaurants are owned by Hui ethnic families from Gansu, Qinghai and Xinjiang[citation needed], (in Xinjiang they are known as "laghman" in Uyghur), and serve only halal food (thus no pork dishes).

Another typical variety of la mian is Shandong lamian (山东拉面), from the eastern province of Shandong.

Japan
La mian was introduced in Japan (Chinatowns of Kobe or Yokohama) during the Meiji era. Ramen is the Japanese pronunciation of the term; however, ramen is prepared very differently from la mian.

Korea
The Korean term ramyeon (라면) is derived from la mian.

Central Asia
In Central Asia the dish has thicker noodles and is significantly spicier, and is known as laghman. It is most popular in Kyrgyzstan, where it is considered the national dish. It is also popular in Northern Afghanistan, where chick peas are added to it and in the Chitral and Gilgit regions of Pakistan where it is known as Kalli or Dau Dau.

In Chinese, the most commonly used names are:

fěn sī (粉絲): with fěn meaning "powder" and sī meaning "thread"
dōng fěn (冬粉): with the literal meaning of "winter powder"
They are also marketed under the name saifun, the Cantonese pronunciation of the Mandarin xì fěn (細粉; literally "slender powder"), though the name fan2 si1 (粉絲) is the term most often used in Cantonese.

Production
In China, the primary site of production of cellophane noodles is the town of Zhangxing, in the city of Zhaoyuan (招远市), which is administered by the prefecture-level city of Yantai, in the eastern province of Shandong. However, historically, the noodles were shipped through the port of Longkou (which is also under the administration of Yantai), and thus the noodles are known and marketed as Longkou fensi (simplified: 龙口粉丝; traditional: 龍口粉絲).[1]

Use

Cellophane noodles have a clear see-through color when cooked. It is generally much longer than rice vermicelli.
Ants climbing a tree (蚂蚁上树)
Japchae (잡채)In China, cellophane noodles are usually made of mung bean starch and are a popular ingredient used in stir fries, soups, and particularly hot pots. They can also be used as an ingredient in fillings for a variety of Chinese jiaozi (dumplings) and bing (flatbreads), especially in vegetarian versions of these dishes. Thicker cellophane noodles are also commonly used to imitate the appearance and texture of shark's fin in vegetarian soups. Thicker varieties, most popular in China's northeast, are used in stir fries as well as cold salad-like dishes. A popular soup using the ingredient is fried tofu with thin noodles (油豆腐线粉汤; pinyin: yóu dòu fu-xiàn fěn tāng). A popular Sichuan dish called ants climbing a tree (蚂蚁上树; má yǐ shàng shù) consists of stewed cellophane noodles with a spicy ground pork meat sauce.

-----------------------------------------------

கடன் வாங்கிய உண்டியெனில் சீனப்பெயர் நம்மூரில் ஏற்பட்டிருக்குமே! நீட்சிப் பொருளில் தேங்குழல், சேவை, சந்தகம் ஏற்பட்டிருக்காதே? அதே போல “இடியப்பம்” என்ற மாவைக் குறித்த சொல்லும் ஏற்பட்டிருக்காதே?

எனக்குப் பிடித்த இடியப்பம் பற்றி இங்கு எழுதியது மனநிறைவாய் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

8 comments:

Floraipuyal said...

பதிவிற்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி. 'ற'கரத்தை எப்படி பலுக்குவது சரி? ஈழத்தார் போல் 't' என்றா? இல்லை தமிழகத்தார் போல் 'tr' என்றோ அல்லது 'ர'கத்தைச் சற்று அழுத்திச் சொல்லுவது சரியா?

கட்டுரையின் போக்கை மாற்றுவதாகக் கருதினால் வெளியிட வேண்டாம். ஆயினும் இது பற்றி ஒரு கட்டுரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

ஐயா,

பிட்டு, அப்பம் போன்றவற்றின் பெயர்களையும் விளக்க முடியுமா?

மற்றும் தக்காளி தமிழ் சொல்லா? Spanish, Dutch & Portugese மொழிகள் அனைத்திலும் Tomato போன்று தான் அதற்கு பெயர் உள்ளது.

Vijayakumar Subburaj said...

தெலுங்கில், கூலம் என்பது தானியத்தை எடுத்து விட்ட பின் தானியத்தைச் சுற்றியிருக்கும் வேண்டாத பகுதியைக் குறிக்கும். குப்பை கூலம் (கூளம் ?!) என்று சொல்வார்கள் இல்லையா ? இதை மாட்டிற்கு உணவாக போடுவார்கள்.

தெலுங்கில், முறம் கொண்டு புடைத்து தானியங்களையும் வேண்டாத கற்கள் சிறு தூசு இவற்றை பிரிக்கும் முறை "நேவு"தல்.

Vijayakumar Subburaj said...

பழைய பதிவிலிருந்து, ஓரு கேள்வி.

தோல்பி என்ற சொல்லைப் பற்றியும், தோற்கடி என்று துணைவினை சேர்த்து எழுதுவது பற்றியும் சொல்லியிருந்தீர்கள். ஆனால், இது போன்ற செயப்பாட்டு வினைச் சொற்களை (செய்வி, காண்பி, போன்றவை) எடுத்துக் கொண்டாலும் இவையணைத்தும், "ஈ" (கொடு) என்ற துணைவினை சேர்ந்த சொல் போலத் தெரிகிறதே, இது ஏன்?!

இராம.கி said...

அன்பிற்குரிய FloraiPuyal,

றகர ஒலிப்புப் பற்றி எழுத முயல்வேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

பிட்டு = பிள்+து என்று இந்தத் தொடருக்குள் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

அப்பம் என்பது சற்று குழிவான தட்டில் ஊற்றி அப்புவது. [அப்புதல் = தட்டையாக்குதல்]. இதேபோல அப்பளிக்கும் இன்னொரு பொருள் அப்பளம் ஆனதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

“போட்டு அப்பிட்டாண்டா” என்னும் போது சப்பையாக ஆக்குவதைக் குறிக்கிறோம். சப்பளம்>அப்பளம் என்பதும் இதே பொருள் தான்.

தோசையையும் அப்பம் போன்று தான் செய்கிறோம். இரண்டே வேறுபாடுகள். ஒன்று அது தோய்ந்த மா, அப்ப மா தோயாத மா. அப்புறம் அது மட்டத் தட்டு, இது குழிவுத் தட்டு. தோய்வு (fermentation)காரணமாய் அதை தோயை>தோசை என்று சொல்குகிறோம். அதே பொழுது சற்று பருமனாய், தட்டையாய் ஊற்றப்படுவது ஊற்றப்பம்>ஊத்தப்பம் என்றே சொல்லுகிறோம். [அதாவது தோயை அப்பம் என்று சொல்லும் வழக்கமும் ஒருபால் இருக்கிறது.]

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய சுப்பராஜ்,

தோல்பி, காண்பி போன்ற செயப்பாட்டு வினைச் சொற்களுள் “ஈ” என்ற துணைவினை வருவதாய் நான் படித்தவரை அறியவில்லை. இதை மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன். வினைச்சொற்கள் பற்றி விளக்கமாய் எழுதிய தமிழாசிரியர்களின் கட்டுரைகளைப் பாருங்கள். நானும் பார்க்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Vijayakumar Subburaj said...

> தோல்பி, காண்பி போன்ற
> செயப்பாட்டு வினைச் சொற்களுள்
> “ஈ” என்ற துணைவினை
> வருவதாய் நான் படித்தவரை
> அறியவில்லை.

எனக்கும் இது உறுதியாகத் தெரியவில்லை. 'ஈ' என்ற துணைவினை பின்னொட்டாக வருவது போலத் தோன்றியதால்தான் கேட்டேன்.