அண்மையில் நண்பர் ஒருவர் project management பற்றிய சில சொற்களுக்குத் தனிமடலில் தமிழாக்கம் கேட்டிருந்தார். அவருக்கு அனுப்பிய தனிமடல், பலருக்கும் பொதுவில் பயன்படும் என்பதால் இங்கு அனுப்புகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்புடையீர்,
நீங்கள் கேட்டிருந்த சொற்களில் முதலானது project. இந்தச் சொல்லோடு, jet, jetty, jettyson, project (v), projective, projectively, projection, projectile, subject (v), subjective, subjectively, subjection, object (v), objection, objectionable, object (n), objective, objectively, reject (v), reject (n), rejection, conjecture (v), conjecture (n) ஆகிய சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் ஒன்றிய(uniform)தாகச் சொல்லாக்க முடியும். தமிழில் பல நேரம் ஒரு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு மற்ற தொடர்புள்ள சொற்களுக்கு அது எப்படி அமையும் அல்லது இடறு செய்யும் என்று பாராமலேயே ஒரு பாத்தி கட்டும் போக்கில் (compartmentalized approach) மொழிபெயர்க்க முற்படுகிறோம்.
மேலே கொடுத்துள்ள தொகுதியில் வரும் ஒரு சொல்லான conjecture பற்றி அண்மையில் திரு ரோசா வசந்த் என்னுடைய வலைப்பதிவில் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழியில் இருந்து பலவற்றை மீண்டும் எடுத்து உங்களுக்கு முன்வரிக்கிறேன்.
முதலில் jet என்ற சொல்லைப் பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் எறி என்ற பொருளில் தான் இது வருகிறது. இது முதன்முதல் புழங்கிய ஆண்டு 1420, "to prance, strut, swagger," from M.Fr. jeter "to throw, thrust," from L.L. jectare, abstracted from dejectare, projectare, etc., in place of L. jactare "toss about," freq. of jacere "to throw, cast," from PIE base *ye- "to do" (cf. Gk. iemi, ienai "to send, throw;" Hitt. ijami "I make"). Meaning "to sprout or spurt forth" is from 1692. The noun sense of "stream of water" is from 1696; that of "spout or nozzle for emitting water, gas, fuel, etc." is from 1825. Hence jet propulsion (1867) and the noun meaning "airplane driven by jet propulsion" (1944, from jet engine, 1943). The first one to be in service was the Ger. Messerschmitt Me 262. Jet stream is from 1947. Jet set first attested 1951, slightly before jet commuter plane flights began.
தமிழில் துல் என்னும் வேர் இதுபோன்று மேலிடுவதைக் குறிக்கும். துல்>தெல்>தெற்று என்று திரியும். தெற்று என்ற சொல்லின் பயன்பாட்டை முதலிற் புரிந்து கொள்ளுவோம்.
தெற்றுப் பல் என்று சொல்லுகிறோம் அல்லவா? அது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல். It is a tooth which is jetting out. தெற்றுதல் = வெளியே நீட்டிக் கொண்டிருந்தல். தெற்றுகின்ற பல்லை "தெறுத்திக் கொண்டு இருப்பதா"கவும் சொல்லுவோம். துல் என்ற வேரில் இருந்து துருத்துதலும், துறுத்துதலும் இதே பொருளைக் குறித்துச் சொற்களாய் எழும். நீட்டிக் கொண்டிருக்கும் எதுவும் துருத்தி தான். "துருத்திக்கிணு வண்டாம் பாரு" என்று சென்னைத்தமிழில் சொல்லுகிறோம் இல்லையா? நீர் நிலையில், ஆற்றில், கடலில், நிலம் நீருக்குள் நீட்டிக் கொண்டு இருந்தாலும் அதைத் துருத்தி என்று தான் சொல்லுவோம். காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ள ஊர் திருபூந்துருத்தி. அப்பரால் பாடப்பெற்ற தலம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் என்ற தலம் திருத்துருத்தி என்று அழைக்கப் படும். சிவநெறிக் குரவர் நால்வராலும் பாடப்பெற்ற தலம். துருத்தி என்பது வேறு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் சொல்லும் jetty தான். This can be a river jetty or sea jetty. Any harbour can have a jetty. எந்தத் துறைமுகத்திலும் துருத்தி இருக்கலாம்.
துருத்து>துருத்தி = jetty
1418, from O.Fr. jetee "a jetty, a projecting part of a building," from fem. pp. of jeter "to throw" (see jet (v.)). Notion is of a structure "thrown out" past what surrounds it.
தெற்றுதல் என்ற வினைச்சொல்லையும், புற என்ற முன்னொட்டையும் வைத்து, project (v), projective, projectively, projection, projectile என்பவற்றிற்கு முறையே புறத்தெற்று, புறத்தெற்றான, புறத்தெற்றாக, புறத்தெற்றம், புறத்தெற்று என்று சொல்லலாம். ஒரே சொல் சிலபோது வினையாகவும் மற்ற போது பெயராகவும் ஆள்வதில் வியப்பில்லை.
துல் என்னும் வேர் துல்>தல்>தள்ளு என்றும் திரியும். இதைப் பயன்படுத்தி எற்றித் தள்ளு = jettyson என்று ஆளமுடியும்.
1425 (n.) "act of throwing overboard," from Anglo-Fr. getteson, from O.Fr. getaison "act of throwing (goods overboard)," especially to lighten a ship in distress, from L.L. jactionem (nom. jactatio), from jactatus, pp. of jectare "toss about" (see jet (v.)). The verb is first attested 1848.
இனித் தெற்று என்பது திற்று எனவும் திரியும். உடம்பில் அல்லது ஆடையில் திற்றுத் திற்றாக அரத்தக் கறை (blood stain) இருக்கிறது என்று சொல்லும் போது இப்படி தெற்றித் தெரிவதையே குறிக்கிறோம். அந்தத் திற்றே சற்று பெரிதாக இருந்தால் அதைத் திட்டு என்று சொல்லுவோம். "அதோ, அந்த மணல் திட்டில் தான் அந்தக் குடிசை இருந்தது." "ஆற்றின் நடுவில் திட்டுக்கள் உள்ளன." நிலத்தின் நடுவில் திட்டுக்களை உருவாக்குவது இந்தக் காலப் பழக்கம். There is a petrochemical project in Manali. இதைச் சொல்வதற்குத் திட்டு என்பதைத்தான் சேர்க்கமுடியும். ஏனென்றால் இது பெரியது அல்லவா?
project (n) = புறத்திட்டு; மணலியில் ஒரு பாறைவேதியல் புறத்திட்டு உள்ளது. [திட்டில் இருந்து திட்டம் என்பதை உண்டாக்கி அதை plan, project, scheme, act இன்னும் என்னென்னவோ பலவற்றிற்கு ஒரு para-acetamol போல "சர்வரோக நிவாரணி"யாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். துல்லியம் (pecision) பார்க்காததால், தமிழில் எதையும் சொல்ல வராது என்று இது போன்றவற்றால் நாமே சொல்லிக் கொள்கிறோம். நேரம் செலவழித்தால் எதையும் செய்யமுடியும். என்ன, கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும், அவ்வளவு தான்.]
இனி அடுத்த தொகுதி subject (v), subjective, subjectively, subjection. இதை அகம் என்ற முன்னொட்டை வைத்து எளிதாக அகத்தெற்று, அகத்தெற்றான, அகத்தெற்றாக, அகத்தெற்றம் என்று சொல்லிவிடலாம். அதே பொழுது subject (n) என்பதைத் தெற்று வைத்துச் சொல்லமுடியாது. அதை அகத்திட்டு என்று சொல்லலாம். சிலபோது அகத்தீடு என்றும் நான் சொல்லியிருக்கிறேன். அதைக் காட்டிலும் அகத்திட்டு என்பது இன்னும் உகந்தது என்று இப்போது பரிந்துரைக்கிறேன். what is the subject matter of this discussion? இந்த உரையாடலில் அகத்திட்டுப் பொருள் என்ன? How many subjects you have taken? எவ்வளவு அகத்திட்டுகளை நீ எடுத்திருக்கிறாய்? (இதற்குப் பாடம் என்ற சொல்லை இப்போது பயன்படுத்துகிறோம். subject, study, lesson என எல்லாவற்றிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்தி மொழி நடையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறோம்.)
மூன்றாவது தொகுதி object (v), objection, objectionable இதை மறுத்தெற்று, மறுத்தெற்றம், மறுத்தெற்றான என்று சொல்லலாம். பேச்சுவழக்கில் எற்று என்பதை விடுத்தே சொல்லுகிறோம். இடம், பொருள், ஏவல் பார்த்து அதை அப்படிச் சுருக்கலாம். தவறு இல்லை. சில சட்ட ஆவணங்களில் அப்படி எழுத முடியாது. வெறும் மறுப்பு என்பது தட்டையாக இருக்கும்.
இனி object (n), objective, objectively என்ற தொகுதி. இங்கே வெளி/அல்லது பொது என்ற முன்னொட்டை இடத்திற்குத் தகுந்தாற் போல் பயன்படுத்தலாம். வெளித்திட்டு, வெளித்திட்டான, வெளித்திட்டாக (பொதுத்திட்டு, பொதுத்திட்டான, பொதுத்திட்டாக) என்பவை இயல்பாக அமையும்.
அடுத்தது reject (v), reject (n), rejection, இங்கு விலக்கு என்ற வினையே முன்னொட்டாக அமையும். விலக்கெற்று, விலக்கெற்று, விலக்கெற்றம். மேலே சொன்ன மறுப்பைப் போல எற்று என்ற வினையை விடுத்துச் சுருக்கியும் சிலபோதுகளில் சொல்லலாம்.
முடிவாக conjecture -க்கு வருகிறேன். இதற்குச் சொற்பிறப்பியல் அகரமுதலி c.1384, from L. conjectura "conclusion, interpretation," from conjectus, pp. of conicere "to throw together," from com- "together" + jacere "to throw." Originally of interpretation of signs and omens; sense of "forming of opinion without proof" is 1535 என்று குறிப்புத் தரும்.
கும்முதல் என்ற வினையில் இருந்து கும் என்ற முன்னொட்டு வரும் என்றாலும் இங்கே சொல்லுவதற்கு எளிதாய் சேர்தல் என்ற வினையைப் பயிலலாம். இனி தெற்று என்ற வினையில் முதல் மெய்யை நீக்கியும் தமிழில் அதே பொருள் வரும். இந்தப் பழக்கம் தமிழில் நெடுநாட்கள் உண்டு. அதாவது எற்று என்றாலும் தள்ளு என்ற பொருள் வரும். "அவன் பந்தை எற்றினான் (எத்தினான்)" என்ற ஆட்சியைப் பாருங்கள். எற்று என்ற சொல்லின் முன்னொலி நீண்டு ஏற்று என்றும் வரும். இதுவும் தள்ளுவது தான். ஆனால் மேலே தள்ளுவது என்ற பொருளைக் கொள்ளும். ஏற்று என்பது பெயர்ச்சொல்லாயும் அமையும்.
conjecture (v), conjecture (n)
சேர்ந்தேற்று, சேர்ந்தேற்று
தெற்று என்பதைப் போல நெற்று>நெற்றி என்பதும் முகத்தில் முன்வந்து மேடாய் இருக்கும் பகுதியைக் குறிக்கும். நகர, மகரப் போலியில் நெற்று மெற்று ஆகி மெற்று>மேற்று>மேட்டு என்றும் மேற்கு என்றும் திரிந்து மேட்டுப் பகுதியையும், மேல்>மேடு என்ற சொல்லையும் உருவாக்கும். இன்னும் பல ஒப்புச் சொற்களை எடுத்துக் கூறலாம். அப்புறம் எல்லாமாய்ப் பெரிது நீண்டுவிடும்.
அடுத்து நீங்கள் கொடுத்த சொல் scope. அளவீடு என்பது மாந்த வாழ்வில் கண் என்னும் புலனால் தான் முதலில் நடக்கிறது. When we say what is the scope, we mean how much of details we can see or indicate. அதாவது எவ்வளவு காணக்கூடும் என்றே பொருள் கொள்ளுகிறோம். சொல்லுவதற்கு, ஆய்வதற்கு, விளக்குவதற்கு, விரிப்பதற்கு scope கிடையாது என்றால் காட்டுவதற்கு அங்கு ஒன்றும் இல்லை என்று பொருள். கண்ணுக்குத் தெரிவது காட்சி என்றாலும், நம்முடைய கட்புலன் (காணுகின்ற புலன்) திறனுக்கு மேல் ஒன்று இருக்குமானால் அதைக் காண நமக்குக் கருவி தேவைப்படுகிறது. தொலைவில் இருப்பதைக் காண உதவும் கருவி telescope. இது போல பல scope கள் உள்ளன.
இந்த scope களை எல்லாம் இதுநாள் வரை தன்வய நோக்கிலேயே தமிழில் பார்த்து "நோக்கி" என்று சொல்லி வந்தார்கள். ஆனால் நோக்கி என்ற சொல், மாந்தனைப் போல, தானாக நோக்கும் தன்மை கொண்டவைகளுக்கு மட்டுமே உள்ள தன்வினைச் சொல். இதைக் கருவிகளுக்கும் நீட்டிச் சொல்லும் ஆட்சி தவறு என்பது என் வாதம். நோக்குதல், காணுதல், பார்த்தல், விழித்தல் என்ற வினைச்சொற்கள் தன்வினைச் சொற்கள். இங்கே நோக்குதல் (அல்லது காணுதல்) என்ற தன்வினைச் சொல்லிற்கு மாறாகக் காண்பித்தல் போன்ற பிறவினைச் சொல்லே பயன்பட வேண்டும். அப்பொழுது தான் கருவி என்ற உட்பொருளை விதப்பாக வெளிப்படுத்தும். எனவே, தொலையைக் காண்பிப்பது தொலைக்காண்பி (telescope) என்று சொல்லுவதே சரி என்று நினைக்கிறேன்.
அடுத்து microscope என்பதற்குப் போகுமுன்னால், ஒரு சில முன்னொட்டுக்களைச் சகட்டுமேனிக்கு ஒரே சொல்லை வைத்து "நுணுக" என்று பிழையாகச் சொல்லுவதைப் பற்றி இங்கு நான் உரைக்க வேண்டும். இப்படி சகட்டுமேனிக்குச் சொல்லுவது மேலோட்டப் பேச்சில் சரியென்றாலும், அறிவியல் என்று வரும்போது நுண்மைத்தன்மை வெளிப்படாது. minute (1/60), milli (1/1000), micro(1/1000000), nano(1/1000000000) என்ற நான்கிற்கும் வேறுபாடு காட்ட வேண்டும் என்பதால் minute என்பதை நுணுத்த என்றும், milli என்பதை நுல்லி(ய) என்றும், micro என்பதை நூக என்றும், nano நூண என்றும் சொல்லுவது நல்லது என்று சொல்லி வருகிறேன். minute changes என்பது நுணுத்த மாற்றங்கள் என்றும், milli flow என்பதை நுல்லிய வெள்ளம் என்றும், microwave oven என்பதை நூகலை அடுப்பு என்றும், microscope என்பதை நூகக் காண்பி என்றும், nano particles என்பதை நூணத் துகள்கள் என்றும் வேறு வேறு ஒட்டுக்களை (அதே பொழுது நூ என்ற ஒரே வேரிலே இருந்து தோன்றிய ஒட்டுக்களை) வைத்து விதப்பான வேறுபாடுகளைக் காட்டலாம்.
இதே போல நெஞ்சுத் துடிப்பைக் காட்டும் கருவியை துடிப்புக் காண்பி (stethoscope) என்று சொல்லலாம்.
இதே போல scope என்னும் பொதுமைக் கருத்திற்கு, கருவி காட்டும் "இ" என்னும் ஈற்றைத் தவிர்த்து, காண்பு என்றே வல்லமைப் பொருளில் சொல்லலாம். "இதற்கு மேல் ஆய்வு செய்ய, விரித்துச் சொல்ல, அதற்குக் காண்பு கிடையாது. There is no more scope to research and describe in an expanded manner. ஒரு பொருளுக்குக் காண்பு இருந்தால் தான் காட்சி நமக்குக் கிடைக்கும்.
மூன்றாவது சொல் risk
இதைப் பற்றி நான் உங்களிடம் நேரில் பேசும் போது கூறினேன். வழக்குச் சொல்லே சிவகங்கைப் பக்கம் இருக்கிறது. இக்கு என்ற சொல் இங்கு பெரிதும் பொருந்தும். "இதில் ஒரு இக்கும் கிடையாது. There is no risk in this". "உங்களிடம் இக்கான வேலையை நான் சொல்லவில்லை. I am not telling you a risky job". "நீங்கள் ஏன் இவ்வளவு இக்கிக் கொள்ளுகிறீர்கள்? why do you risk yourself this much?"
நாலாவது சொல் communication. இதற்கு இணையாக வெறுமே தொடர்பு என்று சொல்லுவதில் எனக்கு ஒருப்பாடு கிடையாது. இங்கும் ஒரு பெரிய தொகுதி இருக்கிறது. முன்பு தமிழ் இணையத்திலோ, தமிழ் உலகத்திலோ இது பற்றிப் பேசியிருக்கிறோம். communication என்ற சொல்லைப் பார்ப்பதற்கு முன், அது தொடர்பான மற்ற சொற்களை வரிசையாகப் பார்க்க வேண்டும். அவை:
1. common (n,adj)
2. commune (n)
3. commune (v)
4. community (n)
5. communal (adj)
6. communism (n)
7. communion (n)
8. communique (n)
9. communicable (adj)
10. communicate (v)
11. communication (n)
12. ex-communication (n)
அடிப்படை வேர்ப் பொருள் தெரிந்து கொள்ள வேண்டி, ஒரு etymological dictionary -யில் com (=together) + munis (=to share) என்று இருப்பதைப் பார்த்தேன். எல்லா இடங்களிலும் இப்படி உடைத்துப் பார்த்துப் பொருள் கொள்வது இந்தோ-ஈரோப்பிய மொழிகளுக்குப் பழக்கம். சிலபொழுது மூலம் தெரியாமல் இப்படிப் பிரிப்பது ஆழம் தெரியாமல் காலை விடுவது போல சிக்கலில் மாட்டிவிடும் என்பதால் என்னால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக munis என்ற பிரிப்பைப் பற்றி எனக்கு மிகவே கேள்விக்குறி. இந்தச் சொற்கள் எல்லாம் ஒரு குழுவினரிடையே/ குழுவினரைப் பற்றிய சொற்களாகத் தான் தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது குழுவைப் பற்றிய கருத்து உட்பொருளாக இருந்து அதே பொழுது வெளிப்படுவதில்லை. (அதாவது குழுவினருக்குள் மட்டும் இல்லாமல் யாரும் யாருக்கும் communicate செய்யலாம்.)
சரி, தமிழ் வேர்ப் பொருள் பார்ப்போம் என்று துணிந்தேன்.
தமிழில் 'குல்' என்னும் அடிவேரில் இருந்து கூடுதல், சேருதல், குவிதல் என்னும் பொருளில் பல சொற்கள் பிறந்திருக்கினறன. அவற்றில் பல இந்தோ-ஈரோப்பிய மொழிகளில் ஊடாடியும் வந்திருக்கின்றன. இங்கு தொடர்புள்ளதை மட்டும் குறிப்பிடுகிறேன்.
குல்-குள்-குழு-குழுமுதல்;
கும்முதல்=கூடுதல்;
கும்-கும்பு, கும்புதல்=கூடுதல், கும்பல்,
கும்-குமி-குவி, குமி - குமியல்,
குவிதல் = கூடுதல், கூம்புதல்,
கும்-குமு-குமுக்கு=கூட்டம்
குல்-குலம்=வீடு, tribe, clan etc.
கும்பு-குப்பு-குப்பம்=சிற்றூர், குப்பு - குப்பை, குப்பு-குப்பி
கும்-குமு-குமுதம் = பகலில் குவியும் ஆம்பல்
இதில் கும் என்னும் அடிச்சொல் com, con, col, cor, co என்று ஆங்கிலத்திலும், sym, syn, syl என்று கிரேக்கத்திலும், ஸம் என்று வட மொழியிலும் திரிந்து ஆயிரக்கணக்கான சொற்களைத் தோற்றுவித்துள்ளது. கும் என்னும் முன்னொட்டை வைத்தே ஏகப் பட்ட இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கி விடலாம். ஆனால் ஏற்கனவே வேறு வகையில் சொற்கள் பழகி வந்திருந்தால் அவற்றை மாற்றுவது மிகக்கடினம். எது நிலைக்கும் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். துவிச் சக்கரம் போய் ஈருளியும் போய் மிதி வண்டி முடிவில் வரவில்லையா? கீழே நான் பரிந்துரிப்பவை எல்லாம், புழக்கத்தில் இருப்பவற்றை தூக்கித் தள்ளுபவை அல்ல. இவற்றையும் எண்ணிப் பார்க்கலாம் என்றே சொல்லுகிறேன்.
இப்பொழுது மேலே குறிப்பிட்ட சொல் வரிசையில் முதலில் பார்க்க வேண்டிய சொல் common.
இதற்கும் general என்பதற்கும் பொது என்ற சொல்லே இது நாள் வரை பயன்பட்டு வருகிறது. (எ.கா. Generally common people do not mind this mix up. பொதுவாகப் பொது மக்கள் இந்தக் கலப்பைப் பொருட்படுத்துவது இல்லை.) சீர்மை வேண்டும் என்று இன்றைக்குப் பொது என்னும் சொல்லை மாற்றப் புகுவது கிட்டத் தட்ட முடியாத கதை. ஒருவகையில் பார்த்தால் வேண்டாதது கூட என்று தோன்றும்.
அடுத்தது, commune (noun) - a group of people who live together, though not of the same family, and who share their lives and possessions. இந்தச் சொல்லுக்கு குமுகு என்ற சொல் தமிழ் பால் பற்றுக் கொண்ட சில பொதுவுடைமையாளர்கள் இடையே மிகச் சிறிதளவு பயன்பட்டு வருகிறது. (குமுன் என்றே சொல்லலாம் என்பது என் பரிந்துரை. 'கு-முன்' என்னும் தமிழ் ஒலிப்பு 'கு-ம்யுன்' என்று ஒலிப்பு மாறி 'கும்யுன்' என இந்தோ-ஈரோப்பிய மொழிகளில் பலுக்கப் படும். இந்த நடைமுறை விதியை நான் தலை கீழாகப் பயன்படுத்தி இருக்கிறேன். மேலும் மற்ற ஈறுகள் சேர்ப்பதற்கும் 'குமுகு' என்பதைக் காட்டிலும் 'குமுன்' என்பது எளிதாக இருக்கும்.)
மூன்றாவது, commune (verb) (used with together) - to exchange thoughts, ideas or feelings . The friends were communing together until darkness fell. இரவு வரும்வரை நண்பர்கள் தங்களுக்குள் குமுந்து (அதாவது கலந்து) கொண்டிருந்தார்கள்.
நான்காவது, community. பெரிய அளவான குமுகு, தமிழில் அம் எனும் ஈறு சேர்த்துக் குமுகம் என்றாகும். அதாவது community (குமுகங்களின் ஆயம் குமுகாயம் = society). குமுகாயத்தைத் தான் அரை வட மொழியில் சம்>சமுது என்னும் முன்னொட்டை வைத்துச் சமுதாயம் என்று சில ஆண்டுகளின் முன் கூறிவந்தோம். இப்பொழுது பலரும் குமுகாயம் என்றே பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். (குமுன் என்பதை ஒட்டி சொல்லாக்கினால் குமுனம் எனலாம். அதே பொழுது குமுகம் என்பதே நன்றாகத்தான் இருக்கிறது.)
ஐந்தாவது, communal= குமுனார்ந்த. (எ.கா. Such communal practices demean the society. அத்தகைய குமுனார்ந்த வழக்கங்கள் குமுகாயத்தையே இழிவு படுத்துகின்றன.)
ஆறாவது, communism = குமுனியம். பொது உடைமை என்ற சொல் ஊறிப் போன பிறகு மாற்ற முடியுமா என்பது ஐயப் பாடே.
ஏழாவது, communion = குமுனூர்வு (the state of sharing religious beliefs and practices; குமுனோடு ஊர்வது (ஒன்றுவது) குமுனூர்வு. எ.கா. our church is in communion with the pope - எங்கள் குறுக்கையம் சமயத் தந்தையோடு குமுனூர்ந்து இருக்கிறது.)
எட்டாவது, communique = குமுனிகை (அதே பொழுது, குமுகு/குமுன் என்னும் முன்னொட்டையே தவிர்த்து வெறுமே அறி(வி)க்கை, அல்லது தெரி(வி)க்கை என்று சொல்லலாம் என்றும் தோன்றுகிறது. அறிக்கை என்பது notice எனப் பழகும் போது, தெரிக்கை என்றே communique -ற்கு ஈடாகச் சொல்லலாம்)
ஒன்பதாவது, communicable = குமுனிக்கத் தக்க, குமுனிக்கும் (எ.கா. எய்ட்ஸ் ஒரு குமுனிக்கும் நோய் அல்ல. அது ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் நோய் அல்ல.) இதைப் படரும் என்று கூடச் சொல்லலாம்.
பத்து, மற்றும் பதினொன்றாவது, communicate, communication = குமுனிடு, குமுனீடு (வெளியிடு, முறையிடு என்பதைப் போன்ற சொல்லாக்கம்) (குமுன் என்னும் முன்னொட்டைத் தவிர்த்துப் பொருள் கொள்ள நினைத்தால் 'தெரிவி, தெரிவித்தல்' என்பதையே 'communicate, communication' என்பதற்கு இணையாகப் புழங்கலாம் என்று தோன்றுகிறது. இதே பொருளில் 'inform' என்று வந்தால் பரவாயில்லை. 'communication', 'inform' ஆகிய இரண்டிற்கும் 'to make known' என்ற பொருள் இருப்பதால், இது குழப்பம் தராது. அதே பொழுது, 'அறிவித்தல்' என்பது 'announce' என்பதற்குப் பழகி வரும் காரணத்தால், அதைப் பயன் படுத்த இயலாது.
தெரிதல் - to know; தெரிவித்தல் - to make known
எடுத்துக் காட்டான சில கூற்றுக்கள்:
I communicated to him - நான் அவரிடம் தெரிவித்தேன்.
His communication was very clear - அவருடைய தெரிவிப்பு மிகத் தெளிவாக இருந்தது.
I had communications with him - அவருக்குப் பல தெரிவிப்புகள் செய்திருந்தேன்.
இறுதியாக, ex-communication = குமுனீக்கம் (குல நீக்கம் என்பதும் கூட ஏற்புடையது தான்)
பல இடங்களிலும் communication என்பதற்குத் தொடர்பு எனும் சொல்லைப் பலரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இணையத்திலும் அதே சொல்லை வைத்துப் பலரும் தங்கள் கருத்தை வலியுறுத்தியிருந்தார்கள். தமிழகத்தில் நிலவும் ஆட்சித் தமிழும் அதை ஆதரித்திருக்கிறது. ஆனால் நான் வேறு படுகிறேன். எனக்கென்னவோ தொடர்பு என்பது contact என்பதற்குத் தான் மிகவும் சரி என்று படுகிறது.
tele-communications என்பதற்கு தொலைத் தொடர்பு எனச் சுருக்கமாக அழைக்கத் தலைப் பட்டாலும் அது tele contact என்று தான் பொருள் படுகிறது. அதைத் தொலைத் தெரிவிப்பு என்றால் என்ன? அதே பொழுது பாடமாக வந்தால், தொலைத் தெரிவிப்பியல் (tele-communications) என்றே கூறலாம்.
மொத்தத்தில் என் பரிந்துரை:
1. common (n,adj) - பொது
2. commune (n) - குமுன்
3. commune (v) - குமுதல்
4. community (n) - குமுகம்/குமுனம்
5. communal (adj) - குமுனார்ந்த
6. communism (n) - பொது உடைமை/ குமுனியம்
7. communion (n) - குமுனார்ந்த
8. communique (n) - தெரி(வி)க்கை/குமுனிகை
9. communicable (adj) - படரும்/குமுனிக்கத் தக்க, குமுனிக்கும்
10. communicate (v) - தெரிவி/குமுனிடு
11. communication (n) - தெரிவிப்பு/குமுனீடு
12. ex-communication (n)- குல நீக்கம்/ குமுனீக்கம்
கடைசியாக உள்ள சொல் procurement. ஒரு புதுக்கம் அல்லது விளைவிற்பிற்குத் தேவையான பொருள்களைத் தேடிக் கொண்டுவந்து சேர்த்தல் என்பதையே procurement என்ற சொல் தெரிவிக்கிறது. அதில் காசு கொடுத்து வாங்கியிருத்தல் என்பது பொருட்டல்ல. காசு கொடுக்காமல் பெற்றிருந்தாலும் அது procurement தான். procurement என்பது வாங்குதல் அல்ல. இங்கே cure கொண்டு தருதல் என்ற பொருளிலேயே வந்திருக்கிறது. கொண்டுதரல் என்ற வினை பிணைந்து சுருங்கி கொணர்தல் என்றே இப்பொழுதெல்லாம் புழங்கி வருகிறது. அந்தச் சொல்லே procure என்பதில் வரும் cure என்பதற்குச் சரியாக இருக்கும்.
procurement = முற்கொணரல்
can you procure this? இதை முற்கொணர முடியுமா?
அன்புடன்,
இராம.கி.
In TSCII:
ÒÈò¾¢ðÎ Á¡É¨¸ (project management)
«ñ¨Á¢ø ¿ñÀ÷ ´ÕÅ÷ project management ÀüȢ º¢Ä ¦º¡ü¸ÙìÌò ¾É¢Á¼Ä¢ø ¾Á¢Æ¡ì¸õ §¸ðÊÕó¾¡÷. «ÅÕìÌ «ÛôÀ¢Â ¾É¢Á¼ø, ÀÄÕìÌõ ¦À¡ÐÅ¢ø ÀÂýÀÎõ ±ýÀ¾¡ø þíÌ «ÛôÒ¸¢§Èý.
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
«ýÒ¨¼Â£÷,
¿£í¸û §¸ðÊÕó¾ ¦º¡ü¸Ç¢ø ӾġÉÐ project. þó¾î ¦º¡ø§Ä¡Î, jet, jetty, jettyson, project (v), projective, projectively, projection, projectile, subject (v), subjective, subjectively, subjection, object (v), objection, objectionable, object (n), objective, objectively, reject (v), reject (n), rejection, conjecture (v), conjecture (n) ¬¸¢Â ¦º¡ü¸¨Ç ´Õ ¦¾¡Ì¾¢Â¡¸ô À¡÷츧ÅñÎõ. «ô¦À¡Øо¡ý ´ýÈ¢Â(uniform)¾¡¸î ¦º¡øÄ¡ì¸ ÓÊÔõ. ¾Á¢Æ¢ø ÀÄ §¿Ãõ ´Õ À̾¢¨Â ÁðÎõ À¡÷òÐÅ¢ðÎ ÁüÈ ¦¾¡¼÷ÒûÇ ¦º¡ü¸ÙìÌ «Ð ±ôÀÊ «¨ÁÔõ «øÄÐ þ¼Ú ¦ºöÔõ ±ýÚ À¡Ã¡Á§Ä§Â ´Õ À¡ò¾¢ ¸ðÎõ §À¡ì¸¢ø (compartmentalized approach) ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ ÓüÀθ¢§È¡õ.
§Á§Ä ¦¸¡ÎòÐûÇ ¦¾¡Ì¾¢Â¢ø ÅÕõ ´Õ ¦º¡øÄ¡É conjecture ÀüÈ¢ «ñ¨Á¢ø ¾¢Õ §Ã¡º¡ źóò ±ýÛ¨¼Â ŨÄôÀ¾¢Å¢ø §¸ðÊÕó¾¡÷. «¾üÌ «Ç¢ò¾ ÁÚ¦Á¡Æ¢Â¢ø þÕóÐ ÀÄÅü¨È Á£ñÎõ ±ÎòÐ ¯í¸ÙìÌ ÓýÅâ츢§Èý.
ӾĢø jet ±ýÈ ¦º¡ø¨Äô À¡÷ì¸ §ÅñÎõ. ¬í¸¢Äò¾¢ø ±È¢ ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¾¡ý þÐ ÅÕ¸¢ÈÐ. þÐ Ó¾ýÓ¾ø ÒÆí¸¢Â ¬ñÎ 1420, "to prance, strut, swagger," from M.Fr. jeter "to throw, thrust," from L.L. jectare, abstracted from dejectare, projectare, etc., in place of L. jactare "toss about," freq. of jacere "to throw, cast," from PIE base *ye- "to do" (cf. Gk. iemi, ienai "to send, throw;" Hitt. ijami "I make"). Meaning "to sprout or spurt forth" is from 1692. The noun sense of "stream of water" is from 1696; that of "spout or nozzle for emitting water, gas, fuel, etc." is from 1825. Hence jet propulsion (1867) and the noun meaning "airplane driven by jet propulsion" (1944, from jet engine, 1943). The first one to be in service was the Ger. Messerschmitt Me 262. Jet stream is from 1947. Jet set first attested 1951, slightly before jet commuter plane flights began.
¾Á¢Æ¢ø Ðø ±ýÛõ §Å÷ þЧÀ¡ýÚ §ÁÄ¢ÎŨ¾ì ÌÈ¢ìÌõ. Ðø>¦¾ø>¦¾üÚ ±ýÚ ¾¢Ã¢Ôõ. ¦¾üÚ ±ýÈ ¦º¡øÄ¢ý ÀÂýÀ¡ð¨¼ ӾĢü ÒâóÐ ¦¸¡û٧šõ.
¦¾üÚô Àø ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ «øÄÅ¡? «Ð ¦ÅÇ¢§Â ¿£ðÊì ¦¸¡ñÊÕìÌõ Àø. It is a tooth which is jetting out. ¦¾üÚ¾ø = ¦ÅÇ¢§Â ¿£ðÊì ¦¸¡ñÊÕó¾ø. ¦¾üÚ¸¢ýÈ Àø¨Ä "¦¾Úò¾¢ì ¦¸¡ñÎ þÕôÀ¾¡"¸×õ ¦º¡ø֧šõ. Ðø ±ýÈ §Åâø þÕóÐ ÐÕòоÖõ, ÐÚòоÖõ þ§¾ ¦À¡Õ¨Çì ÌÈ¢òÐî ¦º¡ü¸Ç¡ö ±Øõ. ¿£ðÊì ¦¸¡ñÊÕìÌõ ±Ð×õ ÐÕò¾¢ ¾¡ý. "ÐÕò¾¢ì¸¢Ï Åñ¼¡õ À¡Õ" ±ýÚ ¦ºý¨Éò¾Á¢Æ¢ø ¦º¡øÖ¸¢§È¡õ þø¨Ä¡? ¿£÷ ¿¢¨Ä¢ø, ¬üÈ¢ø, ¸¼Ä¢ø, ¿¢Äõ ¿£ÕìÌû ¿£ðÊì ¦¸¡ñÎ þÕó¾¡Öõ «¨¾ò ÐÕò¾¢ ±ýÚ ¾¡ý ¦º¡ø֧šõ. ¸¡Å¢Ã¢ìÌõ, ̼ÓÕðÊìÌõ þ¨¼Â¢ø ¯ûÇ °÷ ¾¢ÕâóÐÕò¾¢. «ôÀáø À¡¼ô¦ÀüÈ ¾Äõ. Á¢ġÎШÈìÌ «Õ¸¢ø ¯ûÇ Ìò¾¡Äõ ±ýÈ ¾Äõ ¾¢ÕòÐÕò¾¢ ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. º¢Å¦¿È¢ì ÌÃÅ÷ ¿¡øÅáÖõ À¡¼ô¦ÀüÈ ¾Äõ. ÐÕò¾¢ ±ýÀÐ §ÅÚ ´ýÚÁ¢ø¨Ä. ¬í¸¢Äò¾¢ø ¦º¡øÖõ jetty ¾¡ý. This can be a river jetty or sea jetty. Any harbour can have a jetty. ±ó¾ò ШÈÓ¸ò¾¢Öõ ÐÕò¾¢ þÕì¸Ä¡õ.
ÐÕòÐ>ÐÕò¾¢ = jetty
1418, from O.Fr. jetee "a jetty, a projecting part of a building," from fem. pp. of jeter "to throw" (see jet (v.)). Notion is of a structure "thrown out" past what surrounds it.
¦¾üÚ¾ø ±ýÈ Å¢¨É¡ø¨ÄÔõ, ÒÈ ±ýÈ Óý¦É¡ð¨¼Ôõ ¨ÅòÐ, project (v), projective, projectively, projection, projectile ±ýÀÅüÈ¢üÌ Ó¨È§Â ÒÈò¦¾üÚ, ÒÈò¦¾üÈ¡É, ÒÈò¦¾üÈ¡¸, ÒÈò¦¾üÈõ, ÒÈò¦¾üÚ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. ´§Ã ¦º¡ø º¢Ä§À¡Ð Å¢¨É¡¸×õ ÁüÈ §À¡Ð ¦ÀÂá¸×õ ¬ûž¢ø Å¢ÂôÀ¢ø¨Ä.
Ðø ±ýÛõ §Å÷ Ðø>¾ø>¾ûÙ ±ýÚõ ¾¢Ã¢Ôõ. þ¨¾ô ÀÂýÀÎò¾¢ ±üÈ¢ò ¾ûÙ = jettyson ±ýÚ ¬ÇÓÊÔõ.
1425 (n.) "act of throwing overboard," from Anglo-Fr. getteson, from O.Fr. getaison "act of throwing (goods overboard)," especially to lighten a ship in distress, from L.L. jactionem (nom. jactatio), from jactatus, pp. of jectare "toss about" (see jet (v.)). The verb is first attested 1848.
þÉ¢ò ¦¾üÚ ±ýÀÐ ¾¢üÚ ±É×õ ¾¢Ã¢Ôõ. ¯¼õÀ¢ø «øÄÐ ¬¨¼Â¢ø ¾¢üÚò ¾¢üÈ¡¸ «Ãò¾ì ¸¨È (blood stain) þÕ츢ÈÐ ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð þôÀÊ ¦¾üÈ¢ò ¦¾Ã¢Å¨¾§Â ÌȢ츢§È¡õ. «ó¾ò ¾¢ü§È ºüÚ ¦À⾡¸ þÕó¾¡ø «¨¾ò ¾¢ðÎ ±ýÚ ¦º¡ø֧šõ. "«§¾¡, «ó¾ Á½ø ¾¢ðÊø ¾¡ý «ó¾ì Ìʨº þÕó¾Ð." "¬üÈ¢ý ¿ÎÅ¢ø ¾¢ðÎì¸û ¯ûÇÉ." ¿¢Äò¾¢ý ¿ÎÅ¢ø ¾¢ðÎì¸¨Ç ¯ÕÅ¡ìÌÅÐ þó¾ì ¸¡Äô ÀÆì¸õ. There is a petrochemical project in Manali. þ¨¾î ¦º¡øžüÌò ¾¢ðÎ ±ýÀ¨¾ò¾¡ý §º÷ì¸ÓÊÔõ. ²¦ÉýÈ¡ø þÐ ¦ÀâÂÐ «øÄÅ¡?
project (n) = ÒÈò¾¢ðÎ; Á½Ä¢Â¢ø ´Õ À¡¨È§Å¾¢Âø ÒÈò¾¢ðÎ ¯ûÇÐ. [¾¢ðÊø þÕóÐ ¾¢ð¼õ ±ýÀ¨¾ ¯ñ¼¡ì¸¢ «¨¾ plan, project, scheme, act þýÛõ ±ý¦Éýɧš ÀÄÅüÈ¢üÌ ´Õ para-acetamol §À¡Ä "º÷ŧḠ¿¢Å¡Ã½¢"¡¸ô ÀÂýÀÎò¾¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ. ÐøÄ¢Âõ (pecision) À¡÷측¾¾¡ø, ¾Á¢Æ¢ø ±¨¾Ôõ ¦º¡øÄ ÅáР±ýÚ þÐ §À¡ýÈÅüÈ¡ø ¿¡§Á ¦º¡øÄ¢ì ¦¸¡û¸¢§È¡õ. §¿Ãõ ¦ºÄÅÆ¢ò¾¡ø ±¨¾Ôõ ¦ºöÂÓÊÔõ. ±ýÉ, ¦¸¡ïºõ Ţ⚸ô À¡÷츧ÅñÎõ, «ùÅÇ× ¾¡ý.]
þÉ¢ «Îò¾ ¦¾¡Ì¾¢ subject (v), subjective, subjectively, subjection. þ¨¾ «¸õ ±ýÈ Óý¦É¡ð¨¼ ¨ÅòÐ ±Ç¢¾¡¸ «¸ò¦¾üÚ, «¸ò¦¾üÈ¡É, «¸ò¦¾üÈ¡¸, «¸ò¦¾üÈõ ±ýÚ ¦º¡øĢŢ¼Ä¡õ. «§¾ ¦À¡ØÐ subject (n) ±ýÀ¨¾ò ¦¾üÚ ¨ÅòÐî ¦º¡øÄÓÊ¡Ð. «¨¾ «¸ò¾¢ðÎ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. º¢Ä§À¡Ð «¸ò¾£Î ±ýÚõ ¿¡ý ¦º¡øĢ¢Õ츢§Èý. «¨¾ì ¸¡ðÊÖõ «¸ò¾¢ðÎ ±ýÀÐ þýÛõ ¯¸ó¾Ð ±ýÚ þô§À¡Ð ÀâóШÃ츢§Èý. what is the subject matter of this discussion? þó¾ ¯¨Ã¡¼Ä¢ø «¸ò¾¢ðÎô ¦À¡Õû ±ýÉ? How many subjects you have taken? ±ùÅÇ× «¸ò¾¢ðθ¨Ç ¿£ ±Îò¾¢Õ츢ȡö? (þ¾üÌô À¡¼õ ±ýÈ ¦º¡ø¨Ä þô§À¡Ð ÀÂýÀÎòи¢§È¡õ. subject, study, lesson ±É ±øÄ¡ÅüÈ¢üÌõ ´§Ã ¦º¡ø¨Äô ÀÂýÀÎò¾¢ ¦Á¡Æ¢ ¿¨¼¨Â ÁØí¸ÊòÐì ¦¸¡ñÊÕ츢§È¡õ.)
ãýÈ¡ÅÐ ¦¾¡Ì¾¢ object (v), objection, objectionable þ¨¾ ÁÚò¦¾üÚ, ÁÚò¦¾üÈõ, ÁÚò¦¾üÈ¡É ±ýÚ ¦º¡øÄÄ¡õ. §ÀîÍÅÆ츢ø ±üÚ ±ýÀ¨¾ Å¢Îò§¾ ¦º¡øÖ¸¢§È¡õ. þ¼õ, ¦À¡Õû, ²Åø À¡÷òÐ «¨¾ «ôÀÊî ÍÕì¸Ä¡õ. ¾ÅÚ þø¨Ä. º¢Ä ºð¼ ¬Å½í¸Ç¢ø «ôÀÊ ±Ø¾ ÓÊ¡Ð. ¦ÅÚõ ÁÚôÒ ±ýÀÐ ¾ð¨¼Â¡¸ þÕìÌõ.
þÉ¢ object (n), objective, objectively ±ýÈ ¦¾¡Ì¾¢. þí§¸ ¦ÅÇ¢/«øÄÐ ¦À¡Ð ±ýÈ Óý¦É¡ð¨¼ þ¼ò¾¢üÌò ¾Ìó¾¡ü §À¡ø ÀÂýÀÎò¾Ä¡õ. ¦ÅÇ¢ò¾¢ðÎ, ¦ÅÇ¢ò¾¢ð¼¡É, ¦ÅÇ¢ò¾¢ð¼¡¸ (¦À¡Ðò¾¢ðÎ, ¦À¡Ðò¾¢ð¼¡É, ¦À¡Ðò¾¢ð¼¡¸) ±ýÀ¨Å þÂøÀ¡¸ «¨ÁÔõ.
«Îò¾Ð reject (v), reject (n), rejection, þíÌ Å¢ÄìÌ ±ýÈ Å¢¨É§Â Óý¦É¡ð¼¡¸ «¨ÁÔõ. Å¢Ä즸üÚ, Å¢Ä즸üÚ, Å¢Ä즸üÈõ. §Á§Ä ¦º¡ýÉ ÁÚô¨Àô §À¡Ä ±üÚ ±ýÈ Å¢¨É¨Â Å¢ÎòÐî ÍÕ츢Ôõ º¢Ä§À¡Ð¸Ç¢ø ¦º¡øÄÄ¡õ.
ÓÊÅ¡¸ conjecture -ìÌ ÅÕ¸¢§Èý. þ¾üÌî ¦º¡üÀ¢ÈôÀ¢Âø «¸ÃӾĢ c.1384, from L. conjectura "conclusion, interpretation," from conjectus, pp. of conicere "to throw together," from com- "together" + jacere "to throw." Originally of interpretation of signs and omens; sense of "forming of opinion without proof" is 1535 ±ýÚ ÌÈ¢ôÒò ¾Õõ.
ÌõÓ¾ø ±ýÈ Å¢¨É¢ø þÕóÐ Ìõ ±ýÈ Óý¦É¡ðÎ ÅÕõ ±ýÈ¡Öõ þí§¸ ¦º¡øÖžüÌ ±Ç¢¾¡ö §º÷¾ø ±ýÈ Å¢¨É¨Âô À¢ÄÄ¡õ. þÉ¢ ¦¾üÚ ±ýÈ Å¢¨É¢ø Ó¾ø ¦Áö¨Â ¿£ì¸¢Ôõ ¾Á¢Æ¢ø «§¾ ¦À¡Õû ÅÕõ. þó¾ô ÀÆì¸õ ¾Á¢Æ¢ø ¦¿Î¿¡ð¸û ¯ñÎ. «¾¡ÅÐ ±üÚ ±ýÈ¡Öõ ¾ûÙ ±ýÈ ¦À¡Õû ÅÕõ. "«Åý Àó¨¾ ±üȢɡý (±ò¾¢É¡ý)" ±ýÈ ¬ðº¢¨Âô À¡Õí¸û. ±üÚ ±ýÈ ¦º¡øÄ¢ý Óý¦É¡Ä¢ ¿£ñÎ ²üÚ ±ýÚõ ÅÕõ. þÐ×õ ¾ûÙÅÐ ¾¡ý. ¬É¡ø §Á§Ä ¾ûÙÅÐ ±ýÈ ¦À¡Õ¨Çì ¦¸¡ûÙõ. ²üÚ ±ýÀÐ ¦ÀÂ÷¡øÄ¡Ôõ «¨ÁÔõ.
conjecture (v), conjecture (n)
§º÷ó§¾üÚ, §º÷ó§¾üÚ
¦¾üÚ ±ýÀ¨¾ô §À¡Ä ¦¿üÚ>¦¿üÈ¢ ±ýÀÐõ Ó¸ò¾¢ø ÓýÅóÐ §Á¼¡ö þÕìÌõ À̾¢¨Âì ÌÈ¢ìÌõ. ¿¸Ã, Á¸Ãô §À¡Ä¢Â¢ø ¦¿üÚ ¦ÁüÚ ¬¸¢ ¦ÁüÚ>§ÁüÚ>§ÁðÎ ±ýÚõ §ÁüÌ ±ýÚõ ¾¢Ã¢óÐ §ÁðÎô À̾¢¨ÂÔõ, §Áø>§ÁÎ ±ýÈ ¦º¡ø¨ÄÔõ ¯ÕÅ¡ìÌõ. þýÛõ ÀÄ ´ôÒî ¦º¡ü¸¨Ç ±ÎòÐì ÜÈÄ¡õ. «ôÒÈõ ±øÄ¡Á¡öô ¦ÀâР¿£ñÎÅ¢Îõ.
«ÎòÐ ¿£í¸û ¦¸¡Îò¾ ¦º¡ø scope. «ÇţΠ±ýÀÐ Á¡ó¾ Å¡úÅ¢ø ¸ñ ±ýÛõ ÒÄÉ¡ø ¾¡ý ӾĢø ¿¼ì¸¢ÈÐ. When we say what is the scope, we mean how much of details we can see or indicate. «¾¡ÅÐ ±ùÅÇ× ¸¡½ìÜÎõ ±ý§È ¦À¡Õû ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¦º¡øÖžüÌ, ¬öžüÌ, Å¢ÇìÌžüÌ, ŢâôÀ¾üÌ scope ¸¢¨¼Â¡Ð ±ýÈ¡ø ¸¡ðΞüÌ «íÌ ´ýÚõ þø¨Ä ±ýÚ ¦À¡Õû. ¸ñÏìÌò ¦¾Ã¢ÅÐ ¸¡ðº¢ ±ýÈ¡Öõ, ¿õÓ¨¼Â ¸ðÒÄý (¸¡Ï¸¢ýÈ ÒÄý) ¾¢ÈÛìÌ §Áø ´ýÚ þÕìÌÁ¡É¡ø «¨¾ì ¸¡½ ¿ÁìÌì ¸ÕÅ¢ §¾¨ÅôÀθ¢ÈÐ. ¦¾¡¨ÄÅ¢ø þÕôÀ¨¾ì ¸¡½ ¯¾×õ ¸ÕÅ¢ telescope. þÐ §À¡Ä ÀÄ scope ¸û ¯ûÇÉ.
þó¾ scope ¸¨Ç ±øÄ¡õ þп¡û Ũà ¾ýÅ §¿¡ì¸¢§Ä§Â ¾Á¢Æ¢ø À¡÷òÐ "§¿¡ì¸¢" ±ýÚ ¦º¡øÄ¢ Åó¾¡÷¸û. ¬É¡ø §¿¡ì¸¢ ±ýÈ ¦º¡ø, Á¡ó¾¨Éô §À¡Ä, ¾¡É¡¸ §¿¡ìÌõ ¾ý¨Á ¦¸¡ñ¼¨Å¸ÙìÌ ÁðΧÁ ¯ûÇ ¾ýÅ¢¨Éî ¦º¡ø. þ¨¾ì ¸ÕÅ¢¸ÙìÌõ ¿£ðÊî ¦º¡øÖõ ¬ðº¢ ¾ÅÚ ±ýÀÐ ±ý Å¡¾õ. §¿¡ì̾ø, ¸¡Ï¾ø, À¡÷ò¾ø, ŢƢò¾ø ±ýÈ Å¢¨É¡ü¸û ¾ýÅ¢¨Éî ¦º¡ü¸û. þí§¸ §¿¡ì̾ø («øÄÐ ¸¡Ï¾ø) ±ýÈ ¾ýÅ¢¨Éî ¦º¡øÄ¢üÌ Á¡È¡¸ì ¸¡ñÀ¢ò¾ø §À¡ýÈ À¢ÈÅ¢¨Éî ¦º¡ø§Ä ÀÂýÀ¼ §ÅñÎõ. «ô¦À¡ØÐ ¾¡ý ¸ÕÅ¢ ±ýÈ ¯ð¦À¡Õ¨Ç Å¢¾ôÀ¡¸ ¦ÅÇ¢ôÀÎòÐõ. ±É§Å, ¦¾¡¨Ä¨Âì ¸¡ñÀ¢ôÀÐ ¦¾¡¨Ä측ñÀ¢ (telescope) ±ýÚ ¦º¡øÖŧ¾ ºÃ¢ ±ýÚ ¿¢¨É츢§Èý.
«ÎòÐ microscope ±ýÀ¾üÌô §À¡ÌÓýÉ¡ø, ´Õ º¢Ä Óý¦É¡ðÎ츨Çî º¸ðΧÁÉ¢ìÌ ´§Ã ¦º¡ø¨Ä ¨ÅòÐ "Ñϸ" ±ýÚ À¢¨Æ¡¸î ¦º¡øÖŨ¾ô ÀüÈ¢ þíÌ ¿¡ý ¯¨Ãì¸ §ÅñÎõ. þôÀÊ º¸ðΧÁÉ¢ìÌî ¦º¡øÖÅÐ §Á§Ä¡ð¼ô §Àø ºÃ¢¦ÂýÈ¡Öõ, «È¢Å¢Âø ±ýÚ ÅÕõ§À¡Ð Ññ¨Áò¾ý¨Á ¦ÅÇ¢ôÀ¼¡Ð. minute (1/60), milli (1/1000), micro(1/1000000), nano(1/1000000000) ±ýÈ ¿¡ý¸¢üÌõ §ÅÚÀ¡Î ¸¡ð¼ §ÅñÎõ ±ýÀ¾¡ø minute ±ýÀ¨¾ ÑÏò¾ ±ýÚõ, milli ±ýÀ¨¾ ÑøÄ¢(Â) ±ýÚõ, micro ±ýÀ¨¾ Ḡ±ýÚõ, nano á½ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¿øÄÐ ±ýÚ ¦º¡øÄ¢ ÅÕ¸¢§Èý. minute changes ±ýÀÐ ÑÏò¾ Á¡üÈí¸û ±ýÚõ, milli flow ±ýÀ¨¾ ÑøĢ ¦ÅûÇõ ±ýÚõ, microwave oven ±ýÀ¨¾ á¸¨Ä «ÎôÒ ±ýÚõ, microscope ±ýÀ¨¾ á¸ì ¸¡ñÀ¢ ±ýÚõ, nano particles ±ýÀ¨¾ á½ò иû¸û ±ýÚõ §ÅÚ §ÅÚ ´ðÎì¸¨Ç («§¾ ¦À¡ØÐ á ±ýÈ ´§Ã §Åâ§Ä þÕóÐ §¾¡ýȢ ´ðÎ츨Ç) ¨ÅòРŢ¾ôÀ¡É §ÅÚÀ¡Î¸¨Çì ¸¡ð¼Ä¡õ.
þ§¾ §À¡Ä ¦¿ïÍò ÐÊô¨Àì ¸¡ðÎõ ¸ÕÅ¢¨Â ÐÊôÒì ¸¡ñÀ¢ (stethoscope) ±ýÚ ¦º¡øÄÄ¡õ.
þ§¾ §À¡Ä scope ±ýÛõ ¦À¡Ð¨Áì ¸Õò¾¢üÌ, ¸ÕÅ¢ ¸¡ðÎõ "þ" ±ýÛõ ®ü¨Èò ¾Å¢÷òÐ, ¸¡ñÒ ±ý§È ÅøĨÁô ¦À¡ÕÇ¢ø ¦º¡øÄÄ¡õ. "þ¾üÌ §Áø ¬ö× ¦ºöÂ, ŢâòÐî ¦º¡øÄ, «¾üÌì ¸¡ñÒ ¸¢¨¼Â¡Ð. There is no more scope to research and describe in an expanded manner. ´Õ ¦À¡ÕÙìÌì ¸¡ñÒ þÕó¾¡ø ¾¡ý ¸¡ðº¢ ¿ÁìÌì ¸¢¨¼ìÌõ.
ãýÈ¡ÅÐ ¦º¡ø risk
þ¨¾ô ÀüÈ¢ ¿¡ý ¯í¸Ç¢¼õ §¿Ã¢ø §ÀÍõ §À¡Ð ÜÈ¢§Éý. ÅÆìÌî ¦º¡ø§Ä º¢Å¸í¨¸ô Àì¸õ þÕ츢ÈÐ. þìÌ ±ýÈ ¦º¡ø þíÌ ¦ÀâÐõ ¦À¡ÕóÐõ. "þ¾¢ø ´Õ þìÌõ ¸¢¨¼Â¡Ð. There is no risk in this". "¯í¸Ç¢¼õ þì¸¡É §Å¨Ä¨Â ¿¡ý ¦º¡øÄÅ¢ø¨Ä. I am not telling you a risky job". "¿£í¸û ²ý þùÅÇ× þì¸¢ì ¦¸¡ûÙ¸¢È£÷¸û? why do you risk yourself this much?"
¿¡Ä¡ÅÐ ¦º¡ø communication. þ¾üÌ þ¨½Â¡¸ ¦ÅÚ§Á ¦¾¡¼÷Ò ±ýÚ ¦º¡øÖž¢ø ±ÉìÌ ´ÕôÀ¡Î ¸¢¨¼Â¡Ð. þíÌõ ´Õ ¦Àâ ¦¾¡Ì¾¢ þÕ츢ÈÐ. ÓýÒ ¾Á¢ú þ¨½Âò¾¢§Ä¡, ¾Á¢ú ¯Ä¸ò¾¢§Ä¡ þÐ ÀüÈ¢ô §Àº¢Â¢Õ츢§È¡õ. communication ±ýÈ ¦º¡ø¨Äô À¡÷ôÀ¾üÌ Óý, «Ð ¦¾¡¼÷À¡É ÁüÈ ¦º¡ü¸¨Ç Å⨺¡¸ô À¡÷ì¸ §ÅñÎõ. «¨Å:
1. common (n,adj)
2. commune (n)
3. commune (v)
4. community (n)
5. communal (adj)
6. communism (n)
7. communion (n)
8. communique (n)
9. communicable (adj)
10. communicate (v)
11. communication (n)
12. ex-communication (n)
«ÊôÀ¨¼ §Å÷ô ¦À¡Õû ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ §ÅñÊ, ´Õ etymological dictionary -¢ø com (=together) + munis (=to share) ±ýÚ þÕôÀ¨¾ô À¡÷ò§¾ý. ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ þôÀÊ ¯¨¼òÐô À¡÷òÐô ¦À¡Õû ¦¸¡ûÅÐ þ󧾡-®§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸ÙìÌô ÀÆì¸õ. º¢Ä¦À¡ØÐ ãÄõ ¦¾Ã¢Â¡Áø þôÀÊô À¢Ã¢ôÀÐ ¬Æõ ¦¾Ã¢Â¡Áø ¸¡¨Ä Å¢ÎÅÐ §À¡Ä º¢ì¸Ä¢ø Á¡ðÊÅ¢Îõ ±ýÀ¾¡ø ±ýÉ¡ø ÓüÈ¢Öõ ²üÚì ¦¸¡ûÇ ÓÊÂÅ¢ø¨Ä. ÌÈ¢ôÀ¡¸ munis ±ýÈ À¢Ã¢ô¨Àô ÀüÈ¢ ±ÉìÌ Á¢¸§Å §¸ûÅ¢ìÌÈ¢. þó¾î ¦º¡ü¸û ±øÄ¡õ ´Õ ÌØÅ¢É⨼§Â/ ÌØŢɨÃô ÀüȢ ¦º¡ü¸Ç¡¸ò ¾¡ý ¦¾¡¼ì¸ò¾¢ø þÕó¾¢Õì¸ §ÅñÎõ. þô¦À¡ØÐ ÌبÅô ÀüȢ ¸ÕòÐ ¯ð¦À¡ÕÇ¡¸ þÕóÐ «§¾ ¦À¡ØÐ ¦ÅÇ¢ôÀΞ¢ø¨Ä. («¾¡ÅÐ ÌØÅ¢ÉÕìÌû ÁðÎõ þøÄ¡Áø ¡Õõ ¡ÕìÌõ communicate ¦ºöÂÄ¡õ.)
ºÃ¢, ¾Á¢ú §Å÷ô ¦À¡Õû À¡÷ô§À¡õ ±ýÚ Ð½¢ó§¾ý.
¾Á¢Æ¢ø 'Ìø' ±ýÛõ «Ê§Åâø þÕóÐ Üξø, §ºÕ¾ø, ÌÅ¢¾ø ±ýÛõ ¦À¡ÕÇ¢ø ÀÄ ¦º¡ü¸û À¢Èó¾¢Õ츢ÉÈÉ. «ÅüÈ¢ø ÀÄ þ󧾡-®§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø °¼¡ÊÔõ Åó¾¢Õ츢ýÈÉ. þíÌ ¦¾¡¼÷ÒûǨ¾ ÁðÎõ ÌÈ¢ôÀ¢Î¸¢§Èý.
Ìø-Ìû-ÌØ-ÌØÓ¾ø;
ÌõÓ¾ø=Üξø;
Ìõ-ÌõÒ, ÌõÒ¾ø=Üξø, ÌõÀø,
Ìõ-ÌÁ¢-ÌÅ¢, ÌÁ¢ - ÌÁ¢Âø,
ÌÅ¢¾ø = Üξø, ÜõÒ¾ø,
Ìõ-ÌÓ-ÌÓìÌ=Üð¼õ
Ìø-ÌÄõ=Å£Î, tribe, clan etc.
ÌõÒ-ÌôÒ-ÌôÀõ=º¢üê÷, ÌôÒ - Ìô¨À, ÌôÒ-ÌôÀ¢
Ìõ-ÌÓ-ÌÓ¾õ = À¸Ä¢ø ÌÅ¢Ôõ ¬õÀø
þ¾¢ø Ìõ ±ýÛõ «Ê¡ø com, con, col, cor, co ±ýÚ ¬í¸¢Äò¾¢Öõ, sym, syn, syl ±ýÚ ¸¢§Ãì¸ò¾¢Öõ, …õ ±ýÚ Å¼ ¦Á¡Æ¢Â¢Öõ ¾¢Ã¢óÐ ¬Â¢Ãì¸½ì¸¡É ¦º¡ü¸¨Çò §¾¡üÚÅ¢òÐûÇÐ. Ìõ ±ýÛõ Óý¦É¡ð¨¼ ¨Åò§¾ ²¸ô Àð¼ þ¨½Â¡É ¾Á¢úî ¦º¡ü¸¨Ç ¯Õš츢 Å¢¼Ä¡õ. ¬É¡ø ²ü¸É§Å §ÅÚ Å¨¸Â¢ø ¦º¡ü¸û ÀƸ¢ Åó¾¢Õó¾¡ø «Åü¨È Á¡üÚÅÐ Á¢¸ì¸ÊÉõ. ±Ð ¿¢¨ÄìÌõ ±ýÚ ¸¡Äõ ¾¡ý À¾¢ø ¦º¡øÄ §ÅñÎõ. ÐÅ¢î ºì¸Ãõ §À¡ö ®ÕÇ¢Ôõ §À¡ö Á¢¾¢ ÅñÊ ÓÊÅ¢ø ÅÃÅ¢ø¨Ä¡? ¸£§Æ ¿¡ý ÀâóÐâôÀ¨Å ±øÄ¡õ, ÒÆì¸ò¾¢ø þÕôÀÅü¨È à츢ò ¾ûÙÀ¨Å «øÄ. þÅü¨ÈÔõ ±ñ½¢ô À¡÷ì¸Ä¡õ ±ý§È ¦º¡øÖ¸¢§Èý.
þô¦À¡ØÐ §Á§Ä ÌÈ¢ôÀ¢ð¼ ¦º¡ø Å⨺¢ø ӾĢø À¡÷ì¸ §ÅñÊ ¦º¡ø common.
þ¾üÌõ general ±ýÀ¾üÌõ ¦À¡Ð ±ýÈ ¦º¡ø§Ä þÐ ¿¡û Ũà ÀÂýÀðÎ ÅÕ¸¢ÈÐ. (±.¸¡. Generally common people do not mind this mix up. ¦À¡ÐÅ¡¸ô ¦À¡Ð Áì¸û þó¾ì ¸Äô¨Àô ¦À¡ÕðÀÎòÐÅÐ þø¨Ä.) º£÷¨Á §ÅñÎõ ±ýÚ þý¨ÈìÌô ¦À¡Ð ±ýÛõ ¦º¡ø¨Ä Á¡üÈô ÒÌÅÐ ¸¢ð¼ò ¾ð¼ ÓÊ¡¾ ¸¨¾. ´ÕŨ¸Â¢ø À¡÷ò¾¡ø §Åñ¼¡¾Ð ܼ ±ýÚ §¾¡ýÚõ.
«Îò¾Ð, commune (noun) - a group of people who live together, though not of the same family, and who share their lives and possessions. þó¾î ¦º¡øÖìÌ ÌÓÌ ±ýÈ ¦º¡ø ¾Á¢ú À¡ø ÀüÚì ¦¸¡ñ¼ º¢Ä ¦À¡Ðר¼¨Á¡Ç÷¸û þ¨¼§Â Á¢¸î º¢È¢¾Ç× ÀÂýÀðÎ ÅÕ¸¢ÈÐ. (ÌÓý ±ý§È ¦º¡øÄÄ¡õ ±ýÀÐ ±ý ÀâóШÃ. 'Ì-Óý' ±ýÛõ ¾Á¢ú ´Ä¢ôÒ 'Ì-õÔý' ±ýÚ ´Ä¢ôÒ Á¡È¢ 'ÌõÔý' ±É þ󧾡-®§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø ÀÖì¸ô ÀÎõ. þó¾ ¿¨¼Ó¨È Å¢¾¢¨Â ¿¡ý ¾¨Ä ¸£Æ¡¸ô ÀÂýÀÎò¾¢ þÕ츢§Èý. §ÁÖõ ÁüÈ ®Ú¸û §º÷ôÀ¾üÌõ 'ÌÓÌ' ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ 'ÌÓý' ±ýÀÐ ±Ç¢¾¡¸ þÕìÌõ.)
ãýÈ¡ÅÐ, commune (verb) (used with together) - to exchange thoughts, ideas or feelings . The friends were communing together until darkness fell. þÃ× ÅÕõŨà ¿ñÀ÷¸û ¾í¸ÙìÌû ÌÓóÐ («¾¡ÅÐ ¸ÄóÐ) ¦¸¡ñÊÕó¾¡÷¸û.
¿¡ý¸¡ÅÐ, community. ¦Àâ «ÇÅ¡É ÌÓÌ, ¾Á¢Æ¢ø «õ ±Ûõ ®Ú §º÷òÐì ÌÓ¸õ ±ýÈ¡Ìõ. «¾¡ÅÐ community (ÌÓ¸í¸Ç¢ý ¬Âõ ÌÓ¸¡Âõ = society). ÌÓ¸¡Âò¨¾ò ¾¡ý «¨Ã ż ¦Á¡Æ¢Â¢ø ºõ>ºÓÐ ±ýÛõ Óý¦É¡ð¨¼ ¨ÅòÐî ºÓ¾¡Âõ ±ýÚ º¢Ä ¬ñθǢý Óý ÜÈ¢Å󧾡õ. þô¦À¡ØÐ ÀÄÕõ ÌÓ¸¡Âõ ±ý§È ÀÃÅÄ¡¸ô ÀÂýÀÎò¾ò ¦¾¡¼í¸¢ÔûÇÉ÷. (ÌÓý ±ýÀ¨¾ ´ðÊ ¦º¡øġ츢ɡø ÌÓÉõ ±ÉÄ¡õ. «§¾ ¦À¡ØÐ ÌÓ¸õ ±ýÀ§¾ ¿ýÈ¡¸ò¾¡ý þÕ츢ÈÐ.)
³ó¾¡ÅÐ, communal= ÌÓÉ¡÷ó¾. (±.¸¡. Such communal practices demean the society. «ò¾¨¸Â ÌÓÉ¡÷ó¾ ÅÆì¸í¸û ÌÓ¸¡Âò¨¾§Â þÆ¢× ÀÎòи¢ýÈÉ.)
¬È¡ÅÐ, communism = ÌÓÉ¢Âõ. ¦À¡Ð ¯¨¼¨Á ±ýÈ ¦º¡ø °È¢ô §À¡É À¢ÈÌ Á¡üÈ ÓÊÔÁ¡ ±ýÀÐ ³Âô À¡§¼.
²Æ¡ÅÐ, communion = ÌÓë÷× (the state of sharing religious beliefs and practices; ÌӧɡΠ°÷ÅÐ (´ýÚÅÐ) ÌÓë÷×. ±.¸¡. our church is in communion with the pope - ±í¸û ÌÚ쨸Âõ ºÁÂò ¾ó¨¾§Â¡Î ÌÓë÷óÐ þÕ츢ÈÐ.)
±ð¼¡ÅÐ, communique = ÌÓÉ¢¨¸ («§¾ ¦À¡ØÐ, ÌÓÌ/ÌÓý ±ýÛõ Óý¦É¡ð¨¼§Â ¾Å¢÷òÐ ¦ÅÚ§Á «È¢(Å¢)쨸, «øÄÐ ¦¾Ã¢(Å¢)쨸 ±ýÚ ¦º¡øÄÄ¡õ ±ýÚõ §¾¡ýÚ¸¢ÈÐ. «È¢ì¨¸ ±ýÀÐ notice ±Éô ÀÆÌõ §À¡Ð, ¦¾Ã¢ì¨¸ ±ý§È communique -üÌ ®¼¡¸î ¦º¡øÄÄ¡õ)
´ýÀ¾¡ÅÐ, communicable = ÌÓÉ¢ì¸ò ¾ì¸, ÌÓÉ¢ìÌõ (±.¸¡. ±öðŠ ´Õ ÌÓÉ¢ìÌõ §¿¡ö «øÄ. «Ð ´ÕÅâ¼õ þÕóÐ ÁüÈÅ÷ìÌ ¦¾¡ð¼¡§Ä ´ðÊì ¦¸¡ûÙõ §¿¡ö «øÄ.) þ¨¾ô À¼Õõ ±ýÚ Ü¼î ¦º¡øÄÄ¡õ.
ÀòÐ, ÁüÚõ À¾¢¦É¡ýÈ¡ÅÐ, communicate, communication = ÌÓÉ¢Î, ÌÓɣΠ(¦ÅǢ¢Î, Ó¨È¢Π±ýÀ¨¾ô §À¡ýÈ ¦º¡øÄ¡ì¸õ) (ÌÓý ±ýÛõ Óý¦É¡ð¨¼ò ¾Å¢÷òÐô ¦À¡Õû ¦¸¡ûÇ ¿¢¨Éò¾¡ø '¦¾Ã¢Å¢, ¦¾Ã¢Å¢ò¾ø' ±ýÀ¨¾§Â 'communicate, communication' ±ýÀ¾üÌ þ¨½Â¡¸ô ÒÆí¸Ä¡õ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. þ§¾ ¦À¡ÕÇ¢ø 'inform' ±ýÚ Åó¾¡ø ÀÚ¢ø¨Ä. 'communication', 'inform' ¬¸¢Â þÃñÊüÌõ 'to make known' ±ýÈ ¦À¡Õû þÕôÀ¾¡ø, þÐ ÌÆôÀõ ¾Ã¡Ð. «§¾ ¦À¡ØÐ, '«È¢Å¢ò¾ø' ±ýÀÐ 'announce' ±ýÀ¾üÌô ÀƸ¢ ÅÕõ ¸¡Ã½ò¾¡ø, «¨¾ô ÀÂý ÀÎò¾ þÂÄ¡Ð.
¦¾Ã¢¾ø - to know; ¦¾Ã¢Å¢ò¾ø - to make known
±ÎòÐì ¸¡ð¼¡É º¢Ä ÜüÚì¸û:
I communicated to him - ¿¡ý «Åâ¼õ ¦¾Ã¢Å¢ò§¾ý.
His communication was very clear - «ÅÕ¨¼Â ¦¾Ã¢Å¢ôÒ Á¢¸ò ¦¾Ç¢Å¡¸ þÕó¾Ð.
I had communications with him - «ÅÕìÌô ÀÄ ¦¾Ã¢Å¢ôÒ¸û ¦ºö¾¢Õó§¾ý.
þÚ¾¢Â¡¸, ex-communication = ÌÓÉ£ì¸õ (ÌÄ ¿£ì¸õ ±ýÀÐõ ܼ ²üÒ¨¼ÂÐ ¾¡ý)
ÀÄ þ¼í¸Ç¢Öõ communication ±ýÀ¾üÌò ¦¾¡¼÷Ò ±Ûõ ¦º¡ø¨Äô ÀÄÕõ ÀÂýÀÎò¾¢Â¢Õ츢ȡ÷¸û. þ¨½Âò¾¢Öõ «§¾ ¦º¡ø¨Ä ¨ÅòÐô ÀÄÕõ ¾í¸û ¸Õò¨¾ ÅÄ¢ÔÚò¾¢Â¢Õó¾¡÷¸û. ¾Á¢Æ¸ò¾¢ø ¿¢Ä×õ ¬ðº¢ò ¾Á¢Øõ «¨¾ ¬¾Ã¢ò¾¢Õ츢ÈÐ. ¬É¡ø ¿¡ý §ÅÚ Àθ¢§Èý. ±É즸ýɧš ¦¾¡¼÷Ò ±ýÀÐ contact ±ýÀ¾üÌò ¾¡ý Á¢¸×õ ºÃ¢ ±ýÚ Àθ¢ÈÐ.
tele-communications ±ýÀ¾üÌ ¦¾¡¨Äò ¦¾¡¼÷Ò ±Éî ÍÕì¸Á¡¸ «¨Æì¸ò ¾¨Äô Àð¼¡Öõ «Ð tele contact ±ýÚ ¾¡ý ¦À¡Õû Àθ¢ÈÐ. «¨¾ò ¦¾¡¨Äò ¦¾Ã¢Å¢ôÒ ±ýÈ¡ø ±ýÉ? «§¾ ¦À¡ØÐ À¡¼Á¡¸ Åó¾¡ø, ¦¾¡¨Äò ¦¾Ã¢Å¢ôÀ¢Âø (tele-communications) ±ý§È ÜÈÄ¡õ.
¦Á¡ò¾ò¾¢ø ±ý ÀâóШÃ:
1. common (n,adj) - ¦À¡Ð
2. commune (n) - ÌÓý
3. commune (v) - ÌÓ¾ø
4. community (n) - ÌÓ¸õ/ÌÓÉõ
5. communal (adj) - ÌÓÉ¡÷ó¾
6. communism (n) - ¦À¡Ð ¯¨¼¨Á/ ÌÓÉ¢Âõ
7. communion (n) - ÌÓÉ¡÷ó¾
8. communique (n) - ¦¾Ã¢(Å¢)쨸/ÌÓÉ¢¨¸
9. communicable (adj) - À¼Õõ/ÌÓÉ¢ì¸ò ¾ì¸, ÌÓÉ¢ìÌõ
10. communicate (v) - ¦¾Ã¢Å¢/ÌÓÉ¢Î
11. communication (n) - ¦¾Ã¢Å¢ôÒ/ÌÓÉ£Î
12. ex-communication (n)- ÌÄ ¿£ì¸õ/ ÌÓÉ£ì¸õ
¸¨¼º¢Â¡¸ ¯ûÇ ¦º¡ø procurement. ´Õ ÒÐì¸õ «øÄРިÇÅ¢üÀ¢üÌò §¾¨ÅÂ¡É ¦À¡Õû¸¨Çò §¾Êì ¦¸¡ñÎÅóÐ §º÷ò¾ø ±ýÀ¨¾§Â procurement ±ýÈ ¦º¡ø ¦¾Ã¢Å¢ì¸¢ÈÐ. «¾¢ø ¸¡Í ¦¸¡ÎòÐ Å¡í¸¢Â¢Õò¾ø ±ýÀÐ ¦À¡Õð¼øÄ. ¸¡Í ¦¸¡Î측Áø ¦ÀüÈ¢Õó¾¡Öõ «Ð procurement ¾¡ý. procurement ±ýÀÐ Å¡í̾ø «øÄ. þí§¸ cure ¦¸¡ñÎ ¾Õ¾ø ±ýÈ ¦À¡ÕÇ¢§Ä§Â Åó¾¢Õ츢ÈÐ. ¦¸¡ñξÃø ±ýÈ Å¢¨É À¢¨½óÐ ÍÕí¸¢ ¦¸¡½÷¾ø ±ý§È þô¦À¡Ø¦¾øÄ¡õ ÒÆí¸¢ ÅÕ¸¢ÈÐ. «ó¾î ¦º¡ø§Ä procure ±ýÀ¾¢ø ÅÕõ cure ±ýÀ¾üÌî ºÃ¢Â¡¸ þÕìÌõ.
procurement = Óü¦¸¡½Ãø
can you procure this? þ¨¾ Óü¦¸¡½Ã ÓÊÔÁ¡?
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
7 comments:
ஐயா தொடர்ந்து நல்ல தகவல்கள் கொடுத்து வரீங்க.
உங்கள் சேவை தொடரட்டும். எனக்கு சில சந்தேகங்கள்.
நீலம், அனுப்புதல் போன்றன தமிழ் சொல்லா?
Bore,interesting,clue(துப்பு அவ்வளவு பொருத்தமா தெரியல!),videoகு(ஒளிப்படம் தவிர்த்து) சரியான தமிழ் சொல் இருக்கா?
nathan
வணக்கம் ஐயா,
திட்டமேலாண்மை - என்பது முற்றிலும் தவறா? பெரும்பாலும் அவ்வாறு பயனில் இருக்கிறதே?
தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது. எனக்கு free radicals என்ற வார்த்தையை 'கட்டிலா உருபுகள்' என்று சொல்வது சரியா என்று தெளிவு படுத்த இயலுமா? நன்றி.
அன்பிற்குரிய நாதன், அன்பு, மற்றும் சுந்தரவடிவேல்
உங்களுடைய பின்னூட்டிற்கு நன்றி. நீங்கள் கேட்டிருக்கும் சொற்களின் தமிழாக்கம் பற்றி என் முன்னிகை இடுவதற்குச் சற்று நாட்களாகிவிட்டன. சொந்த வேலைகள் கூடிவிட்டன.
நாதன்:
நீலமும், அனுப்புதலும் தமிழே. நீலம் என்பது நீரோடு தொடர்பு கொண்டது. அந்தச் சொற்பிறப்பைப் பற்றி இங்கு எழுதினால் அது நீண்டுவிடும். எனவே தவிர்க்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னொருமுறை பார்ப்போம்.
இப்பொழுது நீங்கள் கேட்டிருந்த அனுப்புதல் பற்றிச் சொல்லுகிறேன்.
உந்துதல் என்ற வினை தள்ளுதல் என்ற பொருள் கொள்ளும். அதில் முன் தள்ளுதலும், உயரத் தள்ளுதலும் ஆகிய உட்பொருள்கள் உண்டு. பந்தை உந்தும் போது அது முன்னாலோ, உயரத்திற்கோ போகிறது. நம் பார்வையில் நாம் பந்தை உந்தினோம். ஆனால், பந்தின் பார்வையில் அது உந்நி>உன்னிப் போகிறது. (உந்துதல் என்ற வினையில் இருக்கும் மெல்வலி இணைக்கு மாறாய் மெல்மெல் இணையைப் பலுக்கி நகரத்திற்கு மாறாய் னகரம் வருமானால் இந்த ஒலிப்பு வந்துவிடும். தமிழ் ஒலி வளர்ச்சியில் னகரம் என்னும் கடைசி ஒலி நகரத்தில் எழுந்தது தான். காட்டாக, நாம் "வந்து" என்று சொல்லுவதை மலையாளத்தார் "வந்நு>வன்னு" என்று பலுக்குவர். இதே வகைத் திரிவில் உந்து என்ற சொல் உந்து>உந்நு>உன்னு என்று திரியும்.) உன்னுதல் = உயருதல், முன்செல்லுதல். உன்னது, உன்னம் என்பன உயரத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள். உன்னது என்பதின் நீட்சி உன்னதம்.
மேலே சொன்ன உன்னுதலைப் போன்றே, செல்லுதல் என்னும் பொருளுக்கு உரிய இன்னொரு சொல் "உகை". பல உகரச் சொற்கள் அகரத் தொடக்கத்திற்குக் காலமாற்றத்தில் திரிந்திருக்கின்றன. காட்டாக, சற்றுமுன் சொன்ன இந்த "உகை" உகர அகர மாற்றத்தில் "அகை" என்று திரிந்த பிறகும் செல்லுதல் என்ற பொருளைக் காட்டும். இதே போல உன்னுதலின் திரிவான அன்னுதல் என்ற சொல்லும் கூட உயருதல், முன்செல்லுதல் என்ற பொருளைக் காட்டும். அன்னுதல்> அன்னுவாதல்> அன்னாதல்> அண்ணாதல் என்று திரிந்த வினையை "அண்ணாந்து பார்த்தால் என்ன தெரியும்?" என்ற வழக்காற்றில் பார்க்கிறோம் அல்லவா? இந்த அன்னுதல் என்னும் தன்வினைச் சொல்லை மீண்டும் பிறவினைச் சொல்லாய் ஆக்கும் போது அனுப்புதல் என்று அது ஆகும். அனுப்புதல் = முன் செலுத்துதல், உயரச் செலுத்துதல்.
அடுத்து நீங்கள் கேட்டது bore என்னும் சொல். துளை என்ற பொருளில் இதற்குத் தமிழில் உள்ள இணைச்சொல் புரை. bore well = புரைக் கிணறு அல்லது புரைக் கேணி.
ஆங்கிலச் சொற்பிறப்பில் கீழ்வருமாறு சொல்லுவார்கள்.
O.E. borian "to bore," from bor "auger," from P.Gmc. *boron, from PIE base *bhor-/*bhr- "to cut with a sharp point" (cf. Gk. pharao "I plow," L. forare "to bore, pierce," O.C.E. barjo "to strike, fight," Alb. brime "hole"). The meaning "diameter of a tube" is first recorded 1572; hence fig. slang full bore (1936) "at maximum speed," from notion of unchoked carburetor on an engine. Sense of "be tiresome or dull" first attested 1768, a vogue word c.1780-81, possibly a figurative extension of "to move forward slowly and steadily."
"The secret of being a bore is to tell everything." [Voltaire, "Sept Discours en Vers sur l'Homme," 1738]
Boredom "state of being bored" first recorded 1852; boring "wearisome" is from 1840.
"be tiresome or dull" என்ற பொருளுக்கு இணையாகக் கிட்டத்தட்ட தமிழில் பொருபொருத்தல் என்ற ஒலிக்குறிப்பு இருக்கிறது. இன்னதென்று சொல்ல முடியாத ஓர் எரிச்சல், தளர்ச்சி, ஆற்றாமை எல்லாம் வரும் போது இந்தச் சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம்.
"என்னது ரொம்பப் பொருபொருக்கிறான் இந்தப் பயல்?"
"ஒரேயடியாய், பொருபொருன்னு இருக்கு".
"அவரு பேச்சு ஒரே பொருபொருப்புப்பா, தாங்காது"
"பொருபொருத்த வேளையிலே வேறே வேலையைப் பார்த்தா, பலனுண்டு"
இப்படி உதட்டைப் பிதுக்கி எழுப்பும் "பொருபொரு/பொர்பொர்/பர்பர்" என்பது ஓர் ஒலிக்குறிப்பு. இந்த ஒலிக்குறிப்பை இரட்டைக் கிளவியாய் அல்லாமல் சுருக்கிச் சொல்ல வேண்டுமானால் பொரை என்று சொல்லலாம். boring speech = பொரையான பேச்சு.
அடுத்தது interest: இந்தச் சொல் வரும்போது அதை desire என்ற சொல்லுக்குப் பகரி(substitute)யாக்கிக் கொண்டு பலரும் தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். அது ஒரு சில இடங்கள் தவிர்த்து மற்ற எல்லா இடத்தும் சரியாக வராது. காட்டாக, I [am interested] (=desire) to learn English. ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆ(ர்)வலாய் இருக்கிறேன். ஆனால், I have interest in the matter என்னும் போது விருப்பம் எங்கே வருகிறது?. In her own interest, she has to perform this. இதிலும் விருப்பம் என்ற கருத்துக் கிடையாது.
ஆங்கிலச் சொற்பிறப்பியல் பார்த்தால்,
c.1425, earlier interesse (c.1374), from Anglo-Fr. interesse "what one has a legal concern in," from M.L. interesse "compensation for loss," from L. interresse "to concern, make a difference, be of importance," lit. "to be between," from inter- "between" + esse "to be." Form influenced 15c. by O.Fr. interest "damage," from L. interest "it is of importance, it makes a difference," third pers. sing. present of interresse. Financial sense of "money paid for the use of money lent" (1529) earlier was distinguished from usury (illegal under Church law) by being in ref. to "compensation due from a defaulting debtor." Meaning "curiosity" is first attested 1771. Interesting meant "important" (1711); later "of interest" (1768).
எனவே சொற்பிறப்பின் படி பார்த்தால், interest என்பதின் தொடக்கம் inter esse என்று பிரியும். மேலே சொன்னது போல் to be between என்றுதான் பொருள் வரும். "என்னை விட்டு ஒன்றும் செய்துவிடக் கூடாது" என்னும் போது "இடையே நான் இருக்கிறேன்" என்று பொருள். இருத்தல் என்ற சொல்லை ஆர்தல் என்றும் தமிழில் சொல்லுவோம். இடையார்தல்/இடையாரல் = to be in between. தவிர ஆர்தல்/ஆரல் என்று சொல்லும் போது விரும்புதல் என்ற பொருளும் கூடவே வந்து சேரும். interest என்னும் சொல்லுக்கு என்னுடைய பரிந்துரை இடையார்தல்/இடையாரல் என்பதே. பெயர்ச்சொல்லாக இடையார்வு என்று புழங்கலாம்
I have an interest in the matter. அந்தச் செய்தியில் எனக்கு ஓர் இடையார்வு உண்டு.
In her own interest, she has to perform this. சொந்த இடையார்வு கருதினால், அவள் இதை நடத்திக் காட்ட வேண்டும்.
I am interested to learn English = ஆங்கிலம் கற்க நான் இடையார்ந்து இருக்கிறேன்.
அடுத்தது clue: இதற்குத் துப்பு என்ற சொல் சரியில்லை என்று சொல்லுகிறீர்கள். இந்தச் சொல்லின் தொடக்கம் கொஞ்சம் தொன்மம் சார்ந்தது. சற்றே தருக்க நெறியை உணர்த்துவது. "ஒரு சுரங்கம் இருக்கிறது. அதில் குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்ற முறையில் புரைகள் இருக்கின்றன. நீங்கள் போன வழியிலேயே திரும்பவேண்டும்" என்றால் ஒரு நூல்கண்டை கையில் வைத்துக் கொண்டு, நூலை விட்டுக் கொண்டே போனால், பிறகு நீங்கள் திரும்பும் போது நூல் வந்த வழியே திரும்பலாம் என்று எல்லோரும் அறிவோம். நூல்வழி அல்லது நூலேறி அல்லது நூலோடி என்று ஏதேனும் ஒன்றை clue வுக்கு இணையாகச் சொல்லலாம். ஆங்கிலச் சொற்பிறப்பும் அப்படித்தான் சொல்லுகிறது.
phonetic variant of clew (q.v.) "a ball of thread or yarn," with reference to the one Theseus used as a guide out of the Labyrinth. The purely figurative sense of "that which points the way" is from 1628. Clueless is from 1862.
clue: நூல்வழி/நூலேறி/நூலோடி
ஏதாவது நூலோடி கிடைச்சாப் போதும், கண்டுபிடிச்சரலாம்; கிடைக்க மாட்டேங்குது"
அன்பு நிறை அன்பு,
"திட்டமேலாண்மை - என்பது முற்றிலும் தவறா? பெரும்பாலும் அவ்வாறு பயனில் இருக்கிறதே?" என்று கேட்டிருக்கிறீர்கள். மேலே உள்ள கட்டுரையிலேயே கூறியிருக்கிறேன். நாம் plan, scheme, project, act ஆகிய எல்லாவற்றிற்கும் திட்டம் என்ற ஒரே சொல்லைப் புழங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னேன். நீங்கள் ஒரு பொறியாளராய் இருப்பின் இதைப் புரிந்திருப்பீர்கள். கீழே உள்ள ஆக்கியத்தைப் பாருங்கள்:
The plan according to the scheme devised in this project under this act is as follows.
திட்டம் என்பதையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்தினால் இந்த வாக்கியத்தை எப்படித் தமிழில் சொல்லுவது? ஆழ்ந்த ஓர்தலுக்கு அப்புறம் தான் புறத்திட்டு என்பதைப் Project -ற்கு இணையாகப் பரிந்துரைத்தேன்.
மேலாண்மை என்பது ஒரு மேம்போக்கான மொழிபெயர்ப்பு. overseer என்பதை மேற்காணி என்று சொன்னால், மேலாளர் என்ற சொல் தமிழ்ப் பார்வையில் என்னை மேலிருந்து ஆள்பவர் என்ற பொருளைத் தருகிறது. இது ஒரு bureaucratic பார்வை இல்லையா? manage என்பது ஆட்களை ஆள்வதில்லை; ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு வினை, செயல், பணியை நோக்கிச் செலுத்துவது என்று பொருள்வரவேண்டும். அங்கே ஆள்வது முகமையில்லை. ஒரு காரியம் நடைபெறச் செலுத்துவது முகமையானது. மான் என்ற ஈறு தமிழில் மகன், மக்கள், மாந்தரைக் குறிக்கும் சொல். அதிகமான், பெருமான், வெளிமான் போன்ற சொற்களில் வரும் மான் = man என்பதையே குறிக்கிறது. மாந்தனின் வடமொழித் திரிவான மனிதன் என்பதும் இப்படிக் கிளர்ந்ததுதான். மானை அகைப்பது மானகை. அகைத்தல் மேலே சொல்லியது போல் செலுத்துதல் என்றே பொருள்கொள்ளும். எந்த ஒரு மானகையரும் மானர்களை அகைத்தே காரியம் நடத்துகிறார். அப்படி நடத்தும் போது அவர் தலைமைப் பொறுப்பைக் கொள்ளுகிறார். மேலாண்மை என்ற சொல் பல்வேறு நீட்டங்களுக்குச் சரியாக வருவதில்லை. குறிப்பாக வினைச்சொல், வினையெச்சமாகக் கையாள்முடிவதில்லை. ஆட்சியாளர் என்ற சொல் ruler என்ற சொல்லுக்குச் சரியாக இருக்கும். மண்டல மேலாட்சியர் என்னும் போதும் regional official என்பவரைக் குறிக்கிறதா? regional manager யைக் குறிக்கிறதா? என்னைக் கேட்டால் அரசு தொடர்பான புழக்கத்திற்கு ஆட்சியர் என்பதையும், கும்பணிகள், நிறுவனங்கள் சார்ந்தவற்றிற்கு மானகையர் என்பதையும் பிரிந்து பயனாக்கலாம் என்று சொல்லுவேன்.
சுந்தர வடிவேல்:
உங்களுடைய கேள்வி: "free radicals என்ற வார்த்தையை 'கட்டிலா உருபுகள்' என்று சொல்வது சரியா?"
radical க்குப் போகுமுன்னால் free, freedom, liberty, independence, friend பற்றியெல்லாம் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு அந்த அடையெற்று (adjective; இதுவும் project, subject, object, reject மாதிரித்தான். ject என்பதைத் தமிழில் சரியாகச் சொன்னால் ஒரு 30, 40 சொற்கள் ஒழுங்கு பெறும்.) பற்றி ஒரு தெளிவு கிடைக்கும். இதற்குத் தனியாக ஓரிரு பதிவுகள் போடவேண்டும். பொறுத்திருங்கள். வேலையோட்டத்திற்கு நடுவில் நேரம் கிடைத்தால் போடுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.
அன்புடன்,
இராம.கி.
பொருபொருத்த நேரத்தில் எழுதினால் போதும்! தங்களது பதிவை நோக்கி இடையார்ந்து இருக்கிறேன். நன்றி :)
ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றிகள்!
-நாதன்
உங்கள் அடுத்த பதிவில் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. எனவே இங்கே.
நல்லாயிருந்தது பதிவு. அந்தத் தாலாட்டையும் சேர்த்துப் போட்டிருக்கலாம்.
//பேசாமல் பாபாவைப் பற்றி எழுதியிருக்கலாமோ? எல்லாத் தமிழருக்கும் தெரிந்தது திரைப்படம் தானே?//
அட நீங்களும் தொடங்கிவிடுவியளோ எண்டு பயப்படும்,
வசந்தன்.
Post a Comment