Wednesday, December 01, 2004

செயேந்திரர்

தீபாவளி நாளின் மாலையில் இருந்து காஞ்சி செயேந்திரருக்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தேன். முதலில் பார்க்கும் போது ஒன்றும் புரியவில்லை; என்ன நடக்கிறது என்ற ஒரு திகைப்பும், பின் வியப்பும், ஒரு மாதிரி பொருந்தாத் தன்மையும் அடுத்தடுத்துத் தோன்றின. நடவடிக்கையின் ஆழம், அகலம் தெரியாமல் சட்டென்று கருத்துக் கூறுதல் தவறு, எனவே கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என்று எண்ணி அமைந்திருந்தேன்.

சங்கராச்சரியார் செயேந்திரர் மேல் ஒரு பெரும் மதிப்பை நான் என்றும் கொண்டதில்லை என்றாலும் (நேரே பார்த்திருந்த ஒரு சில நிகழ்ச்சிகள் அவர்மேல் எனக்கு மதிப்புக் கொண்டு சேர்க்கவில்லை. அவரைக் குறைசொல்லத் தொடங்கினால் பலவற்றைச் சொல்ல முடியும் தான்.), கொலை வழக்கில் முதற் குற்றவாளியாகச் சொல்லப்படும் அளவிற்கு தரம் குறைந்து இருப்பாரா என்பதில் நான் கொஞ்சம் திகைத்துத் தான் போனேன். (இன்னும் குற்றம் நிருவிக்கப் படவில்லை; இப்பொழுது அரசு வழக்கறிஞரும் காவல் துறையும் செய்திருப்பது குற்றம் சாட்டுதலே.) செய்திகள் படிக்கப் படிக்க ஆழம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால், மடத்தின் நடவடிக்கைகள் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதோ என்றே உணரத் தலைப்படுகிறேன்.

(இந்த மடல் படிப்போருக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப் பட்டவன். நான் ஆதி சங்கரரின் கருத்தை ஏற்றவனில்லை. மாற்றுக் கருத்து உள்ளவன் என்றாலும் அல்லிருமை என்னும் அத்வைதம் ஒரு நெறி என்று படிக்கக் கற்றவன். இந்த நிலையில் இருந்தே நான் இந்த நிகழ்வினை நோக்குகின்றேன்.)

"பரமான்மா, உய்வான்மா என்று தனித்தனியாக ஓர் இருமை நிலை கிடையாது (அல் இருமை = அல் துவைதம் = அத்துவைதம் = இருமை அல்லாத நிலை); இரண்டும் ஒன்றுதான்; உலகில் இப்படித் தனித்துத் தெரியும் ஒவ்வொன்றும் கண்ணுக்கெதிரே தோன்றும் மாயத்தோற்றமே, உண்மை அல்ல; இறைவன் உன்னுள்ளேயே உள்ளான்" என்று சொல்லப் புகுந்த கொள்கையின் முன்னோடியார் இப்படி ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது கூட இன்னொரு மாயத் தோற்றம் போலவே காட்சி அளிக்கிறது.

செயேந்திரர் எல்லா சுமார்த்தர்களுக்கும் அல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவு சுமார்த்தப் பெருமான்களின் (brahmins) குருவாய் இருப்பவர். (ஆதி சங்கரர் 4 மடங்களை ஏற்படுத்தினார், அந்த நாலு மடங்களில் ஒன்றான சிருங்கேரி மடத்தின் கும்பகோணக் கிளைதான் நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சிக்கு மாற்றலாகியது என ஒருசிலரும், இல்லையில்லை இது ஆதிசங்கரரே ஏற்படுத்திய ஐந்தாவது மடம், ஆதிசங்கரரே இதன் முதல் பீடத் தலைவர் என்றும் சிலர் மறுத்துக் கூறுவது உண்டு. அந்தச் சிக்கலுக்குள்ளும், காஞ்சி மடத்தின் பழமைக்குள்ளும் இப்பொழுது போகவேண்டாம். ஆனால் காஞ்சி மடத்திற்கும் சிருங்கேரி மடத்திற்கும் உள்ள சில அடிப்படைப் பிளவுகளாலும், பழைய பெரியவருக்கும், இவருக்கும் இடையே இருந்த நிலை-வேறுபாடுகளாலும் சுமார்த்த பார்ப்பனர்களிலேயே பலரும் இவரைக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர். இந்த நிலை நீறு பூத்த நெருப்பாகவே நெடுங்காலம் இருந்திருக்கிறது. நெருப்பு மடத்திற்குள்ளும் கனன்று கொண்டு இருந்திருக்கிறது என்று பலரும் சொன்னது உண்டு.)

சங்கர மடத்தின் தலைவர் என்பவருக்கு பொதுவாக இரண்டு பொறுப்புக்கள் உண்டு. முதலாய பொறுப்பு அல்லிருமைக் (அத்துவைதம்) கொள்கையை மக்களிடையே பரப்புவது. (அல்லிருமைக் காரர்களுக்கு கோயில் ஒரு பொருட்டல்ல; இன்னும் சொல்லப் போனால், கோயில் வழிபாடு என்பதை மீறி வரவேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அவர்கள். சிவ நெறி, விண்ணெறி அல்லாத வேத நெறியை ஊரெங்கும் பரப்பக் கடமை பூண்டவர்கள் அவர்கள்.) இரண்டாவது மடத்தின் சொத்துக்களை நிர்வகித்து வருவது. இரண்டு பொறுப்பையும் செய்யும் போது தாமரை இலைத் தண்ணீரின் மனப்பாங்கு மடத்தலைவருக்கு வந்து சேரவேண்டும். செயேந்திரர் எந்த அளவு முதற்பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் என்பதில் பலருக்கும் கேள்விகள் உண்டு. இப்பொழுது இரண்டாவது பொறுப்பு அவரைப் பெரிய சிக்கலுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

பெருமான்களில் அல்லிருமைக் கொள்கையராயும் அல்லாமல், சிவநெறியாளராயும் அல்லாமல், விண்ணவ நெறியில் பிணைந்திருந்தவர்கள் அவரை ஒரு மாற்றாளராகவே பார்த்து வேறுபாடு கொள்வதும் உண்டு. (குறிப்பாக பஞ்சராத்திர ஆகமமுறைகளில் மூக்கை நுழைத்து திருப்பதிக் கோயிலொழுகு முறையில், சில மண்டபங்களை இடித்து இன்னும் ஒரு பெரிய சுற்று உருவாக்கலாம் என்று மாற்றம் சொன்னதும், விண்ணவ நெறித் தலைவர்களை ஒதுக்கி வைக்குமாப்போல பல கருத்துக்கள் சொல்லியதும் பல விண்ணவர்களுக்கு பிடிக்காமல் இருந்தது.) பெருமான்கள் அல்லாத மற்றவர்க்கு அவர் ஒரு நெருக்கம் இல்லாத விந்தையானவர். அவரோடு பலருக்கும் கருத்து வேறுபாடு; சில இடங்களில் கருத்து வேறுபாடு முற்றிப் பிணக்கே உண்டு; அவரைக் குறை சொன்னவர்கள் பலர். அது அரசியலில் மட்டும் இல்லை. ஆன்மீகத்தோடு மட்டும் நின்று கொள்ளாமல் அரசியலில் அவர் நுழைந்தது, குறிப்பாக இந்துத்துவ அரசியலில் நுழைந்தது ஆன்மீகம் சார்ந்த பல தமிழர்களுக்கு அவரைப் பிறனாக்கியது. கரூர் கோயிலின் குடமுழுக்கைத் தமிழில் செய்வதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லியது, மற்ற சிவநெறி மடங்களின் முனகலை எதிர்கொண்டது, கைம்பெண்கள், அலுவற் பெண்கள் ஆகியோர் பற்றிச் சொன்னது, ஆகியவை எல்லாம் "என்னது இவர் இப்படி?" என்னுமாப் போல் பலபேரின் நெற்றியைக் குறுக வைத்தது. அண்மைக் காலத்தில் தாழ்ந்தோருக்கு ஆதரவாய்ச் சில வாக்குகள் சொன்னாலும், சில செய்கைகள் செய்தாலும், அது உள்ளார்ந்த உரைப்பா, அல்லது வெறும் அரசியல்வாதித்தனமா என்ற கேள்வியையும் மக்கள் இடையே எழுப்பியது. இத்தனைக்கும் முந்தைய பெரியவர் குமுக மாற்றம் பற்றிச் சொல்லாமல் ஒரு பழமை நோக்கில் இருந்தவர்தான். அந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை தான். இருந்தாலும் யாரைக் கேட்டாலும் அவர்மேல் ஒரு மதிப்பு இருந்ததை உணர முடிகிறது. மாறாகச் செயேந்திரரோ சில மாற்றங்களை மடத்தின் நடவடிக்கையில் கொண்டு வந்தவர். இருந்தாலும், இவர்மேல் மதிப்புக் கூடியதாய் இந்த நிகழ்விற்குச் சற்று முன்னர் கூட பலரும் சொல்லக் காணோம்.

இந்த நிலையில் தான் இப்படிக் கொலை பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குற்றச்சாட்டைப் பற்றி நான் எழுத முன்வரவில்லை. என் கேள்வி மடத்தின் அடிநிலை பற்றியது.

ஒரு துறவி என்பவர் மடத்திற்குச் சொத்துச் சேர்ப்பதிலும், பள்ளி, வேதபாடசாலை, மருத்துவ நிலையங்கள் என அறச்சாலைகள் வைப்பதில் ஈடுபட முற்பட்டு பணம், பணம், என்று அலைந்து "அதை இங்கு வாங்கு, இதை இங்கு போடு, இந்த நிலத்தை வாங்கு, இதை விற்றுவிடு" என்று உலகியற் செயல்களிலேயே துயில் நேரம் போக மற்ற நேரங்களில் மூழ்கி இருந்தால், "மடத்தின் அடித்தளம் சரிவதைத் தடுக்க முடியுமா?" என்ற கேள்வி எழுகிறது. சொத்து என்ற சிந்தனை (பழைய பெரியவர் காலத்தில் ரூ. 40 கோடி பெறுமான மடம் இன்றைக்கு ரூ. 2600 கோடிக்குச் சொத்து உள்ளதாக இருக்கிறது. செயேந்திரரே சொத்துப் பெருகியதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.) வந்த பிறகு அது தன்னை அறியாமல் அரசியல் களத்துள்ளும், மற்ற அரசியலாரோடு போட்டி போட்டுக் கொண்டும், அவர்களுடைய நெறிமுறையையே கையாள வைத்தும் செய்து விடுமே என்று தோன்றுகிறது. மடத்தை நிர்வகிக்கும் மானகை (management)யிலும் கூட இவர் தத்துப் பித்தென்று இருந்திருக்கிறார். மொத்தத்தில் இந்த மடம் ஒரு அரசியல் களமாய் ஆகிப் போனது. அரசியல் களத்தில் வேண்டாதவரைத் தட்டி வைப்பதும், மிரட்டி வைப்பதும், இன்னும் ஆளையே தீர்க்கும் அளவிற்குப் போவதும் இயல்பானது. இப்படி மடத்திற்கும் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது ஒரு கொடுமை அல்லவா? நாம் எல்லாம் அம்மாவையும், அய்யாவையும் பற்றிக் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. முட்டையில் இருந்து குஞ்சு வருவது உள்ளே நடக்கும் மாற்றத்தால். அது வெய்யிலில் பொரிக்கப் பட்டது என்பது அடுத்த நிலை. அரசியலார் அப்படித்தான் நடப்பார்கள். மடம் ஏன் அரசியலோடு தோழமை பூண்டது?

துறவென்று வந்தபிறகு எதைத் துறக்கிறார்கள்? குடும்பம், ஆசை, சொகம் எல்லாவற்றையும் அல்லவா துறக்க வேண்டும்? அப்புறம் என்ன சொந்தக்காரர்கள் தொடர்பு நீளுவது? மடத்திற்குள் சொந்தக்காரர்கள் வந்து கூடினால் அப்புறம் துறவாவது, ஒன்றாவது? என்றைக்குச் சொந்தம் உள்நுழைந்ததோ, அன்றே மடம் ஆட்டம் கண்டுவிடும் அல்லவா? இதில் பெரியவர், சின்னவர் என இரண்டு சங்கரர்களும் தவறிழைத்திருக்கிறார்கள். இளையவர் பற்றியும் விவரம் தெரிந்தவர்கள் ஏகப்பட்ட குறை சொல்லுகிறார்கள். குறிப்பாக, பெரியவரைப் பற்றிய இளையவருடைய மோனம் எத்தனையோ நமக்கு உணர்த்துகிறது. இருவருக்கும் இடையே ஒரு பங்காளிச் சண்டையே இருந்திருக்குமோ என்று கூட நமக்குத் தோன்றுகிறது. அடுத்தவரின் மேல் நம்பிக்கை நமக்கு வரவில்லை. பழைய பெரியவரின் கடைசிக் காலந் தொட்டு, இன்னும் சொன்னால் செயேந்திரர் தலைக்காவிரிக்குப் போனதில் இருந்து ஒரு இறுக்கமான சூழ்நிலை மடத்திற்குள் இருந்திருக்கிறது. அங்கு எல்லாமே ஒரு சடங்காய் இருந்திருக்கிறது. அடிப்படையில் ஒரு பிழை என்றோ ஏற்பட்டு, இன்று விடிந்திருக்கிறது. (பிழையின் ஒரு எடுத்துக் காட்டு: துறவு கொண்டு 50 ஆண்டு என்று விழாக் கொண்டாடியது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கொண்டாடிய அந்த விழாவே ஒரு முரண்தொடை. துறவு கொண்டதிற்கு ஒரு விழா என்பது மடத்தனமாகத் தெரிகிறது.)

அல்லிருமை பற்றி ஒரு மணிநேரமாவது செயேந்திரர் பேசிக் கேட்டு எத்தனை நாளாயிருக்கும்? இவர் வேதம் படித்தது எல்லாம் என்னவாயிற்று? வெறுமே சடங்குகளிலும், பாத பூசைகளிலும், மலர்முடிகளிலும், தங்கச் சொரிவுகளிலும், சொத்து-நில ஆவணங்களிலும் இன்னபிறவற்றிலும் மூழ்கி ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தையே தொலைத்து முழுகிவிட்டாரே? அல்லிருமையை ஊருலகத்தில் பரப்ப முற்பட்டவர் இப்படிச் சிக்கி அலைக்கழிவது கொஞ்சம் விந்தையாக, ஏன் வருத்தமாகக் கூட, இருக்கிறது.

சாமியார்கள் பற்றிய மயக்கம் நம் மக்களுக்கு என்று போகுமோ தெரியவில்லை. எனக்கென்னமோ, இந்தச் சீரழிவின் வித்து நெடுங்காலம் முன்னமே ஏற்பட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. இரா. முருகன் சொன்னது போல் செயேந்திரர் மீண்டும் இருள்நீக்கி மகாதேவன் சுப்பிரமணியன் என்று ஆகுவதே சிறப்பு.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾£À¡ÅÇ¢ ¿¡Ç¢ý Á¡¨Ä¢ø þÕóÐ ¸¡ïº¢ ¦º§Âó¾¢ÃÕìÌ ¿¼ìÌõ ¿¢¸ú¸¨Çô ÀÊòÐì ¦¸¡ñÎõ À¡÷òÐì ¦¸¡ñÎõ þÕó§¾ý. ӾĢø À¡÷ìÌõ §À¡Ð ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä; ±ýÉ ¿¼ì¸¢ÈÐ ±ýÈ ´Õ ¾¢¨¸ôÒõ, À¢ý Å¢ÂôÒõ, ´Õ Á¡¾¢Ã¢ ¦À¡Õó¾¡ò ¾ý¨ÁÔõ «Îò¾ÎòÐò §¾¡ýÈ¢É. ¿¼ÅÊ쨸¢ý ¬Æõ, «¸Äõ ¦¾Ã¢Â¡Áø ºð¦¼ýÚ ¸ÕòÐì ÜÚ¾ø ¾ÅÚ, ±É§Å ¦¸¡ïº ¸¡Äõ ¦À¡Úò¾¢Õô§À¡õ ±ýÚ ±ñ½¢ «¨Áó¾¢Õó§¾ý.

ºí¸Ã¡îºÃ¢Â¡÷ ¦º§Âó¾¢Ã÷ §Áø ´Õ ¦ÀÕõ Á¾¢ô¨À ¿¡ý ±ýÚõ ¦¸¡ñ¼¾¢ø¨Ä ±ýÈ¡Öõ (§¿§Ã À¡÷ò¾¢Õó¾ ´Õ º¢Ä ¿¢¸ú¸û «Å÷§Áø ±ÉìÌ Á¾¢ôÒì ¦¸¡ñÎ §º÷ì¸Å¢ø¨Ä. «Å¨Ãì ̨Ȧº¡øÄò ¦¾¡¼í¸¢É¡ø ÀÄÅü¨Èî ¦º¡øÄ ÓÊÔõ ¾¡ý.), ¦¸¡¨Ä ÅÆ츢ø Ó¾ü ÌüÈšǢ¡¸î ¦º¡øÄôÀÎõ «ÇÅ¢üÌ ¾Ãõ ̨ÈóÐ þÕôÀ¡Ã¡ ±ýÀ¾¢ø ¿¡ý ¦¸¡ïºõ ¾¢¨¸òÐò ¾¡ý §À¡§Éý. (þýÛõ ÌüÈõ ¿¢ÕÅ¢ì¸ô À¼Å¢ø¨Ä; þô¦À¡ØÐ «ÃÍ ÅÆì¸È¢»Õõ ¸¡Åø ШÈÔõ ¦ºö¾¢ÕôÀÐ ÌüÈõ º¡ðξ§Ä.) ¦ºö¾¢¸û ÀÊì¸ô ÀÊì¸ ¬Æõ §À¡öì ¦¸¡ñÊÕôÀ¨¾ô À¡÷ò¾¡ø, Á¼ò¾¢ý ¿¼ÅÊ쨸¸û ¦ÀâÐõ Ҩç¡Êô §À¡Â¢Õ츢ȧ¾¡ ±ý§È ¯½Ãò ¾¨ÄôÀθ¢§Èý.

(þó¾ Á¼ø ÀÊô§À¡ÕìÌ ¿¡ý ´ýÚ ¦º¡øÄì ¸¼¨Áô Àð¼Åý. ¿¡ý ¬¾¢ ºí¸Ãâý ¸Õò¨¾ ²üÈÅÉ¢ø¨Ä. Á¡üÚì ¸ÕòÐ ¯ûÇÅý ±ýÈ¡Öõ «øÄ¢Õ¨Á ±ýÛõ «ò¨Å¾õ ´Õ ¦¿È¢ ±ýÚ ÀÊì¸ì ¸üÈÅý. þó¾ ¿¢¨Ä¢ø þÕó§¾ ¿¡ý þó¾ ¿¢¸úÅ¢¨É §¿¡ì̸¢ý§Èý.)

"ÀÃÁ¡ýÁ¡, ¯öÅ¡ýÁ¡ ±ýÚ ¾É¢ò¾É¢Â¡¸ µ÷ þÕ¨Á ¿¢¨Ä ¸¢¨¼Â¡Ð («ø þÕ¨Á = «ø Шžõ = «òШžõ = þÕ¨Á «øÄ¡¾ ¿¢¨Ä); þÃñÎõ ´ýÚ¾¡ý; ¯Ä¸¢ø þôÀÊò ¾É¢òÐò ¦¾Ã¢Ôõ ´ù¦Å¡ýÚõ ¸ñÏ즸¾¢§Ã §¾¡ýÚõ Á¡Âò§¾¡üȧÁ, ¯ñ¨Á «øÄ; þ¨ÈÅý ¯ýÛû§Ç§Â ¯ûÇ¡ý" ±ýÚ ¦º¡øÄô ÒÌó¾ ¦¸¡û¨¸Â¢ý Óý§É¡Ê¡÷ þôÀÊ ´Õ ¿¢¨ÄìÌ ÅóÐ §º÷ó¾Ð ܼ þý¦É¡Õ Á¡Âò §¾¡üÈõ §À¡Ä§Å ¸¡ðº¢ «Ç¢ì¸¢ÈÐ.

¦º§Âó¾¢Ã÷ ±øÄ¡ ÍÁ¡÷ò¾÷¸ÙìÌõ «øÄ¡Å¢ð¼¡Öõ, ÌÈ¢ôÀ¢ð¼ «Ç× ÍÁ¡÷ò¾ô ¦ÀÕÁ¡ý¸Ç¢ý (brahmins) ÌÕÅ¡ö þÕôÀÅ÷. (¬¾¢ ºí¸Ã÷ 4 Á¼í¸¨Ç ²üÀÎò¾¢É¡÷, «ó¾ ¿¡Ö Á¼í¸Ç¢ø ´ýÈ¡É º¢Õí§¸Ã¢ Á¼ò¾¢ý ÌõÀ§¸¡½ì ¸¢¨Ç¾¡ý áÚ, áü¨ÈõÀÐ ¬ñθÙìÌ ÓýÉ¡ø ¸¡ïº¢ìÌ Á¡üÈÄ¡¸¢ÂÐ ±É ´Õº¢ÄÕõ, þø¨Ä¢ø¨Ä þÐ ¬¾¢ºí¸Ã§Ã ²üÀÎò¾¢Â ³ó¾¡ÅÐ Á¼õ, ¬¾¢ºí¸Ã§Ã þ¾ý Ó¾ø À£¼ò ¾¨ÄÅ÷ ±ýÚõ º¢Ä÷ ÁÚòÐì ÜÚÅÐ ¯ñÎ. «ó¾î º¢ì¸ÖìÌûÙõ, ¸¡ïº¢ Á¼ò¾¢ý ÀƨÁìÌûÙõ þô¦À¡ØÐ §À¡¸§Åñ¼¡õ. ¬É¡ø ¸¡ïº¢ Á¼ò¾¢üÌõ º¢Õí§¸Ã¢ Á¼ò¾¢üÌõ ¯ûÇ º¢Ä «ÊôÀ¨¼ô À¢Ç׸ǡÖõ, À¨Æ ¦ÀâÂÅÕìÌõ, þÅÕìÌõ þ¨¼§Â þÕó¾ ¿¢¨Ä-§ÅÚÀ¡Î¸Ç¡Öõ ÍÁ¡÷ò¾ À¡÷ôÀÉ÷¸Ç¢§Ä§Â ÀÄÕõ þŨÃì §¸ûÅ¢ §¸ðÎì ¦¸¡ñÎ þÕó¾É÷. þó¾ ¿¢¨Ä ¿£Ú âò¾ ¦¿ÕôÀ¡¸§Å ¦¿Îí¸¡Äõ þÕó¾¢Õ츢ÈÐ. ¦¿ÕôÒ Á¼ò¾¢üÌûÙõ ¸ÉýÚ ¦¸¡ñÎ þÕó¾¢Õ츢ÈÐ ±ýÚ ÀÄÕõ ¦º¡ýÉÐ ¯ñÎ.)

ºí¸Ã Á¼ò¾¢ý ¾¨ÄÅ÷ ±ýÀÅÕìÌ ¦À¡ÐÅ¡¸ þÃñÎ ¦À¡ÚôÒì¸û ¯ñÎ. Ӿġ ¦À¡ÚôÒ «øÄ¢Õ¨Áì («òШžõ) ¦¸¡û¨¸¨Â Áì¸Ç¢¨¼§Â ÀÃôÒÅÐ. («øÄ¢Õ¨Áì ¸¡Ã÷¸ÙìÌ §¸¡Â¢ø ´Õ ¦À¡Õð¼øÄ; þýÛõ ¦º¡øÄô §À¡É¡ø, §¸¡Â¢ø ÅÆ¢À¡Î ±ýÀ¨¾ Á£È¢ ÅçÅñÎõ ±ýÚ ¦º¡øÄì ÜÊÂÅ÷¸û «Å÷¸û. º¢Å ¦¿È¢, Å¢ñ¦½È¢ «øÄ¡¾ §Å¾ ¦¿È¢¨Â °¦ÃíÌõ ÀÃôÀì ¸¼¨Á âñ¼Å÷¸û «Å÷¸û.) þÃñ¼¡ÅÐ Á¼ò¾¢ý ¦º¡òÐì¸¨Ç ¿¢÷Ÿ¢òÐ ÅÕÅÐ. þÃñÎ ¦À¡Úô¨ÀÔõ ¦ºöÔõ §À¡Ð ¾¡Á¨Ã þ¨Äò ¾ñ½£Ã¢ý ÁÉôÀ¡íÌ Á¼ò¾¨ÄÅÕìÌ ÅóÐ §ºÃ§ÅñÎõ. ¦º§Âó¾¢Ã÷ ±ó¾ «Ç× Ó¾ü¦À¡Úô¨À ¿¢¨È§ÅüÈ¢ì ¦¸¡ñÊÕó¾¡÷ ±ýÀ¾¢ø ÀÄÕìÌõ §¸ûÅ¢¸û ¯ñÎ. þô¦À¡ØÐ þÃñ¼¡ÅÐ ¦À¡ÚôÒ «Å¨Ãô ¦Àâ º¢ì¸ÖìÌì ¦¸¡ñÎ Åó¾¢Õ츢ÈÐ.

¦ÀÕÁ¡ý¸Ç¢ø «øÄ¢Õ¨Áì ¦¸¡û¨¸ÂáÔõ «øÄ¡Áø, º¢Å¦¿È¢Â¡ÇáÔõ «øÄ¡Áø, Å¢ñ½Å ¦¿È¢Â¢ø À¢¨½ó¾¢Õó¾Å÷¸û «Å¨Ã ´Õ Á¡üÈ¡ÇḧŠÀ¡÷òÐ §ÅÚÀ¡Î ¦¸¡ûÅÐõ ¯ñÎ. (ÌÈ¢ôÀ¡¸ ÀïºÃ¡ò¾¢Ã ¬¸ÁӨȸǢø ã쨸 ѨÆòÐ ¾¢ÕôÀ¾¢ì §¸¡Â¢¦Ä¡ØÌ Ó¨È¢ø, º¢Ä Áñ¼Àí¸¨Ç þÊòÐ þýÛõ ´Õ ¦Àâ ÍüÚ ¯ÕÅ¡ì¸Ä¡õ ±ýÚ Á¡üÈõ ¦º¡ýÉÐõ, Å¢ñ½Å ¦¿È¢ò ¾¨ÄÅ÷¸¨Ç ´Ð츢 ¨ÅìÌÁ¡ô§À¡Ä ÀÄ ¸ÕòÐì¸û ¦º¡øÄ¢ÂÐõ ÀÄ Å¢ñ½Å÷¸ÙìÌ À¢Ê측Áø þÕó¾Ð.) ¦ÀÕÁ¡ý¸û «øÄ¡¾ ÁüÈÅ÷ìÌ «Å÷ ´Õ ¦¿Õì¸õ þøÄ¡¾ Å¢ó¨¾Â¡ÉÅ÷. «Å§Ã¡Î ÀÄÕìÌõ ¸ÕòÐ §ÅÚÀ¡Î; º¢Ä þ¼í¸Ç¢ø ¸ÕòÐ §ÅÚÀ¡Î ÓüÈ¢ô À¢½ì§¸ ¯ñÎ; «Å¨Ãì Ì¨È ¦º¡ýÉÅ÷¸û ÀÄ÷. «Ð «Ãº¢ÂÄ¢ø ÁðÎõ þø¨Ä. ¬ýÁ£¸ò§¾¡Î ÁðÎõ ¿¢ýÚ ¦¸¡ûÇ¡Áø «Ãº¢ÂÄ¢ø «Å÷ ѨÆó¾Ð, ÌÈ¢ôÀ¡¸ þóÐòÐÅ «Ãº¢ÂÄ¢ø ѨÆó¾Ð ¬ýÁ£¸õ º¡÷ó¾ ÀÄ ¾Á¢Æ÷¸ÙìÌ «Å¨Ãô À¢Èɡ츢ÂÐ. ¸å÷ §¸¡Â¢Ä¢ý ̼ÓØ쨸ò ¾Á¢Æ¢ø ¦ºöžüÌ Á¡üÚì ¸ÕòÐî ¦º¡øÄ¢ÂÐ, ÁüÈ º¢Å¦¿È¢ Á¼í¸Ç¢ý Óɸ¨Ä ±¾¢÷¦¸¡ñ¼Ð, ¨¸õ¦Àñ¸û, «ÖÅü ¦Àñ¸û ¬¸¢§Â¡÷ ÀüÈ¢î ¦º¡ýÉÐ, ¬¸¢Â¨Å ±øÄ¡õ "±ýÉÐ þÅ÷ þôÀÊ?" ±ýÛÁ¡ô §À¡ø ÀħÀâý ¦¿üÈ¢¨Âì ÌÚ¸ ¨Åò¾Ð. «ñ¨Áì ¸¡Äò¾¢ø ¾¡ú󧾡ÕìÌ ¬¾ÃÅ¡öî º¢Ä Å¡ì̸û ¦º¡ýÉ¡Öõ, º¢Ä ¦ºö¨¸¸û ¦ºö¾¡Öõ, «Ð ¯ûÇ¡÷ó¾ ¯¨ÃôÀ¡, «øÄÐ ¦ÅÚõ «Ãº¢ÂøÅ¡¾¢ò¾ÉÁ¡ ±ýÈ §¸ûÅ¢¨ÂÔõ Áì¸û þ¨¼§Â ±ØôÀ¢ÂÐ. þò¾¨ÉìÌõ Óó¨¾Â ¦ÀâÂÅ÷ ÌÓ¸ Á¡üÈõ ÀüÈ¢î ¦º¡øÄ¡Áø ´Õ ÀƨÁ §¿¡ì¸¢ø þÕó¾Å÷¾¡ý. «ó¾ì ¸ÕòÐì¸û ²üÚì ¦¸¡ûÇ ÓÊ¡¾¨Å ¾¡ý. þÕó¾¡Öõ ¡¨Ãì §¸ð¼¡Öõ «Å÷§Áø ´Õ Á¾¢ôÒ þÕ󾨾 ¯½Ã Óʸ¢ÈÐ. Á¡È¡¸î ¦º§Âó¾¢Ã§Ã¡ º¢Ä Á¡üÈí¸¨Ç Á¼ò¾¢ý ¿¼ÅÊ쨸¢ø ¦¸¡ñÎ Åó¾Å÷. þÕó¾¡Öõ, þÅ÷§Áø Á¾¢ôÒì Üʾ¡ö þó¾ ¿¢¸úÅ¢üÌî ºüÚ ÓýÉ÷ ܼ ÀÄÕõ ¦º¡øÄì ¸¡§½¡õ.

þó¾ ¿¢¨Ä¢ø ¾¡ý þôÀÊì ¦¸¡¨Ä ÀüȢ ´Õ ÌüÈðÎ ±Øó¾¢Õ츢ÈÐ. ÌüÈð¨¼ô ÀüÈ¢ ¿¡ý ±Ø¾ ÓýÅÃÅ¢ø¨Ä. ±ý §¸ûÅ¢ Á¼ò¾¢ý «Ê¿¢¨Ä ÀüÈ¢ÂÐ.

´Õ ÐÈÅ¢ ±ýÀÅ÷ Á¼ò¾¢üÌî ¦º¡òÐî §º÷ôÀ¾¢Öõ, ÀûÇ¢, §Å¾À¡¼º¡¨Ä, ÁÕòÐÅ ¿¢¨ÄÂí¸û ±É «È¨Ä¸û ¨ÅôÀ¾¢ø ®ÎÀ¼ ÓüÀðÎ À½õ, À½õ, ±ýÚ «¨ÄóÐ "«¨¾ þíÌ Å¡íÌ, þ¨¾ þíÌ §À¡Î, þó¾ ¿¢Äò¨¾ Å¡íÌ, þ¨¾ Å¢üÚÅ¢Î" ±ýÚ ¯Ä¸¢Âü ¦ºÂø¸Ç¢§Ä§Â Тø §¿Ãõ §À¡¸ ÁüÈ §¿Ãí¸Ç¢ø ãú¸¢ þÕó¾¡ø, "Á¼ò¾¢ý «Êò¾Çõ ºÃ¢Å¨¾ò ¾Îì¸ ÓÊÔÁ¡?" ±ýÈ §¸ûÅ¢ ±Ø¸¢ÈÐ. ¦º¡òÐ ±ýÈ º¢ó¾¨É (À¨Æ ¦ÀâÂÅ÷ ¸¡Äò¾¢ø å. 40 §¸¡Ê ¦ÀÚÁ¡É Á¼õ þý¨ÈìÌ å. 2600 §¸¡ÊìÌî ¦º¡òÐ ¯ûǾ¡¸ þÕ츢ÈÐ. ¦º§Âó¾¢Ã§Ã ¦º¡òÐô ¦ÀÕ¸¢Â¨¾ô ¦ÀÕ¨Á¡¸î ¦º¡øÄ¢ì ¦¸¡û¸¢È¡÷.) Åó¾ À¢ÈÌ «Ð ¾ý¨É «È¢Â¡Áø «Ãº¢Âø ¸ÇòÐûÙõ, ÁüÈ «Ãº¢ÂÄ¡§Ã¡Î §À¡ðÊ §À¡ðÎì ¦¸¡ñÎõ, «Å÷¸Ù¨¼Â ¦¿È¢Ó¨È¨Â§Â ¨¸Â¡Ç ¨ÅòÐõ ¦ºöРŢΧÁ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. Á¼ò¨¾ ¿¢÷Ÿ¢ìÌõ Á¡É¨¸ (management)¢Öõ ܼ þÅ÷ ¾òÐô À¢ò¦¾ýÚ þÕó¾¢Õ츢ȡ÷. ¦Á¡ò¾ò¾¢ø þó¾ Á¼õ ´Õ «Ãº¢Âø ¸ÇÁ¡ö ¬¸¢ô §À¡ÉÐ. «Ãº¢Âø ¸Çò¾¢ø §Åñ¼¡¾Å¨Ãò ¾ðÊ ¨ÅôÀÐõ, Á¢ÃðÊ ¨ÅôÀÐõ, þýÛõ ¬¨Ç§Â ¾£÷ìÌõ «ÇÅ¢üÌô §À¡ÅÐõ þÂøÀ¡ÉÐ. þôÀÊ Á¼ò¾¢üÌõ ¸ðº¢¸ÙìÌõ §ÅÚÀ¡Î þøÄ¡Áø §À¡ÉÐ ´Õ ¦¸¡Î¨Á «øÄÅ¡? ¿¡õ ±øÄ¡õ «õÁ¡¨ÅÔõ, «ö¡¨ÅÔõ ÀüÈ¢ì ̨Ȧº¡øÄ¢ì ¦¸¡ñÊÕôÀ¾¢ø ÀÂÉ¢ø¨Ä. Óð¨¼Â¢ø þÕóÐ ÌïÍ ÅÕÅÐ ¯û§Ç ¿¼ìÌõ Á¡üÈò¾¡ø. «Ð ¦Åö¢Ģø ¦À¡Ã¢ì¸ô Àð¼Ð ±ýÀÐ «Îò¾ ¿¢¨Ä. «Ãº¢ÂÄ¡÷ «ôÀÊò¾¡ý ¿¼ôÀ¡÷¸û. Á¼õ ²ý «Ãº¢Â§Ä¡Î §¾¡Æ¨Á âñ¼Ð?

ÐȦÅýÚ Åó¾À¢ÈÌ ±¨¾ò ÐÈ츢ȡ÷¸û? ÌÎõÀõ, ¬¨º, ¦º¡¸õ ±øÄ¡Åü¨ÈÔõ «øÄÅ¡ ÐÈì¸ §ÅñÎõ? «ôÒÈõ ±ýÉ ¦º¡ó¾ì¸¡Ã÷¸û ¦¾¡¼÷Ò ¿£ÙÅÐ? Á¼ò¾¢üÌû ¦º¡ó¾ì¸¡Ã÷¸û ÅóÐ ÜÊÉ¡ø «ôÒÈõ ÐÈÅ¡ÅÐ, ´ýÈ¡ÅÐ? ±ý¨ÈìÌî ¦º¡ó¾õ ¯ûѨÆ󾧾¡, «ý§È Á¼õ ¬ð¼õ ¸ñÎÅ¢Îõ «øÄÅ¡? þ¾¢ø ¦ÀâÂÅ÷, º¢ýÉÅ÷ ±É þÃñÎ ºí¸Ã÷¸Ùõ ¾ÅÈ¢¨Æò¾¢Õ츢ȡ÷¸û. þ¨ÇÂÅ÷ ÀüÈ¢Ôõ Å¢ÅÃõ ¦¾Ã¢ó¾Å÷¸û ²¸ôÀð¼ Ì¨È ¦º¡øÖ¸¢È¡÷¸û. ÌÈ¢ôÀ¡¸, ¦ÀâÂŨÃô ÀüȢ þ¨ÇÂÅÕ¨¼Â §Á¡Éõ ±ò¾¨É§Â¡ ¿ÁìÌ ¯½÷òи¢ÈÐ. þÕÅÕìÌõ þ¨¼§Â ´Õ Àí¸¡Ç¢î ºñ¨¼§Â þÕó¾¢Õì̧Á¡ ±ýÚ Ü¼ ¿ÁìÌò §¾¡ýÚ¸¢ÈÐ. «Îò¾Åâý §Áø ¿õÀ¢ì¨¸ ¿ÁìÌ ÅÃÅ¢ø¨Ä. À¨Æ ¦ÀâÂÅâý ¸¨¼º¢ì ¸¡Äó ¦¾¡ðÎ, þýÛõ ¦º¡ýÉ¡ø ¦º§Âó¾¢Ã÷ ¾¨Ä측ŢâìÌô §À¡É¾¢ø þÕóÐ ´Õ þÚì¸Á¡É Ýú¿¢¨Ä Á¼ò¾¢üÌû þÕó¾¢Õ츢ÈÐ. «íÌ ±øÄ¡§Á ´Õ º¼í¸¡ö þÕó¾¢Õ츢ÈÐ. «ÊôÀ¨¼Â¢ø ´Õ À¢¨Æ ±ý§È¡ ²üÀðÎ, þýÚ Å¢Êó¾¢Õ츢ÈÐ. (À¢¨Æ¢ý ´Õ ±ÎòÐì ¸¡ðÎ: ÐÈ× ¦¸¡ñÎ 50 ¬ñÎ ±ýÚ Å¢Æ¡ì ¦¸¡ñ¼¡ÊÂÐ. ¦ºý¨Éô Àø¸¨Äì ¸Æ¸ áüÈ¡ñΠŢơ Áñ¼Àò¾¢ø ¦¸¡ñ¼¡Ê «ó¾ Ţơ§Å ´Õ ÓÃñ¦¾¡¨¼. ÐÈ× ¦¸¡ñ¼¾¢üÌ ´Õ Ţơ ±ýÀÐ Á¼ò¾ÉÁ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ.)

«øÄ¢Õ¨Á ÀüÈ¢ ´Õ Á½¢§¿ÃÁ¡ÅÐ ¦º§Âó¾¢Ã÷ §Àº¢ì §¸ðÎ ±ò¾¨É ¿¡Ç¡Â¢ÕìÌõ? þÅ÷ §Å¾õ ÀÊò¾Ð ±øÄ¡õ ±ýÉš¢üÚ? ¦ÅÚ§Á º¼í̸ǢÖõ, À¡¾ ⨺¸Ç¢Öõ, ÁÄ÷ÓʸǢÖõ, ¾í¸î ¦º¡Ã¢×¸Ç¢Öõ, ¦º¡òÐ-¿¢Ä ¬Å½í¸Ç¢Öõ þýÉÀ¢ÈÅüÈ¢Öõ ãú¸¢ ¬¾¢ ºí¸Ãâý «ÊôÀ¨¼ì ¸Õò¨¾§Â ¦¾¡¨ÄòÐ Óظ¢Å¢ð¼¡§Ã? «øÄ¢Õ¨Á¨Â °Õĸò¾¢ø ÀÃôÀ ÓüÀð¼Å÷ þôÀÊî º¢ì¸¢ «¨Äì¸Æ¢ÅÐ ¦¸¡ïºõ Å¢ó¨¾Â¡¸, ²ý ÅÕò¾Á¡¸ì ܼ, þÕ츢ÈÐ.

º¡Á¢Â¡÷¸û ÀüȢ ÁÂì¸õ ¿õ Áì¸ÙìÌ ±ýÚ §À¡Ì§Á¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±É즸ýɧÁ¡, þó¾î º£ÃƢŢý Å¢òÐ ¦¿Îí¸¡Äõ ÓýɧÁ ²üÀðÎÅ¢ð¼Ð ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ. þá. ÓÕ¸ý ¦º¡ýÉÐ §À¡ø ¦º§Âó¾¢Ã÷ Á£ñÎõ þÕû¿£ì¸¢ Á¸¡§¾Åý ÍôÀ¢ÃÁ½¢Âý ±ýÚ ¬Ìŧ¾ º¢ÈôÒ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

அன்பு said...

என்னைப்போல் டிஸ்கி தமிழில் படிக்க இயலாதவர்களுக்காக இங்கே:

செயேந்திரர்

தீபாவளி நாளின் மாலையில் இருந்து காஞ்சி செயேந்திரருக்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தேன். முதலில் பார்க்கும் போது ஒன்றும் புரியவில்லை; என்ன நடக்கிறது என்ற ஒரு திகைப்பும், பின் வியப்பும், ஒரு மாதிரி பொருந்தாத் தன்மையும் அடுத்தடுத்துத் தோன்றின. நடவடிக்கையின் ஆழம், அகலம் தெரியாமல் சட்டென்று கருத்துக் கூறுதல் தவறு, எனவே கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என்று எண்ணி அமைந்திருந்தேன்.

சங்கராச்சரியார் செயேந்திரர் மேல் ஒரு பெரும் மதிப்பை நான் என்றும் கொண்டதில்லை என்றாலும் (நேரே பார்த்திருந்த ஒரு சில நிகழ்ச்சிகள் அவர்மேல் எனக்கு மதிப்புக் கொண்டு சேர்க்கவில்லை. அவரைக் குறைசொல்லத் தொடங்கினால் பலவற்றைச் சொல்ல முடியும் தான்.), கொலை வழக்கில் முதற் குற்றவாளியாகச் சொல்லப்படும் அளவிற்கு தரம் குறைந்து இருப்பாரா என்பதில் நான் கொஞ்சம் திகைத்துத் தான் போனேன். (இன்னும் குற்றம் நிருவிக்கப் படவில்லை; இப்பொழுது அரசு வழக்கறிஞரும் காவல் துறையும் செய்திருப்பது குற்றம் சாட்டுதலே.) செய்திகள் படிக்கப் படிக்க ஆழம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால், மடத்தின் நடவடிக்கைகள் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதோ என்றே உணரத் தலைப்படுகிறேன்.

(இந்த மடல் படிப்போருக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப் பட்டவன். நான் ஆதி சங்கரரின் கருத்தை ஏற்றவனில்லை. மாற்றுக் கருத்து உள்ளவன் என்றாலும் அல்லிருமை என்னும் அத்வைதம் ஒரு நெறி என்று படிக்கக் கற்றவன். இந்த நிலையில் இருந்தே நான் இந்த நிகழ்வினை நோக்குகின்றேன்.)

"பரமான்மா, உய்வான்மா என்று தனித்தனியாக ஓர் இருமை நிலை கிடையாது (அல் இருமை = அல் துவைதம் = அத்துவைதம் = இருமை அல்லாத நிலை); இரண்டும் ஒன்றுதான்; உலகில் இப்படித் தனித்துத் தெரியும் ஒவ்வொன்றும் கண்ணுக்கெதிரே தோன்றும் மாயத்தோற்றமே, உண்மை அல்ல; இறைவன் உன்னுள்ளேயே உள்ளான்" என்று சொல்லப் புகுந்த கொள்கையின் முன்னோடியார் இப்படி ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது கூட இன்னொரு மாயத் தோற்றம் போலவே காட்சி அளிக்கிறது.

செயேந்திரர் எல்லா சுமார்த்தர்களுக்கும் அல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவு சுமார்த்தப் பெருமான்களின் (brahmins) குருவாய் இருப்பவர். (ஆதி சங்கரர் 4 மடங்களை ஏற்படுத்தினார், அந்த நாலு மடங்களில் ஒன்றான சிருங்கேரி மடத்தின் கும்பகோணக் கிளைதான் நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சிக்கு மாற்றலாகியது என ஒருசிலரும், இல்லையில்லை இது ஆதிசங்கரரே ஏற்படுத்திய ஐந்தாவது மடம், ஆதிசங்கரரே இதன் முதல் பீடத் தலைவர் என்றும் சிலர் மறுத்துக் கூறுவது உண்டு. அந்தச் சிக்கலுக்குள்ளும், காஞ்சி மடத்தின் பழமைக்குள்ளும் இப்பொழுது போகவேண்டாம். ஆனால் காஞ்சி மடத்திற்கும் சிருங்கேரி மடத்திற்கும் உள்ள சில அடிப்படைப் பிளவுகளாலும், பழைய பெரியவருக்கும், இவருக்கும் இடையே இருந்த நிலை-வேறுபாடுகளாலும் சுமார்த்த பார்ப்பனர்களிலேயே பலரும் இவரைக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர். இந்த நிலை நீறு பூத்த நெருப்பாகவே நெடுங்காலம் இருந்திருக்கிறது. நெருப்பு மடத்திற்குள்ளும் கனன்று கொண்டு இருந்திருக்கிறது என்று பலரும் சொன்னது உண்டு.)

சங்கர மடத்தின் தலைவர் என்பவருக்கு பொதுவாக இரண்டு பொறுப்புக்கள் உண்டு. முதலாய பொறுப்பு அல்லிருமைக் (அத்துவைதம்) கொள்கையை மக்களிடையே பரப்புவது. (அல்லிருமைக் காரர்களுக்கு கோயில் ஒரு பொருட்டல்ல; இன்னும் சொல்லப் போனால், கோயில் வழிபாடு என்பதை மீறி வரவேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அவர்கள். சிவ நெறி, விண்ணெறி அல்லாத வேத நெறியை ஊரெங்கும் பரப்பக் கடமை பூண்டவர்கள் அவர்கள்.) இரண்டாவது மடத்தின் சொத்துக்களை நிர்வகித்து வருவது. இரண்டு பொறுப்பையும் செய்யும் போது தாமரை இலைத் தண்ணீரின் மனப்பாங்கு மடத்தலைவருக்கு வந்து சேரவேண்டும். செயேந்திரர் எந்த அளவு முதற்பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் என்பதில் பலருக்கும் கேள்விகள் உண்டு. இப்பொழுது இரண்டாவது பொறுப்பு அவரைப் பெரிய சிக்கலுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

பெருமான்களில் அல்லிருமைக் கொள்கையராயும் அல்லாமல், சிவநெறியாளராயும் அல்லாமல், விண்ணவ நெறியில் பிணைந்திருந்தவர்கள் அவரை ஒரு மாற்றாளராகவே பார்த்து வேறுபாடு கொள்வதும் உண்டு. (குறிப்பாக பஞ்சராத்திர ஆகமமுறைகளில் மூக்கை நுழைத்து திருப்பதிக் கோயிலொழுகு முறையில், சில மண்டபங்களை இடித்து இன்னும் ஒரு பெரிய சுற்று உருவாக்கலாம் என்று மாற்றம் சொன்னதும், விண்ணவ நெறித் தலைவர்களை ஒதுக்கி வைக்குமாப்போல பல கருத்துக்கள் சொல்லியதும் பல விண்ணவர்களுக்கு பிடிக்காமல் இருந்தது.) பெருமான்கள் அல்லாத மற்றவர்க்கு அவர் ஒரு நெருக்கம் இல்லாத விந்தையானவர். அவரோடு பலருக்கும் கருத்து வேறுபாடு; சில இடங்களில் கருத்து வேறுபாடு முற்றிப் பிணக்கே உண்டு; அவரைக் குறை சொன்னவர்கள் பலர். அது அரசியலில் மட்டும் இல்லை. ஆன்மீகத்தோடு மட்டும் நின்று கொள்ளாமல் அரசியலில் அவர் நுழைந்தது, குறிப்பாக இந்துத்துவ அரசியலில் நுழைந்தது ஆன்மீகம் சார்ந்த பல தமிழர்களுக்கு அவரைப் பிறனாக்கியது. கரூர் கோயிலின் குடமுழுக்கைத் தமிழில் செய்வதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லியது, மற்ற சிவநெறி மடங்களின் முனகலை எதிர்கொண்டது, கைம்பெண்கள், அலுவற் பெண்கள் ஆகியோர் பற்றிச் சொன்னது, ஆகியவை எல்லாம் "என்னது இவர் இப்படி?" என்னுமாப் போல் பலபேரின் நெற்றியைக் குறுக வைத்தது. அண்மைக் காலத்தில் தாழ்ந்தோருக்கு ஆதரவாய்ச் சில வாக்குகள் சொன்னாலும், சில செய்கைகள் செய்தாலும், அது உள்ளார்ந்த உரைப்பா, அல்லது வெறும் அரசியல்வாதித்தனமா என்ற கேள்வியையும் மக்கள் இடையே எழுப்பியது. இத்தனைக்கும் முந்தைய பெரியவர் குமுக மாற்றம் பற்றிச் சொல்லாமல் ஒரு பழமை நோக்கில் இருந்தவர்தான். அந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை தான். இருந்தாலும் யாரைக் கேட்டாலும் அவர்மேல் ஒரு மதிப்பு இருந்ததை உணர முடிகிறது. மாறாகச் செயேந்திரரோ சில மாற்றங்களை மடத்தின் நடவடிக்கையில் கொண்டு வந்தவர். இருந்தாலும், இவர்மேல் மதிப்புக் கூடியதாய் இந்த நிகழ்விற்குச் சற்று முன்னர் கூட பலரும் சொல்லக் காணோம்.

இந்த நிலையில் தான் இப்படிக் கொலை பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குற்றச்சாட்டைப் பற்றி நான் எழுத முன்வரவில்லை. என் கேள்வி மடத்தின் அடிநிலை பற்றியது.

ஒரு துறவி என்பவர் மடத்திற்குச் சொத்துச் சேர்ப்பதிலும், பள்ளி, வேதபாடசாலை, மருத்துவ நிலையங்கள் என அறச்சாலைகள் வைப்பதில் ஈடுபட முற்பட்டு பணம், பணம், என்று அலைந்து அதை இங்கு வாங்கு, இதை இங்கு போடு, இந்த நிலத்தை வாங்கு, இதை விற்றுவிடு என்று உலகியற் செயல்களிலேயே துயில் நேரம் போக மற்ற நேரங்களில் மூழ்கி இருந்தால், மடத்தின் அடித்தளம் சரிவதைத் தடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சொத்து என்ற சிந்தனை (பழைய பெரியவர் காலத்தில் ரூ. 40 கோடி பெறுமான மடம் இன்றைக்கு ரூ. 2600 கோடிக்குச் சொத்து உள்ளதாக இருக்கிறது. செயேந்திரரே சொத்துப் பெருகியதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.) வந்த பிறகு அது தன்னை அறியாமல் அரசியல் களத்துள்ளும், மற்ற அரசியலாரோடு போட்டி போட்டுக் கொண்டும், அவர்களுடைய நெறிமுறையையே கையாள வைத்தும் செய்து விடுமே என்று தோன்றுகிறது. மடத்தை நிர்வகிக்கும் மானகை (management)யிலும் கூட இவர் தத்துப் பித்தென்று இருந்திருக்கிறார். மொத்தத்தில் இந்த மடம் ஒரு அரசியல் களமாய் ஆகிப் போனது. அரசியல் களத்தில் வேண்டாதவரைத் தட்டி வைப்பதும், மிரட்டி வைப்பதும், இன்னும் ஆளையே தீர்க்கும் அளவிற்குப் போவதும் இயல்பானது. இப்படி மடத்திற்கும் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது ஒரு கொடுமை அல்லவா? நாம் எல்லாம் அம்மாவையும், அய்யாவையும் பற்றிக் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. முட்டையில் இருந்து குஞ்சு வருவது உள்ளே நடக்கும் மாற்றத்தால். அது வெய்யிலில் பொரிக்கப் பட்டது என்பது அடுத்த நிலை. அரசியலார் அப்படித்தான் நடப்பார்கள். மடம் ஏன் அரசியலோடு தோழமை பூண்டது?

துறவென்று வந்தபிறகு எதைத் துறக்கிறார்கள்? குடும்பம், ஆசை, சொகம் எல்லாவற்றையும் அல்லவா துறக்க வேண்டும்? அப்புறம் என்ன சொந்தக்காரர்கள் தொடர்பு நீளுவது? மடத்திற்குள் சொந்தக்காரர்கள் வந்து கூடினால் அப்புறம் துறவாவது, ஒன்றாவது? என்றைக்குச் சொந்தம் உள்நுழைந்ததோ, அன்றே மடம் ஆட்டம் கண்டுவிடும் அல்லவா? இதில் பெரியவர், சின்னவர் என இரண்டு சங்கரர்களும் தவறிழைத்திருக்கிறார்கள். இளையவர் பற்றியும் விவரம் தெரிந்தவர்கள் ஏகப்பட்ட குறை சொல்லுகிறார்கள். குறிப்பாக, பெரியவரைப் பற்றிய இளையவருடைய மோனம் எத்தனையோ நமக்கு உணர்த்துகிறது. இருவருக்கும் இடையே ஒரு பங்காளிச் சண்டையே இருந்திருக்குமோ என்று கூட நமக்குத் தோன்றுகிறது. அடுத்தவரின் மேல் நம்பிக்கை நமக்கு வரவில்லை. பழைய பெரியவரின் கடைசிக் காலந் தொட்டு, இன்னும் சொன்னால் செயேந்திரர் தலைக்காவிரிக்குப் போனதில் இருந்து ஒரு இறுக்கமான சூழ்நிலை மடத்திற்குள் இருந்திருக்கிறது. அங்கு எல்லாமே ஒரு சடங்காய் இருந்திருக்கிறது. அடிப்படையில் ஒரு பிழை என்றோ ஏற்பட்டு, இன்று விடிந்திருக்கிறது. (பிழையின் ஒரு எடுத்துக் காட்டு: துறவு கொண்டு 50 ஆண்டு என்று விழாக் கொண்டாடியது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கொண்டாடிய அந்த விழாவே ஒரு முரண்தொடை. துறவு கொண்டதிற்கு ஒரு விழா என்பது மடத்தனமாகத் தெரிகிறது.)

அல்லிருமை பற்றி ஒரு மணிநேரமாவது செயேந்திரர் பேசிக் கேட்டு எத்தனை நாளாயிருக்கும்? இவர் வேதம் படித்தது எல்லாம் என்னவாயிற்று? வெறுமே சடங்குகளிலும், பாத பூசைகளிலும், மலர்முடிகளிலும், தங்கச் சொரிவுகளிலும், சொத்து-நில ஆவணங்களிலும் இன்னபிறவற்றிலும் மூழ்கி ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தையே தொலைத்து முழுகிவிட்டாரே? அல்லிருமையை ஊருலகத்தில் பரப்ப முற்பட்டவர் இப்படிச் சிக்கி அலைக்கழிவது கொஞ்சம் விந்தையாக, ஏன் வருத்தமாகக் கூட இருக்கிறது.

சாமியார்கள் பற்றிய மயக்கம் நம் மக்களுக்கு என்று போகுமோ தெரியவில்லை. எனக்கென்னமோ, இந்தச் சீரழிவின் வித்து நெடுங்காலம் முன்னமே ஏற்பட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. இரா. முருகன் சொன்னது போல் செயேந்திரர் மீண்டும் இருள்நீக்கி மகாதேவன் சுப்பிரமணியன் என்று ஆகுவதே சிறப்பு.

அன்புடன்,
இராம.கி.

கோபி(Gopi) said...

வணக்கம்

http://www.higopi.com/tscii2unicode/ல் TSCII வலைதளங்களை Unicodeல் படிக்க ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்கிறேன். (நன்றி:சுரதா அவர்களின் பொங்கு தமிழ் JavaScript மூலம்)

TSCII பதிவுகளையும் பின்னூட்டங்களையும் Unicodeல் மாற்ற விரும்பினால்

http://www.higopi.com/tscii2unicode/scripts/tscii2unicode.jsஐ பதிவிறக்கம் செய்து tscii2unicode("TSCIITEXT") என்ற JavaScript functionஐ பயன்படுத்துவதன் மூலம் முடியும்

Blogger Templateலேயே இதற்கான மாற்றங்களைச் செய்ய இயலும்.

Mookku Sundar said...

அய்யா,

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். உள்ளடக்கத்தை யுனிகோட் எழுத்துருவுக்கு மாற்றும் உத்தேசம் உண்டா..??
செய்ய முடிந்தால் இன்னும் சந்தோசமாயிருக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான அலசல்!

குழலி / Kuzhali said...

//இரா. முருகன் சொன்னது போல் செயேந்திரர் மீண்டும் இருள்நீக்கி மகாதேவன் சுப்பிரமணியன் என்று ஆகுவதே சிறப்பு.
//
இரா.முருகனா? இரா.முருகனா அப்படி சொன்னார், ஆச்சரியமாக இருக்கின்றது அய்யா!!! ஜெயேந்திரர் என்பதில் 'ர்' விட்டுவிட்டு ஜெயேந்திரன் என்றாலே துடித்து போய்விட்டாராமே... நான் சொல்லவில்லை எல்லேராம் சொன்னார், அப்படிபட்ட இரா.முருகனா இப்படி?? பாவம் இப்படி இரா.மு. சொன்னதை கேட்டிருந்தால் எல்லேராம் தேம்பி தேம்பி அழுது உண்ணாவிரதமிருந்திருப்பார்....http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2826

நம்பி,

இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் எனது
நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி
சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை
நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-(((

(அப்படி நம்பி என்ன எழுதிட்டாரென்றால் "தீவிரவாதம் என்றால் என்ன என்று சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. ஒஸாமாக்கள், புஷ்
கள், ஜெயேந்திரன்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?")
.......................................................
.......................................................

நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
(எதுக்கு ஜெயேந்திரன் என்று சொன்னதற்கு தான் முருகன் துடித்து போயிருந்தாராம்)
நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில்
இன்னொரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை.
இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை.

.......................................................................
..................................................................
இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள்.

...............................................................
................................................................

எல்லே ராமராயன்

முழு கடிதத்தையும் ராகாகியில் படித்து பாருங்கள் செம தமாசா இருக்கும்.....

எஸ்.கே said...

நடுநிலையான கருத்துக்கள். பொறுப்புணர்ச்சியுடனும், முதிர்ச்சியுடனும் அதே சமயம் பல கசப்பான உண்மைகளை தவறாமல் குறிப்பிட்டும் எழுதப்பட்ட பதிவு. எனக்கு என்றைக்குமே சாமியார்கள்மேல் சிறிதளவும் ஈடுபாடு கிடையாது. கடவுளுக்கும் நமக்கும் நடுவில் இடைத்தரகு தேவையில்லை என்பது என் கருத்தும் கூட.

என் எண்ணங்களை வெளியிட அனுமதித்தமைக்கு நன்றிகள்.

எஸ்.கே

இராம.கி said...

அன்பிற்குரிய குழலி,

என்னுடைய பழைய பதிவுகள் பலவும் தனித்துத் தகுதரத்திலும், சில போது தகுதரம் முன்னேயும், ஒருங்குறி பின்னேயும் இருந்ததைச் சரி செய்து கொண்டிருந்தேன்.அதனால் பழைய பதிவுகள் மீண்டும் தமிழ்மணத்தில் முன்னால் வந்து கொண்டிருக்கின்றன.

செயேந்திரர் பற்றி எழுதியதில், இரா.மு.வின் கருத்து நானறிந்தது தான்.

அன்பிற்குரிய எஸ்.கே.,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.