Wednesday, December 29, 2004

எங்கள் யாருக்கும் வெட்கமில்லை

நடந்திருப்பதோ பெருஞ்சோகம்! பிணங்களைக் கண்டெடுத்தவாகில் இருக்கிறார்கள். "எத்தனை பேர் பிழைத்தார்கள், எத்தனை ஊர் அழிந்துபோனது"" என்று அலறிப் புடைத்துக் கொண்டிருக்கையில், "பெரியவாளைச் சிறையில் அடைத்தது தான் இயற்கையின் சீற்றத்திற்குக் காரணம்; பாபம் செய்ததால் தான் அல்லா இந்தத் தண்டனையை அளிக்கிறான்; கர்த்தரை வழிபடாததால் தான் இந்தச் சீரழிவு" என்று முட்டாள் தனமாய்ச் சிலர் மதம் பிடித்துப் புலம்பிக் கொண்டிருக்கும் போது எரிச்சல் மிகுந்து வருகிறது.

கூடவே இன்னொரு வகை மதம்பிடித்த சில அரசியல் வாதிகள், "அந்தக் கட்சிக்காரரின் அமைச்சர் வந்தார்; இந்த நடுவண் அமைச்சர் வரவில்லை; மாநில அரசின் செயற் பாடுகளில் குறை; நடுவண் அரசின் செயற்பாடுகளில் குறை;" என வெட்கமில்லாமால் கட்சி கட்டிக் கொண்டு "இன்னொருவன் கண் நொள்ளைக் கண்" என்று சொல்லிவிடுவதில் குறியாய் இருக்கிறார்கள். ஆக இவர்கள் எல்லோருமே வெட்கமில்லாமல், "எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம்" என்று பார்ப்பார்கள் போலும்.

சரி இது தான் இப்படி என்றால், தொலைக்காட்சிகளிலோ இசைக்கச்சேரி நிற்கவில்லை; பரிசளிப்பு; பட்டங்கள் வழங்குதல், தலையாட்டிக் கொள்ளுதல் என எதுவுமே நிற்கவில்லை; தொலைக்காட்சித் தொடர்கள் நிற்கவில்லை; விவரங் கெட்ட கூத்துக்கள் நிற்கவில்லை; ஆங்கிலப் புத்தாண்டிற்கு யாரோ ஒரு திரைப்பட நடிகையோ, நடிகனோ பினாத்திக் கொண்டு இருப்பார்கள்; அதை தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கும். மொத்தத்தில் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;

உள்ளுர் தொலைக்காட்சிகளின் நடத்தைதான் கேவலம் (NDTV ஒரு விதிவிலக்கு; அவர்களுக்காவது மனித நேயம் என்று ஒன்று மிஞ்சி இருக்கிறதே!) என்றால், வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளிலும் பிபிசி தவிர்த்து மற்றவற்றில் தமிழகத்தையும், ஈழத்தையும், சிங்களத்தையும், அந்தமான் நக்கவரத்தையும் தேடித்தான் பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.

இன்று, நடுத்தர வருக்கத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார்; அவரை யாரோ ஒருவர் கேள்வி கேட்டார்களாம்; எனவே என்னிடம் அதே அய்யப்பாட்டை முன்னிட்டுத் தான் விளங்கிக் கொள்ளக் கேட்கிறார்.

"இவ்வளவு தூரம் கடற்கரை ஓரமாய் பிணங்கள் விரவிக் கிடக்கிற நேரத்தில், கிணறுகளில் இருந்து இறைத்துப் பின் குடிநீர் ஆலைகளில் புட்டில்களில் அடைத்து நமக்கு விற்கும் குடிநீர் தூய்மையாக இருக்குமா? குறிப்பாக புட்டில்களில் அடைத்துவரும் குடிநீரைக் குடிக்கலாமா?"

எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வந்தது. "அந்த ஆளிடம் போய்ச் சொல்லுங்கள். புரத மூலக்கூறுகள் மிகப் பெரிதானவை; குடிநீர் ஆலைகளில் உள்ள செய்முறையில், எதிர் ஊடுகைப் படலத்தின் நூகப் புரைகளை (micropores in the reverse osmosis membranes) மீறி இந்த மாசுகள் வந்து சேராது; எனவே புட்டில் நீரை நம்பகமாக வாங்கலாம்; மீறியும் அந்த ஆளுக்கு அய்யம் இருப்பின் வாங்கிய குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொல்லுங்கள்" என்றேன்.

ஊரெங்கும் ஒப்பாரி; ஒப்பாரிக்கிடையில் இப்படி கீறல் விழுந்த ஓலங்கள். கேட்டால் சொக ஆதாரமாம்; மண்ணாங்கட்டி. இப்படியும் சில பெருகபதிகள் (brahaspathis) இந்த நாட்டில் வசிக்கிறார்களே? மக்களின் மூடத்தனங்களுக்கு எல்லையே கிடையாதா? மனிதநேயம் என்பதே கிடையாதா? இறைவா, இவர்களுக்கு அறிவைக் கொடு.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¿¼ó¾¢ÕôÀ§¾¡ ¦ÀÕ狀¡¸õ! À¢½í¸¨Çì ¸ñ¦¼Îò¾Å¡¸¢ø þÕ츢ȡ÷¸û. "±ò¾¨É §À÷ À¢¨Æò¾¡÷¸û, ±ò¾¨É °÷ «Æ¢óЧÀ¡ÉÐ"" ±ýÚ «ÄÈ¢ô Ò¨¼òÐì ¦¸¡ñÊÕ쨸¢ø, "¦ÀâÂÅ¡¨Çî º¢¨È¢ø «¨¼ò¾Ð ¾¡ý þÂü¨¸Â¢ý º£üÈò¾¢üÌì ¸¡Ã½õ; À¡Àõ ¦ºö¾¾¡ø ¾¡ý «øÄ¡ þó¾ò ¾ñ¼¨É¨Â «Ç¢ì¸¢È¡ý; ¸÷ò¾¨Ã ÅÆ¢À¼¡¾¾¡ø ¾¡ý þó¾î º£ÃÆ¢×" ±ýÚ Óð¼¡û ¾ÉÁ¡öî º¢Ä÷ Á¾õ À¢ÊòÐô ÒÄõÀ¢ì ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ±Ã¢îºø Á¢ÌóÐ ÅÕ¸¢ÈÐ.

ܼ§Å þý¦É¡Õ Ũ¸ Á¾õÀ¢Êò¾ º¢Ä «Ãº¢Âø Å¡¾¢¸û, "«ó¾ì ¸ðº¢ì¸¡Ãâý «¨Áîº÷ Åó¾¡÷; þó¾ ¿ÎÅñ «¨Áîº÷ ÅÃÅ¢ø¨Ä; Á¡¿¢Ä «Ãº¢ý ¦ºÂü À¡Î¸Ç¢ø ̨È; ¿ÎÅñ «Ãº¢ý ¦ºÂüÀ¡Î¸Ç¢ø ̨È;" ±É ¦Åð¸Á¢øÄ¡Á¡ø ¸ðº¢ ¸ðÊì ¦¸¡ñÎ "þý¦É¡ÕÅý ¸ñ ¦¿¡û¨Çì ¸ñ" ±ýÚ ¦º¡øĢŢΞ¢ø ÌȢ¡ö þÕ츢ȡ÷¸û. ¬¸ þÅ÷¸û ±ø§Ä¡Õ§Á ¦Åð¸Á¢øÄ¡Áø, "±Ã¢¸¢È Å£ðÊø À¢ÎíÌÅÐ ¬¾¡Âõ" ±ýÚ À¡÷ôÀ¡÷¸û §À¡Öõ.

ºÃ¢ þÐ ¾¡ý þôÀÊ ±ýÈ¡ø, ¦¾¡¨Ä측𺢸Ǣ§Ä¡ þ¨ºì¸î§ºÃ¢ ¿¢ü¸Å¢ø¨Ä; ÀâºÇ¢ôÒ; Àð¼í¸û ÅÆí̾ø, ¾¨Ä¡ðÊì ¦¸¡ûÙ¾ø ±É ±ÐקÁ ¿¢ü¸Å¢ø¨Ä; ¦¾¡¨Ä측ðº¢ò ¦¾¡¼÷¸û ¿¢ü¸Å¢ø¨Ä; Å¢ÅÃí ¦¸ð¼ ÜòÐì¸û ¿¢ü¸Å¢ø¨Ä; ¬í¸¢Äô Òò¾¡ñÊüÌ Â¡§Ã¡ ´Õ ¾¢¨ÃôÀ¼ ¿Ê¨¸§Â¡, ¿Ê¸§É¡ À¢É¡ò¾¢ì ¦¸¡ñÎ þÕôÀ¡÷¸û; «¨¾ ¦¾¡¨Ä측𺢸Ùõ ´Ç¢ÀÃôÀ¢ì ¦¸¡ñÎ þÕìÌõ. ¦Á¡ò¾ò¾¢ø þí§¸ ¡ÕìÌõ ¦Åð¸Á¢ø¨Ä;

¯ûÙ÷ ¦¾¡¨Ä측𺢸Ǣý ¿¼ò¨¾¾¡ý §¸ÅÄõ (NDTV ´Õ Å¢¾¢Å¢ÄìÌ; «Å÷¸Ù측ÅÐ ÁÉ¢¾ §¿Âõ ±ýÚ ´ýÚ Á¢ïº¢ þÕ츢ȧ¾!) ±ýÈ¡ø, ¦ÅÇ¢¿¡ðÎò ¦¾¡¨Ä측𺢸ǢÖõ À¢À¢º¢ ¾Å¢÷òÐ ÁüÈÅüÈ¢ø ¾Á¢Æ¸ò¨¾Ôõ, ®Æò¨¾Ôõ, º¢í¸Çò¨¾Ôõ, «ó¾Á¡ý ¿ì¸ÅÃò¨¾Ôõ §¾Êò¾¡ý À¢Êì¸ §ÅñÎõ §À¡Ä þÕ츢ÈÐ.

þýÚ, ¿Îò¾Ã ÅÕì¸ò¨¾î §º÷ó¾ ¿ñÀ÷ ´ÕÅ÷ §¸ûÅ¢ §¸ð¼¡÷; «Å¨Ã ¡§Ã¡ ´ÕÅ÷ §¸ûÅ¢ §¸ð¼¡÷¸Ç¡õ; ±É§Å ±ýÉ¢¼õ «§¾ «öÂôÀ¡ð¨¼ ÓýÉ¢ðÎò ¾¡ý Å¢Çí¸¢ì ¦¸¡ûÇì §¸ð¸¢È¡÷.

"þùÅÇ× àÃõ ¸¼ü¸¨Ã µÃÁ¡ö À¢½í¸û Å¢ÃÅ¢ì ¸¢¼ì¸¢È §¿Ãò¾¢ø, ¸¢½Ú¸Ç¢ø þÕóÐ þ¨ÈòÐô À¢ý ÌÊ¿£÷ ¬¨Ä¸Ç¢ø ÒðÊø¸Ç¢ø «¨¼òÐ ¿ÁìÌ Å¢üÌõ ÌÊ¿£÷ àö¨Á¡¸ þÕìÌÁ¡? ÌÈ¢ôÀ¡¸ ÒðÊø¸Ç¢ø «¨¼òÐÅÕõ ÌÊ¿£¨Ãì ÌÊì¸Ä¡Á¡?"

±ÉìÌì §¸¡Åõ ¦À¡òÐì ¦¸¡ñÎ Åó¾Ð. "«ó¾ ¬Ç¢¼õ §À¡öî ¦º¡øÖí¸û. Òþ ãÄìÜÚ¸û Á¢¸ô ¦À⾡ɨÅ; ÌÊ¿£÷ ¬¨Ä¸Ç¢ø ¯ûÇ ¦ºöӨȢø, ±¾¢÷ °Î¨¸ô À¼Äò¾¢ý á¸ô Ҩø¨Ç (micropores in the reverse osmosis membranes) Á£È¢ þó¾ Á¡Í¸û ÅóÐ §ºÃ¡Ð; ±É§Å ÒðÊø ¿£¨Ã ¿õÀ¸Á¡¸ Å¡í¸Ä¡õ; Á£È¢Ôõ «ó¾ ¬ÙìÌ «öÂõ þÕôÀ¢ý Å¡í¸¢Â ÌÊ¿£¨Ãì ¦¸¡¾¢ì¸ ¨ÅòÐì ÌÊì¸î ¦º¡øÖí¸û" ±ý§Èý.

°¦ÃíÌõ ´ôÀ¡Ã¢; ´ôÀ¡Ã¢ì¸¢¨¼Â¢ø þôÀÊ ¸£Èø Å¢Øó¾ µÄí¸û. §¸ð¼¡ø ¦º¡¸ ¬¾¡ÃÁ¡õ; Áñ½¡í¸ðÊ. þôÀÊÔõ º¢Ä ¦ÀÕ¸À¾¢¸û (brahaspathis) þó¾ ¿¡ðÊø ź¢ì¸¢È¡÷¸§Ç? Áì¸Ç¢ý ã¼ò¾Éí¸ÙìÌ ±ø¨Ä§Â ¸¢¨¼Â¡¾¡? ÁÉ¢¾§¿Âõ ±ýÀ§¾ ¸¢¨¼Â¡¾¡? þ¨ÈÅ¡, þÅ÷¸ÙìÌ «È¢¨Åì ¦¸¡Î.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

அல்வாசிட்டி.விஜய் said...

அப்படி எதாவது குடிநீரில் சந்தேகம் இருந்தால் அந்த நண்பரை தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு டீஸ்பூன் பினாயிலைக் குடிக்கச் சொல்லவும். நல்ல கிருமி நாசினி அவருக்கு.

இராதாகிருஷ்ணன் said...

http://www.thatstamil.com/news/2004/12/29/hospitals.html
இந்தக் கொடுமையை எங்கேபோய் சொல்லிக்கொள்வது ஐயா? மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை.

Anonymous said...

þЧÀ¡ýÈ §¿Ãí¸Ç¢ø ÀÂÓõ ºó§¾¸í¸Ùõ ÅÕÅÐ þÂü¨¸§Â. «¨¾ ¯í¸Ç¡ø ÓÊó¾¡ø ¾£÷ì¸ ÓÂÖí¸û. þøÄ¡Å¢ð¼¡ø ãÊ즸¡ñÊÕí¸û. «¨¾Å¢ðÎ ²ü¸É§Å ÀÂóÐûÇÅ÷¸¨Ç §ÁÖõ ¸¢ñ¼ø ¦ºöÅÐõ ¾¢ðÎÅÐõ ÁÉ¢¾ò¾ý¨Á¢ø¨Ä. ¿¢¨É× ¦¸¡ûÙí¸û - ¿¡¨Ç þЧÀ¡ýȦ¾¡Õ ºó§¾¸õ ¯í¸ÙìÌõ ÅÃìÜÎõ, «Ð ÁüÈÅÕìÌ À¢ò¾¢Â측Ãò¾ÉÁ¡¸ò ¦¾Ã¢Â×õ ÜÎõ.

இராம.கி said...

«ýÀ¢üÌâ ӸãÊ¡ÕìÌ,

ӾĢø þíÌ ÅóÐ þó¾ô À¾¢¨Åô ÀÊò¾£÷¸û À¡Õí¸û. «¾üÌ ±ý ¿ýÈ¢.

ÀÂó¾¢ÕôÀÅ÷¸¨Ç ¿¡ý ¸¢ñ¼ø ¦ºöÂ×õ þø¨Ä; ¾¢ð¼×õ þø¨Ä. þó¾ô À¾¢¨Åô ÀÊò¾ ¡ÕìÌõ ¿¡ý «ôÀÊî ¦ºö¾¾¡¸ò §¾¡ýÈÅ¢ø¨Ä, ¯í¸¨Çò ¾Å¢Ã. ¿¡ý ¦ºö¾Ð ±øÄ¡õ "þôÀÊÔõ ¿ýÌ ÀÊò¾ ¿Îò¾Ã ÅÕì¸ ¬ð¸û ±ýÉ ²Ð ±ýÚ «È¢Â¡Áø, ÍüÈ¢ ¿¼ôÀ¨¾ô ÀüÈüÈ ¿¢¨Ä¢ø À¡÷òÐì ¦¸¡ñÎ, «§¾ §¿Ãò¾¢ø ¦º¡¸¡¾¡Ãõ §Àº¢ì ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸§Ç?" ±ýÚ ±ý¨É ¿¡§É ¦¿¡óÐ ¦¸¡ñ¼Ðõ, §¸¡Åõ Åó¾Ðõ, þ¨ÈÅ¨É §ÅñÊì ¦¸¡ñ¼Ðõ ¾¡ý..

§¸ð¼ÅÕìÌ ¿¡ý ÁÚ¦Á¡Æ¢ ¦º¡øÄ¡ÁÖõ þø¨Ä. §¸ð¼Å÷ «¨ÄîºÃò¾¢ø (TSUNAMI) º¢ì¸¢ÂÅÕõ þø¨Ä; ÀÊì¸¢È ¿£í¸û ¾¡ý ¦ÅÊîºÃÁ¡ö À¼À¼ì¸¢È£÷¸û.

¿ñÀ§Ã! Áïºû ¸ñ½¡Ê §À¡ðÎô À¡÷ò¾¡ø ¯Ä¸õ ÁïºÇ¡¸ò¾¡ý ¦¾Ã¢Ôõ. ¦º¡øÄÅÕõ ¦ºö¾¢ Òâ¡Ð. ¿¡¨ÇìÌ ±ÉìÌ «öÂôÀ¡Î Åó¾¡ø ¯í¸Ç¢¼õ ÅÕ¸¢§Èý. ¿£í¸û ±ý¨Éô À¢òÐô À¢Êò¾ÅÉ¡öô À¡÷츢ȣ÷¸Ç¡ ±ýÚ «ôÒÈõ ¦º¡øÖí¸û.

«ÐŨà ãÊì ¦¸¡ñÎ þÕì¸ §ÅñÊÂÐ, ¿£í¸Ç¡, ¿¡É¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Anonymous said...

sariyaa sonnenga ramki....appadithan poda vaenum....arivaalai

u said...

I must congratulate with you Krishnan because of this wonderful blog! It's really full of informations! Maybe you could be interested in having a look to my internet site that includes informations about scommesse online ... if you are interested in scommesse online it's the right place for you!

l said...

Ciao Krishnan ! Hai creato veramente un bellissimo blog, complimenti! Vorrei segnalarti il mio sito che si occupa di scommesse . Solo scommesse !