Wednesday, March 30, 2005

காணவொரு காலம் வருமோ - 2

2. அயிரை மேட்டில் ஓரிரவு

வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற புருவ எழிலாள்;
புரையாத திரு மகளின் தோற்றரவில் முன் ஒரு நாள்
புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில்
நுளையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,
நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் அருகில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாக ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாக மாற்றி ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். "எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.

பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல் சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படவில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திரு மேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

In TSCII:

2. «Â¢¨Ã §ÁðÊø µÃ¢Ã×

Ũá¾ «Æ§¸¡Î, ÅÊÅ¡É ¯Õ§Å¡Î,
ŨÄÂâý ÀòÐ Á¢É¢Â¡û;
ŨÇ¡¾ Å¢ø¨ÄÔõ, Ÿ¢¼¡¾ Å¡¨ÇÔõ,
ÀƢ츢ýÈ ÒÕÅ ±Æ¢Ä¡û;
Ҩá¾ ¾¢Õ Á¸Ç¢ý §¾¡üÈÃÅ¢ø Óý ´Õ ¿¡û
ÒÄõ ¸¡ðÊ ¿¢ýÈ §À¡Ð,
ÒøÄ¢§Â ÅШÅÔÈô §À¡É¨¾ þýÚ «Ç×õ
ÒÅÉò¾¢ø ¡Õõ «È¢Â,
Ѩç¡Π¾¢¨Ã µíÌõ ¾¢Õ Á¨Ä¢ý ÀðÊÉò¾¢ø
Ѩǧ¡âý ÁÕ¸ É¡¸,
Ññ «Â¢¨Ã §Áð椀 þæÅÄ¡õ ¸Ç¢ôÀ¨¾,
§¿¡ìÌ ¿¡û ±ó¾ ¿¡§Ç¡?
¸¨Ã§Â¡Î °÷ ¯Ä×õ ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þÃñ¼¡ÅÐ À¡¼ø ÀòÁ¢É¢ ¿¡îº¢Â¡÷ ±ýÛõ ¦ºõÀ¼Å ¿¡îº¢Â¡÷ ÀüÈ¢ô §À͸¢ÈÐ. ¸ñ½ÒÃò¾¢üÌ 20 ¸¢§Ä¡ Á£ð¼÷ «Õ¸¢ø ¯ûÇ ¾¢ÕÁ¨Ä áÂý ÀðÊÉò¾¢ø Á£ÉÅò ¾¨ÄÅý Á¸Ç¡¸ ¾¢ÕÁ¸§Ç ÅóÐ À¢È󾾡¸ ´Õ ¦¾¡ýÁõ ¯ñÎ. þó¾ò §¾¡üÈÃÅ¢ø («Å¾¡Ãò¾¢ø), ¾¡Â¡Ã¢ý ¦ÀÂ÷ ÀòÁ¢É¢. ¸ñ½ÒÃò ¾¢ÕŢơŢý ´Õ ¿¢¸úÅ¡ö ¦ÀÕÁ¡û ÀòÁ¢É¢ ¿¡îº¢Â¡¨Ãì ¨¸ô À¢ÊìÌõ Ţơ ¿¼ì¸¢ÈÐ. ¦ÀÕÁ¡ÙìÌî ºÃõ (¨¸Ä¢) ¸ðÊ Á£ÉÅÉ¡¸ Á¡üÈ¢ °ÕÄ×ò ¾¢Õ§ÁÉ¢ (¯üºÅ ã÷ò¾¢) ¾¢ÕÁ¨Ä áÂý ÀðÊÉõ §À¡öî §ºÕõ. ¸¼ü¸¨Ã §ÁðÊø, ¾¢ÕÁ¡¨Ä þÕò¾¢, Á£ÉÅ÷¸û ÍüÈ¢ ÅóÐ, ÌõÁ¡ªõ §À¡ðÎ, þÃ× ÓØì¸ ¾í¸û Á¡ôÀ¢û¨Ç§Â¡Î Üò¾¡Êì §¸¡Ä¡¸ÄÁ¡¸ þÕôÀÐ ÅÆì¸õ. "±í¸û Á¡ôÀ¢û¨Ç, ±í¸û Á¡ôÀ¢û¨Ç" ±ýÚ °§Ã ¦Áö º¢Ä¢÷òÐô §À¡ÅÐ º¢Ä ¸¡Äõ ÓýÒ Å¨Ã þÕó¾¢Õ츢ÈÐ.

⧾Ţ º£¨¾Â¡¸×õ ¬ñ¼¡Ç¡¸×õ À¢Èó¾ §¾¡üÈÃ׸û («Å¾¡Ãí¸û) ÀÄÕõ «È¢ó¾Ð §À¡ø º£§¾Å¢Â¢ý §¾¡üÈÃ׸û ÀÄáÖõ «È¢ÂôÀ¼Å¢ø¨Ä. Ҩþø = ´ôÒ¾ø, ¦À¡Õóоø; Ҩá¾ ¾¢ÕÁ¸û = ´ôÒ þøÄ¡¾, ¾ÉìÌ §¿÷ þøÄ¡¾ ¾¢ÕÁ¸û; ¸¨Ã§Â¡Î °ÕÄ×õ ¾¢Õ §ÁÉ¢ = ¸ñ½ÒÃò¾¢ø þÕóÐ ¸¡Å¢Ã¢ì ¸¨Ã§Â¡Ãõ §À¡ö À¢ý ¸¼ü¸¨Ã µÃò¾¢ø °ÕÄ¡×õ ¦ÀÕÁ¡û.

No comments: