Thursday, March 31, 2005

காணவொரு காலம் வருமோ - 4

4. முனையதரன் பொங்கல்

நினைவுற்ற நாளாக நெடியோனைத் தொழுகாமல்
நிமைசோரா முனைய தரையன்,
நேரத்தின் நீளத்தில், விண்ணகரம் சாத்தியதால்,
மனைமீண்டு, பூசை செய்ய,
மனையாட்டி பொங்கியதை அர்த்த யா மத்திலே,
மனதாரப் படையல் இடவே,
மணிஓசை கோயில்எழும்; மணங்கமழும்; ஊர்வியக்கும்;
மறுநாளிற் சொல்லி மகிழும்;
நனைஒழுகு நெய்யோடும், நறுங்கறிச் சரக்கோடும்
நழுவுபதப் பொங்கல் மூங்கி,
முனையதரன் பெயராலே முன்அர்த்த யாமத்தில்
மொய்ம்புகழைப் பாடி வரவே,
கனிநாவற் கதுப்பான காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

முனையதரன் பொங்கலின் பெருமையைப் பாடுவது இந்தப் பாடல். கண்ணபுரத்தின் சிறப்புக்களில் இந்தப் பொங்கலும் ஒன்று. ஒரு ஆழ்ந்த பத்தனுக்காய், இறைவனே நெருக்கம் காட்டி ஊராரை உணர வைப்பான் என்ற செய்தி, நம்மை அவனுக்கு நெருங்கியவனாயும், அவனை நமக்கு ஆதாரமாயும் காட்டுகிறது. விண்ணவத்தில் சொல்லப் படும் சரணாகுதியின் பெருமையே இதுதான்.

In TSCII:

4. ӨɾÃý ¦À¡í¸ø

¿¢¨É×üÈ ¿¡Ç¡¸ ¦¿Ê§Â¡¨Éò ¦¾¡Ø¸¡Áø
¿¢¨Á §º¡Ã¡ Өɠ¾¨ÃÂý,
§¿Ãò¾¢ý ¿£Çò¾¢ø, Å¢ñ½¸Ãõ º¡ò¾¢Â¾¡ø,
Á¨É Á£ñÎ, ⨺ ¦ºöÂ,
Á¨É¡ðÊ ¦À¡í¸¢Â¨¾ «÷ò¾ ¡ Áò¾¢§Ä,
Áɾ¡Ãô À¨¼Âø þ¼§Å,
Á½¢ µ¨º §¸¡Â¢ø ±Øõ; Á½í ¸ÁØõ; °÷ Å¢ÂìÌõ;
ÁÚ ¿¡Ç¢ü ¦º¡øÄ¢ Á¸¢Øõ;
¿¨É ´ØÌ ¦¿ö§Â¡Îõ, ¿Úí ¸È¢î ºÃ째¡Îõ
¿Ø× À¾ô ¦À¡í¸ø ãí¸¢,
ӨɾÃý ¦ÀÂá§Ä Óý «÷ò¾ ¡Áò¾¢ø
¦Á¡öõ Ò¸¨Æô À¡Ê ÅçÅ,
¸É¢ ¿¡Åü ¸ÐôÀ¡É ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

ӨɾÃý ¦À¡í¸Ä¢ý ¦ÀÕ¨Á¨Âô À¡ÎÅÐ þó¾ô À¡¼ø. ¸ñ½ÒÃò¾¢ý º¢ÈôÒì¸Ç¢ø þó¾ô ¦À¡í¸Öõ ´ýÚ. ´Õ ¬úó¾ Àò¾Û측ö, þ¨ÈÅ§É ¦¿Õì¸õ ¸¡ðÊ °Ã¡¨Ã ¯½Ã ¨ÅôÀ¡ý ±ýÈ ¦ºö¾¢, ¿õ¨Á «ÅÛìÌ ¦¿Õí¸¢ÂÅÉ¡Ôõ, «Å¨É ¿ÁìÌ ¬¾¡ÃÁ¡Ôõ ¸¡ðθ¢ÈÐ. Å¢ñ½Åò¾¢ø ¦º¡øÄô ÀÎõ ºÃ½¡Ì¾¢Â¢ý ¦ÀÕ¨Á§Â þо¡ý.

No comments: