அண்மையில் நண்பர் ஒருவர் வேறொரு வலைப்பதிவில் suspense என்பதை எப்படித் தமிழில் சொல்லுவது என்று கேட்டிருந்தார். திகில் என்ற சொல் இதற்கு இணையாக வராது. அது terror என்பதற்குத்தான் இணையாக வரும். அப்படியானால், suspense என்பதை எப்படிச் சொல்வது?
"நம்மளைத் தொங்கல்லெ விட்டுட்டுப் பொயிட்டான் பார்த்தியா?" என்று வெகு எளிதாகத் தென் தமிழ்நாட்டில் இரண்டுங் கெட்டான் நிலையைப் பற்றிச் சொல்லுவார்கள். தொங்கல் என்பது மேலே உள்ள வளையத்திலோ, முளையிலோ, உத்தரத்திலோ, மரக்கிளையிலோ கட்டப்படும் தொங்கும் ஒரு துணித் தொட்டில் தான். இந்தத் தொங்கல் என்பதைத் தான் ஊஞ்சல், ஊசல் என்றும் சொல்லுகிறோம். தொங்கலின் ஊசலாட்ட நகர்ச்சியால், அது சாய்வது இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று இடங்கொள்ள முடியாதபடி அமைவதையும் கூட தொங்கலில் விடுதல் என்று சொல்லுவது உண்டு. இதே போல செவிமடற் துளையில் இருந்து தொங்குவதையும் தொங்கட்டான் என்றே சொல்லுவார்கள். தொங்கட்டான் என்பதும் இப்படித்தான் இரண்டு பக்கமும் மாறி மாறிப் போய்வந்து கொண்டே இருக்கும். தொங்கற் கதைகளும் (suspense stories) எப்படி முடியும் என்று சொல்ல முடியாத படி போய்க் கொண்டிருக்கும். நம்மைக் குந்தி இருக்க விடாது செய்யும். தொங்கற் புதினங்கள் (suspense novels) படைப்பதும் ஒரு கலை தான். ஆங்கிலத்திலும் suspense என்ற சொல்லுக்குத் தொங்கல் என்றுதான் பொருள்.
suspend
c.1290, "to bar or exclude temporarily from some function or privilege, to cause to cease for a time," from O.Fr. suspendre, from L. suspendere "to hang, stop," from sub "up from under" + pendere "cause to hang, weigh" (see pendant). The lit. sense of "to cause to hang by a support from above" is recorded from c.1440. Suspenders is attested from 1810, Amer.Eng. Suspended animation first recorded 1795.
அடுத்தது திகில். இது திக் என்னும் மொழியறியா ஒலிக்குறிப்பில் தொடங்கி, அச்சப் பொருளை உணர்த்தி, பின் திகு என்ற சொல்லடியில் இருந்து பிறக்கும். இப்படிப் பிறந்தவை திகை, திகில் போன்ற தமிழ்ச் சொற்கள். ஆங்கிலத்தில் வரும் terror என்பதும் கூட இப்படி டிக்/திக் போன்ற ஒரு ஒலிக்குறிப்புச் சொல் தான். இதைப் பயங்கரம் என்று நாம் சொல்ல முற்படுவது பயத்தை உருவாக்கும் செயல் என்பதால் ஆகும். ஆனால், பயங்கரம் என்று இப்படிச் சொல்லுவது மற்ற தொடர்பான சொற்களை இணைத்துச் சுருக்கமாய்க் கூறுவதற்கு வாய்ப்பாக அமையாது. மாறாக அவை நீண்டு ஒலிக்கும். என்னைக் கேட்டால் திகில் / திகை என்ற பெயர்ச்சொல்லோடு துணைவினைகளை வைத்துச் சொல்லுவது விதப்பாக இருக்கும். terrified = திகைந்து போன, திகிலுற்ற; terrorise = திகிலேற்று; திகையூட்டு; terrorist = திகிலேற்றி(யர்), திகையேற்றி(யர்); திகையேற்றம், திகிலேற்றம் = terrorism
மூன்றாவது சொல் sudden. நாம் இதைச் "சட்டென்று" எனச் சொல்லுகிறோம். இதுவும் ஒலிக்குறிப்புத் தான். இதே போலத் தட்டென்று விழுந்தது; டப்பென்ற ஓசை, விடுவிடு என்று நடுங்கினான் - நாம் பல்வேறு விதமாய் ஒலிக்குறிப்புச் சொல்லிக் கொண்டே போகலாம். தட்டென்று ஓசையில் பிறந்தது தான் தடுமாறிப் போதல் என்ற வினை. விடுவிடு என்பதில் எழுந்த வினைதான் விடைத்துக் கொள்ளுதல் என்ற வினை. விடுவிடு என்பது படபட என்றும் சொல்லப் படும். அதில் எழுந்த வினைச்சொல் படபடத்தல் = to tremble. horrer என்பது நம்மை படபடக்க வைக்கும் ஒரு நிகழ்வு. படபட(ப்பு)த் திரைப் படங்கள் = horror movies.
அடுத்து நான்காவது மருமம் என்ற சொல்.
மருள்>மிரள் = பயங் கொள்ளல்
மருள்+து = மருட்டு>மிரட்டு = பயம் உறுத்துதல்
மருள்+ந்+து = மருண்டு>மிரண்டு = பயங் கொள்ளல்
மருள்+மம் = மருமம் = பயந்தரும் செயல், இடம், சூழ்நிலை - இப்படிப் பலவற்றிற்கும் சொல்லலாம்.
ஐந்தாவது சொல் secret. இதைக் குமுக்கம்>கமுக்கம் என்றும், மறைந்து கிடப்பதால் ம(றை)ந்தணம்>மந்தணம் என்றும் சொல்லுகிறோம். ரகசியம் என்பது தமிழல்ல. (இது எங்கிருந்து வந்த திரிவு என்று நான் இன்னும் ஆயவில்லை. எனவே தவிர்க்கிறேன்.)
ஆறாவது சொல் detect
துள்+பு = துப்பு = துளைத்தல்
துப்பு அறிதல் = துளைத்து அறிதல் = detect
துள்>துழு>துழாவு = தேடு
துளைத்தெடு = detect
இன்னும் பல சொற்கள் fear, fright, dread, panic, alarm, dismay, consternation, trepidation என இருக்கின்றன. இன்னொரு முறை பார்க்கலாம்.
அன்புடன்,
இராம.கி.

5 comments:
ஐயா "Phobia" மற்றும் "Paranoia" என்ற ஆங்கில சொற்களுக்கு ஏற்ற தகுந்த தமிழ் சொற்கள் என்ன?
அன்புள்ள பெயரில்லாதவருக்கு,
paranoia
"mental disorder characterized by systematized delusions," 1891 (earlier paranoea 1811), from Gk. paranoia "mental derangement, madness," from paranoos "mentally ill, insane," from para- "beside, beyond" + noos "mind." Paranoid (adj.) is first attested 1904, from paranoia + Gk. -oeides "like," from eidos "form, shape" (see -oid). The noun meaning "a paranoid person" is attested from 1922.
paranoia என்பதை மனப் பிறழ்ச்சி, மனப் பிறள், மனப் பிறட்டு என்று சொல்லலாம். அதே போல,
a paranoid person என்பதை மனம் பிறழ்ந்தவர் என்று சொல்லலாம்.
phobia:
1786, "fear, horror, aversion," Mod.L., abstracted from compounds in -phobia, from Gk. -phobia, from phobos "fear," originally "flight" (still the only sense in Homer), but it became the common word for "fear" via the notion of "panic, fright" (cf. phobein "put to flight, frighten"), from PIE base *bhegw- "to run" (cf. Lith. begu "to flee," O.C.S. begu "flight," bezati "to flee, run," O.N. bekkr "a stream"). Psychological sense attested by 1895; phobic (adj.) is from 1897.
பயம், பீதி, போன்ற சொற்களை phobia விற்கு இணையாகப் பயன்படுத்தலாம். fear என்பதற்கு இணையாக வெருவு, அச்சம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதில் எல்லாம் ஒரு செந்தரப் பயன்பாடு வேண்டும். தமிழில் இது போன்ற கட்டுப்பாடு நாட்பட்ட புழக்கத்தில் தான் வரும்.
அன்புடன்,
இராம.கி.
திரு இராம.கி,
ஆழமான தங்கள் கருத்துக்களைக் கண்டு
மகிழ்கின்றேன் பயனுறுகின்றேன்.
திக் என்னும் சொல்லின் திக்கு = திசை
என்னும் பொருள் உள்ளதே, அதைத் தாங்கள் குறிக்கவில்லையே என்று நினைத்தேன். திக்கற்ற நிலை.
(வழியற்ற நிலை).
திகில் என்னும் சொல் தமிழ்ச்சொல்லாயின் கீழ்க்கண்டவாறும் பொருள் கொள்ளலாமோ என்று கேட்கவே இதனை எழுதுகிறேன்.
திடீர் என்று, எங்கிருந்து வந்தது என்று
அறியாமல், அறியாமை ஓங்கி அஞ்சுவதால், திக்கு + இல் =திக்கில் என்பது மருவி திகில் ஆகியிருக்கலாமா?
இது சரியான எண்ண ஓட்டமா என்பது திண்ணமாயில்லை.
அன்புடன் செல்வா (வாட்டலூ, கனடா)
Suspense- தொங்கலை எடுத்துக் கொள்ளுமெனில், Hang என்பது? இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவது?
Suspense- தொங்கலை எடுத்துக் கொள்ளுமெனில், Hang என்பது? இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்து�
Post a Comment