Monday, November 16, 2020

Material and Process Engineering

 Material and Process Engineering என்பதை தமிழில் எப்படிக் கூறுவது? - என்று ”சொல்” முகநூல் குழுவில் கேட்டிருந்தார்.

பலநேரம்  Material தொடர்பான சொற்களுக்கு வேற்றுமை காட்டாது எல்லாவற்றிற்கும் பொருள் என்றே சொல்வது நம்மை வெகுதொலைவு கொண்டு சொல்லாது. அதிலும் துல்லியம் வேண்டும்.

content = உள்ளீடு

matter = பொருண்மை, 

material = பொருணை,

meaning = பொருட்பாடு 

substance = உள்ளடை 

subject = அகத்திட்டு, செய்பொருள், எழுவாய், கருத்தா 

topic = தலைப்பு 

article = உருப்படி, 

thing = தினை, பொருள் 

object = புறத்திட்டு, செயப்படுபொருள், கருமப்பொருள் 

Material and Process Engineering = பொருணைப் பொறியியலும், செலுத்தப் பொறியியலும்.

4 comments:

kathir said...

content - உள்ளடக்கம் என்று பயன்படுத்தினால் சரியா ஐயா

இராம.கி said...

பயன்படுத்தலாம்.

Anonymous said...

Item என்பதற்கும் தமிழ்ச்சொல் கூற முடியுமா ஐயா?

இராம.கி said...

item என்பதும் article என்பதும் பெரும்பாலும் ஒன்றுதான். நான் உருப்படி என்றே பயில்வேன்.