உங்கள் வாசிப்புக்கு.
அன்புடன்,
இராம.கி.
1. பட்டனுக்குச் சௌரி காட்டல்
பண்டு ஒரு நாள் மூலவர்க்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில்
படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன்
பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோ டும் திகிரியொடும் செறி முழங்கு சங்கமொடும்
செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் சௌரியிலே வீழ்ந்தது எனச்
செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம்
மாலையினை அழகு பார்த்த,
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய்,
வரி தவழச் சௌரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!
முதல் பாடலில் உள்ளது தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப் (ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு உள்ள மாலையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடு நாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையில் ஒன்றிரண்டு முடி இழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, ஓ ஏதோ, ஒன்று அமங்கலமாக நடந்து கொண்டு இருக்கிறதோ என்று மற்றவர்கள் பதறி மன்னவனிடம் (சோழனா எனத் தெரியவில்லை?) சொல்ல, அவன் பட்டரிடம் வினவ, "பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் புரிசையில் (செய்முறையில்) தவறாத பட்டர் "பெருமாளுடைய சௌரியில் இருந்து வந்தது அந்த முடியிழை" என்று அடித்துச் சொல்ல, பத்தனுக்கு உதவும் வகையில், அதை மெய்ப்பிப்பது போல், சௌரி கொண்டு பெருமாள் காட்சியளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இந்தக் கதை ஆண்டாளையும், அபிராமிப் பட்டரையும் கலந்தாற் போல் நமக்குத் தோற்றம் அழித்தாலும், இதைத் தான் நான் அங்கு கேட்டேன். இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டு விடும் கரிய அழகு, எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீல மேகப் பெருமாள். எனவே அவர் காரழகர் ஆனார். தேவியர் நால்வர். சீதேவி, பூதேவி போக, அவர்களுடைய தோற்றரவுகள் (பத்மினி, ஆண்டாள் என்னும் அவதாரங்கள்) ஆக இன்னும் இருவர். ஊருலவருக்குத் (உற்சவருக்கு) திருமஞ்சனம் செய்யும் போது நாலு நாச்சியாரையும் கூட வைத்துத் தான் செய்வார்கள்.
தனிக் கோயில் நாச்சியார் / தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி.
In TSCII:
ºó¾ źó¾õ Á¼üÌØÅ¢ø «ùÅô§À¡Ð ±Ø¾¢ Åó¾ À¡¼ø¸û "¸¡½¦Å¡Õ ¸¡Äõ ÅÕ§Á¡" ±ýü ¾¨ÄôÀ¢ø ´Õ À¾¢¸Á¡öì ¸¢¨Çò¾É. ¸Å¢Á¡Á½¢ þÄó¨¾Â¡÷ þ¨¾ò ¦¾¡ÌòÐ ´Õ Á¢ý ¦À¡ò¾¸Á¡öô §À¡¼Ä¡õ ±ýÚ ¦º¡ýÉ¡÷. «¾üÌ Ó¾ø ÓÂüº¢Â¡ö þíÌ Å¨ÄôÀ¾¢Å¢ø §À¡Î¸¢§Èý. ¯í¸û Å¡º¢ôÒìÌ.
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
1. Àð¼ÛìÌî ¦ºªÃ¢ ¸¡ð¼ø
ÀñÎ ´Õ ¿¡û ãÄÅ÷ìÌî º¡òи¢ýÈ ¦Á¡öó ¦¾¡¨¼Â¢ø
ÀÊó¾¢Õó¾ ÓʨÂì ¸¡ðÊ,
À¡÷ò¾Å÷¸û À¾È¢ ±Æ, À¡Ã¡Ùõ §ÀÃúý
Àð¼É¢¼õ §¸ðÎ ¿¢ü¸,
¦ºñ§¼¡Îõ ¾¢¸¢Ã¢¦Â¡Îõ ¦ºÈ¢ ÓÆíÌ ºí¸¦Á¡Îõ
¦ºØó §¾Å¢ ¿¡øÅ §Ã¡Îõ,
º£Ã¡Ùõ Å¢ñ½ÅÉ¢ý ¦ºªÃ¢Â¢§Ä Å£úó¾Ð ±Éî
¦ºôÀ¢Â¨¾ ¯ñ¨Á ¡츢,
ÅñÎ Á¢Ì Å¡ºõ ÅÕõ ¦¸¡ñ¨¼ ÁÄ÷ò ¾¡º¢Â¢¼õ
Á¡¨Ä¢¨É «ÆÌ À¡÷ò¾,
ÅØÅ¡¾ Ò⨺¢ɢø ¿ØÅ¡¾ Àð¼Û측ö,
Åâ ¾ÅÆî ¦ºªÃ¢ ¸¡ðÎõ,
¸ñ¼ÅÕõ Å¢ñ¼ ´½¡ì ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!
Ó¾ø À¡¼Ä¢ø ¯ûÇÐ ¾Ä ÅÃÄ¡Ú. ¸½¢¨¸Â¢ý ¦¾¡¼÷À¢ø º¢ì¸¢Â º£÷¾Ãô (ŠÃ£¾Ã) Àð¼÷, ¦ÀÕÁ¡ÙìÌ ¯ûÇ Á¡¨Ä¨Â ¸½¢¨¸ìÌ «½¢Å¢òÐ «ÆÌ À¡÷òÐô À¢ý ¦ÀÕÁ¡ÙìÌ þθ¢È¡÷. þó¾ ÅÆì¸õ ¦¿Î ¿¡û ¦¾¡¼÷¸¢ÈÐ. ¸¡öóÐ §À¡É Á¡¨Ä¢ø ´ýÈ¢ÃñÎ ÓÊ þ¨Æ¸û þÕôÀ¨¾ô ÀÄ ¿¡ð¸û À¡÷òÐ, “²§¾¡, ´ýÚ «Áí¸ÄÁ¡¸ ¿¼óÐ ¦¸¡ñÎ þÕ츢ÈД ±ýÚ ÁüÈÅ÷¸û À¾È¢ ÁýÉÅÉ¢¼õ (§º¡ÆÉ¡ ±Éò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä?) ¦º¡øÄ, «Åý Àð¼Ã¢¼õ Å¢ÉÅ, "¦ÀÕÁ¡û ¾ý¨Éì ¸¡ôÀ¡üÚÅ¡÷" ±ýÈ ¬úó¾ ¿õÀ¢ì¨¸Â¢ø ´Õ ¿¡Ùõ Ò⨺¢ø (¦ºöӨȢø) ¾ÅÈ¡¾ Àð¼÷ "¦ÀÕÁ¡Ù¨¼Â ¦ºªÃ¢Â¢ø þÕóÐ Åó¾Ð «ó¾ ÓÊ¢¨Æ" ±ýÚ «ÊòÐî ¦º¡øÄ, Àò¾ÛìÌ ¯¾×õ Ũ¸Â¢ø, «¨¾ ¦ÁöôÀ¢ôÀÐ §À¡ø, ¦ºªÃ¢ ¦¸¡ñÎ ¦ÀÕÁ¡û ¸¡ðº¢ÂÇ¢ò¾¾¡¸ ¾Ä ÅÃÄ¡Ú ÜÚ¸¢ÈÐ.
¸¨¾ ¬ñ¼¡¨ÇÔõ, «À¢Ã¡Á¢ô Àð¼¨ÃÔõ ¸Äó¾¡ü §À¡ø ¿ÁìÌò §¾¡üÈõ «Æ¢ò¾¡Öõ, þ¨¾ò ¾¡ý ¿¡ý «íÌ §¸ð§¼ý. þíÌûÇ ¦ÀÕÁ¡Ç¢ý «ÆÌ ¦¸¡û¨Ç ¦¸¡ñΠŢÎõ ¸Ã¢Â «ÆÌ, ±É§Å ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢. ãÄÅâý ¦ÀÂ÷ ¿£Ä §Á¸ô ¦ÀÕÁ¡û. ±É§Å «Å÷ ¸¡ÃƸ÷ ¬É¡÷. §¾Å¢Â÷ ¿¡øÅ÷. º£§¾Å¢, ⧾Ţ §À¡¸, «Å÷¸Ù¨¼Â §¾¡üÈÃ׸û (ÀòÁ¢É¢, ñ¼¡û ±ýÛõ «Å¾¡Ãí¸û) ¬¸ þýÛõ þÕÅ÷. °ÕÄÅÕìÌò (¯üºÅÕìÌ) ¾¢ÕÁïºÉõ ¦ºöÔõ §À¡Ð ¿¡Ö ¿¡îº¢Â¡¨ÃÔõ ܼ ¨ÅòÐò ¾¡ý ¦ºöÅ¡÷¸û.
¾É¢ì §¸¡Â¢ø ¿¡îº¢Â¡÷ / ¾¡Â¡Ã¢ý ¦ÀÂ÷ ¸ñ½Òà ¿¡Â¸¢.
No comments:
Post a Comment